Khub.info Learn TNPSC exam and online pratice

ஹாக்கி - HOCKEY

Q1. ஹாக்கி விளையாட்டு என்பது என்ன?
இந்த விளையாட்டு ஜெர்மனியில் தொடங்கியதாக நம்பப்படுகிறது. இது நம் நாட்டின் தேசிய விளையாட்டு. இது 10 வீரர்கள் + 1 கோல் தடுப்பாளர் = 11 பேர் கொண்ட அணி விளையாட்டு. கையில் முனையில் வளைவு கொண்ட ஒரு நீண்ட மட்டையுடன், ஒரு பந்தை, சக வீரர்களின் உதவியுடன் தட்டிச் சென்று, எதிரணியின் கோலுக்குள் பந்தை தள்ளுவதே
இந்த விளையாட்டு. FIELD HOCKEY எனவும் கூறுவர்.
Q2. ஹாக்கி மைதானத்தைப் பற்றி கூறுக.
91.4 மீ நீளம், 55 மீ அகலம் கொண்ட செவ்வக புல்தரை மைதானம். நவீன காலமாக புல்லுக்கு பதிலாக, சிந்தெடிக் ASTROTURF என்ற மைதானம் அமைக்கப்படுகிறது.
Q3. ஹாக்கி மட்டையைப் பற்றிக் கூறுக.
90 செ.மீ / 2.11 அடி (3 அடிக்கு சற்றே குறைவாக) ஒரு மரத்திலான மட்டை. கைப்பிடிப் பகுதியில் உருளையாகவும், அதன் கீழ் பட்டையாகவும், மட்டையின் நுனியில் 25 மி.மி. உள்வாங்கிய வளைவுமாக இருக்கும்.
Q4. ஹாக்கி பந்தை பற்றிக் கூறுக.
"கார்க்கினால் ஆன உருண்டையின் தோலால் கவரப்பட்டு தைக்கப்பட்டிருக்கும் வெள்ளை நிற பந்து.
சுற்றளவு - 224 - 235 செ.மீ / 8.8 - 9.3 அங்குலம்.
எடை - 156 - 163 கிராம்."
Q5. ஹாக்கி கோல் கம்பங்கள் பற்றி கூறுக.
"உயரம் - 7 அடி / 2.14 மீ.
அகலம் - 12 அடி / 3.66 மீ - (இரண்டு உயரக் கொம்புகளுக்குஇடையில் உள்ள தூரம்)."
Q6. ஹாக்கியில் கோல் போடுவதற்கு முக்கியமான நிபந்தனை என்ன?
கோல் கொம்புகளுக்கு, விளையாட்டு பகுதிக்குள், ஒரு அரை வட்டம் - கோல் கோட்டின் இரு பக்கங்களிலிருந்து போடப்பட்டிருப்பதால், இது ஆங்கில எழுத்து D போன்றிருக்கும். இந்த பகுதிக்குள் இருந்து மட்டுமே கோல் போட முடியும் என்பதே முக்கிய நிபந்தனை.
Q7. ஹாக்கியின் விளையாட்டுப் பகுதியில் 'D' பகுதி மிக முக்கியமான பகுதி. அதை பற்றிக் கூறுக.
"ஆங்கில எழுத்து D போல அமைந்திருப்பதால் இப்பகுதியை இவ்வாறு அழைக்கின்றனர். இதன் உள்ளிருந்து மட்டுமே கோல் போட முடியும் என்பதால் இது முக்கியமான பகுதி ஆகிறது.
இது, கோல் கொம்புகளின் இரு பக்கங்களிலிருந்து, 3.66மீ தூரத்திலிருந்து, இரு புள்ளிகளையும் இணைக்குமாறு உள் பக்கமாக போடப்பட்டிருக்கும் அரை வட்டம. இதன் விருத்த பாக அளவு (ARC) 14.63 மீட்டர்."
Q8. ஹாக்கியில் PENALTY CORNER (இதையே SHORT CORNER எனவும் கூறுவர்) என்பது விளையாட்டின் ஒரு முக்கிய அங்கம். அது என்ன?
"D பகுதிக்குள், தவறான ஆட்டம், பந்து காலால் தடுக்கப்படுதல் / அல்லது படுதல், கையால் தடுக்கப்படுதல், போன்ற தவறுகளை செய்யும் தடுப்பு அணி வீரரின் செயலால், தடுப்பு அணி (DEFENDING TEAM)யின் மீது நடுவரால் வழங்கப்படும் தண்டனை.
இந்த தண்டனை வழங்கப்பட்டால் -
1. D பகுதிக்குள் எந்த அணி வீரரும் இருக்கக் கூடாது.
2. தடுப்பு அணியின் கோல் தடுப்பாளருடன் இரண்டு, மூன்று வீரர்கள்,கோல் லைனிற்கு பின்னால், கோல் போடப்படாமல் தடுக்க, நிற்கலாம்.
3. இந்த தண்டனையை நிறைவேற்ற, தாக்கும் அணி வீரர் பந்துடன், கோல் கொம்பிலிருந்து 10 மீ தூரத்தில் கோல் லைனில் குறிக்கப்பட்டிருக்கும் இடத்தில் நிற்பார் (PENALTY CORNER SPOT).
4. மற்ற வீரர்கள் அனைவரும் (இரு அணி) D யின் வெளி விளிம்பில் காத்திருப்பார்கள்.
5. நடுவரின் சைகை கிடைத்தவுடன், பந்துடன் காத்திருக்கும் தாக்கும் அணி வீரர் பந்தை D க்குள் வேகமாக மட்டையால் தள்ளி விடுவார். அதை மற்ற தாக்கும் அணி வீர ர்கள், D க்கு வெளியில் தடுத்து,உள் எடுத்துச் சென்று கோல் போட முயற்சி செய்வார்கள். அதே நேரத்தில் தடுக்கும் அணி வீரர்கள் கோல் போடும் முயற்சியை தடுப்பார்கள்.
ஹாக்கி போட்டியில் அதிகமான கோல்கள் போடப்படுவது இந்த முறையில் தான். "
Q9. PENALTY CORNER ல் பந்தை D க்குள் தள்ளி விடும் அந்த முறைக்கு பெயர் என்ன?
DRAG FLICK - ட்ராக் ஃப்ளிக்.
Q10. PENALTY CORNER மூலம் கோல் போடுவதில் உலகில் மூன்று பேர் மிகவும் புகழ்பெற்றவர்கள். அவர்கள் யார்?
"1. சொஹெய்ல் அப்பாஸ், பாகிஸ்தான்,
2. பால் லிட்ஜென்ஸ், நெதர்லாந்து,
3. சந்தீப் சிங், இந்தியா."
Q11. ஹாக்கியில் PENALTY SHOT என்பது?
ஹாக்கியின் முக்கிய விளையாட்டுப் பகுதியான D க்குள், தடுப்பு அணியால் மிகவும் முறையற்ற விளையாட்டு, தாக்கும் அணி வீரர் மீது மோசமான தாக்குதல் போன்ற செயல்களுக்காக வழங்கப்படும் தண்டனை. கோல் கொம்பின் நடுமையத்திலிருந்து நேராக 6.4 மீட்டர் தூரத்தில் பந்தை வைத்து, தாக்கும் அணி வீரர் பந்தை கோல் நோக்கி அடிக்க, தடுப்பு அணி கோல் தடுப்பாளர் அதை தடுக்க முயற்சிப்பார்.
Q12. ஹாக்கி (இதர விளையாட்டிலும் கூட) யில் FIELD GOAL என்பது என்ன?
PENALTY CORNER, PENALTY SHOT அல்லாமல், விளையாட்டின் போக்கிலேயே, பந்தை சக வீரர்களின் உதவியுடன் எடுத்துச் சென்று கோல் போடுவது. (இது கால்பந்து போன்ற விளையாட்டுக்கும் பொருந்தும்)
Q13. இந்தியாவில் ஹாக்கி முதன் முதலில் எங்கு எப்போது விளையாடப்பட்ட து?
1885ல் கொல்கத்தாவில்.
Q14. ஹாக்கி ஒலிம்பிக்கில் முதன்முதலில் எப்போது சேர்க்கப்பட்டது?
1908 - லண்டன்.
Q15. இந்திய ஹாக்கி சம்மேளனம் எப்போது தொடங்கப்பட்டது?
1928ல் க்வாலியர் (ம.பி) நகரில். தற்போது HOCKEY INDIA என டெல்லியிலிருந்து இயங்குகிறது.
Q16. சர்வ தேச ஹாக்கி சம்மேளனம் (INTERNATIONAL HOCKEY FEDERATION) எப்போது துவங்கியது?
7.1.1924. இதன் தலை நகர், லாசேன் LAUSANNE, ஸ்விட்சர்லாந்தில் உள்ளது.
Q17. ஹாக்கி விளையாட்டில் பயன்படுத்தப்படும் வார்த்தை தொடர்கள் யாவை?
1. FREE HIT, 2. DRI BBLE, 3. PUSH, 4. FLICK, 5. SCOOP, 6. DRIVE, 7. DRAG FLICK.
Q18. ஹாக்கி போட்டியில் இந்தியாவின் ஒலிம்பிக் எப்போது முதலில் பங்கு பெற்றது? எத்தனை முறை வென்றுள்ளது?
"1928 ஆம்ஸ்டெர்டாம் போட்டியில் முதலில் பங்கு கொண்டு, நெதர்லாந்துக்கு எதிராக 29 கோல் போட்டு வென்றது. இந்த கோல் கணக்கு இன்றும் ஒரு சாதனை.
அதன்பின் 1932, 1936, 1948, 1952, 1956, 1964, 1980 களில் (மொத்தம் 8 ) தங்க பதக்கமும், 1960ல் வெள்ளி, 1968, 1972ல் வெண்கல பதக்கமும் வென்றுள்ளது.
1976 மற்றும் 1984ல் இருந்து இதுவரை இந்தியா எந்த பதக்கமும் வெல்லவில்லை என்பது வருந்தத்தக்க விவரம்."
Q19. ஹாக்கி உலகக்கோப்பை போட்டி எப்போது முதல் நடத்தப்படுகிறது?
எண் வருடம் நடந்த இடம் வெற்றி தோல்வி
1 1971 பார்சிலோனா, ஸ்பெயின் பாகிஸ்தான் ஸ்பெயின்
2 1973 ஆம்ஸ்டெல்வின், நெதர்லாந்து நெதர்லாந்து இந்தியா
3 1975 கோலாலம்பூர், மலேசியா இந்தியா பாகிஸ்தான்
4 1978 ப்யூனஸ் எயர்ஸ், அர்ஜெண்டினா பாகிஸ்தான் நெதர்லாந்து
5 1982 மும்பை, இந்தியா பாகிஸ்தான் மேற்கு ஜெர்மனி
6 1986 லண்டன், இங்கிலாந்து ஆஸ்திரேலியா இங்கிலாந்து
7 1990 லாகூர், பாகிஸ்தான் நெதர்லாந்து பாகிஸ்தான்
8 1994 ஸிட்னி, ஆஸ்திரேலியா பாகிஸ்தான் நெதர்லாந்து
9 1998 உத்ரெஸ்ட், நெதர்லாந்து நெதர்லாந்து ஸ்பெயின்
10 2002 கோலாலம்பூர், மலேசியா ஜெர்மனி ஆஸ்திரேலியா
11 2006 மான்சென் க்ளாட்பேச்,ஜெர்மனி ஜெர்மனி ஆஸ்திரேலியா
12 2010 புதுடெல்லி, இந்தியா ஆஸ்திரேலியா ஜெர்மனி
13 2014 தி ஹேக், நெதர்லாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து
14 2018 புவனேஸ்வர், இந்தியா
Q20. ஹாக்கியில் நடக்கும் இதர முக்கிய போட்டிகள் :
"1. சேம்பியன் கோப்பை : 1978 முதல் வருடந்தோறும் உலகின் முன்னணி நாடுகளுக்கிடையில் நடத்தப்படும் போட்டி. பெண்களுக்கு 1987 முதல் நடத்தப்படுகிறது.
2. சுல்தான் அஸ்லன் ஷா கோப்பை : 1983 முதல் இரு வருடங்களுக்கு ஒரு முறை மலேசியாவில் நடத்தப்படுகிறது. இதே பெயர் கொண்ட மலேசிய மன்னர் பெயரால் நடத்தப்படுகிறது. இந்தியா 5 முறை தங்கம் வென்றுள்ளது.
3. ஆசிய விளையாட்டு போட்டிகள்.
4. காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்."
Q21. பெண்களுக்கான ஹாக்கி உலகக்கோப்பை எப்போது முதல் நடத்தப்படுகிறது?
1974 முதல். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை. நெதர்லாந்து நான் கு முறை வென்று முன்னணியில் உள்ளது.
Q22. ஹாக்கியில் சர்வதேச போட்டிகளில் அதிகமான கோல்கள் போட்டுள்ள வீரர் யார்?
சொஹெய்ல் அப்பாஸ், பாகிஸ்தான் - 348 கோல்கள். உலகின் மிகவும் புகழ்பெற்ற PENALTY CORNER SPECIALIST.
Q23. இந்தியா ஹாக்கியின் தொட்டில் என அழைக்கப்படும் இடம் எது?
சன்சார்பூர், பஞ்சாப்.
Q24. நான்கு ஒலிம்பிக்கில் விளையாடிய ஒரே இந்திய வீரர் யார்?
தன்ராஜ் பிள்ளை, மும்பை.
Q25. ஹாக்கியில் இந்தியாவின் ஆளுமை எப்போது முதல் சரியத் தொடங்கியது?
1960 ரோம் ஒலிம்பிக்கிலிருந்து.
Q26. இந்தியா கடைசியாக ஒலிம்பிக் ஹாக்கியில் தங்கம் வென்றது?
1980 - மாஸ்கோ - ரஷ்யா.
Q27. இந்தியாவுக்காக அதிகமான முறை சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்ட வீரர் யார்?
திலீப் டர்கி - 400+ போட்டிகள்.
Q28. தொழில் ரீதியான (PROFESSIONAL) ஹாக்கி போட்டி இந்தியாவில் எப்போது துவங்கியது?
HOCKEY INDIA LEAGUE - பொதுத்துறை நிறுவனம் COAL INDIA நிறுவன ஆதரவுடன் 2013ல் தொடங்கியது. 6 அணிகள் விளையாடும் இந்தப் போட்டியில் வெளி நாட்டு வீரர்களும் பங்கேற்கிறார்கள். வருடந்தோறும் நடத்தப்படும் இந்த போட்டி மக்களிடையே நல்ல வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.