Khub.info Learn TNPSC exam and online pratice

இந்திய அரசியலமைப்புச் சட்டம்

Q1. இந்திய அரசியலமைப்பு சட்டம் எந்த நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றியது?
இங்கிலாந்து
Q2. இங்கிலாந்து நாட்டின் எந்த சட்டக்குழு பரிந்துரையின் பேரில், இந்த அரசியலமைப்பு குழு நியமிக்கப்பட்டது?
கேபினெட் மிஷன் திட்டக்குழு - 1946
Q3. இந்திய அரசியலமைப்புக் குழு எந்த தேதியில் யாருடைய தலைமையில் நியமனம் செய்யப்பட்டது?
9-12-1946 - டாக்டர் சச்சிதானந்த சின்ஹா
Q4. டாக்டர் ச்ச்சிதானந்த சின்ஹா மறைவுக்குப் பின், இந்திய அரசியலமைப்புக் குழுவின் பொறுப்பேற்றவர் யார்?
டாக்டர் இராஜேந்திர பிரசாத்
Q5. இந்திய அரசியல் சட்ட அமைப்புக் குழு முதன் முதலில் என்று கூடியது?
9/12/1946
Q6. இந்திய அரசியல் சட்டங்களை எழுதும் குழுவுக்கு தலைமை வகித்தவர் யார்?
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
Q7. இந்திய அரசியல் சட்டங்களை தன் கைப்பட எழுதியவர் யார்?
பிரேம் பிஹாரி ராய்ஸடா
Q8. கையால் எழுதப்பட்ட இந்திய அரசியல் சட்ட புத்தகத்திற்கு சித்திர வேலைப்பாடுகள் செய்தவர் யார்?
நந்த லால் போஸ்
Q9. இந்திய அரசியல் சட்டத்தின் முதல் வரைவுக்கு (Draft), குறிக்கோள் உறுதிப்பாடு (Objective Resolution) முன் மொழிந்தவர் யார்?
ஜவஹர்லால் நேரு
Q10. இந்திய அரசியல் சட்டத்தின் "குறிக்கோள் உறுதிப்பாடு" (Objective Resolution) என்று யாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது?
22-01-1948, வெலிங்டன் பிரபு
Q11. இந்திய அரசியல் சட்ட முன் வரைவுக்குழு (Drafting Committee) அங்கத்தினர்களாக இருந்தவர்கள் யார்?

1. அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்,
2. கோபாலசாமி அய்யங்கார்
3. டாக்டர். கே.எம். முன்ஷி
4. சையத் முகமது சௌதுல்லா
5. பி.அய். மிட்டர்
6. என்.மாதவ ராவ்
7. டி.பி. கைத்தான்
8. டி.டி. கிருஷ்ணமாச்சாரி
9. பி.ஆர். அம்பேத்கர்
Q12. முன்னுரை, முகப்புரை (Preamble)என்பது என்ன?
ஒரு அறிமுகம் - குறிப்பாக ஒரு அரசியல் சட்டம் அல்லது பொதுவாக சட்டங்களுக்கு முன் அவற்றின் நோக்கத்தையும் குறிக்கோளையும் எடுத்துக் கூறுவதாக அமைவது.
Q13. இந்திய அரசியல் சட்டத்தின் முகப்புரையை எழுதியவர் யார்?
ஜவஹர்லால் நேரு
Q14. இந்திய அரசியல் சட்ட முகவுரை எவ்வாறு தொடங்குகிறது?
"இந்திய மக்களாகிய நாம்" - “We, the people of India”.
Q15. இந்திய அரசியல் சட்டத்தில் "இந்தியா" எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது?
பாரத்
Q16. அறிமுக வேளையில் இந்திய அரசியல் சட்டத்தில், எத்தனை சட்டங்களும், (Article) அட்டவணைகளும் (Schedules) இருந்தன?

395 சட்டப்பிரிவுகள், 8 அட்டவணைகள்.   (இவற்றுள் விதி எண்கள்  5, 6, 7, 8, 9, 60, 324, 366, 367, 379, 380, 388, 391, 392, 393 and 394 ஆகியவை      26 நவம்பர் 1949 அன்றும், இதர விதிகள்  26 ஜனவரி 1950 அன்றும் அமலுக்கு வந்தன). 

Q17. வரைவு அரசியல் சட்டம் (Draft Constitution) எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது?
26-11-1949
Q18. இந்திய அரசியல் சட்டம் அரசியல் ரீதியாக என்று அமல்படுத்தப்பட்டது?
26-11-1950
Q19. 2016 செப்டம்பர்  நிலையில், இந்திய அரசியல் சட்டத்தில் அடங்கியுள்ள ஷரத்துக்கள் எவ்வளவு?

448 - சட்டங்கள் (Articles)
2 - பகுதிகள் (Parts)
12 - அட்டவணைகள் (Schedules)
5 - பிற்சேர்க்கைகள் (Appendices)
101  - திருத்தங்கள் (Amendments) (செப்டம்பர் 2016 வரை) 
Q20. இந்திய அரசியல் சட்டத்தின் 9 முதல் 12வது அட்டவணை - எந்த காரணங்களுக்காக எப்போது சேர்க்கப்பட்டது?

1. 9வது அட்டவணை : நிலச் சீர்திருத்தங்கள் - முதல் சட்டத் திருத்தம் - 1951
2. 10வது அட்டவணை : கட்சி மாறும் உறுப்பினர்களை தகுதியிழக்கச் செய்தல் - 35வது சட்டத்திருத்தம் - 1974.
3. 11வது அட்டவணை : பஞ்சாயத்து நிர்வாக முறைகள் - 73வது சட்டத்திருத்தம் - 1992.
4. 12வது அட்டவணை : நகராட்சி (முனிசிபாலிடி) நிர்வாக முறைகள் - 74வது சட்ட திருத்தம் - 1992.
Q21. அரசியல் சட்ட வரைவுக் குழு அமைக்கப்பட்ட நாளிலிருந்து (09-11-1946), அது அமல்படுத்தப்பட்ட நாள் (26-01-1950) வரை எத்தனை நாட்கள் ஆனது?
3 வருடம், ஒரு மாதம், 18 நாட்கள்
Q22. இங்கிலாந்து, இந்தியா அரசியல் சட்டங்களுள் உள்ள முக்கிய வேறுபாடு என்ன?
இங்கிலாந்தில் பார்லிமெண்ட் முதன்மையானது. ஆனால், இந்தியாவில் அரசியல் சட்டம் முதன்மையானது.
Q23. இந்திய அரசியல் சட்டத்தின் மகத்துவம் என்ன?
உலக அரசியல் சட்டங்களுள், இந்திய அரசியல் சட்டம் எழுதப்பட்ட நீளமான அரசியல் சட்டம் (Longest Written Constitution)
Q24. இந்திய அரசியல் சட்டத்தின் பாதுகாவலன் என கருதப்படுவது?
உச்ச நீதிமன்றம்
Q25. இந்திய அரசியல் சட்டத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் யாவை?

1. சமத்துவ உரிமை - Right to Equality - சட்ட விதி - 14 முதல் 18 வரை
2. சுதந்திர உரிமை - Right to Freedom - சட்ட விதி 19
3. மத சுதந்திரம் - Right to Freedom of Religion - சட்ட விதி 25 முதல் 28 வரை
4. பண்பாட்டு, கல்வி, மற்றும் மொழி ரீதியான உரிமை - Cultural, Educational and Linguistic Rights - சட்ட விதி 29 மற்றும் 30
5. சுரண்டலுக்கு/தீண்டாமைக்கு எதிரான சுதந்திரம் - Right Against Exploitation - சட்ட விதி 23, 24.
6. சட்டபூர்வமான தீர்வு - Right of Constitutional Remedies - சட்ட விதி எண் 32 முதல் 35 வரை.
7. கல்வி உரிமை - Right to Education - சட்டவிதி 21 A.
Q26. இந்திய அரசியல் சட்டத்தில் "மத சார்பற்ற" மற்றும் "பொதுவுடைமை" (Secular and Socialist) என்ற வாக்கியங்கள் எந்த திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது?
42வது சட்டத்திருத்தத்தின் மூலம் அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் - Directive Principles ல் மாற்றம் செய்யப்பட்டு சேர்க்கப்பட்டது.
Q27. இந்திய அரசியல் அமைப்பின் முகப்புரையில் இந்தியா எவ்வித நாடாக குறிப்பிடப்பட்டுள்ளது?
"இறையாண்மை உடைய ஜனநாயக சம தர்ம சுதந்திர குடியரசு".
Q28. இந்திய அரசியல் சட்ட பணிகள் (Constitutional Posts) என்பன என்ன?
இந்திய அரசியல் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள விதிகளின் அடிப்படையில் ஒரு பணிக்கு ஒருவரை அமர்த்துவது ஆகும். உதாரணம் : ஜனாதிபதி
Q29. அரசியல் சாசனப் பணிகள் (Constitutional Posts) எனப்படுபவை யாவை?


1. குடியரசுத் தலைவர் - President
2. துணை குடியரசுத் தலைவர் - Vice President
3. தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றம் - Chief Justice – Supreme Court
4. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகள் - உயர் நீதிமன்றங்கள் - Chief Justices and Judges of High Courts
5. தேசிய தணிக்கை அதிகாரிController of Auditor General
6. சட்ட ஆலோசகர் - Attorney/Advocate General
7. ஆளு நர் - Governor
8. தேர்தல் ஆணையர்கள் - Election Commissioners
9. கண்காணிப்பு ஆணையர்கள் Vigilance Commissioners
இவற்றுள் 1 மற்றும் 2 பணியிடங்களுக்கு தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும். மற்ற (3-9) பணியிடங்களுக்கு மத்திய அரசு பரிந்துரையின் பேரில் பணியமைப்பு குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள். ஆகவே இவர்களை பணி நீக்கம் செய்ய குடியரசு தலைவருக்கு மட்டும் அதிகாரமுள்ளது.

Q30. இந்திய அரசியல் சட்டத்தின் எந்த அட்டவணையின்படி, எத்தனை மொழிகள் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக உள்ளன?
அட்டவணை - 8 : மொழிகள் - 22.
1.அஸ்ஸாமீஸ்  2.பெங்காலி  3. குஜராத்தி  4.ஹிந்தி  5.கன்னடம்  6.கொங்கனி  7.காஷ்மீரி  8. மலையாளம்  9. மணிப்பூரி  10. மராத்தி 11. நேபாளி 12. ஒரியா  13. பஞ்சாபி  14.சமஸ்கிருதம்  15.சிந்தி 16.தமிழ் 17. தெலுங்கு 18. உருது 19. போடோ 20.டோக்ரி 21.மைத்திலி 22.சந்தாலி.
Q31. இந்திய அரசியல் சட்டத்தின் ஆங்கில மற்றும் ஹிந்தி கையெழுத்துப் பிரதியில் எத்தனை அங்கத்தினர் கையெழுத்திட்டனர்?
308
Q32. இந்திய அரசியல் சட்டத்தின் எந்த சட்டங்கள் இந்திய எல்லைகள், எல்லை மாற்றங்கள், புது மாகாணங்கள் உருவாக்குதல் போன்றவற்றின் விதிமுறைகளை எடுத்துக் கூறுகிறது?
சட்டம் 1 முதல் 4 வரை குறிப்பாக சட்டம் 3.
Q33. குடியுரிமை (Citizenship) பற்றி எந்த சட்டங்கள் விவரிக்கின்றன?
சட்டம் 5 முதல் 11 வரை.
Q34. குடியுரிமை பெறும் வழிகள் என்ன?

1. பிறப்பு - இயல்பான (Natural)
2. வம்சாவளி - (Descent)
3. பதிவு - (Registration)
4. புதுப்பகுதிகள் நாட்டுடன் சேர்க்கப்படும்போது (Acquiring of New Territory)
Q35. குடியுரிமை எப்போது திரும்பப் பெறப்படுகிறது அல்லது தடை செய்யப்படுகிறது?

1. துறத்தல் (Renunciation)
2. முடிவுறுத்தல் (Termination)
3. இழக்கச்செய்தல் (Deprivation)
Q36. நம் நாட்டில் இரட்டை குடியுரிமை வழங்குதல் எப்போதிலிருந்து தொடங்கியது? அதற்கு தகுதியுடையவர்கள் யார்?

 நம் நாட்டில் இரட்டை குடியுரிமை வழங்கும் முறை இன்னும் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை. இருப்பினும்,  குடியுரிமைச்சட்டம் 2003 - அமலுக்கு வந்த பிறகு, 26-11-1950க்குப் பிறகு இந்தியாவில் பிறந்து வெளி நாட்டில் குடியேறி உள்ளவர்களுக்கு மட்டும் "வெளிநாடு வாழும் இந்தியர்கள்" அதாவது  "Overseas Citizen of India" என்ற அந்தஸ்து வழங்கப்படுகிறது.

Q37. PIOC - என்று அழைக்கப்படுவது என்ன?
Person of Indian Origin Card - இந்திய வம்சாவளி அடையாள அட்டை.
Q38. இந்திய குடிமகனின் அடிப்படை உரிமைகள் இந்திய அரசியல் சட்டத்தின் எந்த விதிகளில் விவரிக்கப்பட்டுள்ளது?
விதிகள் 12 முதல் 35.
Q39. அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் - Directive Principles - இந்திய அரசியல் சட்டத்தின் எந்த விதிகளில் கூறப்பட்டுள்ளது?
விதிகள் 36 முதல் 51.
Q40. அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் - Directive Principles - என்பது என்ன?
அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகள் தங்கள் திட்டங்களை தீட்டும்போது கடைபிடிக்க வேண்டிய அடிப்படை கொள்கைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று இக்கோட்பாடுகளில் வரையறுக்கப்பட்டுள்ளது.
Q41. ஏழை எளிய மக்களுக்கு இலவச சட்ட உதவி என்ற கொள்கை அரசு நெறிமுறைக் கோட்பாடுகளில் எப்போது சேர்க்கப்பட்டது?
அரசியல் சட்டத்தின் 42வது சட்ட திருத்தம் மூலம் சேர்க்கப்பட்டது.
Q42. இந்திய குடிமகனின் கடமைகள் என்னவென்று அரசியல் சட்டத்தின் எந்த விதிகள் கூறுகின்றன?
விதி எண் 51 A
Q43. மத்தியில் அரசு அமைப்பதை பற்றி, அரசியல் சட்டத்தின் எந்த விதிகள் விவரிக்கின்றன?
விதி 52 முதல் 151 வரை.
Q44. அரசியல் சட்டத்தின் எந்த விதிகள் குடியரசு தலைவர் பற்றிய அனைத்து விவரங்களையும் எடுத்துரைக்கிறது?
விதி 51 முதல் 61 வரை.
Q45. குறிப்பாக, இந்திய அரசியல் சட்டத்தின் எந்த விதி, குடியரசு தலைவர் தேர்தல் பற்றி விவரிக்கிறது?
விதி 54.
Q46. துணைக் குடியரசுத் தலைவர் பற்றி, அரசியல் சட்டத்தின் எந்த விதிகள் விரிவாக எடுத்துரைக்கின்றன?
விதி 63 முதல் 69 வரை.
Q47. அரசியல் சட்டத்தின் எந்த விதிப்படி, குடியரசுத்தலைவர் பொது மன்னிப்பு வழங்குகிறார்?
விதி 72.
Q48. மத்தியில் அரசு அமைப்பதை பற்றி, அரசியல் சட்டத்தின் எந்த விதிகள் குறிப்பாக விவரிக்கின்றன?
விதி 79 முதல் 106 வரை
Q49. மாநிலங்களவை (ராஜ்ய சபை) அரசியல் சட்டத்தின் எந்த விதியின் கீழ் அமைக்கப்பட்டு இயங்குகிறது?
விதி 80
Q50. மக்களவை (லோக் சபை) அரசியல் சட்டத்தின் எந்த விதியின் கீழ் அமைக்கப்பட்டு இயங்குகிறது?
விதி 81
Q51. அரசியல் சட்டத்தின் எந்த விதிப்படி, இரு அவைகளின் உறுப்பினர்கள், ஏதேனும் ஒரு காரணத்திற்கு, உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படலாம்?
விதி 102
Q52. அரசியல் சட்டத்தின் எந்த விதி, இரு அவை உறுப்பினர்களின் ஊதிய விவரம் குறித்து விவரிக்கிறது?
விதி 106
Q53. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஆகியோரின் நியமனம் மற்றும் இதர விவரங்களை பற்றி அரசியல் சட்டத்தின் எந்த விதிகள் எடுத்துக் கூறுகிறது?
விதி 124
Q54. ஆளுநர்கள் நியமனம் மற்றும் இதர விவரங்களைப் பற்றி அரசியல் சட்டத்தின் எந்த விதி எடுத்துரைக்கிறது?
விதி 155
Q55. மாநில சட்ட சபை அமைப்பது பற்றி அரசியல் சட்டத்தின் எந்த விதி விவாதிக்கிறது?
விதி 168
Q56. உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் பற்றி அரசியல் சட்டத்தின் எந்த விதி விவாதிக்கிறது?
விதி 233. நியமனம் குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
Q57. மக்களவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் நியமனம் மற்றும் இதர விவரங்கள் பற்றி அரசியல் சட்ட்த்தின் எந்த விதி கூறுகிறது?
விதி 178
Q58. யூனியன் பிரதேசங்கள் அமைப்பு மற்றும் இதர விவரங்கள் பற்றி அரசியல் சட்டத்தின் எந்த விதி எடுத்துரைக்கிறது?
விதி 239
Q59. டெல்லி சிறப்பு மா நிலத்தைப் பற்றி இந்திய அரசியல் சட்டத்தின் எந்த விதி கூறுகிறது?
விதி 239 A
Q60. பஞ்சாயத்து அமைப்புகளைப் பற்றி அரசியல் சட்டத்தின் எந்த விதி விவரிக்கிறது?
விதி 243
Q61. தேர்தல் ஆணையர்கள் நியமனம் மற்றும் இதர விவரங்கள் பற்றி, அரசியல் சட்டத்தின் எந்த விதி எடுத்துரைக்கிறது?
விதிகள் 324 முதல் 329 வரை.
Q62. அவசர நெருக்கடி பிரகடனம் - Declaration of Emergency - பற்றி அரசியல் சட்ட்த்தின் எந்த விதிகள் எடுத்துரைக்கிறது? இந்த பிரகடனம் செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது?
விதி 352. குடியரசு தலைவர் தன்னிச்சையாகவோ, அல்லது அமைச்சர்கள் குழு பரிந்துரையின் பேரிலோ அவசரக்கால பிரகடனம் செய்யப்படுகிறது.
Q63. அரசியல் சட்ட திருத்தம் மற்றும் அது சம்பந்தப்பட்ட விதிமுறைகளை, அரசியல் சட்டத்தின் எந்த விதி எடுத்துரைக்கிறது?
விதி 368
Q64. அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவுப்படி, ஹிந்தி, ஆட்சி மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது?
விதி 343
Q65. அசையா சொத்து விற்பது, வாங்குவது மற்றும் உரிமம் பெறுவது, அரசியல் சட்ட உரிமையா?
இல்லை. இது விதி 300 A ன் கீழ் மட்டுமே (Legal Right). 1978க்கு முன்பு இது ஒரு அடிப்படை உரிமையாக (Fundamental Right) இருந்தது. 1978ல் ஜனதா கட்சியின்ஆட்சியின் போது 44வது சட்டத் திருத்தத்தின் மூலம் இது அடிப்படை உரிமையிலிருந்து சட்ட உரிமையாக மாற்றப்பட்டது.
Q66. அரசியல் சட்டத்தின் எந்த விதிப்படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது?
விதி 370 - 1949ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
Q67. அரசியல் சட்டத்தின் எந்த விதிப்படி எந்த ஒரு முக்கிய காரணங்களுக்காக, மாநில அரசு கலைப்பு மேற்கொள்ளப்படுகிறது?
விதி 356