Khub.info Learn TNPSC exam and online pratice

பாதாமி (வாதாபி) சாளுக்ய வம்ச ஆட்சி -- CHALUKYAS OF BADAMI DYNASTY 543-755 AD

Q1. சாளுக்ய வம்ச ஆட்சியை நிறுவியவர் யார்?
புலிகேசி 1 -- PULAKESIN I – கி.பி. 543 to 566 வரை ஆட்சியிலிருந்தார்.

Q2. சாளுக்ய வம்சத்தின் தலைநகர் எது?
பாதாமி -- (வாதாபி)
Q3. சாளுக்யர்களால் ஆளப்பட்டு வந்த பகுதி என்ன?
"மத்திய மற்றும் தெற்கு இந்தியா -- கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், மற்றும் குஜராத், மத்தியப் பிரதேசம். "
Q4. புலிகேசி 1 க்கு பிறகு பதவியேற்ற மன்னர் யார், அவரால் கைப்பற்றப்பட்ட பகுதிகள் எது?
"கீர்த்தி வர்மன் KIRTI VARMAN – கி.பி. 566 முதல் 597 வரை – கடம்பர்கள் மற்றும் நளசாந்த் மன்னர்களை வென்று, பணவாசி, பஸ்தார் பகுதிகளைக் கைப்பற்றினார். "
Q5. கீர்த்தி வர்மனை தொடர்ந்து வந்த சாளுக்ய மன்னர் யார்?
"மங்களசேனா -- MANGALESA - கி.பி. 597 முதல் 609 வரை – கீர்த்திவர்மனின் இளைய சகோதரர் - குஜராத், காந்தேஷ் மற்றும் மாளவ பகுதிகளில் சிலவற்றைக் கைப்பற்றினார். "
Q6. மங்களசேனா--வைத் தொடர்ந்து வந்த சாளுக்ய மன்னர் யார்?
"புலிகேசி 2 -- PULAKESIN II – கி.பி 609 முதல் 642 வரை – சாளுக்ய மன்னர்களில் மிகவும் திறமையான, சக்தியான, புகழ்பெற்ற மன்னர். மங்களசேனாவை எதிர்த்து போரிட்டு மன்னராக பதவியேற்றார். "
Q7. புலிகேசி 2 மன்னரின் ராணுவ சாதனைகள் என்ன?
"பணவாசி கடம்பர்கள், தென் கர்நாடகாவின் அலுப்பர்கள், மைசூரின் கங்கா மன்னர்கள், வட கொங்கன் மௌரியர்கள், மேற்கிந்திய பகுதியில் லதா, மாளவா, குர்ஜார் மன்னர்களையும் அடக்கி அவர்களுடைய பகுதிகள் மீது ஆதிக்கம் செலுத்தினார். ஹர்ஷரின் தென் இந்திய டெக்கான் பகுதியை கைப்பற்றும் முயற்சியை தவிர்த்தார். இதற்கு மேல், தெற்கு கோசலா ராஜ்யம், ஒடிசாவின் கலிங்க மன்னர்கள், ராயலசீமா பகுதியின் பாணா மன்னர், பல்லவ மன்னர் மகேந்திரவர்மன் 1 உடன் போரிட்டு பல்லவர்களின் சில கிழக்குப் பகுதிகளையும் கைப்பற்றினார். "
Q8. புலிகேசி 2 ன் ராணுவ மற்றும் அவருடைய வாழ்க்கைத் தோல்வி எது?
"தனது இரண்டாவது ராணுவ நடவடிக்கையாக பல்லவ மன்னர் நரசிம்மவர்மன் 1 மீது படையெடுத்து தோல்வி கண்டார். இவர் கொலை செய்யப்பட்டது மட்டுமின்றி, தலைநகர் பாதாமி பல்லவர்களால் கைப்பற்றப்பட்டது. "
Q9. புலிகேசி 2 ன் அரசியல் ரீதியான சாதனைகள் என்ன?
"பாரசீக மன்னர் குஸ்ரூ 2 உடன் நல்லுறவு மேற்கொண்டார். சீன யாத்திரிகர் ஹூவான் சுவாங் இவரது அரசவைக்கு விஜயம் செய்தார்."
Q10. சாளுக்ய மன்னர் ஆட்சியை மீண்டும் நிறுவியது யார்?
"விக்ரமாதித்யா 1 -- VIKRAMAADITYA I – கி.பி 644 முதல் 681 வரை – பல்லவர்களால் கைப்பற்ற பட்டு 12 ஆண்டுகள் ஆளப்பட்டு வந்த பகுதியை மீட்டது மட்டுமின்றி, தனது தந்தை கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பல்லவர்களின் ஆட்சியின் கீழிருந்த தலைநகர் காஞ்சி பகுதியை தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தினார். "
Q11. சாளுக்ய வம்சத்தின் இதர மன்னர்கள் யாவர்?
வினயாதித்யா -- VINAYAADITYA – கி.பி. 681 முதல் 693 வரை – அமைதியான வளமான ஆட்சி.
விஜயாதித்யா -- VIJAYADITYA - கி.பி 693 முதல் 733 வரை – சாளுக்ய மன்னர்களில் அதிக காலம் மன்னராக பொறுப்பிலிருந்தவர். அமைதியான வளமான ஆட்சி. அதிகப்படியான கோவில்கள் இவர் காலத்தில் கட்டப்பட்டது.
விக்ரமாதித்யா 2 -- VIKRAMAADITYA II – கி.பி 733 முதல் 744 வரை – பல்லவர்களி மூன்று படையெடுப்புகளும், குஜராத் பகுதியில் அரபுப் படையெடுப்பும் இவர் காலத்தில் நிகழ்ந்தன. "
Q12. சாளுக்யர்களின் கடைசி மன்னர் யார்?
"கீர்த்திவர்மன் 2 -- KIRTIVARMAN II – கி.பி 744 முதல் 755 வரை – ராஷ்டிரகுட வம்ச ஆட்சியை நிறுவிய தண்டிதுர்கா மன்னரால் தோற்கடிக்கப்பட்டு, சாளுக்ய ஆட்சி முடிவடைந்தது. "
Q13. சாளுக்யர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கோவில் சிற்பக்கலை பெயர் என்ன?
வெசாரா -- VESARA – இதை டெக்கான் பாணி எனவும் கூறுவர்.
Q14. சாளுக்யர்களின் சிற்பக்கலை பாணியில் கட்டப்பட்ட கோவில்கள் எவை?
"அய்ஹோல், பாதாமி, பட்டடக்கல் -- கர்நாடகாவில் உள்ளன. அய்ஹோல் ""கோவில்களின் நகரம்"" என அறியப்படுகிறது. அய்ஹோல் மற்றும் பட்டடக்கல் உலகப் புராதன சின்ன அந்தஸ்து பெற்றவை."
Q15. எந்த சாளுக்ய மன்னராட்சியில், சீன யாத்திரிகர் ஹூவான் சுவாங் விஜயம் செய்தார்?
புலிகேசி 2
Q16. எந்த சாளுக்ய மன்னர் குஜராத்தில் அரபுப் படையெடுப்பை முறியடித்தார்?
விக்ரமாதித்யா 2
Q17. பாதாமி சாளுக்ய முக்கியமான மன்னர்களை வரிசைப்படுத்துக .
புலிகேசி 1, கீர்த்திவர்மன் 1, புலிகேசி 2, விக்ரமாதித்யா 1, வினயாதித்யா, விஜயாதித்யா.
Q18. வெசாரா/டெக்கான் பாணி சிற்பக்கலை தொடங்கப்பட்ட பட்டடக்கல் கோவில் எது?
பாப்பநாதர் கோவில்.