Khub.info Learn TNPSC exam and online pratice

ஜிம்னாஸ்டிக்ஸ் - GYMNASTICS

Q1. ஜிம்னாஸ்டிக்ஸ் என்பது என்ன?
இது ஒரு தனி நபர் போட்டி. உடல் பயிற்சிகள் மூலம், தசைகளை வலுவாக்கி, வேகத்துடன், பிரத்தியேக உபகரணங்களின் உதவியுடன் பல சாகசங்களை புரிந்து காட்டுவது. இந்த சாகசங்களை தரை அளவிலும், சில உயர உபகரணங்களிலும் செய்து காட்ட வேண்டும்.
Q2. ஜிம்னாஸ்டிக்ஸ் எப்போது முதல் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளது?
1896 ஏதென்ஸ் ஒலிம்பிக்ஸ் முதல்.
Q3. ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் என்னென்ன பொது வகைகள் உள்ளது?
"1. ARTISTIC GYMNASTICS -- கலை நயத்துடன் உடற் பயிற்சி செய்வது
2. RHYTHMIC GYMNASTICS -- இசைக்கேற்ப உடற் பயிற்சி செய்வது
3. SPORTS AEROBICS
4. TRAMPOLINING
5. GENERAL GYMNASTICS
6. POWER TUMBLING"
Q4. ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ள ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் யாவை?
1. ARTISTIC,
2. RHYTHMIC,
3. TRAMPOLINING
இவை 2000 ஒலிம்பிக்ஸ் முதல் சேர்க்கப்பட்டுள்ளது.
Q5. ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளை நிர்வகிக்கும் உலக அமைப்பு எது?
உலக ஜிம்னாஸ்டிக்ஸ் சம்மேளனம் - INTERNATIONAL GYMNASTICS FEDERATION - 1883 - லாசென், ஸ்விட்சர்லாந்தில் தலைமையகம் உள்ளது. உலகின் பழமையான விளையாட்டு உலக சம்மேளனம். 128 நாடுகள் அங்கத்தினர்களாக உள்ளன.
Q6. ARTISTIC GYMNASTICS என்பது என்ன?
"பொது மக்களின் கவனத்தை ஈர்க்கும் மற்றும் மிகவும் பாராட்டப்படும் ஜிம்னாஸ்டிக்ஸ் -ன் ஒரு பகுதி. இதில் வீரர்கள் தரை நிலை மற்றும் உயரமான உபகரணங்கள் மூலம் தங்கள் உடற்பயிற்சி சாதனைகளை செய்து காண்பிப்பார்கள். அவை,
பெண்கள் : VAULT, UNEVEN BARS, BALANCE BEAMS, FLOOR EXERCISES.
ஆண்கள் : FLOOR EXERCISES, POMMEL HORSE, STILL RINGS, VAULT, PARALLEL BARS, HORIZONTAL BARS."
Q7. RHYTHMIC ஜிம்னாஸ்டிக்ஸ் என்பது என்ன?
ஒலிக்கப்படும் இசைக்கு தகுந்தவாறு உடற்பயிற்சிகள் விதவிதமான முறையில் செய்து காட்டுவது. இந்த பயிற்சிகள் பார்வையாளர்கள் மற்றும் நடுவர்களுக்கு கண்கவர் வண்ணம் அமைவதற்காக வீரர்கள், பல வண்ணங்களில் பந்துகள், வளையங்கள், ரிப்பன் போன்ற உபகரணங்களையும் பயன்படுத்துவர். பொதுவாக பெண்களால் செய்யப்படும் இந்த உடற்பயிற்சி கலையில், தற்போது ஆண்களும் பங்கு பெறுகிறார்கள்.
Q8. TROMPOLINING என்பது எவ்வகை ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டு?
"இதில் இருபாலரும் பங்கு பெறுவர். உயரமான நான்கு ஸ்டீல் கொம்புகளில் ஏறக்குறைய சதுர வடிவில் உள்ள ரப்பர்/ஃபைபர் ஷீட்டுகள், முனைகளில் (SPRING) ஸ்பிரிங்குகளில் உதவியுடன் கட்டப்பட்டு இருக்கும். இதில் வீரர்கள் ஏறி குதித்து பல சாகசங்களை புரிவர். குதிக்கும் போது, ஸ்பிரிங்குகளின் உந்துதல் சக்தியால், வீரர்கள் உயர உயர செல்வதும், சாகசங்கள் புரிவதும் எளிதாகிறாது. இதில் இரண்டு பிரிவு உண்டு.
1. SYNCHRONISED (இசைக்கேற்ப குதிப்பது),
2. DOUBLE MINI."
Q9. ஜிம்னாஸ்டிக்ஸில் பயன்படுத்தப்படும் சில உபகரணங்கள் :
"1. FLOOR : 40 அடிக்கு 40 அடி தரை - மிருதுவான கம்பளம், நுரைப்பஞ்சு (SPONGE ) ஆகியவைகளால் பரவப்பட்டு, வீர ர்கள் உடற்பயிற்சி சாகசங்கள் நடத்தி கீழே விழும்போது காயப்படாமல் இருக்க ஏதுவாக அமைக்கப்பட்டிருக்கும்.
2. VAULT : 3 அடி நீளம், 2 அடி அகலத்தில், நாக்கு போன்ற வடிவத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் ஒரு மேடை. இதை எதிர் நோக்கி, சுமார் 25 மீ நீளத்தில் ஒரு தளம் இருக்கும். இந்த தளத்தில் வீர ர்கள் ஓடி வந்து, மேடையின் முன் போடப்பட்டிருக்கும் சிறிய உந்து மேடையில் (SPRING BOARD ) கால் பதித்து, உயரப் பறந்து, அந்த மேடையில் கை பதித்து, அதிலிருந்து உயரப் பறந்து, மேடையின் பின்புறம் காலால் தரை இறாங்க வேண்டும். இந்த இரு நிலை துள்ளல்களுக்கிடையில் உடல் ரீதியான சாகசங்கள் நடத்தி காட்டுவர்.
3. UNEVEN BARS : கிடை நிலையில், ஒன்று சிறிய உயரம், அதன்பின், சற்றே உயரத்தில், இரண்டு உருளைக் கொம்புகள் பொருத்தப்பட்டிருக்கும். இதன் மீது, உடல் ரீதியான் பயிற்சி சாகசங்கள் புரிவது.
4. BALANCE BEAM : 4 அடி உயரத்தில், 16 அடி நீளத்தில், 4"" அங்குல அகலம் கொண்ட ஒரு மெத்தை பதித்த ஒரு மேடை இருக்கும். வீரர்கள் ஓடிவந்து உந்து பலகையின் உதவியால் உயரப்பறந்து, அதன் மீது கால் பதித்திறங்கி, அதன் மேலேயே பல சாகசங்களை புரிந்து, பிறகு தரை இறங்குவது (விதிமுறைகளுக்குட்பட்டு) இது பெண்களுக்கு மட்டும்.
5. POMMEL HORSE : 3.77 அடி உயரம், 5.02/5.09 அடி நீளம், 14 அங்குல அகலம் கொண்ட ஒரு மெத்தை மேடை, நடுவில், 16 அங்குல இடைவெளியில் இரண்டு கைப்பிடிகள். இதன் மீது ஒரு கை / இரு கைகளை ஊன்றி, காலால் உடலை சுழற்றி பலவிதமான சாகசங்களை புரிவது மிகவும் பயிற்சி தேவை.
6. RINGS : 8 அடி உயர இரும்பு உருளையில் தொங்கவிடப்பட்டுள்ள வளையங்களை பிடித்துக்கொண்டு, ஊஞ்சலாடி பல சாகசங்கள் புரிவது.
7. PARALLEL BARS : தரையிலிருந்து 6 ½ அடி உயரத்தில் இணையாக இரண்டு இரும்பு கொம்புகள், ஒரு சராசரி முதுகு தோள்பட்டை அகல இடைவெளியில் அமைக்கப்பட்டிருக்கும். இதில் வீர ர் ஏறி தனது உடற்பயிற்சி சாகசங்களை புரிய வேண்டும்.
8. HIGH BAR : தரையிலிருந்து 8 அடி உயரத்தில் கிடை மட்ட த்தில் 1""அங்குல அகல உருளை ஸ்டீல் கொம்பு பொருத்தப்பட்டிருக்கும். இதை பிடித்துக் கொண்டு சாகசங்களை புரிந்து விட்டு தரை இறங்கும்போது மக்கள்/நடுவர்கள் கவனத்தை கவரும் வகையில் நேர்த்தியான முறையில், இரு கால்களையும், நிலை தடுமாறாமல், தரையில் ஊன்றி நிற்பது."
Q10. ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் வெற்றி தோல்வி எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?
புள்ளிகள் அடிப்படையில் - (அதிக பட்சம் 10) முடிவு செய்யப்படுகிறது.
ஆதாரம் - CODE OF POINTS என்ற கையேடு.
Q11. ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் முதல்முதலாக 10/10 எடுத்த ஒலிம்பிக் போட்டியாளர் யார்?
நடியா கொமனேகி (பெண்) - ரொமானியா - 1976 - மான்ட் ரீல், கேனடா ஒலிம்பிக் - தரை உடற்பயிற்சி சாகசங்கள்.
இவர் 7 வெவ்வேறு போட்டிகளில் 7 முறை இச்சாதனை புரிந்துள்ளார்.
Q12. ஜிம்னாஸ்டிக்ஸில் ஆண், பெண் வீரர்கள் அணியும் உடைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
"பெண்கள் - LEOTARD
ஆண்கள் - SINGLET"
Q13. ஜிம்னாஸ்டிக்ஸில் 10/10 பெற்ற முதல் ஆண் வீரர் யார்?
அலெக்ஸாண்டர் தித்யாடின் - ஐக்கிய ரஷ்யா - 1980ல் மாஸ்கோ ஒலிம்பிக்கில் பெற்றார்.
Q14. ஜிம்னாஸ்டிக்ஸில் அதிகமான வீரர்களையும், பதக்கங்களையும் பெற்றுள்ள நாடுகள் எவை?
  1. ரஷ்யா,
  2. ரொமானியா,
  3. சீனா,
  4. ஜப்பான்,
  5. உக்ரெய்ன்,
  6. அமெரிக்கா
.