Khub.info Learn TNPSC exam and online pratice

அமைப்பு

Q1. இந்தியா சுதந்திரம் அடைந்த நாள் மற்றும் கிழமை என்ன?
15.08.1947 - வெள்ளி
Q2. இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட நாள் மற்றும் கிழமை என்ன?
26.01.1950 - வியாழன்
Q3. இந்தியா எந்த கண்டம் மற்றும் துருவத்தில் அமைந்துள்ளது?
ஆசியா - வட துருவம்
Q4. இந்தியாவின் பரப்பளவும், உலக அளவில் அதன் நிலையும் என்ன?
பரப்பளவு - 3287263 ச.கி.மீ. பரப்பளவில் உலகின் ஏழாவது மிகப்பெரிய நாடு. உலக தரைப் பரப்பளவில் இந்தியா சுமார் 2.5% இட த்தை கொண்டுள்ளது.
Q5. பூகோள ரீதியில் இந்தியாவின் அமைப்பு என்ன?
8 degree 4' N - 37 degree 7' அட்ச ரேகைக்கும், 68 degree 7' E - 97 degree 25' E தீர்க்க ரேகைக்கும் இடையில் அமைந்துள்ளது.
Q6. இந்திய எல்லைத் தொடரின் மொத்த நீளம் எவ்வளவு?
(சுமார்) 15200 கி.மீ.
Q7. இந்தியாவின் கடற்கரையின் நீளம் எவ்வளவு?
7517 கி.மீ. தீப கற்பம் - 5423 கி.மீ + இந்தியாவுக்கு உட்பட்ட வெளிப்பகுதி - 2094 கி.மீ.
Q8. இந்தியாவின் வடக்கு-தெற்கு நீளம் எவ்வளவு?
3214 கி.மீ.
Q9. இந்தியாவின் கிழக்கு-மேற்கு நீளம் எவ்வளவு?
2933 கி.மீ.
Q10. இந்தியாவின் மிகத் தாழ்மையான பகுதி எது?
குட்ட நாடு,ஆலப்புழை மாவட்டம், கேரளா - கடல் மட்ட த்திலிருந்த்து சுமார் 2.2 மீ - 7 அடி கீழே
Q11. இந்திய தீப கற்ப பகுதியின் நீளம் எவ்வளவு?
இந்திய பரப்பளவில் சுமார் பாதியளவு தீப கற்பமாக உள்ளது. இதில் சுமார் 1600 கி.மீ. தூரம் இந்தியப் பெருங்கடலுக்குள் நீண்டு உள்ளது. மேற்கு எல்லையாக அரபிக் கடலும், கிழக்கு எல்லையாக வங்காள விரிகுடாவும் அமைந்துள்ளது.
Q12. இந்தியா - இலங்கைக்கிடையில் உள்ள ஜல சந்தியின் பெயர் என்ன?
பாக் ஜல சந்தி - இந்தியப் பெருங்கடலையும் அரபிக் கடலையும் இணைத்து அமைந்துள்ள து.
Q13. பாக் ஜல சந்திக்கு யாருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது?
ராபர்ட் பாக் - ஆளுநர், மெட்ராஸ் ப்ரெஸிடென்ஸி ப்ரிட்டிஷ் இந்தியா.
Q14. இந்திய நீர் எல்லைக்குள்ளடங்கிய வளைகுடாக்கள் எவை?

1. மன்னார் வளைகுடா : இந்தியா - இலங்கைக்கு இடையில் அமைந்துள்ளது - 160 கி.மீ. நீளம், 10500 ச.கி.மீ. பரப்பளவு - தூத்துக்குடி துறைமுகம் இதில் அமைந்துள்ளது.
2. கட்ச் வளைகுடா : குஜராத் - அரபிக்கடல் - 99 மைல் நீளம்.
3. கம்பட் வளைகுடா : குஜராத் - அரபிக்கடல் - 80 மைல் நீளம்
Q15. இந்தியாவில் உள்ள முக்கிய மலைத் தொடர்கள் யாவை?

1. இமயமலைத் தொடர் : சுமார் 2400 கி.மீ. நீளம் - பூடான், சீனா, இந்தியா, ளம், பாகிஸ்தான் வரை பரவியுள்ளது. அதிகமான உயரம் 8848 மீ / 29029 அடி. சிந்து, கங்கா மற்றும் பிரம்மபுத்திரா நதிகள் இங்கிருந்து உருவாகின்றன. எவரெஸ்ட் சிகரம் உயரமான சிகரம்.
2. விந்திய மலைத் தொடர் : மதிய பிரதேசம், குஜராத், உத்திர பிரதேசம், பீஹார் மாநிலம் வரை பரவியுள்ளது. உயரமான சிகரம் - கலுமார் - 752 மீ/2467 அடி - சுமார் 1200 கி. மீ. நீளம்.
3. சாத்பூரா மலைத் தொடர் : 1350 மீ/4430 அடி உயரம் - தூப்கர் சிகரம் உயரமான சிகரம் - மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரம், சத்தீஸ்கர், குஜராத் மாநிலங்களில் பரவியுள்ளது. பச் மாஹி புகழ் பெற்ற மலை வாழ் ஸ்தலம், சாத்பூரா தேசிய பூங்கா, கன்ஹா புலிகள் சரணாலயம் இங்கு அமைந்துள்ளது.
4. ஆர வல்லி மலைத் தொடர் : ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, குஜராத் வரை பரவியுள்ளது. சுமார் 800 கி.மீ. நீளம் - 1722 மீ / 5650 அடி உயரத்தில் உள்ள குரு ஷிகார் உயரமான இடம். மடிப்பு மலைகளில் மிகவும் பழமையானது. பனாஸ், லூனி, சகி, சபர்மதி போன்ற நதிகள் உருவாகின்றன.
5. மேற்குத் தொடர்ச்சி மலை : சுமார் 1600 கி.மீ. நீளம்- ஆனை முடி 2695 மீ/8842 அடி / உயரமான சிகரம். குஜராத், மஹாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், கேரளா, தமிழ் நாடு வரை பரவி உள்ளது. இது UNECO வால் அங்கீகரிக்கப்பட்ட உலக புராதனச் சின்னம் - 160000 ச.கி.மீ. பரப்பளவு - அதிகமான தேசிய பூங்காக்கள் அமைந்துள்ள பகுதி. கன்னியாகுமரியில் முடிவடைகிறது.
6. கிழக்குத் தொடர்ச்சி மலை : அர்மா கொண்டா - 1680 மீ / 5510 அடி. இத்தொடரின் உயரமான இடம் - ஒடிசா, ஆந்திரா, கர்னாடகம், தமிழ் நாடு மானிலங்களில் பரவியுள்ளது. கோதாவரி, மஹா நதி, கிருஷ்ணா, காவேரி ஆகிய நதிகளால் துண்டிக்கப்பட்ட மலைத் தொடர். அரக்கு பள்ளத்தாக்கு, நீலகிரி, ஏற்காடு போன்ற தலங்கள் அமைந்துள்ளது. நிறைய தேசிய பூங்காக்கள் அமைந்துள்ளன.
Q16. இந்தியாவின் வெளி எல்லைக்குள் அடங்கிய பகுதிகள் யாவை?

1. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் : 8073 ச.கி.மீ. பரப்பளவு 3,80,500 மக்கள் தொகை, போர்ட் ப்ளேர் - தலை நகர் - யூனியன் பிரதேசம் - 572 தீவுகள் அடங்கியது - அந்தமானில் உள்ள வட்ட சிறைச்சாலை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த்து. சுற்றுலா தலம் - பெங்காலி, தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகள்.
2. லட்சத் தீவுகள் : யூனியன் பிரதேசம் - கவராட்டி தலை நகர் - 32 ச.கி.மீ. பரப்பளவு - 64429 ஜனத்தொகை - மலையாளம், ஆங்கிலம் மொழிகள் - 39 தீவுகள்.
Q17. இந்தியாவில் காணப்படும் மண் வகைகள் யாவை?

1. வண்டல் மண் (ALLUVIAL) : இந்தியாவில் கால் பங்கு இந்த மண் வகையாகும். கங்கை சமவெளி, பஞ்சாப், அரியானா, உத்திர பிரதேசம், பீஹார், மேற்கு வங்காளம், தென்னிந்திய கடற்கரை ஆற்று படுகைகளில் காணப்படும்.
2. கரிசல் மண் (BLACK) : மஹாராஷ்டிரம், மேற்கு மத்திய பிரதேசம், குஜராத், ஆந்திரப் பிரதேசம், தமிழ் நாடு ஆகிய பகுதிகள் காணப்படுகின்றது.
3. செம்மண் (RED SOIL) : மத்திய பிரதேசம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மற்றும் வட கிழக்கு மலைப் பிரதேச மாநிலங்களில் காணப்படுகிறது.
4. செம்மண் (LATERITE) : தக்காணம், ஆந்திரப் பிரதேசம், கிழக்கு தொடர்ச்சி மலைகள், மைசூரு, தமிழ் நாடு, ஒடிசா மற்றும் மேகாலயா பகுதிகளில் காணப்படுகிறது.
5. உவர் மண் (SALINE/ALKALINE) : பீஹார், உத்திரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் காணப்படுகிறது.
6. மக்கிய மற்றும் சதுப்பு மண் (PEAT/MARSHY) : கேரளா, கடற்கரை, ஒடிசா, சுந்தரவனக்காடுகள், மேற்கு வங்காளத்தின் சில பகுதிகள், தென் கிழக்கு தமிழ் நாடு.
7. பாலைவனங்கள் (DESERTS): ராஜஸ்தான், குஜராத் சில பகுதி மற்றும் அரியானா ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.
Q18. இந்தியாவில் காணப்படும் காடு வகைகள் யாவை?
1. வெப்ப மண்டல உலர் ஈரப்பத காடுகள் (TROPICAL DRY MOIST FOREST) : இவ்வகை காடுகள் மலைப் பிரதேசங்களகிய அஸ்ஸாம், உத்திரப் பிரதேசம், இமாலய அடிவாரங்கள், கூர்க், மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் அதிகமாக காணப்படுகின்றன. இந்தியாவில் அதிகமாக காணப்படும் காடு வகை. இந்தியாவில் சுமார் 24-25% காடுகள் உள்ளன.
2. சதுப்பு நிலக் காடுகள் (MARSHY WETLAND FOREST) : இவ்வகைக் காடுகள், மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தரவனக் காட்டுப் பகுதிகளில் காணப்படுகிறது.
Q19. இந்தியாவின் முக்கிய ஆறுகள் யாவை?

1. பிரம்மபுத்திரா : திபெத்தில் 5210 மீ உயரத்தில் உள்ள ஆங்ஸி பனிப் பாறையில் உருவாகி, சீனா, இந்தியா, வங்காள தேசம் ஆகிய நாடுகள் வழியாக சுமார் 3848 கி.மீ. பாய்ந்து வங்காள விரிகுடாவில் வங்காள தேசத்தில் கலக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய ஆற்றுத் தீவு "மஜுலித் தீவு" இதில் அமைந்துள்ளது. நம் நாட்டில் அஸ்ஸாம் மற்றும் அருணாசலப் பிரதேசத்தில் பாய்கிறது. இதன் பெயர் துவக்கத்தில் "ட்சாங்போ" என்றும், இந்திய பகுதிக்குள் பிரம்மபுத்திரா எனவும் அழைக்கப்படுகிறது.
2. கங்கை : கங்கோத்ரி பனிப்பாறை உத்தர் காண்டில் துவங்கி உத்தர் காண்ட், உத்திர பிரதேசம், பீஹார், ஜார்கண்ட், மே.வங்காளம், வழியாக 2525 கி.மீ. பாய்ந்து வங்காள தேசத்தின் வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பாகீரதி மற்றும் அலக் நந்தா ஆறுகள் தேவ பிரயாக் என்னும் இட்த்தில் ஒன்று கூடி கங்கை எனப் பெறுகிறது. திரிவேணி சங்கமத்தில் யமுனா நதியுடன் சேருகிறது. வங்காள தேசத்தில் நுழைந்தவுடன் இது 'பத்மா' என அழைக்கப்படுகிறது. பிறகு ஜமுனா, மேக்னா நதிகளுடன் சேர்ந்து வங்க கடலில் பாய்கிறது.
3. சிந்து : மாளவா மேட்டுப்பகுதியில் (திபெத்) தொடங்கி, அதிகமாக பாகிஸ்தானிலும், இந்தியா மற்றும் சீனாவிலும் பாய்கிறது. 32000 கி.மீ நீளம் கொண்ட இந்த நதி பாகிஸ்தானில் அரபிக் கடலில் கலக்கிறது. இந்தியாவில் ஜம்மு & காஷ்மீர் மானிலத்தில் மட்டும் பாய்கிறது. பாகிஸ்தானின் அதிக நீளமான நதி.
4. கோதாவரி : மஹாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் மாவட்ட்த்தைச் சேர்ந்த த்ரையம்பகேஷ்வர் என்ற இட்த்தில் பிரம்மகிரி மலையில் உருவாகி, மஹாராஷ்டிரம், தெலங்கானா, சத்தீஸ்கர், ஆந்திரம் வழியாக, 1465 கி.மீ. பாய்ந்து, ஆந்திர மாநிலம் அந்தர் வேடி என்னும் இடத்தில் கடலில் கலக்கிறது.
5. கிருஷ்ணா : மஹாராஷ்டிராவின் சத்தாரா மாவட்ட த்தின், மஹாபலேஷ்வர் மலைப் பகுதியில் துவங்கி, மஹாராஷ்டிரம், கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரா வழியாக, 1400 கி.மீ பாய்ந்து, ஆந்திர பிரதேச, கிருஷ்ணா மாவட்ட ஹம்சலா தீவி என்ற இட த்தில் வங்கக் கடலில் கலக்கிறது.
6. மஹா நதி : சத்தீஸ்கரின் தண்டகாரண்யா தம்தாரி என்ற இட்த்தில் உருவாகி, சத்தீஸ்கர், ஒடிசா மாநிலம் வழியாக சுமார் 858 கி.மீ பாய்ந்து, ஒடிசா மா நிலத்தின் கேந்த்ரபாரா மாவட்டத்தில் கலக்கிறது.
7. தாமோதர் : ஜார்கண்ட் மாநில சாண்ட்வா என்ற இடத்தில் உருவாகி, ஜார்கண்ட், மே.வங்காளம் வழியாக சுமார் 592 கி. மீ பாய்ந்து, மேற்கு வங்காளத்தில் ஹுக்ளி நதியுடன் கலக்கிறது.
8. நர்மதை : மத்திய பிரதேசத்தின் அமரகண்டக் என்ற இட த்தில் துவங்கி, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரம், குஜராத் வழியாக 1312 கி.மீ பாய்ந்து, குஜராத்தின் பரூச் மாவட்டம் கம்பட் வளைகுடாவில் அரபிக் கடலில் கலக்கிறது.
9. தபதி : மத்தியப் பிரதேசம் பேடூல் அருகில் உருவாகி, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரம், குஜராத் வழியாக சுமார் 724 கி. மீ பாய்ந்து, சூரத் அருகில் கம்பட் வளைகுடாவில் அரபிக் கடலில் கலக்கிறது.
10. காவேரி : மேற்குத் தொடர்ச்சி மலையில் தலை காவேரி என்னும் இட த்தில் துவங்கி, கர்நாடகம், தமிழ் நாடு வழியாக பாய்ந்து - 765 கி.மீ தஞ்சாவூருக்கு பிறகு கிளையாக பிரிந்து வங்கக்கடலில் கலக்கிறது. மேலும் நதிகளைப் பற்றி புவியியல் நீர் வளப் பகுதியில் காணலாம்.
Q20. இந்தியாவில் எத்தனை ஆற்றுப் படுகைகள் உள்ளது? அவைகளில் முக்கியமானது எது?
பதினான்கு. கங்கை ஆற்றுப் படுகை (RIVER BASIN) மிக முக்கியமானதும் பெரியதும் ஆகும்.
Q21. இந்தியாவில் பொதுவாக நிலவும் தட்பவெப்ப நிலை என்ன?
வெப்ப மண்டல - பருவ மழை நிலை. (TROPICAL MONSOONAL)
Q22. இந்தியாவின் முக்கிய இரு பருவ மழைக் காலங்கள் எவை?
தென் மேற்கு மற்றும் வட கிழக்குப் பருவக் காற்று
Q23. தென்மேற்குப் பருவ காலம் எந்த மாதங்களில், எந்த பகுதிகளில் செயல்பட்டு தொடர் மழையை ஏற்படுத்துகிறது?
பொதுவாக மே மாத இறுதி வாரத்தில் ஆரம்பித்து ஜூலை மாத கடைசி வரை செயல்பாட்டிலிருக்கும். இதன் பயனால், கேரளா, கர்நாடகம், கோவா, மஹாராஷ்டிரம், ராஜஸ்தான், மேற்கு குஜராத் மற்றும் வட மேற்கு பகுதிகளும், டெல்லி ஆகிய பகுதிகள் நல்ல மழை பெறுகிறது.
Q24. வடகிழக்கு பருவக் காற்று மழை எந்த காலங்களில் செயல்பட்டு, எந்த பகுதிகளுக்கு மழை வரச் செய்கிறது?
நவம்பர், டிசம்பர் - கிழக்கு மற்றும் கிழக்குக் கடற்கரையோர பகுதிகள் இதன் மூலம் பயன் அடைகிறது.
Q25. இந்தியாவின் எந்த மாநிலத்தில் அதிகளவு காடுகள் உள்ளது?
அருணசல பிரதேசம்.
Q26. இந்தியாவின் எந்த மாநிலத்தில் குறைந்த காடுகள் உள்ளது?
ஹரியானா.
Q27. இந்தியாவின் மற்ற எந்த மாநிலங்களில் பரவலாக காடுகள் உள்ளது?
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கேரளா, தமிழ் நாடு, கர்நாடகம், கோவா மற்றும் மஹாராஷ்டிரம்.
Q28. இந்தியாவின் எந்த மாநிலத்தில் அதிகமாக பாலைவனப் பகுதி அமைந்துள்ளது?
ராஜஸ்தான்.
Q29. இந்தியாவின் முக்கியமான ஆற்றுப் பள்ளத்தாக்குகள் எவை?
இமாலயா, விந்திய, சாத்பூரா மற்றும் சையாத்ரி ஆற்று பள்ளத்தாக்குகள்.
Q30. 2011 ஜனத்தொகை கணக்கெடுப்புப்படி இந்தியாவின் ஜனத்தொகை எவ்வளவு?
1,21,01,93,422 (121 + கோடி) உலக ஜனத்தொகையில் சுமார் 17%.
Q31. இந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?
ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 380.6
Q32. இந்தியாவின் ஜனத்தொகையில் மத வாரியான நிலை என்ன?

இந்துக்கள் - 74.3%, இஸ்லாமியர்கள் - 14.23%, கிறித்துவர்கள் - 2.3%, சீக்கியர்கள் - 1.72%, புத்த மதத்தவர்கள் - 0.7%, ஜைன மதத்தினர் - 0.37%, மற்ற மதத்தினர் - 0.66%.

Q33. இந்தியாவில் சுமார் எத்தனை மொழிகள் பேசப்படுகின்றன?
சுமார் 1652.
Q34. நம் நாட்டில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழிகள் எத்தனை? அவை யாவை?
22- இருபத்தி இரண்டு. அவை : 1. அஸ்ஸாமிஸ் 2. பெங்காலி 3. குஜராத்தி, 4. ஹிந்தி, 5.கன்னடம், 6. காஷ்மீரி, 7. மலையாளம், 8. மராத்தி, 9. ஒரியா, 10. பஞ்சாபி, 11. சமஸ்கிருதம், 12. சிந்தி, 13. தமிழ், 14. தெலுங்கு, 15. உருது, 16. கொங்கணி, 17. மணிப்புரி, 18. நேபாளி, 19. போடோ, 20. டோக்ரி,  21. மைத்திலி, 22. சந்தாலி.
Q35. இந்திய ரூபாய் நோட்டில் ரூபாயின் மதிப்பு எத்தனை மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளது?
பதினைந்து - ஆங்கிலம் நீங்கலாக.
Q36. இந்திய மொழிகளில் பத்து ஆயிரம் பேர்களுக்கு மேல் பேசக்கூடிய மொழிகள் சுமார் எத்தனை உள்ளது?
262
Q37. இந்தியாவில் சுமார் எத்தனை கிராமங்கள் உள்ளன?
6,38,000 +
Q38. இந்தியாவில் சுமார் எத்தனை நகரங்கள் உள்ளன?
3894
Q39. இந்தியாவில் பெரு நகரங்களாக கருதப்படுபவை எவை?
அஹமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, பூனே.
Q40. இந்தியாவில் விரல் பகுதி எனப்படும் பகுதி எங்குள்ளது?
சிக்கிமுக்கும் சீனாவிற்கும் இடையில் விரல் போன்று நீண்டு அமைந்துள்ளது ஒரு சிறு பகுதி.
Q41. இந்தியாவிற்குள் புகுந்து செல்லும் பூகோள ரேகை எது?
கடக ரேகை -
Q42. இந்தியாவில் ஜனத்தொகை கணக்கெடுப்பு முயற்சி எப்போது தொடங்கியது?
1872
Q43. இந்தியாவில் முறையான ஜனத்தொகை கணக்கெடுப்பு எந்த வருடம் துவங்கியது?
1881
Q44. சுதந்திர இந்தியாவில் முதல் ஜனத்தொகை கணக்கெடுப்பு எந்த வருடம் துவங்கியது?
1951
Q45. கடைசியாக எந்த வருடம் ஜனத்தொகை கணக்கெடுப்பு நடந்த்து?
2011 (7வது முறை)
Q46. 2011 ஜனத்தொகை கணக்கெடுப்பின் படி ஆண், பெண் விகிதாச்சாரம் என்ன?
1000 : 940
Q47. 2011 ஜனத்தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவின் எழுத்தறிவு சதவிகிதம் எவ்வளவு?

74.03%

Q48. 2011 ஜனத்தொகை கணக்கெடுப்பின் படி பிறப்பு, இறப்பு விகிதம் என்ன?
பிறப்பு 20.22/1000 ; இறப்பு 7.4 / 1000
Q49. 2011 ஜனத்தொகை கணக்கெடுப்பின் படி ஜனத்தொகை அதிகம் உள்ள மாநிலம் எது?
உத்திரப்பிரதேசம் - 19,98,12,341.
Q50. 2011 ஜனத்தொகை கணக்கெடுப்பின் படி மக்கள்தொகை குறைவாக உள்ள மாநிலம் எது?
சிக்கிம் - 6,07,688.
Q51. 2011 ஜனத்தொகை கணக்கெடுப்பின் படி மக்கள்தொகை அதிகம் மற்றும் குறைவாக உள்ள யூனியன் பிரதேசம் எது?
டெல்லி - 1,67,53,235. லட்சத்தீவு - 64,429.
Q52. 2011 ஜனத்தொகை கணக்கெடுப்பின் படி மக்கள்தொகை அடர்த்தி அதிகம் மற்றும் குறைவாக உள்ள மாநிலங்கள் எவை?
பீஹார் - 1102 / ச.கி.மீ. அருணாசல பிரதேசம் - 17 ச.கி.மீ.
Q53. 2011 ஜனத்தொகை கணக்கெடுப்பின் படி மக்கள்தொகை அடர்த்தி அதிகம் மற்றும் குறைவாக உள்ள யூனியன் பிரதேசம் எது?
டெல்லி - 11297 / ச.கி.மீ. அந்தமான் & நிக்கோபார் - 46 / ச.கி.மீ.
Q54. 2011 ஜனத்தொகை கணக்கெடுப்பின் படி பெண்கள் அதிகமாக உள்ள மாநிலம் எது?
கேரளா - 1084/1000
Q55. 2011 ஜனத்தொகை கணக்கெடுப்பின் படி பெண்கள் குறைவாக உள்ள மாநிலம் எது?
ஹரியானா - 879 / 1000
Q56. 2011 ஜனத்தொகை கணக்கெடுப்பின் படி பிறப்பு விகிதம் குறைவாக உள்ள மாநிலம் எது?
பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், தமிழ் நாடு, மேற்கு வங்காளம்.
Q57. 2011 ஜனத்தொகை கணக்கெடுப்பின் படி பிறப்பு விகிதம் அதிகமாக உள்ள மாநிலம் எது?
பீஹார்.
Q58. 2011 ஜனத்தொகை கணக்கெடுப்பின் படி இறப்பு விகிதம் அதிகமாக உள்ள மாநிலம் எது?
ஒடிசா.
Q59. 2011 ஜனத்தொகை கணக்கெடுப்பின் படி இறப்பு விகிதம் குறைவாக உள்ள மாநிலம் எது?
ஜம்மு & காஷ்மீர்.
Q60. 2011 ஜனத்தொகை கணக்கெடுப்பின் படி எழுத்தறிவு அதிகமுள்ள மாநிலம் எது?
கேரளா - 93.91%
Q61. 2011 ஜனத்தொகை கணக்கெடுப்பின் படி எழுத்தறிவு குறைவாக உள்ள மாநிலம் எது?
பீஹார் - 63.82%
Q62. 2011 ஜனத்தொகை கணக்கெடுப்பின் படி தேசிய ஆண்கள் கல்வியறிவு விகிதம் என்ன?
80.89%
Q63. 2011 ஜனத்தொகை கணக்கெடுப்பின் படி தேசிய பெண்கள் கல்வியறிவு விகிதம் என்ன?
64.64%
Q64. 2011 ஜனத்தொகை கணக்கெடுப்பின் படி தமிழ் நாட்டில் ஆண், பெண் கல்வியறிவு விகிதம் என்ன?
ஆண் - 86.81%, பெண் - 73.86%
Q65. எந்த மாநிலத்தில் பழங்குடி மக்கள் ஜனத்தொகை அதிகம் மற்றும் குறைவாக உள்ளது?
மத்திய பிரதேசம், கோவா.
Q66. எந்த மாநிலத்தில் அதிகமான தலித் இன (அருந்ததியர் - ) மக்கள் உள்ளனர்?
பஞ்சாப்.
Q67. மிக அதிக கடற்கரை நீளத்தைக் கொண்ட மாநிலம் எது?
குஜராத் -- 1214.7 கி.மீ
Q68. இந்தியாவிலுள்ள எந்த நீர் நிலை இலங்கையிலுள்ள ஒரு மாகாணத்தின் பெயர் கொண்டுள்ளது?
மன்னார் வளைகுடா.