Khub.info Learn TNPSC exam and online pratice

கொடிகள் -- FLAGS

Q1. கொடிகளைப் பற்றிய ஆய்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Vexillology.

Q2. கொடி என்பது என்ன, அதன் பயன் என்ன?
ஒரு துண்டு துணி, பொதுவாக செவ்வகம், ஒரே வண்ணம், அல்லது சில வண்ணங்கள் கலவை, வெறும் பட்டைகளாக உயர மற்றும் கிடை மட்டத்தில், நடுவில் பல வகையான சித்திர வடிவங்கள் ஆகியவை கொண்டதாக இருக்கக்கூடியது. இது ஒரு நாடு, நிறுவனம், அரசியல் கட்சி என பலவகை அமைப்புகளின் அடையாளத்தை எடுத்துக் கூறுமாறு அமைக்கப்படுகிறது. கொடி வைத்துக்கொள்ளும் பழக்கம் புராண காலத்திலிருந்தே இருந்து வருவதாக தெரிகிறது. கொடிகளில் நடுவில், ஓரத்தில்,காணப்படும் சித்திர வடிவங்கள் ஆங்கிலத்தில் “motif” மற்றும் “Charge” என அழைக்கப்படுகிறது.
Q3. கொடிகளின் பல பகுதிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Field: ஒரு கொடியின் பின்னணி வண்ணம். இதில் தான் பல சித்திரங்கள், சின்னங்கள், அடையாளங்கள் பதிக்கப்படுகின்றன.
Charge: கொடியின் நடுவில் போடப்பட்டிருக்கும் பல வகை சின்னங்கள்/அடையாளங்கள்.
Fimbriation: கொடியின் ஓரங்களில் அல்லது பட்டை வண்ணங்களுக்கிடையில், வெள்ளை அல்லது தங்க நிறத்தில் போடப்படுவது. உதாரணம்: தென் ஆப்பிரிக்க கொடி.
Canton: கொடியின் எந்த ஒரு கால் பங்கு பகுதி. பொதுவாக ஒரு கொடியின் இடக்கை மேல் பகுதி.
உதாரணம்: அமெரிக்க கொடியின் இடக்கை மேல்பகுதியில் உள்ள கால் பங்கு -- நட்சத்திரங்கள் உள்ள இடம்.
Q4. கொடிகள் பொதுவாக என்ன வடிவத்தில் இருக்கும், நீள அகல விகிதம் என்ன?
பொதுவாக செவ்வகம். இதன் அகலம் : நீளம் விகிதம் == 2:3 .
Q5. கொடிகள் பறக்கவிடப்படும் கம்பம் ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Flag Pole or Flag Mast.
Q6. உலகின் உயரமான கொடி கம்பம் எங்குள்ளது?
(1) சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் உள்ள கொடி கம்பம் - 170 மீ உயரம் - 23.9.2014 அன்று நிறுவப்பட்டது.
(2) இரண்டாவது உயரமான கொடி கம்பம் -- துஷனபே, தஜிகிஸ்தான் -- 165 மீ உயரம் - மே, 2011.
Q7. இந்தியாவின் உயரமான கொடி கம்பம் எங்குள்ளது?
ராஞ்சி -- ஜார்க்கண்ட் -- 293 அடி உயரம் 23.1.2016
Q8. கொடிகளில் அமைக்கப்படும் வடிவங்களின் அடிப்படை வடிவங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Glossary of vexillology -- விகிபீடியா (ஆங்கிலத்தில் கேள்வி 8 ஐ பார்க்கவும்) designs available in the sight.
Q9. தொடர்ந்து பறக்கவிடப்படும் உலகின் மிகப்பெரிய கொடி எது?
ப்ரேசில் நாட்டு கொடி --3380 SQFT/8740 SQFT -- தலைநகர் ப்ரேசிலியா (Square of the Three Powers).
Q10. கொடி பறக்கப்படுவதில் சிறப்பு வழிகள் உண்டு. அதில் இரண்டு முக்கிய நிலைகள் இதில் சில குறிப்பிட்ட நிகழ்வுகளை எடுத்துக்கூறும். அது எது?
1. கொடிகள் குறிப்பாக, தேசிய கொடிகள், சூரிய உதயத்திலிருந்து சூரிய மறைவு வரை மட்டுமே பறக்க விடப்படவேண்டும்.
2. ஏற்றும் போது, இறக்கும் போது, கொடி மண்ணில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
3. ஏற்றும் போது வேகமாகவும், இறக்கும் போது மெதுவாகவும் இறக்கவேண்டும்.
4. இந்தியாவை பொருத்த வரை, பருத்தியாலான கொடியே பயன்படுத்தப்பட வேண்டும்.
கொடிகளை பறக்க விடும் போது, சில நிகழ்வுகளுக்கேற்ப சில வழிமுறைகள் உண்டு. அவை:
அரைக் கம்பம் Half Mast: தேசிய/மாவட்ட அளவில் துக்க நாளாக நாட்டு தலைவரின் மறைவைக் குறிக்கிறது. இம்முறை தேசிய, மாவட்ட அளவிலும் அனுசரிக்கப்படுகிறது.
தலை கீழாக Up Sid Down: நாட்டில் மிக மோசமான ஏதேனும் நிகழ்வு -- தொற்று நோய், பூகம்பம் என ஏதேனும் நிகழ்வு ஏற்பட்டிருக்கும் போது, கொடி இவ்வாறு பறக்கவிடப்படும்.
Q11. எந்த ஒரு அடையாளமோ, சின்னமோ இல்லாமல், ஒரு குறிப்பிட்ட வண்ணத்தில் உருவாக்கப்படும் கொடிகள் சில முக்கியமான விஷயங்களை மட்டும் குறிக்கும். அது என்ன?
வெள்ளை White: அமைதி அல்லது சரணடைவது
சிகப்பு Red: தொற்று நோய் நோயாளியை ஏற்றிச் செல்லும் போது
வெள்ளை பின்னணியில் சிகப்பு சிலுவை Red Cross/Red Crescent in White Field: செஞ்சிலுவை சங்கம் - ஊழியர்கள் பணி செய்யும் இடங்களில் காணப்படும்.
Q12. ஒரு கொடியில் சக்கர சின்னம் பொருத்தப்பட்டிருந்தால், அது குறிப்பது....
வளர்ச்சியின் அறிகுறி.
Q13. நவீன காலத்தில், உலகில் உள்ள எல்லா கொடிகளையும் விட, பறக்க விடப்படும் போது அதிக மரியாதையும் கௌரவமும் கொடுக்கப்படும் கொடி எது?
ஐ.நா.சபையின் கொடி.
Q14. ஐ.நா சபையின் கொடி எவ்வாறிருக்கும் ?
முழுவதுமாக வான் நீல நிற பின்னணியில், நடுவில் உலக வரைபடம், அதைச் சுற்றி, ஆலிவ் மரக் கிளைகள்.
Q15. ஐ.நா.சபை கொடியின் நடுவில் உள்ள சித்திரத்தை வடிவமைத்தவர் யார்?
Donald Mc Laughlin -- அமெரிக்கா.
Q16. ஐ.நா.சபை கொடி எப்போது முதல் ஏற்றுக்கொள்ளப்பட்டது?
20.10.1947
Q17. ஐ.நா.சபையின் இதர துணை நிறுவனங்களின் கொடிகள் எவ்வாறு உள்ளன?
Flag of the United Nations -- wikipedia/list of subsidiary organizations of UN
Q18. உலகின் இதர சேவை நிறுவனங்களின் கொடிகள் எவ்வாறு உள்ளன?
Red Cross, Blue Cross, etc
Q19. உலக நாடுகளின் கொடிகள் :













Q20. உலக நாடுகளின் கொடிகளுக்கு ஒரு பொதுவான ஆங்கில தொடர் பயன்படுத்தப்படுகிறது. அது என்ன, காரணம்?
மூவர்ணம் -- Tricolour – பொதுவாக தேசிய கொடிகள் மூன்றுவண்ணங்கள் கொண்டதாக இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது. உதாரணம்: இந்தியா, ஃப்ரான்ஸ், நெதர்லாந்து .
Q21. உலகின் பழமையான மூவர்ணக்கொடி எது, அதன் சிறப்பு அம்சம் என்ன?
நெதர்லாந்து. ஒரு விதி விலக்காக, இந்த நாட்டு மன்னர் பரம்பரை விழாவுக்கும் இதை பயன் படுத்துகின்றனர். அவ்வாறு பயன் படுத்தும் போது, ஒரு ஆரஞ்சு வண்ண ரிப்பன் சேர்க்கப்படும்.
Q22. உலகின் மிகப்பழமையான தேசியக் கொடி எது?
டென்மார்க் -- இதை டேனிஷ் மொழியில் “Dannebrog” என அழைப்பர் .
Q23. ஒலிம்பிக் இயக்கத்தின் கொடி அமைப்பு எவ்வாறிருக்கும்?
வெள்ளை பின்னணியில், இணைக்கப்பட்ட ஐந்து வண்ண வளையங்கள் -- நீலம், மஞ்சள், கருப்பு, பச்சை மற்றும் சிகப்பு -- கொண்டது. இதை 1914ல் வடிவமைத்தவர் Pierre de Coubertin, 1920 ஆண்ட்வெர்ப், பெல்ஜியம் ஒலிம்பிக் முதல் பயனில் உள்ளது.
Q24. உலகில், செவ்வகம் அல்லாத வடிவத்தில், மூன்று நாடுகளின் கொடிகள் உள்ளன. அவை யாவை?
1. நேபாளம் Nepal: ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட முக்கோணங்கள் 2 & 3: ஸ்விட்சர்லாந்து மற்றும் வத்திகான் -- சதுர வடிவம்.
Q25. உலகின் இரு நாடுகளின் கொடிகளின் இரு பக்கங்களிலும் வெவ்வேறு சித்திர வடிவங்கள் பதிக்கப்பட்டிருக்கும். அவை யாவை?
மோல்டோவா மற்றும் பாராகுவே. (ஒவ்வொரு நாட்டின் கொடியின் இரு பக்கத்தையும் போடவும்)
Q26. உலக நாடுகளின் கொடிகளில், ஒரு நாட்டின் கொடி, 1961 முதல் 2001 வரை, ஒரு ஆங்கில எழுத்தை மையத்தில் கொண்டிருந்தது. அது என்ன எழுத்து, எந்த நாடு?
"R" -- ரவாண்டா. 1961-2001 வரை பயனில் இருந்தது.
Q27. பொதுவாக தேசிய கொடியை தலைகீழாக பறக்க விடுவது, ஏதேனும் மிக மோசமான அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் போது. ஆனால் ஒரு நாடு மட்டும், இந்த பழக்கத்தை வேறு ஒரு முக்கியமான நிகழ்வுக்கும் பயன் படுத்துகிறது. எந்த நாடு, என்ன காரணம்?
பிலிப்பைன்ஸ் -- போர் காலங்களில்.
Q28. துருக்கியை மையமாக கொண்டு ஆண்ட ஆட்டோமான் ராஜ்யத்தின் கொடியை தனது நாட்டுக் கொடியாக ஏற்றுக் கொண்டுள்ள நாடு எது?
ஈரான்
Q29. கம்யூனிச நாடுகளின்/சங்கங்களின் கொடிகளில் பொதுவாக காணப்படும் சின்னங்கள் யாவை?
சுத்தி அரிவாள் Hammer and sickle.
Q30. “Union Jack” என அழைக்கப்படுவது எந்த நாட்டுக் கொடி?
ஐக்கிய ராஜ்யம் -- United Kingdom (இங்கிலாந்து).
Q31. அமெரிக்க தேசிய கொடியின் சிறப்ப் பெயர்கள் என்ன? Nicknames
“Stars & Stripes” "Old Glory” and "Star Spangled Banner”.
Q32. அமெரிக்க தேசிய கொடி எப்போது முதல் ஏற்கப்பட்டது?
14.7.1777.
Q33. அமெரிக்க தேசிய கொடி எப்படி அமைக்கப்பட்டுள்ளது?
அதிபர் ட்வைட் ஐசநோவர் உத்தரவின் படி, தற்சமயம் உள்ள தேசிய கொடி ஜூலை 1960 முதல் பயனில் உள்ளது. இதன் இடது கை மேல் பகுதியில் உள்ள ஒரு நீல நிற செவ்வகத்தினுள் 50 நட்சத்திரங்கள் (மாகணங்களின் எண்ணிக்கை) கிடை மட்டத்தில் 9 வரிசையில் (6, 5 என்ற வரிசையில்) கொண்டிருக்கும். மீதமுள்ள பகுதியில், கிடை மட்டத்தில், 7 சிகப்பு 6 வெள்ளை பட்டைகள் மாறி மாறி அமைந்திருக்கும். இந்த 13 கிடை மட்ட பட்டைகள், மாகாணங்கள் உருவாவதற்கு முன்பாக இருந்த ஆங்கிலேய காலனிகளை குறிப்பதாக அமைந்திருக்கும்.
Q34. பகல் நேரங்களில் ரயில்வே போக்குவரத்து பணியில் இரண்டு வண்ணக் கொடிகள் பயன் படுத்தப்படுகிறது. அவை என்ன, பயன் என்ன?
சிகப்பு -- போக்குவரத்தை நிறுத்துவதற்கு. பச்சை -- போக்குவரத்து நகர்வதற்கு.
Q35. கப்பல் கடல் வழி போக்குவரத்துக்கு, பல விதமான செய்திகளை தெரிவிக்கும் வகையில் எவ்வகையான கொடிகள் பயன்படுத்தப்படுகின்றன?
26 வகையான கொடிகள் உண்டு. ஒவ்வொன்றும் ஆங்கில 26 எழுத்துகளை குறிப்பதாகவும், ஒவ்வொரு பெயரை கொண்டதாகவும், ஒவ்வொரு செய்தியை தெரிவிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. ( International Maritime Signal Flags என கணினியில் உலவி பார்க்கவும்).
Q36. குடும்ப கட்டுப்பாடு திட்டத்தின் கொடி அமைப்பு எவ்வாறு இருக்கும்?
வெள்ளை பின்னணியில் நடுவில் சிகப்பு வண்ண முக்கோணம் தலைகீழாக பொருத்தப்பட்டிருக்கும்.
Q37. எந்த நாட்டுக் கொடி, வெள்ளை பின்னணியின் நடுவில் ஒரு சிகப்பு வட்டம்?
ஜப்பான்
Q38. ஒரு குறிப்பிட்ட உருது வாக்கியம், இரான் நாட்டு கொடியில் 22 முறையும், இராக் நாட்டு கொடியில் ஒரு முறையும் பொறிக்கப்பட்டுள்ளது. அது என்ன?
"தக்பீர்" Takbir. (Allahu Akbar – God is Great) in Kufic script.
Q39. சிகப்பு பின்னணியில் ஐந்து இதழ் கொண்ட வெள்ளை மலர் கொண்ட கொடி …..?
ஹாங்காங் தேசிய கொடி
Q40. எந்த நாட்டு கொடியின் நடுவில் பச்சை வண்ண செடார் மரம் சின்னம் உள்ளது?
லெபனான்.
Q41. எந்த நாட்டு கொடியின் இடது கை மேல் மூலையில் சூரியனும், மீதமுள்ள பகுதியில் வெள்ளை, வெளிர்நீல கிடைமட்ட பட்டையும் உள்ளது?
உருகுவே
Q42. எந்த நாட்டு கொடி முதலில் வடதுருவத்தில் நிறுத்தப்பட்டது?
நார்வே
Q43. ஜோர்டான் நாட்டு கொடியில் உள்ள ஏழு முனை நட்சத்திரம் எதைக் குறிக்கிறது?
இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் முதல் ஏழு வாக்கியங்கள்.
Q44. ஐக்கிய ராஜ்ய UK’s கொடியில் எத்தனை நீல நிற முக்கோணங்கள் உள்ளன?
எட்டு
Q45. ஐ.நா.சபை கொடியில் எந்த மரக்கிளைகள் உள்ளன?
ஆலிவ்
Q46. ஃப்ரான்ஸ் நாட்டு கொடியில் பறக்கவிடும் பகுதியின் அருகில் உள்ள வண்ணம் எது?
நீலம்
Q47. எந்த ஆசிய நாட்டு கொடியின் பறக்கவிடும் பகுதியில் வெள்ளையும், 9 கூர் முனைகளும் கொண்டு, மெரூன் வண்ணத்துடன் இணைக்கப்பட்டுள்ளது?
கத்தார்
Q48. எந்த நாட்டுக் கொடி மெரூன் வண்ணத்தில், இரண்டு முக்கோணங்கள் ஒன்றின் மீது ஒன்றாக காற்று போக்கில் அடுக்கிய விதத்தில் உள்ளது?
நேபாளம்
Q49. சௌதி அரேபிய நாட்டுக் கொடியில் எழுதப்பட்டுள்ள உருது வாக்கியங்கள் கூறுவது?
""அல்லாவைத் தவிர்த்து வேறு கடவுள் கிடையாது, முகமது அவருடைய சீடர்"" “There is no God but Allah, and Mohammad is his prophet” written in Thuluth script.
Q50. டொமினிகா நாட்டு கொடியின் நடுவில் உள்ள ஒரு பறவையைச் சுற்றி 10 நட்சத்திரங்கள் போடப்பட்டுள்ளது. அந்த பறவை என்ன?
கிளி -- Sisserou Parrot.
Q51. ஆப்கானிஸ்தான் நாட்டு கொடி எவ்வகையில் முக்கியத்துவம் பெறுகிறது?
1747ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கொடியில் 20 மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 20ம் நூற்றாண்டில் மட்டும் 7 முறை மாற்றங்கள் செய்யப்பட்டது. இந்த அளவு மாற்றங்கள் எந்த நாட்டு கொடியிலும் ஏற்படவில்லை என்பதே இதன் முக்கியத்துவம்.
Q52. அல்பேனிய நாட்டு கொடியின் சிறப்பு அம்சம் என்ன?
1. இருதலை கொண்ட கழுகு சின்னம் சிகப்பு பின்னணியில்
2. சிகப்பு, கருப்பு இரு வண்ணங்கள் மட்டுமே கொண்ட ஒரு நாட்டு கொடி.
Q53. ஆஸ்திரேலிய கொடியில் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன, அவற்றின் அமைப்பு எவ்வாறு உள்ளது? Out of the 6 stars found in the flag of Australia, how many are 5 pointed stars?
ஆறு நட்சத்திரங்கள் -- ஒன்று பெரியது, ஒன்று சிறியது -- மற்ற நான்கும் ஒரே அளவானது. இதில் சிறிய நட்சத்திரம் மட்டும் ஐந்து முனை கொண்டதாகவும், மற்றவை ஏழு முனை கொண்டதாகவும் உள்ளது.
Q54. அஸர்பைஜான் நாட்டு கொடியின் நடு சிகப்பு பட்டையில் ஒரு பிறையும், ஒரு நட்சத்திரம் உள்ளது. நட்சத்திரம் எத்தனை முனை கொண்டது?
எட்டு.
Q55. பஹ்ரைன் நாட்டு கொடியில் உள்ள வெள்ளைப் பகுதியில் காணப்படும் ஐந்து கூர் முனை எதைக் குறிக்கிறது?
இஸ்லாமிய மதத்தின் ஐந்து முக்கிய குறிக்கோள்கள் -- Five Pillars of Islam.
Shahadah: இஸ்லாமிய மதத்தின் மீதுள்ள நம்பிக்கையை எடுத்துரைப்பது. .
Salat: தினமும் ஐம்முறை பிரார்த்தனை நடத்துவது.
Zakat: ஏழைகளுக்கு தானம் அளிப்பது.
Sawm: ரமதான் மாதத்தில் உண்ணாநோன்பு இருப்பது.
Hajj: மெக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொள்வது.
Q56. பார்பேடோஸ் நாட்டு கொடியில் காணப்படும் திரிசூலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Broken Trident.
Q57. பெலிஸ் நாட்டுக் கொடியின் மத்தியில் வட்டவடிவ சின்னத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வட்ட இலை மாலையில் எந்த மரம் இலைகள் உள்ளன?
மஹொகனி (சீமை நூக்கு மரம்)
Q58. பூட்டான் நாட்டு கொடியின் நடுவில் எதன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது?
ட்ரேகன் -- Dragon.
Q59. ...........................நாட்டு பச்சை பின்னணி கொடியின் நடுவில் போடப்பட்டிருக்கும் சாய்வு சதுரம் rhombus, அதில் ஒரு நட்சத்திரகூட்டம் கொண்ட வட்ட வானம், அவ்வட்டத்தின் நடுவை சுற்றி தேசிய குறிக்கோள் பதித்த ஒரு பட்டை என்ற வடிவத்தில் உள்ளது?
ப்ரேசில்
Q60. ப்ரூணே நாட்டு கொடியின் மத்தியில் உள்ள சின்னத்தில் உள்ள பிறையிலும், அதன் கீழ் உள்ள பட்டையிலும் உள்ள உருது வாக்கியங்கள் எதைக் குறிக்கிறது?
"" ப்ரூணே நாடு, அமைதியின் உறைவிடம் "" கடவுளின் வழிகாட்டுதலில், எப்போது சேவையில்"" “State of Brunei, Abode of Peace” “Always in service, with God’s guidance”.
Q61. புருண்டி நாட்டு கொடியில் உள்ள மூன்று ஆறு முனை நட்சத்திரங்கள் எதை குறிக்கிறது?
அந்த நாட்டு பழங்குடி இன மக்களான -- Hutu, Twa and Tulsi.
Q62. கம்போடியா நாட்டு கொடியில் உள்ள உலக புராதனச் சின்னம் எது?
ஆங்கோர்வாட் கோவில் -- Angkorvat Temple.
Q63. கேனடா நாட்டு கொடியின் நடுவில் உள்ள சின்னத்தில் உள்ள இலை என்ன?
மேப்பிள் Maple என்ற மரத்து இலை.
Q64. கேப் வேர்டி நாட்டு கொடியில் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன?
ஐந்து முனை கொண்ட 10 நட்சத்திரங்கள் வட்ட வடிவில் கொடியின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது.
Q65. சீன மக்கள் குடியரசு நாட்டின் கொடியில் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன?
ஐந்து -- கொடியின் இடது கை மேல் பகுதியில். இவற்றில் ஒன்று பெரியதாக இருக்கும்.
Q66. ஒரு நாட்டு கொடியின் இடது கை ஓரத்தில், ஒரு பச்சை உள்பக்க முக்கோணத்தில், ஒரு பிறையும், அந்த பிறையின் முனைகளை தொடுமாறு உயரவாக்கில் நான்கு நட்சத்திரங்களும் பொருத்தப்பட்டுள்ளன. இது எந்த நாட்டு கொடி?
கொமொரோஸ் -- Comoros
Q67. எந்த நாட்டுக் கொடியில் தங்களது நாட்டு முழு எல்லைப்பகுதி சின்னமாக பதிக்கப் பட்டுள்ளது?
சைப்ரஸ் -- தீவு நாடு -- தாமிர ஆரஞ்ச் வண்ணத்தில், அதன் கீழ் இரண்டு ஆலிவ் இலை கிளைகள் (இதே போல் இன்னும் முழுமையாக அங்கீகரிக்கப்படாத நாடு கொசோவோ கொடியும்).
Q68. போஸ்னியோ & ஹெர்ஸேகோவினா நாட்டுக் கொடியில் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன. அதில் எத்தனை பகுதி நட்சத்திரங்களாக உள்ளன?
ஒன்பது -- அவற்றில் இரண்டு அரை நட்சத்திரங்களாக உள்ளன.
Q69. எகிப்து நாட்டின் கொடியில் உள்ள கழுகு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Eagle of Saladin.
Q70. க்ரீஸ் நாட்டு கொடியில் எத்தனை கிடைமட்ட பட்டைகள் உள்ளன?
ஒன்பது -- ஐந்து நீலம், நான்கு வெள்ளை.
Q71. ஹொண்டுராஸ் நாட்டுக் கொடியில் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன?
ஐந்து முனை கொண்ட ஐந்து நட்சத்திரங்கள்
Q72. இஸ்ரேல் நாட்டுக் கொடியில் உள்ள ஆறு முனை கொண்ட நட்சத்திரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Star of David.
Q73. ஒரு கழுகின் மேல் 36 ஒளி முனைகள் கொண்ட சூரியன் சின்னம் கொண்டுள்ள நாட்டு கொடி எது?
கஸகிஸ்தான்
Q74. கென்யன் நாட்டு கொடியில் உள்ள கேடயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Maasai.
Q75. சிகப்பு பின்னணியில், வெள்ளை, நீல கிடைமட்ட நீரலைகள் மீது, உதிக்கும் சூரியன், அதன் மேல் ஒரு பறக்கும் பறவை. இது எந்த நாட்டுக் கொடி?
கிரிபாட்டி
Q76. பறக்கவிடும் பகுதியி ஒரு கருப்பு சரிவகம்,அதை தொடர்ந்து மூன்று - பச்சை, வெள்ளை மற்றும் சிகப்பு கிடைமட்ட பட்டைகள் கொண்டது, எந்த நாட்டுக் கொடி?
குவைத்
Q77. சிகப்பு பின்னணியில், நடுவில் உள்ள வட்ட சின்னத்தை சுற்றி ………… ஒளிக்கதிர்களை கொண்ட கொடி ……………. நாட்டு கொடியாகும்.
40 -- கிர்கிஸ்தான்
Q78. ஒரு நாட்டுக் கொடியில், மத்தியில் உள்ள சின்னம் ஒரு தொப்பி. எந்த நாடு, என்ன தொப்பி?
லெஸோத்தோ -- Lesotho – தொப்பியின் பெயர் Black Mokorotlo (a Basotho hat).
Q79. மலேசிய நாட்டுக் கொடியில் எத்தனை கிடைமட்ட பட்டைகள் உள்ளன?
14. ஏழு வெள்ளை, ஏழு சிகப்பு. 13 மாகாணங்களையும், ஒரு மத்திய அரசையும் குறிக்கிறது.
Q80. மால்டா நாட்டு கொடியின் இடது கை மேல் பகுதியில் உள்ள சிலுவையின் பெயர் என்ன?
புனித ஜார்ஜ் சிலுவை -- St.George Cross.
Q81. மார்ஷல் தீவுகள் நாட்டு கொடியில் உள்ள நட்சத்திரத்தில் எத்தனை முனைகள் உள்ளன?
இருபத்தி நான்கு
Q82. மைக்ரோனேசிய நாட்டு கொடியில் எத்தனை ஐம்முனை கொண்ட நட்சத்திரங்கள் உள்ளன?
நான்கு
Q83. மங்கோலிய நாட்டு கொடியில் உள்ள தேசிய சின்னத்தின் பெயர் என்ன?
Soyombo Symbol.
Q84. நமீபிய நாட்டு கொடியில் உள்ள சூரியனில் எத்தனை ஒளிக் கதிர்கள் உள்ளன?
12
Q85. நௌரு நாட்டின் கொடியில் உள்ள 12 முனை நட்சத்திரம் எதைக் குறிக்கிறது?
அந்த நாட்டில் உள்ள 12 பழங்குடி இனங்களைக் குறிக்கிறது.
Q86. பப்புவா நியூ கினி நாட்டு கொடியில் உள்ள பறவையின் பெயர் என்ன?
Bird of Paradise.
Q87. சிகப்பு பின்னணியில், பறக்கும் பகுதியை பார்த்தவாறு ஒரு பிறை, அதை தொடர்ந்து 5 நட்சத்திரங்கள் வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருப்பது எந்த நாட்டுக் கொடி?
சிங்கப்பூர்.
Q88. சாலமன் தீவு நாட்டுக் கொடியில் உள்ள ஐம்முனை நட்சத்திரம் எதைக் குறிக்கிறது?
இந்த நாட்டில் சுமார் 1000 தீவுகள் உள்ளன. இந்த ஐம்முனை நட்சத்திரம், அந்த தீவுகளில் உள்ள ஐந்து முக்கிய தீவு கூட்டங்களைக் குறிக்கிறது -- Shortland, New Georgia, Russell, Florida and Santa Cruz islands.
Q89. ஸ்ரீ லங்கா கொடியில், சிங்க சின்னத்தின் நான்கு மூலைகளிலும் உள்ள இலைகள் என்ன?
போ (புனித அத்தி) என்ற மரத்தின் இலைகள். Bo leaves (Sacred Fig).
Q90. V வடிவத்தில், கொடியின் உயர மஞ்சள் பட்டையில், 3 வைரங்கள் பொருத்தப்பட்டிருப்பது எந்த நாட்டுக் கொடி?
St Vincent and the Grenadines.
Q91. ஸ்வாஸிலாந்து நாட்டுக் கொடியின் மத்தியில் உள்ள கேடயத்தின் பெயர் என்ன?
Emasotsha.
Q92. துவாளு நாட்டு கொடியில் உள்ள ஒன்பது நட்சத்திரங்கள் எதைக் குறிக்கிறது?
இந்த நாடு ஒன்பது தீவுகளைக் கொண்டுள்ளதை குறிக்கிறது.
Q93. உகாண்டா தேசிய கொடியில் உள்ள பறவை எது?
Grey Crowned Crane.
Q94. வத்திகான் கொடியில் எத்தனை சாவிகள் தென்படும், அவை எதைக் குறிக்கிறது?
இரண்டு - ஒன்றுக்கொன்று குறுக்காக - அவை குறிப்பது St. Peter and Papal Tiara (Crown).
Q95. வெனிசுலா நாட்டு கொடியில் நடு நீல பட்டையில் 8 நட்சத்திரங்கள், எவ்வாறு அமைக்கப் பட்டுள்ளன?
ஒரு அரை வட்டமாக (மேல் பகுதி)
Q96. ஜாம்பியா நாட்டுக் கொடியில் உள்ள சின்னத்தின் முக்கிய அம்சம் என்ன?
இந்த ஒரு நாட்டுக் கொடியில் மட்டும் சின்னம், கொடியின் பறக்கும் முனையில், வலது கைப்புறம் கீழ் மூலையில் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று வண்ண உயரப்பட்டைகளின் மீது ஒரு கழுகு பறப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது.
Q97. ஜிம்பாப்வே நாட்டு கொடியில் உள்ளது என்ன பறவை?
Soapstone bird –தேசிய சின்னம்.
Q98. தங்களது கொடியில் ஐம்முனை கொண்ட ஒரே ஒரு நட்சத்திரம் கொண்ட சில நாடுகள்:
பர்கினோ ஃபாஸோ, கேமரூன், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சிலி, ஜனநாயக காங்கோ குடியரசு, க்யூபா, டிஜிபௌட்டி, கிழக்கு திமோர், எத்தியோப்பியா, கானா, கினி பிஸாவ், வட கொரியா, லைபீரியா, மௌரிட்டானியா, மொராக்கோ, மியான்மார், செனெகல், சோமாலியா, சுரினாம், டோகோ, டுனிசியா, துருக்கி, வியட்நாம்.