Khub.info Learn TNPSC exam and online pratice

பல்லவ வம்ச ஆட்சி -- PALLAVA DYNASTY – கி.பி. 560 -903

Q1. பல்லவர்களில் முதல் குறிப்பிடத்தக்க அரசர் யார்?
சிம்மவிஷ்ணு -- SIMHAVISHNU – கி.பி 560 முதல் 590 வரை.

Q2. சிம்ம விஷ்ணுவைத் தொடர்ந்த பல்லவ மன்னர் யார்?
"மகேந்திர வர்மன் -- MAHENDRA VARMAN – கி.பி 590 முதல் 630 வரை – மணிமங்கலம் என்ற இடத்தில், சாளுக்ய மன்னர் இரண்டாம் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டு/கொலை செய்யப் பட்டு சில பல்லவ பகுதிகள் கைப்பற்றப்பட்டன. "
Q3. மகேந்திரவர்மனைத் தொடர்ந்து வந்த மிகப் புகழ்பெற்ற பல்லவ மன்னர் யார்?
"நரசிம்ம வர்மன் 1 -- NARASIMHA VARMAN I – கி.பி 630 முதல் 668 வரை – தனது தந்தையின் மறைவுக்குக் காரணமான சாளுக்ய மன்னர் புலிகேசி 2 வை தோற்கடித்து, தலைநகர் பாதாமியையும் கைப்பற்றினார். சேர சோழ பாண்டிய மன்னர்களையும் எதிர்த்து, தென் இந்தியாவில் தனது ஆட்சியைப் பலப்படுத்தினார். "
Q4. புலிகேசி 2 ஐ தோற்கடித்து, பாதாமி ஐ கைப்பற்றியதற்காக, நரசிம்ம வர்மனுக்கு எந்த சிறப்புப்பெயர் கொடுக்கப்பட்டது?
வாதாபிகொண்டான் -- VATAPIKONDA
Q5. நரசிம்ம வர்மன் 1 ஆல் நிர்மாணிக்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற கற்சிலை சிற்பக் கோவில் எங்குள்ளது?
மகாபலிபுரம் -- சென்னை அருகில்.
Q6. பல்லவ தலைநகர் காஞ்சி க்கு விஜயம் செய்த சீன யாத்திரிகர் யார்?
ஹூவான் சுவாங் -- நரசிம்ம வர்மன் 1 காலத்தில்.
Q7. நரசிம்ம வர்மனைத் தொடர்ந்த பல்லவ அரசர் யார்?
"மகேந்திரவர்மன் 2 -- Mahendra Varman II – கி.பி. 668 முதல் 670 வரை – இவருடைய ஆட்சி மிக குறுகிய காலமே, காரணம் சாளுக்ய மன்னர் விக்ரமாதித்யா (புலிகேசி 2 ன் மகன்) இவரை கொலை செய்ததே. "
Q8. மகேந்திர வர்மன் 2 ஐ தொடர்ந்த பல்லவ அரசர், மற்றும் அவருக்கு பிறகு வந்த அரசர்களும் யாவர்?
பரமேஸ்வர வர்மன் 1 -- Parameswara Varman I – கி.பி. 670 முதல் 700 வரை.
நரசிம்ம வர்மன் 2 -- NARASIMHAVARMAN II – கி.பி. 700 முதல் 728 வரை – பல்லவ அரசர்களில் மற்றொரு புகழ் பெற்ற மன்னர். மகாபலிபுரம் கோவில் சிற்பங்களை முழுமையாக முடித்தவர். காஞ்சி கைலாசநாதர் கோவிலும் இவரால் கட்டி முடிக்கப்பட்டது.
பரமேஸ்வர வர்மன் 2 -- PARAMESWARAVARMAN II – கி.பி. 728 முதல் 731 வரை – இவர் காலத்தில் சாளுக்ய மன்னர் விக்ரமாதித்யா 2 படையெடுப்பு நடந்தது. ஆனால், விக்ரமாதித்யா ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டு திரும்ப சென்றார். செல்லும் வழியில் சாளுக்யர்களின் சிநேக மன்னர்களுள் ஒருவரான கங்கா வம்ச படையினரால் கொல்லப்பட்டார்.
நந்தி வர்மன் 2 -- NANDIVARMAN II – கி.பி 731 முதல் 796 வரை – சாளுக்யர்கள் மற்றும் கங்கா மன்னர் படையினரின் தொடர் போர்களை சமாளித்தார். இருப்பினும் கடைசியில் சாளுக்ய மன்னர்களால் தோல்வியைத் தழுவினார். காஞ்சி வைகுண்டநாதர் கோவில் இவரால் கட்டி முடிக்கப்பட்டது.
தண்டி வர்மன் -- DANTIVARMAN - கி.பி 796 முதல் 847 வரை.
நந்திவர்மன் 3 -- NANDIVARMAN III – கி.பி. 847 முதல் 869 வரை.
அமோகவர்ஷா -- ந்ருபதுங்கா -- NRIPA TUNGA - கி.பி. 869 முதல் 878 வரை.
அபரஜித்தா -- APARAJITHA – கி.பி. 878 முதல் 897 வரை. சோழ மன்னர் ஆதித்யா 1 ஆல் தோற்கடிக்கப்பட்டு பல்லவ சாம்ராஜ்யம் முடிவுற்றது. இவருக்கு பிறகு வந்த சில பல்லவ அரசர்கள் சோழ் அரசர்களின் கீழ் ஆட்சியைத் தொடர்ந்து முடிவுற்றது."
Q9. பல்லவ அரசர் நந்திவர்மன் 2 ஆல் கட்டப்பட்ட கோவில் எது?
வைகுண்ட பெருமாள் கோவில்
Q10. பல்லவ அரசர்களுள், அவருடை ராணுவ மற்றும் கலாச்சார சாதனைகளினால், மிகவும் புகழ்பெற்ற அரசர் என்றழைக்கப்படுகிறார்?
நரசிம்மவர்மன் 1
Q11. பல்லவ அரசர் மகேந்திரவர்மனுக்கு அளிக்கப்பட்ட சிறப்புப்பட்டங்கள் யாவை?
சித்ரகரபுலி, மட்டவிளாசா, மகாமல்லா