Khub.info Learn TNPSC exam and online pratice

பிரபஞ்சத்தின் பொது கேள்விகள் -- GENERAL QUESTIONS ON UNIVERSE

Q1. முதன் முதலில் எந்த இந்தியரின் பெயர் ஒரு குறுங்கிரகத்துக்கு வைக்கப்பட்டது?
டாக்டர் சைனூத்தீன் பட்டாழி -- கொல்லம் கேரளாவில் ஒரு பேராசியராக பணி புரியும், சுற்றுச் சூழல் ஆர்வலர். கிரகம் 5178 க்கு இவருடைய பெயர் இடப்பட்டது. இந்த கிரகத்தைக் கண்டுபிடித்தவரும் ஒரு இந்திய வானியல் அறிஞர் -- ஆர். ராஜ்மோகன். இவர் அமெரிக்காவின் Jet Propulsion Laboratory, கலிஃபோர்னியாவில் பணி புரிந்து வருகிறார்.

Q2. கண்டுபிடிக்கப்பட்ட பல கோள்கள், கிரகங்கள் மற்றும் இதர வான் பொருள்களுக்கு மனிதர்களின் பெயர்கள் வைப்பது வழக்கத்தில் இருக்கும் ஒரு பழக்கம். இவ்வாறு, எந்த இந்தியர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன?
1. ஹம்சா பத்மநாபன் --- கிரக எண் 21575 -- ""ஹம்சா""
2. விஷ்ணு ஜெயப்பிரகாஷ் -- கிரக எண் 25620 -- ""ஜெயப்ரகாஷ்""
3. அனிஷ் முகர்ஜீ -- கிரக எண் 25629 -- ""முகர்ஜீ""
4. தேபார்க்யா சர்க்கார் -- கிரக எண் 23630 -- ""சர்க்கார்""
5. ஹேதால் வைஷ்ணவ் -- கிரக எண் 25636 -- ""வைஷ்ணவ்""
6. அக்ஷத் சிங்கானியா -- கிரக எண் 12599 -- ""சிங்கால்""
7. மாதவ் பாதக் -- கிரக எண் 12509 -- ""பாதக்""
8. விஸ்வநாதன் ஆனந்த் -- கிரக எண் 4538 -- ""விஷி ஆனந்த்""
பொதுவாக கிரகங்களை கண்டுபிடிப்பவர்களின் பெயர்கள் வைக்கப்படும். அவ்வாறு வைக்கப்படாத போது, அந்த குழுவினர்களின் பரிந்துரையின் பேரில் வேறு பெயர்கள் வைக்கப்படுகிறது. அவ்வகையில் இந்த இந்தியர்களின் பெயர்கள், அவர்களின் வெவ்வேறு சாதனைகளுக்காக, வைக்கப்பட்டுள்ளது.
Q3. பூமியின் தங்கை கிரகம் என அழைக்கப்படுவது எது?
சுக்ரன் -- வீனஸ் -- Venus.
Q4. சூரிய குடும்பத்தில் உள்ள எந்த கிரகத்துக்கு, ரோம கடவுள் பெயர் வைக்கப்படவில்லை?
பூமி -- Earth.
Q5. எந்த கிரகம் புவியியல் ரீதியாக பூமியைப் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது?
செவ்வாய் -- Mars.
Q6. ப்ளூட்டோ கிரகத்தைத் தாண்டி கண்டுபிடிக்கப்பட்ட குறுங்கிரகங்கள் யாவை?
1. 1992 QBI: 200 கி.மீ விட்டம் , சூரியனிலிருந்து 7.5 பில்லியன் கி.மீ – 30.8.1992 அன்று கண்டுபிடிக்கப் பட்டது.
2. QUAOAR: ப்ளூட்டோவைத் தாண்டி ஒரு திணைமண்டலம். (குய்பெர் மண்டலம்)
Q7. ப்ளூட்டோவைத் தாண்டி இன்னும் சில கிரகங்கள் உள்ளன என எந்த இந்திய வானியல் நிபுணர் முன் வைத்தார்?
ஜே.ஜே. ரமால் -- J.J.Ramal, குஜராத், இந்தியா -- 1978. இவருடைய இந்த தகவல், பிற்காலத்தில் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது.
Q8. எந்த கிரகத்துக்குள் அறிவியல் ஆய்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது?
செவ்வாய் -- Mars.
Q9. செவ்வாய் கிரகத்துக்கு முதன் முதலில் எப்போது பயணம் மேற்கொள்ளப்பட்டது?
வைகிங் -- 1979. VIKING in 1979.
Q10. செவ்வாய் கிரகத்துக்கு கடைசியாக நடத்தப்பட்ட பயணம் எது?
ஸ்பிரிட் -- Spirit – 2004.
Q11. இந்தியாவால் செவ்வாய் கிரகத்துக்கு இந்தியாவால் அனுப்பப்பட்ட முதல் பயணம் எது?
மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் (Mars Orbiter Mission == MOM) -- ""மங்கள்யான்"" எனவும் அழைக்கப்படுகிறது. செயற்கைக்கோள் அனுப்பப்பட்ட நாள் 5.11.2013. இந்த அறிவியல் ஆய்வு வாகனம் 24.9.2014 முதல் செவ்வாய் கிரகத்தைச் சுற்றி, தகவல்கள் சேகரித்து அனுப்பி வருகின்றது. இதுவே இந்தியாவின் முதல், கிரகத்திலிருந்து மற்றொரு கிரகத்தைப் பற்றி ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட முதல் பயணம்.
Q12. கிரகங்களின் வரிசையில் நடுவில் உள்ள கிரகணம் எது?
குரு -- ஜூபிடர் -- Jupiter.
Q13. சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகம் எது?
குரு-ஜூபிடர். Jupiter. (சனி Saturn இரண்டாவது மிகப் பெரியது)
Q14. எந்த கிரகம், சூரியனிலிருந்து, வெகு தூரத்திலும், மிக மெதுவாக சுழல்வதாகவும், மிகவும் குளிர் கொண்டதாகவும், மிகவும் சிறியதாகவும் கருதப்பட்டது?
ப்ளூட்டோ -- Pluto (இப்போது கிரக அந்தஸ்து இல்லை)
Q15. கிரகங்களுக்கு உள்ள கோள்கள் எண்ணிக்கையை கூறுக.
பூமி -- 1 (நிலவு)
ப்ளூட்டோ -- 1
செவ்வாய் -- 2
நெப்ட்யூன் -- 8
யுரேனஸ் -- 12
சனி -- 22
குரு-ஜூபிடர் -- 39.
Q16. எந்த கிரகத்துக்கு அதிகமான கோள்கள் உள்ளன?
ஜூபிடர் -- 39.
Q17. பூமி கிரகத்தின் இயற்கையாக அமைந்துள்ள கோள் எது?
நிலவு Moon.
Q18. நெப்ட்யூன் கிரகத்துக்கு 6 புதிய கோள்கள் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
ஆகஸ்ட் 1989 ல் அமெரிக்க விண்வெளிக் கழகத்தின் "வாயேஜர் 1 & 2" விண் வெளிப் பயணத்தின் மூலம்.
Q19. சூர்ய குடும்பத்தில் உள்ள கோள்களில் satellite மிகப் பெரியது எது? கனிமேடு -- Ganimede. நில நடுக்கோட்டிலிருந்து 5268 கி.மீ. மெர்க்குரியை விட பெரியது.
கனிமேடு -- Ganimede. நில நடுக்கோட்டிலிருந்து 5268 கி.மீ. மெர்க்குரியை விட பெரியது.
Q20. ஜூபிடர் கிரகத்தின் நிலவைக் கண்டு பிடித்தவர் யார்?
கலீலியோ -- 1609. ஜூபிடரின் நிலவுக்கு இவருடைய பெயரே "கலீலி" என வைக்கப்பட்டுள்ளது.
Q21. வானியல் துறைக்கு கலீலியோ அளித்த மற்றொரு முக்கியமான படைப்பு எது?
வானியல் தேவைக்கேற்ற படி ஒரு தொலைநோக்கியை கண்டுபிடித்து உருவாக்கினார்.
Q22. சூர்ய குடும்பத்தில் எந்த இரண்டு கிரகங்கள் இடஞ்சுழியாக anti clockwise சூரியனை சுற்றி வருகின்றன? அதனால் என்ன வானியல் மாறுதல் ஏற்படுகிறது?
யுரேனஸ் மற்றும் வீனஸ் (சுக்கிரன்). இதனால், இந்த இரண்டு கிரகங்களிலும் சூரியன் மேற்கில் உதித்து கிழக்கில் மறையும் நிகழ்வு ஏற்படுகிறது. Uranus and Venus.
Q23. எந்த கிரகத்தில், மிகப்பெரிய எரிமலையும், மிகப் பெரிய பள்ளத்தாக்கும் உள்ளது?
செவ்வாய் - Mars.
Q24. தொலை நோக்கி உதவியுடன், 1846ல் நெப்ட்யூன் கிரகத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
யோஹன் கால்லி -- Johan Galle, (1812-1890) ஜெர்மானியர்.
Q25. மெசஞ்சர் -- MESSENGER என்ற அமெரிக்க செயற்கைக்கோள் எந்த கிரகத்துக்கு அனுப்பப்பட்டது?
மெர்க்குரி -- Mercury.
Q26. குறுங்கிரகங்களில் மிகப் பெரியது எது?
ERIS--2005ல் கண்டுபிடிக்கப்பட்டது. 2006ல் ப்ளூட்டோ குறுங்கிரகமாக அறிவிக்கப்பட்ட பின் இது இரண்டாம் நிலையாகிறது. ஆகவே இன்றைய நிலையில் ப்ளூட்டோ தான் பெரிய குறுங்கிரகம்.
Q27. ஏப்ரல் 2007 ல் வானில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வான்பொருள் வானியல் ஆர்வலர்களுக்கிடையில் ஒரு பெரிய படபடப்பை ஏற்படுத்தியது. அது என்ன?
GLIESE 581 –C : என்ற குறுங்கிரகம் கண்டு பிடிக்கப்பட்டது. இது வரை கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து கிரகங்களிலும் இதுவே, மனித குலம் வாழ்வதற்கு மிகவும் பொருத்தமானது என கண்டறியப் பட்டுள்ளது.
Q28. ஐரோப்பிய விண்வெளிக் கழகம், செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பிய செயற்கைகோளின் பெயர் “ROSETTA” --> இது என்ன?
இத்தாலி நாட்டில் கிடைக்கும் ஒரு புகழ்பெற்ற க்ரானைட் வகை.
Q29. சுக்கிரன் கிரகம், சூரியனின் முகப்பகுதியை கடந்து செல்வதை முதலில் கண்டறிந்தவர் யார்?
Jeremiah Harrocks -- இங்கிலாந்து 1639.
Q30. 2012 ஜூன் மாதத்தில் எந்த கிரகம், 122 வருடங்களுக்குப் பிறகு, சூரியனின் முகப்பகுதியை கடந்து சென்றது?
சுக்கிரன் -- வீனஸ்.
Q31. எந்த வட கோடி அட்ச ரேகையில் சூரியன் தலைக்கு மேல் செங்குத்தாக நடுப்பகலில் காணப்படும்?
கடக ரேகை. Tropic of Cancer.
Q32. ஆங்கிலத்தில் “Syzygy” = கோள் இணைவு நிலை -(கிரகங்களை சார்ந்து) எனப்படுவது என்ன?
எல்லா கிரகங்களும் சூரியனின் ஒரே பக்கவாட்டில் இருப்பது. இந்த நிகழ்வு மார்ச் 10, 1982 அன்று நடந்தது.
Q33. எந்த கிரகம் சுமார் மணிக்கு 11000 கி.மீ வேகத்தில் சூரியனை சுற்றி வருகிறது?
பூமி -- Earth.
Q34. எந்த கிரகத்தை "கொம்பு கிரகம்" “Horned Planet” என அழைக்கப்படுவது எது?
சுக்கிரன் -- Venus.
Q35. ஒரு சிறுகோள் கண்டுபிடிப்புக்கு ஒரு இந்தியர் பெயர் வைக்கப்பட்டது?
சிறுகோள் 4130 -- ASTEROID 4130 -- கணித மேதை ராமானுஜன் பெயர் வைக்கப்பட்டது. இது இந்தியாவின் காவளூர் வைண பாப்பு ஆய்வு நிலையத்தால் (இந்தியாவின் முதல்) கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள்.
Q36. இந்தியாவில், விண்கல் விழுந்து ஏற்பட்ட பெரிய பள்ளம் எங்குள்ளது?
புலந்த் மாவட்டம், மகாராஷ்டிரா.
Q37. "ஞாயிற்றுச் சேய்மை நிலைத்தூரம்" “Aphelion” mean என்பது என்ன?
ஒரு குறிப்பிட்ட விண்பொருள் heavenly body தனது சுழற்சியில், ஒரு குறிப்பிட்ட புள்ளியில், சூரியனிலிருந்து வெகு தூரத்தில் இருப்பதை இவ்வாறு அழைப்பர்.
Q38. "இரண்டு கோள்களுக்கிடையில் உள்ள தூரம்" "apogee" என்பது என்ன?
ஒரு வான்பொருள், தனது சுழற்சியில், ஒரு குறிப்பிட்ட புள்ளியில், பூமியிலிருந்து வெகு தூரத்தில் இருப்பது.
Q39. “Cosmic” என்ற ஆங்கிலச் சொல் எதைக் குறிக்கிறது?
இது ஒரு பொதுவான வார்த்தை -- அண்டத்தைக் குறிக்கும் சொல். இச்சொல்லுக்கு பிறகு சேர்க்கப் படும் சொல்லைப் பொறுத்து அண்ட நிகழ்வுகளைக் கூறலாம். உதாரணமாக -- Cosmic Radiation - அண்டக் கதிர்வீச்சு., Cosmic Law -- அண்ட விதி ……… எனப் பல சொற்றொடர்கள்.
Q40. "வெளி கோள்" “Exoplanet” என்பது என்ன?
Extra Solar Planet = Exoplanet .ஒரு கிரகம்/கோள், சூரியனைத் தவிர்த்து, வேறு ஏதேனும் ஒரு கிரகத்தையோ அல்லது கோளத்தையோ சுற்றுவது, இவ்வாறு அழைக்கப்படுகிறது.
Q41. ஒளியின் வேகம் என்ன?
186000 மைல்/299275 கி.மீ -- ஒரு வினாடிக்கு.
Q42. ஒளி ஆண்டு = Light Year என்பது என்ன?
ஒளி, ஒரு ஆண்டில் பயணிக்கக்கூடிய தூரம். இது வானியலின் தூர அளவுகோல்.
Q43. வானியலில் அளவீட்டு அலகு = unit of measurement என்ன?
பார்ஸெக் = PARSEC – இது வானியலில் குறிப்பிடப்படும் தூரம் == 3.6 ஒளி ஆண்டுகள்.
Q44. விண்மீன் படலம் -- “NEBULA” என்பது என்ன?
சூரிய மண்டலத்திற்கு அப்பால் மேகம் போன்று தோற்றமளிக்கும் விண்மீன் கூட்டம். மிகத் தொலைவில் இருப்பதால், புலப்படுவது கடினம்.
Q45. "வட்டப்பாதைச் சுற்றூ" “Orbit”mean என்றால் என்ன?
ஒரு கிரகத்தின் நீள்வட்டப் பாதை.
Q46. துருவ நட்சத்திரத்திற்கு வானியல் ரீதியான ஆங்கிலப் பெயர் என்ன?
Polaris (or) Pole Star.
Q47. "பரிதி அண்மை" “Perhilion” என்பது என்ன?
ஒரு கிரகம், சூரியனுக்கு வெரு அருகாமையில் வரும் காலம்.
Q48. பூமிக்கு "பரிதி அண்மை" (சூரியனுக்கு மிக அருகில் வரும்) காலம் எது?
ஜனவரி.
Q49. வானவில் -- rainbow என்பது என்ன?
வில் போன்ற அமைப்பில், ஏழு வண்ணங்களுடன் வானத்தல் ஏற்படும் ஒரு வானியல் விநோதம். இந்த ஏழு வண்ணங்களுக்கு “VIBGYOR” என ஆங்கிலத்தில் அழைக்கப்படும். ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு வண்ணத்தை குறிக்கும். வானவில் பொதுவாக, மழை பெய்து கொண்டிருக்கும் போது அதை ஊடுருவி வெய்யிலின் ஒளி பாய்ந்து வரும் போது ஏற்படும். அதாவது, சூரிய ஒளி, இரு முறை, மழைத்துளியின் உள் பரப்பு மூலம் பிரதிபலிக்கப்படுவதால் ஏற்படுகிறது. “VIBGYOR” == Violet, Indigo, Blue, Green, Yellow, Orange, Red
Q50. விண்ணில், சாதாரணமாக பார்க்கக்கூடிய, மிக பிரகாசமான நட்சத்திரம் எது?
சிரியஸ் -- Sirius -- (அழல்மீன்)
Q51. “Terrestrial” என ஆங்கிலத்தொடர் எதைக் குறிக்கிறது?
புவிக்குரிய -- Of the Earth.
Q52. புவியின் மையத்தில் ஒரு பொருளின் எடை என்னவாக இருக்கும்?
பூஜ்யம் -- Zero.
Q53. ஆங்கிலத்தில் “Aureole” என்பது என்ன?
சூரியன் & சந்திரனைச் சுற்றியுள்ள ஒரு ஒளி வட்டம். (Corona, halo எனவும் கூறப்படுகிறது)
Q54. துருவ ஒளி “Aurora Borealis” மற்றும் தென்கனல் “Aurora Australis” என அழைக்கப்படுவது என்ன?
இது ஒரு வானியல் ரீதியான அதிசய நிகழ்வு. வானத்தில், குறிப்பாக உயரமான இடத்தில், வண்ண ஒளி, புலப்படும். இது
1) வட துருவத்தில் ஏற்படும் போது ""துருவ ஒளி - Aurora Borealis"" எனவும்,
2) தென் துருவத்தில் ஏற்படும் போது, ""தென் கனல் -- Aurora Australis"" எனவும் -- அழைக்கப்படுகிறது.
Q55. கதிர் நிரல், நிற மாலை = Spectrum என அழைக்கப்படுவது என்ன?
வெள்ளை ஒளி பட்டகம் மூலம் ஊடுருவி ஒரு தொடர் வண்ணக் கற்றைக்குள் சிதைவடைவது. இந்த வண்ணக் கற்றைக்குள் சிகப்பு வண்ணத்துக்கு அதிக அலைநீளம் கொண்டது. ஊதா நிறம் குறைவான அலைநீளம் கொண்டது.
Q56. "வான் பொருள்" “Celestial Bodies” என்பது என்ன?
வானத்தில் உள்ள, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கிரகங்கள், வால் நட்சத்திரங்கள், விண்கற்கள் என அனைத்துப் வானுலகப் பொருட்களும் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
Q57. உலகில் முதன்முதலாக தொலைநோக்கி யாரால் கட்டப்பட்டது?
1608ல், நெதர்லாந்து நாட்டின் கண்மருத்துவர் ஹான்ஸ் லிப்பர்ஷே என்பவரால் கட்டப்பட்டது.
Q58. மௌன லோவா வானியல் ஆய்வு மையம் எங்குள்ளது அதன் சிறப்பு அம்சம் என்ன?
ஹவாய், அமெரிக்கா -- இது 11000 அடி உயரமுள்ள எரி மலையின் மீது அமைந்துள்ளது. இங்குள்ள தொலை நோக்கி மிகவும் சக்தி வாய்ந்தது.
Q59. நெப்ட்யூன் கிரகம் வானில் உள்ளதை, கணித கணக்கீடு மூலம் கண்டுபிடித்து அறிவித்தவர் யார்? Who predicted the existence of Planet Neptune, purely on mathematical calculations, and later in 1846 it was actually discovered?
ஜான் கௌச் ஆடம்ஸ் -- இங்கிலாந்து என்பவர் கணக்கீடு மூலம் நெப்ட்யூன் கிரகம் இருப்பதை அறிவித்தார். அதற்குப் பிறகு 1846ல் ஜே.ஜி.காலி - ஜெர்மனி, என்பவர் கண்டுபிடித்து உறுதி செய்தார்.
Q60. ஹேலி வால் நட்சத்திரத்தைக் எட்மண்ட் ஹேலி கண்டுபிடித்ததாக அறிவிக்கப்பட்டதின் பின்னணி என்ன?
எட்மண்ட் ஹேலி இதைக் கண்டுபிடிக்கவில்லை. அவருக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டது. அதன் பின்னணி -- இந்த வால் நட்சத்திரம், 1456,1531, 1607 மற்றும் 1682 ஆகிய வருடங்களில் வானில் வெளி வந்ததையடுத்து, இது மீண்டும் 1758ல் மீண்டும் வெளிப்படும் என்று கணித்தார். அவ்வாறே இது 1758ல் மீண்டும் விண்ணில் புலப்பட்டது. ஆனால், அதைக் காண அவர் உயிருடன் இல்லை. இருந்தாலும், அவர் கணித்தபடி வெளிவந்ததால், இந்த வால் நட்சத்திரத்தை இவரே கண்டுபிடித்ததாக கௌரவிக்கப்பட்டார்.
Q61. ப்ளூட்டோ கிரகம் 1930ல் டாம்பாஹ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு முன்பாக இந்த கிரகம் இருப்பதை ஒருவர் கணித்தார். அவர் யார்?
பெர்சீவல் லோவெல், அமெரிக்கா. (இந்த கிரகம் 2006ல் கிரக அந்தஸ்திலிருந்து நீக்கப்பட்டது).
Q62. மெர்க்குரி கிரகத்தின் சுழற்சிப் பாதையை பதிவு செய்தவர் யார்?
சார்லஸ் மெஸ்ஸியர் -- ஃப்ரான்ஸ் -- 1753.
Q63. செரீஸ் -- CERES என்ற சிறு கோளைக் கண்டுபிடித்தவர் யார்?
க்யூசெப் பியாஸா -- இத்தாலி -- 1801.
Q64. இந்திய வானியலின் தந்தை எனப்படுபவர் யார்?
ஆர்ய பட்டா -- Arya Bhatta. (கி.மு. 476-550)
Q65. இந்த இந்திய வானியல் நிபுணர், மாறா நிலைக் கோட்பாட்டை “Steady State Theory” மிகவும் ஆதரித்தார்?
ஜெயந்த் நார்லிக்கர், மகாராஷ்டிரா.
Q66. எந்த வானியல் மையத்திலிருந்து 0° தீர்க்க ரேகை கணக்கிடப்படுகிறது?
ராயல் வானியல் ஆய்வு மையம், க்ரீன்விச், லண்டன்.
Q67. எங்கு, பகலும் இரவும் வருடம் முழுவதும் சமமாக இருக்கும்?
நில நடுக்கோட்டில் -- Equator.
Q68. காந்த முனை magnetic pole யை -- கண்டு பிடித்தவர் யார்?
சர் ஜேம்ஸ் க்ளார்க் அண்ட் சர் ஜான் ரோஸ். இங்கிலாந்து. Sir James Clark and Sir John Ross.
Q69. செவ்வாய் கிரகத்தின் “PHOBOS” என்ற கோள்/நிலவு யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
ஆஸ்பா ஹால் -- Aspah Hall, அமெரிக்க வானியல் நிபுணர் -- 1877
Q70. எந்த கிரகம், 122 ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியனின் முக வழியாக கடந்து சென்றது?
வீனஸ் -- 8.6.2004 அன்று.
Q71. என்றைய தினம், உலகம் முழுவதும், பகல் இரவு சமமாக இருக்கும்?
சூரியன், நில நடுக்கோட்டிற்கு செங்குத்தாக நிலை கொள்கிறதோ, அன்று பகல் இரவு சமமாக இருக்கும்.
Q72. சூர்ய குடும்பத்தின் எந்த கிரகம், அடர்த்தியில் நீரை விட குறைவாக உள்ளது?
சனி -- Saturn -- சுமார் 30% குறைவாக உள்ளது.
Q73. சூர்ய குடும்பத்தின் எந்த கிரகத்தில் மிகப் பெரிய மலை உள்ளது?
செவ்வாய் -- Mars. இதில் ஓலிம்பஸ் மான்ஸ் 21 கி.மீ உயரமும், 600 கி.மீ விட்டமும் கொண்ட மலை உள்ளது.
Q74. கிரகங்களில் மிகச் சிறியது எது?
மெர்க்குரி -- Mercury.
Q75. பல கோள்கள்/குறுங்கோள் களுக்கு இந்திய பிரபலங்களின் பெயர்கள் இடப்பட்டுள்ளன. அவை யாவை?
எண். பெயர் கோள்/குறுங்கோள்
1. ஹம்சா பத்மநாபன் 21575 -- "Hamsa"
2. சைனுத்தீன் பட்டாழி 5178 -- No.DC 4
3. விஷ்ணு ஜெயப்ரகாஷ் 25620 -- "Jayaprakash"
4. அனிஷ் முகர்ஜி 2000 AH 52 -- 25629 "Mukherjee"
5. தேபார்க்யா சர்க்கார் 2000 AT 53 -- 25630 "Sarkar"
6. ஹேதால் வைஷ்ணவ் 25636 -- "Vaishnav"
7. அக்ஷத் சிங்கல் 12599 -- "Singhal"
8. மாதவ் பாதக் 12509 -- "Pathak"
9. விஷ்வநாதன் ஆனந்த் 4538 -- "Vishyanand"
10. ராமானுஜன் 4130 -- "ராமானுஜன்"