Khub.info Learn TNPSC exam and online pratice

போலோ - POLO

Q1. போலோ என்பது என்ன விளையாட்டு?
குதிரை மீது அமர்ந்து ஹாக்கி விளையாடுவது. சமயங்களில் யானை மீதும் அமர்ந்தும் விளையாடுவார்கள். இது நான்கு பேர் கொண்ட அணி விளையாட்டு.
Q2. போலோ விளையாட்டு மைதானத்தின் அளவு பற்றி கூறுக.
274.32 மீ x 137 -146 மீ - செவ்வகம். விளையாடும் மைதானத்தைச் சுற்றி, பந்து வெளியில் செல்லாமல் இருப்பதற்காக ஒரு அடி உயரப் பலகைத் தடுப்பு அமைக்கப்பட்டிருக்கும். மைதானத்தின் இருபுறமும் 7.31 மீ இடைவெளி கொண்ட கோல் கொம்புகள் அமைக்கப்பட்டு இருக்கும்.
Q3. போலோ விளையாட்டைப் பற்றி கூறுக.
"இந்த விளையாட்டு, மத்திய ஆசியாவில், குறிப்பாக இரானில் தொடங்கியதாக தெரிகிறது. பாரசீக மன்னர்கள் பொழுது போக்காக விளையாடப்பட்டு வந்த விளையாட்டு. குத்புதீன் ஐபெக் இந்திய அடிமை வம்ச காலத்தில், இந்த விளையாட்டு இந்தியாவுக்கு வந்த்தாக தெரிகிறது. ஏனெனில், இவர் போலோ விளையாடும்போது தான் இறந்தார் என்பது சரித்திரம்.
ஆங்கிலேயர்கள் காலத்தில் இதன் முன்னேற்றம் கண்டு இந்தியாவிலும் சிலவெளி நாடுகளிலும் பரவியது. நவீன போலோ, மணிப்பூரில் உருவெடுத்து, சில்ச்சார் என்ற இட த்தில் முதல் போலோ சங்கம் 1833ல் உருவெடுத்தது. இவ்வாறாக, சுமார் 20 நாடுகள் இந்த விளையாட்டை தீவிரமாக விளையாடுகிறது. அதில் அர்ஜெண்டினா முன்னணியில் உள்ளது."
Q4. போலோ விளையாட்டின் நேரம் எவ்வளவு?
"7 அல்லது 8 நிமிட நேரமாகக்கொண்ட, முன்பே முடிவெடுக்கப்பட்ட சுற்றுகள் கொண்டது. ஒவ்வொரு சுற்றுக்குமிடையில் இடைவெளிகளும் உண்டு.
வீரர்கள் 4 பேர் கொண்ட இரண்டு அணி, ஒரு பந்தை, குதிரை மீது அமர்ந்தபடியே, தட்டிச் சென்று, கோல் போடுவதே இந்த விளையாட்டு.
கோல் தடுப்பாளர் கிடையாது. கோல் கொம்புகள் (7.3152 மீ இடைவெளியில்) மிக உயரமாக நிறுத்தப்பட்டிருக்கும். இதற்குள் செல்லுமாறு எந்த உயரத்தில் வேண்டுமானாலும் பந்தை அடித்து கோல் போடலாம்."
Q5. போலோ விளையாட்டை நிர்வகிக்கும் உலக அமைப்பு எது?
சர்வதேச போலோ கூட்டமைப்பு - INTERNATIONAL POLO FEDERATION - 1983 - பெவர்லி ஹில்ஸ், அமெரிக்கா.
Q6. போலோ விளையாட்டின் உயர் மட்டப் போட்டி எது?
உலக போலோ சாம்பியன்ஷிப் - 1987 முதல் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அர்ஜெண்டினா அதிகமுறை வென்றுள்ளது.