Khub.info Learn TNPSC exam and online pratice


ஸொராஸ்ட்ரியனிஸம் -- ZOROASTRIANISM / MAZDAISM

Q1. ஸொராஸ்ட்ரியனிஸம் --Zoroastrianism இந்த மதத்தை நிறுவியவர் யார்?
ஸோரோஸ்டர்/ஸரதுஸ்ட்ரா/ஸர்தோஸ்த் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். கி.மு.500ம் ஆண்டில் இரானில் பிறந்தார்.

Q2. ஸொராஸ்ட்ரியனிஸம் என்பது என்ன மதம்?
ஸோரோஸ்டர் அவர்களின் தத்துவங்களை கடைப்பிடித்து வாழ்பவர்கள்.
Q3. ஸொராஸ்ட்ரியனிஸம் மக்களின் கடவுள் என கருதப்படுபவர் யார்?
அஹூரா மஸ்டா -- Ahura Mazda.
Q4. மஸ்டாயிஸம் -- Mazdaism என்பது என்ன?
ஸொராஸ்ட்ரியனிஸம் ன் ஒரு பிரிவு. அஹூரா மஸ்டா வின் ஆன்மிக போதனைகளை ஏற்றுக்கொண்டு ஒரு தனி பிரிவாக வாழ்கிறவர்கள்.
Q5. ஸொராஸ்ட்ரியனிஸம் மக்களின் புனித நூல் எது?
ஸெண்ட் அவெஸ்தா -- Zend Avesta – தின் டேப்ரியஹ் Din Dabireh என்ற எழுத்து வடிவத்தில் எழுதப்பட்டது. இதில் இரண்டு பிரிவுகள் (1) ஆன்மீகம் (2) பொதுவான போதனைகள்.
Q6. "கோதா" Gotha மற்றும் கொர்தேஷ் அவெஸ்தா Khordesh Avesta என்பது என்ன?
கோத்தா -- GOTHA : ஸரதுஷ்ட்ரா என்றவரால் தொகுக்கப்பட்ட போதனைகள்.
கொர்தேஷ் அவெஸ்தா -- KHORDESH AVESTA: அவெஸ்தா என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட தினசரி பிரார்த்தனைகள்.
Q7. "அஹூனா வைர்யா" -- Ahuna Vairya என்பது என்ன?
அஹூரா மஸ்டா வின் மீதுள்ள நம்பிக்கையால், தொகுக்கப்பட்ட பல பிரார்த்தனைகள்.
Q8. ஸொராஸ்ட்ரியனிஸம் -- Zoroastrianism எங்கெல்லாம் கடைப்பிடிக்கப்படுகிறது?
இரான் குறிப்பாக, மற்றும் இந்தியாவின் வட மேற்கு பகுதிகள். இவர்கள் இப்போது இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் சிறிய அளவில், குறிப்பாக வணிகத்தில் பரவியுள்ளனர்.
Q9. இந்தியாவில் ஸொராஸ்ட்ரியனிஸம் மக்கள் எவ்வாறு அழைக்கப் -- படுகிறார்கள்?
பார்சிஸ் -- Parsis.
Q10. இந்தியாவில் ஸொராஸ்ட்ரியனிஸம் மக்கள் பெரும் பகுதியானவர், பெரிய வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய பொருளாதாரத்தில் அவர்களின் பங்கு பெருமளவிலுள்ளது. அத்தகைய குடும்பத்தினர் யார்?
டாடா, பஜாஜ், வாடியா, ஜீஜீபாய், மிஸ்த்ரி, சேத்னா, தீன்ஷா, மோடி, ஜெஹாங்கீர் பாபா என பலர் உள்ளனர். தொழிற் துறை வளர்ச்சியில் இவர்களுடைய பங்கு மிகப் பெரியது.
Q11. ஸொராஸ்ட்ரியனிஸம் மக்கள் அணியும் குஷ்டி Kushti or Kusti என்பது என்ன?
இடுப்பில் கட்டும் கச்சை. இதில் 72 வெள்ளை மற்றும் கம்பளி வண்ண நூல்கள் தொங்கவிடப்பட்டிருக்கும். இவை, புனித நூல் அவெஸ்தாவின் ஒரு பகுதியான ""யாஸ்னா"" வின் 72 அத்தியாயங்களைக் குறிப்பிடுகின்றன.
Q12. ஸொராஸ்ட்ரியனிஸம் மக்கள் அணியும் "ஸெத்ரே" “Sedreh” என்பது என்ன?
ஸொராஸ்ட்ரியனிஸம் இன மக்கள் குஷ்தி உடன் அணியும் சட்டை, சேர்ந்து இவர்களது சம்ப்ரதாய சட்டை.
Q13. "ஃபர்வஷி" Farvashi என்பது என்ன?
ஸொராஸ்ட்ரியனிஸ தனி ஒருவரை வழி நடத்தும் கடவுளின் மனதளவிலான தூதர்.
Q14. ஸொராஸ்ட்ரியனிஸம் மக்களின் வழிபாட்டுத்தலம் எவ்வாறு அழைக்கப் படுகிறது?
நெருப்பு ஆலயம். Fire Temple.
Q15. ஸொராஸ்ட்ரியனிஸம் மக்களின் "நவ்ஜோத்" “Navjote” என்பது என்ன?
""ஸெத்ரெஹ் புஷ்டி"" எனவும் அழைக்கப்படும் ஒரு சடங்கு. இது ஸொராஸ்ட்ரியனிஸம் மதத்தில் ஒருவரை இணைக்கும் சடங்கு. இந்த சடங்கின் மூலம், அவர் அசீர்வதிக்கப்பட்டு, பாரம்பரிய உடையை அணிவிக்கப்படுவார். இந்த சடங்கு செய்யப்படாதவர்கள், மத ஆலயத்தில் உள்புக அனுமதி மறுக்கப்படுகிறது.
Q16. ஸொராஸ்ட்ரியனிஸம் மக்கள், இறந்தவர்களின் சடலத்தை எவ்வாறு அகற்றுகிறார்கள்?
மற்ற மதத்தினரைப் போல, உடலை எரிப்பதோ, அல்லது புதைப்பதோ கிடையாது. இவர்கள் இறந்தவர்களின் உடலை, இதற்கென பிரத்தியேகமாக கட்டப்பட்ட உயரமான கட்டுமானத்தின் உச்சியில் திறந்த வெளியில் கிடத்திவிடுவர். காரணம், அந்த உடலை பறவைகளுக்கு உணவாக அளிக்கும் எண்ணம்.
Q17. ஸொராஸ்ட்ரியனிஸம் மக்கள் இறந்தவர்களின் சடலத்தை வைத்துவிட்டு வரும் இடத்தின் பெயர் என்ன?
"அமைதி கோபுரம்" -- Tower of Silence: வட்ட வடிவ உயரமான கட்டிடம்.
Q18. ஸொராஸ்ட்ரியனிஸம் மக்கள் இறந்தவர்களின் எலும்புக் கூடுகளை எவ்வாறு அகற்றுகிறார்கள்?
ஒஸ்ஸூவரி -- Ossuary: இறந்தவர்களின் கடைசி இடமாக இருப்பதற்காக, அந்த எலும்பு கூட்டை, ஒரு மிகப்பெரிய கட்டிடத்தில், வைத்துவிடுவார்கள்.
Q19. ஸொராஸ்ட்ரியனிஸம் -- பார்ஸி இன மக்களின் புத்தாண்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஜம்ஷேட் இ நௌரோஸ் -- சுருக்கமாக "நௌரோஸ்"
Q20. தீர்க்கதரிசி ஸரதுஸ்ட்ரா வின் பிறந்த நாள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கொரட் சால் -- Khorad Sal.
Q21. ஹூமதா, ஹூகதா, ஹூவெர்ஷ்டா என்பது என்ன?
1. ஹூமாதா -- Humatha – நல்ல வார்த்தைகள்
2. ஹூகதா -- Hukatha – நல்ல செயல்கள்.
3. ஹூவெர்ஸ்தா -- Huvershta – நல்ல நடவடிக்கைகள்.