Khub.info Learn TNPSC exam and online pratice

இதர தேசிய சின்னங்கள்

Q1. நம் நாட்டின் சிறப்பு அடையாளம் (Emblem) மற்றும் அரசாங்க முத்திரை எது?
சார நாத் அசோகர் தூணின் மேல் காணப்படும் நான்முக சிங்க வடிவம்
Q2. நம் நாட்டின் சிறப்பு அடையாளத்தில் பொறிக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் எவை?
"சத்ய மேவ ஜெயதே" = வாய்மையே வெல்லும். தேவ நகரி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது.
Q3. "சத்ய மேவ ஜெயதே" என்ற வாக்கியங்கள் எந்த புராண நூலிலிருந்து எடுக்கப்பட்டது?
முண்டக உப நிஷதம்
Q4. தேசிய சிறப்பு அடையாளம் (Emblem) எந்த தேதியிலிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது?
26-01-1950
Q5. நம் நாட்டு சிறப்பு தேசிய அடையாள சின்னத்தில், சிங்க முகங்களை தவிர, வேறு எந்த விலங்குகள் காணப்படுகின்றன?
காளையும், குதித்தோடும் குதிரையும்.
Q6. நம் நாட்டு தேசியப் பாடல் எது?
வந்தே மாதரம்
Q7. நம் நாட்டு தேசியப் பாடல் "வந்தே மாதரம்" எந்த வருடம், யாரால், எந்த மொழியில் எழுதப்பட்டது?
1876 - பங்கிம் சந்திர சட்டர்ஜி - பெங்காலி மற்றும் சமஸ்கிருதம்.
Q8. "வந்தே மாதரம்" பாடல், எந்த வருடம், எந்த பத்திரிகையில், முதன்முதலாக பிரசுரிக்கப்பட்ட்து?
1882 - ஆனந்த மடம்
Q9. வந்தே மாதரம் பாடலுக்கு இசை வடிவம் கொடுத்தது யார்?
ஜாது நாத் பட்டாசார்யா
Q10. வந்தே மாதரம் பாடல் எந்த வருடம், யாரால், எங்கு முதன் முதலாக பாடப்பட்டது?
1896 - ரவீந்திர நாத் தாகூர் - இந்திய தேசிய காங்கிரஸின் கொல்கத்தா முதல் மாநாடு.
Q11. வந்தே மாதரம் முழு பாடலிலிருந்து எத்தனை சீர்கள் (Stanza) மட்டும் தேசிய பாடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது? ஏன்?
முழுப் பாடலின் மீது இஸ்லாமியர்கள் மத ரீதியான ஆட்சேபணை தெரிவித்ததால், முதல் இரண்டு சீர்கள் மட்டும் தேசிய பாடலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. (முழுப்பாடலில் 6 சீர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது)
Q12. வந்தே மாதரத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பு யாரால் செய்யப்பட்டு, எந்த வருடம், எந்த பத்திரிகையில் வெளியிடப்பட்டது?
அரவிந்த கோஷ் - 1909 நவம்பர் - கர்ம யோகின்
Q13. வந்தே மாதரத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பில் ஆரம்பமும் முடிவும் எவ்வாறு?
ஆரம்பம் : அன்னையே, உன்னை வணங்குகிறேன். முடிவு : என் இனிய அன்னையே, நீ பிரம்மாண்டமானவள், உன்னை வணங்குகிறேன்.
Q14. வந்தே மாதரத்தின் அகில இந்திய வானொலியின் இசையை வடிவமைத்தவர் யார்?
பண்டிட் ரவிசங்கர்
Q15. வந்தே மாதரத்தின் வானொலி இசை வடிவமும், A.R. ரஹ்மான் இசையமைப்பில் வெளியான வந்தே மாதர பாடலும் எந்த ராகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது?
தேஷ் ராகம்
Q16. உலகளவில் வந்தே மாதரத்தின் சிறப்பு என்ன?
இங்கிலாந்து BBC வானொலியால் 2003ல் நடத்தப்பட்ட ஒரு தேர்வில், உலக அளவில் 7000 பாடல்களில் இரண்டாவது சிறந்த பாடல் என தேர்வு செய்யப்பட்டது. சமீபத்தில் மீண்டும் இது உறுதி செய்யப்பட்டது.
Q17. மிகவும் பிரபலமான "சாரே ஜஹான் ஸே அச்சா" என்ற தேசபக்தி பாடல், யாரால் எழுதப்பட்டது?
முகமது இக்பால் அவர்களால் உருதுவில் எழுதப்பட்டு 1904ம் ஆண்டு "இத்தேஹாத்" என்ற உருது பத்திரிகையில் வெளியிடப்பட்டது. 1924ல் இதன் ஹிந்தி மொழிபெயர்ப்பு - தரானா - இ - ஹிந்த் என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
Q18. இந்திய தேசியப்பறவை எது?
மயில் - 1964.
Q19. இந்திய தேசிய நீர்வாழ் விலங்கினம் எது?
டால்ஃபின்
Q20. இந்திய தேசிய விலங்கு எது?
புலி - 1972 முதல் இந்த வருடம் தான் "புலிகள் காப்பு திட்டம்" அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்பாக சிங்கம் தான் தேசிய விலங்காக இருந்த்து.
Q21. இந்திய தேசிய மரம் எது?
ஆல மரம்.
Q22. இந்திய தேசிய பழம் எது?
மாம்பழம்
Q23. தேசிய மலர் எது?
தாமரை
Q24. தேசிய மொழி எது?
ஹிந்தி தேவ நகரி எழுத்தில் - இந்திய அரசியலமைப்புச்சட்ட பிரிவு 343 ன் படி ஹிந்தி அரசாங்க அலுவலகங்கள், உச்ச நீதிமன்றம் மற்றும் நாடு தழுவிய உயர் நீதி மன்றங்களுக்கும் ஆட்சி மொழியாக அனுசரிக்கப்படுகிறது.
Q25. சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று தேசிய கொடியை யார் எங்கே ஏற்றுகிறார்கள்?
சுதந்திர தினம் - பிரதமர் - செங்கோட்டை. குடியரசு தினம் - குடியரசு தலைவர் - இந்தியா கேட் நுழைவு வாயில்.
Q26. ஜனவரி 26 குடியரசு நாளாக ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?
26-01-1930 அன்று தான் "பூர்ண ஸ்வராஜ்" - முழு சுதந்திரம் என்ற கோஷமும் கொள்கையும் சுதந்திர போராட்ட்த்தின்போது கடைபிடிக்கப்பட்டது.
Q27. குடியரசு தின அணிவகுப்பு எங்கு நடைபெறுகிறது?
ஜனாதிபதி மாளிகையின் அருகிலுள்ள ரைஸினா குன்று (Raisina Hill) என்ற இடத்தில் தொடங்கி, ராஜ வழி (Raj Path) வழியாக இந்திய வாயில் (India Gate) வரை நடைபெறும். அங்கு "அமர் ஜவான் ஜோதி" நினைவிடத்தில் மறைந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தி, தேசிய கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் ஒலிக்கப்படும்.
Q28. இந்திய முதல் குடியரசு தின விழாவில் முக்கிய விருந்தாளியாக கலந்து கொண்டவர் யார்?
26-01-1950 - ஜனாதிபதி சுகர்னோ, இந்தோனேசியா.
Q29. இந்திய குடியரசு தின விழாக்களில் முக்கிய விருந்தாளியாக கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரமுகர்கள் யார்?
(1) 1955 - மாலிக் குலாம் முகமது, கவர்னர் ஜெனரல்.   (2)  1965 - ராணா அப்துல் ஹமீத் - விவசாய அமைச்சர்.
Q30. இந்திய குடியரசு தின விழாவில் நான்கு முறை பங்கேற்ற அதிபர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்கள்?
பூடான் மற்றும் ஃபிரான்ஸ்.
Q31. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தவர் யார்?
லூயிஸ் மவுண்ட் பேட்டன், கவர்னர் ஜெனரல்.
Q32. இந்திய சுதந்திரத்தின் போது இங்கிலாந்து நாட்டு மன்னராக இருந்தவர் யார்?
ஜார்ஜ் VI
Q33. குடியரசு தினத்தன்று வழங்கப்படும் விருதுகளில் முக்கியமானது எது?
தேசிய வீரச்செயல் விருதுகள் - National Bravery Award - 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு.
Q34. குடியரசு தின நிறைவு விழா எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Beating the Retreat
Q35. 2015 குடியரசு தின முக்கிய விருந்தாளி யார்?
பராக் ஒபாமா, அமெரிக்க அதிபர்.
Q36. இந்திய தேசிய நாள் காட்டி (National Calendar) எந்த வரலாற்று சகாப்தத்தை (Era) அடிப்படையாகக் கொண்டது?
சக சகாப்தம் (Saka Era).
Q37. சக சகாப்தத்தை தொடங்கி வைத்தவர் யார்?
சத வாகன வம்ச அரசர் ஷாலிவாகனன் - கி.பி. 78.
Q38. எந்த தேதியிலிருந்து இந்திய தேசிய நாள்காட்டி (National Calendar) அறிமுகப்படுத்தப்பட்டது?
மார்ச் 22, 1957 - சைத்ரா 1, 1879 - சக ஆண்டு.
Q39. சக சகாப்தம் எப்போது முதல் தொடங்கியது?
கி.பி. 78 - தட்சிணாயணம் முதல்
Q40. ஆங்கில நாள் காட்டி(National Calendar)க்கும், சக சகாப்த (Saka Era) நாள் காட்டிக்கும் உள்ள வித்தியாசம் எவ்வளவு?
78 வருடங்கள்.
Q41. இந்திய தேசிய நாள்காட்டி, ஆங்கில நாள் காட்டியின் எந்த நாளில் துவங்குகிறது?
மார்ச் 21.
Q42. தேசிய விடுமுறை நாட்களாக கருதப்படும் நாட்கள்?
(1) ஜனவரி - 26 - குடியரசு தினம்;   (2) ஆகஸ்ட் - 15 - சுதந்திர தினம்;   (3) அக்டோபர் - 2 - காந்தி பிறந்த நாள்.
Q43. தேசிய நாள் காட்டி - ஆங்கில நாள்காட்டி ஒப்பீடு :
  சக மாத / தேதி ஆங்கில மாத / தேதி
  SAKA MONTHS GREGORIAN MONTHS
  1. சைத்ரா - 1 - 30/31 நாட்கள் --- மார்ச் 21/22
  2. வைசாகா 1 - 31 நாட்கள் --- ஏப்ரல் 21
  3. ஜெய்ஷ்டா 1 - 31 நாட்கள் --- மே 22
  4. ஆஷாடா 1 - 31 நாட்கள் --- ஜூன் 22
  5. ஸ்ரவண 1 - 31 நாட்கள் --- ஜூலை 23
  6. பத்ர 1 - 31 நாட்கள் --- ஆகஸ்ட் 23
  7. அஸ்வின 1 - 30 நாட்கள் --- செப்டம்பர் 23
  8. கார்த்திகா 1 - 30 நாட்கள் --- அக்டோபர் 23
  9. அக்ரஹாயனா 1 - 30 நாட்கள் --- நவம்பர் 22
  10.பௌசா 1 - 30 நாட்கள் --- டிசம்பர் 22
  11. மகா 1 - 30 நாட்கள் --- ஜனவரி 21
  12 ஃபல்குணா 1 - 30 நாட்கள் --- பிப்ரவரி 20
Q44. குடியரசு தின விழா முக்கிய விருந்தாளிகள் :
வ.எண். ஆண்டு விருந்தாளி பெயர் / பதவி / நாடு
1 1950 சுகர்னோ, ஜனாதிபதி, இந்தோனேசியா
2 1954 ஜிக்மே தோர்ஜி வாங்சுக் - அரசர்-பூட்டான்
3 1955 மணிக்குலாம் முகமது - கவர்னர் ஜெனரல் - பாகிஸ்தான்
4 1958 யே ஜியாங் - ராணுவ மார்ஷல் - சீனா
5 1960 க்ளிமெண்ட் வொரோஷிலோவ்-ஜனாதிபதி-சோவியத் ரஷ்யா
6 1961 ராணி எலிசபெத் II - இங்கிலாந்து
7 1963 நார்டம் சிஹநௌக் - அரசர் - கம்போடியா
8 1964 ராணா அப்துல் ஹமீது - அமைச்சர் - பாகிஸ்தான்
9 1969 ட்யூடர்ஷிகோவ் - பிரதமர் - பல்கேரியா
10 1971 ஜூலியஸ் நெய்ரே - ஜனாதிபதி - தன்ஸானியா
11 1972 சீவுசாகர் ராம்குலாம் - பிரதமர் - மொரீஷியஸ்
12 1973 மொபுட்டு செஸே சேகோ - ஜனாதிபதி - ஜெய்ர்
13 1974 ஜோசிப் ப்ரஸ்டிடோ-ஜனாதிபதி-யுகோஸ்லேவியா
  1974 சிரிமாவோ பண்டார நாயகே - பிரதமர்-இலங்கை
14 1975 கென்னத் கௌண்டா - ஜனாதிபதி - ஜாம்பியா
15 1976 ஜேக்குஸ் சிராக் - பிரதமர் - ஃப்ரான்ஸ்
16 1977 எட்வர்டு கிரைக் - முதல் காரியதரிசி - போலந்து
17 1978 பாட்ரிக் ஹில்லரி - ஜனாதிபதி - அயர்லாந்து
18 1979 மால்கம் ஃப்ரேசர் - பிரதமர் - ஆஸ்திரேலியா
19 1980 வேலரி கிஸ்கார்டு - ஜனாதிபதி - ஃப்ரான்ஸ்
20 1981 ஜோஸ் லோபெஸ் போர்டில்லோ - ஜனாதிபதி - மெக்ஸிகோ
21 1982 ஜூவான் கார்லோஸ் - அரசர் - ஸ்பெயின்
22 1983 ஷேகு ஷகாரி - ஜனாதிபதி - நைஜீரியா
23 1984 ஜிக்மே சிங்யே வாங்சுக் - அரசர்-பூட்டான்
24 1985 ராவ்ல் அல்ஃபோன்சின் - ஜனாதிபதி - அர்ஜென்டினா
25 1986 ஆன்ட்ரியாஸ் பாப்பன்ட்ரியூ - பிரதமர் - க்ரீஸ்
26 1987 ஆலன் கார்சியா - ஜனாதிபதி - பெரு
27 1988 ஜூலியஸ் ஜெயவர்த்தனே - பிரதமர் - இலங்கை
28 1989 ன்க்பென் வேன் லின்வர் - வியட் நாம்
29 1990 டாக்டர் அனிருத் ஜக்நாத் - பிரதமர் - மொரிஷியஸ்
30 1991 மவ்மூன் அப்துல் கய்யூம் - ஜனாதிபதி - மாலத்தீவு
31 1992 மரியா சோரேஸ் - ஜனாதிபதி - போர்ச்சுகல்
32 1993 ஜான் மேஜர் - பிரதமர் - இங்கிலாந்து
33 1994 கோஹ் சோக் டோங் - பிரதமர் - சிங்கப்பூர்
34 1995 நெல்சன் மண்டேலா - ஜனாதிபதி - தென் ஆப்பிரிக்கா
35 1996 ஃபெர்னாண்டோ ஹென்ரிக் கார்போசே - ஜனாதிபதி-பிரேசில்
36 1997 பாஸ்தேவ் பாண்டே - பிரதமர் - ட்ரினிடாட் டொபேகோ
37 1998 ஜேக்குஸ் சிராக் - பிரதமர் - ஃப்ரான்ஸ்
38 1999 பிரேந்திர பிர் பிக்ரம் ஷா தேவ் - அரசர் - நேபாளம்
39 2000 ஒலேசாகன் ஒபேசான்ஞ்ஜோ - ஜனாதிபதி - நைஜீரியா
40 2001 அப்செல் அஜி பௌடெஃப்ளிகா, அல்ஜீரியா
41 2002 கேஸம் உதீம் - ஜனாதிபதி - மொரிஷியஸ்
42 2003 முகமது கூமி - ஜனாதிபதி - ஈரான்
43 2004 லூயிஸ் இனாசியா லூலாடா சில்வா - ஜனாதிபதி - ப்ரேசில்
44 2005 ஜிக்மே சிங்யே வாங்சுக் - அரசர்-பூட்டான்
45 2006 அப்துல்லா பின் அப்துல்அஜீஸ் அல்சவுத் - அரசர் - சவுதி அரேபியா
46 2007 வ்லாடிமிர் புடின் - ஜனாதிபதி - ரஷ்யா
47 2008 நிக்கோலஸ் சர்க்கோஸி - ஜனாதிபதி - ஃப்ரான்ஸ்
48 2009 நூர் சுல்தான் நஸர்பயேவ் - ஜனாதிபதி - கஜகிஸ்தான்
49 2010 லீ ம்யூங் பாக் - ஜனாதிபதி - கொரியா
50 2011 சுசிலோ பம்பாங் யுத்யோயனா - ஜனாதிபதி - இந்தோனேசியா
51 2012 யிங்லக் ஷினவத்ரா - பிரதமர் - தாய்லாந்து
52 2013 ஜிக்மே கேசர் நமீக்யேல் வாங்சுக் - அரசர் - பூடான்
53 2014 ஷின்ஸோ அபே - ஜனாதிபதி - ஜப்பான்
54 2015 பராக் ஒபாமா - ஜனாதிபதி - அமெரிக்கா
55 2016 ஃப்ராங்கோயிஸ் ஹாலண்ட் - அதிபர் - ஃப்ரான்ஸ்
56 2017 இளவரசர் முகமது பின் ஸயெத் அல் நஹ்யான்,  ஐக்கிய அரபு நாடுகள்