Khub.info Learn TNPSC exam and online pratice

வானியல் ஆய்வு மையங்களும், தொலைநோக்கிகளும் OBSERVATORIES AND TELESCOPES

Q1.
"வானியல் ஆய்வு மையங்களும், தொலைநோக்கிகளும் OBSERVATORIES AND TELESCOPES"
உலகின் புகழ் பெற்ற ஆய்வு மையங்களும் தொலை நோக்கிகளும்:
1. ராயல் ஆய்வு மையம் -- ROYAL OBSERVATORY: க்ரீன்விச், லண்டன் -- 1675ல் மன்னர் சார்லஸ் அவர்களால் நிறுவப்பட்டது. இங்கு 0° தீர்க்கரேகை செல்வதால், இங்கிருந்து தான் உலகின் பல இடங்களின் உயரங்கள், நேரம், தூரம் ஆகியவை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த இடத்தை மையமாக வைத்து வரைபடம் தயாரிப்பது 1884ல் தொடங்கியது.
2. ஹெர்ஷெல் 40 அடி பிரதி பலிக்கும் தொலை நோக்கி -- HERSCHELL’s FORTY FOOT REFLECTOR: ஸ்லௌ, இங்கிலாந்து. 1788ல் இந்த மிகப்பெரிய தொலை நோக்கி நிறுவப்பட்டது. " 3. BIRR CASTLE CO.,OFFALY, அயர்லாந்து : 1845ல் உருவாக்கப்பட்டை 1.8 மீட்டர் விட்டம் கொண்ட உலகின் முன்னாள் மிகப்பெரிய தொலை நோக்கி.
4. யெர்கெஸ் ஆய்வு மையம் -- YERKES OBSERVATORY, விஸ்கான்சின், அமெரிக்கா -- 1897ல் அமைக்கப் பட்ட இந்த தொலைநோக்கி இன்றும் உலகின் மிகப்பெரிய பிரதிபலிக்கும் தொலைநோக்கி.
5. மௌண்ட் வில்சன் ஆய்வு மையம் -- MOUNT WILSON OBSERVATORY: கலிஃபோர்னியா, அமெரிக்கா. 1917ல் நிறுவப்பட்ட 2.5 மீட்டர் பிரதிபலிக்கும் மிகப் பெரிய தொலைநோக்கி.
6. ஜாட்ரெல் பேங்க், செஷையர், இங்கிலாந்து -- JODRELL BANK -- 1957ல் நிறுவப்பட்ட இது உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி.
7. ஹேலி தொலைநோக்கி, பாலோமர் ஆய்வு மையம், கலிஃபோர்னியா, அமெரிக்கா -- HALEY TELESCOPE, PALOMAR OBSERVATORY,CALIFORNIA,USA:1949ல் நிறுவப்பட்ட இந்த பிரதிபலிக்கும் தொலைநோக்கி, உலகில் இயங்கிக்கொண்டிருக்கும் மிகப்பெரியது.
8. அரெபிகோ ஆய்வு மையம் -- ARECIBO OBSERVATORY: ப்யூர்ட்டோ ரிக்கோ, அமெரிக்கா. 1963ல் நிறுவப் பட்ட இது உலகின் மிக சக்தி வாய்ந்த ரேடியோ தொலைநோக்கி.
9. ஹப்புள் தொலைநோக்கி -- HUBBLE TELESCOPE: இது வானில் உலவிக்கொண்டிருக்கும் ஒரு தொலை நோக்கி. 1990 ல் வானில் நிலை நிறுத்தப்பட்ட இந்த தொலைநோக்கி பூமியிலிருந்து சுமார் 600 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. பூமியின் மிக துல்லியமான புகைப்படங்களை இன்றும் ஆய்வு மையத்திற்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது.
10. மௌன லோவா ஆய்வு மையம் -- MAUNA LOA OBSERVATORY: ஹவாய், அமெரிக்கா -- 11000 அடி உயர மலை மீது அமைந்துள்ளது. இது ஒரு எரிமலை என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் மிக சக்தி வாய்ந்த தொலை நோக்கி இங்கு அமைந்துள்ளது.
11. மெக்டொனால்ட்ஸ் ஆய்வு மையம் -- McDONALD’S OBSERVATORY, டெக்சாஸ், அமெரிக்கா -- 11 மீ விட்டம் கொண்ட மிகப் பெரிய தொலை நோக்கி.
12. இந்திய வானியல் ஆய்வு மையம் -- INDIAN ASTRONOMICAL OBSERVATORY -- ஹன்லே -- லடாக் -- இந்தியா -- 2001 ல் தொடங்கப்பட்ட இந்த ஆய்வு மையம் சுமார் 14,764 அடி உயரத்தில் அமைந்து உள்ளது. உலகின் உயரமான தொலைநோக்கி -- இதை இந்திய வான் இயற்பியல் கல்வி மையம், பெங்களூரு மேலாண்மை செய்து வருகிறது.
13. கொடைக்கானல் சூர்ய ஆய்வு மையம் -- தமிழ் நாடு -- சுமார் 7687 அடி உயரத்தில் உள்ளது. 14. அலகாபாத் ஆய்வு மையம் -- மிர்ஸாபாத், உ.பி -- இந்த ஆய்வு மையம் தான் இந்திய நேரத்தை Indian Standard Time பராமரிக்கிறது.
15. உதய்ப்பூர் சூர்ய ஆய்வு மையம் -- உதய்ப்பூர், ராஜஸ்தான் -- UDAIPUR SOLAR OBSERVATORY, RAJASTHAN,INDIA:ஃபதேஹ் சாகர் ஏரியில் அமைந்துள்ள ஆய்வு மையம்.
16. கொலாபா ஆய்வு மையம், மும்பை, இந்தியா -- COLABA OBSERVATORY: மும்பை, இந்தியா -- 1826. MUMBAI,INDIA: கொலாபா தீவில் அமைந்துள்ளது.
17. ஜந்தர் மந்தர் -- டெல்லி, ஜெய்ப்பூர், உஜ்ஜெயின், -- இந்தியா. ஜெய்ப்பூர் மன்னர் மகாராஜா ஜெய் சிங் என்பவரால் நிறுவப்பட்டவை. 1722-1735 காலத்தில் கட்டப்பட்டவை.
18. வைண பாப்பு ஆய்வு மையம் -- VAINA BAPPU OBSERVATORY: காவளூர், வேலூர் மாவட்டம், தமிழ்நாடு. ஜவாது மலையின் மீது அமைந்துள்ளது. 17.2.1988 அன்று இந்த ஆய்வு மையம் ஒரு ஒரு சிறிய சிறுகோளைக் (asteroid) கண்டு பிடித்து 4130 ராமானுஜன் எனப் பெயரிட்டது.

Q2. உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி எங்குள்ளது?
க்ரேட் கேனரி தொலைநோக்கி -- லா பாமா தீவு -- ஸ்பெயின் -- அட்லாண்டிக் கடல் பகுதி.
Q3. உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைநோக்கி எங்குள்ளது?
கெக் தொலைநோக்கி, மௌனா கீ மலை, ஹவாய், அமெரிக்கா.
Q4. ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி எங்குள்ளது?
வைண பாப்பு ஆய்வு மையம், காவளூர், வேலூர், தமிழ்நாடு -- 2.3 மீட்டர் கண்ணாடி தொலைநோக்கி.
Q5. காவளூர் வைண பாப்பு ஆய்வு மையத்தால் கண்டு பிடிக்கப்பட்ட சிறிய கிரகம் எது?
4130 ராமானுஜன்.
Q6. டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் உஜ்ஜெய்ன் நகர்களில் ஒரே மன்னரால் கட்டப்பட்ட மூன்று வானியல் ஆய்வு மையங்கள் உள்ளன. அவை யாவை?
ஜந்தர் மந்தர் -- ஜெய்ப்பூர் மகாராஜா ஜெய்சிங் அவர்களால் 1722-1735 காலத்தில் கட்டப்பட்டது.
Q7. எரிமலை மீது அமைந்துள்ள வானியல் ஆய்வு மையம் எது?
மௌன லோவா வானியல் ஆய்வு மையம், ஹவாய், அமெரிக்கா - உலகின் மிக சக்தி வாய்ந்த தொலை நோக்கி.
Q8. உலகின் உயரமான வானியல் ஆய்வு மையம் எங்குள்ளது?
ஹன்லே, லடாக், இந்தியா -- சுமார் 14764 அடி உயரத்தில் உள்ளது.
Q9. வானில் நிலை நிறுத்தப்பட்டுள்ள தொலைநோக்கியின் பெயர் என்ன?
ஹப்புள் தொலை நோக்கி -- Hubble Telescope -- பூமியிலிருந்து சுமார் 600 கி.மீ உயரத்தில் சுழற்சியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
Q10. இந்தியாவின் எந்த வானியல் ஆய்வு மையம், இந்திய நேரத்தைப் பராமரிக்கிறது?
மிர்ஸாபாத் வானியல் ஆய்வு மையம், அலகாபாத்.
Q11. உலகின் மிகப்பெரிய எதிரொளிப்பு தொலைநோக்கி (optical telescope) எங்குள்ளது?
மெக் டொனால்ட்ஸ் வானியல் ஆய்வு மையம், டெக்சாஸ், அமெரிக்கா -- விட்டம் சுமார் 11 மீட்டர்.
Q12. உலகின் மிகப்பெரிய பிரதிபலிக்கும் reflecting தொலை நோக்கி எங்குள்ளது?
ஹேலி தொலைநோக்கி, பாலோமர் ஆய்வு மையம், கலிஃபோர்னியா, அமெரிக்கா (1949)
Q13. ஹப்புள் தொலைநோக்கி எப்போது விண்ணில் செலுத்தப்பட்டது?
1990
Q14. உலகின் எந்த வானியல் ஆய்வு மையம் 0° க்ரீன்விச் தீர்க்க ரேகையை பராமரிக்கிறது?
ராயல் வானியல் ஆய்வு மையம், க்ரீன்விச், லண்டன். 1675ல் மன்னர் சார்லஸ் ஆல் கட்டப்பட்டது.
Q15. எந்த வருடம் முதல் 0° க்ரீன் விச் தீர்க்க ரேகை, உலகின் அனைத்து அளவுகளுக்கும், வரைபட தயாரிப்புக்கும் பயனில் வரத் தொடங்கியது?
1884
Q16. உலகின் மிகப்பெரிய ஒளி விலகல் தொலைநோக்கி எங்குள்ளது?( refracting telescope)
யெர்கெஸ் வானியல் ஆய்வு மையம், விஸ்கான்ஸின், அமெரிக்கா. Yerkes Observatory, Wisconsin, USA