Khub.info Learn TNPSC exam and online pratice

முக்கிய அரசியல் சட்ட திருத்தங்கள்

Q1. அரசியல் சட்டம் அமல்படுத்தப்பட்ட ஆண்டிலிருந்து (1950) 2015 வரை சுமார் 100 சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் முக்கியமான சில திருத்தங்கள் மட்டும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் சட்டத்தின் முதல் சட்ட திருத்தம் எது சம்பந்தமாக எந்த ஆண்டு இயக்கப்பட்டது?
1951 (18-06-1951) - அடிப்படை உரிமை பற்றி.
Q2. 99வது சட்ட திருத்தம் எதைப் பற்றி எப்போது கொண்டு வரப்பட்டது?
ஆகஸ்ட் - 2014 - தேசிய நீதித்துறை பணி அமர்த்தல் குழு (National Judicial Appointments Committee). அரசியல் சட்ட ரீதியான அங்கீகாரம் அளித்தல் (Constitutional Status to the Commission set up for appointment of Chief Justices and Judges) -- 16 அக்டோபர் 2015 அன்று உச்ச நீதி மன்றம் இந்த திருத்தத்தை முழுவதுமாக நிராகரித்துவிட்டது.
Q3. குறு நில மன்னர்கள் (Princely States) சலுகைகள் எந்த சட்ட திருத்தத்தின் மூலம் வாபஸ் பெறப்பட்டது?
26வது சட்டத் திருத்தம் - 1971.
Q4. அரசியல் சட்டத்தின் எந்த திருத்தத்தின் மூலம் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை 525லிருந்து 545 ஆக உயர்த்தப்பட்டது?
31வது சட்ட திருத்தம் 1975. இதே சட்டம் திருத்தத்தின் மூலம் மா நிலங்களின் அவையின் உறுப்பினர்களின் அதிகப்ட்ச எண்ணிக்கை 500லிருந்து 525ஆக உயர்த்தப்பட்டது.
Q5. அரசியல் சட்டத்தின் எந்த திருத்தத்தின்படி யூனியன் பிரதேசங்கள் (UNION TERRITORIES) உருவாக்கப்பட்டன?
7வது சட்ட திருத்தம் - செப்டம்பர் 1956.
Q6. தாத்ரா, நாகர் ஹவேலி பகுதி எந்த சட்ட திருத்தத்தின் மூலம் யூனியன் பிரதேசமாக சேர்க்கப்பட்டது?
250 - இதில் 238 பேர் தேர்தல் மூலமாகவும் 12 பேர் நியமனம் (பொது நலம், வணிகம், விஞ்ஞானம், விளையாட்டு, கல்வி, கலாச்சாரம், பொருளாதாரம் போன்ற துறைகளின் பிரபலங்கள் - குடியரசுத் தலைவரால்) மூலமாகவும் அங்கத்தினராகின்றனர்.
மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு அங்கத்தினர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வு பெற்று, புதிய அங்கத்தினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இத்தேர்தலில் சம்பந்தப்பட்ட மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் யூனியன் பிரதேச வாக்காளர் குழுவால் மறைமுக தேர்தல் (ஒற்றை மாற்று வாக்குரிமை) மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட குறைந்த பட்சம் 36 ஓட்டுகள் முறையில் பெற வேண்டும்.
Q7. கோவா, டையூ, டாமன் பகுதி எந்த சட்ட திருத்தத்தின் மூலம் யூனியன் பிரதேசமாக சேர்க்கப்பட்டது?
12வது சட்ட திருத்தம் - டிசம்பர் - 1961.
Q8. பாண்டிச்சேரி எந்த சட்ட திருத்தத்தின் மூலம் இந்தியாவுடன் சேர்க்கப்பட்டது?
14வது சட்ட திருத்தம் - டிசம்பர் - 1962.
Q9. எந்த சட்ட திருத்தத்தின் மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் வயது 60லிருந்து 62ஆக உயர்த்தப்பட்டது?
15வது சட்ட திருத்தம் - அக்டோபர் 1963.
Q10. சிந்தி மொழி எந்த ஆண்டு/சட்டத் திருத்தத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மொழியானது?
21வது சட்ட திருத்தம் - ஏப்ரல் - 1961.
Q11. எந்த அரசியல் சட்டத்தின் மூலம் சிக்கிம் ஒரு மாநிலமாக அறிவிக்கப்பட்டது?
36வது சட்ட திருத்தம் - ஏப்ரல் - 1975.
Q12. அரசியல் சட்டத்தின் எந்த திருத்தம் "ஒரு சிறிய அரசியல் சட்டம்" (Mini Constitution) என அழைக்கப்படுகிறது?
42வது சட்ட திருத்தம் - ஏப்ரல் - 1977.
Q13. கட்சித் தாவல் காரணமாக ஒருவரை பாரளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கும் சட்டத் திருத்தம் எது?
52வது சட்ட திருத்தம் - மார்ச் - 1985 "கட்சி தாவல் தடுப்புச் சட்டம்" என அழைக்கப்படுகிறது.
Q14. அரசியல் சட்டத்தின் எந்த திருத்தத்தின் மூலம் வாக்குரிமை 21 வயதிலிருந்து 18 வயதாகக் குறைக்கப்பட்டது?
61வது சட்ட திருத்தம் - மார்ச் - 1989.
Q15. எந்த சட்ட திருத்தத்தின் மூலம் "தேசிய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்கள் சிறப்பு குழு" (Commission) அமைக்கப்பட்டது?
65வது சட்ட திருத்தம் - மார்ச் - 1990 - 89வது சட்டத் திருத்தத்தின் மூலம், இரு தனி தேசிய குழுக்களாக பிரிக்கப்பட்டது - செப்டம்பர் 2003
Q16. கொங்கணி, மணிப்பூரி மற்றும் நேபாளி மொழிகள் எந்த சட்ட திருத்தத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டது?
71 வது சட்ட திருத்தம்
Q17. எந்த சட்ட திருத்தத்தின் மூலம், மத்திய மாநில அவைகளில் அமைச்சர்களின் எண்ணிக்கை, மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15% மேல் இருக்கக்கூடாது என்று நிர்ணயிக்கப்பட்டது?
91வது திருத்தம் - ஜனவரி 2004. இதே திருத்தத்தின் மூலம், கட்சி தாவல் கீழ் தகுதியிழக்கப்பட்ட உறுப்பினர் அமைச்சரவையில் இடம் பெற தடை செய்யப்பட்டது.
Q18. எந்த சட்ட திருத்தத்தின் மூலம் போடோ, டோக்ரி, சாந்தாலி மற்றும் மைத்திலி மொழிகள் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக்கப்பட்டன?
92வது சட்டத் திருத்தம் - ஜனவரி 2004.
Q19. எந்த சட்ட திருத்தத்தின் மூலம், மக்களவை (LOK SABHA) காலம் 5லிருந்து 6 ஆண்டாக மாற்றப்பட்டது? (இதுவே முதல் தடவை)
42வது சட்டத் திருத்தம் - ஏப்ரல் 1977, 44வது (1978) சட்டத் திருத்தத்தின் மூலம் மீண்டும் ஐந்து ஆண்டாக மாற்றப்பட்டது.
Q20. எந்த சட்ட திருத்தத்தின் மூலம், மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை 545 ஆக 25 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது?
84வது சட்டத் திருத்தம் - பிப்ரவரி 2002