Khub.info Learn TNPSC exam and online pratice

கைப்பந்து - HAND BALL

Q1. கைப்பந்து என்பது என்ன விளையாட்டு?
கால்பந்தைப் போலவே, கைப்பந்து. கைகளால் மட்டுமே பந்தை எடுத்துச் சென்று, சக வீர்ர்களின் உதவியுடன் கோல் போடுவதே இந்த விளையாட்டு. ஆண், பெண் இருபாலரும் ஆடக்கூடிய ஒரு அணி விளையாட்டு.
Q2. கைப்பந்து விளையாட்டு மைதானம் அளவு என்ன?
40 x 20 மீ செவ்வக தரை (மரம் மற்றும் சிந்தெடிக் ஃபைபர்) - இதன் கோல் 2 மீ உயரமும், 3 மீ அகலமும் கொண்டது.
Q3. கைப்பந்து முதன்முதலில் எங்கு விளையாடப்பட்ட து?
19வது நூற்றாண்டுகளில் டென்மார்க், செக், ஸ்லோவாகியா,உக்ரைன், ஜெர்மனி நாடுகளில் விளையாடப்பட்டு, மேம்பாடு அடைந்து, 1906ல் விதிமுறைகள் தொடங்கி, 1917ல் ஒரு வடிவம் பெற்று, 1928ல் முழுமையான விதிமுறைகள் அமலாயிற்று.
Q4. சர்வதேச கைப்பந்து சம்மேளனம் எப்போது உருவாயிற்று?
11.7.1946ல் இதன் தலைமையகம் பஸேல், ஸ்விட்சர்லாந்தில் உள்ளது.
Q5. கைப்பந்து அணியில் எத்தனை பேர் பங்கு பெறுவார்கள்?
6 வீர ர்கள் + 1 கோல் தடுப்பாளர் என ஏழு பேர் கொண்ட அணி.
Q6. கைப்பந்து விளையாட்டின் நேரம் எவ்வளவு?
30 நிமிடம் கொண்ட இரண்டு பகுதிகள் - இடையில் 10 முதல் 15 நிமிட இடைவெளி.
Q7. கைப்பந்து விளையாட்டில் எத்தனை நடுவர்கள் இருப்பார்கள்?
இருவர். இரண்டு அரைப் பகுதிகளுக்கு ஒருவர்.
Q8. கைப்பந்து எவ்வாறு விளையாடப்படுகிறது?
"1. பந்தை ஒரு வீரர் 3 வினாடிகள் மட்டுமே கையில் வைத்திருக்க முடியும். அதே போல், பந்துடன் மூன்று காலடி (STEPS) களுக்கு மேல் எடுக்கக் கூடாது. இந்த கட்டுப்பாட்டுக்குள் பந்தை சக வீரருக்கு மாற்றி கொண்டிருக்க வேண்டும்.
2. கோல் கோட்டிலிருந்து விளையாட்டு பகுதிக்கு உள்ளாக 6 மீட்டர் விட்டத்தில் ஒரு அரை வட்டம், இரண்டு உயர கோல் கொம்புகளை இணைக்குமாறு போடப்பட்டிருக்கும். இதற்கு D எனப்பெயர். இந்த பகுதியில் தடுப்பு அணி கோல் தடுப்பாளர் மட்டுமே உலவ முடியும். மற்ற வீரர்கள் பந்தை பிடிப்பதற்காக மட்டும் இப்பகுதிக்குள் செல்லலாம். வேறு வீரர்கள் விளையாட்டின் போக்கில் இப்பகுதிக்குள் செல்ல நேர்ந்தால், உடனடியாக நேர் வழியில் வெளியேற வேண்டும்.
விளையாட்டின் போக்கில், தடுப்பு அணி வீரர், தாக்கும் வீரருடன் உடல் தொடர்பு ஏற்பட்டால், அது முறையற்ற விளையாட்டாகக் கருதப்பட்டு, தடுப்பு அணிக்கு (DEFENDING) எதிராக தண்டனை பதிவு செய்யப்பட்டு, கோல் கோட்டிலிருந்து 7 மீ தூரத்திலிருந்து, தாக்கும் அணி வீரர் நேரடியாக கோலை நோக்கி பந்து வீசி கோல் போட முயற்சி செய்வார். அதை கோல் தடுப்பாளர் தடுக்க முயற்சி செய்வார்.
மற்ற நேரங்களில், இந்த பகுதியின் வெளியில் இருந்து தான் கோல் போட வேண்டும்."
Q9. கைப்பந்து ஒலிம்பிக்கில் எப்போது சேர்க்கப்பட்டது?
" ஆண்கள் : 1936ல் ஒரு முறை சேர்க்கப்பட்டு, அதற்கு பிறகு 1972 முதல் தொடர்ந்து சேர்க்கப்பட்டுள்ளது.
பெண்கள் : 1976 முதல்."