Khub.info Learn TNPSC exam and online pratice

குடியரசுத் தலைவர் - ஆளுநர்

Q1. இந்தியா எப்போது குடியரசு நாடானது?
26-1-1950 - வியாழக்கிழமை
Q2. குடியரசுத் தலைவர் பதவி என்றிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது?
26-1-1950
Q3. 15-8-1947க்கும் 26-1-1950க்கும் இடைப்பட்ட காலத்தில் நம் நாட்டின் தலைவராக இருந்தவர்கள் யார்?

1. 15-8-1947 - ஜூன் 1949 - மவுண்ட்பேட்டன் பிரபு - கவர்னர் ஜெனரல்.
2. ஜூன் 1949 - 26-1-1950 - சி-ராஜகோபாலச்சாரி - முதல் இந்திய மற்றும் ஒரே கவர்னர் ஜெனரல்.
Q4. அரசியல் சட்டத்தில், குறிப்பாக, எந்த விதி குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி விளக்குகிறது?
விதி 54. மற்ற விதிகள் 51-61 வரை குடியரசுத் தலைவரின் மற்ற விபரங்களை பற்றி விரிவாக விளக்கியுள்ளது.
Q5. ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் குடியரசுத் தலைவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
ராஷ்டிரபதி - Lord of the Realm.
Q6. ராஷ்டிரபதி என்ற சமஸ்கிருத வார்த்தையை கோர்த்து அளித்தவர் யார்?
T.N. ஸ்ரீகண்டைய்யா - கன்னட எழுத்தாளர் மற்றும் வரைவு இந்திய அரசியல் சட்டக் குழு உறுப்பினர்.
Q7. குடியரசுத் தலைவராக தேவையான தகுதிகள் யாவை?

1. இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
2. 35 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
3. பண வரவு இருக்கக் கூடிய வேறு எந்த பதவியும் வகிக்கக் கூடாது.
4. மன ரீதியாக ஸ்திரமான சுவாதீனம் உள்ளவராய் இருத்தல் வேண்டும்.
துணைக் குடியரசுத் தலைவருக்கும் இந்த விதிகள் பொருந்தும்.
Q8. குடியரசு (Democracy : ஜன நாயகம்) என்றால் என்ன?
மக்களாட்சி, அதாவது மக்களால் மக்களுக்காக மக்களின் பிரதி நிதிகளால், குடியரசுத் தலைவரின் கீழ் நடத்தப்படும் ஆட்சி ஆகவே, மக்களிடம் தான் அதிக அதிகாரம் உள்ளது என்பது கருத்து.
Q9. குடியரசுத் தலைவர் தேர்தலில் பங்கு பெறுபவர்கள் யார்?

1. பாராளுமன்றத்தின் இரு அவை உறுப்பினர்கள்.
2. மாநில அரசு சட்டசபை உறுப்பினர்கள். இவ்வாறாக அடங்கிய வாக்காளர் குழுவின் மூலம், ரகசிய வாக்கெடுப்பின் மூலம், ஒற்றை மாற்று வாக்கு (Single Transferable Vote) முறையின் மூலம் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
Q10. குடியரசுத் தலைவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பவர் யார்?
உச்ச நீதி மன்ற உயர் நீதிபதி - Chief Justice of India (அரசியல் சட்ட விதி எண் - 60)
Q11. குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் என்ன?
5 ஆண்டுகள். (அதற்கு முன்பாக பதவி விலகல், பதவி விலக்கல் மற்றும் மரணம் போன்ற காரணங்களால் குறையலாம்.
Q12. குடியரசுத் தலைவரை எந்த விதிப்படி பதவி நீக்கம் செய்யலாம்?
அரசியல் சட்ட விதி எண் 61ன் கீழ் அரசியல் ஒழுங்கீனம் (Impeachment) என்ற அடிப்படையில்.
Q13. நம் நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் யார்?
டாக்டர் ராஜேந்திர பிரசாத் - 26-1-1950 - 13-5-1962.
Q14. நம் நாட்டில் நீண்ட கால குடியரசுத் தலைவராக இருந்தவர் யார்?
டாக்டர் ராஜேந்திர பிரசாத் - 26-1-1950 - 13-5-1962 - 12 வருடம், 3 மாதங்கள்.
Q15. நம் நாட்டில் குறைந்த கால குடியரசுத் தலைவராக இருந்தவர் யார்?
டாக்டர் ஜாகிர் உசேன் - 13-5-1967 - 3-5-1969 (இரண்டு வருடங்களுக்கு 10 நாட்கள் குறைவாக)
Q16. இஸ்லாமிய சமுதாயத்திலிருந்து எத்தனை குடியரசுத் தலைவர்கள் பதவி வகித்துள்ளனர்?
மூன்று.
1. ஜாகிர் உசேன் - 13-5-1967 - 3-5-1969
2. ஃபக்ருதீன் அலி அகமது - 24-8-1974 - 11-2-1977
3. APJ அப்துல் கலாம் - 25-7-2002 - 25-2-2007
Q17. சீக்கிய மதத்தை சார்ந்த எத்தனை பேர் குடியரசுத் தலைவர் பதவி வகித்துள்ளனர்?
1. க்யானி ஜெயில் சிங் - 25-7-1982 - 25-7-1987
Q18. தாழ்த்தப் பட்ட இனத்தை சார்ந்த எத்தனை பேர் குடியரசுத் தலைவராக இருந்துள்ளனர்?
1. K.R. நாராயணன் - ஜூலை 1997 - ஜூலை 2002.
Q19. பதவியிலிருக்கும் போது மறைந்த இரண்டு குடியரசுத் தலைவர்கள் யார்?

1. டாக்டர் ஜாகிர் உசேன் - மறைவு - 3-5-1969
2. ஃபக்ருதீன் அலி அகமது - மறைவு - 11-2-1977
Q20. குறைந்த வயதில் நம் நாட்டு குடியரசுத் தலைவராக பதவியேற்றவர் யார்?
நீலம் சஞ்சீவ ரெட்டி - 64 வயது.
Q21. அதிகமான வயதில் நம் நாட்டு குடியரசுத் தலைவராக பதவியேற்றவர் யார்?

1. R. வெங்கட்ராமன்
2. ப்ரணாப் முகர்ஜி. - இருவருமே தங்களது 77வது வயதில் இப்பதவியை ஏற்றனர்.
Q22. எத்தனை தடவை, எந்த கால கட்டத்தில் தற்காலிக குடியரசுத் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்?

1. வி.வி. கிரி - 3-5-1969 - 20-7-1969 - டாக்டர் ஜாகீர் உசேன் மறைவு.
2. எம். இதயத்துல்லா - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி - 20-7-1969 - 24-8-1969 - குடியரசுத் தலைவர் தேர்தல்.
3. பி.டி. ஜட்டி - 11-2-1977 - 2-5-1977 - ஃபக்ருதீன் அலி அகமது மறைவு
இவர்களில் வி.வி.கிரி மட்டும் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றார்.
Q23. அரசியல் சம்பந்தமில்லாத யார் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்?
APJ அப்துல் கலாம் - விஞ்ஞானி - 2002 - 2007 (இவர் முழுப்பெயர் - அவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்)
Q24. குடியரசுத் தலைவர்களுள் யார் மாநில முதலமைச்சராகவும், மக்களவை சபா நாயகராகவும் பணியாற்றியவர் யார்?
நீலம் சஞ்சீவ ரெட்டி - ஆந்திர பிரதேச முதல்வர் - மக்களவை சபா நாயகர் - குடியரசுத் தலைவர்.
Q25. குடியரசுத் தலைவராக தற்காலிகப் பதவி வகித்த ஒரே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யார்?
முகமது இதயத்துல்லா - 20-7-1969 - 24-8-1969.
Q26. இந்திரா காந்தி மறைவின் போது குடியரசுத் தலைவராக இருந்தவர் யார்?
க்யானி ஜெயில் சிங்
Q27. குடியரசுத் தலைவர் தேர்தல்களில் எந்த ஒரே தேர்தலில் இரண்டாம் விருப்ப வாக்குகள் (Second Preference Votes) கணக்கிடப்பட்டு குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்?
1969 - வி.வி. கிரி.
Q28. ராஜீவ் காந்தி மறைவின் போது (28.5.1991) குடியரசுத் தலைவராக இருந்தவர் யார்?
R. வெங்கட்ராமன்
Q29. எந்த மாநிலம் அதிகமான குடியரசுத் தலைவர்களைக் கொடுத்துள்ளது?
ஆந்திரப் பிரதேசம் - 1. எஸ். ராதா கிருஷ்ணன், 2. விவி. கிரி, 3. நீலம் சஞ்சீவ ரெட்டி.
Q30. எந்தக் குடியரசுத் தலைவரின் பிறந்த நாள் ஆசிரியர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது?
டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் - 5 செப்டம்பர்.
Q31. 25-12-1994 அன்று சாலை விபத்தில் மரணம் அடைந்த குடியரசுத் தலைவர் யார்?
க்யானி ஜெயில் சிங்
Q32. நிதியமைச்சராக பணியாற்றி குடியரசுத் தலைவரானவர்கள் யார்?
R. வெங்கட்ராமன் மற்றும் ப்ரணாப் முகர்ஜி.
Q33. குடியரசுத் தலைவர் பதவிக்கு அழைப்பு பெற்றும், வேண்டாம் என நிராகரித்தவர் யார்?
ருக்மணி தேவி அருண்டேல் - 1977 - மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது.
Q34. குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்படும் சலுகைகள் என்னென்ன?

1. மாத ஊதியம் ரூ. 1,50,000/-.
2. ஓய்வூதியம் ரூ. 75,000/- மாதம்.
3. ஓய்வுக்கு பிறகு வாழ் நாள் வரை வாடகையில்லா இல்லம்.
4. இரண்டு இலவச தொலைபேசி மற்றும் கைபேசி இணைப்பு.
5. ஓய்வுக்கு பிறகு ஐந்து அலுவலக சிப்பந்திகள் (ஒரு காரியதரிசி சேர்த்து)
6. ஒரு அரசாங்க வாகனம்.
7. ரயில் மற்றும் விமானத்தில் ஒரு துணையோடு இலவச பயணம்.
Q35. குடியரசுத் தலைவர் பற்றிய சர்ச்சையை தீர்த்து வைப்பது?
உச்ச நீதி மன்றம்
Q36. குடியரசுத் தலைவரின் பொதுவான பணிகளும் பொறுப்புகளும் யாவை?

1. நாட்டின் பிரதான அலுவல் அதிகாரி.
2. முப்படைகளின் முக்கிய தளபதி (Supreme Commander of the Armed Forces)
3. மசோதாக்களுக்கு அனுமதி அளிப்பதும், மறுப்பதும். அனுமதி அளிக்கப்பட்டால் அது சட்டமாகும்.
4. அரசியல் சட்ட ரீதியான அதிகாரிகளை நியமிப்பது (Constitutional Posts)
5. பாராளுமன்ற அலுவல்களை தொடங்கி வைப்பது.
6. மரண தண்டனை குற்றவாளிகளின் மேல் முறையீட்டினை பரிசீலித்து முடிவு எடுப்பது.
7. நாட்டின் அவசர கால சட்டங்களையும், அவசர காலங்களையும் பிரகடனம் செய்வது.
Q37. குடியரசுத் தலைவர்கள் இதுவரை :
எண். பெயர் புகைப்படம் தொடக்கம் முடிவு
1 டாக்டர் ராஜேந்திர பிரசாத் 26-1-1950 13-5-1962
2 டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் 13-5-1962 13-5-1967
3 டாக்டர் ஜாகிர் உசேன் 13-5-1967 3-5-1969
4 வி.வி. கிரி*** 3-5-1969 20-7-1969
5 முகமது இதயத்துல்லா*** 20-7-1969 24-8-1969
6 வி.வி. கிரி 24-8-1969 24-8-1974
7 ஃபக்ருதீன் அலி அகமது 24-8-1974 11-2-1977
8 பி.டி. ஜட்டி*** 11-2-1977 25-7-1977
9 நீலம் சஞ்சீவ ரெட்டி 25-7-1977 25-7-1982
10 க்யானி ஜெயில் சிங் 25-7-1982 25-7-1987
11 R. வெங்கட்ராமன் 25-7-1987 25-7-1992
12 சங்கர் தயாள் சர்மா 25-7-1992 25-7-1997
13 K.R. நாராயணன் 25-7-1997 25-7-2002
14 APJ அப்துல் கலாம் 25-7-2002 25-7-2007
15 பிரதீபா பாட்டீல் 25-7-2007 25-7-2012
16 பிரணாப் முகர்ஜி 25-7-2012 25.7.2017
17  ராம் நாத் கோவிந்த் 25.7.2017  ...............
         

***தற்காலிகம்.
4. வி.வி.கிரி -- டாக்டர் ஜாகீர் ஹூசேன் மறைவினால்.
5. முகமது இதயத்துல்லா -- குடியரசுத் தலைவர் தேர்தல் காலம்
8. பி.டி.ஜட்டி -- ஃபக்ருதீன் அலி அகமது மறைவினால்.

Q38. நம் நாட்டின் ஒரே பெண் குடியரசுத் தலைவர் யார்?
பிரதீபா பாட்டீல் -- 25.7.2007 – 25.7.2012.
Q39. ஒரு மாநிலத்திற்கு, அரசியல் சட்டத்தின் எந்த விதிப்படி, ஆளுநர் நியமிக்கப்படுகிறார்?
விதி எண். 155. ஆளுநரே ஒரு மாநிலத்தின் அலுவலக தலைமை அதிகாரி - பொதுவாக 5 ஆண்டு பதவிக்காலம் - 35 வயதுக்கு மேல்.
Q40. ஆளுநர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள்?
அரசியல் ஓய்வு பெற்ற அரசாங்க மற்றும் ராணுவ அதிகாரிகள், சமூகத் தொண்டர்கள், கல்வி நிபுணர்கள் போன்ற பல்துறை நிபுணர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.
Q41. ஆளுநருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பவர் யார்?
சம்பந்தப்பட்ட மாநிலத்தின் உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி.
Q42. குடியரசு ஆவதற்கு முன்பாக ஆளுநரான முதல் பெண்மணி?
சரோஜினி நாயுடு - உத்திரப் பிரதேசம் - 15-8-1947 - 2-3-1949.
Q43. குடியரசு ஆனபின் ஆளுநரான முதல் பெண்மணி?
பத்மஜா நாயுடு - சரோஜினி நாயுடுவின் மகள் - மேற்கு வங்காளம் - 3-11-1956 - 1-6-1967.
Q44. குறைந்த வயதில் ஆளுநர் பதவி வகித்தவர் யார்?
ஸ்வராஜ் கௌஷால் - 37 வயதில் மிசோரம் மாநில ஆளுநராக 8.2.1990 முதல் 9.2.1993 வரை பதவி வகித்தார். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த அரசியல்வாதியும், 2015 நிலையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் கணவர்.
Q45. யூனியன் பிரதேசங்களின் நிர்வாக தலைமை அதிகாரி யார்?
லெஃப்டினன்ட் கவர்னர். இவரும் ஆளுநரைப் போலவே நியமிக்கப்படுகிறார்.
Q46. மாநிலங்களின் முதல்  ஆளுநர்கள் :
எண். மாநிலப் பெயர்கள் முதல் ஆளுநர்
1 ஆந்திரப்பிரதேசம் சந்து லால் M திரிவேதி
2 அருணாசல பிரதேசம் பீஷ்ம நாராயண் சிங்
3 அஸ்ஸாம் முகமது சாலேவர் அகபர் ஹைதாரி
4 பீஹார் ஜெய்ராம்தாஸ் தெலைத்ராம்
5 சத்தீஸ்கர் தினேஷ் நந்தன் சாஹல்
6 கோவா மேஜர் ஜெனரல் K.P.காண்டேத்
7 குஜராத் மெஹ்தி நவாஸ் ஜங்
8 ஹரியானா தரம் வீரா
9 இமாச்சல பிரதேசம் S. சக்ரவர்த்தி
10 ஜம்மு காஷ்மீர் டாக்டர் கரண் சிங்
11 ஜார்கண்ட் ப்ரபாத் குமார்
12 கர்நாடகம் ஜெய்சாம ராஜ உடையார்
13 கேரளம் B. ராமகிருஷ்ண ராவ்
14 மத்திய பிரதேசம் டாக்டர் பட்டாபி சீதாராமைய்யா
15 மகாராஷ்டிரம் ஸ்ரீ ப்ரகாசா
16 மணிப்பூர் பி.கே. நேரு
17 மேகாலயா பி.கே. நேரு
18 மிசோரம் ஹித்தேஷ்வர் சைக்கியா
19 நாகாலாந்து விஷ்ணு சஹாய்
20 ஒடிசா டாக்டர் கைலாஷ் நாத் கட்ஜு
21 பஞ்சாப் சந்து லால் M திரிவேதி
22 இராஜஸ்தான் குர்முக் நிஹால் சிங்
23 சிக்கிம் பி.பி. லால்
24 தமிழ் நாடு சர். ஆர்ச்சிபால்டு எட்வர்டு
25 தெலுங்கானா ----------------
26 திரிபுரா பி.கே. நேரு
27 உத்தர் காண்ட் எஸ்.எஸ். பர்னாலா
28 உத்திர பிரதேசம் சரோஜினி நாயுடு
29 மேற்கு வங்காளம் சி. ராஜ கோபாலாச்சாரி
  யூனியன் பிரதேசங்கள்   தற்போதைய ஆளுநர்
1 டெல்லி ……………………… அனில் பைஜால் 
2 அந்தமான் நிக்கோபார் ……………………… முனைவர் ஜகதீஷ் முக்கி 
3 சந்திகார் ........................... வி.பி.சிங் பட்னோர் 
4 தாமன் டையூ ........................... ப்ரஃபுல் கோடா படேல் 
5 தாத்ரா நாகர் ஹவேலி ........................... ப்ரஃபுல் கோடா படேல் 
6 புதுச்சேரி ............................ கிரண் பேடி 
7 லட்சத்தீவுகள் ............................ ஃபரூக் கான்