Khub.info Learn TNPSC exam and online pratice

பனி ஹாக்கி - ICE HOCKEY

Q1. பனி ஹாக்கி விளையாட்டு என்பது என்ன?
இதுவும் ஒரு வகை ஹாக்கி. இதன் விளையாட்டு, பனி தளமாக செவ்வக வடிவில் இருக்கும். இதன் மீது, " பக்-PUCK" எனப்படும் பட்டையான உருண்டை வடிவில் (கருப்பு நிறம்) உள்ள பந்துடன், ஹாக்கி மட்டை போன்ற ஒரு உபகரணத்துடன் விளையாடப்படும் விளையாட்டு, அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே அதிகம் விளையாடப்படும் விளையாட்டு. இது ஒரு அணி மற்றும் உள் அரங்க விளையாட்டு.
Q2. பனி ஹாக்கி விளையாட்டு தளத்தின் அமைப்பை பற்றி கூறுக.
"இந்த விளையாடு தளம் RINK என அழைக்கப்படுகிறது. 200 அடிக்கு 85 அடி கொண்ட செவ்வக பனி தளம். இரண்டு அரை பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, விளையாட்டு தன்மைக்காக கீழ்க்கண்ட மூன்று பகுதிகளாக குறிக்கப்பட்டுள்ளது.
1. தடுப்பு பகுதி - DEFENDING ZONE : இந்தப் பகுதியில் கோல் கம்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும். தடுப்பு அணி வீரர்கள், தங்கள் பகுதியை கோல் போடப்படுவதிலிருந்து, பாதுகாத்துக் கொள்ளுமிடம்.
2. நடு நிலைப் பகுதி - NEUTRAL ZONE : இரண்டு தடுப்பு பகுதிக்கிடையில் அமைந்துள்ள பகுதி.
3. தாக்கும் பகுதி - ATTACKING ZONE : தாக்கும் அணி வீரர்களின் தாக்குதல் நடத்தும் பகுதி."
Q3. பனி ஹாக்கி விளையாட்டு பந்தை பற்றி கூறுக.
ஒரு அங்குல கனத்தில், 3 அங்குல விட்டத்தில் மேல் மற்றும் கீழ் பகுதி மட்டமாக, 170.097 கிராம் எடை கொண்ட, கருப்பு நிறத்தில் ரப்பராலான (VULCANIZED RUBBER) பந்து. இதற்கு PUCK எனப் பெயர்.
Q4. பனி ஹாக்கி அணியின் வீரர்கள் எத்தனை பேர்?
ஆறு பேர் - 5 விளையாடும் வீரர்கள் + 1 கோல் தடுப்பாளர். விளையாட்டு வீரர்கள், பனியில் சறுக்கிக் கொண்டே, பந்தை,மட்டை உதவியுடன் சக வீரர்களின் உதவியுடன், எதிரணி நோக்கிச் சென்று கோல் போடுவதே இந்த அணி விளையாட்டு. இதில் மாறுதல் வீரர்கள் எண்ணிக்கையும், மாறுதலும் எப்போது வேண்டுமானாலும், எத்தனை தடவை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அதற்கு சில விதிமுறைகள் உள்ளன.
Q5. பனி ஹாக்கி விளையாட்டு நேரம் எவ்வளவு?
பொதுவாக 20 நிமிடங்கள் கொண்ட மூன்று பகுதி.
Q6. பனி ஹாக்கி விளையாட்டு, தண்டனை பற்றி கூறுக.
"1. வீரர்கள், தகுந்த காலணிகள் அணிந்து, சறுக்கிக் கொண்டே விளையாடுவதால், விளையாட்டின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் வீர ர்கள் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொள்வதும், காயமேற்படுவதும் அதிகம். அதனால், அனைத்து வீர ர்களும் பாதுகாப்பு கவசம் மற்றும் உபகரணங்கள் பயன்படுத்துவது, குறிப்பாக கோல் தடுப்பாளர், கட்டாயமாகும்.
2. தண்டனையைப் பொருத்தவரை, சிறு மற்றும் பெருந்தண்டனை என இருவகையுண்டு. சிறு தவறுகளுக்கு இரண்டு நிமிடம், பெருந்தவறுகளுக்கு 5 நிமிடம் என, சம்பந்தப்பட்ட வீரர், விளையாட்டில் இருந்து வெளியேற்றம் செய்யப்படுவார். இந்தக் காலக் கட்ட த்தில் மாறுதல் வீரர் அனுமதி கிடையாது. ஆனால், இந்த காலக் கட்ட த்தில் கோல் போடப்பட்டால், வெளியேற்றம் செய்யப்பட்ட வீரர் திரும்ப வரலாம். அதே சமயம், ஒரே அணியின் இரு வீரர்கள் வெளியேற்றம் செய்யப்பட்டால், ஒரு வீரருக்கு மாறுதல் வீரர் ஒருவர் களமிறங்கலாம்."
Q7. பனி ஹாக்கி விளையாட்டின் சர்வதேச சம்மேளனம் எங்குள்ளது?
ஜூரிச் - ஸ்விட்சர்லாந்து - 1908ல் தொடங்கப்பட்ட து.
Q8. பனி ஹாக்கி ஒலிம்பிக்கில் எப்போது சேர்க்கப்பட்டது?
1920ல் கோடை ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டு, 1924 முதல் பனிக்கால ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டு தொடர்கிறது. 1998ல் பெண்களுக்கான போட்டி பனிக்கால ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.