Khub.info Learn TNPSC exam and online pratice

கால்பந்து - FOOT BALL

Q1. கால்பந்து விளையாட்டு என்பது என்ன?
11 பேர் சேர்ந்து விளையாடக் கூடிய ஒரு அணி விளையாட்டு. ஒரு குறிப்பிட்ட செவ்வக விளையாட்டு மைதானத்தில் ஒரு பந்தை, முக்கியமாக காலால் (கைகளை தவிர்த்து) இதர மற்றும் இதர பகுதிகளாலும் தட்டிச் சென்று, எதிரணியின் எல்லைக்குள் அமைக்கப்பட்டிருக்கும் கோல் கம்பத்துக்குள் நுழைப்பதே இந்த விளையாட்டு. இதை தடுப்பதும், இரு அணிகளும் மாறி மாறி இதே போல் முயற்சிப்பதும் தடுப்பதுமே இந்த விளையாட்டு.
Q2. கால்பந்து விளையாட்டு மைதானத்தின் அளவு என்ன?
செவ்வகம் - 100 மீ. க்கு நீளம் x 64 மீ.க்கு அகலம்.
Q3. செவ்வக விளையாட்டு மைதானத்தில் போடப்பட்டிருக்கும் பல கோடுகளின் பெயர்களை கூறுக.
" 1. TOUCH LINES : 100 மீ நீள்வாக்கில் போடப்பட்டிருக்கும் கோடு. பந்து இந்தக் கோட்டைத் தாண்டி சென்றால், பந்து என கருதப்படும். எந்த அணியின் வீர ரால் பந்து வெளியில் சென்றதோ, அதற்கு எதிரணி வீர ரால், (இந்த சமயத்தில் மட்டும்) பந்து, கைகளால் மைதானத்துக்குள் விளையாட்டு தொடர வீசப்படும்.
2. GOAL LINES : 64 மீக்கு அகல வாக்கில் போடப்படும் கோடு. இந்த கோட்டினால் நீள (100 மீ) கோடுகள் இணைக்கப்பட்டு செவ்வக மைதானம் ஆகிறது. இந்தக் கோட்டின் மையத்தில் தான் கோல் கம்பங்கள் நிறுத்தப்படும். இந்தக் கோடு உள்ள அரைப் பகுதியை ஆக்கிரமித்து விளையாடும் வீர ராலோ, அல்லது கோல் தடுப்பாளராலோ, பந்து இந்த கோட்டை தாண்டும்போது, அது கார்னர் CORNER என கருதப்பட்டு, செவ்வகத்தின் மூலையிலிருந்து, பந்து காலால், எதிரணி வீரரால், உதைக்கப்பட்டு ஆட்டம் தொடரும். இதற்கு CORNER KICK என பெயர்.
3. மையக்கோடு - CENTER LINE : செவ்வகத்தை இரண்டு சம பங்காக பிரித்து, இரு அணிகளுக்கும் ஒதுக்க உதவும் கோடு.
4. மைய வட்டம் - CENTER CIRCLE : மையக்கோட்டின் இரு பக்கமும் அமையும்படியாக 9.15மீ விட்டம் கொண்ட ஒரு வட்டம்.
5. கோல் பகுதி - GOAL AREA : கோல் கம்பங்களின் இரு முனைகளிலிருந்தும், மைதானத்தின் உள்புறமாக 5.5மீட்டர் சதுரப்பகுதி.
6. தண்டனை பகுதி - PENALTY AREA : (பெனால்டி) கோல் கம்பங்களின் இரு முனைகளிலிருந்து 16.5 மீ மைதானத்தின் உள்புறமாக போடப்படும் சதுரப்பகுதி. இந்த சதுரத்துக்குள் பந்துடன் முன்னேறி வரும் வீரர், தடுப்பு அணியின் வீரரால், முன்னேறி வீரருக்கு உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தடுத்தால், நடுவரின் கருத்தில் அது தவறு என கருதப்பட்டால், PENALTY KICK என்ற தண்டனை வழங்கப்படும்.
7. தண்டனைக் குறி இடம் - PENALTY MARK/SPOT : கோல் கம்பங்களின் நடுவிலிருந்து 11 மீட்டர் மைதானத்தின் உள் பகுதியில் ஒரு குறிக்கப்பட்ட இடம். PENALTY KICK என்ற தண்டனை வழங்கப்பட்டால், பந்தை இங்கு வைத்து ஒரு வீரரால் காலால் உதைத்து கோல் போடுவதற்கு குறிக்கப்பட்ட இடம். இது நிறைவேற்றப்படும் போது எந்த அணி வீரரும் (தடுப்பு அணி கோல் கீப்பரைத் தவிர்த்து) அந்த சதுரத்துக்குள் நிற்க அனுமதி இல்லை.
8. மூலை கொடி கொம்பு - CORNER FLAG POST : செவ்வகத்தின் நான்கு மூலைகளிலும் நடப்படும் கொடி கொம்பு - 1.5 மீ / 5 அடி உயரம்.
9. மூலை குறி இடம் - CORNER SPOT / ARC : செவ்வக மைதானத்தில் நான்கு மூலைகளிலும் CORNER KICK அடிப்பதற்காக குறிக்கப்பட்டுள்ள இடம். ஒரு கால் வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த இடத்திற்குள் மட்டுமே பந்தை வைத்து CORNER KICK அடிக்க வேண்டும். இதன் ஆரம் 1 மீ.
10. கோடுகளின் அகலம் - WIDTH OF LINES : மைதானத்தில் போடப்படும் அனைத்து கோடுகளும் 5 அங்குலம் அகலத்திற்கு போடப்படும்.
11. கோல் கம்பங்கள் - GOAL POSTS : இரண்டு உயர கொம்புகளின் உயரம் - 2.44 மீ / 8 அடி - தரையில் இருந்து குறுக்கு கொம்பின் உள் பகுதி வரை. இரு உயரக் கொம்புகளுக்கிடையில் இடைவெளி : 7.32 மீ / 24 அடி 0.189 அங்குலம். குறுக்கு கொம்பு : மரம் / இரும்பு / ஃபைபரால் ஆனது. அகலம் 5 அங்குலம்."
Q4. கால்பந்தின் அளவுகள் யாவை?
" சுற்றளவு : 70 செ.மீ / 28 அங்குலம்.
எடை : காற்றடைத்த பிறகு - 450 கிராம் / 16 அவுன்ஸ்.
அழுத்தம் : 0.6 - 1.1 - வளி மண்டலத்துக்கிணையாக தோலினால் செய்யப்படுகிறது."
Q5. கால்பந்து அணியில் எவ்வளவு பேர் இருப்பார்கள்?
11 - 10 வீரர்கள் + 1 கோல் தடுப்பாளர். இவர்களுடன் 7 மாறுதல் வீரர்கள் (SUBSTITUTES). ஒரு போட்டியின் போது 3 வீரர்கள் மட்டுமே மாறுதல் செய்ய முடியும்.
Q6. கால்பந்து விளையாட்டின் நேரம் எவ்வளவு?
மொத்தம் 90 நிமிடங்கள் - 45 நிமிடங்கள் கொண்ட இரண்டு பகுதிகளாக -இடைவெளி 15 நிமிடங்கள். தடைபட்ட நேரத்துக்கு தகுந்தவாறு நேரம் முடிவில் கூட்டப்படும். ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் தண்டனை (PENALTY) கொடுக்கப்பட்டால் அது முடிவு செய்யப்படும்.
Q7. கால்பந்து விளையாட்டில் பயன்படுத்தப்படும் சில வார்த்தை தொடர்கள் :
" KICKOFF : ஆட்டத் தொடக்கம். TOSS ( நாணயச் சுழல்) வெற்றி பெற்ற அணி, மைதானத்தின் மையப்புள்ளியில் பந்தை வைத்து, காலால் தட்டி ஆட்டத்தை துவக்குவது.
THROW IN : பந்து நீள்கோட்டு பகுதியின் வெளியில் சென்றால், அதை,மீண்டும் ஆட்டம் தொடருவதற்காக கைகளால் மைதானத்துக்குள் வீசுவது.
GOAL KICK : பந்து அகலக் கோட்டை தாண்டிச் சென்றுவிட்டால் (CORNER KICK ஆகாத பட்சத்தில்) பந்தை, கோல் கொம்புகளின் எதிரில் போடப்பட்டு இருக்கும் சிறு சதுரத்தின் ஏதேனும் ஒரு இடத்தில் வைத்து, கோல் தடுப்பாளராலோ அல்லது அணியின் வீரராலோ, காலால் உதைத்து விளையாட்டை தொடர்வது.
CORNER KICK : பந்து அகலக் கோட்டை தாண்டி வெளியில் சென்று, அது CORNER KICK என அறிவிக்கப்பட்டால், அப்போது பந்தை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் வைத்து காலால் உதைத்து விளையாட்டை தொடர்வது.
FREE KICK : விளையாட்டு மைதானத்தின் எந்த பகுதியிலும், ஒரு வீரர் பந்துடன் முன்னேறி வருவதை எதிரணி வீரர் தடுக்கும் முயற்சியில், தவறான முறையில் உடல் ரீதியாக தாக்கப்பட்டால், அதை FREE KICK என்று அறிவிக்கப்பட்டு, நடந்த இடத்தில் பந்தை வைத்து, தாக்கப்பட்ட அணியின் வீரர் ஒருவர் பந்தை உதைத்து விளையாட்டைத் தொடருவார். தாக்கப்பட்ட விதம் மற்றும் தீவிரத்தினடிப்படையில் இரண்டு விதமான
1. மஞ்சள் அட்டை - எச்சரிக்கை;
2. சிகப்பு அட்டை - கடுமையான எச்சரிக்கை மற்றும் ஆட்டத்தை விட்டு வெளியேற்றம் - தண்டனைகளும் உண்டு.
மஞ்சள் எச்சரிக்கை இருமுறை பெற்றால் ஒரு ஆட்ட வெளியேற்றமும் உண்டு. PENALTY KICK : பெனால்டி பகுதிக்குள் (பெரிய சதுரப்பகுதி) முன்னேறி வரும் அணி வீரர், தடுப்பு அணி வீரரால் மோசமான முறையில் தாக்கப்பட்டாலோ, (அல்லது பந்தை கையால் தடுத்தாலோ) நடுவரால் வழங்கப்படும் தண்டனை."
Q8. எச்சரிக்கை அட்டைகள், எல்லை நடுவர்களின் கையில் உள்ள கொடி கொம்புகள், மாறுதல் வீரர் சட்டை எண் அறிவிப்பு பலகை போன்றவைகள் அறிமுகப்படுத்தப்பட காரணமாக இருந்தவர் யார்?
" கென் ஆஸ்டன் (KEN ASTON) - இங்கிலாந்து நாட்டின் கால்பந்து நடுவர்.
மஞ்சள் அட்டை : பதிவு செய்யப்படும் எச்சரிக்கை ஒரே போட்டியில் ஒரு வீரருக்கு இருமுறை காண்பிக்கப்பட்டால், அவர் ஆட்டத்தை விட்டு உடனடியாகவெளியேற்றப்படுவார். இதே, வெவ்வேறு போட்டியில் காண்பிக்கப்பட்டால், அடுத்து வரும் போட்டிக்கு தடை செய்யப்படுவார்.
சிகப்பு அட்டை : ஒரு வீரருக்கு ஒருமுறை காண்பிக்கப்பட்டால், அவர் ஆட்டத்தை விட்டு உடனே வெளியேற்றப்படுவது மட்டுமின்றி, அவருக்கு பதிலாக மாறுதலும் செய்ய முடியாது. இம்முறை வீரர்களின் நடவடிக்கைகளுக்கும், அணி நிர்வாகிகளுக்கும் உண்டு. இந்த தண்டனை முறைகள் பல விளையாட்டுகளில் புழக்கத்தில் உள்ளது."
Q9. கால்பந்து விளையாட்டின் உச்சகட்ட போட்டி எது?
1930லிருந்து, 4 ஆண்டுகளுக்கொரு முறை நடத்தப்படும் உலகக்கோப்பை.
Q10. கால்பந்து உலகக்கோப்பை முன்பு எவ்வாறு அறியப்பட்டது? பிறகு எவ்வாறு அறியப்படுகிறது.
"ஜூல்ஸ் ரிமெட் கோப்பை - இத்தாலிய சிற்பக் கலைஞர் சில்வியோ கஸ்ஸனிகா - வால் வடிவமைக்கப்பட்டது. 1970ல் இந்தக் கோப்பை, ப்ரேசில் நாட்டுக்கே (மூன்று முறை - 1958, 1962, 1970ல் வெற்றி பெற்றதற்காக) நிரந்தரமாக வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு உலகக்கோப்பை என அழைக்கப்படுகிறது."
Q11. கால்பந்து உலகக்கோப்பை யாரால் வடிவமைக்கப்பட்டது, அதன் அளவுகள் என்ன?
ஸ்டாபிலிமெண்டோ அரிஸ்டிகோ பெர்டோனி என்ற இத்தாலிய கலைஞரால் வடிவமைக்கப்பட்டு 1974ல் அறிமுகப்படுத்தப்பட்ட து. உயரம் - 36.8 செமீ; கனம் - 6.1 கிகி; 18 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட து.
Q12. கால்பந்து உலகக்கோப்பை நடந்த இடங்கள், வெற்றி தோல்வி அடைந்தவர்கள் யார்?
எண் வருடம் நடந்த நாடு வெற்றி தோல்வி / கோல்
1. 1930 உருகுவே உருகுவே அர்ஜெண்டினா 4-2
2. 1934 இத்தாலி இத்தாலி செக் 2-1
3. 1938 ஃப்ரான்ஸ் இத்தாலி ஹங்கேரி 4-2
4. 1950 ப்ரேசில் உருகுவே ப்ரேசில் 2-1
5. 1954 ஸ்விட்சர்லாந்து மே.ஜெர்மனி ஹங்கேரி 3-2
6. 1958 ஸ்வீடன் ப்ரேசில் ஸ்வீடன் 5-2
7. 1962 சிலி ப்ரேசில் செக் 3-1
8. 1966 இங்கிலாந்து இங்கிலாந்து மே.ஜெர்மனி 4-2
9. 1970 மெக்ஸிகோ ப்ரேசில் இத்தாலி 4-1
10. 1974 மே.ஜெர்மனி மே.ஜெர்மனி நெதர்லாந்து 2-1
11. 1978 அர்ஜெண்டினா அர்ஜெண்டினா நெதர்லாந்து 3-1
12. 1982 ஸ்பெயின் இத்தாலி மே.ஜெர்மனி 3-1
13. 1986 மெக்சிகோ அர்ஜெண்டினா மே.ஜெர்மனி 3-2
14. 1990 இத்தாலி மே.ஜெர்மனி அர்ஜெண்டினா 1-0
15. 1994 அமெரிக்கா ப்ரேசில் இத்தாலி 3-2
16. 1998 ஃப்ரான்ஸ் ஃப்ரான்ஸ் ப்ரேசில் 3-0
"17. 2002 ஜப்பான்/தென் கொரியா ப்ரேசில் ஜெர்மனி 2-0
18. 2006 ஜெர்மனி இத்தாலி ஜெர்மனி 5-3
19. 2010 தென் ஆப்பிரிக்கா ஸ்பெயின் நெதர்லாந்து 1-0
20. 2014 ப்ரேசில் ஜெர்மனி அர்ஜெண்டினா 1-0
21. 2018 ரஷ்யா
22. 2022 கட்டார்
Q13. "கால்பந்து உலகக்கோப்பையை ஒன்றுக்கு மேற்பட்ட முறை வென்ற நாடுகள் யாவை?"
"1. ப்ரேசில் -- 5 -- 1958, 1962, 1970, 1994, 2002
2. இத்தாலி -- 4 -- 1934, 1938, 1982, 2006
3. மே. ஜெர்மனி -- 4 -- 1954, 1974, 1990, 2014
4. உருகுவே -- 2 -- 1930, 1950
5. அர்ஜெண்டினா -- 2 -- 1978, 1986."
Q14. முதல் (1930) உலகக்கோப்பையை வென்ற நாடு எது?
உருகுவே - அர்ஜெண்டினாவை 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது.
Q15. கால்பந்து உலகக்கோப்பையை ஒரு முறைக்கு மேல் நடத்திய நாடு எது?
ஃப்ரான்ஸ், மெக்ஸிகோ, ஜெர்மனி, இத்தாலி, ப்ரேசில் - இரண்டு முறை.
Q16. இரண்டு நாடுகள் இணைந்து நடத்திய கால்பந்து உலகக்கோப்பை எது?
2002 - ஜப்பான், தென் கொரியா.
Q17. "எந்த கால்பந்து உலகக்கோப்பையிலிருந்து பல வண்ண பந்துகள் பயன்படுத்தப் பட்டன?"
"1970 - மெக்ஸிகோ - கருப்பு வெள்ளை
1998 - ஃப்ரான்ஸ் - மூவண்ணம் - சிகப்பு, வெள்ளை, நீலம்."
Q18. எந்த நிறுவனத்தின் பந்துகள் கால்பந்து உலகக்கோப்பையில் பயன்படுத்தப்படுகிறது?
அடிடாஸ் - ADIDAS.
Q19. 1970 கால்பந்து முதல் பயன்படுத்தப்பட்ட பந்துகளின் பெயர்கள் என்ன?
"1970 - டெல்ஸ்டார் - TEL START
1974 - டெல்ஸ்டார் ட்யூரோலாஸ்ட் - TELSTAR DURO LAST
1978 - டேங்கோ - TANGO
1982 - டேங்கோ எஸ்பானா - TANGO ESPANA
1986 - ஆஸ்டெகா மெக்ஸிகோ - AZTECA MAXICO
1990 - என்ட்ரஸ்கோ யூனிகோ - ENTRUSCO UNICO
1994 - க்வெஸ்ட் ரா - QUESTRA
1998 - ட் ரைகலர் - TRICOLOR
2002 - ஃபீவர் நோவா - FEVER NOVA
2006 - டீம் ஜீஸ்ட் - TEAM GEIST
2010 - ஜபுலானி - JABULANI
2014 - ப்ரஸுகா - BRAZUCA"
Q20. கால்பந்து உலகக்கோப்பையில் பயன்படுத்தப்பட்ட விளம்பர உருவ பொம்மைகள் - என்ன?
இவ்வகை விளம்பர உருவ பொம்மைகள் 1966 முதல் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை பொதுவாக கேலிச் சித்திரங்களையும், விலங்கினங்களையும் அடிப்படையாகக்கொண்டு வடிவமைக்கப்படுகின்றன. அவ்வாறு இதுவரை அறிமுகப்படுத்தப்பட்டவை.
எண் வருடம் இடம் பொம்மை பெயர்
1. 1966 இங்கிலாந்து வில்லி - WILLIE
2. 1970 மெக்ஸிகோ ஜூவானிட்டோ - JUVANITO
3. 1974 ஜெர்மனி டிப், டேப் - TIPTAP
4. 1978 அர்ஜெண்டினா கௌஷிட்டோ - GAUCHITO
5. 1982 ஸ்பெயின் நரன் ஜிட்டோ - NARANJITO
6. 1986 மெக்ஸிகோ பிக் - PIQUE
7. 1990 இத்தாலி சியாவ் - CIAO
8. 1994 அமெரிக்கா ஸ்ட்ரைக்கர் - STRIKER
9. 1998 ஃப்ரான்ஸ் ஃபூட்டிக்ஸ் - FOOTIX
10. 2002 ஜப்பான்/தென் கொரியா அடோ, காஸ், நிக்- ATO, KAZ, NIK
11. 2006 ஜெர்மனி கோலியோ - GOLEO
12. 2010 தென் ஆப்பிரிக்கா ஸக்குமி - ZAKUMI
13. 2014 ப்ரேசில் ஃபுலேகோ - FULECO
Q21. கால்பந்து உலகக்கோப்பையில், தகுதியின் அடிப்படையில், எத்தனை நாடுகள் பங்கு பெறும்?
32 (முப்பத்திரண்டு).
Q22. கால்பந்து உலகக்கோப்பையில், அதிகம் மற்றும் குறைவான கோல்கள் போடப்பட்ட போட்டிகள் எவை?
" அதிகம் - 2014 - ப்ரேசில் - 171 கோல்கள்.
குறைவு - 1930 - உருகுவே மற்றும் 1934 - இத்தாலி - 70 கோல்கள்."
Q23. கால்பந்து உலகக்கோப்பையில் அதிகமுறை வெற்றி அணிக்காக விளையாடிய வீரர் யார்?
பேலே - ப்ரேசில் - 1958, 1962, 1970 - 18 போட்டிகளில் விளையாடியவர்.
Q24. அதிகமான கால்பந்து உலகக்கோப்பையில் விளையாடியவர்கள் யார்?
"ஐந்து உலகக்கோப்பைகளில் விளையாடியவர்கள் இரண்டு பேர்.
1. ஆண்டோனியோ காராப்ஜல் - மெக்ஸிகோ - 1950லிருந்து 1966 வரை.
2. லோத்தர் மத்தாஸ் - ஜெர்மனி - 1982 முதல் 1998 வரை."
Q25. கால்பந்து உலகக்கோப்பையில் அதிகமானப் போட்டிகளில் விளையாடியவர் யார்?
மிரோஸ்லாவ் க்ளோஸ் - ஜெர்மனி - 29 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
Q26. கால்பந்து உலகக்கோப்பையில் கேப்டனாக அதிக போட்டிகள் விளையாடியவர் யார்?
டியகோ மரோடோனா - அர்ஜெண்டினா - 16 போட்டிகள்.
Q27. கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் விளையாடிய குறைந்த வயது வீரர் யார்?
பேலே - 29.6.1958 இறுதிப்போட்டி. 17 வயது 8 மாதங்கள், 6 நாட்கள் - ஸ்வீடனுக்கு எதிராக.
Q28. கால்பந்து உலகக்கோப்பையில் விளையாடிய குறைந்த வயது வீரர் யார்?
நார்மன் ஒயிட் சைட் - வடக்கு அயர்லாந்து - 17 வயது, 1 மாதம், 10 நாட்கள் - 17.6.1982 அன்று யூகோஸ்லேவியாவுக்கு எதிராக.
Q29. கால்பந்து உலகக்கோப்பையில் விளையாடிய குறைந்த வயது கேப்டன் யார்?
டோனி ம்யோலா - அமெரிக்கா - 10.6.1990 அன்று செக்கோஸ்லோவாக்கியாவிற்கு எதிராக.
Q30. கால்பந்து உலகக்கோப்பையில் விளையாடிய மூத்த வீரர் யார்?
ஃப்ரீத் மாண்ட் ரேகன் - கொலம்பியா - 43 வருடம் 3 நாட்கள் - 26.6.2014 அன்று ஜப்பானுக்கு எதிராக.
Q31. கால்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய மூத்த வீரர் யார்?
டீனோ ஸாஃப் - இத்தாலி - 11.7.1982 அன்று மேற்கு ஜெர்மனிக்கு எதிராக.
Q32. கால்பந்து உலகக்கோப்பையில் விளையாடிய மூத்த வயது கேப்டன் யார்?
பீட்டர் ஷில்டன். இங்கிலாந்து - 40 வயது 9 மாதம் 19 நாட்கள் - 7.7.1990 அன்று இத்தாலிக்கு எதிராக.
Q33. கால்பந்து உலகக்கோப்பையில் முதல் முதலாக முதல் போட்டி ஆடிய மூத்த வீரர் யார்?
டேவிட் ஜேம்ஸ் - இங்கிலாந்து - 18.6.2010 அன்று அல்ஜீரியாவுக்கு எதிராக.
Q34. கால்பந்து உலகக்கோப்பையில் ஒரு வீரர் வெவ்வேறு நாடுகளுக்காக விளையாடியவர்கள் யார்?
" 1. அட்டிலியோ டிமாரியோ - 1930ல் அர்ஜெண்டினாவிற்கும், 1934ல் இத்தாலிக்காகவும் விளையாடினார்.
2. லூயிஸ் மாண்ட்டி - 1930ல் அர்ஜெண்டினாவிற்கும், 1934ல் இத்தாலிக்காகவும் விளையாடினார்.
3. ஃபெரெங்க் புஸ்காஸ் - 1954ல் ஹங்கேரிக்காகவும், 1962ல் ஸ்பெயினுக்காகவும் விளையாடினார்.
4. ஜோஸ் சாண்டாமாரியா - 1954ல் உருகுவேக்காகவும், 1962ல் ஸ்பெயினுக்காகவும் விளையாடினார்.
5. ஜோஸ் அல்டாஃபினி - 1958ல் ப்ரேசிலுக்காகவும், 1962ல் இத்தாலிக்காகவும் விளையாடினார்.
6. ராபர்ட் ஜார் - 1990ல் யூகோஸ்லோவியாவிற்காகவும், 1998, 2002ல் க்ரோஷியாவிற்காகவும் விளையாடினார்.
7. ராபர்ட் ப்ராஸி நெக்கி - 1990ல் யூகோஸ்லோவியாவிற்கும், 1998, 2002ல் க்ரோஷியாவிற்காகவும், விளையாடினார்.
இவர் மட்டுமே உலகக்கோப்பையில் இரண்டு நாடுகளுக்கு விளையாடி இரண்டு நாடுகளுக்காகவும் கோல் அடித்தார்."
Q35. கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர் யார்?
மிராஸ்லாவ் க்ளோஸ் - ஜெர்மனி 16 கோல்கள்.
Q36. ஒரே உலகக்கோப்பையில் அதிகமான கோல்கள் அடித்த கால்பந்து வீரர் யார்?
ஜஸ்ட் ஃபோண்டெய்ன், ப்ரான்ஸ் - 1958 உலகக்கோப்பையில் 13 கோல்களை அடித்தவர்.
Q37. கால்பந்து உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் அதிக கோல்களை அடித்தவர் யார்?
ஒலெக் சலெங்க்கோ - ரஷ்யா - 5 கோல்கள் - 1994ல் கேமரூனுக்கு எதிராக.
Q38. கால்பந்து உலகக்கோப்பையின் (ஒரு) இறுதிப் போட்டியில் அதிக கோல் அடித்த வீரர் யார்?
ஜெஃப் ஹர்ஸ்ட் - இங்கிலாந்து - 3 கோல்கள் - 1966 இறுதிப் போட்டியில் மேற்கு ஜெர்மனிக்கு எதிராக.
Q39. கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளில் முதன் முதலாக ஒரு போட்டியில் 3 கோல்கள் அடித்த (HAT TRICK) முதல் வீரர் யார்?
பெர்ட் பெட்ட நாண்டே - அமெரிக்கா - 1930ல் பாராகுவேவுக்கு எதிராக.
Q40. கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளில் மிகக் குறைந்த நேரத்தில் ஒரு போட்டியில் மூன்று கோல்கள் (HAT TICK) போட்டவர் யார்?
லாஸ்லோ கிஸ் - ஹங்கேரி - 8 நிமிடத்திற்குள் - 1982ல் எல்சல்வேடார் நாட்டுக்கு எதிராக.
Q41. கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் மிகக்குறைந்த வயதில் கோல் அடித்த வீரர் யார்?
"1. பேலே - ப்ரேசில் - 17 வயது - 7 மாதம் - 27 நாட்கள் - 19.6.1958 அன்று வேல்ஸுக்கு எதிராக.
2. உலகக்கோப்பையின் ஒரு போட்டியில் மூன்று கோல்களை (HAT TRICK) அடித்த வீரரும் இவரே. 17 வருடம், 8 மாதம்,1 நாள் - 24.6.1958 - ஃப்ரான்ஸ்.
3. இதேபோல் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்திலும் குறைந்த வயதில் கோல் அடித்த வீரரும் இவரே - 17 வயது 8 மாதம், 6 நாட்கள் - 29.6.1958 - ஸ்வீடனுக்கு எதிராக."
Q42. கால்பந்து உலகக்கோப்பை போட்டி ஆட்டத்தில் அதிக வயதில் கோல் அடித்த வீரர் யார்?
ரோஜர் மில்லா - கேமரூன் - 42 வருடம், 1 மாதம், 8 நாள் - 28.6.1994ல் ரஷ்யாவுக்கு எதிராக.
Q43. கால்பந்து உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் மூத்த வயதில் கோல் அடித்தவர் யார்?
நீலஸ் லைட்ஹோம் - ஸ்வீடன் - 35 வருடம், 8 மாதம், 21 நால் - 29.6.1958 அன்று ப்ரேசிலுக்கு எதிராக.
Q44. கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் அதிக வயதில் - மூன்று கோல்களை ஒரே போட்டியில் (HAT TRICK) அடித்த வீரர் யார்?
டோரே கெல்லர் - ஸ்வீடன் - 33 வருடம், 5 மாதம், 8 நாட்கள் - 12.6.1938 அன்று க்யூபாவுக்கு எதிராக.
Q45. உலகக்கோப்பை கால்பந்து போட்டி ஒன்றில் ஆட்ட தொடக்கத்திலிருந்து மிக வேகமான நேரத்தில் கோல் அடித்த வீரர் யார்?
ஆட்டம் தொடங்கி 11 வினாடிகளில் - ஹசன் சுக்கூர் - துருக்கி வீரர் 2002ல் தென் கொரியாவுக்கு எதிராக கோல் அடித்தார்.
Q46. கால்பந்து உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் மிக வேகமான நேரத்தில் கோல் அடித்தவர் யார்?
ஆட்டம் தொடங்கி 90 வினாடிகளில் - ஜோஹன் நீஸ்கென்ஸ் - நெதர்லாந்து - 1974ல் மேற்கு ஜெர்மனிக்கு எதிராக கோல் அடித்தார்.
Q47. கால்பந்து உலகக்கோப்பையின் ஒரு போட்டியில் அதிக கோல்கள் அடித்த நாட்டு அணி எது?
1982 - ஹங்கேரி - எல் சல்வேடார் நாட்டுக்கு எதிராக 10 கோல்கள் போட்டது.
Q48. கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளில் ஒரு முறைக்கு மேல் மூன்று கோல்கள் (HAT TRICK) அடித்தவர்கள் யார்?
"1. சாண்டர் கோஸ்சிஸ் - ஹங்கேரி - 2 - 1954ல்.
2. ஜஸ்ட் ஃபோண்டெய்ன் - ஃப்ரான்ஸ் - 2 - 1958ல்.
3. கெர்ட் முல்லர் - ஜெர்மனி - 2 - 1970.
4. கேப்ரியல் பட்டிஸ்டுடா - அர்ஜெண்டினா - 2 - 1994, 1998ல் ஒவ்வொரு முறை."
Q49. பெண்கள் கால்பந்து உலகக்கோப்பை நடந்த இடங்கள், வெற்றி தோல்வி அணிகள் யாவை?
எண். வருடம் நடந்த இடம் வெற்றி தோல்வி
1. 1991 சீனா அமெரிக்கா நார்வே
2. 1995 ஸ்வீடன் நார்வே ஜெர்மனி
3. 1999 அமெரிக்கா அமெரிக்கா சீனா
4. 2003 அமெரிக்கா ஜெர்மனி ஸ்வீடன்
5. 2007 சீனா ஜெர்மனி ப்ரேசில்
6. 2011 ஜெர்மனி ஜப்பான் அமெரிக்கா
7. 2015 கேனடா அமெரிக்கா ஜப்பான்
8. 2019 ஃப்ரான்ஸ்
Q50. கால்பந்தில் நடத்தப்படும் இதர சர்வதேச போட்டிகள் யாவை?
"1. ஒலிம்பிக் : OLYMPIC -- நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த போட்டியில், 1896, 1932 தவிர்த்து, அனைத்து போட்டிகளில் கால்பந்து சேர்க்கப்பட்டுள்ளது. பெண்கள் கால்பந்து 1996 முதல் சேர்க்கப்பட்டுள்ளது.
2. ஐரோப்பிய சாம்பியன்ஷிப் : EUROPEAN CHAMPIONSHIP -- 1960லிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் நடத்தப்படும் போட்டி. மிகவும் புகழ் பெற்ற போட்டி.
3. கோப்பா அமெரிக்கா (COPA AMERICA) : 1916 முதல் தென் அமெரிக்க நாடுகளுக்கிடையில் நடத்தப்படும் போட்டி.
4. ஆப்பிரிக்கா கோப்பை (AFRICAN CUP) : 1957 முதல் ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையில் நடத்தப்படும் போட்டி. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை.
5. AFC ஆசிய கோப்பை : ASIA CUP -- 1956 முதல் ஆசிய நாடுகளுக்கு இடையில், நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் போட்டி. ஆஸ்திரேலியாவும் இதில் பங்கேற்கிறது.
6. CONCACAF : 1961 முதல், வட அமெரிக்கா, கரீபிய தீவுகள், மத்திய அமெரிக்க நாடுகளுக்கிடையில் நடத்தப்படும் போட்டி.
7. OFC நாடுகள் கோப்பை (OFC NATIONAS CUP) : 1996 முதல் ஆஸ்திரேலிய (OCEANIA) நாடுகளுக்கிடையில் நடத்தப்படும் போட்டி.
8. SAFF CHAMPIONSHIP : 1993 முதல் ஆப்கானிஸ்தான், வங்காள தேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், ஸ்ரீலங்கா வுக்கிடையில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இதில் 7 முறை இந்தியா வெற்றி பெற்றுள்ளது."
Q51. தொழில் ரீதியான (PROFESSIONAL) கால்பந்துப் போட்டியில் புகழ் பெற்றவை எவை?
" 1. UEFA CHAMPION LEAGUE : 1955 - ஐரோப்பிய நாடுகளின் முன்னணி கால்பந்து சங்கங்களுக்கிடையில் வருடந்தோறும் நடத்தப்படும் போட்டி.
2. UEFA EUROPA LEAGUE : 1971 முதல், தகுதியின் அடிப்படையில் ஐரோப்பிய நாடுகளின் தகுதிபெற்ற கால்பந்து சங்கங்களுக்கிடையில் வருடந்தோறும் நடத்தப்படும் போட்டி.
3. ENGLISH PREMIER LEAGUE : 1992 - இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியிலுள்ள தனியார் கால்பந்து சங்கங்களுக்கிடையில் நட த்தப்படும் வருடாந்திர போட்டி.
4. LA LIGA : 1929 - ஸ்பெயின் நாட்டு தனியார் கால்பந்து சங்கங்களுக்கிடையில் நடத்தப்படும் போட்டி.
5. BUNDES LIGA : 1963 - ஜெர்மனி நாட்டில் தனியார் கால்பந்து சங்கங்களுக்கிடையில் நடத்தப்படும் போட்டி.
6. SERIE A : 1898 - இத்தாலி நாட்டு தனியார் கால்பந்து சங்கங்களுக்கிடையில் நடத்தப்படும் போட்டி.
7. F A CUP : 1871 - உலகின் பழமையான கால்பந்து போட்டி. இங்கிலாந்தில் நடத்தப்படும் போட்டி."
Q52. இந்தியாவில் தொழில் ரீதியான கால்பந்து போட்டி எப்போது தொடங்கியது?
2013ல் இந்தியன் சூப்பர் லீக் என்ற ஒரு போட்டித்தொடர் தொடங்கியது. இதற்கு நிதி உதவி சேவை செய்வது "ஹீரோ" (இரு சக்கர வாகன தொழில்) நிறுவனம் தற்சமயம் உள்ளது. இதில் டெல்லி, வடகிழக்கு, கொல்கத்தா, மும்பை, பூனே, கோவா, சென்னை மற்றும் கேரளா என எட்டு அணிகள் பங்கேற்கின்றது. கொல்கத்தா (2014), சென்னை (2015) இரண்டு அணிகளும் தலா ஒரு தடவை வெற்றி பெற்றுள்ளது.
Q53. உலகக்கோப்பை வரலாற்றில் "GOLDEN HAND GOAL - தங்கக் கை கோல்" நிகழ்வுடன் சம்பந்தப்பட்டவர் யார்?
1986 உலகக்கோப்பை போட்டியில், இங்கிலாந்துக்கு எதிராக, அர்ஜெண்டினா வீரர் டீகோ மரோடோனா போட்ட கோல் இவ்வாறு வர்ணிக்கப்படுகிறது.
Q54. கால்பந்து போட்டியின் வானொலி (RADIO) வர்ணனை எப்போது தொடங்கியது?
1928ல்.
Q55. "வெளி நாட்டு தொழில் ரீதியான கால்பந்து போட்டியில் பங்கேற்ற ஒரே இந்திய வீரர் யார்?"
பைச்சுங் புட்டியா - இங்கிலாந்தின் BURY FC என்ற இரண்டாம் நிலை அணிக்கு விளையாடினார்.
Q56. ப்ரேசில் நாட்டு புகழ்பெற்ற வீரர்களின் பெயரால் உருவாக்கப்பட்ட கேலிச்சித்திரங்கள் (CARTOON) யாவை?
ரொனால்டின் ஹோ "கௌச்சோ - GOUCHO" மற்றும் பேலே "ஸின் ஹோ - ZINHO".
Q57. இத்தாலிய AC MILAN அணிக்காக விளையாடிய இந்திய வம்சாவளி வீரர் யார்?
விகாஸ் டொராஸோ.
Q58. ஆசியாவிலிருந்து உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற முதல் நாடு எது?
தென் கொரியா - 1990.
Q59. எல்லா உலகக்கோப்பைகளிலும் பங்கு பெற்ற ஒரே நாடு எது?
ப்ரேசில்.
Q60. "தவறுதலாக தனது அணியின் கோலுக்குள் கோல் போட்டுக்கொண்ட கொலம்பிய வீரர் பிறகு சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் யார்?"
ஆன்ட்ரெஸ் எஸ்கோபார் - இந்த நிகழ்வு 22.6.1994 அன்று அமெரிக்காவுக்கு எதிராக விளையாடும்போது நிகழ்ந்தது. 2.7.1994 அன்று அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
Q61. உலகக்கோப்பையில் விளையாடத் தகுதிபெற்ற முதல் ஆப்பிரிக்க நாடு எது?
மொராக்கோ - 1970.
Q62. ஜெர்மனியின் ஒரு வீரர், விளையாட்டு வீரராகவும், பயிற்சியாளராகவும் உலகக்கோப்பை வென்றார். அவர் யார்?
ஃப்ரான்ஸ் பெக்கென்பார் (1974 மற்றும் 1990) இவரை பாசத்துடன் "கெய்ஸர்(மாமன்னர்)" என அழைப்பார்கள்.
Q63. உலகப்புகழ்பெற்ற ப்ரேசில் கால்பந்து வீரர் பேலே - வின் முழுப்பெயர் என்ன?
EDSON ARANTES DO NASCIMENTO.
Q64. உலகக்கோப்பையில் விளையாடும் அணி வீரர்களின் மேலாடையில் (பனியன், சட்டை) நட்சத்திரங்கள் போடப்பட்டிருக்கும். அவை எதைக் குறிக்கிறது?
"அந்தந்த நாடு எத்தனை முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது என்பதை குறிக்கும். உதாரணமாக, ப்ரேசில் நாட்டு வீரர்களின் மேலாடையில் 5 நட்சத்திரங்கள் போடப்பட்டிருக்கும். காரணம், அந்த நாடு இதுவரை 5 முறை வென்றுள்ளதை குறிக்கும்."
Q65. உலகக்கோப்பையில் சிறந்த கோல் தடுப்பாளருக்கு - கோல் கீப்பர் - வழங்கப்படும் விருது என்ன?
யாஷின் விருது. லெவ் யாஷின் என்ற ரஷ்ய கோல் தடுப்பாளரின் பெயரால் வழங்கப்படுகிறது. தற்போது "தங்க கையுறை (GOLDEN GLOVE)" எனப்படுகிறது.
Q66. 1994 உலகக்கோப்பையில் விளையாடிய பல்கேரிய வீரர்களின் சிறப்பு அம்சம் என்ன?
அனைத்து வீரர்களின் பெயர்களும் ஆங்கில எழுத்து OV யில் முடிவடைந்த ஒரு வினோதம்.
Q67. இங்கிலாந்து தொழில் ரீதியான ப்ரிமியர் லீக் போட்டியில் விளையாடும் அணிகளுக்கு வேடிக்கையான பெயர்கள் வைப்பது வழக்கத்தில் உள்ளது. அவ்வாறு அழைக்கப்படும் பெயர்கள் என்ன?
எண். அணியின் பெயர் புனைப்பெயர்
1 அர்ஸெனல்- Arsenal GUNNERS
2 ஆஸ்டன் வில்லா-Aston Villa VILLAINS
3 பிர்மிங்ஹாம்-Birmingham BLUES
4 ப்ளாக் பர்ன்-Black Burn ROVERS
5 போல்டன்-Bolton TROTTERS
6 செல்ஸி-Chelsea BLUES
7 டெர்பி-Derby THE RAMS
8 எவர்டன்-Everton TOFFEES
9 ஃபுல் ஹாம்-Fulham COTTAGERS
10 லிவர் பூல்-Liverpool THE REDS
11 மான்செஸ்டர் சிட்டி-Manchester City BLUES
12 மான்செஸ்டர் யுனைடெட்- Manchester United THE RED DEVILS
13 மிடில்ஸ்பரோ - Middlesborough BORO
14 நியூ கேசிள் - New Castle MAG PIES
15 போர்ட்ஸ் மவுத் - Portsmouth POMPEY
16 ரீடிங் - Reading ROYALS
17 சண்டர் லாண்டு - Sunderland BLACK CATS
18 டாட்டன் ஹாம்ஸ் - Tottenhams SPURS
19 வெஸ்ட் ஹாம் - West Ham HAMMERS
20 விகான் - Vigan LATTICS
Q68. உலகக்கோப்பை கால்பந்து நடவடிக்கைகளை நிர்வகிக்கும் உலக சம்மேளனம் எது?
FIFA - INTERNATIONAL FEDERATION OF ASSOCIATION FOOT BALL. 1904ல் தொடங்கப்பட்டு, ஜூரிச் (ZURICH), ஸ்விட்சர்லாந்தை தலைமையாக கொண்டு இயங்குகிறது. இதில் 209 அங்கத்தினர் நாடுகள் உள்ளன. இதன் முக்கிய பணி, ஆண்கள் மற்றும் பெண்கள் உலக க்கோப்பையை நட த்துவதே முக்கிய பணி.
Q69. உலகக் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர்களாக இருந்தவர்கள் யார்?
எண் பெயர் / நாடு வருடம்
1 ராபர்ட் குரின், Robert Guerin, ஃப்ரான்ஸ் 1904 - 1906
2 டேனியல் பர்லி உல்ஃபால், Robert Burley Woolfall இங்கிலாந்து 1906 - 1918
3 கார்னெலிஸ் ஹிர்ஷ்மேன், Cornelius Herschman நெதர்லாந்து 1918 - 1921
4 ஜூல்ஸ் ரிமெட், Jules Rimet, ஃப்ரான்ஸ் 1921 - 1954
5 ரொடால்ஃப் ஸீல்ட்ரேயர்ஸ், Rodolph Seeldrayers பெல்ஜியம் 1954 - 1955
6 ஆர்தர் ட்ரூய்ரி, Arthur Drewry, இங்கிலாந்து 1955 - 1961
7 சர் ஸ்டான்லி ரூஸ், Sir Stanley Rous இங்கிலாந்து 1961 - 1974
8 டாக்டர் ஜோவா ஹாவெலெஞ்ஜ், Dr. Joao Havelenge, ப்ரேசில் 1974 - 1998
9 செப் ப்ளாட்டர், Sepp Blatter, ஸ்விட்சர்லாந்து 1998 - 2015
10 இஸ்லா ஹயாட்டு, Issa Hayatou, கேமரூன் 2015 - 2016
11 கியான்னி இன்ஃபாண்டினோ, Gianni Infantino ஸ்விட்சர்லாந்து 2016 -------
Q70. கால்பந்து விளையாட்டின் இந்திய சம்மேளனம் எது?
அகில இந்திய கால்பந்து சம்மேளனம் - ALL INDIA FOOT BALL FEDERATION - 1937 - புதுடெல்லி.
Q71. இந்திய கால்பந்து அணி எப்போதாவது, உலகக்கோப்பையிலும்,
ஒலிம்பிக்கிலும் விளையாடி உள்ளதா?
1. 1948 - லண்டன் ஒலிம்பிக்ஸ் - ஃபரான்ஸிடம் முதல் ஆட்ட த்திலேயே தோல்வி கண்ட து. காலணிகள் அணியாமல் விளையாடிய இந்திய அணி.
2. 1950 - ப்ரேசில் உலக க்கோப்பையில் விளையாடும் தகுதி பெற்றது. காலணி அணியாமல் விளையாட அனுமதி மறுக்கப்பட்ட்து.
3. 1956 - ஆஸ்திரேலியாவில் நடந்த ஒலிம்பிக்கில் நான் காவது இடம் பெற்றது.
4. 1951, 1962 - ஆசிய போட்டிகளில் தங்க பதக்கம்.
Q72. சர்வதேச போட்டிகளில் கோல் அடித்த முதல் இந்திய வீரர் யார்?
சாரங்கபாணி ராமன் (மைசூர்) - 1948 லண்டன் ஒலிம்பிக்கில் ஃப்ரான்ஸுக்கு எதிராக ஒரு கோல் அடித்தார்.
Q73. இந்தியாவின் கால்பந்து தலை நகரம் எது?
கொல்கத்தா - இங்கு பல கால்பந்து சங்கங்கள் இயங்குகின்றன. அவற்றுள் மிகவும் புகழ் பெற்றவை மோகன் பேகான், ஈஸ்ட் பெங்கால், மொகம்மடன் ஸ்போர்டிங் போன்றவை. இங்குள்ள கால்பந்து நடவடிக்கைகளை "INDIAN FOOT BALL ASSOCIATION" என்ற அமைப்பு (1893ல் தொடங்கப்பட்டது) மேலாண்மை செய்கிறது.
Q74. இந்தியாவின் மற்றொரு மாநிலமும் கால்பந்து விளையாட்டிற்கு புகழ் பெற்றது. அது எது?
"கோவா - இதன், சர்ச்சில் ப்ரதர்ஸ், டெம்போ சேஸா, சல்காவ்ந்கர், வாஸ்கோ போன்றவை புகழ்பெற்ற அணிகள். இவை தவிர, கேரளா, தமிழ் நாடு, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் கால்பந்து விளையாட்டு புகழ்பெற்றது."
Q75. இந்தியாவில் நடத்தப்படும் புகழ்பெற்ற கால்பந்து போட்டிகள் யாவை?
" 1. IFA SHIELD : கொல்கத்தாவில் 1893 முதல், அங்குள்ள சங்கங்களுக்கிடையில் நடத்தப்படும் போட்டி.
2. SANTHOSH TROPHY : 1941 முதல் மாகாணங்களுக்கு இடையில் நட த்தப்படும் போட்டி. இந்த கோப்பை, சந்தோஷ் (தற்போது, வங்காள தேசம்) பகுதியின் மகா மன்னராக இருந்த சர் மன்மத ராய் சௌத்ரி என்பவர் நினைவாக நட த்தப்படுகிறது.
3. NATIONAL FOOT BALL LEAGUE : 1996 முதல் இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் முன்னணி சங்கங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட போட்டி. 207ல் இது I - LEAGUE என்ற பெயர் மாற்றம் பெற்று நடக்கிறது."
Q76. உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரர்களான பேலே (ப்ரேசில்), பாபி மூர் (இங்கிலாந்து) ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டேலோன் சேர்த்து ஒரு ஆங்கில திரைப்படம் எடுக்கப்பட்டது. அது என்ன?
ESCAPE TO VICTORY.
Q77. முன்னாள் கால்பந்து உலகக்கோப்பையான ஜூல்ஸ் ரிமெட் கோப்பையின் வடிவம் எதைப் போன்றது?
"NIKE - நைக்" - சரித்திர காலத்து கிரேக்க பெண் தெய்வம் - வெற்றியின் தெய்வம்.
Q78. 6.2.1958 அன்று இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து வீரர்கள் பலர் ஒரு விமான விபத்தில் உயிரிழந்தனர். அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
BUSBY TRAGEDY - மேற்கு ஜெர்மனியின் முனிச் விமான நிலையத்தில் ஏற்பட்டது.
Q79. கால்பந்து உலகக் கோப்பைக்கு நம் நாட்டின் எந்த நகரில் பந்துகள் தயாரிக்கப்படுகின்றன?
ஜலந்தர், பஞ்சாப்.
Q80. கால்பந்து உலகக்கோப்பையில் வழங்கப்படும் விருதுகள் யாவை?
"1. தங்கப்பந்து (GOLDEN BALL) : உலகக் கோப்பையின் மொத்த போட்டிகளின் சிறந்த வீரர் - 1982 முதல்.
2. தங்க க்காலனி (GOLDEN BOOT) : உலகக் கோப்பையில் அதிகமான கோல் போட்டவருக்கு வழங்கப்படுகிறது - 1982 முதல்.
3. தங்கக்கையுறை (GOLDEN GLOVE) : 1994 முதல் உலகக் கோப்பையின் சிறந்த கோல் தடுப்பாளருக்கு வழங்கப்படுகிறது.
4. சிறந்த இளைய வீரர் (BEST YOUNG PLAYER) : 21 வயதுக்கு கீழான, உலகக் கோப்பையின் சிறந்த வீரருக்கு, 2006 முதல் வழங்கப்படுகிறது.
5. FIFA நேர்மை விருது (FAIR PLAY TROPHY) : உலகக் கோப்பையில், சீரிய, சிறந்த மற்றும் நேர்மையான முறையில் விளையாடிய அணிக்கு 1970 முதல் வழங்கப்படுகிறது. இந்த விருதை ப்ரேசில் அணி நான்கு முறை வென்றிருப்பது குறிப்பிட த்தக்கது."
Q81. உலகக்கோப்பை விருதுகளை தவிர்த்து கால்பந்து வீரர்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருது எது?
FIFA BALLON d'OR : இந்த விருது 1956 முதல் ஃப்ரான்ஸ் நாட்டு பத்திரிகை (FRANCE FOOT BALL) யால், ஒவ்வொரு வருடமும், ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்பட்டு வந்தது. இதற்கு இணையாக உலக கால்பந்து சம்மேளனமும் சிறந்த வீரர் விருது வழங்கி வந்தது. இது, பல நேரங்களில் இரண்டு விருதும் ஒரே வீரருக்கு கிடைத்தது. அதனால் இரண்டு நிர்வாகங்களும் இணைந்து, FIFA BALLON d'OR என்ற ஒரே விருதை வழங்குவதாக முடிவு செய்து 2010 முதல் வழங்கி வருகிறது. இந்த விருதை அர்ஜெண்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி 4 முறை (2010, 11, 12, 14) பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.