Khub.info Learn TNPSC exam and online pratice

Q1. உலக பிரபலங்களின் ஆங்கில பொன்மொழிகள்
எண் பொன்மொழி கூறியவர்
1 The wisdom of the wise and the experience of the ages are perpetuated by Quotations.
அறிவாளிகளின் அறிவும், மூத்தோர் அனுபவுமே பொன்மொழிகள்
பெஞ்சமின் இஸ்ரேலி
2 To err is human and to forget is divine.
தவறு செய்வது மனித இயல்பு; மறப்பது தெய்வீகச் செயல்
அலெக்ஸாண்டர் போப்
3 Every great achievement is the victory of a flaming heart.
ரால்ஃப் வால்டோ எமர்சன்
4. The shortest distance between a problem and a solution is the distance between your knees and the floor. The one who kneels before God, can stand upto anything.
ஒரு பிரச்சனைக்கும் அதன் தீர்வுக்கும் இடையில் உள்ள தூரம், உன் முழங்காலுக்கும் தரைக்கும் உள்ள தூரம் தான். கடவுளின் முன்னால் மண்டியிடுபவன் எதையும் சமாளிப்பான்.
ரால்ஃப் வால்டோ எமர்சன்
5. Write it on your heart, that everyday is the best day of the year.
ஓவ்வொரு நாளூம் நல்ல நாள் என்பதை உன் மனதில் எழுதிக்கொள்.
ரால்ஃப் வால்டோ எமர்சன்
6. Valiant never taste of death but once.
வீரன் மரணத்தை ஒரு முறை தான் தழுவுவான்
ஜூலியஸ் சீஸர்
7. Veni, Vidi, Vici ( meaning ) I came, I saw, I conquered.
வந்தேன், பார்த்தேன், வென்றேன்.
ஜூலியஸ் சீஸர்
8. Float like a butterfly, but sting like a bee.
வண்ணத்துப்பூச்சியைப் போல் பறந்து, தேனீயைப் போல் கொட்டு.
முகமது அலி
9. The English are not very spiritual people. So, they invented cricket to give them some idea of eternity. ஜார்ஜ் பெர்னார்டு ஷா
10. The power of accurate observation is commonly called cynicism by those who have not got it. ஜார்ஜ் பெர்னார்ட் ஷா
11. I often quote myself. It adds spice to my conversation. ஜார்ஜ் பெர்னார்ட் ஷா
12. The more things a man is ashamed of, the more respectable he is.
எந்த மனிதன் தனது தவறுகளுக்காக அதிகமாக வெட்கப்படுகிறானோ அவனே அதிக மரியாதைக்குரியவன்.
ஜார்ஜ் பெர்னார்ட் ஷா
13. Friends, Romans, Countrymen, lend me your ears.
நண்பர்களே, ரோமர்களே, நாட்டு மக்களே, உங்கள் செவியை சாய்த்து கேளுங்கள்.
மார்க் அந்தோணி
14. The Arc of the moral universe is long, but it bends towards justice.
பிரபஞ்சத்தின் தார்மீக வளைவு மிகப் பெரியது, ஆனால் அதன் முடிவு நீதியை நோக்கியே முடியும்.
மார்ட்டின் லூதர் கிங்
15. I have a dream. நான் ஒரு கனவு காண்கிறேன். மார்ட்டின் லூதர் கிங்
16. Philosophers should be rulers and Rulers should be philosophers.
தத்துவவாதிகள் ஆட்சியாளர்களாகவும், ஆட்சியாளர்கள் தத்துவ வாதிகளாகவும் இருக்க வேண்டும்.
ப்ளூட்டோ
17. If you want anything said, ask a man; If you want something done, ask a woman.
ஏதாவது சொல்லவேண்டுமென்றால் ஆணிடம் சொல்லுங்கள்; ஏதாவது நடக்க வேண்டுமென்றால் பெண்ணிடம் சொல்லுங்கள்.
மார்கரெட் தாச்சர்
18. Cheer leader, saleman, debt collector and a father confessor.
உற்சாகமூட்டி, விற்பனையாளன், கடன் வசூலிப்பவன் அதற்கு மேல் ஒரு வாக்குமூல தந்தை (தன் பதவியைப் பற்றி)
கோஃபி அனான்
19. To climb steep hills, requires a slow pace at first.
ஒரு உச்சத்தை அடைய, முதலில் மெதுவான அடியெடுத்து வை.
வில்லியம் ஷேக்ஸ்பியர்
20. The Rose by any other name would smell as sweet.
ரோஜா என்று எதற்கு பெயர் வைத்தாலும், அது அதே மணமுடையதாக இருக்கும்.
வில்லியம் ஷேக்ஸ்பியர்
21. Water, Water everywhere, but not a drop to drink.
கண்ணுக்கெட்டியதூரம் தண்ணீர், ஆனால் குடிப்பதிற்கில்லை.
சாண்ட் டெய்லர் கோல்ரிஜ்
22. I have become death, the destroyer of the world.
நான் உலகை அழிக்கும் இறந்த மனிதன் ஆகிவிட்டேன். (அணுகுண்டு கண்டுபிடிப்புக்கு பிறகு)
ராபர்ட் ஓப்பன்ஹீமர்
23. Mankind must put an end of war, otherwise, war will put an end to mankind.
மனித குலம் போரை நிறுத்தாவிடில், போர் மனிதகுலத்தை அழித்துவிடும்.
ஜான் எஃப். கென்னடி
24. Think not what the country has done for you; Think what you have done for the country.
நாடு உனக்கு என்ன செய்தது என்று நினைக்கும் முன், நீ நாட்டுக்காக என்ன செய்தாய் என்று யோசி.
ஜான் எஃப். கென்னடி
25. To jaw-jaw is always better than to war-war.
எப்போதும் தாடையை அசைத்து பேசுவது, போரை விட மேலானது.
வின்ஸ்டன் சர்ச்சில்
26. In war, resolution; In defeat, defiance; In victory, magnanimity; In peace, good will.
போரில் தீர்மானம்; தோல்வியில் எதிர்ப்பு; வெற்றியில் பெருந்தன்மை; அமைதியில் நன்மை.
வின்ஸ்டன் சர்ச்சில்
27. Democracy is the worst system of government. But, I know none better.
ஜனநாயகம் ஒரு மோசமான அரசாங்க அமைப்பு. ஆனால் அதை விட மேலானதும் ஏதும் இல்லை.
வின்ஸ்டன் சர்ச்சில்
28. I have nothing to offer, but, blood, toil, tears and sweat.
என்னிடம் ரத்தம், உழைப்பு, கண்ணீர் மற்றும் வியர்வையைத் தவிர்த்து கொடுப்பதற்கு வேறு எதுவும் இல்லை.
வின்ஸ்டன் சர்ச்சில்
29 Give us tools, we will finish the job.
வின்ஸ்டன் சர்ச்சில்
30. Courage is what it all takes to stand up speak; Courage is also what it takes to sit down and listen.
எழுந்து நின்று பேசுவதற்கு எவ்வளவு தைரியம் தேவையோ, அதே அளவு தைரியம் உட்கார்ந்து கேட்பதற்கும் வேண்டும்.
வின்ஸ்டன் சர்ச்சில்
31. Some people dream of success; while others wake up and work hard at it.
சிலர் வெற்றிக்காக கனவு கண்டு கொண்டிருக்கும் போது, வேறு சிலர் வெற்றிக்காக செயல் பட தொடங்கியிருப்பார்கள்.
வின்ஸ்டன் சர்ச்சில்
32. Let a hundred flowers bloom, but let a thousand schools of thought contend.
மா சே துங்
33. Political power grows out of a barrel of a gun.
மா சே துங்
34. There never was a good war or bad peace.
நல்ல போரும் மோசமான அமைதியும் எப்போது இருந்ததில்லை.
பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
35. An army marches on its stomach.
நெப்போலின்
36. Two thirds of the decision making process is based on analysis and information, and one third is always a leap in the dark.
ஒரு முடிவில் மூன்றுக்கு இரண்டு பங்கு தகவலையும், புள்ளி விவரம் அடிப்படையில் ஆனது. மூன்றாவது பங்கு, இருட்டிலே கண்ணைக் கட்டிக்கொண்டு தேடி எடுப்பது.
நெப்போலியன்
37. Give us good mothers, and I shall give you a good nation.
நல்ல தாய்மார்கள் நல்ல நாட்டை உருவாக்கும்.
நெப்போலியன்
38. As President, I have no eyes, but Constitutional eyes. I cannot see you.
ஒரு நாட்டு தலைவராக எனக்கு இருப்பது சட்டக் கண்கள் தான். அதனால் உங்களை தனிப்படையாக பார்க்க முடியாது.
ஆப்ரஹாம் லிங்கன்
39. Always bear in mind that your own resolution to succeed is more important than any one thing.
வெற்றிக்காக நீங்கள் எடுக்கும் முடிவே உங்களுக்கு உதவும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
ஆப்ரஹாம் லிங்கன்
40. A child is a person who is going to carry on what you have started – the fate of humanity is in his hands.
ஒரு குழந்தை தான் நீங்கள் விட்டுச் செல்வதை அடுத்த தலைமுறை மனித குலத்தை நடத்திச் செல்லும்.
ஆப்ரஹாம் லிங்கன்
41. Just as I would not like to be a slave, so I would not like to be a master.
நான் எப்படி ஒரு அடிமையாக இருக்க விரும்புகிறேனோ, அதே போல் ஒரு எஜமானனாக இருக்க விரும்புகிறேன்.
ஆப்ரஹாம் லிங்கன்
42. When I do good, I feel good; when I do bad, I feel bad. That is my religion.
நல்லது செய்யும் போது மகிழ்ச்சியடைகிறேன். தீங்கு செய்யும் போது வருத்தப்படுகிறேன். இது என் மதத்துக்கு இணையான நம்பிக்கை.
ஆப்ரஹாம் லிங்கன்
43. Mr. Gorbachev, open this gate; tear this wall.
ரொனால்ட் ரீகன்
44. Who Am I, a mere Prime Minister, before the ocean of song.
இசைக்கடலுக்கு முன் நான் யார்? வெறும் பிரதம மந்திரி தான். ( இசைக்கலைஞர் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியைப் பற்றி)
ஜவஹர்லால் நேரு
45. Evil unchecked grows, Evil tolerated poisons the whole system
தடுக்கப்படாத குற்றம் வளரும்; ஆனால், பொறுத்துக்கொள்ளப்பட்ட குற்றம் மொத்த அமைப்பையே அழைக்கும்.
ஜவஹர்லால் நேரு
46. Without peace, all other dreams vanish and are reduced to ashes
அமைதியில்லாமல், மற்ற அனைத்தும் ஒரு கனவாக இருந்து அழிந்து சாம்பலாகிவிடும்.
ஜவஹர்லால் நேரு
47. Democracy is good. I say this because other systems are worse
ஜனநாயகம் நன்மையே. இதை நான் சொல்ல காரணம் மற்றவை மோசமானது.
ஜவஹர்லால் நேரு
48. Thank God, I have done my duty.
என் கடமையை செய்து விட்டேன். கடவுளுக்கு நன்றி.
அட்மிரன் நெல்சன்
49. It should be possible to explain the laws of physics to a barmaid.
இயற்பியல் விதிகளை ஒரு விடுதி பணிப்பெண்ணுக்கும் விளக்கமுடியும்.
ஆல்பர்ட் எய்ன்ஸ்டீன்
50. Great spirits have always found violent opposition from mediocre minds.
உயர்ந்த எண்ணங்களுக்கு எப்போதுமே கடுமையான எதிர்ப்பு, சாதாரணமானவர்களிடமிருந்து தான் இருக்கும்.
ஆல்பர்ட் எய்ன்ஸ்டீன்
51. Only strong characters can resist the temptation of superficial analysis.
மனதளவில் திடமானவர்களால் மட்டுமே மேலோட்டமான ஆய்வுகளை எதிர்க்க முடியும்.
ஆல்பர்ட் எய்ன்ஸ்டீன்
52. Never stop questioning.
கேள்விகள் கேட்பதை நிறுத்திவிடாதே
ஆல்பர்ட் எய்ன்ஸ்டீன்
53. I never think of the future, it comes soon enough.
நான் எதிர்காலத்தை பற்றி நினைப்பதில்லை, ஏனென்றால் அது எப்படியும் வர உள்ளது.
ஆல்பர்ட் எய்ன்ஸ்டீன்
54. Most people say that it is the intellect which makes a great scientist. They are wrong, it is character.
அநேகம் பேர் நினைப்பது, ஒரு அறிவாளி மட்டுமே ஒரு விஞ்ஞானி ஆக முடியும். உண்மை அது வல்ல. ஒருவரின் ஒழுக்கமே காரணம்.
ஆல்பர்ட் எய்ன்ஸ்டீன்
55. Discovery consists of seeing what everybody has seen and thinking what nobody has thought.
கண்டுபிடிப்பு என்பது ஒருவர் யோசிப்பதும் பார்ப்பதும் அல்ல; யாரும் நினைக்காததை செய்வது தான்.
ஆல்பர்ட் ஜியார்ஜி
56. Religion is a fraud, but must be maintained.
மதம் என்பது ஒரு மோசடி. ஆனால், பராமரிக்கப்பட வேண்டும்.
வால்டேர்
57. Treat the Earth well. It was not given to you by your parents. It was loaned to you by your children.
புவியை போற்று; இது உன் முன்னோர்களால் உனக்கு கொடுக்கப்பட்டது அல்ல. உன் பிள்ளைகளிடமிருந்து கடனாக பெற்றது.
அமெரிக்க பொன்மொழி
58. We do not inherit the Earth from our Ancestors; We borrow it from our Children.
புவி முன்னோர்களிடமிருந்து பெற்றது அல்ல. உன் பிள்ளைகளிடமிருந்து கடனாக பெற்றது.
அமெரிக்க பொன்மொழி
59. Success is a ladder you cannot climb with your hands in your pockets.
வெற்றி என்பது ஒரு ஏணி. அதில் கையை கட்டிக்கொண்டு ஏறமுடியாது.
அமெரிக்க பொன்மொழி
60. Education is the ability to meet life’s situations.
கல்வி என்பது வாழ்க்கையின் நிகழ்வுகளை எதிர் கொள்ள உதவுகிறது.
டாக்டர் ஜான் ஜி. கிப்பன்
61. Only the educated are free.
படித்தவர்கள் மட்டுமே சுதந்திரம் பெற்றவர்கள்
எபிக்டெலஸ்
62. Reading maketh a full man; conference a ready man; and writing an exact man.
படிப்பது ஒரு மனிதனை உருவாக்குகிறது. கலந்தாலோசிப்பது ஒரு மனிதனை தயாராக்குகிறது. எழுதுவது ஒரு மனிதனை முழுமை ஆக்குகிறது.
ஃப்ரான்சிஸ் பேகன்
63. Some books are to be tasted, others to be swallowed; and, a few to be chewed and digested.
சில புத்தகங்களை ருசிக்க வேண்டும்; சிலவற்றை முழுங்க வேண்டும்; சிலவற்றை நன்கு மென்று சீரணிக்க வேண்டும்.
ஃப்ரான்சிஸ் பேகன்
64. A wiseman will make more opportunities than he finds.
ஒரு புத்திசாலி, தான் பார்ப்பதைவிட, அதிகமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வான்.
ஃப்ரான்சிஸ் பேகன்
65. Discoveries are often made by not following instructions; by going off the main road; by trying the untried.
கண்டுபிடிப்புகள் என்பது, உத்தரவுகளை மீறி, நேர் வழியில் செல்லாமல் குறுக்கு வழியில் சென்று காண்பது.
ஃப்ராங்க் டைகர்
66. In question of science, the authority of a thousand is worth that humble reasoning of a single individual.
கலீலியோ கலீலி
67. The living need more charity than the dead.
உயிருடன் இருப்பவர்களுக்கே அதிகமான கருணை தேவை. இறந்தவர்களுக்கு அல்ல.
ஜார்ஜ் அர்ணால்ட்
68. Be led by reason.
காரணங்களால் வழிநடத்தப்படு
கிரேக்க பழமொழி
69. You do not need to justify asking questions; but, if you think you have found answers, you do not have the right to remain silent.
கேள்விகளை கேட்டு நியாயப்படுத்தாதே. எந்த ஒரு பிரச்சனைக்கும் உனக்கு தீர்வு தெரிந்தால், அதை வெளிப்படுத்தாமல் இருக்க உனக்கு எந்த அதிகாரமுமில்லை.
ஜேகப் நூஸ்னர்
70. Books are the Compass, telescopes, sextants and charts, which other men have prepared, to help us navigate the dangerous seas of human life.
புத்தகங்கள் என்பது பல வகை வழிகாட்டி கருவிகளை போன்றது. அதன் மூலம் தான் நாம் வாழ்க்கை என்ற பயங்கர கடலைக் கடக்க முடியும்.
ஜெஸ்ஸி லீ பென்னட்
71. Logic is the art of making the truth prevail.
தர்க்கம் என்பது உண்மையை வெளிக்கொண்டுவர உதவுகிறது.
லா ப்ரூயெர்
72. Whom the Gods love die young.
கடவுளால் விரும்பப்படுகிறவர்கள், சிறு வயதில் மரணத்தை தழுவுகிறார்கள்.
லார்ட் பைரோன்
73. You may never know what results some of your action; but, if you do nothing, there will be no result.
உன்னுடைய நடவடிக்கையால் என்ன தீர்வு கிடைக்கும் என தெரியாது; ஆனால், நீ எதுவுமே செய்யாவிட்டால், ஒரு தீர்வும் கிடைக்காது.
மகாத்மா காந்தி
74. You must be the change, you wish to see in the world.
உலகில் என்ன மாற்றத்தை எதிர்பார்க்கிறாயோ, அதை முதலில் உன்னிடத்தில் செயல்படுத்து.
மகாத்மா காந்தி
75. Truth and Non-violence are my God.
உண்மையும் வன்மையை எதிர்ப்பதுமே என் கடவுள்
மகாத்மா காந்தி
76. Untouchability is a crime against God and mankind.
தீண்டாமை கடவுளுக்கும் மனிதகுலத்துக்கும் எதிரான குற்றம்.
மகாத்மா காந்தி
77. The weak can never forgive. Forgiveness is the attribute of the strong.
மனதில் பலவீனமானவர்களால் மன்னிக்கமுடியாது. மன்னிப்பது என்பது மனதில் பலம் மிகுந்தவர்களின் செயல்.
மகாத்மா காந்தி
78. An ounce of practice is worth more than tons of preaching.
ஒரு துளி பயிற்சி ஒராயிரம் போதனையை விட சிறந்தது.
மகாத்மா காந்தி
79. Honest disagreement is often a good sign of progress.
நேர்மையான எதிர்ப்பு ஒரு முன்னேற்றத்தின் அறிகுறி.
மகாத்மா காந்தி
80. An eye for an eye makes the whole world blind.
ஒரு கண்ணுக்கு கண் என்று எதிர்ப்போமேயானால், மனித குலமே குருடர்களாகி விடுவார்கள்.
மகாத்மா காந்தி
81. You must not lose faith in humanity. Humanity is an ocean; if a few drops of the ocean are dirty, the ocean does not become dirty.
மனித நேயத்தின் மீது நம்பிக்கை இழக்கக்கூடாது. இது ஒரு கடல், இதில் ஒரு சில துளிகள் தூய்மையற்றதாக இருப்பின், மொத்த கடலுமே அசுத்தமானது என கருதமுடியாது.
மகாத்மா காந்தி
82. One needs to be slow to form convictions, but once formed, they must be defended against the heaviest odds.
ஒருவர் ஒரு முடிவு/தீர்வுக்கு வருமுன் யோசி. யோசித்து முடிவு எடுத்த பின் எந்த தடையிருப்பினும் பின் வாங்காதே.
மகாத்மா காந்தி
83. If you want to be original, question all truths handed down to you.
நீ அசலாக இருக்க விரும்பினால், உனக்கு தெரிந்த உண்மைகளுக்கு எதிராக கேள்வி கேள்.
நீல்ஸ் எல்ரிஜ்
84. To live life effectively is to live with adequate information.
ஒரு நல்ல வாழ்க்கை வாழ வேண்டுமானால், தேவையான தகவல்களை தெரிந்து வைத்துக்கொள்.
நார்பெர்ட் வெய்னர்
85. If we all worked on the assumption that what is accepted as true is really true, there would be little hope of advance.
நமக்கு சொல்லப்பட்டவை எல்லாம் உண்மை என்று நாம் நம்பினால், முன்னேற்றம் என்பதற்கு சாத்தியம் குறைவு.
ஆர்வில் ரைட்
86. The benefits of education and of useful knowledge, generally diffused through a community, are essential to the preservation of a free government.
சமுதாயத்தின் மூலம் நாம் அறிந்த கல்வியும், அறிவும், ஒரு நல்ல அரசாங்கம் இயங்குவதற்கு அவசியமானது.
சான்ஸ் ஹூட்டன்
87. The true University these days, is a collection of books.
புத்தகங்களின் தொகுப்பே, உண்மையான பல்கலைக்கழகம்.
தாமஸ் கார்லைல்
88. I disapprove of what you say but I will defend to death your right to say it.
நீ சொல்வதை நான் எதிர்க்கிறேன். ஆனால் அதைச் சொல்லும் உன் உரிமையை நான் என்றும் காப்பாற்றுவேன்
வால்டேர்
89. It is dangerous to be right, when the government is wrong.
அரசாங்கம் தவறாக இருக்கும் போது, நாம் அமைதியாயிருப்பது மிகப் பெரிய ஆபத்து.
வால்டேர்
90. Education is not the filling of a pail, but the lighting of a fire.
கல்வி என்பது ஒரு பாத்திரங்களை நிரப்புவது அல்ல. இருட்டில் ஒரு வெளிச்சத்தை உருவாக்குவது.
வில்லியம் பட்லர் யீட்ஸ்
91. Our sweetest songs are those that tell of saddest thoughts.
நம்முடைய இனிமையான பாடல்கள், நம்முடைய துயரமான நினைவுகளை பிரதிபலிப்பதாக இருக்கும்.
ஷெல்லி
92. More things are wrought by prayers than this world dreams of.
நாம் நினைப்பதை விட அதிகமான செயல்கள் பிரார்த்தனையால் நடக்கிறது.
டென்னிஸன்
93. Knowledge is power.
அறிவே பலம்.
ஹாப்ஸ்
94. The best portion of a good man’s life, his little nameless, un remembered acts of kindness and of love.
ஒரு மனிதனின் வாழ்க்கையில் சிறந்த பகுதி, அவன் நினைவில் இல்லாத நற்செயல்களும், அன்புமே.
வில்லியம் வார்ட்ஸ்வொர்த்
95. Where wealth accumulates, men decay.
எங்கு செல்வம் சேருகிறதோ, அங்கு மனித நேயம் சிதைகிறது.
வில்லியம் கோல்ட்ஸ்மித்
96. A thing of beauty is a joy forever.
ஒரு அழகான செயல் வாழ்க்கையில் எப்போதுமே மகிழ்ச்சி.
ஜான் கீட்ஸ்
97. Beauty is truth and truth is beauty; that is all you know on earth, and , all you need to know.
அழகே உண்மை, உண்மையே அழகு, இது தான் உனக்கு தெரியும்; இது தெரிந்தால் மட்டும் போது.
ஜான் கீட்ஸ்
98. Wisdom makes but a slow defence against trouble, though atlast a sure one.
அறிவு தீய செயல்களுக்கு எதிராக மெதுவாக செயல்படும், ஆனால் முடிவில் வெற்றியே தரும்.
ஜான் கீட்ஸ்
99. There is no future in any job; the future lies in the man who holds the job.
எந்த வேலையிலும் எதிர்காலம் இல்லை. அது அந்த வேலை செய்பவனின் கையில் தான் உள்ளது.
G.W. க்ரேன்
100. For fools rush in, where angels fear to tread.
தேவதைகள் நுழைய பயப்படும் இடத்தில், முட்டாள்கள் வசிப்பார்கள்.
போப்
101. Men errors, so long as he strives.
முயற்சிகள் செய்யும் வரை, ஒரு மனிதன் தவறுகள் செய்து கொண்டு இருப்பான்.
J.W. வான் கோயத்
102. You can easily judge the character of a man by how he treats those who can do nothing for him.
ஒரு மனிதனின் குணாதிசயங்களை புரிந்து கொள்ள, அவன் தனக்கு எந்த விதத்திலும் பயன் தராத பலரை எவ்வாறு நடத்துகிறான் என்பதை பார்க்கவும்.
J.W. வான் கோயத்
103. Character is that which reveals moral purpose, exposing the class of things a man chooses and avoids.
ஒரு மனிதனின் குணாதிசயம், அவன் எதை தேர்ந்தெடுக்கிறான் எதை நிராகரிக்கிறான் என்பதிலிருந்து வெளிப்படும்.
அரிஸ்டாடில்
104. Marriage is the only adventure open to timid.
கோழைக்கு திருமணம் என்பது மட்டுமே ஒரு சாகச செயல்.
அரிஸ்டாடில்
105. Man is by nature, a political animal.
இயற்கையில் மனிதன் ஒரு அரசியல் விலங்கு.
அரிஸ்டாடில்
106. Plato is dear to me, but still is the truth.
அரிஸ்டாடில்
107. The goal of war is peace, of business, leisure. அரிஸ்டாடில் போரின் நோக்கம் அமைதி, வணிகம், பொழுது போக்கு
108. Virtue is a mean state between two vices; the one of excess and other deficiency.
அரிஸ்டாடில்
109. The roots of education are bitter, but fruit is sweet.
கல்வியின் வேர் கசப்பானாலும், அதன் பழம் இனிப்பானது.
அரிஸ்டாடில்
110. Hope is the dream of a walking man.
நம்பிக்கை என்பது நடக்கும் மனிதனின் கனவு.
அரிஸ்டாட்டில்
111. It is the characteristic of the magnanimous man to ask no favour but to be ready to kindness to others.
பெருந்தன்மையுடையவன், தனக்கென்று எந்த உதவியும் எதிர்பார்க்காமல், மற்றவர்களுக்கு உதவி செய்ய முன்வருவான்.
அரிஸ்டாடில்
112. I know that I know nothing
எனக்கு எதுவும் தெரியாதென்று எனக்கு தெரியும்.
சாக்ரடீஸ்
113. The unexamined life is not worth living.
தன் வாழ்க்கையை ஆராயாதவன், வாழத் தகுதியற்றவன்.
சாக்ரடீஸ்
114. Do not count your chickens, before they hatch.
அடைகாப்பதற்கு முன்னாலேயே, கோழிக்குஞ்சுகளை எண்ணாதே
ஏசோப்
115. The Good of the People is the Chief Law.
மக்கள் நலனே முக்கிய விதி/நீதி/சட்டம்
சிசெரோ
116. Religion is the opium of the people.
மதம் என்பது மனிதனுக்கு கிடைத்த போதை.
கார்ல் மார்க்ஸ்
117. The production of too many new useful things, results in too many useless people
புதிய பயனுள்ள கண்டுபிடிப்புகள், அதிகமான சோம்பேறிகளை உருவாக்குகிறது.
கார்ல் மார்க்ஸ்
118. History repeats itself, first as tragedy, second as farce.
வரலாற்றின் சுழற்சியில் முதலில் வருவது வேதனை, இரண்டாவது கேலிக்கூத்து.
கார்ல் மார்க்ஸ்
119. The only antidote to mental suffering is physical pain
உளவியல் துன்பங்களுக்கு உடல் உழைப்பே மருந்து.
கார்ல் மார்க்ஸ்
120. Medicine heals doubts as well as diseases
மருந்து சந்தேகத்தையும் நோயையும் குணமாக்குகிறது.
கார்ல் மார்க்ஸ்
121. A specter is haunting Europe, the specter of communism
ஐரோப்பாவை ஒரு மாயசக்தி அச்சுறுத்துகிறது. கம்யூனிசம் என்ற மாய சக்தி.
கார்ல் மார்க்ஸ்
122. Democracy is the road to soacialism
ஜனநாயகமே பொதுவுடைமைக்கு வழிகாட்டி
கார்ல் மார்க்ஸ்
123. Man is born free but everywhere he is in Chains.
மனிதன் சுதந்திரமாய் பிறந்தான், ஆனால் வாழ்க்கையில் எப்போதும் கைதியாகவே வாழ்கிறான்.
ஜீன் ஜாக்கிஸ் ரோஸூ
124. Patience is bitter but its fruit is sweet
பொறுமை கசப்பானது, ஆனால் அதன் பழம் இனிப்பானது.
ஜீன் ஜாக்கிஸ் ரோஸூ
125. Nature never deceives us; it is we who deceive ourselves
இயற்கை நம்மை ஏமாற்றுவதில்லை; நாம் தான் இயற்கையை ஏமாற்றி வருகிறோம்.
ஜீன் ஜாக்கிஸ் ரோஸூ
126. Our greatest evils flow from ourselves.
நம்முடைய தீய செயல்கள் நம்மிடமிருந்தே வருகிறது.
ஜீன் ஜாக்கிஸ் ரோஸூ
127. A feeble body weakens the mind
பலவீனமான உடல் மூளை செயல்பாட்டை பலவீனமாக்குகிறது.
ஜீன் ஜாக்கிஸ் ரோஸூ
128. We should not teach children the sciences; but give them a taste for them
குழந்தைகளுக்கு அறிவியலை கற்றுக் கொடுக்காதீர்கள்; ஊட்டி விடுங்கள்.
ஜீன் ஜாக்கிஸ் ரோஸூ
129. One small step for man, giant leap for mankind.
மனிதனுக்கு இது ஒரு சிறு நடை. மனித குலத்துக்கு இது ஒரு மிகப்பெரிய பயணம்.
நீல் ஆர்ம்ஸ்ட்ராங்
130. You can’t cross the sea merely by standing and staring at the waters.
கடலை நோக்கி பார்த்துக்கோண்டே இருந்தால், கடலை கடக்க முடியாது.
ரவீந்திரநாத் தாகூர்
131. We come nearest to the great when we are great in humility
பெருந்தன்மை நம்மை பெருமைக்கு அருகில் கொண்டு செல்லும்.
ரவீந்திரநாத் தாகூர்
132. Age considers; youth ventures
முதுமை யோசிக்கும், இளமை துணிந்து செயல்படும்.
ரவீந்திரநாத் தாகூர்
133. Defeat comes when dreams surrender to reality.
கனவு, உண்மை நிலையை அறியும் போது, தோல்வியை தழுவுகிறது.
ஜேம்ஸ் A. மிச்செனர்
134. You will get what you deserve, not desire. So, be deserving to get what you desire.
நீ எதற்கு தகுதியுடையவனோ அதை பெறுவாய், நீ நினைப்பதை அல்ல. ஆகவே, தகுதியுடையவனாக ஆக முயற்சி செய்.
பழங்கால பழமொழி
135. I am not afraid of a fighter who knows about 10000 kicks. But, I am afraid of the one who has practiced one kick 10000 times.
10000 வித்தைகள் தெரிந்த போராளிக்கு நான் பயப்படமாட்டேன்; ஆனால் ஒரே வித்தையை 10000 முறை பயிற்சி செய்தவனுக்கு பயப்படுவேன்.
ப்ரூஸ் லீ
136. To hell with circumstances; I create opportunities
சூழ்நிலையை மற; வாய்ப்புகளை உருவாக்கு.
ப்ரூஸ் லீ
137. Showing off is the fool's idea of glory
தன்னை பகட்டாக காட்டிக்கொள்வது, ஒரு முட்டாள் மகிமை பெற எடுக்கும் முயற்சி.
ப்ரூஸ் லீ
138. There are two motives for reading a book. One, that you enjoy it; the other you can boast about it.
புத்தகங்கள் படிப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, அது உனக்கு மகிழ்ச்சி தருகிறது. மற்றொன்று அதைப் பற்றி நீ பெருமையடித்துக்கொள்ள.
பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்
139. The good life is the one inspired by love and guided by knowledge
ஒரு நல்ல வாழ்க்கை என்பது, அன்பினால் உந்தப்பட்டு, அறிவால் வழிகாட்டப்படுவது.
பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்
140. The trouble with the world is that the stupid are cock sure and the intelligent are full of doubts
இந்த உலகின் முக்கிய பிரச்சனை என்னவென்றால், முட்டாள்கள் உறுதியாக இருக்கிறார்கள், ஆனால் புத்திசாலிகள் சந்தேகத்துடன் வாழ்கிறார்கள்.
பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்
141. War does not determine who is right, only who is left
போர், யார் சரி என்று நிர்ணயிக்காது, யார் மீதமிருக்கிறார்கள் என முடிவு செய்கிறது.
பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்
142. The secret to happiness is to face the fact that the world is horrible
மகிழ்ச்சியின் ரகசியம், இந்த உலகம் மிக மோசமானது என புரிந்து கொள்ளல்.
பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்
143. I have not failed. I have just found 10000 ways won’t work.
நான் தோற்கவில்லை. 10000 வழிகள் தவறானது என கண்டுபிடித்துள்ளேன்.
தாமஸ் ஆல்வா எடிசன்
144. What a man’s mind can create, man’s character can control.
மனிதனின் எண்ணங்கள் எதை உருவாக்குகிறதோ, அதை அவனது குணாதிசயங்கள் வழி நடத்துகிறது.
தாமஸ் ஆல்வா எடிசன்
145. Opportunity is missed by most people because it is dressed in overall and looks like work.
தாமஸ் ஆல்வா எடிசன்
146. If we all did the things we are capable of, we would astound ourselves.
நம்மால் முடிந்ததை சரிவர செய்தால், அதன் விளைவுகள் நம்மை ஆச்சரியப்பட செய்யும்.
தாமஸ் ஆல்வா எடிசன்
147. There is a way to do it better, find it.
ஒரு வேலையை திறம்பட செய்ய வழிகள் உண்டு, அதைக் கண்டுபிடி.
தாமஸ் ஆல்வா எடிசன்
148. Flowers are words even a baby can understand.
பூக்களின் மொழியை ஒரு குழந்தைக் கூட புரிந்து கொள்ளும்.
க்வெண்டின் க்றிஸ்ப்
149. Never take defeat. Use words like, hope, belief, faith and victory.
தோல்வியை ஏற்காதே. நம்பிக்கை, தன்னம்பிக்கை, வெற்றி போன்ற சொற்களை உச்சரி.
நார்மன் வின்செண்ட் பீல்
150. You can complain because Roses have thorns; Or, you can rejoice thorns have roses.
ரோஜாவில் முள் உள்ளது என்று குறை கூறலாம். அதே சமயம், முள்ளில் ரோஜா உள்ளது எனவும் கூறலாம்.
டாம் வில்சன்
151. Character in the long run, is the decisive factor in life of an individual of nations alike.
ஒரு மனிதனின் குணாதிசயங்களே அவனுடைய வாழ்க்கையில் முக்கியமானது. அதுவே நாட்டுக்கும் சம்பந்தப்பட்டது.
தியோடர் ரூஸ்வெல்ட்
152. Keep your eyes on the star and your feet on the ground
உன்னுடைய குறிக்கோள் பார்வை நட்சத்திரத்தை நோக்கியும், உன் கால்கள் தரையிலும் பதிந்திருக்க வேண்டும்.
தியோடர் ரூஸ்வெல்ட்
153. Believe you can, and you are halfway there
உன்னால் முடியும் என்று நம்பினால், வெற்றிப் பாதையில் பாதியை அடைந்து எனக் கொள்.
தியோடர் ரூஸ்வெல்ட்
154. The only man who never makes mistake is the man who never does anything.
எவனொருவன் தப்பே செய்யவில்லை என்றால், அவன் எதையுமே செய்ய முயற்சிக்கவில்லை எனப் பொருள்.
தியோடர் ரூஸ்வெல்ட்
155. Nobody cares how much you know, until they know how much you care
உனக்கு எவ்வளவு தெரியும் என்று யாரும் நினைப்பதில்லை. ஆனால், நீ மற்றவர்களை எவ்வளவு மதிக்கிறாய்
தியோடர் ரூஸ்வெல்ட்
156. To educate a person in mind and not in morals is to educate a menace to society.
ஒருவனுக்கு வெறும் கல்வியை மட்டும் கற்று கொடுத்து, நல் வழிகளை கற்று கொடுக்காவிட்டால், நாம் சமூகத்துக்கு ஒரு தொல்லையை உருவாக்குகிறோம் என பொருள்.
தியோடர் ரூஸ்வெல்ட்
157. Real generosity is doing something nice for someone who will never find out.
ஒரு பெருந்தன்மையான செயல் என்பது அதை பெறுபவருக்கு தெரியாமல் செய்வது.
ஃப்ராங்க் A க்ளார்க்
158. There are two ways of spreading light; to be the candle or the mirror that reflects it.
வெளிச்சத்தை இரண்டு வழிகளில் பரப்பலாம். ஒன்று எரியும் மெழுகுவர்த்தியாக, மற்றொன்று அதன் வெளிச்சத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக.
எடித் வார்டன்
159. Fame is vapour, popularity an accident, riches take wing, and only character endures.
புகழ் என்பது ஒரு விபத்தால் ஏற்படும் வெற்றிடம். பணக்காரர்கள் இதன் மூலம் பறக்க நினைப்பார்கள். நற்குணம் படைத்தவர்கள் அதை தக்க வைத்துக்கொள்வார்கள்.
ஹொரேஸ் க்ரீலி
160. The good ended happily, and the bad unhappily. That is what fiction means.
நல்லது நன்மையாகவும், தீயது துயரமாகவும் முடிவது தான் கற்பனை கதை.
ஆஸ்கார் ஒயில்ட்
161. Women are made to be loved, not understood
பெண்கள் அன்பு பாராட்டப்படுபவர்கள், புரிந்து கொள்வதற்கல்ல
ஆஸ்கார் ஒயில்ட்
162. A gentleman is one who never hurts anyone's feelings unintentionally
ஒரு பண்புள்ள மனிதனின் செயல், அவன் அடுத்தவர்களின் மனதை தெரியாமல் கூட புண்படுத்தமாட்டான்.
ஆஸ்கார் ஒயில்ட்
163. Always forgive your enemies, nothing annoys them so much
உங்கள் எதிரகளை மன்னித்து விடுங்கள். இதை விட அவனை கோபப்படுத்தும் செயல் வேறு ஒன்றுமில்லை.
ஆஸ்கார் ஒயில்ட்
164. Experience is the name we simply give our mistakes
நாம் செய்யும் தவறுகளுக்கு அனுபவமின்மை என்ற பெயரைக் கொடுத்து விடுகிறோம்.
ஆஸ்கார் ஒயில்ட்
165. You cannot do a kindness too soon because you never know how soon it will be too late.
ஒரு நற்செயலை வேகமாக செய்ய நினைக்கும் போது, அது எவ்வளவு தாமதமானது என்பது நமக்கு தெரியாது.
ரால்ஃப் வால்டோ எமர்சன்
166. What lies behind us, and, what lies before us, are small matters compared to what lies within us.
நமக்கு பின்னால் இருப்பது, நமக்கு முன்னால் இருப்பது, இவை அனைத்தும் நம்முள் என்ன இருக்கிறதோ அதை விட சிறியதானது தான்.
ரால்ஃப் வால்டோ எமர்சன்
167. When one door of happiness closes, another opens; but often we look so long at the closed door that we do not see the one which has opended for us
ஒருவருடைய வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சி கதவு மூடும் போது, மற்றொன்று திறக்கிறது. ஆனால், நாம் மூடிய கதவை நினைத்து, மற்றொரு திறந்த கதவை காண மறந்து காலத்தை கடத்துகிறோம்.
ஹெலன் கெல்லர்
168. Optimism is the father that gives birth to achievement.
நம்பிக்கையால் பிறப்பதே சாதனை.
ஹெலன் கெல்லர்
169. Life is either a great adventure or nothing
வாழ்க்கை என்பது ஒரு பெரிய சாகசம், இல்லையேல் ஒன்றுமில்லை.
ஹெலன் கெல்லர்
170. The only thing worse than being blind is having sight and no vision
கண்பார்வை இல்லாததை விட கொடுமையானது, பார்வை இருந்தும் குறிக்கோளற்ற வாழ்க்கை வாழ்வது.
ஹெலன் கெல்லர்
171. Life is an exciting business, and most exciting when it is lived for others
வாழ்க்கை என்பது ஒரு உற்சாகமான வணிகம். மற்றவர்களுக்காகவும் வாழும் போது அது மேன்மை அடைகிறது.
ஹெலன் கெல்லர்
172. Make it a rub of life – never to regret and never to look back. Regret is an appalling waste of energy. You cannot build on it. It is only for wallowing in.
வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்களை திரும்பி பார்ப்பதும், அதை நினைத்தே வாழ்வதும், உங்கள் சக்தியை வீணடிக்கும் செயல். அதில் உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள் சிதைகிறது.
காதரிங் மான்ஸ்ஃபீல்ட்
173. Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great make you feel that you too can become great.
உங்கள் உயர்ந்த ஆசைகளை இழிவு படுத்துபவர்களை நினைத்து நேரத்தை வீணடிக்காதீர்கள். அவ்வாறு செய்பவர்கள் சிறுமை சிந்தனை படைத்தவர்கள். உண்மையில் பெருமை படைத்தவர்கள் உங்களை ஊக்குவிக்கும்போது நீங்கள் பெருமை அடைவீர்கள்.
மார்க் ட்வெய்ன்
174. The secret of getting ahead is getting started
முன்னேறுவதற்கான ரகசியம், முதலில் தொடங்குவது.
மார்க் ட்வெய்ன்
175. Kindness is the language which deaf can hear and the blind can see.
கருணை என்ற மொழியை, காது கேளாதோர் கேட்க முடியும், பார்வையற்றோர் பார்க்க முடியும்.
மார்க் ட்வெய்ன்
176. If you tell the truth, you do not have to remember anything.
நீ உண்மையை சொன்னால், மற்ற அனைத்தையும் மறக்கலாம்.
மார்க் ட்வெய்ன்
177. The lack of money is the root of all evil
பணப்பற்றாக்குறையே தீய செயல்கள் துவங்க காரணம்.
மார்க் ட்வெய்ன்
178. Nurture your mind with great thoughts, for you will never go any higher than you think.
உங்கள் எண்ணங்களை பெரிய செயல்களுக்கு தயார் படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால், உங்கள் எண்ணங்களை விட உயரத்துக்கு நீங்கள் செல்லமுடியாது.
பெஞ்சமின் டிஸரேலி
179. The secret of happiness is to make others believe they are the cause of it.
மகிழ்ச்சியின் ரகசியம், அந்த மகிழ்ச்சிக்கு காரணம் மற்றவர்களே என்பதை தெரிவிப்பது.
அல் பட்
180. Holding on to anger is like grasping a hot coal, with the intent of throwing it at someone else, you are the one who get burned.
கோபத்தை பிடித்துக் கொண்டிருப்பது, எரியும் தனலை கையில் வைத்துக் கொண்டு அடுத்தவர்கள் மீது எரிய நினைப்பது. ஏனென்றால், அத்தனல் உங்களைத் தான் முதலில் எரிக்கும்.
புத்த கோசா
181. Ambition is the germ from which all growth of nobleness proceeds.
லட்சியம் என்ற விதையால் தான் மேன்மை என்பது வளருகிறது.
ஆஸ்கார் ஒயில்ட்
182. First we form habits; then they form us; conquer your bad habits or They will conquer you.
பழக்கங்களை நாம் அரவணைக்கிறோம். பிறது அது நம்மை அரவணைக்கிறது. தீய பழக்கங்களை வெற்றி கொள்ளுங்கள். அல்லது அது நம்மை வெற்றி கொள்ளும்.
ராப் கில்பெர்ட்
183. A man should never be ashamed to own that he is wrong, which is but saying in other words that he is wiser to day, than he was yesterday.
தான் செய்த தவறுகளை ஒத்துக் கொள்வதற்கு ஒருவர் வெட்கப்படக்கூடாது. காரணம், அவ்வாறு செய்யும் போது அவர் நேற்றைய தினத்தை விட இன்று புத்திசாலியாகிறார்.
அலெக்ஸாண்டர் போப்
184. Politics is the art of preventing people from taking part in affairs which properly concern them.
அரசியல் என்பது, மக்கள் சார்ந்த விவகாரங்களில் மக்களை அணுக விடாமல் பார்த்துக் கொள்வது.
பால் வலேரி
185. What is important is not what happens to us, but how we respond to what happens to us.
நமக்கு ஏற்படும் நிகழ்வு முக்கியமல்ல. அந்த நிகழ்வுகளை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதே முக்கியம்.
ஜீன் பால் சார்த்ரே
186. Every single opportunity gives you an opportunity to live. Every hour has the power to change your fate; So, do not kill the time by worrying yourself.
ஒவ்வொரு வாய்ப்பும் நாம் வாழ்வதற்கு கிடைக்கும் வாய்ப்பு. ஒவ்வொரு மணி நேரமும் உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடியது. ஆகவே, நடந்ததை நினைத்து உங்கள் வாழ்க்கை நேரத்தை வீணடிக்காதீர்கள்.
பழங்கால பொன்மொழி.
187. A fool can criticize, condemn and complain and most fools do.
ஒரு முட்டாள் குறை கூறலாம், நிந்திக்கலாம், புகாரளிக்கலாம். ஏனென்றால் அதைத்தான் அவர்களால் செய்ய முடியும்.
பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
188. A dream is not what you see in your sleep. A dream is the thing which does not allow you to sleep.
கனவு என்பது நீங்கள் தூங்கும் போது காண்பதல்ல. உங்களை தூங்கவிடாமல் செய்வதே.
அப்துல் கலாம்
189. God gives every bird its food, but he does not throw it into its nest.
J.G. ஹாலண்ட்
190. Knowledge is the true organ of sight, not the eyes.
அறிவே பார்வையின் முக்கிய உறுப்பு, கண்களல்ல.
பஞ்சதந்திரா
191. Success is more permanent when you achieve it, without destroying your principle.
வெற்றியை நீங்கள் பெறும்போது, அது நிரந்தரம், அது உங்கள் குறிக்கோளை அழிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வால்டர் க்ராங்கைட்
192. Remember the difference between a boss and a leader. A boss says “Go” and a Leader says “Let us Go”.
ஒரு எஜமானருக்கும், தலைவனுக்கும் உள்ள வேறுபாடு. எஜமானர் போய் முடி என்பார். தலைவர் வாங்கள் போய் முடிக்கலாம் என்பார்.
E.M. கெல்லி
193. Language is the means of getting an idea from my brain into yours, without surgery.
மொழி என்பது, அறுவை சிகிச்சை இல்லாமல் என் மூளையில் இருப்பதை உன் மூளைக்கு மாற்றுவது.
மார்க் அமிடான்
194. Learn all you can from the mistakes of others; you do not have the time to make them all yourself.
மற்றவர்கள் செய்யும் தவறுகளிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள். ஏனென்றால் அவற்றையெல்லாம் செய்வதற்கு உங்களுக்கு நேரமில்லை.
ஆல்ஃப்ரெட் ஷீன்வல்ட்
195. Ideas can be life changing. Sometimes all you need to open the door is just one more good idea.
யோசனைகள் வாழ்க்கையை மாற்றக் கூடியதாக இருக்கலாம். சில நேரங்களில் சரியான யோசனையை கைக்கொள்வதே முக்கியம்.
ஜிம் ரான்
196. Everyone thinks of changing the world, but no one thinks of changing himself.
எல்லோரும் உலகை மாற்ற வேண்டும் என நினைக்கிறார்களே ஒழிய, தன்னை மாற்றிக் கொள்ள அல்ல.
லியோ டால்ஸ்டாய்
195. While we try to teach our children all about life, our children teach us what life is all about.
சில நேரங்களில் குழந்தைகளுக்கு வாழ்க்கையைப் பற்றி கற்று கொடுக்க நினைக்கிறோம். ஆனால், குழந்தைகள் நமக்கு வாழ்க்கை சில நேரங்களில் நமக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்.
ஏஞ்செலா ஷ்விண்ட்
196. We can do no great things; only small things with great love.
நம்மால் பெரிய செயல்களை செய்ய முடியாது. ஆனால் சிறிய செயல்களை மிகுந்த பாசத்தோடு செய்ய முடியும்.
அன்னை தெரசா
197. Our greatest glory is not in never falling; but in rising every time we fall.
நாம் எப்போதும் விழாமல் இருப்பதால் நமக்கு புகழ் அல்ல. ஆனால், ஒவ்வொரு முறையும் விழும் போது எழுந்து நிற்பதில் தான் பெரும் புகழ்.
கன்ஃபூசியஸ்
198. Talent wins games, but teamwork and intelligence wins championships.
திறமை ஒரு போட்டியை வெல்ல வைக்கும். ஆனால், கூட்டு முயற்சியும் புத்தி கூர்மையும் ஒரு போட்டி தொடரை வெல்ல வைக்கும்.
மிக்கேல் ஜோர்டான்
199. It does not matter how much you want. What really matters is how much you want it.
உனக்கு எவ்வளவு தேவை என்பது முக்கியமல்ல. ஆனால் அது உனக்கு எவ்வளவு முக்கியமானது என்பதே முக்கியம்.
ரால்ஃப் மார்ஸ்டன்
200. Man’s success is not measured by how high he climbs, but how high he bounces when he hits the bottom.
மனிதனின் வெற்றி அவன் எவ்வளவு உயர்ந்திருக்கிறான் என்பதில் அல்ல. ஆனால் அவன் கீழே விழுந்து, எவ்வளவு உயரத்துக்கு எழுந்து நிற்கிறான் என்பதே மிகப் பெரிய வெற்றி.
ஜார்ஜ் S. பேட்டன்
201. Arise, Awake and stop not until the goal is reached
எழுந்திரு, விழித்தெழு, வெற்றிகிட்டும் வரை நிறுத்தாதே.
விவேகானந்தர்
202. Put your heart, mind, intellect and soul even to your smallest acts. this is the secret of success.
உன்னுடைய ஒவ்வொரு சிறு செயலிலும் உன் மனது, மூளை, அறிவு மற்றும் ஆன்மாவை செலுத்து. இதுவே வெற்றியின் ரகசியம்.
விவேகானந்தர்
203. The world is the great gymnasium where we come to make ourselves strong
வாழ்க்கை என்பது ஒரு மிகப்பெரிய உடற்பயிற்சி நிலையம். இங்கு தான் நாம் நம்மை பலப்படுத்திக் கொள்கிறோம்.
விவேகானந்தர்
204. The more we come out and do good to others, the more our hearts will be purified, and god will be in them
நாம் வெளி வந்து அடுத்தவர்களுக்கு எவ்வளவு நன்மை செய்கிறோமோ நம் மனது அவ்வளவு தூய்மையடைகிறது. அப்போது அங்கு கடவுள் குடி கொள்கிறார்.
விவேகானந்தர்
205. You cannot believe in God, until you believe in yourself.
உன்னை நீ நம்பும் வரை, உன்னால் கடவுளை நம்ப முடியாது.
விவேகானந்தர்
206. Nothing is permanent in this wicked world, not even our troubles
இந்த கெட்ட உலகில் எதுவுமே நிரந்தரமல்ல, நம்முடை துயரங்களையும் சேர்த்து.
சார்லி சாப்ளின்
207. We cannot always build the future for our youth, but, we can build our youth for the future.
நம்மால் இளைஞர்களுக்காக எதிர்காலத்தை உருவாக்க முடியாது; ஆனால் இளைஞர்களை எதிர்காலத்துக்கு உருவாக்க முடியும்.
ஃப்ராங்க்ளின் D. ரூஸ்வெல்ட்
208. Coming together is a beginning, staying together is progress and working together is success.
ஒன்று சேருவது தொடக்கம், ஒன்றாயிருப்பது முன்னேற்றம், ஒன்றாய் செய்வது வெற்றி.
ஹென்றி ஃபோர்ட்
209. I have seen more than others, it is because, I was standing on the shoulders of giants.
நான் மற்றவர்களை விட அதிகமாக பார்த்திருக்கிறேன். காரணம், நான் மிகப் பெரியவர்களின் தோளில் நின்று இருந்தேன்.
சர் ஐசக் நியூட்டன்
210. I never remember feeling tired by work; though idleness exhausts me completely.
நான் உழைப்பால் சோர்ந்ததில்லை; ஆனால், வேலையில்லாமலிருப்பது என்னை சோர்ந்து விட செய்துள்ளது.
ஷெர்லாக் ஹோல்ம்ஸ்
211. Every right implies a responsibility; Every opportunity an obligation; Every possession a duty.
ஒவ்வொரு உரிமையும், பொருப்பையும், ஒவ்வொரு வாய்ப்பு கடமையையும், ஒவ்வொரு உடைமையும் என் பணியையும் உணர்த்துகிறது.
ஜான் டி. ராக்ஃபெல்லர்
212. If your only goal is to become rich, you will never achieve it.
பணக்காரன் ஆவது மட்டுமே உனது குறிக்கோளாக இருந்தால் நீ வெற்றி பெற முடியாது.
ஜான் டி. ராக்ஃபெல்லர்
213. Singleness of purpose, is one of the chief essentials for success in life, no matter what may be one's aim.
ஒருவருடைய ஆசைகள் எதுவாக இருந்தாலும், ஒரே குறிக்கோளுடன் இருப்பது வெற்றியைத் தரும்.
ஜான் டி. ராக்ஃபெல்லர்
214. Do not dwell in the past, do not dream of the future, concentrate the mind on the present moment
பழையதை நினைக்காதே, எதிர் காலத்தை கனவு காணாதே, நிகழ் காலத்தில் கவனம் செலுத்து.
புத்தர்
215. Health is the greatest gift, contentment the greatest wealth, faithfullness the greatest relationship
ஆரோக்யம் மிகப்பெரிய நன்கொடை; மன நிறைவு மிகப்பெரிய சொத்து; உண்மையாயிருப்பது மிகப் பெரிய உறவு.
புத்தர்
216. Just as a candle cannot burn without fire, men cannot live without a spiritual life
ஒரு மெழுகு வர்த்தி எப்படி நெருப்பு இல்லாமல் எரியாதோ, மனிதனும் ஆன்மீகம் இல்லாமல் வாழ முடியாது.
புத்தர்
217. Three things cannot be long hidden, the sun, the moon and the truth
மூன்று விஷயங்களை மறைக்க முடியாது -- சூரியன், சந்திரன், உண்மை.
புத்தர்
218. I never see what has been done, I only see what remains to be done
நான் செய்து முடித்ததை பார்ப்பதில்லை, செய்ய வேண்டியதை பார்க்கிறேன்.
புத்தர்
219. Give me blood, I will give you freedom
உங்கள் ரத்தத்தை கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் நான் தருகிறேன்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
220. One individual may die for an idea, but that idea will, after his death, incarnate itself in a thousand lives
ஒரு தனி மனிதன் ஒரு குறிக்கோளுக்காக இறக்கலாம், ஆனால், அவன் மறைவுக்கு பிறகு, அதுவே ஆயிரம் உயிர்களை உருவாக்கும்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்