Khub.info Learn TNPSC exam and online pratice

தேசிய கீதம்

Q1. "ஜன கண மண" தேசிய கீதம் யாரால் எழுதப்பட்டது?
ரவீந்திர நாத் தாகூர்
Q2. ரவீந்திர நாத் தாகூரால் எழுதப்பட்ட மற்றொரு பாடல் எந்த நாட்டின் தேசிய கீதமாக உள்ளது?
வங்காள தேசம் (Bangla Desh) -- பாடல் - "அமார் சோனார் பங்களா"
Q3. தேசிய கீதம் எந்த ஆண்டு எந்த மொழியில் ரவீந்திர நாத் தாகூரால் எழுதப்பட்டது?
1910 /11 - பெங்காலி
Q4. தேசிய கீதத்தின் தற்சமய இசை வடிவமைப்பை யார் கொடுத்தது?
ராம் சிங் தாக்கூர்
Q5. தேசிய கீதம், எந்த வருடம், எந்த பத்திரிகையில், என்ன தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது?
1912 - தத்வபோதினி - பாரத் விதாதா
Q6. தேசிய கீதம் அதன் முழு வடிவத்தில் எத்தனை சீர்கள் (Stanza) கொண்டதாக இருந்தது?
ஐந்து சீர்கள்
Q7. தேசிய கீதப் பாடலிலிருந்து எத்தனை சீர்கள் எடுக்கப்பட்டு தேசிய கீதமாக கொடுக்கப்பட்டது?
ஒன்று - முதல் சீர் (Stanza)மட்டும்
Q8. தேசிய கீதம் முதன்முதலில் எப்பொழுது பாடப்பட்டது?
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கல்கத்தா கூட்டத்தில் 27-12-11 அன்று பாடப்பட்டது.
Q9. "ஜன கண மண" என்றிலிருந்து தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது?
24-01-1950
Q10. தேசிய கீதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
ரவீந்திர நாத் தாகூர்
Q11. தேசிய கீதத்தின் ஆங்கில மொழி பெயர்ப்புக்கு பெயர் என்ன?
காலைப் பாடல் - Morning song
Q12. தேசிய கீதத்தை முழுமையாக ஒலி பரப்ப எடுத்துக்கொள்ளப்படும் நேரம் எவ்வளவு?
52 வினாடிகள்
Q13. தேசிய கீதத்தின் சுருக்கப்பட்ட பகுதி ஒலி பரப்ப எடுத்துக்கொள்ளப்படும் நேரம் என்ன?
20 வினாடிகள்
Q14. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு செங்கோட்டையிலிருந்து இந்திய மக்களுக்கு அளித்த முதல் சொற்பொழிவுக்கு முன் தேசியகீதத்தை இசைக்குழுவுடன் ஒலிக்கச் செய்தவர் யார்?
ராம் சிங் தாக்கூர்
Q15. நமது தேசிய கீதத்தில் நாட்டின் எத்தனை பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது?
ஒன்பது - பஞ்சாப், சிந்து, குஜராத், மராட்டா, திராவிட, உத்கல, வங்க, விந்திய, ஹிமாச்சல
Q16. நமது தேசிய கீதம் 2014ல் என்ன சாதனை புரிந்தது?
உலக நாடுகளின் தேசிய கீதங்களில் மிகவும் சிறப்பானது என தேர்ந்தெடுக்கப்பட்டது.