Khub.info Learn TNPSC exam and online pratice

உணவும், பானமும் -- FOOD & BEVERAGES

Q1. உணவில் பொதுவாக எத்தனை பிரிவுகள் உண்டு?
சைவம் -- VEGETARIAN : தாவர ரீதியான உணவுகள் உட்கொள்பவர்கள்.
அசைவம் -- NON - VEGETARIAN : தாவர உணவுடன், விலங்குகளின் மாமிச வகைகளையும் சேர்த்துக்கொள்வது.

Q2. சைவ உணவைச்சார்ந்த இரண்டு உணவு வகைகள், ஒரு சிலரால் இன்னும் முழுமையான சைவ உணவு என்று ஏற்றுக்கொள்ளப்படாமல், குழப்ப நிலையில் உள்ளது?
முட்டை மற்றும் பால் -- இவற்றுள் எந்த வித அசைவ உணவு சத்துக்கள் இல்லாத போதிலும், அவை விலங்கிலிருந்து பெறப்படுவதால், இந்த குழப்பம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Q3. தாவரத்தின் எந்தெந்த பகுதிகள் காய்கறிகளாக பயன்படுத்தப்படுகின்றன?
வேர் -- ROOT : இவ்வகை காய்கறிகள் தாவரத்தின் வேர்ப்பகுதியில் இருந்து கிடைப்பவை.
உதாரணம்: பீட்ரூட், கேரட், டர்னிப், உருளைக்கிழங்கு, சக்கரைவள்ளிக்கிழங்கு, நூல்கோல், இஞ்சி, மஞ்சள், வெங்காயம், பூண்டு, மற்றும் சில கிழங்கு வகைகள். பொதுவாக கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளவை. இஞ்சி, பூண்டு, மஞ்சள் ஆகியவை மருத்துவ குணங்கள் அடங்கியவை. கேரட்டில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது.
கீரை -- LEAF: தாவரங்களின் இலைப்பகுதிகள் -- இதில் பல வகை உண்டு. மருத்துவர்களால் அதிகம் பரிந்துரைக்கப்படும் உணவு. குறைவான கலோரி, கொழுப்பு சத்து -- அதிகமான புரோட்டீன், நார்சத்து, இரும்புசத்து, கால்சியம், வைட்டமின் சி, மற்றும் பல சத்துக்கள் அடங்கியவை.
தண்டு -- STEM : Plant Stems – இவற்றிலும், ஒவ்வொரு ஊருக்கு தகுந்தவாறு பல வகைகள். நார்சத்து அதிகம் உள்ள உணவு வகைகள்.
மஞ்சரி -- INFLORESCENCE: பூக்கள், மொட்டுகள், இதழ்கள். உதாரணம்: காலிஃப்ளவர், ப்ராக்கோலி
மூலிகைகள் -- HERBS: விதை காய்க்கும் தாவரங்கள் -- உதாரணம்: கொத்தமல்லி, புதினா. இத்தாவரங்களில் தண்டு பகுதி அதிகம் இருக்காது, , அதிக வளர்ச்சியும் இருக்காது.
வாசனை திரவியம் -- SPICES: தாவரங்களின் காய்ந்த பட்டைகள், மொட்டு, பூவிதழ்கள், வேர் போன்றவை.
உதாரணம்: மிளகு, கிராம்பு, லவங்கம், ஏலக்காய், லவங்கப்பட்டை, குங்குமப்பூ, போன்ற பலவகைகள். இவை அநேக மருத்துவ குணங்கள் அடங்கியவை. இவை தவிர்த்து, வெந்தயம், கடுகு, சீரகம், சோம்பு போன்ற இதர பொருட்களும் உள்ளன.
உலர்ந்த பழ வகைகளும், விதைகளும்RIPENED FRUITS/SEEDS: வெந்தயம், கடுகு, மிளகு உலர் திராட்சைLike fennel, mustard, pepper etc.,
வேர், பூ மொட்டுகள் -- ROOTS/BULBS: பூண்டு, இஞ்சி , மஞ்சள் போன்றவை.
Q4. எந்த நாடு வாசனை திரவிய உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது?
இந்தியா -- சுமார் - 86%. இதை தவிர்த்து, மடகாஸ்கர், ஜான்ஸிபார் தீவு, தன்ஸானியா போன்ற இடங்களும் வாசனை திரவியங்களுக்கு மிகவும் புகழ் பெற்றவை.
Q5. அசைவ உணவுக்கு முக்கிய பங்கு விளங்கும் மிருகங்கள் யாவை?
பீஃப், வெனிசன் -- Beef, Venison -- பசு, எருது -- COW, BULL -,
சிக்கன் -- CHICKEN- கோழி மற்றும் சில இறக்கை பறவைகளுக்கும்.
வெனிசன் -- Venison -- மான், யானை, ஈமு, ஃபால்கன், ஃபெர்ரெட், ஃபென்னெல் -- DE, ELEPHANT, EMU, ELK, FALCON, FERRET, FENNEL . (PIG – Pork, Ham, Bacon), (QUAIL, RABBIT – Lapin, Lapan), (SEAL, SERPENT, SHARK, SHEEP – Lamb, Multon, Haggett), (SNAIL – Escarget), (SQUID, SQUIRREL – Calamari), (TURKEY – Poultry)."
Q6. விலங்குகளின் ஒவ்வொரு சதைக்கும் ஒரு பெயருண்டு. அவை:
இவற்றுக்கெல்லாம் தமிழில் இறைச்சி, கறி என்ற பொதுவான வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆங்கிலத்தில் கீழ்க்கண்டவாறு அழைக்கப்படுகிறது.
பீஃப், வெனிசன் -- Beef, Venison -- பசு, எருது -- COW, BULL .
சிக்கன் -- CHICKEN- கோழி மற்றும் சில இறக்கை பறவைகளுக்கும்.
வெனிசன் -- Venison -- மான், யானை, ஈமு, ஃபால்கன், ஃபெர்ரெட், ஃபென்னெல் -- Deer, Elephant, Emu, Elk, Falcon, Ferret, Fennel etc.,
போர்க், ஹாம், பேகன் -- Pork, Ham, Bacon -- பன்றி -- Pig
லபின், லபன் -- Lapin, Lapan -- குவைல், முயல் போன்றவை -- QUAIL, RABBIT.
லேம்ப், முல்டன், ஹேக்கட் -- Lamb, Multon, Haggett -- சீல், பாம்பு, ஷார்க், செம்மறி ஆடு Seal, Eal, Serpent, Sheep.
எஸ்கார்ஜெட் -- Escarget -- நத்தை SNAIL
கலமாரி -- Calamari -- ஸ்குவிட், அணில் -- SQUID, SQUIRREL.
பௌல்ட்ரி -- Poultry -- நெருப்பு கோழி -- TURKEY
Q7. உணவைப் பற்றிய படிப்புகள் யாவை?
பொதுவாக உணவு அறிவியல் FOOD SCIENCE, -- எனப்படும். இதன் கீழ் பல பிரிவுகள் உள்ளன:
Food Technology , Food Chemistry, Molecular Gastronomy, Food Engineering, Food Microbiology, Nutrition, Food Processing, Dairy Science, Sensory Analysis, Food Packaging, Food Physics, Food Preservation, Food Safety என உணவு சம்பந்தப்பட்ட கல்வி பிரிவுகள் உள்ளன. இதன் மூலம், உணவு உற்பத்தி, தரம், பாதுகாப்பு போன்ற முக்கிய அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படுகிறது.
Q8. தற்சமயம் இந்தியாவில் அதிகமாக பேசப்படும், மற்றும் பல பல்கலைகழகங்களில் தொடங்கப்பட்டுள்ள கல்வி பிரிவு Food process Technology, இத்தொழிலை வளர்க்க ஒரு தனி அமைச்சகமும் உருவாக்கப்பட்டுள்ளது. Food process உணவு பதப்படுத்துதல் என்பது என்ன?
ஒரு உணவுப்பொருள், விளைச்சல் நிலையிலிருந்து, பல முறைகள், தொழில் நுட்பங்கள் மூலம், பல நாட்களுக்கு பாதுகத்து வைத்து, நேரடியாக உட்கொள்ளும் நிலைக்கு, உற்பத்தி செய்து கொடுப்பதே இந்த அறிவியல் முறை.
Q9. உணவு படுத்துதல் தொழில்நுட்பத்தில் பொதுவாக பயன்படுத்தப்படும் அறிவியல் தொடர்கள் யாவை?
காய்ச்சும் முறை -- BREWING: மது பானங்கள் நொதித்தல் முறையில் தயாரிக்கப்படுவது.
வெட்டுதல்/துண்டுகளாக்குதல் -- CHOPPING /SLICING: பொருளை சமமான துண்டுகளாக்குதல்
பசையாக்கம் -- EMULSIFICATION: பொதுவாக சேராத இரண்டு அல்லது அதற்கு மேலான பொருளை பசையாக்கும் முறை.
நொதித்தல் -- FERMENTATION: மாவுச்சத்தை காற்றில்லா முறையில் மதுவாகவும் அமிலமாகவும் மாற்றுதல்
வாயு புகல் முறை -- GASIFICATION: உணவு பொருளில் சில வாயுக்களை உட்புகுத்துதல் -- ரொட்டி, குளிர் பானங்கள் போன்றவை.
பதப்படுத்துதல் -- KNEADING : ஒரு உணவுப்பொருள் தயாரிக்க பல பொருட்களை கலந்து தயார்
நிலைக்கு பதப்படுத்துதல் -- ரொட்டி செய்யும் முறை.
திரவ நிலைப்படுத்துதல் -- LIQUEFACTION: பானங்கள் தயாரிக்கும் முறை.
முறை -- MILLING: திட உணவுப்பொருட்களை தூள்களாகவும், நுண் தூள்களாகவும் மாற்றுதல்.
துண்டு துண்டாக்குதல் -- MINCING : பெரிய அளவிலான திட உணவுப்பொருளை துண்டுதுண்டாக்குதல்
உரித்தல் -- PEELING/SKINNING: உணவுப்பொருளின் மீதுள்ள தோல்களை உரித்தெடுப்பது.
புளிப்பாக்குதல் -- PROOFING : ஈஸ்ட் பயன்படுத்தி, பொருளுக்கு புளிப்பு தன்மேயேற்றுதல்
திரவ பதப்படுத்துதல் -- PASTEURIZATION : திரவப்பொருளை சூடேற்றி, கிரிமிகளை அழித்து, பிறகு குளிர்படுத்துதல் - பொதுவாக பால பதப்படுத்துதலில் பயன்படுத்தப்படுகிறது.
தெளித்தல் காய்ச்சல் -- SPRAY DRYING : திரவப் உணவுப்பொருளை ஒரு வாயு மூலம் உலரவைப்பது.
Q10. ஆங்கிலத்தில் “ Cuisine “ எனப்படுவது என்ன?
பொதுவாக கூறினால், சமையல் என பொருள். இருப்பினும், சமையல் முறையில் ஊர், மண்டலம், நாடு என பல இடங்களுக்கேற்ப பாரம்பரிய சமையல் முறையில், கிடைக்கும் பொருட்கள், ருசி ஆகியவையை பொறுத்து மாறுதல்கள் உள்ளது. அவ்வாறு, அந்தந்த இடத்தில் அது மிகவும் புகழ் பெற்றதாகிறது. அதனால் தான், இல்லங்களிலும், உணவு விடுதிகளிலும், அந்த மண்டல உணவை சில நேரங்களில் தவிர்த்து, வேறு பகுதி உணவுகளை தயாரித்து/வாங்கி உண்ணும் ஒரு ஊக்கம் மக்களிடையே பரவியுள்ளது. அவ்வாறு, இந்திய அளவில் புகழ் பெற்ற சமையல் வகைகளை பார்ப்போம்.
பஞ்சாபி -- PUNJABI: தந்தூரி (களிமண் அடுப்பு) வகைகள், பரோட்டா, லஸ்ஸி, ராஸ்மா போன்றவை. பஞ்சாப், ஹரியானா, காஷ்மீரின் சில பகுதிகளில் புகழ் பெற்றது.
முகலாய் -- MUGALAI: வட இந்தியா இஸ்லாமிய உணவு வகை -- கெபாப், புலாவ், பிரியாணி போன்றவை.
ராஜஸ்தானி -- RAJASTHAN: பொதுவாக சைவ உணவு வகை. இனிப்பு வகை சேர்க்கப்படும். ச்சுர்மா, கேவர் பேசின் சக்கி, பாலுஷஹி, ஜாஜரியா, பாலங், தோர் போன்றவை புகழ்பெற்ற உணவு வகைகள்.
காஷ்மீரி -- KASHMIRI: மேத்தி, ரோகன், ஜோஷ், ஷமிகபாப் - புகழ் பெற்ற உணவு வகைகள்.
போஜ்பூரி -- BHUJPUR: Bihar – பஞ்சாபி உணவு வழக்கத்தின் தாக்கம் அதிகம் உள்ள உணவு.
கேரளா -- KERALA: பாயசம், புட்டு/கடலை, இடியாப்பம், வெல்ல அப்பம், மரவள்ளிக் கிழங்கு/மீன் கரி, அவியல், தீயல் போன்றவை பிரபல உணவு வகைகள். தேங்காயும், தேங்காய் எண்ணெய்யும் முக்கிய இடம் பெறுகிறது.
தமிழ்நாடு -- TAMILNADU: சாம்பார், இட்லி, தோசை, பொங்கல், வடை, ஆப்பம், உப்புமா, கிச்சடி, தயிர்வடை, போலி, ஆற்காடு பிரியாணி, செட்டிநாடு வகைகள் ஆகியவை பிரபலமான உணவு வகை.
ஆந்திரா -- ANDHRA: பருப்பு பொடி, ஆவக்காய, கொங்குரா சட்னி, ஹைதராபாத் பிரியாணி போன்றவை.
கர்நாடகா -- KARNATAKA: பிஸி பேலா பாத், மத்தூர் வடை, சித்திரன்னம், புளிகோரை, மைசூர் பாக், தார்வார் பேடா போன்றவை. சாம்பார் போன்ற சமையல்களில் வெல்லம் போடும் பழக்கம் உண்டு.
ஒடிசா முதல் கிழக்கு மாகாணங்கள் -- BENGAL & ORRISA: ரசகுல்லா, பேடா, லுச்சி (பூரி), ஆலுதம், சானாசூர், மீன், அரிசி பொரி போன்றவை முக்கிய உணவு வகைகள்.
குஜராத்தி -- GUJARATI: பெரும்பாலும் சைவ உணவு. இனிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
மராத்தி --MAHARASHTRAIN: வடா பாவ், பாவ் பாஜி, கிச்சடி, உப்பம், பாக்ரி, போலி போன்றவை.
ஜைன -- JAINS: பூண்டு, வெங்காயம் முற்றிலும் இல்லாத சைவ உணவு.
Q11. இந்திய உணவகங்களில் கிடைக்கும் உணவு வகைகள் யாவை?
சைனீஸ், காண்டினெண்டல், தாய், மெக்ஸிகன், இத்தாலியன் போன்றவை Chinese, Continental, Thai, Mexican, Italian, etc.
Q12. சாக்கலேட் செய்யப் பயன்படும் முக்கிய மூலப்பொருள் என்ன?
கோக்கோ எனப்படும் கோக்கோ மர உலர்ந்த பழ விதைகள், இதனுடன் வெண்ணெய் மற்றும் சர்க்கரை. Cocoa.(along with cocoa butter and sugar)
Q13. கோக்கோ எனப்படும் மூலப்பொருள் எவ்வாறு பெறப்படுகிறது?
கோக்கோ மரத்து பழ விதைகளிலிருந்து பெறப்படுகிறது. நொதித்தல் முறையில் பதப்படுத்தினால் மட்டும் தான் சாக்கலேட் மணம் கிடைக்கும். பிறகு அதை அரைத்து நுண்தூளாக்கி பயன்படுத்தப்படுகிறது.
Q14. கோக்கோ பயிரை முதலில் விளைவித்த கலாச்சாரம் எது?
ஓல்மெக் கலாச்சாரம். Olmec civilization.
Q15. குடிக்கும் சாக்கலேட் முதல் முதலில் தயாரித்தவர்கள் யார்?
கி.பி. 1350 ல் – Aztecs கலாச்சார மக்கள்.
Q16. சாக்கலேட்டில் உள்ள கார அமிலத்தன்மை alkali எது?
“theobromine” மற்றும் “phenythylamine”, இவை உடலியல் ரீதியாக செயல்படக்கூடியவை. இந்த செயல்பாடு மூளையில் உள்ள “Serotonin” நிலையுடன் சம்பந்தப்பட்டது.
Q17. கோக்கோ உற்பத்தியில் முன்னணி நாடு எது?
Cote d’ Ivoire - ஐவரி கோஸ்ட் எனப்படும். (இதை தவிர்த்து, கானா, நைஜீரியா, கேமரூன், டொகோ ஆகிய நாடுகளும் கணிசமான உற்பத்தி கொடுத்து வருகிறது).
Q18. சாக்கலேட் ல் உள்ள மூன்று முக்கிய வகைகள் யாவை?
1. CRIOLLO: மிகவும் விலை உயர்ந்த வகை. மத்திய அமெரிக்கா, கரீபியன் தீவுகள் மற்றும் பல வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் விளைகிறது.
2. FORATERO: அமேஸான் வடிகால் பகுதிகளில் விளைகிறது.
3. TRINITARID: ட்ரினிடாட் நாட்டுக்கே உரிய வகை பயிர். Native to Trinidad. கோக்கோ மரங்கள் பொதுவாக பூமத்திய ரேகையின் 20° வடக்கு தெற்கு பகுதிகளில் விளைகிறது. சீதோஷ்ண நிலை 60° F க்கு குறையாமல் இருக்க வேண்டும்.
Q19. சாக்கலேட் பானத்தை முதலில் தயாரித்தவர்கள் யார், அதிலிருந்து, இது ஒரு மிகப்பெரிய தொழிலாக வளர்ந்தது?
1689 ல் HANS SLOANE – என்ற ஜமைக்கா பகுதி மருத்துவர் மற்றும் அரசாங்க அதிகாரி இதை உருவாக்கி பயன்படுத்தினார். இதை கேட்பரி சகோதரர்கள் Cadbury brothers வியாபார ரீதியாக வணிகம் தொடங்கி, இப்போது உலகின் மிகப்பெரிய நிறுவனமாக விளங்குகிறது.
Q20. சாக்கலேட்டில் உள்ள அடிப்படை பிரிவுகள் யாவை?
கருப்பு, பால் கலந்த, வெள்ளை என மூன்று வகைகள் உள்ளன. இக்காலத்தில் இத்துடன் வனிலா வும் சுவைக்காகவும் சேர்க்கப்படுகிறது.
Q21. சாக்கலேட் மற்றும் அதைச் சார்ந்த தயாரிப்புகளில் மிகவும் புகழ் பெற்ற இரு நிறுவனங்கள் எவை?
காட்பரி ஷ்வெப்ஸ் CADBURY SCHWEPPES: 1824ல் ஜான் காட்பரி என்பவரால் இங்கிலாந்தில் தொடங்கி, பிறகு ரிச்சர்டு மற்றும் ஜார்ஜ் காட்பரி சகோதரர்களால் 1905ல் பெரிய நிறுவனமாக நிறுவப்பட்டு, பிறகு 1969ல் ஜோஹன் ஜேகப் ஷ்வெப்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து இயங்கி வருகிறது. இதன் தலைமையகம் லண்டன் நகரில் உள்ளது.
நெஸ்லே NESTLE: 1866/67ல் ஹென்றி நெஸ்லே என்பவரால் ஸ்விட்சர்லாந்தில் நிறுவப்பட்டு, சாக்கலேட், பால் பொருட்கள், காஃபி, குழந்தைகள் உணவு, வளர்ப்பு விலங்குகள் உணவு என பல துறையில் மிகப் பெரிய நிறுவனமாக இயங்கி வருகிறது. இதன் தலைமையக ஸ்விட்சர்லாந்தில் உள்ளது.
Q22. பனிக்குழைவின் (ஐஸ்க்ரீம்) முக்கிய உள்ளடக்க பொருட்கள் யாவை?
பால், பாலேடு, இனிப்பு, வாசனை திரவம், முட்டை வெள்ளைக்கரு, வெண்ணெய் போன்றவை.
Q23. பழங்காலத்தில் பனிக்குழைவு தயாரிக்கும் முறைகள் என்ன?
1. Pot Oven Method 2. Pot- freezer method. 3. Then Hand –cranked churn method போன்றவை
Q24. பனிக்குழைவு தயாரிப்பில் முன்னேற்றமும், ஒரு மிகப்பெரிய தொழிலாகவும் உருவாக காரணமாக இருப்பது எது?
தொழில் நுட்ப வளர்ச்சி ஒரு புறமிருக்க, தொழில் ரீதியான குளிர் படுத்தும் சாதன முறைகளின் கண்டுபிடிப்பும் மிக முக்கியமாக உள்ளது.
Q25. குளிர் படுத்தும் முறையை Refrigeration முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்?
1834 – இங்கிலாந்து நாட்டின் ஜே. ஹாரிசன் மற்றும் ஏ. கெய்ட்லின் என்பவர்கள்.
Q26. தொழில் ரீதியான குளிர் படுத்தும் முறையை industrial refrigeration system கண்டுபிடித்தவர் யார்?
1870 – ஜெர்மனி நாட்டின் CARL VON LINDE என்பவர். (பிறகு 1926ல் தொடர் குளிர் படுத்தும் முறை continuous process freezer method மேம்படுத்தப்பட்ட பிறகு, பனிக்குழைவு தயாரிப்பு மற்றும் பாதுகாத்தல் மிக வேகமாக முன்னேறியது.
Q27. பனிக்குழைவை பெரிய அளவில் தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்த, முதன் முதலில் பெரிய அளவிலான தொழிற்சாலை நிறுவியவர் யார்?
அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியின் ஜேகப் ரஸ்ஸல் என்பவர் 1851ல் பென்சில்வேனியாவில் இத்தொழிற்சாலையைத் தொடங்கினார்.
Q28. முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டு பெயரிடப்பட்ட பனிக்குழைவு எது?
SORBET.
Q29. பனிக்குழைவை கரையாமல் உறைத்துவைக்க உதவும் வாயு எது?
திரவ நைட்ரஜன்.
Q30. wafer என அழைக்கப்படுவது என்ன?
முறுமுறுப்பான, இனிப்பு, மெல்லிய, தட்டை வடிவ உலர்ந்த கேக். (இனிரொட்டி)
Q31. மென்மை பனிக்குழைவு soft ice cream என்பது என்ன?
உறைய வைக்கப்பட்ட பனிக்குழைவு ஒரு இயந்திரத்தின் மூலம், கூம்பு வடிவ உட்கொள்ளக்கூடிய ஒரு வைப்பானில் கொடுக்கப்படுவது. இதன் முக்கியத்துவம் என்னவென்றால், இந்த பனிக்குழைவில், பொதுவான பனிக்குழைவில் உள்ள காற்றை விட, இரு மடங்கு காற்று அடைக்கப்படுகிறது. இந்த தயாரிப்பு முறையில், பனிக்குழைவு தயாரிப்பு செலவு குறைக்கப்படுகிறது.
Q32. இங்கிலாந்து பிரதம மந்திரியாக இருந்த மார்கரெட் தாச்சர் க்கும் மென்மை பனிக்குழைவுக்கும் என்ன தொடர்பு?
மார்கரெட் தாச்சர் தனது இளைமை காலத்தில் ஒரு உணவுத்துறை விஞ்ஞானியாக, தனது சகாக்களுடன் இந்த மென்மை பனிக்குழைவை உருவாக்கிய அணியில் இடம் பெற்றிருந்தார்.
Q33. பனிக்குழைவு கூம்பு Ice cream cone என்பது என்ன?
மெல்லிய பிஸ்கட் துண்டுகளால் கூம்பு வடிவத்தில் பனிக்குழைவு வைத்து கொடுக்க தயாரிக்கப்படுவது. 1904ல் அமெரிக்காவின் ஃப்ரெடெரிக் ப்ரக்மான் என்பவரால் இயந்திரம் மூலம் கூம்புகள் உருவாக்கப்பட்டது. NABISCO என்ற நிறுவனம் இதை வணிக ரீதியில் உருவாக்கி பிரபலப்படுத்தியது.
Q34. பனிக்குழைவு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பிரபலமான நிறுவனங்கள் யாவை?
1. அமுல் AMUL : இந்த பெயர் ""அமுல்யா"" (பொருள் = விலைமதிப்பற்ற) என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து பெறப்பட்டது. 1946ல், இந்திய வெண்மைப்புரட்சி தலைவர் டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களால் நிறுவப்பட்ட குஜராத் பால் வணிக கூட்டுறவு (ஆனந்த், குஜராத்) நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பொருள். இந்தியாவில் புகழ்பெற்ற பனிக்குழைவு.
2. அருண் ARUN: ஹாட்சன் அக்ரோ ப்ராடக்ட்ஸ், சென்னை - என்ற நிறுவனத்தின் தயாரிப்பு
3. பாஸ்கின் ப்ரதர்ஸ் BASKIN ROBBINS: உலகளவில் புகழ் பெற்ற பனிக்குழைவு நிறுவனம். பர்ட் பாஸ்கின் மற்றும் இர்வ் ராபின்ஸ் என்பவர்களால் 1945/46களில் தொடங்கப்பட்ட, அமெரிக்க நிறுவனம்.
4. பென் & ஜெர்ரிஸ் BEN & JERRYS: 1978ல் இங்கிலாந்தின் யூனிலீவர் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் உலகப் புகழ் பெற்ற பனிக்குழைவு.
5. ஹேஜன் டாஸ் HAAGEN DAZS: 1961- ரூபன் மற்றும் ரோஸ் மட்டூஸ் என்ற அமெரிக்கர்களால் நிறுவப் பட்ட உலகப் புகழ் பெற்ற பனிக்குழைவு நிறுவனம்.
6. மதர் டெய்ரி MOTHER DAIRY: 1974 – இந்திய தேசிய பால் பொருள் மேம்பாட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பனிக்குழைவு.
7. வால்ஸ் WALLS: 1913ல் இங்கிலாந்து நாட்டின் யூனிலீவர் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பனிக்குழைவு. இந்தியாவில் ""க்வாலிட்டி வால்ஸ்"" என வணிகம் செய்யப்படுகிறது.
Q35. குவாலிட்டி வால்ஸ் அறிமுகப்படுத்திய கால்சியம் உள்ளடக்கம் அதிகப்படுத்தப்பட்ட பனிக்குழைவின் பெயர் என்ன?
“Moo”
Q36. உலகின் மிகப் பொதுவான புகழ்பெற்ற பானங்கள் யாவை?
காபி மற்றும் டீ.
Q37. தாவரவியல் ரீதியாக காபி எந்த பிரிவைச் சார்ந்தது?
RUBIACEAE என்ற பிரிவை சார்ந்த 10 வகை தாவர வகைகளைச் சேர்ந்தது. காபி தாவரம் (மரம்) பொதுவாக மித வெப்ப பகுதிகளான ஆப்பிரிக்கா, தென் ஆசியா மற்றும் சில அமெரிக்கப் பகுதிகளில் வளரக்கூடியது. பொதுவாக பயிர் செய்யக்கூடிய வகைகள்: COFFEA CANEPHORA (ROBUSTA) and COFFEA ARABICA.
Q38. காபி அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு எது?
ப்ரேசில்
Q39. இந்தியாவில் காபி அதிகமாக உற்பத்தி செய்யும் இடம் எது?
கூர்க், கர்நாடகம்.
Q40. இந்தியாவில் அதிகமாக பருகப்படும் காபி வகை எது?
பீபெரி மற்றும் ரோபஸ்டா Peaberry and Robusta. பீ பெரி வகை ஒற்றை விதை கொண்ட காபி பழங்களில் இருந்து பெறப்படுகிறது. ரோபஸ்டா என்பது COFFEA CANEAPHORA வகையிலிருந்து பெறப்படுகிறது.
Q41. எந்த வகை காபி அதிகமாக விளைவிக்கப்பட்டு பருகப்படுகிறது?
COFFEA ARABICA.
Q42. பருகப்படும் காபியில் பல வகை உண்டு. அவை யாவை?
1. துருக்கிய காபி TURKISH COFFEE: துருக்கி, மத்திய கிழக்கு நாடுகள், வட ஆப்பிரிக்கா மற்றும் ரஷ்ய பால்கன் மற்றும் காகஸ் பகுதிகளில் புகழ் பெற்றது.
2. ஃபில்டர் காபி FILTER COFFEE: பொதுவாக ஆசிய பகுதிகளில் புகழ்பெற்றது.
3. ஃப்ரெஞ்ச் ப்ரெஸ் FRENCH PRESS:
4. எஸ்ப்ரெஸ்ஸோ ESPRESSO:
5. காப்புஸினோ CAPPUCINO :
இவை எல்லாம் அவையவை தயாரிக்கும் முறையில், மண்டலங்களுக்கேற்ப வேறுபடுகின்றன.
Q43. காபி பவுடர் தயாரிப்பு எவ்வாறு நடைபெறுகிறது?
காபி பழங்களிலிருந்து கொட்டைகளை பிரித்தெடுத்து, உலரவைத்து, சுமார் 200° C வெப்பத்தில் வறுத்து எடுக்கப்பட்டு அதை பொடியாக்கி பயன்படுத்தப்படுகிறது. இதில் வெப்ப மாறுதல்கள் செய்யப்பட்டு வெவ்வேறு ருசியுடைய பவுடர்கள் தயாரிக்கப்படுகின்றன.
Q44. காபியில் உள்ள அமில உள்ளடக்கம் யாவை?
CAFFEINE மற்றும் CAFESTOL.
Q45. பருகுவதற்கேற்ற காபியின் வகைகள் யாவை?
1) Instant coffee உடனடி காபி
2) Canned coffee அடைப்பான்களில் அடைக்கப்பட்டவை
3) Iced coffee குளிர்விக்கப்பட்டவை
4) Caffe lette
5) Cappucino (espresso coffee with milk froth)
6) Coffee Americano. இவை தவிர, தயாரிப்பு முறையின் மூலம் பல வகைகள் உள்ளன.
Q46. காபி தயாரிப்பில், உலகில் விளையும் காபியில் 50 சதவிகிதத்துக்கு மேல் கொள்முதல் செய்து, பல வகை காபி பவுடர் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் பெரிய நிறுவனங்கள் யாவை?
1) KRAFT, 2) PROCTER & GAMBLE, 3) NESTLE, and 4) SARAH LEE.
Q47. உலகில் அதிக விலை மதிப்புள்ள காபி பான வகை எது?
கோபி லுவாக் -- KOPI LUWAK: இதை Civet coffee புனுகு பூனை காபி எனவும் அழைப்பர். இப்பெயர் வரக் காரணம்: சுமத்ரா, ஜாவா, இந்தோனேசியா சுலவேசி பகுதி காடுகளில் வாழும் புனுகுப் பூனைகள், காபித் தோட்டத்திலிருந்து காபி பழங்களை தின்று, அதன் கொட்டைகளை (விதைகள்) மலத்தின் மூலம் வெளியேற்றும். இவ்வாறு வெளியேற்றப்படும் அரை குறையாக சீரணிக்கப்பட்ட கொட்டைகளை பொறுக்கியெடுத்து அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பவுடர்களிலிருந்து தயாரிக்கப்படும் காபி பானம் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இதே போன்று பிலிப்பைன்ஸ் நாட்டில் தயாரிக்கப்படும் காபி “KAPE ALAMID” எனவும், வியட்நாமில் தயாரிக்கப்படுவது WEASEL COFFEE எனவும் அழைக்கப்படுகிறது. இதே போல, மலேசிய மற்றும் இந்தோனேசிய காடுகளில் வளரும் MUNJTAC எனப்படும் மான் வகையின் புறக்கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் காபி ""Kopi MUNJTAC"" எனவும் அழைக்கப்படுகிறது.
Q48. காபியைப் பற்றி மட்டுமே 3000க்கும் மேலான புத்தகத்தொகுப்புகளை கொண்ட நாடு எது?
க்ளெமெண்டைன் Clementine VIII
Q49. தேநீர் (டீ) தாவரவியலில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
CAMELLA SINENSIS: வெப்ப மற்றும் மித வெப்ப மலைப்பகுதிகளில், 50 அங்குலத்துக்கு மேல் மழை பெய்யும் அமிலத்தன்மை கொண்ட மண் வகைப்பகுதிகளில் வளரும் ஒரு பயிர். மலைப்பகுதிகளில் நல்ல மழையும் அதே சமயம் நீர் தேங்காமல் இருக்கவும் வேண்டும். தரமான தேநீர் இலைகள்/செடிகள் 1500 மீ க்கு மேல் உள்ள மலைப்பகுதிகளில் பயிரிடப்படுகின்றது. உலகில் அதிகமாக பருகப்படும் பானம்.
Q50. தேநீர் தாவரத்தில் உள்ள இரண்டு முக்கிய வகைகள் யாவை?
1) சிறு இலை சீன வகை
2) பெரிய இலை அஸ்ஸாம் வகை.
Q51. தேநீர் தாவரத்தின் எந்த பகுதி, தேநீர் தயாரிக்க பயன்படுகிறது?
பொதுவாக இலைகள். இவை ஒரு குறிப்பிட்ட வளர் நிலையில் (குருத்து இலைகள்) பறிக்கப்பட்டு, உலர்த்தப்பட்டு, பயன் படுத்தப்படுகிறது. சமீப காலங்களில், மருத்துவ / வாசனை பொருட்கள் -- துளசி, ஏலக்காய், கிராம்பு, லவங்கப்பட்டை, பன்னீர் ரோஜா இதழ்கள், புதினா இலைகள் போன்றவையும் சேர்க்கப்படுகின்றன.
Q52. தேநீர் இலைகளின் வகைகள் யாவை?
1. வெண்மை தேநீர் WHITE TEA: பசுமை படியாத குறுத்து இலைகள், சூரிய ஒளி படாமல் பதப்படுத்தப்பட்டு, பயனுக்கு கொண்டுவரப்படுகிறது. சீனாவில் புகழ் பெற்றது. விலை அதிகமானது.
2. பசுமை தேநீர் GREEN TEA: இலைகள் பறிக்கப்பட்ட ஓரிரு நாட்களில், பசுமை மாறாமல் பதப்படுத்தப்பட்டு தயாரிக்கப்படுகிறது. மருத்துவ ரீதியாக பரிந்துரைக்கப்படுவது.
3. ஊலாங் தேநீர் OOLONG TEA: பசுமை மற்றும் கருப்பு தேநீர் வகைகளூக்கிடையிலானது.
4. கருப்பு/செஞ்சிவப்பு தேநீர்BALCK / RED TEA: முழுவதுமாக அமிலத்தன்மை oxidation நீக்கப்பட்ட தேநீர். இந்த வகையே உலகில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இவை தவிர்த்து, சில சிறப்பு வகைகளும் நாடுகளுக்கேற்ப தயாரிக்கப்படுகிறது. தேநீர் இலைகளின் இந்த பல தரப்பட்ட தயாரிப்பு முறை மற்றும் தர வகைகளின் செயல் முறை “ORANGE PEKOE” எனப்படுகிறது.
Q53. தேநீரில் உள்ள முக்கிய அமிலம் எது?
தேநீரில் இயற்கையாக கிடைப்பது THEANINE, இதனுடன் caffeine and Theobromine and poluphenolic antioxidant catechines ஆகியவையும் அடங்கியுள்ளது.
Q54. தேயிலையின் தாயகம் எது?
சீனா.
Q55. இந்தியாவில் தேயிலை அதிகமாக பயிரிடப்படும் பகுதிகள் யாவை?
1. அஸ்ஸாம்: மணிராம் திவான் என்பவரால் தேயிலைப் பயிர் அஸ்ஸாம் பகுதியில் 19வது நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிகிறது. இவர் 1857 சிப்பாய் கலகத்தின் பின்னணியில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார். இந்திய தேயிலை உற்பத்தியில் பாதிக்கு மேல் இங்கு விளைவதால், தேயிலை தொழில் ஒரு பெரிய தொழிலாக விளங்குகிறது.
2. டார்ஜீலங், மேற்கு வங்காளம்: இந்த பகுதிக்கு தேயிலைப் பயிரை ஆங்கிலேய மருத்துவர் டாக்டர் கேம்ப்பெல் என்பவர் அறிமுகப்படுத்தினார். இங்கு விளையும் தேயிலை உலகளவில் மிக புகழ் பெற்றது. தரத்தில் மிக உயர்ந்தது. இங்கு விளையும் இந்த தர தேயிலை வேறு எங்கும் பல சீதோஷ்ண காரணங்களினால் வேறு எங்கும் பயிரிட முடியாது.
3. நீலகிரி : தமிழ்நாடு
4. கேரளா: முன்னார், இடுக்கி மாவட்டம்.
5. கர்நாடகம்: சிக்மகளூர் மாவட்டம்.
Q56. இந்தியாவில் தேயிலை வணிகத்தை மேலாண்மை செய்யும் அமைப்பு எது?
இந்திய தேயிலை மேலாண்மை குழு. Tea Board of India – 1953 – HQ: கொல்கத்தா
Q57. உலகின் விலை அதிகமான தேயிலை எது?
SILVER TIPS – டார்ஜிலிங் மகைபாரி தேயிலை தோட்டத்தில் உற்பத்தியாகிறது. Rs.18-20000 ஒரு கிலோ.
Q58. புகழ்பெற்ற "Red Rose" தேயிலை எங்கிருந்து உருவானது?
கேனடா.
Q59. டார்ஜிலிங் தேயிலை தொழிலை நிறுவியவர் யார்?
டாக்டர் கேம்ப் பெல் – ஆங்கிலேய மருத்துவர்.
Q60. எந்த நாடுகள் தேயிலை ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளன?
ஸ்ரீலங்கா, சீனா, கென்யா, இந்தியா, .
Q61. பானங்கள் தயாரிப்பில் “Carbonation” என்பது என்ன?
கார்பன் டை ஆக்ஸைடை திரவத்தில் கரையச்செய்வது.
Q62. “Coca –cola” என்ற புகழ்பெற்ற பானத்தை உருவாக்கியவர் யார்?
ஜான் ஸ்மித் பெம்பெர்டன் -- அமெரிக்க மருந்தாளர் -- 1886.
Q63. “Coca – Cola” பான நிறுவனத்தை நிறுவியவர் யார்?
ASA GRIGGS CANDLER -- 1892 -- அட்லாண்டா, ஜியார்ஜியா, அமெரிக்காவில் தலைமையகம்.
Q64. “Coca –Cola” என்ற பெயரை கொடுத்தவர் யார்?
FRANK MASON ROBINSON – பெம்பெர்டனின் வணிக பங்காளி -- இதில் கோகோ இருப்பதால் இப்பெயர்.
Q65. ஆல்கஹால் பானத்தின் முக்கிய உள்ளடக்கம் என்ன?
எத்தனால் -- ETHENOL.
Q66. ஆல்கஹால் பானங்கள் தயாரிப்பின் முதன்மையான நடவடிக்கை என்ன?
நொதித்தல் முறை -- Fermentation –
Q67. ஆல்கஹால் தயாரிப்புக்கான முக்கிய மூலப்பொருட்கள் யாவை?
பழங்கள், பார்லி, மற்றும் சில தாவர விதைகள்.
Q68. ஆல்கஹால் தயாரிப்பில் மிகப் பழமையான பானம் எது?
1. ஒய்ன் -- Wine -- முக்கியமாக திராட்சை பழத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.
2. பீர் Beer - ஸ்டார்ச் அதிகமாக உள்ள பார்லி, கோதுமை, சோளம் போன்றவைகளிலிருந்து தயாரிக்கப்படுவது.
Q69. ப்ராண்டி என்பது ......?
வடிகட்டப்பட்ட ஒயின். பொதுவாக திராட்சை மற்றும் திராட்சையிலிருந்து ரசத்தை எடுத்தப் பிறகு கிடைக்கும் திடப் பொருள்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
Q70. ப்ராண்டி வகைகள் யாவை?
1. திராட்சை ப்ராண்டி GRAPE BRANDY: திராட்சையிலிருந்து தயாரிக்கப்படுவது.
2. காக்னேக் ப்ராண்டி COGNAC : ஃப்ரான்ஸ் நாட்டின் காக்னேக் பகுதியில் தயாரிக்கப்படுவது.
3. அர்மாக்னேக் ப்ராண்டி ARMAGNAC : ஃப்ரான்ஸ் நாட்டின் அர்மாக்னேக் பகுதியில் தயாரிக்கப்படுவது.
4. லூரின்ஹா ப்ராண்டி LOURINHA : போர்ச்சுகல் நாட்டில் தயாரிக்கப்படுவது
5. பொமேஸ் ப்ராண்டி POMACE BRANDY: திராட்சையின் திடப் பொருளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
6. பழ ப்ராண்டி FRUIT BRANDY: ஆப்பிள், ப்ளம், பீச், செர்ரி, ராஸ்பெரி, ப்ளாக் பெரி, ஆப்ரிகாட் போன்ற பழங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
Q71. ப்ராண்டியின் தரம் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?
ப்ராண்டி பொதுவாக மர பீப்பாய்களில் சேமித்துவைக்கப்படுகிறது. எத்தனை வருடங்களுக்கு சேமித்து வைக்கப்படுகிறதோ அதற்கேற்றவாறு அதன் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. அவை:
1. A.C : 2 வருடம்
2. V.S: 3 வருடங்கள்
3. VSOP: 5 வருடங்கள்
4. XO: 6 வருடங்கள்
5. VINTAGE: 6 வருடங்கள்லுக்கு மேல், கண்ணாடி பாட்டிலில் அடைக்கும் வரை.
6. HORS D’ AGE: 10 அல்லது அதற்கு மேல் பழமையானது.
Q72. Gin என்ற மதுபானத்தை கண்டுபிடித்தவர் யார்?
Franciscus Sylvious – 17ம் நூற்றாண்டு நெதர்லாந்து நாட்டு மருத்துவர்.
Q73. Rum என்ற மது வகை எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
கரும்பு சாறு மற்றும் அதிலிருந்து கிடைக்கும் மொலாசஸ் என்ற உப பொருளிலிருந்து.
Q74. Rum தயாரிப்பில் அதிகமாக ஈடுபட்டுள்ள உலகப்பகுதி யாது?
கரீபிய தீவுகள் -- மேற்கு இந்திய தீவுகள்.
Q75. Vodka என்ற மதுவகை தயாரிப்பில் முன்னணி நாடு எது?
ரஷ்யா. 1894ல் DMITRI MENDELEEV என்ற விஞ்ஞானியின் ஆய்வின் அடிப்படையில், இந்த மது பானம் ""வோட்கா"" வுக்கு தர கட்டுப்பாடு நிர்ணயிக்கப்படுகிறது.
Q76. விஸ்கி தயாரிப்பு எவ்வளவு பழமையானது?
1405ல் அயர்லாந்திலும், 1496ல் ஸ்காட்லாந்திலும் தொடங்கியதாக தெரிகிறது.
Q77. விஸ்கி தயாரிப்பின் மூலப்பொருள் யாது?
பார்லி, பார்லி மாவு, கம்பு, கம்பு மாவு, கோதுமை, சோளம் போன்ற விளைபொருட்களிருந்த தயாரிக்கப் படுகிறது.
Q78. “Scotch Whisky” என்பது என்ன?
பொதுவாக எந்த ஒரு மதுபானம் இரண்டு மூன்று முறைகளுக்கு மேல் வடிகட்டப்படுகிறதோ அது விஸ்கி எனப்படுகிறது. “Scotch Whisky” எனப் பெயரிட, அது ஸ்காட்லாந்தில் தயாரிக்கப்பட்டிருக்கப் பட்டு, குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் மர (ஓக்) பீப்பாய்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
Q79. இந்தியாவில் விஸ்கி எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
மொலாசஸ் Molasses – கரும்பிலிருந்து கிடைக்கும் ஒரு உப பொருள். வெளிநாடுகளில் இதை ரம் என அழைக்கின்றனர்.
Q80. ஓயின் தயாரிப்புக்கு முக்கியமான மூலப்பொருள் எது?
திராட்சை. ஒயின் தயாரிப்பு சுமார் 8000 ஆண்டுகள் பழமையானது எனக் கருதப்படுகிறது. திராட்சை ரசத்தில் உள்ள அமிலப் பொருள், அதில் சர்க்கரை சேர்க்கப்படாமலேயே விரைவில் நொதி மாறுதலுக்கு உட்படுகிறது. இந்த தன்மை வேறு எந்த பழ வகைகளிலும் இல்லை. ஒயின் தயாரிப்பு இரான் மற்றும் ஜியார்ஜியா பகுதிகளில் தொடங்கியதாக நம்பப்படுகிறது.
Q81. VINTAGE WINE எனப்படுவது என்ன?
ஒரு குறிப்பிட்ட அறுவடை காலத்திலிருந்து பெறப்பட்ட திராட்சையிலிருந்து மட்டும் தயாரிக்கப்பட்ட ஒயின். அதனால் தயாரிக்கப்பட்ட வருடத்தைப் பொருத்து இதன் தரம் உயர்த்தப்படுகிறது.
Q82. ஒயின் தயாரிப்பில் முன்னணி நாடுகள் எவை?
ஃப்ரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின். இந்த நாடுகளில் திராட்சை அதிகமாக பயிரிடப்படுகிறது.
Q83. மதுபானம் அருந்துபவர்களுக்கு மது பரிமாறும் முறைகளில் சில பெயர்கள்:
ON THE ROCKS: பனிக்கட்டிகள் மட்டும் போட்டு அருந்தும் முறை.
STRAIGHT UP: பனிக்கட்டிகள் போட்டு நன்றாக குலுக்கி பிறகு பனிக்கட்டிகளை நீக்கி அருந்தும் முறை.
NEAT: மதுவில் பனிக்கட்டி, பழச்சாறு, நீர் என எதுவும் கலக்காமல் நேரடியாக மதுவை பருகுவது.
COCKTAILS: மதுவுடன், வேறு மது வகையும், அதனுடன் பழச்சாறு, தேன், பால், பாலாடை என பலவகை உட்கொள்ளக்கூடிய பொருட்களை தேவைக்கேற்றவாறு கலக்கி அருந்துவது. இவ்வாறு கலக்கும் ஒவ்வொரு முறைக்கும் ஒரு பெயரும், அதை செய்வதற்கு அனுபவமும் தேவை.
Q84. பலவகையில் மது பானம் கலவை செய்யும் முறையில் பழமையானது எது?
SAZERAC – 1850s.
Q85. பல வகை மதுபான கலவையின் பல பெயர்கள் யாவை?
இவற்றிற்கு பல பெயர்கள் உண்டு. இவைகள் பெயரிடுவதில் சில ருசிகரமான வித்தியாசமான பெயர்கள் (நூற்றுக்கும் மேல்) உள்ளன. இவற்றில் சில பெயர்கள் இங்கு ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளன:
Brandy Alexander, four score, Horse neck, French connections, panama, Paradise, side car, Singapore Shing, stinger, Tom and Jerry, Gin fizz, Chocolate solider, Hanky Panky, Long island Iced tea, Marini, My fair lady, pink Lady, Salty Dog, Sloe comfortable screw, white lady, Brass Monkey, Hairy Virgin, Flaming Dr. Pepper, Pain Killer, Bloody Mary, God Mother, God father, Madras Screw driver, ex on the beach, Churchill, Mango Nightmare, Rusty nail, seven and seven, Three wisen man, Iriss Flag, Moon walk, Prince of Wales, Hairy Buffalo, Hairy Navel, Screaming Organ etc.,
Q86. மது பானம் அருந்துபவர்களுக்கு அவற்றை பொதுவாக சிறப்பு வடிவம் கொண்ட கண்ணாடி குடுவைகளில், கொடுக்கப்படும் மதுவுக்கேற்றவாறு பரிமாறப்படுகிறது. அவற்றிற்கு சிறப்பு பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில:
(1) Pilsner (2) Pint (3) Beer Stein (4) Wheat Bear (5) Yard (6) Collins (7) Martini (8) High Ball (9) Old Fashioned (10) Sake Cup (11) Shot (12) Wine (13) Brandy Snifer (14) Champagne Flute (15) Champagne coupe. etc., etc., இவைத் தவிர்த்து இன்னும் பல பெயர்கள் உள்ளன.
Q87. "Alcoholic Proof " எனப்படுவது எதைக்குறிக்கிறது?
ஒரு மது பானத்தில் எந்த அளவுக்கு எத்தனால் உள்ளடக்கம் உள்ளது என்பதை தெரிவிக்கும் முறை.
Q88. “TEQILLA” என்ற மது பானம் எந்த நாட்டில் புகழ் பெற்றது?
மெக்ஸிகோ
Q89. VINHO VERDE என்பது ஒரு வகை வெண்மை ஒயின். எந்த நாட்டுடையது?
போர்ச்சுகல்
Q90. உணவுத்துறையில் நாம் அடிக்கடி காணும் GM என்ற தொடர் எதைக் குறிக்கிறது?
Genetically Modified -- மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு விளை பொருள்.
Q91. Deep Freezing என்ற உணவுத்துறை தொடர் எதைக் குறிக்கிறது?
உணவு பாதுகாக்கும் முறை -- கண்டு பிடித்தவர் CLARENCE BIRDSEYE.
Q92. “MARINATION” என உணவுத்துறை தொடர் எதைக் குறிக்கிறது?
மாமிசத்தை ஒரு வாசனைப்பொருள் (உதாரணமாக மஞ்சள் பொடி) கலந்த நீரில் ஊறவைப்பது.
Q93. Peach Melba - என்பது உலகளவில் அதிகமாக விரும்பப்படும் பனிக்குழைவு. இதற்கு யாருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது?
DAME NELLIE MELBA என்ற புகழ்பெற்ற பாடகரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Q94. பாஸ்டா Pasta என்பது குழந்தைகளிடையே ஒரு மிகவும் விரும்பத்தக்க உணவுப் பொருள். அதன் தொடக்கம் எங்கு ஏற்பட்டது?
சீனா.
Q95. Biscuit என்ற தொடரின் விளக்கம் என்ன? எந்த மொழியில் இருந்து வந்தது?
Baked Twice == இரண்டு முறை சுடப்பட்டது. லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டது. (derived from Latin words “bis” and “Coqure or Coctus”)
Q96. இது ஒரு ஜப்பானிய விருப்ப உணவு. இதை சமைப்பவர் சரியான முறையில் சமைக்கா விட்டால் அந்த உணவு விஷமாக மாறக்கூடியது. அது என்ன?
Fugu Fish இந்த வகையில் உள்ள மீன் உணவு..
Q97. SARASAPARILLA -- நன்னாரி பானம் மிகவும் புகழ்பெற்றது. இது எந்த தாவரத்திலிருந்து பெறப்படுகிறது?
SMILAX Plant.
Q98. “Vermicelli” (சேமியா) என்ற தொடரின் சரியான விளக்கம் என்ன?
இது ஒரு இத்தாலிய வார்த்தை. இதன் பொருள் Little Worms == சிறு புழுக்கள்.
Q99. எந்த முறையின் மூலம் பால் ல் உள்ள பாக்டீரியா அழிக்கப்படுகிறது?
Pasteurization == பால் பதப்படுத்துதல். பாலை ஒரு குறிப்பிட்ட உயர் வெப்பத்தில் சூடுபடுத்தப்பட்டு, உடனடியாக குளிர் படுத்தும் முறை. இந்த முறை அதிகமாக பால் உணவுப் பொருள் தயாரிப்பிலும், வேறு சில உணவுத் துறைகளிலும் செயல்படுத்தப்படுகிறது.
Q100. “McDonalds” என்ற புகழ்பெற்ற உணவுச்சங்கிலி நிறுவனத்தை தொடங்கியவர் யார்?
அமெரிக்காவின் சிகாகோ நகரின் ரிச்சர்டு மற்றும் மாரிஸ் மெக் டொனால்ட் என்பவர்களால் 1940ல் ஒரு சிறிய உணவு கடையாக தொடங்கப்பட்டு, பிறகு 1948ல் Ray Croc என்பவரால் வணிக ரீதியாக மேம்படுத்தப்பட்டது. முதன் முதலில் கலிஃபோர்னியா வில் தொடங்கப்பட்டது.
Q101. எந்த முறையின் மூலம், ஈஸ்ட், சர்க்கரையை ஆல்கலாக மாற்றுகிறது?
நொதித்தல் முறை -- Fermentation.
Q102. “Baking Soda என்பது என்ன?
சோடியம் ஹைட்ரஜன் கார்பனேட் -- Sodium Hydrogen Carbonate.
Q103. LACTOBACILLI என்ற உயிருள்ள பாக்டீரியா கொண்ட உணவுப்பொருள் எது?
யோகர்ட் எனப்படும் ஒரு தயிர் வகை. Yoghurt.
Q104. ராஜ்மா RAJMA என்பது வட இந்திய உணவில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதன் ஆங்கிலப் பெயர் என்ன?
Red Kidney Beans.
Q105. T.J. என்ற பெயரில் உணவுப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பொருட்கள் எங்கு தயாரிக்கப்படுகின்றன ?
Tihar Jail. திஹார் ஜெயில் சிறைக் கைதிகளால் தயாரிக்கப்படுகிறது.
Q106. ஒரு பறவையின் கூடு பயன்படுத்தி ஒரு புகழ்பெற்ற சூப் தயாரிக்கப்படுகிறது. அது எந்த பறவை?
"Swiftlet என்ற பறவையின் கூட்டிலிருந்து உட்கொள்ளக்கூடிய ஒரு பகுதியை சூப் தயாரிப்பில் பயன் படுத்துகின்றனர். இது சீன உணவு வகைகளில் ஒன்று.
Q107. 16 அடுக்குகள் கொண்ட கோவா மக்களின் உணவு வகையின் பெயர் என்ன?
BEBINCA
Q108. "இந்திய அரபு பேரீச்சம்பழம்" “Arabic Date of India என்பது என்ன?
புளி.
Q109. ப்ராண்டி Brandy என்பது ஒரு டச் மொழி வார்த்தை. அதன் பொருள் என்ன?
எரிக்கப்பட்ட ஒயின் Burnt wine.
Q110. வாசனைப் பொருட்களில் "மன்னர்" மற்றும் "ராணி" எனப்படுவது எவை?
மன்னர் = மிளகு; ராணி = ஏலக்காய். Pepper – king, Cardamom – Queen.
Q111. வாசனைப் பொருட்களில் மிகவும் விலையுயர்ந்தது எது?
குங்குமப்பூ == SAFFRON – காஷ்மீர் மற்றும் ஆப்கானிஸ்தானில் அதிகமாக பயிராகும் CROCUS தாவரத்தில் இருந்து பெறப்படுகிறது.
Q112. 2006ல் காட்பரி சாக்கலேட் ல் கண்டுபிடிக்கப்பட்ட பாக்டீரியாவின் பெயர் என்ன? (அப்போது இது பெரும் சர்ச்சைக்குள்ளானது)
SALMONELLA.
Q113. சாண்ட்விச் என்பது சமீப காலங்களில் ஒரு புகழ்பெற்ற உணவு வகையாக உள்ளது. இதற்கு பல பெயர்கள் உள்ளன. அவை யாவை?
DAGWOOD: BIG MAC: POCKET: BLT: ELVIS: SLOPPY: FLUFFERNUTTER:
Q114. "Beggar’s Chicken" "பிச்சைக்காரன் கோழி" என்பது என்ன?
இது ஒரு சீன உணவு வகை. மண்ணால் கவரப்பட்டு நெருப்பில் சுடப்பட்டு உண்ணப்படுகிறது.
Q115. அதிக சத்துள்ள பழமாக கருதப்படுவது எது?
அவோகெடோ Avocado – இதில் 740 கலோரி உள்ளது.
Q116. அன்னாசிப்பழத்தில் கிடைக்கும் நறுமணம் எதனால் ஏற்படுகிறது?
எத்திலீன் புட்டிரேட். Ethylene Butyrate.
Q117. Parthenocarpy என்பது என்ன?
கருவுறாது கனியாதல் முறை. Formation of fruit without fertilization.
Q118. Blossoms என்பது என்ன?
பழம் கொடுக்கும் மரங்களின் பூக்கள். Flowers of fruit bearing trees.
Q119. லிச்சி பழங்கள் அதிகமாக விளைவிக்கும் இந்திய மாநிலம் எது?
பீஹார் -- Bihar குறிப்பாக முஸஃபராபாத் .
Q120. TRASESTERIFICATION என்ற ஆங்கிலச் சொல் எதைக் குறிக்கிறது?
தாவர எண்ணெயை உயிரி எரிபொருளாக மாற்றும் முறை. (converting vegetable oil into bio-diesel fuel).
Q121. பழங்களின் மன்னர் மற்றும் ராணி எவை?
மாம்பழம் -- மன்னர்; திராட்சை -- ராணி;
Q122. எந்த கீரை உண்வதால் ஒரு முழுவதுமான சத்துள்ள உணவு சாப்பிட்டதற்கு சமமானது எனக் கருதப்படுகிறது?
SPINACH எனப்படும் கீரை வகை. உதாரணம்: பாலக் எனப்படுவது.
Q123. உணவுத்தொழிலில், எந்த சங்கிலித்தொடர் உணவு நிறுவனம், “Chief Happiness Officer” என்ற ""வாடிக்கையாளர் மகிழ்ச்சி அதிகாரி"" என்ற அதிகாரியை நியமித்தது?
மெக்டொனால்ட்ஸ் -- Mc Donalds.
Q124. எந்த வேதிப்பொருளின் மூலம் உணவில் உள்ள சர்க்கரையின் தரம்/அளவு சோதனை செய்யப்படுகிறது?
பெனெடிக்ட் திரவம் -- Benedicts Solution.
Q125. உணவுத் துறையில் “Lyonaisse” என்ற சொல் எதைக்குறிக்கிறது?
வெங்காயம் சமையலில் பயன் படுத்தும் முறை.
Q126. தக்காளியின் தாவரவியல் பெயர் என்ன?
Lycopersicon Esculentum.
Q127. மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் வணிக ரீதியாக உலகில் எப்போது நுழைந்தது?
1996
Q128. ஐரோப்பாவில் காபி முதலில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
அரேபியன் ஒயின் -- Arabian Wine.
Q129. எந்த விலங்கின் பால் கொதிக்க வைத்தாலும் கெட்டியாவதில்லை? (curdle when boiled)
ஒட்டகப் பால் Camel Milk.
Q130. “Ramen Noodles" என்ற உணவுப் பொருளை அறிமுகப்படுத்தியவர் யார்?
Momo Fuko Ando -- ஜப்பான் – 1958.
Q131. எந்த உணவுப் பொருள் எப்போதுமே கெடுவதில்லை?
தேன் Honey.
Q132. “Pizza Hut” என்ற சங்கிலி உணவு நிறுவனத்தை நிறுவியவர் யார்?
Frank Carney – 1958 – அமெரிக்கா.
Q133. ஆங்கிலத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆப்பிள்களின் பெயர்ச்சொல் என்ன? noun for apples?
Bushels.
Q134. புகழ் பெற்ற “Marie Biscuit” க்கு யாருடைய வைக்கப்பட்டுள்ளது?
ரஷ்ய இளவரசி Maria Alexandrona (இவர் இங்கிலாந்து மகாராணி விக்டோரியா 1 ன் மைந்தனை மணந்தார்)
Q135. “SARAS” என்பது எந்த இந்திய மாநிலத்தின், பனிக்குழைவு, நெய் போன்ற பொருட்கள்?
ராஜஸ்தான் மாநில பால் கூட்டுறவு சங்கம்.
Q136. “Guarana” என்பது எந்த நாட்டில் புகழ்பெற்ற மது பானம்?
ப்ரேசில்
Q137. புகழ் பெற்ற Gouda Cheese (பாலாடைக் கட்டி) எந்த நாட்டுடையது?
நெதர்லாந்து -- Gouda ஒரு நகரத்தின் பெயர்.
Q138. எந்த பழத்தின் விதை வெளியில் இருக்கும்?
முந்திரி -- Cashew.
Q139. “sour wine” என்பது எதைக் குறிக்கிறது?
Vinegar.
Q140. “Domino Pizza” சங்கிலித் தொடர் உணவகங்களை நிறுவியவர் யார்?
Tom Monaghan -- அமெரிக்கா -- 1960.
Q141. பிஸ்கட் தயாரிப்பில் சேர்க்கப்படும், ஜீரண சக்தியை ஊக்குவிக்கும் வேதிப்பொருள் என்ன?
சமையல் சோடா -- Baking Soda -- சோடியம் பைகார்பனேட்.
Q142. ஆங்கிலத்தில் “ 100 Mile diet” "100 மைல் உணவு" என்பது என்ன? ?
ஒரு இடத்தை சுற்றி 100 மைல் சுற்றளவுக்குள் கிடைக்கும் பொருட்களை மட்டும் வாங்கி உண்ணும் உணவு. இந்த பழக்கம், வாகனங்கள் செலுத்துவதால் காற்று மாசு படுவதை தடுக்க எடுத்த பழக்கம்.
Q143. பிஸ்கட்டுகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் "ஆரோரூட்" எங்கிருந்து பெறப்படுகிறது?
இது மாவுச்சத்து. ஆரோரூட் தாவரத்தின் கிடைமட்ட வேர் தண்டிலிருந்து பெறப்படுகிறது.
Q144. காரமும் இனிப்பும் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முதல் பிஸ்கட் வகை எது?
"Krackjack" -- 1972ல் இந்தியாவில் தான் முதலில் பார்லே பிஸ்கட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.
Q145. உலகில் பிஸ்கட் தயாரிப்பில் முன்னணி நிறுவனம் எது?
Parle - 1929 -- மும்பை -- இந்திய நிறுவனம்..
Q146. ஐரோப்பாவை ஆண்ட ஒரு அரச பரம்பரை பெயரில் உள்ள பிஸ்கட் எது?
Bourbon
Q147. ஆங்கிலத்தில் ஒன்றுக்கு மேற்பட்டதை “Cluster” எனவும், ஒன்றை “finger” – எனவும் அழைக்கப் படும் பழம் எது?
வாழைப்பழம்.
Q148. ரவா வின் ஆங்கில பெயர் என்ன?
Semolina.
Q149. coca cola அறிமுகப்படுத்தப்பட்ட போது இருந்த நிறம் என்ன?
பச்சை -- Green.
Q150. “ Red Kidney" எனப்படுவது என்ன?
ராஜ்மா Rajma
Q151. பாப் கார்ன் தயாரிக்கும்போது அது குதித்தெழுவதன் காரணம் என்ன?
பாப்கார்ன் சோளத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. சோளம் சூடுபடுத்தப்படும் போது அதில் உள்ள நீர் நீராவியாகி அழுத்தத்தினால் வெளிவரும் போது இவ்வாறு குதித்தெழுகிறது.
Q152. “Buddha jumps over the wall” என்பது சீன சூப் உணவு வகைகளில் ஒன்று. இப்பெயர் வரக்காரணம் என்ன?
Q153. “Rasna" என்ற புகழ் பெற்ற இந்திய பானத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
அரீஸ் கம்பாட்டா -- அஹமதாபாத்
Q154. ஒயின் வகைகளுக்கு பெயர் வைப்பதில் உள்ள பின்னணி என்ன?
திராட்சை வகை, தயாரிப்பு இடம், ஒயின் தயாரிப்பில் எவ்வளவு திராட்சை தோல் பயன்படுத்தப்பட்டது போன்றவற்றின் பின்னணியில் பெயரிடப்படுகிறது.
Q155. எந்த நாட்டு ஒயின் உலகில் மிகவும் புகழ் பெற்றது?
சிலி. ---- கொபியாபோ பள்ளத்தாக்கு, ஹூவாஸ்கோ, எல்கி, லிமாரி, மைபோ, க்யூரிகோ மற்றும் கசாப்ளாங்கா பகுதிகள்.
Q156. ஒயின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் வாயு எது?
கார்பன் டை ஆக்ஸைடு.
Q157. “Angels share” ""தேவதையின் பங்கு"" என்பது ஒயின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஒரு தொடர் என்ன?
ஒயின் ஆவியாதலால் ஏற்படும் இழப்பு.
Q158. மிஸோராம் உணவு விடுதிகளில் தயாரிக்கப்படும் உணவு எவ்வாறு வேறு இந்திய உணவு தயாரிப்புடன் வேறுபடுகிறது?
மசாலா பொருட்கள் பயன்படுத்தப்படுவதில்லை.
Q159. உலகின் பழமையான தேயிலை நிறுவனம் எது?
அஸ்ஸாம் தேயிலை நிறுவனம். Assam Tea Company
Q160. ஈஸ்ட் தயாரிப்பில் முன்னணி நாடு எது?
ஃப்ரான்ஸ்.
Q161. முட்டை உற்பத்தியில் முன்னணி நாடு எது?
சீனா.
Q162. பால் மூலமாக சாக்கலேட் முதலில் தயாரித்தவர் யார்?
டேனியல் பீட்டர் -- ஸ்விட்சர்லாந்து – 1875.
Q163. எந்த நாட்டில் பாலாடைக்கட்டி அதிகமாக உண்ணப்படுகிறது?
க்ரீஸ்
Q164. ஆங்கிலத்தில் “Veganism” என்பது எதைக்குறிக்கிறது?
பால் மற்றும் பாலாடைக்கட்டி போன்ற பால் பொருட்களை உணவில் தவிர்ப்பது.
Q165. “Mother’s ruin" என்று ஆங்கிலத்தில் அறியப்படும் மது பானம் எது?
ஜின் Gin.
Q166. “Potato Chips” உருளைக்கிழங்கு சிப்ஸ் (வருவல்) அறிமுகப்படுத்தியவர் யார்?
நியூயார்க் நகரின் ஜார்ஜ் க்ரம் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
Q167. பெப்ஸி கோலாவை Pepsi Cola அறிமுகப்படுத்தியவர் யார்?
CLED BRADHAM – 1998 – அமெரிக்கா.
Q168. டிசம்பர் 2009ல் கோக்கோ கோலா நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப் பட்ட ஊட்ட பானம் energy drink எது?
Burn.
Q169. OENOLOGIST எனப்படுபவர் எதில் நிபுணர்?
ஒயின் Wine.
Q170. VITICULTURIST எனப்படுபவர் எதில் நிபுணர் ?
திராட்சை ரச ஒயின் தயாரிப்பு அறிவியலில் நிபுணர்.
Q171. VINTNER எனப்படுபவர் யார்?
ஒயின் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்.
Q172. NEGOCIANT எனப்படுபவர் யார்?
சிறு அளவில் ஒயின் தயாரிப்பவர்களிடமிருந்து அவற்றைப் பெற்று, அதை தனது/நிறுவனத்தின் பெயரில் மொத்தமாக விற்பனை செய்பவர்.
Q173. புளிக்கு Tamarind எனப்பெயர் வந்த பின்னணி என்ன?
“Tama” என்பது அரபு மொழியில் பேரீச்சம் பழத்தைக் குறிக்கிறது. புளியின் சதைப்பற்று பேரீச்சம் பழத்திற்கு ஒத்து போவதால், இப்பெயர் பெற்றது.
Q174. Saccharin என்ற இனிப்பு ஊக்க பொருள் எதிலிருந்து பெறப்படுகிறது?
Coal Tar.
Q175. உணவுப் பொருட்கள் தமிழ்==ஆங்கில பெயர்கள்:
வ.எண் தமிழ்ப்பெயர் ஆங்கிலப்பெயர்
பழங்கள்: FRUITS
1. வாழைப்பழம் Banana
2. விளாம்பழம் Wood Apple, Shell Apple
3. கொய்யாபழம் Guava
4. நாவல் பழம் Naval Fruit, Black Berry
5. எலுமிச்சம்பழம் lemon/ Citrus Fruit
7. மாதுளை Pomegranate
8. சீத்தாப்பழம் Custard Apple
9. அரத்தி/குமளிப்பழம் Apple
10. சர்க்கரை பாதாமி Apricot
11. வெண்ணெய் பழம் Avocado
12. கருந்திராட்சை Black Currant
13. சீமைப்பலா Bread Fruit
14. பன்னீர் திராட்சை Black Grapes
15. முந்திரி பழம் Cashew Fruit
16. சீமை இலுப்பை Chikkoo
17. கமலா பழம் Orange
18. சப்போட்டா Chikku
19. விருத்திர பழம் Dragon Fruit
20. பேரீச்சம் பழம் Dates
21. அத்திப்பழம் Fig
22. திராட்சை Grapes
23. பலாப்பழம் Jack Fruit
24. பசலிப்பழம் Kiwi Fruit
25. லிச்சி Lychee
26. மாம்பழம் Mango
27. வெள்ளரி, முளாம் பழம் Melon,, Musk Melon
28. பப்பாளி Papaya
29. குழிப்பேரி Peach
30. பனம்பழம் Palm Fruit
31. பேரிக்காய் Pears
32. அன்னாசிப்பழம் Pine Apple
33. புற்றுபழம் Rasberry
34. ஊட்டி ஆப்பிள் Plum
35. செவ்வாழை Red Banana
36. செம்புற்று பழம் Strawberry
37. சாத்துக்குடி Sweet Lime
38. தர்பூசணி Water Melon
39.
40.
காய்கறி/கீரை வகைகள் -- VEGETABLES/LEAFY VEGETABLES
41.
42. சர்க்கரைவள்ளி Sweet Potato
43. அவரை Beans
44. பாலக் கீரை Spinach
45. கறிவேப்பிலை Curry Leaves
46. கொத்தமல்லி தழை Coriander Leaves
47. குடை மிளகாய் Capsicum
48. பச்சை மிளகாய் Green Chillies
49. காய்ந்த மிளகாய் Red Chillies
50. வெங்காயம் Onion
51. முட்டை கோஸ் Cabbage
52. பரங்கிக்காய்/பூசணிக்காய் Pumpkin
53. வாழைக்காய் Ash Plantain
54. வெண்டைக்காய் Lady's Finger
55. பாகற்காய் Bitter Gourd
56. புடலங்காய் Snake Gourd
57. முள்ளங்கி Raddish/Parsnip
58. சேனை/கருணைக்கிழங்கு Yam
59. மரவள்ளிக்கிழங்கு Tapioca
60. கத்தரிக்காய் Brinjal/Egg Plant
61. சுண்டைக்காய் Solanum Torvum/Turkey Berry
62. அகத்திக்கீரை Sesbania Grandiflora
63. முடக்கத்தான் கீரை Cardiospermum halicacabum
64. கோவைக்காய் Little Gourd, Coccinia Grandis
65. துத்திக்கீரை Abutilon indicum
66. தூதுவளை Purple Fruited pea egg plant
67. புதினா இலை Mint Leaves
68. வல்லாரை கீரை Pennywort
69. நார்த்தங்காய் Citron
70. முருங்கைக்காய் Drum Stick
71. முளைக்கீரை Amaranth
72. வெள்ளைப் பூசணி Ash Gourd
73. விதையவரை Beans
74. செங்கிழங்கு Beet Root
75. காராமணி, தட்டப்பயறு Black Eyed Pea, Cow Pea
76. சுரைக்காய் Bottle Gourd
77. அவரைக்காய் Broad Beans
78. பச்சை பூக்கோசு Broccoli
79. மஞ்சள் முள்ளங்கி Carrot
80. பூக்கோசு Cauli Flower
81. கொத்தவரங்காய் Cluster Beans
82. சேப்பங்கிழங்கு Colocasia
83. வெள்ளரிக்காய் Cucumber
84. கருணைக்கிழங்கு Elephant Yam
85. வெந்தயக்கீரை Fenugreek leaves
86. பூண்டு Garlic
87. புளிச்ச கீரை Gogu
88. நூல் கோல் Kohl Rabi
89. இலைக் கோசு Lettuce
90. கடுகுக் கீரை Mustard Greens
91. பீர்க்கங்காய் Ridge Gourd
92. கோசுக்கிழங்கு Turnip
93. சீமைச்சுரைக்காய் Zucchini
94. இஞ்சி Ginger
95. தக்காளி Tomato
96
97
98
99
100
முக்கிய உணவு தானியங்கள் GRAINS AND CEREALS
101. புளி Tamarind
102. மிளகாய் Chillies
103. உப்பு/தூள் உப்பு Salt/Table Salt
104. வெல்லம்/கருப்பட்டி Jaggery
105. உளுந்து Black Gram
106. கடலைப்பருப்பு Bengal Gram/Gram Dal
107. பச்சை/பயத்தம் பருப்பு Moong Dal/Green Gram
108. உளுத்தம் பருப்பு Urid Dhal
109. துவரம் பருப்பு Red Gram/Toor Dhal
110. கம்பு Millet
111. கேழ்வரகு Ragi
112. கொள்ளு Horse Gram
113. கோதுமை Wheat
114. கோதுமை ரவை Cracked/Broken Wheat
115. சோளம் Corn
116. சோளப்பொரி Pop Corn
117. எள்ளு Sesame/Gingelly Seeds
118. நெல் Paddy
119. அரிசி Rice
120. அவல் Rice Flakes
121. பச்சை அரிசி Raw Rice
122. புழுங்கல் அரிசி Par Boiled Rice
123. கடலை மாவு Gram Flour
124. மக்காச்சோளம் Maize
125. வாற் கோதுமை Barlely
126. பட்டாணீ/பச்சைப் பட்டாணி Peas/Green Peas
127. சேமியா Vermicelli
128. சவ்வரிசி Sago
129. ரவா/ரவை Semolina
130. கொண்டைக்கடலை Chick Pea
131. கடுகு Mustard
132. சீரகம் Cumin
133. வெந்தயம் Fenugreek
134. சோம்பு/பெருஞ்சீரகம் Anise Seeds
135. பெருங்காயம் Asafoetida
136. மஞ்சள் Turmeric
137. ஓமம் Ajwain
138. தனியா/கொத்தமல்லி Coriander/Coriander
139. பால் கட்டி Cheese
140. தேங்காய் எண்ணெய் Coconut Oil
141. பனை எண்ணெய் Palm Oil
142. நல்லெண்ணெய் Gingelly Oil
143. விளக்கெண்ணெய் Castor Oil
144. கடலை எண்ணெய் Gram Oil
145. ஆலிவ் எண்ணெய் Olive Oil
146. கடுகு எண்ணெய் Mustard Oil
147. தயிர் Curd/Yoghurt
148. வேர்/நிலக்கடலை Pea nut
149. ஊறுகாய் Pickle
150. இளந்தேங்காய் Tender Coconut
151. பதநீர் Palmyra Juice/Neera
152. கள்ளு Palm Toddy/wine
153. பொரி Puffed Rice
154. தேயிலை Tea
155. கொட்டை வடி நீர்/காபி Coffee
156
157
158
159
160
வாசனை/மருந்து பொருட்கள்
161. ஜாதிக்காய் Nutmeg
162. ஜாதிபத்திரி Mace
163. சுக்கு Dry Ginger
164. பூண்டு Garlic
165. மிளகு Pepper
166. கற்கண்டு Sugar Candy
167. ஏலக்காய் Cardamom
168. பாதாம் பருப்பு Almonds
169. முந்திரி பருப்பு Cashew
170. கிஸ்மிஸ் Dry Grapes
171. லவங்கம்/கிராம்பு Cloves
172. கசகசா Poppy
173. கற்பூரவள்ளி Oregano
174. அதிமதுரம் Liquorice
175. அருகம் புல் Bermuda Grass
176. வெற்றிலை Betel Leaves
177. நொச்சி இலை Vitexnegundo
178. அத்தி Fig
179. கீழாநெல்லி Phyllanthus nururi
180. குப்பை மேனி Acalypha indica, linn, Euphor biaceae
181. சோற்று கற்றாழை Aloe Vera
182. கஸ்தூரி Musk
183. குங்குமப்பூ Saffron
184. பன்னீர் Rose Water
185. கற்பூரம் Camphor
186. பச்சை கற்பூரம் Menthol
187. மருதாணி Henna
188. துளசி Tulsi
189. எலுமிச்சை துளசி Basil Tulsi
190. வேப்பெண்ணெய் Neem Oil
191. கடுக்காய் gall nut
192.
193.
194 .
195 .
196 .
197 .
198.
199.
200 .