Khub.info Learn TNPSC exam and online pratice

கோல்ஃப் - GOLF

Q1. கோல்ஃப் என்பது என்ன விளையாட்டு?
"பொதுவாக ஒரு தனி மனித விளையாட்டு. வெகு குறைவான நேரங்களில் அணியாக வெளி மைதானத்தில் விளையாடப்படுகிறது.
ஒரு சிறிய பந்தை, ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து (TEEING GROUND), தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு குழியில், இரும்பால் ஆன ஒரு நீண்ட மட்டை (CLUB)யின் உதவியால், ஒன்று முதல் மூன்று முயற்சியில், தள்ளுவதே இந்த விளையாட்டு. இடையில், மணல் நிறைந்த பள்ளம், நீர் நிரம்பிய சிறிய குளம், புதர் போன்ற தடங்கல்களும் (Handicap) இருக்கும். பொதுவாக மைதானம் புல்வெளிகள் நிறைந்த அழகான சூழ் நிலையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்."
Q2. கோல்ஃப் விளையாடும் மைதானம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
"COURSE - மிகப்பெரிய பரப்பளவு கொண்டதாக இருக்கும். இதில் மணல் நிறைந்த பள்ளங்கள், சிறிய நீர் குளங்கள், புல் புதர்கள் போன்றவை அடங்கும். பொதுவாக 5.5 கி.மீ. தூரத்தில் 18 குழிகள் (பந்தை போட) கொண்டதாக இருக்கும்.
போட்டிகள் பொதுவாக முன்பே முடிவு செய்யப்பட்ட குழிகளின் எண்ணிக்கையில் நடத்தப்படும்."
Q3. கோல்ஃப் விளையாட்டு முதலில் எங்கு விளையாடப்பட்டது?
ஸ்காட்லாந்து. 15வது நூற்றாண்டில்.
Q4. கிண்ணம் (CUP) என்பது என்ன?
உலோகம் அல்லது ப்ளாஸ்டிக்கால் செய்யப்பட்டு, தரை மட்டத்துக்கு புதைக்கப்பட்டிருக்கும். 4.25 அகலம் மற்றும் 3.94 அங்குலம் உயரம். பந்தை இதற்குள் தள்ளுவது ஒரு குழி என கணக்கிடப்படும்.
Q5. கோல்ஃப் மைதானத்தில் "பசுமை - GREEN" என குறிப்பிடப்படும் பகுதி எது?
ஒரு குழி - HOLE அமைக்கப்பட்டுள்ள இடத்தைச் சுற்றி சரிவு நிலையில் (SLOPE), சமமாக வெட்டப்பட்ட புல்வெளியைக் கொண்ட ஒரு பகுதி. பொதுவாக இதில் தடங்கல்கள் - HAZARDS இருக்காது.
Q6. கோல்ஃப் மைதானத்தில் "ரஃப் - ROUGH" என அழைக்கப்படும் பகுதி எது?
கரடுமுரடான, புற்கள் அடர்ந்த உயர்ந்த பகுதி.
Q7. கோல்ஃப் பந்தை அடிக்க உதவும் ஒரு உபகரணம் - CLUB. அதைப் பற்றி கூறவும்?
34 முதல் 48 அங்குல மெல்லிய இரும்பினால் ஆன மட்டை. இதன் முனை சற்றே வளைக்கப்பட்டு, பலவித வடிவங்களில், பல விதி நிலைகளில் பயன்படுத்த ஏதுவாக, அமைக்கப்பட்டிருக்கும். இந்த முனைக்கு CLUB HEAD என பெயர். இந்த CLUB HEAD வகையைப் பொருத்து பலவகை பெயர்கள் உண்டு. இதில் சுமார் 14 வகை உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சமயங்களில் பல்வேறு பயன்களுக்கு (பந்து இருக்கும் இடத்தைப் பொருத்து) பயன்படும்.
Q8. கோல்ஃப் பந்தை பற்றி கூறுக.
42.67 மி.மீ விட்டமும், 45.93 கிராம் எடையும் கொண்ட வெள்ளை நிறப் பந்து. இதன் வெளிப் பரப்பில் பந்து முழுவதும், சிறு குழிவுகளுக்கும். இந்த குழிகள் காற்றியக்கவியல் (AERODYNAMICS) சீராக கிடைப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Q9. கோல்ஃப் விளையாட்டில் "TEE" என அழைக்கப்படுவது என்ன?
"கோல்ஃப் விளையாட்டை துவங்கி வைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடம் TEEING GROUND எனப்படும்.
TEE என்பது ஆங்கில எழுத்து T வடிவில் அமைக்கப்பட்ட ஒரு உபகரணம். இதை தரையில் ஊன்றி, அதன்மேல் வைத்து, CLUB ஆல் பந்தை அடித்து, ஆட்டத்தை துவக்குவார்கள். இந்த முறை, ஒவ்வொரு குழிக்காக ஆட்டத்தை துவக்க மட்டுமே பயன்படுத்தப்படும். TEE-ன் மீது பந்து வைக்கப்படுவதால், பந்து தரை மட்டத்தில் இருந்து சற்று உயரத்தில் இருக்கும்."
Q10. மணல் நிரம்பிய பள்ளத் தடங்கல் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
BUNKERS - இதில் விழுந்த பந்தை, வெளியில் உள்ள இலக்கை நோக்கி அடிக்க SAND WEDGE CLUB பயன்படுத்தப்படும்.
Q11. தடங்கல் பகுதியில் விழுந்த பந்தை அடித்த வெளியெடுப்பதற்கான முக்கிய நிபந்தனை யாது?
வீரர் தன்னுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட CLUB (மட்டை) ஐ எக்காரணம் கொண்டும், தடங்கல் பகுதியில், பயிற்சி முறையிலும் கூட, தரையில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
Q12. கோல்ஃப் விளையாட்டு எவ்வாறு விளையாடப்படுகிறது?
பந்தை பகுதியிலிருந்து அடித்து, அது விழுந்துள்ள இடத்திலிருந்து (தடங்கல் பகுதியாக இருந்தாலும்) குழி அமைந்துள்ள பசுமை (GREEN) பகுதிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்யும்போது, பந்து பசுமை பகுதியிலோ அல்லது தடங்கல் பகுதியிலோ (சில சமயங்களில் நேராக குழியிலோ) விழலாம். அவ்வாறு விழுந்த பந்தை, பசுமை பகுதியின் சரிவு, காற்றின் வேகம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு பந்தை தகுந்த வேகத்தில் தட்டி குழியில் போடுவார்கள். இவ்வாறு போடுவது PUTT என அழைப்பார்கள்.
Q13. கோல்ஃப் விளையாட்டில் புள்ளிகள் கணக்கிடும் முறை என்ன?
"PAR என்ற முறை. PAR என்பது ஒரு பந்தை நிர்ணயிக்கப்பட்ட குழியில் தள்ள, முன் கூட்டியே முடிவு செய்யப்படும் முயற்சிகளின் எண்ணிக்கை (PRE - DETERMINED NUMBER OF STROKES). பொதுவாக ஒவ்வொரு குழிக்கும் 3 PAR கள் என்பது வழக்கம். சில நேரங்களில், TEE பகுதியிலிருந்து, ஒரு குழியின் தூரம் பொருத்து, 4 PAR, 5 PAR என முடிவு செய்யப்படும். இவ்வாறு முடிவு செய்யப்படும் PAR களின் அதிகபட்ச தூரம் -
3 PAR கள் - 250 கஜம் / 228.6 மீ.
4 PAR கள் - 475 கஜம் / 434.34 மீ.
5 PAR கள் - 600 கஜம் / 548.64 மீ.
பொதுவாக 72 PAR மதிப்புக்கு மைதானங்கள் வடிவமைக்கப்படுகிறது.
3 PAR களில் 4 குழிகள் - 12 PAR கள்
4 PAR களில் 10 குழிகள் - 40 PAR கள்
5 PAR களில் 4 குழிகள் - 20 PAR கள்
மொத்தம் 72 PAR கள்.
உதாரணமாக முதல் சுற்றுக்கு, 18 குழிகளுக்கு 72 PAR கள் ஒதுக்கப்பட்டு, அதை அவர் 70 PAR களில் முடித்துவிட்டால் - 2 / TWO UNDER PAR என அழைப்பார்கள். அதே சமயம் கூடுதலான முயற்சிகள் - 74 களில் முடித்தால், +2 / TWO OVER PAR எனவும் கணக்கிடுவார்கள். ஆகவே, குறைந்த முயற்சிகளில் (PAR களில்) எல்லா சுற்றுகளையும் முடித்தவரே அதாவது அதிகமான UNDER PAR பெற்றவர், வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்."
Q14. கோல்ஃப் விளையாட்டில் பந்தை குழியில் போடும் முயற்சிகளுக்கு, கூடுதலோ, குறைவோ, அல்லது சமநிலையோ, ஒவ்வொன்றுக்கும் பெயர் உண்டு. அவை யாவை?
"1. PAR : சம நிலை. அதாவது பந்தை ஒரு குழியில் போடுவதற்கு 3 கள் கொடுக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், ஒரு வீரர் பந்தை 3 PAR களில் குழியில் போடுவது சம நிலையாகும்.
2. BIRDIE : கொடுக்கப்பட்ட PAR களை விட 1 PAR குறைவாகவே பந்தை குழியில் தள்ளுவது. இது அடிக்கடி நிகழக் கூடியது - அதாவது - 1.
3. EAGLE : கொடுக்கப்பட்ட PAR களை விட 2 PAR குறைவாகவே பந்தை குழியில் போடுவது. இது பொதுவாக 5 PAR களை கொண்ட குழியில் அதிகமாக நிகழும்.
4. ALBATROSS : கொடுக்கப்பட்ட PAR களை விட 3 PAR கள் குறைவாகவே பந்தை குழியில் தள்ளுவது. இந்த நிகழ்வு மிகவும் அபரிமிதமானது. இது 5 PAR குழியில் மட்டுமே ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.
5. DOUBLE EAGLE : நான்கு PAR குழியில் ஒரே PAR ல் பந்தை குழியில் போடுவது. அதாவது 3 PAR கள். இந்த நிகழ்வும் மிகவும் அபரிமிதமானது.
6. CONDOR : இதை TRIPLE EAGLE என்றும் அழைப்பர். 5 PAR குழியில் ஒரே PAR ல் பந்தை குழியில் போடுவது - அதாவது - 4. இந்த நிகழ்வு மிக மிக அபரிமிதமானது.
7. OSTRICH : 6 PAR குழியில் ஒரே PAR ல் பந்தை குழியில் போடுவது. குழியின் தூரத்தை பார்க்கும் போது இந்த நிகழ்வு சாத்தியமில்லை. CONDOR மற்றும் OSTRICH ஏற்பட்டதாக இதுவரை பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிட த்தக்கது."
Q15. கோல்ஃப் விளையாட்டில் BOGEY என அழைக்கப்படுவது என்ன?
பந்தை ஒரு குழியில் தள்ளுவதற்கு கொடுக்கப்பட்டுள்ள PAR களை (முயற்சிகளை) விட அதிகமான PAR கள் எடுத்துக் கொள்வது என அழைக்கப்படுகிறது. எடுக்கப்படும் அதிகமான PAR களைப் பொருத்து BOGEY, DOUBLE BOGEY, TRIPLE BOGEY என வரிசைக் கிரமத்தில் அழைப்பர்.
Q16. கோல்ஃப் விளையாட்டில் CADDIE என அழைக்கப்படுவது என்ன?
கோல்ஃப் விளையாடும் வீரருக்கு உதவியாக அவருடைய உபகரணங்களை எடுத்துச் செல்வது, மற்றும் அனுபவ ரீதியாக ஆலோசனைகள் வழங்கும் உதவியாளர்.
Q17. கோல்ஃப் விளையாட்டில், தடங்கலில் (மணல், பள்ளம், சிறிய குளம், புதர்) விழுந்த பந்தை விளையாடும் வீரர் அனுசரிக்க வேண்டிய விதி முறைகள் என்ன?
"1. தடங்கலில் விழுந்த பந்தை ஆடுவதற்கு முன், அந்த இடத்தில் பந்தை அடிக்க உதவும் மட்டையை (CLUB) தரையில் ஊணக்கூடாது.
2. பந்து எந்த இடத்தில் விழுந்துள்ளதோ, அதே நிலையில் விளையாட வேண்டும்.
3. பந்து அடிக்க முடியாத நிலையில், பந்தை கையில் எடுத்து, எடுத்த இடத்தில் இருந்து, இரண்டு மட்டை தூரத்துக்குள் கீழே போட்டு, அது உருண்டு நிற்கும் இடத்திலிருந்து விளையாட்டைத் தொடரலாம். ஆனால் இதற்கு ஒரு PAR தண்டனை வழங்கப்படும்.
4. பந்து தொலைந்து போனால், அல்லது எடுக்க முடியாத நிலையானால், வேறு மாற்று பந்து அந்த இடத்தில் போடப்பட்டு விளையாட்டு தொடரும். இதற்கும் ஒரு தண்டனை PAR உண்டு."
Q18. கோல்ஃப் விளையாட்டில் நடத்தப்படும் போட்டிகள் யாவை?
" கோல்ஃப் விளையாட்டு பொதுவாக தொழில் ரீதியான போட்டிகள் (PROFESSIONAL) தான். அவற்றுள் சில முக்கியமானவைகள் :
1. THE MASTERS : 1934 முதல், அமெரிக்காவின் அகஸ்டா, ஜியார்ஜியா மாகாணத்தில் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி தொடங்க காரணமாக இருந்தவர்கள் - கிளிஃபோர்டு ராபர்ட்ஸ் மற்றும் பாபி ஜோன்ஸ் ஆகியோர். இதில் வெற்றி பெறுபவருக்கு - GREEN JACKET பச்சை நிற மேலாடை (கோட்) அளிப்பது ஒரு வழக்கம். ஜேக் நிக்லஸ் என்பவர் இந்த போட்டியை அதிகமுறை (ஆறு) வென்றுள்ளார். வருடந்தோறும் நடத்தப்படும் போட்டி.
2. US OPEN : 1895ல் தொடங்கி வருடந்தோறும் நடத்தப்படும் அமெரிக்கப் போட்டி.
3. PGA CHAMPIONSHIP : 1916 முதல் வருடந்தோறும் அமெரிக்காவில் நடத்தப்படும் போட்டி.
4. KRAFT NABISCO CHAMPIONSHIP : ANA INSPIRATION என்ற பெயரில் பெண்களுக்காக நடத்தப்படும் வருடாந்திர போட்டி - 1972 முதல்.
5. US WOMEN'S OPEN : 1946 முதல் பெண்களுக்காக வருடந்தோறும் நடத்தப்படும் போட்டி.
6. LPGA CHAMPIONSHIP : 1955 முதல் பெண்களுக்காக நடத்தப்படும் வருடாந்திர போட்டி.
இவை தவிர பல நாடுகளில் தொழில் ரீதியானப் போட்டிகள் நடத்தப்படுகின்றன."
Q19. உலகின் பழமையான கோல்ஃப் மைதானம் எது?
OLD LINKS மைதானம் - மஸ்ஸெல்பர்க் - ஸ்காட்லாந்து - 1672ல் உருவாக்கப்பட்ட து.
Q20. உலகின் உயரமான கோல்ஃப் மைதானம் எது?
லா பாஸ் - LA PAZ - மைதானம், பெரு - 14335 அடி உயரம்.
Q21. ஒரு கோல்ஃப் வீரர், ஒரு போட்டிக்கு எத்தனை மட்டைகள் - CLUBS எடுத்துச் செல்லலாம்?
14
Q22. ஒரு தவறான முறையில் பந்தை அடித்ததற்காக, மீண்டும் பந்தை அடிப்பது (அதே இடத்திலிருந்து) எவ்வாறு அழைக்கப்படுகிறது?
MULLIGAN
Q23. நிலவில் கோல்ஃப் விளையாடிய மனிதர் யார்?
ஆலன் ஷெப்பேர்டு.
Q24. கோல்ஃப் விளையாட்டில் - GREEM JACKET - பச்சை கோட் - பெறுவது ஒரு மிகப்பெரிய மரியாதை என கருதப்படுகிறது? எந்த போட்டியில்?
AGUSTA MASTERS, அமெரிக்கா.
Q25. கோல்ஃப் விளையாட்டின் புள்ளிகள் கணக்கு பதிவுக்கு என்ன பெயர்?
STABLE FORD SCORING SYSTEM.
Q26. "GOLDEN BEAR - தங்கக்கரடி" என அழைக்கப்படும் உலகப்புகழ் பெற்ற கோல்ஃப் வீரர் யார்?
ஜேக் நிக்கலஸ் - அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர்.
Q27. கோல்ஃப் விளையாட உதவும் மட்டைகள் - CLUBS பெயர்கள் :
1. IRON, 2. WEDGE, 3. HYBRID, 4. PUTTER, 5. CHIPPER, 6. PITCHING WEDGE, 7. GAP WEDGE, 8. SAND WEDGE, 9. LOB WEDGE - இவற்றுக்குள் இன்னும் சில பிரிவுகள் உள்ளன.