Khub.info Learn TNPSC exam and online pratice

தற்காப்பு கலை - MARTIAL ARTS

Q1. தற்காப்பு கலை என்பது என்ன?
தற்காப்புக்காக ஒருவர் தன்னை பாதுகாத்துக் கொள்ள பிரயோகிக்கும் கலை. இதில் ஆயுதத்துடன் அல்லது ஆயுதமில்லாமலும் இருக்கலாம்.
Q2. தற்காப்பு கலைகள் எத்தனை வகை உள்ளது?
"நூற்றுக்கும் மேலான கலைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் புழக்கத்தில் உள்ளன. பல கலைகள், ஒரு பகுதி, ஒரு நாடு என புழக்கத்தில் உள்ளது.
இவற்றுள் ஜூடோ, டேக் வான்டோ மட்டும் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் கராத்தே தான் உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் பழக்கத்தில் உள்ள கலை."
Q3. ஜூடோ தற்காப்பு கலையை அறிமுகப்படுத்தியவர் யார்
டாக்டர் ஜிகோரோ கினோ என்ற ஜப்பானியர். 1862ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கலை, மல்யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில் பயிற்சி பெற்றவர்கள் "ஜூடோகன்" என அழைக்கப்படுகின்றனர்.
Q4. ஜூடோ கலை எப்போது ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது?
"ஆண்களுக்கு 1964ல், பிறகு 1972 முதல் தொடர்ந்து சேர்க்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு 1992 முதல்."
Q5. ஜூடோ கலையில் பயிற்சியின் போது உடலை நிறுத்தும் இரண்டு முக்கிய நிலைகள் என்ன?
"TACHI WAZA - நிற்பது,
NE WAZA - தரையில் குனிந்து நிற்பது."
Q6. ஜூடோ கலைப் பயிற்சியின் முக்கியமான பயிற்சி நுணுக்கங்கள் (TECHNIQUES) யாவை?
இதன் பயிற்சி நுணுக்க முறைகள் யாவும் KATA என பொதுவாக அழைக்கப்படுகிறது. பயிற்சியின் வெவ்வேறு அங்கங்களுக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு. அவை:
"1. NAGE NO KATA
2. KATAME NO KATA
3. KIME NO KATA
4. KODOKAN GOSHIN JITSU
5. JUNO KATA
6. ITSUTSU NO KATA
7. KOSHIKI NO KATA
8. SEIRYOKU ZEN'YO KOKUMIN TAIKU NO KATA.
"
Q7. ஜூடோ கலைப் பயிற்சியின் ஒவ்வொரு நிலை வெற்றிகரமாக முடித்தவுடன் கொடுக்கப்படும் அங்கீகாரங்கள் யாவை?
"ஒவ்வொரு பயிற்சி நிலை முடித்தவர்களுக்கு ஒரு வண்ண இடுப்பு பட்டைகள் (BELT) வழங்கப்படுகின்றன. அவை,
1. வெள்ளை (WHITE), 2. மஞ்சள் (YELLOW), 3. ஆரஞ்சு (ORANGE), 4. பச்சை (GREEN), 5. நீலம் (BLUE), 6. அரக்கு (BROWN), 7. கருப்பு (BLACK).
பயிற்சியின் ஒவ்வொரு நிலையை தாண்டும் போதும் அவர்களுக்கு DAN என்ற பட்டமும், அந்த பட்டத்துக்கு முன் ஜப்பானிய பெயரும் பொருத்தப்படும். அவை :
1. SHO DAN 2. NIDAN 3. SANDAN 4. YODAN 5. GO DAN 6. ROKU DAN 7. SHICHIDAN 8. HACHIDAN 9. KUDAN 10. JUDAN
இதில் பத்தாவது நிலை அடைவது மிகவும் கடினம். உலக அளவில் சுமார் 15 பேர் மட்டுமே இந்த பதவியைப் பெற்றிருக்கின்றனர்.
அனைவரும் ஜப்பானியர்கள்."
Q8. ஜூடோ கலையின் போட்டிகளை மேலாண்மை செய்யும் சர்வதேச அமைப்பு எது?
சர்வதேச ஜூடோ கூட்டமைப்பு - INTERNATIONAL JUDO FEDERATION - 1951ல் தொடங்கப்பட்டு, லாசேன், ஸ்விட்சர்லாந்தை தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது.
Q9. தற்சமய உலகின் மிகப்பெரிய தலைவர்களுள் ஒருவர் இந்த கலையில் தலைசிறந்த வல்லுனர். அவர் யார்?
வ்ளாடிமிர் புடின் - ரஷ்ய அதிபர் - இவர் இந்தக் கலையில் 6வது நிலையான ROKUDAN பட்டம் பெற்றவர்.
Q10. ஜூடோவில் "இப்போன் (IPPON)" என்ற தொடர் எதைக் குறிக்கிறது?
ஜூடோ போட்டியில் எதிர் வீரரை விதிகளுக்கு உட்பட்டு மடக்கி பிடித்து, அவருடைய முதுகு தரையில் படும்படியாக அவர் எழுந்திருக்க முடியாமல் செய்வது வெற்றியாக கருதப்படுகிறது. இதையே "இப்போன் (IPPON)" என்பர்.
Q11. ஜூடோ போட்டிகள் வீரர்களின் எதன் அடிப்படையில் நடத்தப்படுகிறது?
"வீரர்களின் எடையின் அடிப்படையில், பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.
ஆண்கள் - 60, 66, 73, 81, 90, 100, 100+ கிலோ.
பெண்கள் - 48, 52, 57, 63, 70, 78, 78+ கிலோ."
Q12. தற்காப்பு கலை "குங்ஃபூ" எங்கு உருவானது?
"சீனாவின் ஷாவோலின் மடாலயத்தில், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவானதாக கருதப்படுகிறது. இது WUSHU எனவும் அறியப்படுகிறது. இந்த கலை, பல தற்காப்பு கலைகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டது. இந்தக் கலையிலும், ஜூடோவிலும் நிலைகளுக்கேற்ப அங்கீகார அடையாளமும் பட்டமும் அளிக்கப்படுகிறது."
Q13. கராத்தே எங்கு தொடங்கியதாகக் கருதப்படுகிறது?
ஒக்கினாவா, ஜப்பான் என்றும், சீனா என்றும் கருதப்படுகிறது.
Q14. நவீன கால கராத்தேயின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
அங்கோ இடோசு - ANKO ITOSU - ஜப்பான்.
Q15. கராத்தே என்பது...?
"வெறும் கை" என பொருள் கொண்டது. வெறும் கையால் தற்காப்பு பயிற்சி பெறுவது. உலகளவில் மிகவும் புகழ் பெற்ற கலையாக இருந்தாலும், இன்னும் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் சேர்க்கப்படவில்லை. இதிலும் பல நிலைகள், நிலைகளுக்கு ஏற்ற அடையாளம் மற்றும் பட்டம் அளிக்கப்படுகிறது.
Q16. கராத்தே உலகளவில் பிரபலமாவதற்கு முக்கிய காரணமாயிருந்தவர் யார்?
ப்ரூஸ் லீ - திரைப்பட நடிகர், தயாரிப்பாளர்.
Q17. டேக் வான் டோ - TACK -WON-DO என்பதன் பொருள் என்ன?
"TACK - என்பது காலால் உதைப்பது.
WON - என்பது கையால் குத்துவது, தாக்குவது
DO - வழிமுறை."
Q18. டேக் வான் டோ தற்காப்பு கலை எங்கு உருவானது?
கொரியா. தற்போது கொரியாவின் ஒரு சிறுபகுதியை ஆண்டு வந்த சில்லா ராஜ வம்ச காலத்தில் உருவானதாக கருதப்படுகிறது. கி.மு. 57 - கி.பி. 935.
Q19. நவீன கால டேக் வான் டோ கலையின் தந்தை எனக் கருதப்படுபவர் யார்?
ஜெனரல் ஹாங் ஹி சொய் - HONG HI CHOI.
Q20. டேக் வான் டோ தற்காப்பு கலைக்கு சர்வதேச அங்கீகாரம் எப்போது கிடைத்தது?
11.4.1955.
Q21. டேக் வான் டோ தற்காப்பு கலைப் போட்டி எப்போது ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது?
1988, 1992ல் ஒரு பார்வையாளர் போட்டியாகவும், 2000 சிட்னி, ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு முழு அங்கீகாரப் போட்டியாக சேர்க்கப்பட்ட து.
Q22. டேக் வான் டோ கலையில் உள்ள பிரிவுகள் (STYLE) யாவை?
"1. KUKKI WON : ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ள பிரிவு - STYLE.
2. CHANG HON : ஒலிம்பிக்கில் சேர்க்கப்படாத ஒரு பிரிவு. ஆனால் சர்வதேச டேக் வான் டோ சம்மேளனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிரிவு - STYLE.
3. SONAGHAM : கொரியாவில் பாரம்பரியமாக பழக்கத்தில் உள்ள பிரிவு - STYLE. "
Q23. டேக் வான் டோ கலை வீரர்கள் அணியும் உடையின் பெயர் என்ன?
DOBOK.
Q24. டேக் வான் டோ கலையில் பயிற்சி மற்றும் பயிற்சியாளர் நிலைகள் என்ன?
கராத்தே, குங்ஃபூ போன்ற கலைகளில் உள்ளது போலவே இதிலும் உள்ளது. பயிற்சியில் 10 நிலையும், பயிற்சியாளர் 9 நிலையும் உள்ளது. பயிற்சியில் உயர்ந்த அங்கீகாரம் "கருப்பு இடுப்பு பட்டை (BLACK BELT)". இந்த கருப்பு பட்டை பெற குறைந்த பட்சம் 16 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
Q25. டேக் வான் டோ கலைக்கு உடலின் முக்கிய பகுதியாக கருதப்படுவது எது?
கால்கள் - ஏனெனில் காலால் நீண்ட தூரமும், மிகவும் வேகத்துடனும் தாக்க முடியும்.
Q26. கேரள மாநிலத்தில் பயிற்றுவிக்கப்படும் மிகப் பிரபலமான தற்காப்பு கலை எது?
களரி பயட்டு - KALARI PAYATTU. மகா பாரத காலத்து பரசுராமர் அவர்களால் உருவாக்கப்பட்ட கலை என கருதப்படுகிறது.
Q27. களரி பயட்டு கலையில் எவ்வகை பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன?
" 1. MEITHARI : அடிப்படை உடற்பயிற்சி.
2. KOLTHARI : மூங்கில் மற்றும் சிறு மரக் கொம்புகள் கொண்ட பயிற்சி.
3. ANKATHARI : உலோகத்தால் ஆன கத்தி, கேடயம் கொண்டு பயிற்சி.
4. VERUM KAI : வெறும் கைகளுடன் தாக்குதல் மற்றும் தடுப்புப் பயிற்சி.
5. MARMA KALAI : உடலின் ரத்த நாளங்களின் அழுத்த புள்ளிகளை (PRESSURE POINTS) தாக்குவது."
Q28. களரி பயட்டு - மர்மக் கலையைப் பற்றி கூறுக.
"உடலில் சுமார் 107 ரத்த நாள அழுத்த புள்ளிகள் உள்ளன. அவை, கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மாச மர்மா------------ தோல் மற்றும் சதைப் பகுதி.
அஸ்தி மர்மா-------- எலும்புப் பகுதி.
ஸ்நாயு மர்மா-------- நரம்புப் பகுதி.
தமனி மர்மா---------- உடலில் உள்ள தமனிகள் பகுதி.
சந்தி மர்மா------------ எலும்பு இணைப்பு பகுதி.
ஷிரா மர்ம------------- நரம்பு பகுதி."
இந்த 107 புள்ளிகளில், 64 புள்ளிகள் தாக்கப்பட்டால் உடல்ரீதியான நிரந்தர பாதிப்பு மற்றும் சில நேரங்களில் மரணம் கூட ஏற்படலாம். ஆகவே, இது பயிற்சி முறையில் மட்டுமே கற்றுக் கொடுக்கப்படுவதுடன், தாக்குதலுக்கு பயன்படுத்தக் கூடாது என்ற உறுதியின் அடிப்படையில் பயிற்றுவிக்கப்படுகிறது.
Q29. தமிழ் நாட்டின் மிகப் புகழ்பெற்ற தற்காப்பு கலை யாது?
சிலம்பாட்டம். சராசரி மனித உயரத்தில் ஒரு மூங்கில் கொண்டு தாக்கும் மற்றும் தடுக்கும் கலை.
Q30. உலக நாடுகளில் பழக்கத்தில் உள்ள தற்காப்பு கலைகள் யாவை?
எண். கலையின் பெயர் நாடுகள்
1 MUAY THAI தாய்லாந்து
2 CAPOEIRA ப்ரேசில்
3 ZEN KO DAI ஆஸ்திரேலியா
4 BOKATOR, PRADAL SEREY கம்போடியா
5 OKICHITAW கேனடா
6 CANNE DE COMBAT KINO MICHI SAVATE ஃப்ரான்ஸ்
7 PANKRATION க்ரீஸ்
8 GLIMA ஐஸ்லாந்து
9 PENCACK SILATE இந்தோனேசியா
10 VARZESH - E - PEHALWANI இரான்
11 TANG SOO DOO கொரியா
12 DAMBE நைஜீரியா
13 KICK BOXING, SIKARAN, YAWYAN பிலிப்பைன்ஸ்
14 JOGO DO PAU போர்ச்சுகல்
15 SAMBA, SYSTEMA ரஷ்யா
16 SCHWINGEN ஸ்விட்சர்லாந்து
17 YAGHI GURES துருக்கி
18 BATISTU இங்கிலாந்து
19 CHUN KUK DO, JEET KUNE DO, KAJU KENBO அமெரிக்கா
20 KURASH உஸ்பெகிஸ்தான்
21 VOVINAM வியட் நாம்
Q31. இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் உருவாக்கப்பட்ட தற்காப்பு கலை எது?
KARV MAGA.
Q32. JEET KUNE DO என்ற தற்காப்பு கலையை மேம்படுத்தி பிரபலமாக்கியவர் யார்?
ப்ரூஸ் லீ.
Q33. ஒடிசாவின் க்ஷத்திரியர்களின் பழக்கத்திலிருக்கும் தற்காப்பு கலை எது?
PAIKHA AKHADA.