Khub.info Learn TNPSC exam and online pratice

அரசியல் சட்ட அட்டவணைகள்

Q1. அரசியல் சட்டத்தின் அட்டவணைகள் எத்தனை?
பன்னிரெண்டு.
Q2. ஒவ்வொரு அட்டவணைகளிலும் என்னென்ன பொருள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது?

அட்டவணை 1 : இந்திய நாட்டின் அமைப்பு
அட்டவணை 2 : அரசியல் சட்டத்தின் கீழ் நியமனம் செய்யப்படும் அதிகாரிகள் -எ.க. குடியரசுத்தலைவர் (Constitutional Posts) ஊதிய சலுகைகள்.
அட்டவணை 3 : பொதுப் பதவிகளை ஏற்பவர்களின் சத்திய பிரமாணமும் உறுதிமொழியும். (Oath and affirmations)
அட்டவணை 4 : மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை பகிர்வு.
அட்டவணை 5 : அட்டவணைக்கப்பட்ட பகுதிகளின் நிர்வாகம் (Scheduled Areas)
அட்டவணை 6 : அஸ்ஸாம், மிசோரம், மேகாலயா பகுதி பழங்குடினர் வாழ் பகுதி நிர்வாகம். (Tribal Area Administration)
அட்டவணை 7 : மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான அதிகார பங்கீடு.
அட்டவணை 8 : மொழிகளுக்கு அங்கீகாரம் அளித்தல்.
அட்டவணை 9 : நில சீர்திருத்தங்கள்.
அட்டவணை 10 : கட்சி தாவல் அடிப்படையில் இரு அவை உறுப்பினர்களை தகுதியிழக்கச் செய்தல்.
அட்டவணை 11 : பஞ்சாயத்து நிர்வாகம்.
அட்டவணை 12: நகராட்சிகள் (Municipality) நிர்வாகம்.
Q3. முக்கியமான அரசு நெறிமுறை கோட்பாடுகள் (Main Directive Principles) என்பன யாவை?

1. மக்களுக்கு குறைந்தபட்ச வாழ்வாதாரம் அளித்தல்.
2. எல்லா வகுப்பு மக்களிடையே செல்வம் பகிர்ந்து இருப்பது.
3. குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பாதுகாத்தல்.
4. ஆண், பெண் இருவருக்கும் சமமான வேலைக்கு சமமான ஊதியம்
5. பசு வதையை தடுத்தல்
6. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாய கல்வியளித்தல்.
7. வேலை வாய்ப்பு, கல்வி, வேலையில்லா நேரங்களில் உதவி அளித்தல், வயது முதிர்வு, உடல் நிலை பாதிப்பு, உடல் ஊனம் ஆகிய நிலைகளில் உதவியளித்தல்.
8. மது விற்பனை, அருந்துதல் மீது தடை விதித்தல்.
9. கிராம பஞ்சாயத்துகள் உருவாக்குதல்.
10. வரலாற்று மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த புராதன நிர்மாணங்களை பாதுகாத்தல்.
11. நீதித்துறையை, நிர்வாகத் துறையிடமிருந்து பிரித்து, மக்களுக்கு சமமான குடியியல் சட்டம் (Uniform Civil Code) அளித்தல்.
12. உள் நாட்டு ஒற்றுமையும் உலக அளவில் பாதுகாப்பும் உறுதிப்படுத்துதல்.
13.மாநிலங்கள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு இலவச சட்ட உதவி அளித்தல்.
14. வன வளத்தையும், வன விலங்குகளை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல்.
இந்த 14 நெறிமுறைகளையும் உள்ளடக்கி நான்கு பகுதிகளாக்கி கூறப்பட்டுள்ளது. அவை:
1. பொருளாதார கோட்பாடுகள்
2. காந்திய கோட்பாடுகள்
3. சர்வதேச புரிதல் மற்றும் ஒற்றுமையை வளர்த்தல்
4. சமூக நல கோட்பாடுகள்.
Q4. அரசு நெறிமுறைக் கோட்பாடுகளின் சட்ட ரீதியான (Legal Status) நிலை என்ன?
இந்த அரசு நெறிமுறைக் கோட்பாடுகள், அரசியல் சட்டத்தின் (Constitution) 42வது திருத்தத்திற்கு பிறகு நீதித் துறைகளின் மூலம் அமல்படுத்தப்படக் கூடியது.
Q5. இந்திய அரசியல் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின்படி, மத்திய மாநில அரசுகளின் பொறுப்பு, அதிகாரம் மற்றும் இலாகாக்கள் (Subjects) கவனிக்கப்பட வேண்டியவை வரையறுக்கப்பட்டுள்ளன. அவை யாவை?

1. மத்திய பட்டியல் - UNION LIST : இதில், பாதுகாப்பு, சர்வதேச உறவு அணுகுமுறை, ரயில்வே, தபால் மற்றும் தகவல், வருமானவரி, போன்ற முக்கியமான துறைகள் உள்ளடக்கிய 66 துறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த துறைகள் சம்பந்தப்பட்ட சட்டம் மற்றும் சட்ட மாற்றங்கள் செய்ய பாராளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உண்டு.
2. மாநிலப் பட்டியல் - STATE LIST : மாநிலங்களின் அமைப்பு மற்றும் தேவைகளின் அடிப்படையில் சுமார் 66 துறைகளை உள்ளடக்கிய ஒரு பட்டியல் மா நிலங்கள் இந்த துறைகள் சார்ந்த சட்டம் மற்றும் சட்ட மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
3. பொதுப் பட்டியல் - CONCURRENT LIST : இதில் மத்திய மற்றும் மா நில அரசுகள் இணைந்து கவனிக்க வேண்டிய துறைகள் இடம் பெற்றுள்ளன. ஆகவே, இவை பற்றிய சட்ட திட்டங்களை மா நில அரசு இணைந்து வகுத்து செயல்படுத்த வேண்டும்.