Khub.info Learn TNPSC exam and online pratice

மாநிலங்களவை - ராஜ்ய சபா

Q1. மாநிலங்களவை எந்த சட்ட விதிப்படி அமைக்கப்பட்டு இயங்குகிறது? அதன் சிறப்பு என்ன? (மேல் சபை எனவும் அழைக்கப்படும்)
விதி எண். 80 - அரசியல் சட்டம். இது ஒரு நிரந்தர சபை - கலைக்கப்படுவதில்லை.
Q2. மாநிலங்களவை என்று முதன் முதலில் கூடியது?
13-5-1952.
Q3. மாநிலங்களவையின் தலைவர் யார்?
துணைக் குடியரசுத் தலைவர் - பதவியில் இருப்பவர்.
Q4. மாநிலங்களவையின் பொதுவான பணிகள் யாவை?

1. பண மசோதா தவிர்த்து, இதர பொது நல மசோதாக்கள் தாக்கலும் விவாதமும்.
2. குடியரசு தலைவர் மீது எழுப்பப் படும் அரசியல் குற்றச் சாட்டுகளை விசாரிப்பது.
3. குடியரசு தலைவர், துணைக் குடியரசு தலைவர் தேர்தல்களில் பங்கேற்றல்;
4. மக்களவையிலிருந்து அனுப்பப் படும் மசோதாக்களை விவாதித்து முடிவு எடுத்தல்.
Q5. மாநிலங்களவை உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது?
முப்பது.
Q6. மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?
250 - இதில் 238 பேர் தேர்தல் மூலமாகவும் 12 பேர் நியமனம் (பொது நலம், வணிகம், விஞ்ஞானம், விளையாட்டு, கல்வி, கலாச்சாரம், பொருளாதாரம் போன்ற துறைகளின் பிரபலங்கள் - குடியரசுத் தலைவரால்) மூலமாகவும் அங்கத்தினராகின்றனர்.
மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு அங்கத்தினர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வு பெற்று, புதிய அங்கத்தினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இத்தேர்தலில் சம்பந்தப்பட்ட மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் யூனியன் பிரதேச வாக்காளர் குழுவால் மறைமுக தேர்தல் (ஒற்றை மாற்று வாக்குரிமை) மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட குறைந்த பட்சம் 36 ஓட்டுகள் கீழ்க்கண்ட முறையில் பெற வேண்டும். மொத்த அவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை, ஒதுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கையால் வகுத்து அதனுடன் ஒன்றைக் கூட்ட வேண்டும்.
Q7. மாநிலங்களவைக்கு ஒதுக்கப்பட்ட அங்கத்தினர்களின் எண்ணிக்கை எதில் குறிப்பிடப்பட்டுள்ளது?
அரசியல் சட்டத்தின் 4வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (4th Schedule)
Q8. மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம்...
ஆறு ஆண்டுகள்.
Q9. மாநிலங்களவை பண மசோதாவை எத்தனை காலம் தக்க வைக்கலாம்?
14 நாட்கள்.
Q10. மாநிலங்களவைக்கு அதிகமான உறுப்பினர்களை அனுப்பும் மாநிலம் எது?
உத்திரப் பிரதேசம் - 31.
Q11. மாநிலங்களவை உறுப்பினருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பவர் யார்?
மாநிலங்களவை தலைவர் - துணை குடியரசுத் தலைவர்.
Q12. மாநிலங்களவை உறுப்பினராக அதிக காலம் பதவி வகித்தவர் யார்?
அப்துல்லா கோயா - இந்திய முஸ்லிம் லீக் - கேரளா - 30 வருடங்கள்.
Q13. மாநிலங்களவைக்கு தமிழ் நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கை -
பதினெட்டு.
Q14. மாநில வாரியான மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை :
  வ.எண்.   மாநிலம் / யூனியன் பிரதேசம்   எண்ணிக்கை
  1   ஆந்திரப்பிரதேசம்    11
  2   அருணாசல பிரதேசம்      1
  3   அஸ்ஸாம்      7
  4   பீஹார்    16
  5   சத்தீஸ்கர்      5
  6   கோவா      1
  7   குஜராத்    11
  8   ஹரியானா      5
  9   இமாச்சல பிரதேசம்      3
  10   ஜம்மு காஷ்மீர்      4
  11   ஜார்க்கண்ட்      6
  12   கர்நாடகம்    12
  13   கேரளம்      9
  14   மத்திய பிரதேசம்    11
  15   மகாராஷ்டிரம்    19
  16   மணிப்பூர்      1
  17   மேகாலயா      1
  18   மிசோரம்      1
  19   நாகாலாந்து      1
  20   டெல்லி - தலை நகரப்பகுதி      3
  21   ஒடிசா    10
  22   பஞ்சாப்      7
  23   இராஜஸ்தான்    10
  24   சிக்கிம்      1
  25   தமிழ் நாடு    18
  26   தெலுங்கானா      7
  27   திரிபுரா      1
  28   உத்திர பிரதேசம்    31
  29   உத்தர காண்ட்      3
  30   மேற்கு வங்காளம்    16
  31   புதுச்சேரி      1
  32   நியமனம் மூலம்    12