Khub.info Learn TNPSC exam and online pratice

மக்களவை

Q1. மக்களவை எந்த அரசியல் சட்ட விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது?
அரசியல் சட்ட விதி எண். 81.
Q2. லோக் சபா என்பது ...
மக்களவை, கீழ் சபை என்றும் அறியப்படுகிறது.
Q3. மக்களவை மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை, தேர்தல் மூலம் வருபவர்கள், நியமனம் மூலம் வருபவர்கள் என மொத்தம் எத்தனை பேர்?
மொத்தம் - 545--தேர்தல் மூலம் வருபவர்கள் - 543 மற்றும் நியமனம் மூலம் வருபவர்கள் - 2 (ஆங்கிலோ இந்திய வகுப்பைச் சேர்ந்த இருவரை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.)
Q4. மக்களவை உறுப்பினராக குறைந்த பட்ச வயது என்ன ?
இருபத்தைந்து.
Q5. மக்களவையை கலைக்கும் அதிகாரம் யாருக்கு உண்டு?
குடியரசுத் தலைவர்.
Q6. மக்களவையின் தலைவர், அவர் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்?
சபா நாயகர். மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிலிருந்து, நடு நிலை வகிக்க க்கூடிய ஒரு நபரை ஒரு மனதாக பொதுவாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
Q7. மக்களவையின் ஆயுட்காலம் என்ன?
ஐந்து ஆண்டுகள் - அரசியல் மற்றும் இதர காரணங்களுக்காக அவை கலைக்கப்படாமல் இருந்தால்.
Q8. மக்களவையின் ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டதுண்டா?
இது நாள் வரையிலும் ஒரே ஒரு தடவை 1976ல் திருமதி இந்திரா காந்தி பிரதமராக இருக்கும்போது, 42வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் 6 ஆண்டுகளுக்கு மாற்றப்பட்டது. 1977ல் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் 44வது சட்ட திருத்தத்தின் மூலம் 5 வருடமாக மாற்றப்பட்டது - இன்றும் பேசப்படுகிற ஒரு அரசியல் சர்ச்சை.
Q9. மக்களவையின் முக்கிய அலுவல்கள் என்ன?

1. மத்திய மாநில அரசுகளுக்குத் தேவையான சட்டங்களை இயக்குவது.
2. வரவு, செலவு கணக்கை நிதி நிலை அறிக்கை (Budget) மூலம் சமர்ப்பித்து அவை அனுமதி பெறுவது ; பண மசோதாக்கள் தாக்கல்;
3. அரசாங்க நிர்வாகத் திறனை கண்காணிப்பது;
4. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பொருள்களில் விவாதித்து முடிவு எடுப்பது;
5. குடியரசுத் தலைவர், துணைக்குடியரசுத் தலைவர், சபா நாயகர், பிரதமர் ஆகியோர்களை தேர்ந்தெடுப்பது;
Q10. மக்களவை முதன்முதலாக எந்த தேதியில் நடந்தது?
14-04-1952.
Q11. மக்களவையின் முதல் சபா நாயகர் யார்?
ஜி.வி.மாவ்லாங்கர்.
Q12. மக்களவை சபா நாயகர்களுள் அதிக காலம் பதவி வகித்தவர் யார்?
பலராம் ஜாக்கர் - 22-01 - 1980 - 18-12-1989 - ஒன்பது வருடங்கள் 27 நாட்கள்.
Q13. குடியரசுத் தலைவரான ஒரே சபா நாயகர் யார்?
நீலம் சஞ்சீவ ரெட்டி (17-03-1961 - 19-07-1969 வரை சபா நாயகராக இருந்து பிறகு 25-07-1977 முதல் 25-7-1982 வரை குடியரசுத் தலைவராக இருந்தார்.)
Q14. மார்ச் 2002ல் ஹெலிகாப்டர் விபத்து மூலம் உயிரிழந்த மக்களவை சபா நாயகர் யார்?
ஜி.எம்.சி. பால யோகி (24.3.1998 முதல் 03-03-2002 வரை சபா நாயகர்). தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்.
Q15. கம்யூனிஸ்ட் தலைவர்களில் சபா நாயகர் பதவி வகித்தவர் யார்?
சோம் நாத் சட்டர்ஜி - 04-06-2004 - 16.05.2009 வரை சபா நாயகராக இருந்தவர்)
Q16. இருமுறை சபா நாயகர் பதவி வகித்து பின்பு குடியரசுத் தலைவர் ஆனவர் யார்?
நீலம் சஞ்சீவ ரெட்டி (1. 17-03-1961 - 19-07-1969; 2. 26-03-1977 - 13-07-1977) முதல் தடவை காங்கிரஸ் கட்சி சார்பிலும், இரண்டாவது தடவை ஜனதா கட்சி சார்பிலும் சபா நாயகராக பதவி வகித்தார்.
Q17. சபா நாயகர் பதவி வகித்தவர்கள் பட்டியல் :
வ.எண்.   பெயர்   முதல்   முடிவு   கட்சி
  1   ஜி.வி.மாவ்லாங்கர்   15-5-1952   27-2-1956   காங்கிரஸ்
  2   எம்.ஏ. ஐயங்கார்   08-3-1956   16-4-1962   காங்கிரஸ்
  3   சர்தார் ஹுக்கம் சிங்   17-4-1962   16-3-1967   காங்கிரஸ்
  4   நீலம் சஞ்சீவ ரெட்டி   17-3-1967   19-7-1969   காங்கிரஸ்
  5   ஜி.எஸ். தில்லோன்   08-9-1969   1-12-1975   காங்கிரஸ்
  6   பலிராம் பகத்   15-1-1976   25-3-1977   காங்கிரஸ்
  7   நீலம் சஞ்சீவ ரெட்டி   26-3-1977   13-7-1977   ஜனதா
  8   கே.எஸ். ஹெக்டே   21-7-1977   21-1-1980   ஜனதா
  9   பலராம் ஜாக்கர்   22-1-1980   18-12-1989   காங்கிரஸ்
  10   ரபி ராய்   19-12-1989   09-7-1991   ஜனதா
  11   சிவராஜ் பாட்டீல்   10-7-1991   22-5-1996   காங்கிரஸ்
  12   பி.ஏ. சங்மா   25-5-1996   23-3-1998   காங்கிரஸ்
  13   ஜி.எம்.சி. பாலயோகி   24-3-1998   03-3-2002   தெலுங்கு தேசம்
  14   மனோகர் ஜோஷி   10-5-2002   02-6-2004   சிவசேனா
  15   சோம் நாத் சட்டர்ஜி   04-6-2004   16-5-2009   கம்யூனிஸ்ட்
  16   மீரா குமாரி   04-6-2009   04-6-2014   காங்கிரஸ்
  17   சுமித்ரா மகாஜன்   06.6.2014   தொடர்கிறார்   பாரதிய ஜனதா
         
         
         
Q18. மாநில, யூனியன் பிரதேச வாரியாக மக்களவை உறுப்பினர் எண்ணிக்கைப் பட்டியல் :
வ.எண்.   மாநிலம் பெயர்   எண்ணிக்கை
  1   ஆந்திரப்பிரதேசம்   25
  2   அருணாசல பிரதேசம்     2
  3   அஸ்ஸாம்   14
  4   பீஹார்   40
  5   சத்தீஸ்கர்   11
  6   கோவா    2
  7   குஜராத்   26
  8   ஹரியானா   10
  9   இமாச்சல பிரதேசம்     4
  10   ஜம்மு காஷ்மீர்     6
  11   ஜார்கண்ட்   14
  12   கர்நாடகம்   28
  13   கேரளம்   20
  14   மத்திய பிரதேசம்   29
  15   மகாராஷ்டிரம்   48
  16   மணிப்பூர்     2
  17   மேகாலயா     2
  18   மிசோரம்     1
  19   நாகாலாந்து     1
  20   ஒடிசா   21
  21   பஞ்சாப்   13
  22   இராஜஸ்தான்   25
  23   சிக்கிம்     1
  24   தமிழ் நாடு   39
  25   தெலுங்கானா   17
  26   திரிபுரா     2
  27   உத்தராஞ்சல்     5
  28   உத்திர பிரதேசம்   80
  29   மேற்கு வங்காளம்   42
    யூனியன் பிரதேசம்  
  1   அந்தமான் நிக்கோபார்    1
  2   சந்திகார்    1
  3   தாத்ரா நாகர் ஹவேலி    1
  4   தாமன் டையூ    1
  5   லட்சத் தீவுகள்    1
  6   புதுச்சேரி    1
  7   டெல்லி    7
  நியமனம்    2
Q19. எந்த மாநிலம் அதிகமான உறுப்பினர்களை மக்களவைக்கு அனுப்புகிறது?
உத்திர பிரதேசம் - 80 உறுப்பினர்கள்
Q20. எந்தெந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஒரே ஒரு உறுப்பினரை மக்களவைக்கு அனுப்புகிறது?
மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், அந்தமான், நிக்கோபார், சந்திகர், தாத்ரா நாகர் ஹவேலி, தாமன் டையூ, லட்சத்தீவுகள், புதுச்சேரி.
Q21. இந்திய பாராளுமன்றத்திற்கு அனுப்ப ப்பட்ட முதல் கணவன்-மனைவி உறுப்பினர்கள் யார்?
ஜோக்கிம் மற்றும் மார்கரெட் ஆல்வா - கோவா.
Q22. ஓட்டுரிமை எண்ணிக்கை அடிப்படையில், 2014 தேர்தல் நிலைப்படி, மிகப்பெரிய மக்களவை தொகுதி எது?
மல்காஜ்கிரி - தெலுங்கானா
Q23. மக்களவை உறுப்பினர்களில் (இது வரை) அதிக வயதானவர் யார்?
ரிஷாங் கெய்ஷிங் - மணிப்பூர் -ஏப்ரல் 9, 2014ல் மா நிலங்களவை உறுப்பினராக தனது 94வது வயதில் ஓய்வு பெற்றார்.
Q24. இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களில் வயதில் மிக குறைந்தவர் யார்?
அஹமத் ஹமதுல்லா சயீது, 26 - லட்சத்தீவுகள் - 15வது மக்களவை.
Q25. மக்களவை தேர்தலில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி அவர்களின் சாதனை என்ன?
இதுவரை 10 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதில் ஆறு தொகுதிகளில் நான்கு மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
Q26. இதுவரை நடந்து முடிந்த 15 மக்களவையில் குறைவான காலத்திற்கு இயங்கிய மக்களவை எது?
12வது மக்களவை - 413 நாட்கள். 10-3-1998 முதல் 26-4-1999 வரை திரு. வாஜ்பேயி அவர்கள் பதவி விலக வேண்டிய அரசியல் சூழ் நிலை ஏற்பட் ட்து.
Q27. உத்திர பிரதேசத்திலுள்ள ரேபேலி தொகுதி நேரு குடும்பத்தினர் தொகுதி என அழைக்கப்படுகிறது. அந்த குடும்பத்திலிருந்து மக்களவைக்கு இந்த தொகுதியிலிருந்து வென்ற முதல் நபர் யார்?
ஃபிரோஸ் காந்தி - 1952