Khub.info Learn TNPSC exam and online pratice

துணைக் குடியரசுத் தலைவர்

Q1. அரசியல் சட்டத்தின் எந்த விதிப்படி துணைக் குடியரசுத் தலைவர் நியமிக்கப்படுகிறார்?
விதி எண் 63
Q2. துணைக் குடியரசுத் தலைவரை தேர்ந்து எடுப்பவர்கள் .....
மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள். இத்தேர்தலில் மாநில சட்டசபை உறுப்பினர்கள் பங்கேற்பதில்லை.
Q3. அரசியல் சட்ட த்தின் எந்த விதிப்படி குடியரசுத் தலைவர், மாநிலங்களவையின் தலைவராக தேர்தலின்றி பொறுப்பேற்கிறார்?
விதி எண் 64
Q4. துணைக் குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் என்ன?
விதி எண் 67ன் படி 5 வருடம். அதற்கு முன்பாக பதவி விலகல் அல்லது விலக்கல் மூலம் பணி நீக்கம் ஏற்படலாம். பதவி நீக்கம் என்பது மாநிலங்களவை தீர்மானம் மூலம் இரு அவைகளின் ஒப்புதலோடு நடைப்படுத்தப் பட வேண்டும்.
Q5. துணைக் குடியரசுத் தலைவர் ஆவதற்கு தேவையான குறைந்த பட்ச வயது?
35. மற்ற நிபந்தனைகள் குடியரசுத் தலைவருக்கு கொடுக்கப்பட்டுள்ளபடி.
Q6. தேவையின் அடிப்படையில் துணைக் குடியரசுத் தலைவர் எவ்வளவு காலம் குடியரசுத் தலைவராக பணியாற்றலாம்?
ஆறு மாதங்கள். இக்காலத்திற்குள் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தவறினால் அது அரசியல் சட்ட ரீதியான குறைபாடாகிவிடும். (Constitutional Break Down)
Q7. துணைக் குடியரசுத் தலைவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பவர் யார்?
குடியரசுத் தலைவர்.
Q8. நம் நாட்டின் முதல் துணைக் குடியரசுத் தலைவர் யார்?
டாக்டர் S (Sarvepallai). ராதாகிருஷ்ணன்.
13-5-1952 - 12-5-1962. இவர் தான் இப்பதவியில் அதிக காலம் இருந்தவர் (இவருடன் முகமது அன்சாரி அவர்களின் பதவிக்காலம் 2017ல் முடிந்தவுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
Q9. குறைந்த காலம் துணைக் குடியரசுத் தலைவர் பதவி வகித்தவர் யார்?
வி.வி.கிரி - 13-5-1967 - 3-5-1969. இரண்டு வருடங்களுக்கு பத்து நாட்கள் குறைவாக.
Q10. துணைக் குடியரசுத் தலைவர்களுள், குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றவர்கள் யார்?

1. டாக்டர் S. ராதாகிருஷ்ணன்.
2. டாக்டர் ஜாகிர் உசேன்
3. வி.வி.கிரி
4. R. வெங்கட்ராமன்
5. எஸ்.டி. ஷர்மா
6. K.R. நாராயணன்
Q11. துணைக் குடியரசுத் தலைவர்களுள், குடியரசுத் தலைவர் ஆகாதவர்கள் யார்?
1. ஜி.எஸ். பாதக், 2. பி.டி.ஜட்டி, 3. முகமது இதயத்துல்லா, 4. கிருஷண் காந்த் 5. பைரோன் சிங் ஷேகாவத்.
இவர்களுள், பி.டி. ஜட்டி மற்றும் முகமது இதயத்துல்லா இருவரும் தற்காலிக குடியரசுத் தலைவராக இருந்திருக்கிறார்கள்
1. முகமது இதயத்துல்லா - 20-7-1969 - 24-8-1969 - குடியரசுத் தலைவர் தேர்தல் காலம்.
2. பி.டி. ஜட்டி - 11-2-1977 - 25-7-1977 - ஃபக்ருதீன் அலி அகமது மறைவு.
Q12. குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவராக இரண்டு தொடர் பதவிக்காலம் (Two Consecutive Terms) பதவி வகித்தவர்கள் யார்?

1. டாக்டர் ராஜேந்திர பிரசாத் - குடியரசுத் தலைவர்.
2. டாக்டர் S. ராதாகிருஷ்ணன் மற்றும் முகமது அன்சாரி - துணைக் குடியரசுத் தலைவர்

துணைக் குடியரசுத் தலைவர்கள் :

Q13. துணைக் குடியரசுத் தலைவர்கள்
  வ.எண்.   பெயர்   முதல்   வரை
  1.   டாக்டர் S. ராதாகிருஷ்ணன்   13-5-1952   12-5-1962
  2.   டாக்டர் ஜாகிர் உசேன்   13-5-1962   12-5-1967
  3.   வி.வி.கிரி   13-5-1967     3-5-1969
  4.   கோபால் ஸ்வரூப் பாதக்   31-8-1969   30-8-1974
  5.   பாசப்ப தாணப்ப ஜட்டி   31-8-1974   30.8.1979
  6.   முகமது இதயத்துல்லா   31-8-1979   30-8-1984
  7.   ராமசாமி வெங்கட்ராமன்   31-8-1984   27-7-1987
  8.   சங்கர் தயாள் சர்மா     3-9-1987   24-7-1992
  9.   கொச்சேரி ராமன் நாராயணன்   21-8-1992   21-7-1997
  10.   கிருஷண் காந்த்   21-8-1997   21-7-2002
  11.   பைரோன் சிங் ஷேகாவத்   19-8-2002   21-7-2007
  12.   முகமது அன்சாரி   21-7-2007   தொடர்கிறார்.