Khub.info Learn TNPSC exam and online pratice

தேர்தல் ஆணையம், தேர்தல்கள், அரசியல் கட்சிகள்

Q1. தேர்தல்கள் சம்பந்தப்பட்ட விதிமுறைகளை அரசியல் சட்டத்தின் எந்த விதிகள் எடுத்துரைக்கின்றன?
விதி எண் 324-329
Q2. தேர்தல் ஆணையம் இந்திய அரசியல் சட்டத்தின் எந்த விதிப்படி அமைக்கப்படுகிறது?
விதி எண் 324 (1)
Q3. தேர்தல் ஆணையர்கள் எந்த விதியின் கீழ் நியமிக்கப்படுகிறார்கள்?
அரசியல் சட்ட விதி எண் 324 (2) - ஆகவே, தேர்தல் ஆணையர்கள் பதவி ஒரு அரசியல் சட்ட ரீதியானது. (Constitutional Post) குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவை.
Q4. தேர்தல் ஆணையம் எப்போது உருவாக்கப்பட்டது? அதன் தலைமையகம் எங்குள்ளது?
25-1-1950 - டெல்லியில் "நிர்வாச்சன் சதன்" என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதை தவிர்த்து ஒவ்வொரு மாகாண தலைநகரத்திலும் மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் இயங்குகிறது.
Q5. தேர்தல் ஆணையத்தின் முக்கியமான பொறுப்புகள் யாவை?

1. எல்லா வகையான அரசியல் தேர்தல்களையும் அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்துதல்
2. வாக்காளர்கள் பட்டியல் தயாரித்தல்
3. கட்சிகளுக்கு அங்கீகாரம் கொடுப்பது, சின்னங்கள் ஒதுக்குவது.
4. தேர்தல்கள் சீரான முறையில் நடப்பதை கண்காணித்தல்.
5. தேர்தல் போட்டியாளர்களின் செலவுகளைக் கண்காணித்தல்.
6. தேர்தல் விதிமுறைகள் மீறிய, அல்லது கட்சித் தாவல் மற்றும் இதர காரணங்களுக்காக உறுப்பினர் பதவி ரத்து செய்தல்.
Q6. தேர்தலுடன் சம்பந்தப்பட்ட இதர முக்கியமான சட்டங்கள் யாவை?

1. மக்கள் பிரதி நிதித்துவ சட்டம், 1950, 1951 (Representation of Peoples’s Act 1950)
2. கட்சித் தாவல் தடுப்புச் சட்டம் 1985 (Anti Defection Law 1985).
Q7. தேர்தல் ஆணையர்களாக மூன்று பேர் குழு எப்போது அமைக்கப்பட்டது?
16-10-1989 முதல் மூன்று பேர் அடங்கிய தேர்தல் ஆணையர் குழுவாக அமைக்கப்பட்ட து. இந்த அமைப்பு 1.1.1990 வரை இயங்கியது. பிறகு சில சர்ச்சைகளுக்கு பிறகு, தேர்தல் ஆணைய திருத்தச் சட்டம் 1993 அமலுக்கு கொண்டு வரப்பட்டு, 1-10.1993 முதல் மூன்று பேர் அடங்கிய குழுவாக நிரந்தரமாக செயல்படுகிறது. ஆகவே, தேர்தல் ஆணைய முடிவு "பெரும்பான்மை" என்ற அடிப்படையில் எடுக்கப்படுகிறது
Q8. தேர்தல் ஆணையர்களின் பதவிக் காலம் என்ன?
6 வருடங்கள் அல்லது 65 வயது வரை - இதில் எது முன்னதோ அது வரை.
Q9. முக்கிய தேர்தல் ஆணையர் பதவி விலக்கல் எவ்வாறு நடைமுறைப் படுத்தப்படுகிறது?
ஒழுங்கீன நடவடிக்கை தாக்கல் (Impeachment Motion) இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு வாக்குப் பதிவு அனுமதிக்கப்பட்டவுடன் சம்பந்தப்பட்டவரை குடியரசுத் தலைவர் பணி நீக்கம் செய்வார்.
Q10. நம் நாட்டின் முதல் தேர்தல் ஆணையர் யார்?
சுகுமார் சென் - 21-3-1950 - 19-12-1958.
Q11. அதிக நாட்கள் தேர்தல் ஆணையராக பதவி வகித்தவர்கள் யார்?

1. சுகுமார் சென் - 21-3-1950 - 19-12-1958 - 8 வருடம் 9 மாதம், 29 நாட்கள்
2. கே.வி.கே.சுந்தரம் - 20-12-1958 - 30-9-1967 - 8 வருடம், 9 மாதம் - 11 நாட்கள்.
Q12. தேர்தல் ஆணையத்தின் அரசியல் ரீதியான நிலை என்ன?
நிரந்தமான, அரசியல் சட்ட அமைப்பாக, தன்னிச்சையாக, சில நீதிமன்ற தகுதிகளுடன்(Quasijudicial) இயங்கக்கூடியது.
Q13. தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட நாள் 25-1-1950 எவ்வாறு அனுசரிக்கப்படுகிறது?
தேசிய வாக்காளர் தினம்
Q14. தேர்தல் ஆணையர்களின் ஊதியம் என்ன?
இவர்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையாக ரூ.90000/- மாத ஊதியம் அளிக்கப்படுகிறது.

தலைமை தேர்தல் ஆணையர்கள்

Q15. தலைமை தேர்தல் ஆணையர்கள்
  வ.எண்   பெயர்   முதல்   வரை
  1.   சுகுமார் சென்   21-03-1950   19-12-1958
  2.   கே.வி.கே.சுந்தரம்   20-12-1958   30-09-1967
  3.   S.P. சென் வர்மா   01-10-1967   30-09-1972
  4.   நாகேந்திர சிங்   01-10-1972   06-02-1973
  5.   ஸ்வாமி நாதன்   07-02-1973   17-06-1977
  6.   எஸ்.எல். ஷக்தார்   18-06-1977   17-06-1982
  7.   ஆர்.கே. திரிவேதி   18-06-1982   31-12-1985
  8.   ஆர்.வி.எஸ். பெரிசாஸ்திரி   01.01.1986   25-11-1990
  9.   வி.எஸ். ரமாதேவி   26.11.1990   11-12-1990
  10.   டி.என்.சேஷன்   12-12-1990   11-12-1996
  11.   எம்.எஸ். கில்   12-12-1996   13-06-2001
  12.   ஜே.எம். லிங்டோ   14-06-2001   07-02-2004
  13.   டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி   08-2-2004   15-05-2005
  14.   பி.பி. டேண்டன்   16-05-2005   29-06-2006
  15.   என். கோபாலஸ்வாமி   30-06-2006   20-04-2009
  16.   நவீன் சாவ்லா   21-04-2009   29-07-2010
  17.   எஸ்.ஒய். க்வரெய்ஷி   30-07-2010   10-06-2012
  18.   வி.எஸ். சம்பத்   10-06-2012   15-01-2015
  19.   ஹெச்.எஸ்.ப்ரம்மா   15.01.2015   18-04-2015
  20.   நஸீம் ஸெய்தி   19-04-2015   05-07-2017
  21.   ஆச்சல் குமார்    06.07.2017   22.01.2018
  22.   ஓம் ப்ரகாஷ் ராவத்   22.01.2018  
       
       
Q16. தேர்தல்கள் எந்த கால இடைவெளியில் நடத்தப்படுகிறது?
5 வருடங்களுக்கு ஒருமுறை. ஆட்சி கவிழ்தல், நீக்கல் போன்ற காரணங்களால் இந்த கால கட்டம் மாறும்.
Q17. பொதுத் தேர்தல் (General Elections) என்றால் என்ன?
நாடு தழுவிய, மக்களவைக்கு நடத்தப்படும் தேர்தல் பொதுத் தேர்தல் எனப்படும். இத்துடன் சில மாநில அவைகளுக்கும் தேர்தல் நடத்தப்படும். அவ்வாறு நடத்தப்படும் மாநில தேர்தல் பொதுத் தேர்தலை சார்ந்ததாகாது.
Q18. இடைக் காலத் தேர்தல் என் பது என்ன?
ஒரு அமைப்புக்கு அதன் வரையறுக்கப்பட்ட காலம் (Tenure) முடிவதற்குள் ஏதேனும் காரணத்திற்காக மறு தேர்தல் நடத்தப்படுமேயானால் அது இடைக்கால தேர்தலாகும்.
Q19. இடைத் தேர்தல் (By Election) என்றால் என்ன?
மாநில மற்றும் மத்திய அளவில் ஏதேனும் உறுப்பினரின் பதவி விலகல், விலக்கல், அல்லது மரணம் மூலம் காலி ஏற்படும் ஒரு தொகுதிக்கு நடத்தப்படும் தேர்தல் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
Q20. நம் நாட்டில் முதல் பொதுத் தேர்தல் எப்போது நடைபெற்றது?
1951-52 - 25-10-1951 முதல் 28-2-1952 வரை. 489 தொகுதிகளுக்கு நடத்தப்பட்டது.
Q21. இது வரை எத்தனை (2015 நிலை) பொதுத் தேர்தல்கள் எந்தெந்த வருடங்களில் நடத்தப்பட்டன?
16 பொதுத் தேர்தல்கள்.
1. 1951, 2. 1957, 3. 1962, 4. 1967, 5. 1971, 6. 1977, 7. 1980, 8. 1984, 9. 1989, 10. 1991, 11. 1996, 12. 1998, 13. 1999, 14. 2004, 15. 2009, 16. 2014.
Q22. 2014ல் நடந்த 16வது பொதுத் தேர்தல் எத்தனை கட்டங்களாக நடத்தப்பட்டது?
9 கட்டங்களாக 7-4-2014 முதல் 12-5-2014 வரை நடத்தப்பட்டது.
Q23. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் முதன் முதலில் எங்கு பயன்படுத்தப்பட்டது? (அறிமுக நிலையில்)
1998 - பரவூர் இடைத் தேர்தல் - கேரளா. 50 வாக்குப்பதிவு நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட து. அதற்குப் பிறகு, நவம்பர் 1998ல் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி ஆகிய இடங்களில் நடந்த சட்ட சபை தேர்தலில் 16 தொகுதிகளில் முழுமையாகப் பயன்படுத்தப்பட்ட து.
Q24. ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எத்தனை போட்டியாளர் பெயர்களை பதிவு செய்ய முடியும்?
64
Q25. ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எத்தனை வாக்குகள் பதிவு செய்யலாம்?

2000

Q26. தேர்தல்களை பற்றி ஆய்வு மற்றும் ஆராய்ச்சி செய்யும் அறிவியல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
PSEPHOLOGY - ஸெஃபாலஜி
Q27. எப்போதிலிருந்து அழியாத மை (Indelible Ink) பயன்பாடு தொடங்கியது?
1962 பொதுத் தேர்தல்
Q28. அழியாத மை எந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட து?
தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம் - டெல்லி - National Physical Laboratory Delhi
Q29. அழியாத மை தயாரிக்க அங்கீகரிக்கப்பட்ட ஒரே நிறுவனம் எது?
மைசூர் பெயிண்ட்ஸ் & வார்னிஷஸ் லிமிடெட், மைசூரு. Mysore Paints & Varnishes Ltd., Mysore (Government of Karnataka Undertaking)
Q30. 2014 தேர்தல் நிலைப்படி, ஓட்டுரிமை எண்ணிக்கை மற்றும் பரப்பளவு அடிப்படையில், , மிகப்பெரிய மக்களவை தொகுதி எது?

ஒட்டுரிமை அடிப்படையில் மல்காஜ்கிரி, தெலங்கானா -- 3,183,325 வாக்குகள்.

பரப்பளவு அடிப்படையில் லடாக் (ஜம்மு & காஷ்மீர்) - 173266.37 sq. km

Q31. பரப்பளவு அடிப்படையில் மிகப்பெரிய மக்களவை தொகுதி எது?
லடாக், ஜம்மு - காஷ்மீர் - 173266.37 ச.கி.மீ.
Q32. பரப்பளவு அடிப்படையில் மிகக்குறைந்த மக்களவை தொகுதி எது?
சாந்தினி சௌக், டெல்லி - 10 ச.கி.மீ.
Q33. தொகுதிகளை எல்லை மற்றும் பரப்பளவு வாரியாக பிரிக்கும் அமைப்பு எது?
Delimitation Commission - எல்லை மாற்று அமைப்புக் குழு.
Q34. தமிழ் நாட்டின் அதிக அளவு வாக்காளர்களை கொண்ட தொகுதி?
வட சென்னை - 20,41,341 வாக்காளர்கள்.
Q35. நம் நாட்டின் மிக உயரமான வாக்குப்பிரிவு நிலையம் எது?
ஃபாசன் கிராமம் - லடாக் - 6180 மீ உயரம் கடல் மட்டத்திலிருந்து - அருகில் இருக்கும் சாலை வழிப் போக்குவரத்திலிருந்து சுமார் 26 கி.மீ தூரத்தில் உள்ளது.
Q36. தேர்தல்களில் போட்டியிடுவதை (அதுவும் மிகப் பெரிய அரசியல்வாதிகள் மற்றும் இதர பிரபலங்களுக்கு எதிராக) வழக்கமாக கொண்டுள்ள தமிழக பிரபல மனிதர் யார்?
கே. பத்மராஜன் - மேட்டூர் - சேலம் - கம்பிகள் இணைப்புத் தொழில் (welder) - நூற்றுக்கும் மேற்பட்ட தடவை போட்டியிட்டிருக்கிறார். தேவ கவுடா, வாஜ்பேயி, நரசிம்மராவ் போன்ற பிரபலங்களுக்கு எதிராக போட்டியிட்டிருக்கிறார்.
Q37. அதிகமான தடவை மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்கள் யார்?

1. வாஜ்பேயி - 10 தடவை
2. சோம் நாத் சட்டர்ஜி - 10 தடவை
3. கரிதர் கமாங் - 9 தடவை
Q38. 2009 பொதுத் தேர்தலில் மிகக்குறைந்த வயதில் வெற்றி பெற்ற ஆண், பெண் உறுப்பினர்கள் யார்?

1. சச்சின் பைலட் - 26 வயது.
2. அகதா சங்மா - 29 வயது.
Q39. 2014 பொதுத் தேர்தலில் மிகக் குறைந்த வயதில் வெற்றி பெற்ற ஆண், பெண் உறுப்பினர்கள் யார்?

1. துஷ்யந்த் சவுத்தாலா - 26 வயது
2. டாக்டர் ஹீனா கவிட் மற்றும் ரக்ஷா காட்சே
Q40. இதுவரை நடந்த பொதுத் தேர்தல்களில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மக்களவை உறுப்பினர் யார்?
ப்ரீதம் முண்டே - பீட் தொகுதி - 6,96,321 வாக்கு வித்தியாசம்
Q41. வயதில் மூத்த பாராளுமன்ற உறுப்பினர் யார்?
ரிஷாங் கெய்சிங் - மணிப்பூர் - கடைசியாக இவர் தனது 94வது வயதில், ஏப்ரல் 2014ல் மாநிலங்கள் அவை உறுப்பினராக இருந்து ஓய்வு பெற்றார். இது ஒரு உலக சாதனை.
Q42. மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு அதிகமான வயதில் வெற்றி பெற்றவர் யார்?
என்.ஜி.ரங்கா - 89 வயது - 9வது மக்களவை.
Q43. பெண் உறுப்பினர்களை அதிகமாக கொண்ட மக்களவை எது?
16வது மக்களவை - 61 உறுப்பினர்கள்.
Q44. வயதில் மூத்த பெண் பாராளுமன்ற உறுப்பினர் யார்?
பிஜோயா சக்கரவர்த்தி - BJP - கவுகாத்தி - 75 வயது.
Q45. 1993ல் தேர்தல் ஆணையத்திற்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட ஆணையர்களை நியமிப்பதில், தேர்தல் ஆணையத்திற்கும் (T.N.சேஷன்) அரசாங்கத்திற்கும் இடையில் நடந்த பனிப்போரின் போது, தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தைப் பற்றி விளக்கமளிக்க பாராளுமன்றத்திற்கு அழைக்கப்பட்ட அட்வகேட் ஜெனரல் யார்?
மிலன் பேனர்ஜி
Q46. 16வது மக்களவைக்கு அதிகமான பெண் உறுப்பினர்களை அனுப்பிய மாநிலம் எது?
மேற்கு வங்காளம் - 16 உறுப்பினர்கள்.
Q47. இந்தியாவில் சுமார் எத்தனை அரசியல் கட்சிகள் உள்ளன?
1766. இதில், 6 தேசிய கட்சிகளும், 51 மாநில கட்சிகளும், 1709 உதிரி கட்சிகளும் அடங்கும்.
Q48. மாநில கட்சியாக அங்கீகாரம் பெற வேண்டிய நிபந்தனைகள் யாவை?

1. மாநில சட்டசபைக்கு குறைந்த பட்சம் மூன்று உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
2. அல்லது, மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட மக்களவை தொகுதிகளில், 25 அல்லது அதன் பகுதிக்கோ ஒரு நபர் என மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
3. அல்லது, மத்திய அல்லது மாநில பொதுத் தேர்தலில், செல்லுபடியாகும் வாக்குகளில் குறைந்த பட்சம் 6 சதவிகித வாக்குகளும் ஒரு மக்களவை தொகுதி அல்லது இரு மாநில சட்ட சபை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
4. அல்லது, மத்திய மாநில பொதுத் தேர்தலில், எந்த வெற்றியும் பெறாவிட்டாலும், மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் 8 சதவிகித வாக்குகள் பெற வேண்டும்.
இவ்வாறு, அங்கீகாரம் பெறும் கட்சிக்கே நிரந்தர சின்னம் ஒதுக்கப்படும் மற்றும் இவ்வகையில் நான்கு மாநிலங்களில் வெற்றி பெற்றால் அக்கட்சி தேசிய கட்சியாகவும் அங்கீகரிக்கப்படும்.
Q49. தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற நிபந்தனைகள் யாவை?

1. மக்களவை தொகுதி எண்ணிக்கையில் 2 சதவிகித எண்ணிக்கை வெற்றி பெற வேண்டும். அதாவது 11 உறுப்பினர்கள், ஏதேனும் மூன்று மாநிலத்திலிருந்து,
2. அல்லது, மத்திய / மாநில பொது தேர்தலில், ஒரு கட்சி குறைந்தபட்ச வாக்குகளும் (நான்கு மாநிலங்களில்) பெற்று, நானகு மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
3. அல்லது, ஏதேனும் நான்கு மாநிலங்களில் மாநில கட்சி அங்கீகாரம் பெற வேண்டும்.
Q50. தேசிய கட்சிகள் (6) யாவை?

1. பாரதீய ஜனதா கட்சி
2. இந்திய தேசிய காங்கிரஸ்
3. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
4. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
5. பகுஜன் சமாஜ் கட்சி
6. தேசியவாதி காங்கிரஸ் கட்சி.
Q51. மாநில வாரியாக மாநில கட்சிகள் யாவை?
   கட்சிகளின் பெயர்   மாநிலங்களின் பெயர்
   1. தெலுங்கு தேசம்   ஆந்திர பிரதேசம்
   2. Y.S.R. காங்கிரஸ்   ஆந்திர பிரதேசம்
   3. அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்   அருணாச்சல பிரதேசம்
   4. அருணாச்சல பிரதேச மக்கள் கட்சி   அருணாச்சல பிரதேசம்
   5. அகில இந்திய ஐக்கிய ஜன நாயக கட்சி   அஸ்ஸாம்
   6. அசாம் கன பரிஷத்   அஸ்ஸாம்
   7. போடோலாண்ட் மக்கள் முன்னணி   அஸ்ஸாம்
   8. ஜனதா தளம் (ஐக்கிய)   பீஹார்
   9. மக்கள் ஜனசக்தி கட்சி   பீஹார்
  10. ராஷ்டிரிய ஜனதா தளம்   பீஹார்
  11. ராஷ்டிரிய மக்கள் சமதா கட்சி   பீஹார்
  12. மகாராஷ்டிர வாடி கோ மண்டக் கட்சி   கோவா
  13. ஹரியான ஜன்ஹித் காங்கிரஸ்   ஹரியானா
  14. இந்திய தேசிய லோக் தளம்   ஹரியானா
  15. J & K தேசிய கான்ஃபரன்ஸ்   ஜ.கா.
  16. தேசிய பேந்தர் கட்சி   ஜ.கா
  17. மக்கள் ஜன நாயக கட்சி   ஜ.கா
  18. ஜார்கண்ட் மாணவர்கள் ஐக்கியம்   ஜார்கண்ட்
  19. முக்தி மோர்ச்சா   ஜார்கண்ட்
  20. விகாஸ் மோர்ச்சா   ஜார்கண்ட்
  21. ராஷ்ட் ரிய ஜனதா தளம்   ஜார்கண்ட்
  22. ஜனதா தளம் (மத சார்பற்ற)   கர்நாடகம்
  23. இந்திய ஐக்கிய முஸ்லிம் லீக்   கேரளா
  24. ஜனதா தளம் (மத சார்பற்ற)   கேரளா
  25. கேரள காங்கிரஸ்   கேரளா
  26. போராளிகள் சமத்துவ கட்சி   கேரளா
  27. மகாராஷ்ட்ரா நவநிர்மான் சேனா   மஹாராஷ்டிரா
  28. சிவ சேனா   மஹாராஷ்டிரா
  29. அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்   மணிப்பூர்
  30. மணிப்பூர் மாநில காங்கிரஸ்   மணிப்பூர்
  31. நாகா மக்கள் முன்னணி   மணிப்பூர்
  32. மலை வாழ் மக்கள் ஜன நாயக கட்சி   மேகாலயா
  33. ஐக்கிய ஜன நாயக கட்சி   மேகாலயா
  34. மிசோ தேசிய முன்னணி   மிசோரம்
  35. மிசோரம் மக்கள் மா நாடு   மிசோரம்
  36. ஜோரம் தேசிய வாத கட்சி   மிசோரம்
  37. நாகா மக்கள் முன்னணி   நாகாலாந்து
  38. ஆம் ஆத்மி கட்சி   டெல்லி
  39. பிஜூ ஜனதா தளம்   ஒடிசா
  40. அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்   புதுச்சேரி
  41. அகில இந்திய N.R. காங்கிரஸ்   புதுச்சேரி
  42. திராவிட முன்னேற்ற கழகம்   புதுச்சேரி
  43. பாட்டாளி மக்கள் கட்சி   புதுச்சேரி
  44. ஆம் ஆத்மி கட்சி   பஞ்சாப்
  45. ஷிரோமணி அகாலி தளம்   பஞ்சாப்
  46. சிக்கிம் ஜன நாயக முன்னணி   சிக்கிம்
  47. சிக்கிம் புரட்சியாளர்கள் கட்சி   சிக்கிம்
  48. அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்   தமிழ் நாடு
  49. கம்யூனிஸ்ட் கட்சி   தமிழ் நாடு
  50. திராவிட முன்னேற்றக் கழகம்   தமிழ் நாடு
  51. தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்   தமிழ் நாடு
  52. பாட்டாளி மக்கள் கட்சி   தமிழ் நாடு
  53. அகில இந்திய மஜ்லிஸ் ஏ இத்தாகதுல் முஸ்லிமின் கட்சி   தெலுங்கானா
  54. தெலுங்கானா ராஷ்டிர சமிதி   தெலுங்கானா
  55. தெலுங்கு தேசம் கட்சி   தெலுங்கானா
  56. Y.S.R.C863 காங்கிரஸ் கட்சி   தெலுங்கானா
  57. அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்   திரிபுரா
  58. ராஷ்டிரிய லோக் தளம்   உத்திர பிரதேசம்
  59. பகுஜன் சமாஜ் கட்சி   உத்திர பிரதேசம்
  60. ஜமாஜ் வாதி கட்சி   உத்திர பிரதேசம்
  61. அகில இந்திய ஃபார்வர்டு ப்ளாக்   மே. வங்காளம்
  62. அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்   மே. வங்காளம்
  63. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி   மே. வங்காளம்
  64. புரட்சியாளர்கள் கட்சி   மே. வங்காளம்
   
   
   
   
Q52. இந்திய தேசிய காங்கிரஸ் எதற்காக உருவாக்கப்பட்ட து?
ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது, அரசாங்கத்தில் இந்தியர்கள் அதிகமான பங்கு பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டு, பிறகு சுதந்திர போராட்ட இயக்கமாக உருமாறி, சுதந்திரத்துக்குப் பிறகு அரசியல் கட்சியாக மாறியது.
Q53. இந்திய தேசிய காங்கிரஸ் யாரால் எப்போது உருவாக்கப்பட்ட து?
1885ல், ஆலன் ஆக்டேவியன் ஹ்யும் என்ற ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவராலும், தாதாபாய் நௌரோஜி, தீன்ஷா எடுல்ஜி வாச்சா என்ற இந்தியர்களாலும் உருவாக்கப்பட்ட து.
Q54. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பொதுக் கூட்டம் எங்கு எப்போது நடைபெற்றது?
பாம்பே - 28 முதல் 31 டிசம்பர் 1885. இந்த முதல் கூட்டத்தில் 72 பேர் பங்கேற்றனர்.
Q55. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் யார்?
உமேஷ் சந்திர பானர்ஜி (சுதந்திரத்துக்கு முன்) 1885 Dr. ராஜேந்திர பிரசாத் (சுதந்திரத்துக்கு பின்) 1947
Q56. இந்திய தேசிய காங்கிரஸின் முதலில் எப்போது பிளவு பட்ட து?
1907 - சூரத் மகா நாட்டின் போது, கட்சியின் அமைதியான அணுகுமுறையை எதிர்த்து, தீவிரவாத குழு என பால கங்காதர திலகர் தலைமையிலும் கட்சியின் அணுகுமுறையை ஆதரித்து மிதவாத குழு என கோபால கிருஷ்ண கோகலே தலைமையிலும் இரு குழுக்களாக பிரிந்தது.
Q57. யாருடைய முயற்சியால், எந்த வருடம், காங்கிரஸ் பிளவு சரி செய்யப்பட்டு இணைக்கப்பட்ட து?
அன்னி பெசண்ட் - 1916 - லக்னோ மாநாடு.
Q58. சுதந்திரத்திற்கு முன் நடந்த காங்கிரஸ் மகா நாடுகளுள் 1929 லாகூர் ம்கா நாடு முக்கியம் வாய்ந்த்து. காரணமென்ன?

1. "பூர்ண சுய ராஜ்யம்" என்ற தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
2. 26-1-1930 முதல் சுதந்திர தினமாக அறிவிக்கப்பட்டது.
3. 31-12-1929 நடு இரவு மூவர்ணக் கொடி முதல் முறையாக ஏற்றப்பட்டது.
Q59. இந்திய தேசிய காங்கிரசின் ஐரோப்பிய தலைவர்கள் யாவர்?

1. ஜார்ஜ் யூல் - அலஹாபாத் 1888
2. சர் வில்லியம் வெப்பர்ன் - பாம்பே 1889, 1910
3. ஏ. வெப் - மெட்ராஸ் 1894
4. சர் ஹென்றி காட்டன் - பாம்பே 1904
5. அன்னி பெசன்ட் - கல்கத்தா 1917
Q60. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் இஸ்லாமிய தலைவர் யார்?
பஹ்ருதீன் தையாப்ஜி 1887.
Q61. இந்திய தேசிய காங்கிரஸின் இஸ்லாமியத் தலைவர்கள் யாவர்?

1. பஹ்ருதீன் தையாப்ஜி - மெட்ராஸ் - 1887
2. எம். ரஹீம்துல்லா சயானி - கல்கத்தா - 1896
3. சையத் முகமது பகதூர் - கராச்சி - 1913
4. சையத் அகமது இமாம் - பாம்பே - 1918
5. ஹகீம் அஜ்மல் கான் - அஹமதாபாத் - 1921
6. அபுல் கலாம் ஆஸாத் - டெல்லி - 1923, 1940
7. எம்.ஏ.அன்சாரி - மெட்ராஸ் - 1927
Q62. இந்திய, தேசிய காங்கிரசின் பெண் தலைவர்கள் யாவர்?

1. அன்னிபெசன்ட் - கல்கத்தா - 1917
2. சரோஜினி நாயுடு - கான்பூர் - 1925
3. நெல்லி சென் குப்தா-கல்கத்தா - 1933
4. இந்திரா காந்தி - 1959 - 1984
5. சோனியா காந்தி - 1999 .......
Q63. சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரசில் பிளவு எப்போது ஏற்பட்ட து?
1969 - அப்போது நிஜலிங்கப்பா காங்கிரசின் தலைவராக இருந்தார்.
Q64. காங்கிரஸ் கட்சியின் செய்தித்தாள் எது?
காங்கிரஸ் சந்தேஷ் (சந்தேஷ் = செய்தி மடல்)
Q65. காங்கிரஸ் கட்சியின் சின்னம் என்ன?
மூவர்ணக்கொடியில் கைச்சின்னம்
Q66. காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் இதுவரை :
  வ.எண்.   வருடம்   மாநாடு இடம்   தலைவர் பெயர்
  1   1885   பாம்பே   உமேஷ் சந்திர பானர்ஜி
  2   1886   கல்கத்தா   தாதாபாய் நௌரோஜி
  3   1881   மெட்ராஸ்   பஹ்ருத்தீன் தையாப்ஜி
  4   1888   அலஹாபாத்   ஜார்ஜ் யூல்
  5   1889   பாம்பே   சர் வில்லியம் வெப்பர்ன்
  6   1890   கல்கத்தா   சர் ஃபிரோஸ் ஷா மேத்தா
  7   1891   நாக்பூர்   ஆனந்த சர்லப்பா
  8   1892   அலகாபாத்   உமேஷ் சந்திர பானர்ஜி
  9   1893   லாகூர்   தாதாபாய் நௌரோஜி
  10   1894   மெட் ராஸ்   ஆல்ஃபிரட் வெப்
  11   1895   பூனா   சுரேந்திர நாத் பானர்ஜி
  12   1896   கல்கத்தா   ரஹீமத்துல்லா எம். சயானி
  13   1897   அமராவதி   சர். சி. சங்கரன் நாயர்
  14   1898   மெட் ராஸ்   ஆனந்த மோகன் போஸ்
  15   1899   லக்னௌ   ரொமேஷ் சந்தர் தத்
  16   1900   லாகூர்   சர்.என்.ஜி. சந்தாவார்க்கர்
  17   1901   கல்கத்தா   சர்.தீன்ஷா எடுல்ஜி வாச்சா
  18   1902   அஹமதாபாத்   சுரேந்திர நாத் பானர்ஜி
  19   1903   மெட்ராஸ்   லால் மோஹன் கோஷ்
  20   1904   பாம்பே   சர். ஹென்றி காட்டன்
  21   1905   பெனாரஸ்   கோபால கிருஷ்ண கோகலே
  22   1906   கல்கத்தா   தாதாபாய் நௌரோஜி
  23   1907   சூரத்   ராஷ் பிஹாரி கோஷ்
  24   1908   மெட் ராஸ்   ராஷ் பிஹாரி கோஷ்
  25   1909   லாகூர்   மதன் மோகன் மாளவியா
  26   1910   அலஹாபாத்   சர். வில்லியம் வெப்பர்பர்ன்
  27   1911   கல்கத்தா   பிஷேன் நாராயண் தார்
  28   1912   பாட்னா   ரகு நாத் நரசிம்ம மதோக்
  29   1913   கராச்சி   சையத் முகமது பஹாடியா
  30   1914   மெட் ராஸ்   பூபேந்திர நாத் போஸ்
  31   1915   பாம்பே   சத்யேந்திர பிரசன்னா சின்கா
  32   1916   லக்னோ   அம்பிகா சரண் மஜூம்தார்
  33   1917   கல்கத்தா   அன்னி பெசன்ட்
  34   1918   டெல்லி   மதன் மோகன் மாளவியா
  35   1918   பாம்பே (விசேஷ)   சையத் ஹசன் இமாம்
  36   1919   அமிர்தசரஸ்   மோதிலால் நேரு
  37   1920   நாக்பூர்   சி. விஜயராகவாச்சாரியார்
  38   1920   கல்கத்தா (விசேஷ)   லாலா லஜ்பத் ராய்
  39   1921   அஹமதாபாத்   ஹகீம் அஜ்மல் கான்
  40   1922   கயா   சித்தரஞ்சன் தாஸ்
  41   1923   டெல்லி (விசேஷ)   மவுலானா அபுல் கலாம் ஆஸாத்
  42   1924   பெல்காம்   மஹாத்மா காந்தி
  43   1925   கான்பூர்   சரோஜினி நாயுடு
  44   1926   கவுகாத்தி   S. சீனிவாச ஐயங்கார்
  45   1927   மெட்ராஸ்   டாக்டர் எம்.ஏ. அன்சாரி
  46   1928   கல்கத்தா   மோதிலால் நேரு
  47   1929/30   லாகூர்   மோதிலால் நேரு
  48   1931   கராச்சி   சர்தார் வல்லபாய் படேல்
  49   1932   டெல்லி   மதன் மோகன் மாளவியா
  50   1933   கல்கத்தா   நெல்லி சென் குப்தா
  51   1934/35   பாம்பே   டாக்டர் ராஜேந்திரா பிரசாத்
  52   1936   லக்னௌ   ஜவஹர்லால் நேரு
  53   1936/37   ஃபைஸ்பூர்   ஜவஹர்லால் நேரு
  54   1938   ஹரிபுரா   சுபாஷ் சந்திர போஸ்
  55   1939   திரிபுரி   சுபாஷ் சந்திர போஸ்
  56   1940&45   ராம்கர்   மவுலானா அபுல் கலாம் ஆஸாத்
  57   1946   மீரட்   ஜே.பி.க்ருபளானி
  58   1947   டெல்லி   டாக்டர் ராஜேந்திரா பிரசாத்
  59   1948/49   ஜெய்பூர்   டாக்டர் பட்டாபி சீதாராமைய்யா
  60   1950   நாசிக்   புருஷோத்தம் தாஸ் டாண்டன்  
  61   1951-54   டெல்லி, ஹைதராபாத், நாசிக்   ஜவஹர்லால் நேரு
  62   1955-59   ஆவடி, அமிர்தசரஸ்   யு.என். தேபார்
  63   1959   டெல்லி   இந்திராகாந்தி
  64   1960-63   பெங்களூரு, பாவ் நகர், பாட்னா   நீலம் சஞ்சீவ ரெட்டி
  65   1964-67   புவனேஷ்வர், துர்காபூர், ஜெய்பூர்   K. காமராஜ்
  66   1968   ஹைதராபாத்   நிஜலிங்கப்பா
  67   1969   ஃபரீதாபாத்   நிஜலிங்கப்பா
  68   1970-71   பாம்பே   ஜகஜீவன் ராம்
  69   1972-74   கல்கத்தா   Dr. சங்கர் தயாள் சர்மா
  70   1975-77   சந்திகார்   தேவ் காந்த் பருவா
  71   1978-84   டெல்லி, கல்கத்தா   இந்திரா காந்தி
  72   1985-91   பாம்பே   ராஜீவ் காந்தி
  73   1992-96   திருப்பதி   நரசிம்ம ராவ்
  74   1997-98   கல்கத்தா   சீதாராம் கேசரி
  75   1999-2017   கல்கத்தா   சோனியா காந்தி
  76.   2017   டெல்லி   ராகுல் காந்தி
       

பாரதீய ஜனதா கட்சி

Q67. பாரதீய ஜனதா கட்சியின் தாய்க்கட்சி எது?
பாரதீய ஜன சங் - இக்கட்சியை 1951ல் ஷ்யாம் ப்ரசாத் முகர்ஜி நிறுவினார்.
Q68. பாரதீய ஜனதா கட்சி எவ்வாறு உருவாகியது?
1977 அவசர கால (Emergency) த்திற்கு பிறகு நடந்த பொதுத் தேர்தலில் பாரதீய ஜனசங் மற்ற கட்சிகளை இணைத்து ஜனதா கட்சியை ஏற்படுத்தி, காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆட்சிக்கு வந்தது. 1980ல் ஜனதா கட்சி கலைக்கப்பட்டு, ஜனசங் முன்னாள் உறுப்பினர்கள் ஒன்று கூடி பாரதீய ஜனதா கட்சியை ஏப்ரல் 1980ல் நிறுவினர். முதல் தலைவராக அடல் பிஹாரி வாஜ்பேயி பொறுப்பேற்றார்.
Q69. பாரதீய ஜனதா கட்சி முதன் முதலில் எந்த தேர்தலில் போட்டியிட்டது?
1984, 85வது பொதுத் தேர்தலில் போட்டியிட்டு இரண்டு இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது.
Q70. பாரதீய ஜனதா கட்சி முதன் முதலில் எப்போது ஆட்சி அமைத்தது?
1996 மே 16 முதல் மே 31 வரை 13 நாட்கள் மட்டுமே நீடித்த ஒரு ஆட்சியை அமைத்தது. இக்கட்சி பெற்றிருந்த எண்ணிக்கை 161. ஆகவே மற்ற கட்சிகளின் ஆதரவும் நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றியும் கிடைக்காததால் ஆட்சியில் தொடர முடியவில்லை.
Q71.
1999ல் 182 இடங்களில் வெற்றி பெற்று, தோழமை கட்சிகளின் ஆதரவுடன் 2004 வரை 5 ஆண்டுகள் ஆட்சி நட்த்தியது. ஆனால் 2004 பொதுத் தேர்தலில் 138 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2009 தேர்தலில் 116 இடங்களை பெற்றது. 2014ல் 282 இடங்களை பெற்று தற்போது ஆட்சியில் உள்ளது.
Q72. பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் போது எடுத்த ஒரு நடவடிக்கை உலக அளவில் இந்தியாவை ஒரு சக்தி வாய்ந்த நாடாக கருத வைத்தது. அது என்ன?
மே 1998, 11-13 தேதிகளில், ராஜஸ்தானில் பொக்ரான் என்ற இடத்தில் அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக நடத்திக் காட்டியது. இதற்கு "சிரிக்கும் புத்தர்"(Smiling Buddha) "சக்தி" (Shakti) என்ற ரகசிய குறியீடுகள் கொடுக்கப்பட்டிருந்த து. இந்த பரிசோதனை முடியும் வரை உலக நாடுகளுக்கு தெரியாமல் இருந்தது. சக்தி வாய்ந்த நாடுகளுக்கிடையில் ஒரு வித அச்சத்தையும், நம் நாட்டின் மீது ஒரு மரியாதையும் ஏற்படுத்தியது. அப்போது பிரதமராயிருந்தவர் அடல் பிஹாரி வாஜ்பேயி.
Q73. பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்கள் :

1.    1980 - 1986 - அடல் பிஹாரி வாஜ்பேயி
2.    1986 - 1991 - எல்.கே. அத்வானி
3.    1991 - 1993 - முரளி மனோகர் ஜோஷி
4.    1993 - 1998 - எல்.கே. அத்வானி
5.    1998 - 2000 - குஷாபாவ் தாக்ரே
6.    2000 - 2001 - பங்காரு லக்ஷ்மண்
7.    2001 - 2002 - ஜனா கிருஷ்ணமூர்த்தி
8.    2002 - 2004 - வெங்கைய்யா நாயுடு
9.    2004 - 2006 - எல். கே. அத்வானி
10.  2006 - 2009 - ராஜ் நாத் சிங்
11.  2009 - 2013 - நிதின் கட்காரி
12.  2013 - 2014 - ராஜ் நாத் சிங்
13.  2014 - ..........  அமித் ஷா
Q74. பாரதீய ஜனதா கட்சியின் செய்தித்தாள்/சின்னம்/கொடி எது?
கமல் சந்தேஷ் (கமல் - தாமரை ; சந்தேஷ் - செய்தி மடல்) சின்னம் - தாமரை; கொடி - காவி பின்னணியில், இட து ஓரம் சிறிய அளவில், உயரத்தில் பச்சைப்பட்டையும், காவிப் பகுதியின் நடுவில் தாமரைச் சின்னமும்.

இதர கட்சிகள்

Q75. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எப்போது துவங்கப்பட்ட து?
அக்டோபர் 17, 1920. ரஷ்யாவின் தாஷ்கெண்ட் என்ற இடத்தில், எம்.என்.ராய், அபானி முகர்ஜி, ரோசா ஃபிட்டிங்காஃப், முகமது அலி, முகமது ஷபீக் சித்திக் மற்றும் M P B T ஆச்சார்யா ஆகியோர்களால் உருவாக்கப்பட்டது.
Q76. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் தன்னுடைய முதல் கூட்டத்தைக் எங்குக் கூட்டியது?
டிசம்பர் 25, 1925 அன்று கான்பூரில். இந்த தேதியே இக்கட்சியின் தொடக்க நாளாக கருதப்படுகிறது.
Q77. ஒரு அரசியல் கட்சியாக இந்தியாவில் இந்த கட்சியின் C P I சாதனை என்ன?

1. காங்கிரஸ் கட்சிக்குப் பிறகு முதன்முறையாக, ஒரு மாநிலத்தில், காங்கிரஸ் அல்லாத, ஒரு ஆட்சியை 1957ல் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையில், கேரளாவில் ஆட்சி அமைத்தது.
2. இது வரை நடந்த எல்லா தேர்தல்களிலும் தனது சின்னம் மாறாமல் போட்டியிட்டுள்ளது.
Q78. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு எப்போது ஏற்பட்ட து?
1964ல் சித்தாந்த வேறுபாட்டால் வலது, இட துசாரிகளாக பிரிந்தது. இதிலிருந்து பிரிந்து சென்றவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸம்) என்ற பெயரில், இந்த இரண்டு பிரிவுகளில் முன்னோடியாக விளங்குகிறது. ஆகவே CPI (M) என்ற கட்சி 1964 முதல் இயங்கி வருகிறது.
Q79. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸம்) யின் செய்தித் தாள் எது?
மக்கள் ஜன நாயகம் - People’s Democracy (English) Lok Lehar – Hindi
Q80. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித் தாள் எது?
New Age – English ; Mukti Sangarsh – Hindi
Q81. கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பொலிட்ப்யூரோ - Politburo - கட்சியின் 15 மூத்த தலைவர்கள் ஒன்று கூடி, விவாதித் து முடிவுகள் எடுப்பதே, கட்சியின் நடவடிக்கையாக ஏற்றுக் கொள்ளப்படும்.
Q82. 2015 நிலையில் கம்யூனிஸ் கட்சியின் இரு பிரிவின் தலைவர்கள் யார்?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - எஸ். சுதாகர் ரெட்டி (2015); இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (M) - சீதாராம் யெச்சூரி (2015).
Q83. சிறிய அளவிலும், மாநில அளவிலும் இயங்கும் சில முக்கியமான கட்சிகள் யாவை?

1. ஃபார்வர்டு ப்ளாக் : காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி சுபாஷ் சந்திர போஸால் 1939ல் தொடங்கப்பட்ட கட்சி. பெரிதாக மேற்கு வங்காளத்திலும், சிறிய அளவில் கிழக்கு மாகாணங்கள் மற்றும் கேரளாவிலும் இயங்கும் ஒரு கட்சி. "எல்லா சக்தியும் மக்களுக்கே" என்பது இதன் கோஷம். சிகப்பு பின்னணியில் நடுவில் ஒருஅரிவாள், சுத்தி மற்றும் புலி சின்னங்களை பொருத்திய கொடி.
2. ராஷ்ட்ரிய ஜனதா தளம் : ஜனதா தளத்திலிருந்து பிரிந்து, 1947ல், பீஹாரின் லல்லு ப்ரசாத் யாதவ் அவர்களால் தொடங்கப்பட்ட கட்சி. பீஹாரில் முழுமையாகவும், சத்தீஸ்கரில் சிறிதளவும் பிரபலமாக இயங்கி வரும் ஒரு கட்சி. சின்னம் - அரிக்கேன் விளக்கு - கொடி - பச்சை நிற பின்னணி கொண்ட கொடியின் நடுவில் அரிக்கேன் விளக்கு பதிக்கப்பட்டிருக்கும்.
3. தேசியவாத காங்கிரஸ் கட்சி : காங்கிரஸிலிருந்து விலகி, சராத் பவார், பி.ஏ. சங்மா மற்றும் தாரிக் அன்வர் ஆகியோரால் 25.5.1999ல் ஆரம்பிக்கப்பட்ட கட்சி. தற்சமயம் சராத் பவார் தலைமையில் இந்த கட்சி முக்கியமாக மகாராஷ்டிராவிலும், சிறிதளவு கேரளத்திலும் இயங்கி வருகிறது. சின்னம் : மேஜை கடிகாரம் : கொடி : மூவர்ணக் (காங்கிரஸ்) கொடியின் நடுவில் கடிகாரம்.
4. பகுஜன் சமாஜ் வாடி கட்சி : 1984 ல் தலித் மற்றும் விவசாய மக்களின் ஆதரவுடன் கன்ஷிராம் அவர்களால் தொடங்கப்பட்ட கட்சி. தற்போது மாயாவதி தலைமையில் உத்திர பிரதேசத்தில் முழுமையாகவும், மற்ற மா நிலங்களில் அடியெடுத்து வைத்துக் கொண்டு இருக்கும் கட்சி. சின்னம் : யானை. கொடி : நீல நிற பின்னணியில் நடுவில் யானை சின்னத்துடன்.
5. திராவிட முன்னேற்றக் கழகம் : பெரியார் ராமசாமி அவர்களின் திராவிடக் கழகம் கட்சியிலிருந்து பிரிந்து சி.என். அண்ணாதுரை அவர்களால் 17.9.1949ல் தொடங்கப்பட்ட கட்சி. 1967ல் முதன் முதலில் தமிழ் நாட்டில் ஆட்சி அமைத்து, மா நில மற்றும் மத்திய அளவில் ஒரு சக்தி வாய்ந்த கட்சியாகக் கருதப்படுகிறது. 1972க்குப் பிறகு சற்று முன்னும் பின்னுமாக, தமிழ் நாடு, புதுச்சேரியில் இயங்கிவரும் கட்சி. இதுவரை சி.என். அண்ணாதுரை (1949-1969) மற்றும் எம். கருணா நிதி (1969 முதல்) இருவர் மட்டுமே தலைவராக இருந்துள்ளனர். சின்னம் : உதயசூரியன். கொடி : கருப்பு, சிவப்பு கிடைமட்ட பட்டைக் கொடி. செய்தி மடல் : முரசொலி.
அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் :
திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து பிரிந்து எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களால் 17.10.1972 ஆரம்பிக்கப்பட்ட கட்சி. மாநில அளவில் சக்தி வாய்ந்த கட்சியாகவும், தேசிய அளவில் ஒரு மதிப்பிற்குரிய கட்சியாக செல்வி. ஜெயலலிதா அவர்களின் தலைமையில் இயங்கி வரும் கட்சி. சின்னம் : இரட்டை இலை; கொடி : கருப்பு, வெள்ளை மற்றும் சிகப்பு கிடைமட்டப் பட்டைக் கொடி. செய்தி மடல் : நமது எம். ஜி. ஆர்.
6. தேசிய முற்போக்கு திராவிட கழகம் : தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய்காந்த் அவர்களால் 14.09.2005ல் ஆரம்பிக்கப்பட்ட தமிழக கட்சி. வளர்ந்து வரும் கட்சி. கொடி : சிகப்பு கருப்பு கிடைமட்ட பட்டையின் நடுவில் மஞ்சள் நிற வட்டத்தில் சுடர் ஒளி தாங்கிய கைச் சின்னம் பதிக்கப்பட்டுள்ளது.
7. அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் : காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து, ம ம்தா பானர்ஜி அவர்களால் 1.1.1998 அன்று ஆரம்பிக்கப்பட்ட கட்சி. மேற்கு வங்காளத்தில் முழுமையாகவும், சில கிழக்கு மா நிலங்களில் சிறிதளவுமாக இயங்கி வரும் கட்சி. தேசிய அரசியலில் ஒரு சக்தி வாய்ந்த கட்சி. 2011 மேற்கு வங்க தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்று, ஆட்சி நட த்தி வருகிறது. கொடி : மூவர்ணக் கொடியின் வெள்ளைப் பட்டையில் 6 இதழ் கொண்ட புல் பூக்கள் (ஐராகாஸ்ஃபூல்) பதிக்கப்பட்ட து. கட்சி செய்தி மடல் : "ஜாகோ பங்ளா" - (விழித்தெழு வங்காளம்)
8. அஸ்ஸாம் கண பரிஷத் : வங்காள தேச அகதிகள் அஸ்ஸாமில் தஞ்சமடைவதை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட ஒரு மாணவர் இயக்கம், அரசியல் கட்சியாக மாறி 1985ல் ப்ரஃபுல்ல குமார் மஹந்தோ தலைமையில் அஸ்ஸாமில் ஆட்சி அமைத்த ஒரு கட்சி. அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் இயங்கி வரும் மாநில கட்சி. கொடி : குங்குமம், வெள்ளை, நீல கிடைமட்ட பட்டையில் யானை சின்னம் பதிக்கப்பட்டது.
9. லோக் ஜன் சக்தி : ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து பிரிந்து ராம் விலாஸ் பாஸ்வானால் 28.11.2000ல் ஆரம்பிக்கப்பட்ட, முழுமையாக பீஹாரிலும், சிறிதளவில் சத்தீஸ்கரிலும் இயங்கி வரும் மாநில கட்சி. கொடி : நீலம், சிகப்பு, பச்சை கிடைமட்ட பட்டை, சிகப்பு பட்டையில் "லோக் ஜன் சக்தி" பதிக்கப்பட்டிருக்கும். சின்னம் : சொகுசு வீடு (பங்களா).
10. மகாராஷ்டிரவாடி கோமண்டக் கட்சி : கோவா மாநிலத்தில் வாழும் மகாராஷ்டிரா மக்களால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி. கோவா போர்ச்சுகல்லிடமிருந்து கைப்பற்றப்பட்ட பிறகு, கோவாவை 1963 முதல் 1979 வரை ஆட்சி செய்த முதல் மாநில கட்சி. கோவாவுக்குள்ளேயே அடங்கி இருக்கும் இக்கட்சி, 1979க்கு பிறகு, கட்சி உட்பூசல், கட்சித் தாவல் போன்ற காரணங்களால் மெதுவாக பின் தள்ளப்பட்டு வரும் ஒரு கட்சி. சின்னம் : சிங்கம்.
11. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் : திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்து, 6.5.1994 அன்று V. கோபாலசாமி (வை.கோ) அவர்களால் தொடங்கப்பட்ட கட்சி. தென் மாவட்டங்களில் இயங்கி வரும் மாநில கட்சி, சமீப காலத்தில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. சின்னம் : பம்பரம்; கொடி : சிகப்பு, கருப்பு, சிகப்பு கிடைமட்ட பட்டை.
12. பாட்டாளி மக்கள் கட்சி : வன்னிய சமுதாய நலன் கருதி ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்பு, அரசியல் கட்சியாக 1989ல் டாக்டர் S. ராமதாஸ் அவர்களால் நிறுவப்பட்ட து. தமிழகத்தின் வட மாநிலங்களில் இயங்கி வரும் மாநில கட்சி. சின்னம் : மாங்கனி; கொடி : நீலம், மஞ்சள், சிகப்பு கிடைமட்ட பட்டை.
13. தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்: 14.9.2005ல் தமிழ் சினிமா நடிகர் விஜய்காந்த் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த கட்சி தமிழ் நாட்டில் வளர்ந்து வரும் ஒரு கட்சி.
14. பிஜூ ஜனதா தளம் : ஜனதா தளத்திலிருந்து பிரிந்து, 26.12.1997 அன்று பிஜூ பட் நாயக் அவர்களால் ஒடிசா மா நிலத்தில் தொடங்கப்பட்ட ஒரு மாநில கட்சி. ஒடிசா மாநிலத்திலும், தேசிய அரசியலிலும் ஒரு வலுவான கட்சியாக கருதப்படுகிறது. சின்னம் : சங்கு.
15. ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு : 11.6.1939 அன்று ஷேக் அப்துல்லா அவர்களால் தொடங்கப்பட்ட ஒரு மாநில கட்சி. மாநில மற்றும் தேசிய அரசியலில் ஒரு பெரும் பங்கு வகிக்கும் கட்சி. சின்னம் : ஏர் கலப்பை. கொடி : சிவப்பு பின்னணியில் ஏர் கலப்பை சின்னம் பதித்தது. தற்சமயம் ஒமர் அப்துல்லா தலைமையில் இயங்கி வருகிறது.
16. ஜனதா தளம் (ஐக்கிய) : ஜனதா தளத்திலிருந்து பிரிந்து 30.10.2003 அன்று நித்திஷ் குமார் அவர்களால் ஷரத் யாதவ் அவர்களுடன் இணைந்து தொடங்கப்பட்ட ஒரு கட்சி. பீஹார், சத்தீஸ்கர் மற்றும் சில கிழக்கு மாநிலங்களில் இயங்கி வரும் கட்சி. சின்னம் : இட து புறம் பாயும் அம்பு. கொடி : பச்சை, வெள்ளை, பச்சை கிடைமட்ட பட்டை வெள்ளை பட்டையின் அம்பு பதித்திருக்கும்.
17. ஜனதா தளம் (மத சார்பற்ற) : ஜனதா தளத்திலிருந்து பிரிந்து முன்னாள் பிரதமர் தேவ கவுடா அவர்களால் ஜூலை 1999 ல் தொடங்கப்பட்ட கர்நாடகாவில் இயங்கி வரும் ஒரு மாநில கட்சி. கொடி : பச்சை, வெள்ளை, பச்சை செங்குத்துப் பட்டை, வெள்ளைப் பட்டையில் நெற் கதிர்களை சுமக்கும் ஒரு பெண்மணி.
18. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா : மலை வாழ் மக்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். 1972ல் சிபு சோரேன் தலைமையில் அரசியல் கட்சியாக உருவெடுத்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மட்டுமே இயங்கி வரும் ஒரு மாநில கட்சி. சின்னம் : வில் அம்பு.
19. சிவ சேனா : 19.6.1966 அன்று பாலா சாகேப் தாக்கரே அவர்களால் உருவாக்கப்பட்ட, மகாராஷ்டிரா மாநிலத்தில் தீவிரமாக இயங்கி வரும் ஒரு மாநில கட்சி. தற்சமயம் உத்தவ் தாக்கரே தலைமையில் இயங்குகிறது. கொடி : காவி நிற பின்னணியில் மேல் நோக்கிய வில் அம்பு (சின்னம்) பதித்தது. தேசிய அரசியலில் ஒரு வலுவான கட்சியாக கருதப்படுகிறது.
20.. தெலுங்கு தேசம் கட்சி : தெலுங்கு சினிமா உலகின் மிகப் பிரபலமான N.T. ராமராவ் அவர்களால் தொடங்கப்பட்ட ஒரு கட்சி. தெலங்கானா பிரிவிற்குப் பிறகு, ஆந்திராவின் தெற்கு கிழக்கு மாவட்டங்களில் இயங்கி வரும் ஒரு வலுவான கட்சி. தேசிய அரசியலிலும் ஒரு வலுவான கட்சியாக கருதப்படுகிறது. தற்சமயம் N. சந்திர பாபு நாயுடு தலைமையில் கட்சியும் ஆட்சியும் இயங்குகிறது. சின்னம் : சைக்கிள். கொடி : மஞ்சள் பின்னணியில் ஏர் கலப்பை, இயந்திர சக்கரம், வீடு பதிக்கப்பட்ட து.
21. தெலங்கானா ராஷ்டிர சமிதி : தனி தெலங்கானா மாநில இயக்கம். ஏப்ரல் 27, 2001 அன்று கே. சந்திரசேகர் ராவ் தலைமையில் அரசியல் கட்சியாக உருவெடுத்து, 2014 ஜூன் முதல் ஆட்சி செய்து வரும் ஒரு மாநில கட்சி. வருங்காலத்தில் தேசிய அரசியலில் கணிசமான பங்கு பெறக்கூடிய ஒரு கட்சி. கொடி : இளஞ்சிவப்பு பின்னணியில் தெலங்கானா மாநில எல்லை வரை படம்.
22. ஷிரோமனி அகாலி தளம் : அகாலி தளத்திலிருந்து பிரிந்து இயங்கி வரும் பல பிரிவுகளில் இதுவும் ஒன்று. ப்ரகாஷ் சிங் பாதல் தலைமையில் பஞ்சாப் மாநிலத்தில் இயங்கி வரும் ஒரு மாநில கட்சி. சின்னம் : துலாபாரம். கொடி : கரு நீல பின்னணியில் துலாபார சின்னம் பதிக்கப்பட்ட து.
23. சமாஜ் வாடி கட்சி : ஜனதா தளத்திலிருந்து பிரிந்த முலாயம் சிங் யாதவ் அவர்களால் 4.10.1992 முதல் இயங்கி வரும் ஒரு உத்திர பிரதேச மாநிலக் கட்சி. மா நிலத்தின் சட்டசபை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில், தேசிய அரசியலில் ஒரு வலுவான கட்சியாக கருதப்படுகிறது. சின்னம் : சைக்கிள். கொடி : இரண்டில் மூன்று பங்கு சிவப்பு, ஒரு பங்கு பச்சை கிடை மட்ட பட்டையின் நடுவில் சைக்கிள் சின்னம்.
24. Y.S.R. காங்கிரஸ் கட்சி : காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய Y.S. ஜகன் மோகன் ரெட்டி, (மறைந்த Y.S. ராஜ சேகர ரெட்டி - முதல் மந்திரியின் மகன்) தலைமையில் 12.3.2011 முதல் நடந்து வரும் ஆந்திர மாநில கட்சி. மாநில மற்றும் மத்திய அரசியலில் ஓரளவுக்கு சக்தி வாய்ந்த கட்சியாகக் கருதப்படுகிறது. சின்னம் : தள மின்விசிறி. கொடி : நீல, வெள்ளை (இரண்டு பங்கு) பச்சை செங்குத்து பட்டை. வெள்ளை பட்டையில் ராஜ சேகர ரெட்டி உருவமும் அதைச் சுற்றி முக்கிய துறைகளின் உருவங்களும் பதிக்கப்பட்டுள்ளது.
25. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்: திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து பிரிந்து, 17.10.1972 அன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு. எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களால் நிறுவப்பட்ட கட்சி. கருப்பு, வெள்ளை மற்றும் சிகப்பு நீள்பட்டை (horizontal stripes)  வண்ணக் கொடி. இரட்டை இலை இதன் சின்னம். "நமது எம்.ஜி.ஆர்" இக்கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட செய்தித்தாள். தமிழ் நாட்டு அரசியலில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஒரு மாநில கட்சி.  இக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் கட்சியின் நிர்வாகி, தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த செல்வி.ஜெயலலிதா  டிசம்பர் 5, 2016ல் மறைந்த பிறகு, இக்கட்சியில் இரு பிரிவுகள் ஏற்பட்டு,  ஒரு நிரந்தரமான கட்சிப் பொறுப்பு யார் என்பது ஒரு முடிவு பெறாத நிலையில் உள்ளது.