Khub.info Learn TNPSC exam and online pratice

கணினி பற்றிய பொது கேள்விகள் COMPUTER GENERAL QUESTIONS:

Q1. கணினி என்ற கருவியை உருவாக்கமுடியும், அதன் மூலம் புள்ளி விவரங்களை பல வழிகளில் கையாளமுடியும் என்பதற்கு முன்னோடியாக நிகழ்ந்தது எது?
சார்லஸ் பேபேஜ் -- Charless Babbage (UK ) – (1791-1871) என்பவர் முதன் முதலாக “difference engine” என்ற கருவியை கண்டுபிடித்து அதன் மூலம் தகவல்களை பல வகைகளில் ஆய்வு செய்ய முடியும் என்ற அடிப்படை நம்பிக்கையை அளித்தார். இந்த ஆய்வுகள் 19ம் நூற்றாண்டில் நடைபெற்றது. இதன் காரணமாக இவரை ""கணினி தந்தை"" என அழைக்கின்றனர்.

Q2. உலகில் முதன் முதலில் ஒரு பைனரி டிஜிட்டல் கணினி Z1 binary digital computer உருவாக்கியவர் யார்?
கொனார்ட் ஜூஸ் -- Konarad Zuse, ஜெர்மனி 1938.
Q3. கொனார்ட் ஜூஸ் கண்டுபிடித்த கணினி நடைமுறை சாதனைகள் என்ன?
இவர் முதன் முதலில் நடைமுறை மென் பொருள் programme “Turing Complete” என்பதை வடிவமைத்தார். அதைக்கொண்டு Z3 என்ற மின் இயந்திர நடைமுறை கணினியை 1941ல் உருவாக்கினார். இந்த கணினி இரண்டாம் உலகப்போரின் போது ஏவுகணைகள், போர் விமானங்கள் வடிவமைக்க பெரிதும் உதவியது. இதற்கு பிறகு S2 என்ற தகவல்களை ஆய்வு செய்யும் கணினி process controlled computer யை கண்டுபிடித்தார். பிறகு 1941ல் இவர் Z4 என்ற உலகின் முதல் வர்த்தக ரீதியான கணினி உற்பத்தி வணிகத்தை தொடங்கினார்.
Q4. 1943ல் ஆங்கிலேயர்கள் கணினியில் என்ன மேம்பாட்டை அறிமுகப்படுத்தினர்?
இரண்டாம் உலகப்போரின் போது, ஜெர்மன் நாட்டவரின் தகவல்களை ஆய்வு செய்து பிரித்தெடுக்க உதவும் வகையில், ""கொலாசஸ்"" COLOSSUS என்ற கணினியை உருவாக்கி, ஜெர்மானிய ரகசிய தகவல்களின் உண்மை தகவல்களை பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டனர்.
Q5. எப்போது, யாரால், எந்த முதல் தலைமுறை கணினி first generation computer உருவாக்கப்பட்டது?
1946 – “ENIAC” -- ஜான் மெக் காஸ்லி & ஜே. ப்ரெஸ்பர் எக்கெர்ட். (ENIAC = Electronic Numerical Integrator and Computer).
Q6. கணினி மேம்பாட்டில் க்ளாட் ஷானான் Claude Shannon என்பவரின் பங்கு என்ன?
“bit” ஐ அடிப்படை அலகாகக் கொண்டு தகவல் தொகுப்பு செய்வதை வெளிக்காட்டினார்.
Q7. முழுவதுமான மின்னணு கணினி எந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது?
"701" – IBM நிறுவனத்தால் 1953ல் உருவாக்கப்பட்டது.
Q8. விசைப்பலகை key board, காந்த வட்டு சேமிப்பு Magnetic disk storage உடன் மென்பொருள் நிரலாக்கம் programmable மூலம் இயங்கக்கூடிய இரண்டாம் தலைமுறை மின்னணு கணினி எது?
1956 – 305 RAMAC and TX – O
Q9. “CHIP” எனப்படும் ஒருங்கிணைந்த மின்சுற்று integrated circuit கணினியை வடிவமைத்தவர் யார், அதன் பெயர் என்ன?
ஜேக் கில்பி Jack Kilby, அமெரிக்கா -- 1958. இந்த முறையை கண்டுபிடித்ததற்காக அவருக்கு 2000ம் ஆண்டு இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. கை கணிப்பான் calculator மற்றும் வெப்ப அச்சுப்பொறி thermal printer போன்றவையும் இவருடைய கண்டுபிடிப்புகள்.
Q10. மூன்றாம் தலைமுறை கணினி third generation computer எப்போது வெளிவந்தது?
1960 – இதில் கீழ்க்கண்ட மேம்படுத்தப்பட்ட வசதிகள் உள்ளடக்கம் செய்யப்பட்டிருந்தன: (1) first commercial modem, (2) data phone, (3) COBOL Designed for business use; (4) LISP made its first computer language designed for writing artificial intelligence programmes.
Q11. BASIC எனப்படும் கணினி மொழி எப்போது உருவாக்கப்பட்டது?
1963 -- BASIC == Beginners' All purpose Symbolic Instruction Code -- by John G. Kemeny & Thomas E Kurtz
Q12. வணிக ரீதியாக மிகவும் புகழ்பெற்ற சிறு கணினி mini computer எது?
PDP 8 – 1965.
Q13. LOGO என்ற கணினி மொழி எப்போது வெளி வந்தது?
1967 -- Wally Feruzeig, அமெரிக்கா மற்றும் Seymour Papert , தென் ஆப்பிரிக்கா
Q14. முதல் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட கணினி வலை கட்டமைப்பு net working system முறை எது?
Arpanet – 1970 (Advanced Research Projects Agency Network),இதைத் தொடர்ந்து Ethernet (1973) மற்றும் Telenet (1974).
Q15. நான்காம் தலைமுறை கணினி எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
1972. Intel நிறுவனம் “8008 microprocessor” என்ற முறையை அறிமுகப்படுத்தியதால் தகவல் செயல் முறை data processing வேகம் பெற்றது.
Q16. 1975 ல் உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் உருவானது. அது எது?
“Microsoft” -- பில் கேட்ஸ் மற்றும் பால் ஆலென் என்பவர்களால் 4.4.1975 அன்று நிறுவப்பட்டு, இதன் தலைமையகம் Redmond, Washington, அமெரிக்காவில் உள்ளது.
Q17. Apple I கணினியை வடிவமைத்தவர் யார்?
Steve Wozniak – Apple I – a single board computer.
Q18. திசையன் செயலி vector processor மூலம் இயங்கும் முதல் வெற்றிகரமான கணினி எது?
Cray I – வடிவமைத்து, உருவாக்கி, வணிகம் செய்தவர்கள் Cray Research, Seattle, Washington.
Q19. ‘Apple’ கணினி நிறுவனத்தை நிறுவியவர் யார்?
Steve Jobs, Steve Wozniak and Ronald Wayne -- அமெரிக்கா -- 1976.
Q20. புள்ளி அச்சுப் பொறி dot matrix printer எப்போது அறிமுகமானது ?
1978 -- Epson நிறுவனம்.
Q21. hard disk drive -- எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
1980 – standardized to 5.25” (inches)
Q22. MS-DOS எப்போது வெளி வந்தது ?
1981 ; MS-DOS 1.1. in 1982.
Q23. கையடக்க கணினி portable computer முதல் முறையாக அறிமுகமானது?
1982 by Compaq.
Q24. CD-ROM வடிவமைத்து மேம்படுத்தி தயாரித்தவர்கள் யார்?
Philips and Sony in 1983.
Q25. ஆப்டிகல் தொடு திரையுடன் கூடிய microcomputer ஐ அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
Hewlett Packard in 1983.
Q26. Microsoft Windows, MS Word 1.0 and Turbo Pascal ஆகிய கணினி மொழிகள் எந்த வருடம் வெளி வந்தன?
1983
Q27. கணினி சுட்டி மூலம் இயங்கும் கணினி mouse driven computer முதல் கணினி எது?
McIntosh by Apple Computers in 1984.
Q28. laserjet laser printers ஐ முதன் முதலில் அறிமுகப்படுத்திய நிறுவனம் எது ?
Hewlett Packard in 1984.
Q29. “PageMaker” and C++ ஆகிய மென் பொருள்கள் எப்போது அதிக புழக்கத்துக்கு வந்தன?
1985
Q30. “Intel” பொருத்தி வெளியிடப்பட்ட முதல் தனியாள் கணினி எது?
Access 386 PC.
Q31. Windows 3.0 எப்போது வெளியானது?
1990 (2016 நிலையில் Windows 10.0 இயக்கு தளம் -- operating system வெளிவந்துள்ளது)
Q32. “3D Virtual Reality” என்ற முறை எப்போது வெளியானது?
1989
Q33. WWW – World Wide Web உலகளாவிய வலை முறை அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
1990 – Tim Bernen Lee from Cern, Geneva, when he developed the HTML –(HyperText Mark Up Language).
Q34. மடிக்கணினி laptops தயாரிப்பின் முன்னோடி யார்?
1972 ல் ஆலன் கே Alan Kay என்பவர் தயாரித்த Dynabook மூலம்.
Q35. வணிக ரீதியாக வெளி வந்த முதல் கை கணினி எது?
IBM 5100.
Q36. எந்த கைக் கணினி முதன் முதலாக மடிக்கணினி என அழைக்கப்பட்டது?
""Gavilon SC"" --- Gavilon Comp Corpn உருவாக்கியது. இந்த நிறுவனத்தை நிறுவியவர் மேனுவேல் ஃபெர்ணாண்டஸ், அமெரிக்கா. இதே சமயத்தில் வெளியான மடிக்கணினி Sharp 5000 .
Q37. உலகின் முதல் கணினி எந்த நாட்டில் உருவாக்கப்பட்டது?
ஐக்கிய ராஜ்யம் -- United Kingdom.
Q38. “Basic” என்ற கணினி மொழியை உருவாக்கியவர் யார்?
Dartmouth College, New Hampshire, USA.
Q39. உலகில் அதிகமாக பரவி சேதம் விளைவித்த கணினி வைரஸ் எது?
“I Love You”.
Q40. Orkut.com ஆரம்ப காலத்தில் இளைஞர்களிடைய பரவியிருந்த சமூக வலை தளம். இது யாரால் உருவாக்கப்பட்டது?
Orkut Buyukkotten, துருக்கி நாட்டின் மென்பொருள் வல்லுநர்.
Q41. மின்னஞ்சல் எனப்படும் e-mail முதன் முதலில் அனுப்பியவர் யார்?
Ray Tomlinson, New York, USA – இவர் தான் முதன் முதலில் 1971ல் Arpanet வலைதளம் மூலம் முதல் மின்னஞ்சல் முறையை அறிமுகப்படுத்தினார். இவர் தான் “@” என்ற குறியீட்டின் மூலம் அஞ்சல் அனுப்புபவருக்கும், அஞ்சல் எடுத்துச்செல்லும் செயல் முறைக்கும் இடையில் இந்த குறியீட்டைப் போட்டு அறிமுகப்படுத்தினார்.
Q42. உலகின் முதல் தனியாள் கணினி எது?
The Kenback 1
Q43. Intel நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது?
சாண்டா க்ளாரா, கலிஃபோர்னியா, அமெரிக்கா.
Q44. “Matroska” என்பது எந்த நாட்டு குறியீட்டு encoding format முறை ?
ரஷ்யா
Q45. WWW குடும்பத்தில், செப்டம்பர் 22 ஒரு முக்கியமான நாளாக 2006 முதல் அனுசரிக்கப்படுகிறது. அது என்ன?
One Web Day.
Q46. இணைய தளத்தை internet அதிகமாக பயன்படுத்துபவர்கள் யார்?
அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா என்ற வரிசையில்.
Q47. " hotmail " என்ற மின்னஞ்சல் முறையை அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
சபீர் பாட்டியா என்ற இந்தியர், மற்றும் ஜேக் ஸ்மித் என்பவர்களால் 1996ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் 1997ல் கையகப்படுத்தப்பட்டது. இப்போது “Windows Live Hotmail” ஆகும்.
Q48. G mail எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
1.4.2004 – Google நிறுவனத்தால்.
Q49. yahoo mail எப்போது தொடங்கப்பட்டது?
October 1997--Yahoo நிறுவனத்தால்.
Q50. அதிகமாக பயனில் உள்ள மின்னஞ்சல் தளங்கள் எவை?
hotmail, yahoo mail and G mail இந்த வரிசையில்.
Q51. “brain bag” என்பது என்ன?
மடிக்கணினி எடுத்துச்செல்லும் தோள் பை.
Q52. “Yahoo” என்பதன் விரிவாக்கம் என்ன?
Yet Another Hierarchy of Officious Oracle.
Q53. “Yahoo” என்ற பெயர் எங்கிருந்து எடுக்கப்பட்டது?
ஜோனாதன் ஸ்விஃப்ட் என்பவரின் புத்தகம் Gulliver’s Travels என்ற கதையில் வரும் ஒரு போட்டியின் பெயர்.
Q54. “Google” தேடல் இயந்திரம் search Engine கண்டு பிடித்தவர் யார்?
Larry Page & Sergey Brin. இது 1996ல் இவர்கள் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது அவர்கள் தேர்வுக்காக எழுதிய கல்லூரி செயல் திட்ட கட்டுரை.
Q55. Google நிறுவனத்தின் வணிக கொள்கை குறிப்பீடு என்ன?
“Don’t be Evil”.
Q56. Google Search Engine ன் முன்பிருந்த பெயர் என்ன?
Backrub.
Q57. “Google” என்ற வார்த்தையை உருவாக்கியவர் யார்?
Milton Sirotta – அமெரிக்கா.
Q58. “Google” என்ற சொல் எங்கிருந்து எடுக்கப்பட்டது?
Googol – என்ற சொல்லிலிருந்து. இந்த சொல்லுக்கு பொருள் == எண் 1 ஐ தொடர்ந்து 100 பூஜ்யங்கள்.
Q59. Google நிறுவன தொழிலாளர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்?
Googlers.
Q60. 2016 நிலையில் “Google” நிறுவனத்தின் முக்கிய நிர்வாக அதிகாரியாக இருக்கும் இந்தியர் யார்?
சுந்தர் பிச்சை
Q61. Google நிறுவனத்தால் கைபேசிகளுக்கு உருவாக்கப்பட்ட இயக்கு தளம் பெயர் operating system பெயர் என்ன?
Android.
Q62. புதுப்புது யுத்திகளை, உதாரணமாக Gmail, Orkut and Google News கண்டுபிடிப்பதற்காக Google நிறுவனம் கடைபிடிக்கும் யுத்திகள் யாவை?
எல்லா தொழிலாளர்களும், தங்களது வேலை நேரத்தில் குறைந்த பட்சம் 20% நேரத்தை தங்களுக்கு பிடித்த கணினி சார்ந்த பணிகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். அதன் மூலம் பல புது செயல் முறைகளை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியுள்ளனர்.
Q63. Google.org என்பது என்ன?
Google நிறுவனத்தின் பொதுச்சேவை பிரிவு. இதன் மூலம், சுற்றுச்சூழல், பொது சுகாதாரம், ஏழ்மை போக்கல் போன்ற பிரிவுகளில் தங்களால் இயன்ற வரை சேவை செய்து வருகின்றனர்.
Q64. Google நிறுவன மென்பொருள்களில் அவ்வப்போது பண்டிகைகள் அடிப்படையில் தங்களது பெயர் சின்னத்தை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இதை செய்பவர் யார்?
Dennis Hwang.
Q65. Google நிறுவனம் ஒவ்வொரு மாதமும் ஒரு நாட்டைப்பற்றிய விவர தேடல் பயிற்சியில் ஈடுபடுகிறது. அதற்கு பெயர் என்ன?
Google Zeitgist.
Q66. hotmail நிறுவிய கூட்டு இந்தியர் யார்? ?
Sameer Bhatia.
Q67. எந்த கணினி நிறுவனம் சர் ஐசக் நியூட்டனின் உருவத்தை தங்கள் நிறுவன சின்னத்தின் ஒரு அங்கமாக கொண்டுள்ளது?
Apple. இதை சில மாதங்கள் மட்டுமே வைத்திருந்தனர்.
Q68. “Smiley Emoticon” என்பது இக்காலத்தில் இணைய தள பரிமாற்றத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதை கண்டுபிடித்தவர் யார்?
Scott Fahlman -- அமெரிக்கா -- செப்டம்பர் 1982 .
Q69. “Blog” என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்?
டிசம்பர் 1997ல் ஜோம் பார்கர் என்பவர் “weblog” என்ற சொல்லை முன் வைத்தார். பிறகு 1999ல் பீட்டர் மெஹ்லோஸ் என்பவர் அதை “we blog” என பிரித்தார். பிறகு தனது ஒரு தகவல் பரிமாற்றத்தில் “blog” என்ற சொல்லை பயன் படுத்தத் தொடங்கி அதுவே கால கட்டத்தில் பயன்பாட்டில் நிலைத்தது.
Q70. “You Tube” என்பது என்ன, அது எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
காணொளியை பகிர்ந்து கொள்ளும் ஒரு வலை தளம். 14.2.2005 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Q71. “You Tube” காணொளி வலைதளத்தை நிறுவியவர் யார்?
Steve Chen – தைவான்/அமெரிக்கன்; சாட் ஹர்லி, அமெரிக்கன்; மற்றும் ஜாவேத் கரிம், வங்காள தேசம்.
Q72. ஹாவாய் மொழியில் விரதத்துக்கு உண்டான சொல், கணினியின் பயன்பாட்டில் உள்ளது. அது என்ன?
WIKI – என்பது ஹவாய் மொழியில் விரதம்.
Q73. IBM நிறுவனத்தை “ Big Blue “ என அழைப்பர். ஏன்?
இந்த நிறுவனத்தின் கணினியின் மெயின் ஃப்ரேம், மற்றும் இதர பொருட்களின் உறைகள் 1960கள் நீல நிறத்தில் இருக்கும். அதனால் இப்பெயர் பெற்றது.
Q74. " wikipedia ", எனப்படும் தகவல் களஞ்சிய வலை தளத்தை நிறுவியவர் யார்?
Jimmy Donal Wales and Larry Sanger -- 15.1.2001.
Q75. மடிக்கணினியை முதன் முதலில் வடிவமைத்தவர் யார்?
Bill Moggridge, அமெரிக்கா -- 1979-1980.
Q76. ADOBE என்பது ஒரு புகழ் பெற்ற கணினி மென்பொருள் நிறுவனம். இப்பெயரின் பின்னணி என்ன?
இந்த நிறுவனத்தை நிறுவியவர்களுள் ஒருவர் John Warnock (the other being Charles Geschke). இவரின் இல்லத்தின் பின்புறம் ஒடு ஒரு சிறு நதியின் பெயரை இந்த நிறுவனத்துக்கு வைத்துள்ளார்.
Q77. உலகின் முதல் கணினி மென்பொருள் computer programme எழுதியவர் யார்?
Adam Lovelace , இங்கிலாந்து – இவர் புகழ் பெற்ற ஆங்கில கவிஞர் லார்ட் பைரோனின் மகள்.
Q78. BPO என்பதன் விரிவாக்கம் என்ன?
Business Process Outsourcing.
Q79. MBPO என்பதன் விரிவாக்கம் என்ன?
Medical Business Process Outsourcing.
Q80. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் BPO கிளையின் பெயர் என்ன?
Progeon.
Q81. இந்தியாவின் (உலகளவில்) புகழ்பெற்ற இன்ஃபோசிஸ் கணினி நிறுவனத்தை நிறுவியவர்கள் யாவர்?
2.7.1981 – N.R. நாராயணமூர்த்தி, நந்தன் நிலகேணி, என்.எஸ்.ராகவன், எஸ். கோபாலகிருஷ்ணன், எஸ்.டி.சிபுலால், கே. தினேஷ் மற்றும் எஸ். அரோரா.
Q82. சத்யம் கணினி நிறுவனத்தின் (now Mahindra Tech) BPO கிளையின் பெயர் என்ன?
Nipuna.
Q83. BPO -- தொழில் முறையில் “Near Shoring” என்ற தொடருக்கு என்ன பொருள் ?
இத்தொடரை ஒரு பொது தொடராகவும் எடுத்துக்கொள்ளலாம். ஒரு பணியை வெளியில் கொடுத்து செய்ய வேண்டும் என முடிவெடுக்கும் போது, அதை மிக அருகில் உள்ள (நாடு, நிறுவனம்) இடத்தில் கொடுத்து செய்து கொள்வது.
Q84. BPO தொழில் முறையில் “Follow the Sun” என்ற தொடரின் பொருள் என்ன?
Business Process Outsourcing வணிக முறையில், தகவல் பரிமாற்றம் அல்லது பதில், இந்திய நேரப்படி செய்யப் படும் போது மேலை நாடுகளில் இரவு நேரமாக இருக்கும். ஆகவே, இந்த பரிமாற்றம் உடனுக்குடன் நடப்பதற்காக, இங்கிருந்து பதில் கொடுக்கும் படியாக வேலை நேரத்தை அமைத்துக்கொள்வது இவ்வாறு அழைக்கப்படுகிறது.
Q85. “Boss” என்ற தொடர் BPO ஊழியர்களுடன் தொடர்புடையது. இதன் விளக்கம் என்ன?
Burn Out Stress Syndrome இது ஒரு வகையான உடல் நலக்குறைவு அறிகுறி.
Q86. 3 Com என்பது ஒரு புகழ் பெற்ற கணினி நிறுவனம். இந்த பெயரின் விளக்கம் என்ன?
Computer, Communication and Compatibility.
Q87. " Symphony " என்பது எதனுடைய பெயர் ?
Windows XP Media Center Edition 2005 -- Microsoft.
Q88. Windows OS செயல் இயக்கியின் அடுத்த வடிவம் என்ன?
Vista.
Q89. “Internet Explorer” எந்த நிறுவனத்தின் உலவி Browser?
Microsoft Browser.
Q90. ஆப்பிள் கணினி நிறுவனத்தின் உலவியின் பெயர் என்ன? Apple Computers Browser?
Safari.
Q91. VOIP என்பதின் விரிவாக்கம் என்ன?
Voice Over Internet Protocol.
Q92. Google நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது?
Menlo Park, California.
Q93. "" Elk Cloner "" என்பது கணினி உலகில் ஒரு தவறான காரணத்திற்காக புகழ் பெற்ற தொடர். அது என்ன?
முதல் கணினி வைரஸ். First Computer Virus.
Q94. “Cyberspace” என்ற தொடரை அறிமுகப்படுத்தியவர் யார்?
William Gibson – அமெரிக்க எழுத்தாளர். 1982 ல் இவருடைய நாவல் “Burning Chrome” ல் முதன் முதலாக இத்தொடரை பயன்படுத்தியுள்ளார்.
Q95. www.naukri.com , என்பது ஒரு வேலை வாய்ப்பு பற்றி அறிவிப்பு தளம். இதன் நிறுவனப் பெயர் என்ன?
Infoedge P.Ltd.,
Q96. கணினித்துறையில் “Virus” என்பதன் விரிவாக்கம் என்ன?
Vital Information Resources Under Siege.
Q97. “Spread Sheet” என்பது என்ன?
Office Computer application “Visicalc” என்பதன் மாற்று தொடர். (interactive computer application for organization, analysis and storage of data in tabular form. The program operates on data entered in cells of a table).
Q98. கணினித்துறையில் “Abandon ware” என்பது என்ன?
எந்த கணினி மென்பொருளுக்கு software உருவாக்கிய நிறுவனத்தின் செயல் ஆதரவு இனி இல்லை என்பதே.
Q99. 2004 ல் உலகளவில் கணினி செயலை பாதித்த வைரஸ் ன் பெயர் என்ன?
Sasser.
Q100. உலகிலேயே இணைய வசதி அளிக்கும் மிகப்பெரிய நிறுவனம் எது?
America on Line.
Q101. இந்தியாவில் இணைய வசதி அளிக்கும் மிகப்பெரிய நிறுவனம் எது?
ஏர்டெல் Airtel
Q102. “Helio Display” என்ற கணினி சார்ந்த தொடரின் பயன் என்ன?
சுருக்கமாக சொன்னால் திரையில்லாத கணினி முறை. அமெரிக்காவின் Massachusettes Institute of Technology கல்வி நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு செயல் முறை. இதில் எழுத்துக்கள், வடிவங்களை இயக்குபவர் தன்னை சுற்றி எங்கு வேண்டுமானாலும் பார்க்கும் ஒரு வசதி. இன்னும் பிரபலமாகவில்லை.
Q103. “phishing” என்ற ஆங்கில சொல் எதைக் குறிக்கிறது?
கணினி கட்டமைப்பு மூலமாக அடுத்தவர்களுடைய கடன் அட்டைகளின் credit card விவரங்களை தவறான முறையில் சேகரித்து, அதை தவறான செயல், குறிப்பாக அடுத்தவர் கணக்கிலிருந்து, பணம் எடுப்பது, இவ்வாறு அழைக்கப்படுகிறது.
Q104. பார்வையற்றோருக்காக, உரை நடையை ஒலி சொற்களாக மாற்றித் தரும் கணினி மென்பொருளின் பெயர் என்ன?
Jaws.
Q105. முகநூல் “face book”, சமூக வலைதளத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
Mark Zuckerberg, அமெரிக்கா -- 2004 மற்றும் அவருடைய தோழர்கள் Dustin Moskovitz, Eduardo Saverin and Chris Huges. இவருடைய நிறுவனமே ""whatsapp"" என்ற சமூக உடனடி தகவல் வலைதளம், ""instagram"" என்ற காணொளி பகிர்வு சமூக வலைதளம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
Q106. "Hangout" என்ற சமூக வலைதளத்தை அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
Google நிறுவனம்
Q107. "Telegram" என்ற சமூக வலைதளத்தை அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
நிக்கோலய் மற்றும் பால் ட்யூரோவ் என்ற ரஷ்ய சகோதரர்கள் -- 2013ல்.
Q108. உலகின் மிக வேகமான சூப்பர் கம்ப்யூட்டர் எது? (2016 நிலையில்)
Sunway TaihuLight
Q109. இந்தியாவின் மிக வேகமான சூப்பர் கம்ப்யூட்டர் எது? (2016 நிலையில்)
Param Yuva II
Q110. நாடுகளும் வலைதள டொமைன் பெயர்களும் COUNTRIES AND DOMAIN NAMES
 
எண் நாடுகள் டொமைன்
1. இந்தியா India .in
2. அமெரிக்கா America .usa
3. அல்பேனியா Albania .al
4. ஆண்டிகுவா Antigua .ag
5. ஆஸ்திரேலியா Australia .com.au
6. ஆஸ்திரியா Austria .at
7. பெல்ஜியம் Belgium .be
8. பொலிவியா Bolivia .bo
9. பார்பேடோஸ் Barbados .bb
10. ப்ரேஸில் Brazil .com.br
11. பல்கேரியா Bulgaria .bg
12. கேமரூன் Cameroon .cm
13. கேனடா Canada .ca
14. கொலம்பியா Colombia .com.co
15. கோஸ்டா ரிகா Costa Rica .co.cr
16. சிலி Chile .cl
17. சீனா China .cn
18. காங்கோ ஜனநாயகம் Congo Democratic .cd
19. காங்கோ குடியரசு Congo Republic .cg
20. செக் குடியரசு .cz
21. டென்மார்க் Denmark - .dk
22. இக்குவேடார் Ecuador .ec
23. ஃபின்லாந்து Finland .fi
24. ஃப்ரான்ஸ் France .fr 
25. ஜெர்மனி Germany .de
26. க்ரீஸ் Greece .gr
27. ஹாங்காங் Hong Kong .hk
28. ஹைத்தி Haiti .ht
29. ஐஸ்லாந்து Iceland .is
30. இந்தோனேசியா Indonesia .co.id
31. அயர்லாந்து Ireland - .ie
32. இத்தாலி Italy .it
33. ஜப்பான் Japan .jp
34. ஜோர்டான் Jordan .jo
35. லாட்வியா Latvia .lv
36. லாவோஸ் Laos .la
37. மௌரிட்டானியா Mauritania .mr
38. மெக்ஸிகோ Mexico .com.mx
39. மாண்டிநீக்ரோ Montenegro .me
40. நெதர்லாந்து Netherlands .nl
41. நார்வே Norway .no
42. பாகிஸ்தான் Pakistan .pk
43. பாலஸ்தீனம் Palestine .ps
44. பனாமா Panama .com.pa
45. பெரு Peru .pe
46. பிலிப்பைன்ஸ் Philippines .ph
47. போலந்து Poland .pl
48. போர்ச்சுகல் Portugal .pt
49. ப்யூர்டோ ரிக்க்கோ Puerto Rico .com.pr
50. ரொமானியா Romania .ro
51. ரஷ்ய கூட்டுறவு Russian Federation .ru
52. சியரா லியோன் Sierra Leone .sl
53. சிங்கப்பூர் Singapore .sg
56. ஸ்லோவாகியா Slovakia .sk
57. ஸ்லோவேனியா Slovenia .si
58. தென் கொரியா South Korea - .kr
59. ஸ்பெயின் Spain .es
60. ஸ்வீடன் Sweden .se
61. ஸ்விட்சர்லாந்து Switzerland .ch
62. தைவான் Taiwan .tw
63. துருக்கி Turkey .com.tr
64. துவாளு Tuvalu .tv
65. உக்ரைன் Ukraine .ua
66. ஐக்கிய ராஜ்யம் United Kingdom .co.uk
67. உஸ்பெகிஸ்தான் Uzbekistan .uz
68. வெனிசுலா Venezuela .com.ve
69. வியட்நாம் Vietnam .vn
Q111. ஆங்கில == தமிழ் முக்கிய கணினி சொற்கள் COMPUTER TERMINOLOGIES EQUIVALENT IN TAMIL
No: ஆங்கில சொல் தமிழ் இணைச்சொல்
1. Access அணுக்கம்
2. Activate இயக்கு
3. Active cell இயங்கு கலன்
4. Active file நடப்புக் கோப்பு
5. Address முகவரி
6. Address bus முகவரி பாட்டை
7. Address modification முகவரி மாற்றம்
8. Administrator நிர்வாகி
9. Algorithm language நெறிப்பாட்டு மொழி
10. Algorithm நெறிமுறை
11. Alpha testing முதற்கட்ட சோதனை
12. Alphabet அகரவரிசை/நெடுங்கணக்கு
13. Alphanumeric எண்ணெழுத்து
14. Analog representation ஒப்புமை மீள்வடிவாக்கம்
15. Analog ஒப்புமை
16. Analytical Engine பகுப்பாய்வு பொறி
17. Animation அசைவூட்டம்
18. Anti-virus நச்சுநிரற்கொல்லி/நச்சுநிரல் எதிர்ப்பான்
19. Applet குறுநிரல்
20. Application level பயன்பாட்டு நிலை
21. Application programmer பயன்பாட்டு நிரலாளர்
22. Application programming பயன்பாட்டு நிரலாக்கம்
23. Application programs பயன்பாட்டு நிரல்கள்
24. Application service provider பயன்பாட்டுச் சேவை வழங்குனர்
25. Application software பயன்பாட்டு மென்பொருள்
26. Application செயலி
27. Archive file காப்பகக் கோப்பு
28. Archive gateway காப்பக நுழைவாயில்
29. Archiving காப்பகப்படுத்தல்
30. Array processor அணிச் செயலி
31. Array அணி
32. Arrow key திசை விசை/திசை குறி
33. Artificial intelligence செயற்கை நுண்ணறிவு
34. Assembler பொறிமொழியாக்கி
35. Assembly Language பொறி மொழி
36. Audio blog ஒலிதப்பதிவு
37. Audio ஒலிதம்
38. Auto block தானியங்கித் தடை
39. Auto restart தானியக்க மீள்தொடக்கம்
40. Automated data processing தன்னியக்கத் தரவுச் செயலாக்கம்
41. Auxiliary function துணைச்செயற்கூறு
42. Auxiliary memory துணை நினைவகம்
43. Auxiliary operation துணை செயல்பாடு
44. Auxiliary storage துணை தேக்கம்
45. Axes அச்சுகள்
46. Back up காப்புநகல்/காப்புநகலெடு
47. Backspace பின்நகர்வு
48. Bar chart பட்டை வரைப்படம்
49. Bar code பட்டைக்குறிமுறை
50. Bar code scanner பட்டைக்குறிமுறை வருடி
51. Bar printer பட்டை அச்சுப்பொறி
52. Batch processing தொகுதிச்செயலாக்கம்
53. Beta அறிமுகப் பதிப்பு
54. Binary Code இரும குறிமுறை
55. Binary device இருமக் கருவி
56. Binary digit இரும இலக்கம்
57. Binary number இரும எண்
58. Binary operation இரும செயற்பாடு
59. Binary system இரும கட்டகம்
60. Bit map display நுண் படக் காட்சி
61. Bit map scanning நுண் பட வருடி
67. Bit mapped screen நுண் பட திரை
68. Bit values நுண்மியின் மதிப்புகள்
69. Bit நுண்மி
70. Bitmap நுண் படம்
71. Bit-mapped font நுண் பட எழுத்துரு
72. Blank character வெற்றுரு
73. Blanking வெறுமைப்படுத்தல்
74. Blog வலைப்பதிவு
75. Blog info வலைப்பதிவு தகவல்கள்
76. Blog tools வலைப்பதிவுக் கருவிகள்
77. Blogger வலைப்பதிவர்
78. Blogger circle வலைப்பதிவர் வட்டம்
79. Blogging வலைப்பதிதல்
80. Bookmark புத்தகக் குறி
81. Boot தொடக்கு
82. Bridge இணைவி
83. Broadband அகலப்பட்டை/ஆலலை
84. Browser உலாவி
85. Browsing உலாவுதல்
86. Bug வழு
87. Bug report வழு அறிக்கை
88. Bus பாட்டை
89. Cache தேக்கம்
90. Calculator mode கணிப்பான் நிலை
91. Carriage return ஏந்தி மீளல்
92. CD burning குறுவட்டு எரித்தல்
93. CD player இறுவட்டு இயக்கி
94. Central processing unit (CPU) மையச் செயலகம்
95. Central processor மையச் செயலி
96. Chain printer தொடர்ப்பதிப்பான்
97. Channel தடம்
98. Character வரியுரு
99. Character code வரியுருக் குறி
100. Character map வரியுரு வரைப்படம்
101. Character recognition வரியுரு அறிதல்
102. Character set வரியுருக்கணம்
107. Character string வரியுருச்சரம்
108. Checkbox தேர்வுப்பெட்டி
109. Chips சில்லுகள்
110. Click சொடுக்கு
111. Clipboard மறைப்பலகை
112. Closed file மூடப்பட்ட கோப்பு
113. Cloud computing முகிலக் கணிப்பு
114. Color coding வண்ணக் குறிமுறை
115. Color graphics வண்ன வரைகலை
116. Column split நெடுவரிசைப் பிரிப்பு
117. Column நெடுவரிசை
118. Command key கட்டளை விசை
119. Command கட்டளை/ஆணை
120. Comment கருத்துரை/பின்னூட்டம்/முன்னிகை
121. Comments moderation கருத்துரை மட்டுறுத்தல்
122. Common storage பொதுத்தேக்கம்
123. Communication link தொடர்பு இணைப்பு
124. Communication processor தொடர்பு செயலகம்
125. Communication software தொடர்பு மென்பொருள்
126. Communication protocols தொடர்பு நெறிமுறைகள்
127. Community portal சமுதாய வலைவாசல்
128. Compact disc (CD) குறுவட்டு/இறுவட்டு
129. Comparative operator ஒப்பீட்டு இயக்கி
130. Compiler தொகுப்பி
131. Complier language தொகுப்பு மொழி
132. Component உறுப்புக்கூறு
133. Computer engineer கணிப் பொறியாளர்
134. Computer graphic கணினி வரைகலை
135. Computer language கணினி (நிரல்) மொழி
136. Computer motherboard கணினி தாய்பலகை
137. Computer network கணினி வலையமைப்பு
138. Computer operation கணினிச் செயல்பாடுகள்
139. Computer program கணினி நிரல்
140. Computer resources கணினி வளங்கள்
141. Computer user கணினி பயனர்
142. Computer utility கணினி பயனமைப்பு
143. Computerization கணினிமயமாக்கல்
144. Computerized data base கணினிமய தரவு தளம்
145. Computerized data processing கணினிமய தரவு செயலாக்கம்
146. Computing கணினிப்பணி
147. Configuration அமைவடிமம்
148. Console முனையம்
149. Constants மாறிலிகள்
150. Control key கட்டுப்பாட்டு விசை
151. Control panel கட்டுபாட்டு பலகை/கட்டுப்பாட்டகம்
152. Control program கட்டுப்பாட்டு நிரல்
153. Control statement கட்டுப்பாட்டுக்கூற்று
154. Control structure கட்டுப்பாட்டு உருவம்
155. Control system கட்டுப்பாட்டு கட்டகம்
156. Control unit கட்டுப்பாட்டு பிரிவு
157. Cookie நினைவி
158. Copy protection நகல் காப்பு
159. Copyright status பதிப்புரிமை நிலை
160. Core storage வளையத் தேக்கம்
161. Cost analysis விலைப் பகுப்பாய்வு
162. Cost benefit analysis விலை பயன் பகுப்பாய்வு
163. Crop செதுக்கு
164. Cursor சுட்டி
165. Curve fitting வளைக்கோட்டுப் பொருத்தம்
166. Custom software தனிப்பயன் மென்பொருள்
167. Cyber மின்வெளி
168. Dashboard கட்டுப்பாட்டகம்
169. Data தரவு
170. Data catalog தரவு விவரப்பட்டியல்
171. Data flow தரவுப் பொழிவு
172. Data processing தரவுச் செயலாக்கம்
173. Database தரவுத்தளம்
174. Decimal digit பதின்ம இலக்கம்
175. Decimal number பதின்ம எண்
176. Decimal point பதின்ம புள்ளி
177. Decimal பதின்மம்
178. Decode குறிமுறை நீக்கு/நீக்கி
179. Decompress விரிவாக்கு
180. Default முன்னிருப்பு/இயல்பிருப்பு
181. Desktop computer மேசை கணினி
182. Desktop முகத்திரை
183. Digital எண்மின்
184. Disambiguation தெளிவாக்கம்/தெளிவாக்கல்
185. Disk drive வட்டு இயக்கி
186. Display name தோற்றப்பெயர்
187. DNS கொப்பெகம் [(கொ)ற்ற(ப்பெ)யர்க்(க)ட்டக(ம்)]
188. Documentation ஆவணமாக்கம்
189. Domain கொற்றம்/ஆள்களமையம்
190. Domain Name System கொற்றப் பெயர்க் கட்டகம்
191. Double click இரட்டைச் சொடுக்கு
192. Download பதிவிறக்கம்
193. Drag இழு
194. Driver இயக்கி
195. Drum plotter உருளை வரைவு
196. Drum printer உருளை அச்சுப்பொறி
197. Drum scanner உருளை வருடி
198. E-book மென்நூல்
199. Edit profile சுயவிபரத்தை மாற்று
200. Educational software அறிவியல் மென்பொருள்
201. E-governance மின்-அரசாண்மை
202. E-mail மின்னஞ்சல்
203. Embedded பொதிந்துள்ள
204. Encoding குறியாக்கம்
205. Eraser அழிப்பான்
206. Expansion slots விரிவாக்க செருகுவாய்கள்
207. Extended info விரிவாக்கப்பட்ட தகவல்
208. External links வெளி இணைப்புகள்
209. External search engine வெளித்தேடுபொறி
210. FAQ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
211. Field புலம்
212. File கோப்பு
213. File management கோப்பு மேலாண்மை
214. File share கோப்பு பகிர்வான்
215. File sharing கோப்பு பகிர்தல்
216. Firewall தீயரண்
217. Firmware நிலைப்பொருள்
218. Flat monitor தட்டை திரையகம்
219. Floppy drive நெகிழ் வட்டு
220. Flow chart நெறிமுறை விளக்கப்படம்
221. Folder கோப்புறை
222. Font எழுத்துரு
223. Font and word processor எழுத்துருவும் சொல் செயலாக்கியும்
224. Font name எழுத்துரு பெயர்
225. Footer அடிப்பாகம்
226. Formal language வடிவ மொழி
227. Format வடிவம்/வடிவூட்டம்
228. Formatting வடிவமைத்தல்
229. Formula சூத்திரம்
230. Free software இலவச மென்பொருள்
231. Gallery காட்சியகம்
232. Gateway நுழைவாயில்
233. Global dashboard கோளக் கட்டுப்பாட்டகம்
234. Global Positioning system -GPS கோள இருப்பிடக் கட்டகம்/தடங்காட்டி
235. Grammar checker இலக்கணத் திருத்தி
236. Graphic வரையியல்/வரைகலை
237. Hand held devices கையடக்கக் கருவிகள்
238. Hand held Scanner கையடக்க வருடுபொறி
239. Hard disk வன்வட்டு
240. Hardware வன்பொருள்
241. Header தலைப்பு
242. Higher level language உயர்நிலை மொழி
243. Home முகப்பு
244. Homepage முகப்புப்பக்கம்
245. Host computer புரவலர் கணினி
246. Hyphenation சொல் பிரித்தல்
247. Icon உருச்சின்னம்/படவுரு
248. iDNS வலைக்கொற்றப் பெயர்க் கட்டகம்
249. iDomain வலைக்கொற்றம்
250. Image படிமம்
251. Import இறக்கம்
252. Incompatible முரண்பாடு
253. Index சுட்டெண்
254. Index variable சுட்டுமாறி
255. Information data தகவல் தரவு
256. Information super highways தகவல் மீப் பெருவழிகள்
257. Information technology தகவல் தொழில்நுட்பம்
258. Input unit உள்ளீட்டுப் பகுதி
259. Insert உள்ளிடு/செருகு
260. Install நிறுவு
261. Installation நிறுவுதல்
262. Integrated chips சுற்றமைப்புச் சில்லுகள்
263. Integrated circuit chips ஒருங்கிணைப்பு சுற்றமைப்புச் சில்லுகள்
264. Inter language மொழியிடை
265. Interactive sites ஊடாட்ட தளங்கள்
266. Interface இடைமுகம்/இடைமுகப்பு
267. Internal error உள்ளகத் தவறு
268. International (DNS) பன்னாட்டுக் (கொப்பெகம்)
269. Internet இணையம்
270. Internet protocol address இணைய நெறிமுறை முகவரி
271. Internet protocol (IP) இணைய நெறிமுறை
272. Internet service provider (ISP) இணையச் சேவை வழங்குனர்
273. Interpreter வரிமொழிமாற்றி/இடைமாற்று
274. Italic text சாய்வெழுத்து
275. Iteration பன்முறைச் செய்தல்
276. Java script ஜாவா ஆணைத்தொகுதி
277. Key விசை
278. Keyboard விசைப்பலகை/தட்டச்சுப்பலகை
279. Keypad விசைத்தளம்
280. Keyword குறிப்புச்சொல்
281. Landscape அகலவாக்கி
282. Laptop computer மடிக்கணினி
283. Layout தளவமைப்பு
284. LCD Monitor (Liquid Crystal Display) திரவ பளிங்குத் திரையகம்
285. Left click இடதுச் சொடுக்கு
286. Lexing error தொகுத்தல் தவறு
287. Light pen எழுதுகோல்
288. Link இணைப்பு/தொடுப்பு
289. Log in புகுபதி/உற்புகு
290. Log out விடுபதி/வெளியேறு
291. Machine language பொறிமொழி
292. Machine translation எந்திர மொழிபெயர்ப்பு
293. Magnetic disk காந்த வட்டு
294. Magnetic tape காந்த நாடா
295. Main Page முகப்புப்பக்கம்/முதற்பக்கம்
296. Maintenance page மேலாண்மைப் பக்கம்
297. Management ஆளுமை/முகாமைத்துவம்
298. Mechanical calculator எந்திர கணிப்பான்
299. Media ஊடகம்
300. Media player ஊடக இயக்கி
301. Memory unit நினைவகப் பகுதி
302. Memory நினைவகம்
303. Menu பட்டியல்
304. Metadata தரவு விவரம்
305. Micro processor நுண் செயலி
306. Microphone ஒலிவாங்கி
307. Modem இணக்கி
308. Moderation மட்டுறுத்தல்
309. Moderator மட்டுறுத்துனர்
310. Monetize மதிப்புடைச்செய்
311. Monitor கணித்திரை/திரையகம்
312. Motherboard தாய்ப்பலகை
313. Mouse சொடுக்கி
314. Multimedia பல்லூடகம்
315. Multitasking பல்பணியாக்கம்
316. Navigation வழிசெலுத்தல்
317. Network பிணையம்/வலையமைப்பு
318. Networking வலைப்பின்னல்
319. New post புதிய இடுகை
320. Non-terminals முடியா முனையங்கள்
321. Notation குறிமானம்
322. Numeral எண் முறை
323. Offline இணைப்பறு/இணைப்பின் வெளியே
324. Online இணைப்பில்
325. Operating system இயங்குக் கட்டகம்
326. Option தேர்வு
327. Orphaned pages உறவிலிப் பக்கங்கள்
328. Other languages பிறமொழிகள்/ஏனைய மொழிகள்
329. Outsourcing அயலாக்கம்
330. Package பொதி
331. Page layout பக்க வடிவமைப்பு
332. Page views பக்கப் பார்வைகள்
333. Panel பலகை
334. Paperless office தாளில்லா அலுவலகம்
335. Paragraph பந்தி
336. Parallel processing computers இணைச் செயலாக்க கணினிகள்
337. Parent category முதன்மை பக்கவகை
338. Password கடவுச்சொல்
339. Paste ஒட்டு
340. Patch பொருத்து
341. Peripherals உபகரணங்கள்
342. Personal Computer தனி கணினி
343. Piracy களவுநகலாக்கம்
344. Plug in சொருகு/சொருகி
345. Pointer சுட்டு
346. Portable Printer கையடக்க அச்சுப்பொறி
347. Portal வலைவாசல்
348. Post இடுகை
349. Posting இடுகையிடல்
350. Posts இடுகைகள்
351. Press அமுக்கு
352. Preview முன்தோற்றம்
353. Print அச்சிடு
354. Printer அச்சுப்பொறி
355. Privacy தனிக்காப்பு/தனிமறைவு
356. Processor செயலி
357. Program நிரல்
358. Programmers நிரலர்கள்
359. Programming language நிரலாக்க மொழி
360. Prompt தூண்டி
361. Protect காப்புச்செய்
362. Protection log தடைப்பதிகை
363. Protocols நெறிமுறைகள்
364. Proxy Server பதில் சேவையகம்
365. Public domain பொதுக்கொற்றம்/பொதுக்களம்
366. Publishing பதிப்பிடல்
367. RAM (Random access memory) நினைவகம்
368. Random Page ஒழுங்கிலாப் பக்கம்
369. Recovery tool மீட்சி கருவி
370. Reference desk எடுகோள் மேடை
371. Reference எடுகோள்
372. Refresh புதுப்பி
373. Reinstall மீள்நிறுவு
374. Replace மீள்வை
375. Reprogramming மறுநிரலாக்கம்
376. Reset மீட்டமை
377. Restore மீள வை/ மீள்வி
378. Review மீளாய்வு
379. Right click வலச்சொடுக்கு
380. Root மூலம்
381. Root directory மூல அடைவு
382. Router வழிச்செயலி
383. Row குறுக்கு வரிசை/நிரை
384. Save சேமி
385. Save as என சேமி
386. Scanner வருடுபொறி
387. Screensaver திரைக்காப்பு
388. Search தேடு/தேடல்
389. Search engine தேடு பொறி
390. Search query தேடல் வினா
391. Section பகுதி
392. Select தேர்வுசெய்
393. Sensor உணரி
394. Server வழங்கி
395. Setting அமைப்புகள்
396. Share my profile எனது சுயவிவரத்தை பகிர்
397. Shared files பகிரப்பட்ட கோப்புகள்
398. Shareware பகிர்மானம்
399. Shortcut குறுவழி/குறுக்குவழி
400. Show all எல்லாம் காண்பி
401. Shutdown அணை/மூடு
402. Sign in புகுபதிகை/புகுபதிவு
403. Sign off விடுபதிகை/விடுபதி
404. Sign out வெளியேறு
405. Single click தனிச் சொடுக்கு
406. Sister Projects பிற திட்டங்கள்
407. Software மென்பொருள்
408. Software package மென்பொருள் பொதி
409. Sorting algorithms தீர்வு நெறிகள்
410. Sorting and searching வரிசையாக்கமும் தேடலும்
411. Sound Card ஒலிக்கிரமி
412. Source code மூலவரைவு
413. Space வெளி/இடைவெளி
414. Spacing இடைவெளியிடல்
415. Spam எரிதம்
416. Spell checker சொற்பிழை திருத்தி
417. Split பிரிப்பு
418. Spooler சுருளி
419. Spreadsheet விரித்தாள்
420. Stats புள்ளிவிவரங்கள்
421. String literals சர மதிப்புருக்கள்
422. Structured programming கட்டுரு நிரலாக்கம்
423. Stub குறுங்கட்டுரை
424. Subtitle துணையுரை
425. Suffix பின்னொட்டு
426. Super Computer மிகுவேகக் கணினி/மீக்கணினி
427. Syntax error தொடரமைப்புத் தவறு
428. Sysop முறைமைச் செயற்படுத்துனர்
429. System operator கட்டக இயக்குநர்
430. System programmer கட்டக நிரலாளர்
431. System கட்டகம்
432. Tab தத்தல்
433. Template வார்ப்புரு
434. Terminal முனையம்
435. Text formatting உரை வடிவம்
436. Text to speech உரையை பேச்சாக்குதல்
437. Text to voice உரையைக் குரலாக்குதல்
438. Theory தேற்றை
439. Theme தோற்றக்கரு
440. Thesis தேற்று
441. Time zone நேரவலையம்
442. Toolbar கருவிப்பட்டை
443. Top level domain உயர் மட்டக் கொற்றம்
444. Transistor திரிதடையம்
445. Trash குப்பை
446. Undo செய்தவிர்/செய்ததைத் தவிர்
447. Unit பிரிவு
448. Upgrade மேம்படுத்து/மேம்படுத்தல்
449. Upload பதிவேற்று
450. URL (இணைய) முகவரி
451. Use பயனர்
452. User account பயனர் கணக்கு
453. User’s guide பயனர் வழிக்காட்டி
454. Utility பயனமைப்பு
455. Variable மாறி/மாறுப்படுகிற
456. Version பதிப்பு
457. Video blog ஒளிதப் பதிவு
458. Video ஒளிதம்/காணொளி
459. View profile சுயவிவரம் காண்பி
460. View பார்வை
461. Viewer பார்வையாளர்
462. Virtual server மெய்நிகர்ச் சேவையகம்
463. Virus நச்சுநிரல்
464. Voice mail குரலஞ்சல்
465. Voice recognition mbly Language பொறி மொழி
466. Volume ஒலியளவு
467. Watch list கவனிப்புப் பட்டியல்
468. Website இணையத்தளம்
469. Window சாளரம்
470. Wireless கம்பியில்லா
471. Wish list விருப்பப்பட்டியல்
472. Wizard வழிகாட்டி
473. Word processor சொற் செயலி
474. Worksheet பணித்தாள்
475. Workstation பணிநிலையம்
476. World Wide Web (WWW) வைய விரிவு வலை
477.  Whatsap புலனம்
478. Facebook முகநூல்
479. You Tube  வலையொளி
480. Instagram  படவரி
481. WeChat  அளாவி
482. Messenger  பற்றியம்
483. Twitter  கீச்சகம்
484. Telegram தொலைவரி
485. Skype  காயலை
486. Blue Tooth  ஊடலை
487.   Wifi அருகலை
488. Hotspot  பகிரலை
489. Online  இயங்கலை
490. Offline  முடக்கலை
491. Thumb drive  விரலி
492. Battery  மின் கலம்
493. Laser   சீரொளி
494. Inkjet   மை வீச்சு
495. Print Screen  திரைப்பிடிப்பு 
496. Meme  போன்மி
497. Thumbnail  சிறுபடம்
498. Selfie  தம்படம்
499. Router   திசைவி
500. Cyber   மின்வெளி
501. Digital  எண்மின்
502. Charger  மின்னூக்கி
503. Sim card   செறிவட்டை
504.  Smart Phone   திறன் பேசி
505. Scanner   வருடி
506. Projector  ஒளிவீச்சி
507. 2D இருதிரட்சி
508. 3D  முத்திரட்சி
509. LED  ஒளிர்விமுனை
510. OCR  எழுத்துணரி
511. CCTV மறைகாணி