Khub.info Learn TNPSC exam and online pratice

கபடி - KABADDI

Q1. கபடி என்பது என்ன விளையாட்டு?
தொன்று தொட்டு விளையாடப்பட்டு வரும் ஒரு கிராமப்புற விளையாட்டு. தெற்கு ஆசிய நாடுகளில், குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம் போன்ற நாடுகளில் மிகவும் பிரபலமானது. இரு பாலராலும் விளையாடப்படும் ஒரு அணி விளையாட்டு. ஒரு செவ்வக மைதானம், இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணியும் ஒரு பகுதியிலிருந்து விளையாடும். ஒரு அணியின் வீரர், கபடி கபடி (அல்லது வேறு) என்ற வார்த்தைகளைக் கூறிக்கொண்டே, எதிரணியின் பகுதியில் சென்று (மூச்சு விடாமல் வார்த்தைகளைக் கூறிக்கொண்டே) ஒரு வீரர் அல்லது அதற்கு மேலான எதிரணி வீரரை தொட்டுவிட்டு, பிடிபடாமல் திரும்பி வந்து நடுக்கோட்டைத் தொட வேண்டும். அதே சமயம் எதிரணி வீரர்கள் அவரை மடக்கி பிடிக்க முயற்சிப்பார்கள். இந்த முறை, ஒவ்வொரு முறையும் அணி மாறி மாறி, ஏதாவது ஒரு அணியின் மொத்த வீரர்களும் அவுட் ஆகும் வரை தொடரும்.
Q2. கபடி விளையாட்டு அரங்கத்தின் அளவு என்ன?
"12.5 x 10 மீ - செவ்வக தரைமட்ட மைதானம். இரு அரைப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். முற்காலத்தில் வெறும் தரையாக இருக்கும். இக்காலத்தில் ஸிந்தெடிக் நுரைப் பஞ்சு போடப்பட்டு வீரர்களுக்கு காயமேற்படாமல் இருக்க ஏதுவாக அமைக்கப்படுகிறது."
Q3. கபடி விளையாட்டில் எத்தனை வீரர்கள் பங்கு பெறுவார்கள்(ஒரு அணிக்கு)?
ஒரு அணிக்கு ஏழு வீரர்கள் + 5 மாறுதல் வீரர்கள்.
Q4. கபடி விளையாட்டின் நேரம் எவ்வளவு?
இரு 20 நிமிட பகுதிகளாக மொத்தம் 40 நிமிடம். இடைவெளி 5 நிமிடம்.
Q5. கபடி விளையாட்டில் புள்ளிகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
"மேலே கூறிய படி, எதிரணியின் எல்லைக்குள் சென்று, எத்தனை வீரர்களை தொட்டுவிட்டு பிடிபடாமல் திரும்பி வருகிறாரோ அத்தனை புள்ளிகள் அந்த அணிக்கு வழங்கப்படும். அதே சமயம் அவர் பிடிபட்டால் எதிரணிக்கு ஒரு புள்ளி வழங்கப்படும்.
ஒரு அணியின் அனைத்து வீரர்களும் அவுட் ஆனால் எதிரணிக்கு கூடுதலாக இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்.
விளையாட்டுப் போக்கில் எந்த அணியின் வீரரும் விளையாட்டு எல்லையைத் தாண்டினால் எதிரணிக்கு ஒரு புள்ளி வழங்கப்படும்."
Q6. கபடி விளையாட்டில் எத்தனை நடுவர் இருப்பார்கள்?
ஒரு முக்கிய நடுவர், ஒரு புள்ளி கணக்கு பார்ப்பவர், ஒருவர் நேரக் காப்பாளர், மற்றவர்கள் எல்லைகளை கண்காணிப்பார்கள்.
Q7. கபடி விளையாட்டில் பல விதமான ஓசைகளை எழுப்புவார்கள். அவை யாவை?
"கபடி, கபடி------------------- - இந்தியா, பாகிஸ்தான்
ஹா, ஹூ------------------- - வங்காள தேசம்
டு, டு, டு --------------------- - நேபாளம்
குடு, குடு ------------------- - ஸ்ரீலங்கா
சடு குடு -------------------- - மலேசியா
ஸூ,ஸூ,ஸூ------------- - இரான்
தெகிப், தெகிப் ------------ - இந்தோனேசியா"
Q8. கபடி விளையாட்டின் இன்றைய சர்வதேச நிலை என்ன?
ஆசிய நாடுகளில் மட்டுமே விளையாடப்படுவதால், ஆசிய விளையாட்டு போட்டியிலும், ஆசிய நாடுகளுக்குமிடையில் மட்டும் விளையாடப்படுகிறது. ஆசிய விளையாட்டு போட்டிகளில், கடந்த 5 போட்டிகளிலும் இந்தியா தங்கப்பதக்கம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Q9. நம் நாட்டில் கபடி விளையாட்டு தொழில் ரீதியாக எப்போது தொடங்கியது?
2014ல் தொடங்கியது - 8 தனியார் அணிகள் - இந்தியாவின் 8 நகரங்களில் நடத்தப்படுகிறது.