Khub.info Learn TNPSC exam and online pratice

தேசியக்கொடி

Q1.
Q2. இந்தியாவிற்கு ஒரு கொடி வேண்டுமென முதன் முதலில் அறிவுறுத்தியவர் யார்?
பெண் துறவி நிவேதிதா அவர்கள் - இவர் ஸ்வாமி விவேகானந்தரின் சீடர் - 1904ம் வருடம். இவர் முன் வைத்த கொடி - சிகப்பு சதுர வடிவ கொடியின் நடுவில் ஒரு மின்னலின் சின்னமும் "வந்தே மாதரம்" பெங்காலி மொழியிலும் பொருத்தப்பட்டிருந்தது.
Q3. இந்தியாவிற்கு முதன்முதலாக எப்போது "மூவர்ணக்கொடி" கொண்டு வரப்பட்டு அது எவ்வாறு அழைக்கப்பட்ட்து?
7.8.1906 - முதல் மூவர்ணக்கொடி கொல்கத்தாவில் திரு சசீந்த்ர ப்ரசாத் போஸ் அவர்கள் நடத்திய போராட்டத்தின் போது ஏற்றப்பட்டது. அது "கல்கத்தா கொடி" என அழைக்கப்பட்ட்து.
Q4. இந்திய மண்ணிற்கு வெளியில் இந்திய மூவர்ணக்கொடி எங்கு யாரால் ஏற்றப்பட்டது? அது எவ்வாறு அழைக்கப்பட்டது?

22.8.1907 : பிகாஜி காமா, வீர் சவார்க்கர் மற்றும் ஷ்யாமாஜி கிருஷ்ணா ராவ் ஆகிய மூவரும் பச்சை, குங்கும கலர் மற்றும் சிகப்பு கலர் பட்டை அடங்கிய ஒரு கொடியை வடிவமைத்தனர். அதில், நடுவில் எட்டு பச்சை நிற தாமரைப் பூவும், தேவ நகர எழுத்தில் "வந்தே மாதரம்" சொற்களும் பதிக்கப்பட்டு இருந்தது. இக்கொடி, பெர்லின் (ஜெர்மனியில்) கமிட்டி கூட்டத்தில் பறக்க விடப்பட்டது. அதனால் "பெர்லின் கொடி" என்று அழைக்கப்பட்டது.

Q5. இன்றைய தேசியக்கொடியைப் போன்ற ஒரு கொடியை யார் வடிவமைத்தார்? அதில் என்ன சின்னம் பொருத்தப்பட்டிருந்தது?
1931ல் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிங்காலி வெங்கைய்யா (ரயில்வேயில் கார்டு பணி) என்பவர், தற்போது உள்ளது போல் குங்கும நிறம், வெள்ளை நிறம் மற்றும் பச்சை நிறம் அடங்கிய முப்பட்டை மூவர்ணக்கொடியை வடிவமைத்து அதில் நடுவில் கரு நீல "ராட்டை" சின்னத்தையும் பதித்திருந்தார். இந்தக் கொடி, காங்கிரஸ் கராச்சி செயற்குழு கூட்டத்தில் 2.4.1931ல் அங்கீகரிக்கப்பட்டு, பறக்க விடப்பட்டு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கொடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
Q6. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கொடியில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டு, அது இந்திய தேசிய கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது?
இந்தியாவின் சுதந்திர விடிவெள்ளி தெரிந்த கால கட்டத்தில் டாக்டர் ராஜேந்திர பிரசாத், அபுல் கலாம் ஆசாத், சரோஜினி நாயுடு, கே.எம்.முன்ஷி, பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் சி.ராஜகோபாலாச்சாரி ஆகியோர் அடங்கிய குழு ஒன்று, தேசிய கொடியை பரிந்துரை செய்ய அமைக்கப்பட்டது.
இந்தக் குழு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கொடியில் இருந்த "ராட்டினத்தை" அகற்றி, அசோகரின் "தர்ம சக்கரத்தை" பொருத்தி, அதை தேசிய கொடியாக ஏற்றுக்கொள்ளுமாறு பரிந்துரை செய்தது. அதன்படி, குங்குமப்பூ, வெள்ளை மற்றும் பச்சை பட்டைகள் அடங்கிய கொடியில், வெள்ளை பட்டையின் நடுவில் கரு நீல தர்ம சக்கரம் பொருத்திய கொடியை ஏற்றுக்கொள்வதாக 14.7.1947ல் முடிவெடுக்கப்பட்டது.
Q7. இந்திய தேசிய கொடி முதன்முதலாக என்று பறக்கவிடப்பட்டது?
15.08.1947.
Q8. இந்திய தேசிய கொடியின் தரக்குறியீடு எண் (ISI/BIS CODE) என்ன?
ISI-1
Q9. இந்திய தேசிய கொடி எந்த துணி வகையில் மட்டுமே தயாரிக்கப்படவேண்டும்?
காதி பருத்தி மட்டுமே
Q10. இந்திய தேசிய கொடியின் அகல: நீள விகிதாச்சாரம் என்ன?
இரண்டு பங்கு அகலம், மூன்று பங்கு நீளம். 2:3 - பொதுவாக கொடிகள் இந்த விகிதத்தில் அமைக்கப்படும்.
Q11. இந்திய தேசிய கொடியை தயாரிக்க அனுமதிக்கப்பட்ட நிறுவனம் எது?
காதி கிராமோத்யோக் பவன், ஹெங்கேரி, ஹூப்ளி, கர்நாடகம் மற்றும் இதர காதி கிராமோத்யோக் பவன்கள்.
Q12. இந்திய தேசிய கொடியிலுள்ள "தர்ம சக்கரம்" எதில் இருந்து எடுக்கப்பட்டது?
சார நாத் சிங்கத் தூண்
Q13. இந்திய தேசிய கொடியிலுள்ள தர்ம சக்கரம், வெள்ளைப் பட்டையின் அகலத்தை ஒப்பிட்டு எந்த அளவில் இருக்க வேண்டும்?
3/4 பங்கு.
Q14. இந்திய தேசிய கொடியிலுள்ள தர்ம சக்கரத்தில் எத்தனை ஆரக்கால்கள் (SPOKES) உள்ளன?
இருபத்து நான்கு
Q15. இந்திய தேசிய கொடியிலுள்ள தர்ம சக்கரத்தின் நிறம் என்னவாக இருக்க வேண்டும்?
கரு நீலம் (BLUE OCHRE)
Q16. தேசிய கொடியில் உள்ள முப்பட்டை நிறங்களின் முக்கியத்துவம் என்ன?
குங்குமம் (SAFFRON) - தைரியம், தியானம், வெள்ளை (WHITE) - அமைதி, உண்மை, பச்சை (GREEN) - நம்பிக்கை, பெருந்தன்மை
Q17. தேசிய கொடி பறக்க விடப்படும் முக்கியமான நாட்கள் எவை?


1. 26 ஜனவரி - குடியரசு தினம்


2. 15 ஆகஸ்ட் - சுதந்திர தினம்


3. 2 அக்டோபர் - காந்தி பிறந்த நாள்


4. 6 - 13 ஏப்ரல் - ஜாலியன் வாலா பாக் நினைவு நாள்


5. இதர முக்கியமான விழா (சந்தோஷமான) நாட்கள் அரசாங்கத்தால் முடிவு செய்யப்படும்.

Q18. இந்திய தேசிய கொடியின் அங்கீகரிக்கப்பட்ட நீள அகல அளவு என்ன? அவை எங்கு ஏற்றப்படும்?
நீள அகலம்/ஏற்றப்படும் இடம்:
21' x 14' / 6300 x 4200 mm மிக உயர கொடி கம்பம்
12' x 8' / 3600 x 2400 mm ஜனாதிபதி மாளிகை, ஆளுநர் மாளிகைகள், பாராளுமன்றம்
8' x 6' / 2700 x 1800 mm பாராளுமன்ற வளாகம் மற்றும் நடுத்தர பெரிய பொது கட்டிடங்கள்
6' x 4' / 1800 x 1200 mm சிறிய அளவிலான பொது கட்டிடங்கள் மற்றும் அரசாங்க ராணுவ விழாக்கள்
5.5' x 3' / 1350 x 900 mm சிறு அளவிலான பொது கட்டிடங்கள்
3' x 2' / 1900 x 600 mm சிறு அளவிலான பொது கட்டிட அறைகள், வெளிச் சுவர்கள்
1.5' x 1' / 1450 x 300 mm முக்கிய பிரமுகர்களின் விமானங்கள், ஜனாதிபதிக்காக இயக்கப்படும் விசேஷ ரயில் தொடர்
9" x 6" / 225 x 150 mm முக்கிய பிரமுகர்களின் தரை வழி ஊர்திகள் (கார்கள்)
6" x 4" / 150 x 100 mm மேஜை மீது வைக்கக் கூடியது
Q19. தேசிய கொடி ஏற்றுவதிலும் இறக்குவதிலும் கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறை என்ன?
ஏற்றும் போது வேகமாகவும், இறக்கும் போது மெதுவாக செய்ய வேண்டும். ஊது கொம்பு (Bugle ) வாசிக்கப்பட்டால், ஏற்ற இறக்கம் இசையுடன் ஒத்துப் போக வேண்டும்.
Q20. நம் நாட்டு தேசியக்கொடி, மற்ற நாட்டுக் கொடிகளுடன் நேர்க்கோட்டில் ஏற்றப்படும் போது, நம் நாட்டுக்கொடி எந்த நிலையில் இருக்க வேண்டும்?
வலது கோடியில் இருக்க வேண்டும். நிகழ்ச்சிகளின் போது, முக்கிய அழைப்பாளர் / விருந்தினர், கொடிகளின் வரிசையின் நடுவில் நிற்பாரேயானால், நமது தேசியக்கொடி அவரது வலது புறம் இருக்க வேண்டும்.
Q21. தேசிய கொடியை அரைக்கம்பத்தின் பறக்க விடுவது பற்றிய அணுகுமுறை என்ன?
தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் நாட்களில் மட்டும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும். அவ்வாறு பொதுவாக அனுசரிக்கப்படும் நாட்கள்:
(1) குடியரசுத்தலைவர், துணைக்குடியரசுத் தலைவர், பிரதம மந்திரி மறைவு -- நாடு முழுவதும் துக்கம்.
(2) மக்களவை சபாநாயகர், உச்சநீதிமன்ற நீதிபதி, மத்திய மந்திரிகள் -- டெல்லி மற்றும் மாகாண தலை நகரங்கள்.
(3) ஆளுநர், முதல் மந்திரி மற்றும் மாநில அமைச்சர்கள் -- சம்பந்தப்பட்ட மாநிலம் முழுவதும்.
(4) இதைத் தவிர, பல்வேறு காரணங்களாலேற்படக்கூடிய அழிவுகள் -- சம்பந்தப்பட்ட மாநிலம் அல்லது நாடு தழுவிய துக்க தினமாக அனுசரிப்பதை அரசாங்கம் அறிவிக்கும்.
இவ்வகையான துக்க தினங்களை எந்தெந்த பகுதியில் எத்தனை நாட்களுக்கு அனுசரிக்கப்படவேண்டும் என்பதை அரசாங்கம் அந்தந்த சமயத்தில் அறிவிக்கும்.
Q22. வீணான மற்றும் பழுதடைந்த தேசியக்கொடி எவ்வாறு அழிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது?
இதைப் பற்றி நிறைய ஆணைகளும், உத்தரவுகளும் உள்ளன. குறிப்பிட்டு சொல்ல வேண்டியது யாதெனில், தேசியக்கொடி எப்போது பயன்படுத்த முடியாத நிலையாகிறதோ, அப்போது அதற்கு தக்க மரியாதைகளுடன், எரிக்கவோ அல்லது புதைக்கப்படவோ வேண்டும். மரியாதை என்ற பெயரில் எந்த ஆடம்பர செயல்களும் செய்யக்கூடாது. கிழித்து கண்ட இடங்களில் வீசுவதோ, அல்லது கிழிந்த கொடித் துணியை வேறு வகைகளில் பயன்படுத்தவோ கூடாது.
Q23. எந்த அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர், தேசியக்கொடியை, பொது மக்களால், எந்த ஒரு தனியார் கட்டிடங்களிலும் ஏற்றலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை பெற்றுத்தந்தார்?
நவீன் ஜிண்டால் - மக்களவை உறுப்பினர். இந்த உச்ச நீதி மன்ற உத்தரவை மத்திய அரசாங்கம் 26.01.2002 முதல் அமல்படுத்தியது.
Q24. இந்திய தேசிய கொடி எவரெஸ்ட் உச்சியில் எப்போது முதன்முதலில் யாரால் ஏற்றப்பட்டது?
29.05.1953 - டென்சிங் நார்கே
Q25. இந்திய மூவர்ணக்கொடி அந்தமான், நிக்கோபார் தீவில் முதன் முறையாக எப்போது ஏற்றப்பட்டது?
1943 - சுபாஷ் சந்திர போஸ்
Q26. இந்திய தேசிய கொடியிலுள்ள மூவர்ணங்களில் எது, மற்ற இரண்டு வர்ணங்களை விட அகலத்தில் சற்றுக் குறைவாக உள்ளது?
குங்கும நிற பட்டை (Saffron Band)
Q27. இந்திய தேசிய கொடி எப்போது தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது?
25-01-1947/ 26-01-1947 அன்று நடந்த நள்ளிரவு கூட்ட்த்தில்.
Q28. தேசிய கொடி ஏற்றுவது, இறக்குவது, மரியாதை, அவமரியாதை சம்பந்தப்பட்ட விதிமுறைகள் எந்தெந்த சட்டங்களில் வரையறுக்கப்பட்டுள்ளது?

1. தேசியக்கொடி சட்டம், 2002 (Flag Code of India 2002)
2. சின்னங்கள் மற்றும் பெயர்கள் (தவறான செயல்முறை தடுப்பு சட்டம், 1950. Emblem & Names (Prevention of Improper Use) Act 1950.
3. தேசிய அவமரியாதை / அவதூறு தடுப்புச் சட்டம் 1971. (Prevention of Insults to National Honour Act, 1971)
Q29. இந்தியாவின் மிகப்பெரிய தேசியக்கொடி எங்கு ஏற்றப்பட்டது?
டெல்லியின் கன்னாட் ப்ளேஸ், மத்திய பூங்காவில், 60 அடி அகலம், 90 அடி நீளம் - 35கிகி எடை உள்ள கொடி மார்ச் 6, 2014 அன்று பாராளுமன்ற உறுப்பினர் நவீன் ஜிண்டால் அவர்களின் இந்தியக்கொடி நிறுவனக் குழுமத்தால் ஏற்றப்பட்ட்து.
Q30. நாட்டின் மிக உயரமான கொடிக்கம்பம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
நவி மும்பை (New Bombay) முனிசிபல் கார்ப்பொரேஷன் வளாகத்தில் 225 அடி உயர கொடிக்கம்பம் ஜனவரி 2014ல் நிறுவப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது - 213 அடி உயர கம்பம் - தேசிய ராணுவ நினைவகம் - சௌடைய்யா ரோடு, பெங்களூரு.
Q31. நாட்டில் மிக உயரமான கொடிக்கம்பங்கள் நிறுவுவதில் ஒரு தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. அது எது?
பாராளுமன்ற உறுப்பினர் நவீன் ஜிண்டால் அவர்கள் தலைமையில் இயங்கி வரும் Flag Foundation of India என்ற நிறுவனம். இதனால் நாட்டின் 12 இடங்களில் 207 அடி கம்பங்களும், அநேக 100 அடி கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளது.