Khub.info Learn TNPSC exam and online pratice

புகழ்பெற்ற வானியல் நிபுணர்கள் -- FAMOUS ASTRONOMERS

Q1.
 
1. ஆர்ய பட்டா -- 476-550 -- இந்திய வானியல் தந்தை -- கீதிகபாதா, கணிதபாடா, காலக்ரியபாடா, கோலாபாடா ஆகியவை இவருடைய வானியல் பற்றிய நூல்கள். இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் இவருடைய பெயரிடப்பட்டது.
2. வராஹ மிஹிரா -- VARAHA MIHIRA: INDIA -- 505-587. பழங்காலத்து வானியல் நிபுணர் -- குப்தர்கள் சாம்ராஜ்யத்து "" நவரத்ன"" அமைச்சர்களுள் ஒருவர்.
3. ஸ்ரீபதி -- 1019-1066 -- பழங்கால வானியல் நிபுணர் -- "சித்தாந்த சேகரா" என்ற நூல் எழுதியவர்.
4. பாஸ்கரா 2 -- BHASKARA II: 1114-1185. பழங்காலத்து உஜ்ஜெயின் நகர வானியல் ஆய்வு மையத்தின் தலைவராக இருந்தவர். He was the head of the Astronomical Observatory at Ujjain in the ancient days.
 
5. அமித் குமார் தாஸ் -- AMIT KUMAR DAS:INDIA 1902-1961. உலகப் புகழ் பெற்ற வானியல் நிபுணர். நிலவில் ஒரு பள்ளம் crater, “Das” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
6. மணலி கல்லத் வைண பாப்பு -- MANALI KALLAT VAINA BAPPU: INDIA 1927-1982. உலகப் புகழ் பெற்ற வானியல் நிபுணர். சர்வதேச வானியல் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். தமிழ் நாட்டில் காவளூரில் உள்ள வானியல் ஆய்வு மையம் இவர் பெயர் பெற்றுள்ளது.

7. ஜயந்த் நார்லிக்கர் -- 1932 -- உலகப் புகழ் பெற்ற வானியல் நிபுணர். பெரு வெடிப்புக் கோட்பாட்டை எதிர்த்தவர். பத்ம விபூஷன் விருது பெற்றவர். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

 

8. தாணு பத்மநாபன் -- கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர். அண்ட குவைய இயற்பியல் வல்லுநர். பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

9. மேக்நாத் சாஹா -- 1893-1956 -- மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர். ""சாஹா சமன்பாடு"" என்ற கோட்- பாட்டுக்காக புகழ் பெற்றவர். உலகப் புகழ் பெற்ற வானியல் நிபுணர்.

10. கோவிந்த் ஸ்வரூப்: இந்தியா --  டாடா அடிப்படை ஆய்வு மைய விஞ்ஞானி -- ரேடியோ வானியலில் புகழ் பெற்றவர்.
 

11. மகேந்திர சூரி -- 14ம் நூற்றாண்டின ஜைன மத புகழ் பெற்ற வானியல் நிபுணர். ""யந்த்ர ராஜா"" என்ற நூலுக்குப் புகழ் பெற்றவர். ""ஆஸ்ட்ரோலேப்"" என்ற கருவியின் மூலம் கிரகங்களின் நிலையை கண்டுபிடித்து கூறுவதில் வல்லவராக இருந்தார்.

12. ஜான் கௌச் ஆடம்ஸ் -- JOHN COUCH ADAMS: 1819-1892 : இங்கிலாந்து -- நெப்ட்யூன் கிரகம் இருப்பதை உறுதி செய்து 1846ல் கண்டுபிடித்தவர். இவர் இந்த கிரகத்தை கணித கணக்கீடுகள் மூலமே கண்டு பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

13. எட்வர்டு எமெர்சன் பர்னார்ட் -- EDWARD EMERSON BARNARD: அமெரிக்கா -- 1857 -- 1923. ஜூபிடர் கிரகத்தின் நிலவு அமல்தியா--AMALTHEA வைக் கண்டுபிடித்தவர். இதை இவர் தொலைநோக்கி உதவியால் கண்களால் பார்த்தே கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

14. நிக்கோலஸ் கோப்பெர்னிகஸ் -- NICHOLAS COPERNICUS : போலந்து -- Poland – 1473-1523 -- சூரிய குடும்பத்தில் சூரியன் நடுவில் இருப்பதை உறுதி செய்தவர். இவருடைய கோட்பாடு ""“Heliocentric Cosmology” எனப்படுகிறது.
15. கலீலியோ கலீலி -- GALILEO GALLEILI: இத்தாலி -- 1546-1642. வானியல் சார்ந்த ஒரு தொலை நோக்கியை கண்டுபிடித்து உருவாக்கினார். ஜூபிடரின் கோள்களைக் கண்டுபிடித்தவர். ""கண்காணிப்பு வானியல்"" Observational Astronomy, நவீன கால இயற்பியல் ஆகியவற்றின் தந்தை எனப்படுபவர். 1632ல் இவர் எழுதிய புத்தகம் -- “Dialogue concerning the two chief world systems” .
16. எட்மண்ட் ஹேலி -- EDMUND HAILEY: இங்கிலாந்து -- 1656-1742 . ஹேலி வால்நட்சத்திரத்தைக் கண்டு பிடித்தவர். இவர் இந்த வால் நட்சத்திரத்தை, இதற்கு முன்பு இது வானில் காட்சியளித்த வருடங்கள் ஆன 1456, 1531, 1607, 1682 வை வைத்து, இது மீண்டும் 1758ல் வானில் தோன்றும் என அறிவித்தார். அவர் கணிப்பு சரியானதால், இந்த வால்நட்சத்திரத்தை இவரே கண்டு பிடித்ததாக கௌரவிக்கப் பட்டார்.
17. வில்லியம் ஹெர்ஷெல் -- WILLIAM HERSCHELL: இங்கிலாந்து -- 1738-1822 -- யுரேனஸ் மற்றும் சனி கிரகத்தின் நிலவுகளைக் கண்டு பிடித்தார். வானில் உள்ள நட்சத்திரங்களின் அட்டவணையை உருவாக்கினார். ஒரு மிகப்பெரிய தொலை நோக்கியை உருவாக்கினார். ஜெர்மனியில் பிறந்தவர்.

18. எட்வின் ஹப்புள் -- EDWIN HUBBLE: அமெரிக்கா -- 1889-1953. விண்மீன் கூட்டங்களைக் கண்டுப் பிடித்தவர். விண்ணில் சுழற்சியில் உள்ள மிகப்பெரிய தொலைநோக்கி க்கு இவருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 
19. க்றிஸ்டியன் ஹ்யூஜென்ஸ் -- CHRISTIAN HUYGENS: ஹாலந்து -- 1629 – 1695. சனி கிரகத்தின் வளையங்களைக் கண்டு பிடித்தவர். ""நிகழ்தகவு கோட்பாடு"" “probability theory”, ""ஒளியின் அலைக் கோட்பாடு"" “wave theory of light” இவரால் எழுதப்பட்டது. 1656ல் முதல் ஊசல் கடிகாரத்தை Pendulum clock மற்றும் 1675ல் பை கடிகாரம் pocket watch கண்டுபிடித்தவர்.
20. பெர்சீவல் லோவெல் -- அமெரிக்கா -- 1855-1916. ப்ளூட்டோ கிரகம் இருப்பதை அறிவித்தவர். இவருக்கு பின்பு டாம்பாக் என்பவர் கண்டு பிடித்து உறுதி செய்தார். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் வானியல் ஆய்வு மையத்தை உருவாக்கியவர்.
21. சார்லஸ் மெஸ்ஸியர் -- CHARLES MESSIER: ஃப்ரான்ஸ் -- 1730-1817. நட்சத்திரங்களின் அட்டவணை உருவாக்கியமைக்கு புகழ் பெற்றவர். இவருடைய புத்தகத்தின் பெயர் ""103 Messier Objects"" . மெர்க்குரி கிரகத்தின் சுழற்சி பாதையை உறுதி செய்தவர்.
22. ஐசக் நியூட்டன் -- ISAAC NEWTON -- இங்கிலாந்து -- 1643 -1727. ஈர்ப்புக் கோட்பாடு, கிரகங்களின் சுழற்சிப்பாதை, சூரிய மையம் ‘helio centrism ஆகியவற்றை கண்டுபிடித்தவர். முதல் முதலாக பிரதிபலிக்கும் தொலை நோக்கியைக் கண்டுபிடித்து உருவாக்கினார்.
23. ஹெய்ன்ரீச் ஓல்பர்ஸ் -- HEINREICH OLBERS: ஜெர்மனி -- 1758-1840. விண்கற்கள், வால் நட்சத்திரங்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்தவர். ஒரு வால் நட்சத்திரத்திற்கு இவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
24. கிஸெப்பி பியாஸா -- GUISEPPE PIAZZA -- இத்தாலி -- ITALY - நட்சத்திரங்களின் அட்டவணையை தயாரித்தார் -- CERES என்ற விண்கலலை 1801ல் கண்டுபிடித்தவர்.
25. யோஹன் காட்ஃப்ரைடு கால்லி -- JOHANN GOTTFRIED GALLE: ஜெர்மனி -- 1812-1890. நெப்ட்யூன் கிரகம் இவரால் கண்டுபிடிக்கப்பட்டது. நெப்ட்யூன் ன் ஒரு வளையத்திற்கு இவர் பெயரிடப்பட்டுள்ளது.