Khub.info Learn TNPSC exam and online pratice

ஆங்கிலேய சீக்கிய போர்களும் சிந்த் பகுதி கைப்பற்றுதலும் ANGLO SIKH WARS AND ANNEXATION OF SIND

Q1. எத்தனை ஆங்கிலேய சீக்கிய போர்கள் நடந்தன?
இரண்டு. முதல் ஆங்கிலேய சீக்கிய போர் – 1845-1846; இரண்டாம் ஆங்கிலேய சீக்கிய போர் – 1848-1849.

Q2. முதல் ஆங்கிலேய சீக்கிய போர் 1845-1846 நடக்க காரணம் என்ன?
1. மகாராஜா ரஞ்சித் சிங்கின் மறைவுக்கு பிறகு பஞ்சாப் பகுதியில் நிலவிய அராஜகங்கள்;
2. கரக் சிங், நௌநிஹால் சிங் மற்றும் ஷேர் சிங் -- மூன்று மன்னர்கள் கொலை செய்யப் பட்டனர்.
3. 5 வயதான தலீப் சிங் மன்னரானதால், நிர்வாகம் கட்டுப்பாடின்றி, குறிப்பாக ராணுவம், இயங்கியது.
4. ஆங்கிலேயர்கள் சிறிது சிறிதாக, ஃபெரோஸ்பூர் (1835); ஷிக்கார்பூர் (1836); லூதியானா மற்றும் சிந்த் பகுதிகள் (1838) -- ஆகிய பகுதிகளை கைப்பற்றி தங்கள் நிர்வாகிகளை நியமித்தனர். ஆங்கிலேயர்கள் பஞ்சாப் பகுதியில் தங்கள் ராணுவ எண்ணிக்கையை பல மடங்கு உயர்த்தினர்.
5. 1843ல் சிந்த் பகுதியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியது, ஆங்கிலேயர்களின் திட்டத்தை சீக்கியர்கள் புரிந்து கொண்டனர்.
Q3. முதல் ஆங்கிலேய சீக்கிய போர் முடிவுகளின் விளைவுகள் என்ன?
1. லால் சிங் ஆங்கிலேயர் சர் ஹ்யூ ஹௌ இடம் முட்கி என்ற இடத்தில் 1845ல் தோல்வி அடைந்தார்.
2. சீக்கிய தளபதி தேஜ் சிங் ஆங்கிலேயர்களால் 1845ல் ஃபெரோஸ்பூர் என்ற இடத்தில் தோற்கடிக்கப்பட்டார்.
3. 1846ல் புத்தேவால் என்ற இடத்தில், சீக்கியர் ரஞ்சூர் சிங் மஞ்சித்தியா வால் ஆங்கிலேயர் ஹார்வே ஸ்மித் தோற்கடிக்கப்பட்டார்.
4. 1846ல் அலிவால், சோபோரன் என்ற இடங்களில் சீக்கியர்கள் தோற்கடிக்கப்பட்டனர். சோபோரன் ல் நடந்த போர், இந்திய சரித்திரத்தில் மிகக் கடுமையாக நடந்த போர்களில் ஒன்றாகும். ஆங்கிலேயர்கள் சட்லஜ் நதியைக்கடந்து லாகூர் நகரைக் கைப்பற்றினர்.
Q4. முதல் ஆங்கிலேய சீக்கிய போர் எவ்வாறு முடிவுக்கு வந்தது?
லாகூர் உடன்படிக்கை -- மார்ச் 1846 – ஆங்கிலேயர்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்படிக்கை யால் முதல் ஆங்கிலேய சீக்கிய போர் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 1846ல் பைரோவால் என்ற இடத்தில் ஒரு துணை உடன்படிக்கையும் ஏற்பட்டதால், ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் லாகூர், பஞ்சாப் பகுதியில் ஓங்கியது.
Q5. மார்ச் மற்றும் டிசம்பர் 1846ல் லாகூர் மற்றும் பைரோவால் உடன்படிக்கை, ஆங்கிலேயர்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையில் ஏற்பட்டது. அவற்றின் உள்ளடக்கம் என்ன?
லாகூர் உடன்படிக்கை – மார்ச் 1846 –நிபந்தனைகள்:
1. சீக்கியர்கள் ஜலந்தர் தோப் பகுதியை ஆங்கிலேயருக்கு கொடுக்கவேண்டும். மேலும் இழப்பு காப்புத் தொகையாக 1.5 கோடி ஆங்கிலேயருக்கு கொடுக்கவேண்டும். இந்த தொகையில் பாதியை மட்டுமே சீக்கியர்களால் கொடுக்க முடிந்தது. மீதித்தொகைக்கு காஷ்மீரைப் பெற்று அதை சீக்கிய தலைவர் குலாப் சிங் க்கு விற்றுவிட்டனர்.
2. ஆங்கிலேயர் சர் ஹென்றி லாரன்ஸ் லாகூரில் அமர்த்தப்பட்டு, தலீப் சிங் (சிறு வயது) மன்னராகவும், அவருக்கு காப்பாளராக ராணி ஜின்டான் ம் அமர்த்தப்பட்டனர்.
3. சீக்கிய ராணுவம் குறைக்கப்படவேண்டும்.
4. சீக்கியர்கள் எந்த வெளி நாட்டவரையும் சீக்கிய ராஜ்ய பதவிகளில் ஆங்கிலேயர் அனுமதி இன்றி அமர்த்தக்கூடாது.
4. சீக்கிய ராஜ்யத்திற்குள் ஆங்கிலேயர்கள் தடையின்றி செல்ல அனுமதிக்கப்படவேண்டும். பைரோவால் உடன்படிக்கை – டிசம்பர் 1846 – நிபந்தனைகள்:
1. ராணி ஜிண்டான் தலீப் சிங் ந் காப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
2. சர் ஹென்றி லாரன்ஸ் தலைமையில் 8 சீக்கிய தலைவர்களைக் கொண்ட காப்பாளர் குழு நியமிக்கப்பட்டது.
3. ஆங்கிலேய படை ஒன்று லாகூரில் 22 லட்ச ரூபாய் கட்டணத்தில் நிறுத்தப்பட்டது.
4. ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் பஞ்சாப் பகுதியில் உள்ள எந்த கோட்டையையும் கைப்பற்றி அதில் ராணுவ நடவடிக்கை நடத்த அனுமதி பெற்றார்.
Q6. இரண்டாம் சீக்கிய போர் 1848-1849 நடக்கக் காரணங்கள் யாவை?
1. சீக்கிய முதல் போரில் அடைந்த தோல்விக்கு சீக்கியர்கள் பழிவாங்க விரும்பினர்;
2. சீக்கியர்கள் மனதில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வளர்ந்த அதிருப்தி.
3. ராணி ஜிண்டான் அவமதிப்பு செய்யப்பட்டது, மற்றும் அவருடைய ஓய்வூதியம் குறைக்கப்பட்டது;
4. முல்தான் ஆளுநர் முல்ராஜ் ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சியைத் தொடங்கி முல்தானை கைப்பற்ற அனுப்பப்பட்ட இரண்டு ஆங்கிலேய அதிகாரிகளை (வான்ஸ் அக்னியூ, ஆண்டர்சன்) கொன்றது, மற்ற சீக்கியர்களையும் புரட்சிப் போருக்கு தூண்டியது.
Q7. இரண்டாம் ஆங்கிலேய சீக்கிய போரின் 1848-1849 முடிவின் விளைவுகள் யாவை?
1. ராம்நகர் போர் (1848) மற்றும் சில்லியன் வாலா போர் (1849) ஆங்கிலேய போர் தலைமை தளபதி கௌஃப் பிரவுடன் நடந்த போர்கள் வெற்றி தோல்வியின்ற் முடிந்தது.
2. முல்தான் (இப்போது பாகிஸ்தானில்) ஆங்கிலேய தளபதி ப்ரபு கௌஃப் ஆல் கைப்பற்றப் பட்டு ஆளுநர் முல்ராஜ் நாடு கடத்தப்பட்டார்.
3. 1849ல் குஜராத் (செனாப் அருகில் ஒரு சிறிய ஊர்) ல் நடந்த போரில் சீக்கியர்கள் ப்ரபு கௌஃப் ஆல் முழுவதுமாக தோற்கடிக்கப்பட்டு சீக்கிய ராணுவ தலைவர்கள் அனைவரும் சரணடைந்தனர்.
Q8. இரண்டு ஆங்கிலேய சீக்கிய போர்களுக்கு பிறகு ஏற்பட்ட விளைவுகள் யாவை?
1. டல்ஹௌசி ப்ரபு வால் பஞ்சாப் முழுமையாக கைப்பற்றப்பட்டது.
2. சிறு வயது மன்னர் தலீப் சிங் மற்றும் ராணி ஜிண்டான் ஓய்வூதியத்தில் லண்டனுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
3. 1849ல் பஞ்சாப் ஐ நிர்வாகம் செய்ய மூன்று ஆங்கிலேய கமிஷனர்கள் -- ஹென்றி மற்றும் ஜான் லாரன்ஸ் சகோதரர்கள் மற்றும் சார்லஸ் ஜி. மான்செல் அமர்த்தப்பட்டனர்.
4. 1853ல் மூவர் நிர்வாகக் குழு நீக்கப்பட்டு, சர் ஜான் லாரன்ஸ் மட்டும் முக்கிய கமிஷனராக நியமிக்கப்பட்டார். இவ்வாறாக 1850களில் இந்தியா முழுவதும் ஆங்கிலேயர்களின் கீழ் வந்தது. இருப்பினும்
Q9. சிந்த் பகுதி ……..
பிளவுபடாத இந்தியாவில் இருந்த பகுதி -- இப்போது பாகிஸ்தானில் உள்ளது.
Q10. சிந்த் பகுதி யாருடைய ஆட்சியின் கீழ் இருந்தது?
""கலோரா"" Kalora -- என்ற பழங்குடி தலைவர்களால் ஆளப்பட்டு வந்தது. 1783ல் இந்த பழங்குடி இனத்தவர், பலுச்சிஸ்தான் பகுதியை ஆண்ட அமீர் ன் கீழ் வந்து, சுதந்திரமாக ஆண்டு வந்தனர். சிந்த் பகுதி, ஹைதராபாத், மீர்பூர் மற்றும் கைர்பூர் என மூன்று பிரிவுகள் ஆக பிரிக்கப்பட்டு, இந்த பழங்குடி தலைவர்களால் ஆளப்பட்டு வந்தது.
Q11. சிந்த் பகுதியை ஆங்கிலேயர்கள் கைப்பற்ற காரணங்கள் யாவை?
1. சிந்த் பகுதியில் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துதல்;
2. ரஷ்யர்கள் இந்த பகுதியில் ஊடுருவலை தடுப்பதற்கு;
3. பாரசீகம் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியின் அழுத்தத்தை இப்பகுதிகளில் மேம்படுத்துவதற்காகவும்;
Q12. சிந்த் பகுதியை கைப்பற்றுவதற்கு முன், ஆங்கிலேய-சிந்த் உறவு எந்நிலையில் இருந்தது?
1. 1809ல் சிந்த் பகுதியை ஆண்ட அமீருக்கும் மிண்டோ ப்ரபு 1 ஆல் அனுப்பப்பட்ட ஆங்கிலேய தூதுவர் இடையில் நட்புறவு உடன்படிக்கை.
2. 1832ல் பெண்டிக் ப்ரபு உடன் மீண்டும் ஏற்பட்ட உடன்படிக்கை மூலம் ஆங்கிலேயருக்கு, சிந்த் பகுதி ஆறுகள் மற்றும் சாலைகளை பயன்படுத்த அனுமதி பெற்றனர்.
3. ஆங்கிலேயர்களின் அழுத்தத்தின் காரணமாக சிந்த் அமீர் மீண்டும் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டார்.
Q13. ஆங்கிலேயர்களுக்கும் சிந்த் பகுதி அமீருக்கும் இடையில் போர் ஏற்படக்காரணங்கள் என்ன? அதன் முடிவும் விளைவுகளும் என்ன?
1. எல்லென்பரோ ப்ரபுவின் தேவையில்லாத தலையீட்டால் சிந்த் அமீர் மற்றும் அந்த பகுதி மக்கள் போருக்கு தூண்டப்பட்டனர்.
2. 1842ல் மேஜர் ஜேம்ஸ் ஔட்ராம் க்கு பதிலாக சர் சார்லஸ் நேப்பியர் நியமிக்கப் பட்டார்.
3. 1843ல் இமாம்கர் என்ற இடத்தில் இருந்த கோட்டையை சர் நேப்பியர் தகர்த்தார். இந்த காரணங்களால், பலுச்சிஸ்தான் மற்றும் சிந்த் பகுதி அமீர்கள், ஆங்கிலேயர்கள் மீது போர் தொடுத்தனர். அதன் விளைவுகள்:
அ) சர் சார்லஸ் நேப்பியர் தலைமையிலான படை, அமீர்கள் படையை தோற்கடித்தார். இரு பிரிவு அமீர்களும் சரணடைந்தனர். அதில் மீர் பூர் அமீர் ஷேர் முகமது நாடு கடத்தப்பட்டார்.
ஆ) 1843ல் சிந்த் பகுதி முழுமையாக ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டு, சர் சார்லஸ் நேப்பியர் முதல் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
Q14. சிந்த் பகுதி கைப்பற்றப்பட்டவுடன், ஆங்கிலேய நோக்கம் முடிவடைந்த நிலையில், இந்தியாவை நிர்வகிக்க இங்கிலாந்து ராஜ வம்சம் எடுத்த நடவடிக்கை என்ன?
சிந்த் பகுதி கைப்பற்றப்பட்டவுடன், பிளவு படாத இந்தியா முழுவதும் ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்நிலையில் இங்கிலாந்து அரசாங்கம், ஆங்கிலேய கிழக்கு இந்திய நிறுவன நிர்வாகத்திலிருந்து, தனது நேரடி நிர்வாகத்தை அறிமுகப்படுத்த திட்டம் தீட்டியது. இந்த சமயத்தில், 1857ல் நடந்த சிப்பாய் கலகத்தால், இங்கிலாந்து அரசாங்கத்தின் நேரடி நிர்வாக முடிவு வலுவும் வேகமும் பெற்றது. அதன் அடிப்படையில் 1858ல் ""இந்தியா சட்டம்"" இயற்றப்பட்டு, இங்கிலாந்தின் நேரடி நிர்வாகம் அமல்படுத்தப் பட்டது.