Khub.info Learn TNPSC exam and online pratice

Q1. மராத்திய மன்னர் சிவாஜியின் பிறப்பிடம் எது?
ஷிவ்னேனி கோட்டை, ஜூன்னார், பூனே அருகில் -- 19.2.1627 அன்று.
Q2. மராத்திய மன்னர் சிவாஜியின் பெற்றோர்கள் யாவர்?
ஷாஜி ராஜே போன்ஸ்லே மற்றும் ஜீஜாபாய்.
Q3. மராத்திய மன்னர் சிவாஜியின் இளைய வயது பதவிக்கு உதவியாளராக இருந்து ஆட்சியை நடத்தியவர் யார்?
தாதாஜி கொண்ட தேவ்.
Q4. "சுயராஜ்யம்" சபதத்தை, மன்னர் சிவாஜி, பதவி ஏற்கும் முன் எங்கு எடுத்துக் கொண்டார்?
ராய்ரேஷ்வர் கோவில், பூனே அருகில்.
Q5. மராத்திய மன்னர் சிவாஜியின் தலைநகரமாக இருந்தது எந்த நகரம்?
முதலில் ராய்காட், பிறகு சத்தாரா.
Q6. 1665 மன்னர் சிவாஜி ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கை என்ன?
புரந்தர் உடன்படிக்கை -- 1665 -- ஔரங்கசீப்புடன்.
Q7. சிவாஜி மன்னர் எந்த வருடம் ஔரங்கசீப்பால் தனது பிறந்த நாள் விழாவுக்கு அழைக்கப் பட்டார்?
1666 – ஔரங்கசீப்பின் 50வது பிறந்த நாள் விழா -- ஆக்ரா
Q8. 1670, சிவாஜியின் தளபதி தானாஜி மலுசரே கொண்டானா கோட்டையைக் கைப்பற்றினார். ஆனால் மரணமடைந்தார். இந்நிகழ்வை சிவாஜி எவ்வாறு வர்ணித்தார்?
""கோட்டையை பெற்றோம், ஆனால், சிங்கத்தை இழந்தோம்"" . இவருடைய நினைவாக அந்த கோட்டைக்கு சிங்கஹாட் என பெயரிட்டார்.
Q9. தமிழ்நாட்டின் எந்த பகுதியில் மன்னர் சிவாஜி ஒரு மிகப்புகழ் பெற்ற வலுவான கோட்டையைக் கட்டி, அதை தனது தலைநகராகவும் 9 வருடங்கள் மேற்கொண்டார்?
ஜிஞ்சி, விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு. கிருஷ்ணகிரி, ராஜகிரி, சந்த்ரயான் துர்க் ஆகிய மூன்று மலைகளிலும் பரவியுள்ளது. 11 கி.மீ நீளமும், 11 கி.மீ பரப்பளவும், 800 அடி உயரமும் கொண்டது.
Q10. சிவாஜி மன்னரால் சுமார் எத்தனை கோட்டைகள் கட்டப்பட்டுள்ளன?
300. அனைத்து கோட்டைகளுக்கும் சமஸ்கிருத பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.
Q11. மராத்தா சாம்ராஜ்யத்தில், பிரதம மந்திரி எவ்வாறு அழைக்கப்பட்டார்?
பேஷ்வா. பிற்காலத்தில் இவர்கள் தனி ஆட்சியாளர்கள் ஆனார்கள்.
Q12. எந்த மராத்திய மன்னர் காலத்தில், இது ஒரு சிறு மன்னர் பகுதியாக (Princely State) மாறிற்று?
ஷாஹூ.
Q13. 1750கள் காலத்தில், மராத்தா சாம்ராஜ்யம், 5 சிறு மன்னர் பகுதிகளாக பிளவுப்பட்டது? அவை யாவை, அவர்கள் ஆண்ட பகுதிகள் யாவை?
பேஷ்வா -- பூனே; சிந்தியா - குவாலியர்; ஹோல்கர் - இந்தூர்; போன்ஸ்லே - நாக்பூர்; கேய்க்வாட் - பரோடா.
Q14. பேஷ்வா மன்னர்களில் தலை சிறந்தவராக கருதப்பட்டவர் யார்?
பாஜி ராவ் -1720-1740.
Q15. "" காய்ந்து வரும் அடிமரத்தை வெட்டினால், கிளைகள் தானாக விழும்"" இது எந்த மராத்திய மன்னரின் கூற்று?
பாஜி ராவ் -- பேஷ்வா - பூனே.
Q16. "நானா சாஹேப்" என அழைக்கப்பட்ட மராத்திய மன்னர் யார்?
பாலாஜி பாஜி ராவ் – 1740-1761.
Q17. பானிபட் ல் மூன்று போர்கள் நடந்தன. அவற்றுள் எந்த போரில் மராத்தியர்கள் பங்கு பெற்றனர்?
1761 – மூன்றாம் பானிபட் போரில் ஆப்கானிஸ்தானின் அஹமது ஷா அப்தாலியை எதிர்த்து போர் புரிந்தனர்.
Q18. மன்னர் சிவாஜியின் ஆன்மீக குரு யார்?
ராமதாஸ்.
Q19. 1645-1647 காலத்தில், பீஜாப்பூர் மன்னர் அடில் ஷா விடமிருந்து, மன்னர் சிவாஜி கைப்பற்றிய கோட்டைகள் யாவை?
ராய்கர், தோர்னா மற்றும் கொண்டானா.
Q20. மன்னர் சிவாஜியை கொலை செய்வதற்காக பீஜாப்பூர் மன்னர் அடில் ஷா அனுப்பிய பிரபு யார்?
அஃப்சல் கான் -- நவம்பர் 1659ல் ப்ரதாப்கர் ல் நடந்த போரில் இவரே கொலையுண்டார்.
Q21. 1665ல் மன்னர் சிவாஜி, புரந்தர் என்ற இடத்தில், யாருடம் உடன்படிக்கை செய்துகொண்டார்?
ராஜஸ்தானின் ஆம்பர் பகுதி மன்னர் மிர்ஸா ராஜே ஜெய்சிங் அவர்களை, ஒரு பெரிய ராணுவத்துடன் அனுப்பி வைத்து சிவாஜியை கொலை செய்யும் திட்டத்துடன் அனுப்பி வைத்தார். தன்னை சூழ்ந்துள்ள படையை கவனத்தில் கொண்டு, அந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டார்.
Q22. மராத்தியர்கள் எவ்வகையான புதிய ராணுவ முறையை, யாரிடமிருந்து கற்று, தங்கள் போரில் கடைப்பிடித்தனர்?
கொரில்லா போர் முறை -- அஹமத் நகர் மாலிக் அம்பரிடமிருந்து கற்றனர்.
Q23. 1649-1655 காலத்தில், பீஜாப்பூர் மன்னருக்கு எதிரான விரோதத்தை நிறுத்தி வைத்தார்?
அடில் ஷாஹி மன்னரிடம் தனது தகப்பனார் சிறைப்படுத்தப்பட்டிருந்ததால்.
Q24. முகலாயர்களின் வணிக மையமாக இருந்த சூரத் ஐ, மன்னர் சிவாஜி எத்தனை முறை தாக்குதல் நடத்தினார்?
1664 மற்றும் 1670ல் -- இரு முறை.
Q25. பீஜாப்பூரின் சில பகுதிகளை கைப்பற்ற, மன்னர் சிவாஜி யாருடைய ஒத்துழைப்பை பெற்றார்?
கோல்கொண்டா மன்னர்கள் குதுப் ஷாஹி.
Q26. மராத்தா சாம்ராஜ்யத்தில் நிர்வாக சீர்திருத்தத்திற்கு சிவாஜி யாருக்கு கடன்பட்டிருந்தார்?
மாலிக் அம்பர், அஹமத் நகர்.
Q27. மராத்தியர்கள் காலத்தில், "சரஞ்சம்" என அழைக்கப்பட்டது என்ன?
ஒரு நில அளவை. இதன் படி, இதில் வரும் வருமானம், பெரிய அதிகாரிகளுக்கும், ராணுவ தளபதிகளுக்கும், ஊதியத்திற்கு பதிலாக வழங்கப்பட்டது.
Q28. எந்த மராத்திய மன்னர் காலத்தில் "ப்ரதிநிதி" என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டது?
ராஜா ராம் (சம்பாஜியை தொடர்ந்து பதவிக்கு வந்தவர்)
Q29. மன்னர் சிவாஜிக்குப் பிறகு, கொரில்லா போர் முறையில் சிறந்தவர் என கருதப்பட்டவர் யார்?
பாஜி ராவ் 1.
Q30. எந்த மராத்திய மன்னர் "சேனா கர்த்தே" “Sena Karte” என அழைக்கப்பட்டார்?
பாலாஜி விஷ்வநாத்.
Q31. எந்த பேஷ்வா காலத்தில், மராத்திய கூட்டமைப்பு (5 தனி சுதந்திர மன்னர்களின்) ஏற்பட்டது?
ஷாஹூ.
Q32. எந்த பேஷ்வா காலத்தில், அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாகவும், ஒரு வம்ச ஆட்சி ஆகவும் மாறினர்?
ஷாஹூ
Q33. மராத்திய மன்னர் சம்பாஜியை சங்கமேஷ்வர் என்ற இடத்தில் பிடித்து கொலை செய்ய அனுப்பப்பட்ட அவுரங்கசீப்பின் ப்ரபு யார்?
முக்காரப் கான்.
Q34. மராத்தியர்கள் காலத்தில், நில அளவையை சீரான முறையில் செய்வதற்கு பயன் படுத்தப்பட்ட உபகரணத்தின் பெயர் என்ன?
கத்தி.
Q35. சிவாஜி தனது கப்பற்படையை எங்கு நிறுத்தி வைத்தார்?
கொலாபா
Q36. மன்னர் சிவாஜிக்குப் பிறகு வந்த மராத்திய மன்னர்கள் யாவர் - வரிசைப்படுத்தவும்?
சம்பாஜி, ராஜாராம், சிவாஜி 2, ஷாஹூ, ராமராஜா.
Q37. பேஷ்வா மன்னர்களை வரிசைப்படுத்தவும்
பாலாஜி விஷ்வநாத், பாஜி ராவ், பாலாஜி பாஜி ராவ், மாதவ் ராவ், நாரண் ராவ், சவாய் மாதவ் ராவ்.
Q38. மராத்தியர் காலத்து ராணுவ அதிகாரிகளை வரிசைப்படுத்தவும்
பாய்க், நாயக், ஹவல்தார், ஜூம்லாதார், ஹஸாரி, சர் இ நௌபத்.
Q39. புரந்தர் உடன்படிக்கையின் அடிப்படையில், சிவாஜி எத்தனைக் கோட்டைகளை முகலாயர் வசம் சரண் அடைத்தார்?
23 கோட்டைகள்.
Q40. மராத்தா ராஜ்யத்தில், யாரிடையே, எப்போது, ஏழு வருட கால உள்நாட்டுக் குழப்பம் நிலவியது?
தாரா பாய் மற்றும் ஷாஹூ வுக்கு இடையில், 1707-1714 காலத்தில். தாராபாய் சிவாஜியின் மருமகள்.
Q41. சிந்தியா வம்சத்தை நிறுவியவர் யார்?
ரானோஜி ராவ் சிந்தியா -- 1731 -- குவாலியர் பகுதியை ஆண்டனர்.
Q42. எந்த நவாப் மன்னரின் தோல்வி இந்திய சரித்திரத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது?
சிராஜ் உத் தௌலா -- 1757 ப்ளாசிப் போர்.
Q43. சிராஜ் உத் தௌலா காலத்தில் கல்கத்தாவில் நடந்த துயரமான சம்பவம் என்ன?
ஆங்கிலத்தில் BLACK HOLE INCIDENT – என்ற ஒரு கோரமான நிகழ்வு -- 20.6.1756 அன்று 146 ஆங்கிலேய வீரர்கள் பிடிக்கப்பட்டு, ஒரு சிறிய அறையில் அடைக்கப்பட்டு, அதில் சுமார் 23 பேர் மூச்சுத்திணறலால் இறந்தனர். இந்த நிகழ்வின் போது சிராஜ் உத் தௌலா கொல்கத்தாவில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Q44. சிராஜ் உத் தௌலா தோல்வியுறக் காரணமான சதித்திட்டத்தை தீட்டிய துரோகி யார்?
மீர் ஜாஃபர், சிராஜ் உத் தௌலாவின் மந்திரி
Q45. சிராஜ் உத் தௌலா வைத் தோற்கடிப்பதற்காக, மீர் ஜாஃபருடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டிய ஆங்கிலேய அதிகாரி யார்?
ராபர்ட் க்ளைவ்.
Q46. சிராஜ் உத் தௌலா தோற்கடிக்கப்பட்ட போர் எது?
1757 - ப்ளாசிப் போர்.
Q47. ப்ளாசி என்ற இடம் எங்குள்ளது?
வங்காளத்தில், மூர்ஷிதாபாத் அருகில், பாகீரதி நதிக்கரையில்.
Q48. மீர் ஜாஃபரால், ஆங்கிலேயருக்கு விட்டுக்கொடுக்கப்பட்ட பகுதிகள் யாவை?
24 பர்கானா பகுதி.
Q49. பக்ஸார் போர் யாரிடையே எப்போது நடந்தது?
22-10-1764 ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கும், வங்காள நவாப் மீர் காசிம் தலைமையிலான முஸ்லீம் படைகள்.
Q50. யாருடைய காலத்தில் வங்காளத்தில் ""இரட்டை ஆட்சி முறை"" “Dual system of Government” அறிமுகப்படுத்தப்பட்டது?
நஜ்ம் உத் தௌலா -- 1765 - 1772 -- ராபர்ட் க்ளைவ் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
Q51. ஆவாத் நவாப் வம்ச ஆட்சி யாரால் நிறுவப்பட்டது?
சதாத் கான் புர்ஹான் உல் முல்க் -- 1722. முகலாய மன்னர் முகமது ஷா காலத்தில், இந்த பகுதி ஆளுநகராக இருந்தவர்.
Q52. அஹமது ஷா அப்தாலி எந்த பகுதியை சேர்ந்தவர்?
ஆப்கானிஸ்தான் -- ன் துரானி வம்ச ஆட்சியை நிறுவியவர்.
Q53. ஆஸாஃப் ஷாஹி (நிஸாம்) வம்சம் எந்த பகுதியை ஆண்டது?
ஹைதராபாத்
Q54. ஹைதராபாத் நிஸாம் வம்ச ஆட்சியை நிறுவியவர் யார்?
நிஸாம் உல் முல்க் ஆஸாஃப் ஜாஹி – 1720 – அவருடைய இயற்பெயர் கமார் அத் தீன் சிங்குலிச் கான். முகலாயர் காலத்தில் டெக்கான் பகுதியின் ஆளுநகராக இருந்தவர்.
Q55. ஹைதராபாத்தின் எந்த மன்னர் ஆட்சி காலத்தில் இந்த பகுதி ஆங்கிலேயர்களின் கீழ் ஒரு சிறு மன்னர் ஆட்சி ஆனது?
மீர் நிஸாம் அலி கான் பகதூர் -- 1798ல்
Q56. ஹைதராபாத் நிஸாம் மீர் மகபூப் அலி கான் அவர்களிடம் இருந்த விலை மதிக்கமுடியாத வைரத்தின் பெயர் என்ன?
ஜேக்கப் வைரம். தற்சமயம் இந்திய அரசாங்கத்திடம் உள்ளது.
Q57. இந்தியா சுதந்திரம் பெற்ற போது ஹைதராபாத் சிறு மன்னர் மாகாணம் இணைய மறுத்து வந்தது. அது எவ்வாறு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது?
இந்திய ராணுவத்தின் ரகசிய நடவடிக்கை “Operation Polo” மூலம் 16 செப்டம்பர் 1948 அன்று கைப்பற்றியது.
Q58. ஆற்காடு நவாப் வம்ச ஆட்சி யாரால் நிறுவப்பட்டது?
சதாவுத்துல்லா கான் -- 1720. முகலாயர் மற்றும் நிஸாம் மன்னர்களின் கீழ் இந்த பகுதியின் ஆளுநராக இருந்தவர்.
Q59. கர்நாடகாவில் உடையார் வம்ச ஆட்சியை நிறுவியவர் யார்?
யது ராயா -- 1399.
Q60. மைசூர் ராஜ்யம் எப்போது ஆங்கிலேயர்களின் கீழ் சிறு மன்னர் ஆட்சி Princely state of Mysore ஆனது?
1799 - நான்காம் ஆங்கிலேய மைசூர் போருக்குப் பிறகு கிருஷ்ண ராஜ உடையார் 3 மன்னராக்கப்பட்டு ஆங்கிலேயர்களின் கீழ் இவ்வாறு இயங்கியது. இந்த போரின் மூலம் மைசூரில் முஸ்லீம் ஆட்சி முடிவுக்கு வந்தது.
Q61. விவேகானந்தர் சிகாகோ நகரில் உலக மத மகாநாட்டில் 1894ல் கலந்து கொள்ள உதவிய மைசூர் உடையார் மன்னர் யார்?
சாமராஜ உடையார் 9 . 1894ல்.
Q62. உடையார் வம்சத்தின் எந்த மன்னர் ""ராஜரிஷி"" எனவும், அவருடைய ஆட்சி ""ராம ராஜ்யம்"" எனவும் வர்ணிக்கப்பட்டது?
கிருஷ்ண ராஜ உடையார் 4. காநிதிஜியால் இவ்வாறு வர்ணிக்கப்பட்டார்.
Q63. பெங்களூரில் இந்திய அறிவியல் கல்விக்கழகம் எந்த உடையார் மன்னர் ஆட்சியில், உதவியால் நிறுவப்பட்டது?
கிருஷ்ண ராஜ உடையார் 4. இந்த கல்வி நிறுவனத்துக்கு வேண்டிய நிலம் முழுவதையும் இவர் நன்கொடையாக அளித்தார்.
Q64. கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் ஒரு அபூர்வ பிரத்தியேகமான நிகழ்வு ஏற்பட்டது? அது என்ன?
1. மைசூர் மாகாணம், ஆசியாவிலேயே முதன் முதலாக நீர் மின் நிலையம் மூலம் மின்சாரம் தயாரித்தது.
2. பெங்களூரு நகரம் ஆசியாவில் முதன் முதலாக மின்சாரம் பெற்றது.
Q65. இந்தியாவின் அணு சக்தி விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணா வுக்கும் உடையார் வம்ச அரசவைக்கும் என்ன தொடர்பு?
டாக்டர் ராஜா ராமண்ணா, பியானோ இசைக்கருவி வாசிப்பதில் சிறந்த நிபுணர். கிருஷ்ண ராஜா உடையார் ஆட்சிக் காலத்தில் அரசவையில் அடிக்கடி தனது இசைக் கச்சேரியை நடத்துவது இவரது வழக்கம்.
Q66. எந்த உடையார் வம்ச மன்னர், இரண்டு விளையாட்டு வீரர்களுக்கு வெளிநாடு சென்று இந்தியாவுக்காக விளையாட நிதி மற்றும் இதர உதவிகளைப் புரிந்தார்?
ஜெயசாமராஜ உடையார். இவர் முதலில் ராமநாதன் கிருஷ்ணன் அவர்களுக்கு லண்டன் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவும், பிறகு இந்திய கிரிக்கெட் வீரர் எரபள்ளி ப்ரசன்னா மேற்கு இந்திய தீவில் விளையாடுவதற்கும் (அவர் தந்தையின் அனுமதி பெற்றுக் கொடுத்து) உதவி புரிந்தார்.
Q67. இந்த மைசூர் உடையார் வம்ச மன்னர், Philharmonic Society of London னின் முதல் தலைவர் ஆனார்?
ஜெயசாமராஜ உடையார் -- 1948ல்.
Q68. மைசூரில் இஸ்லாம் ஆட்சியை அமைத்தவர் யார்?
1761ல் ஹைதர் அலி.
Q69. மைசூர் நிர்வாகத்தை ஹைதர் அலி எவ்வாறு கைக்கொண்டார்?
மைசூர் மாகாணத்தின் பிரதம மந்திரி நஞ்சராஜர் அவர்களை பதவி நீக்கம் செய்து, நிர்வகத்தை கையெடுத்தார்.
Q70. எத்தனை ஆங்கிலேய மைசூர் போர்கள் நடைபெற்றன?
நான்கு -- இரண்டு 1768-1769, 1780-1784 ஹைதர் அலி காலத்திலும், இரண்டு 1790-1792, 1798-1799 திப்பு சுல்தான் காலத்திலும்.
Q71. மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் நடக்க காரணம் ….
1790-1792 களில் திப்பு சுல்தான் திருவாங்கூர் ராஜ்யத்தை, ஃப்ரெஞ்ச் உதவியில்லாமல் கைப்பற்ற நினைத்த போது, திருவாங்கூர் ராஜ்யம் ஆங்கிலேய, மராத்தா மற்றும் நிஸாம் படை கூட்டணி உதவியுடன், திப்பு சுல்தானை தோற்கடித்தது.
Q72. மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போரில் நடந்த ஒரு குறிப்பிடும்படியான நிகழ்வு என்ன?
திப்பு சுல்தான் இந்தப் போரில் ஏவுகணைகளை (ராக்கெட்) முதன் முதலாக பயன்படுத்தினார்.
Q73. திப்பு சுல்தான் தோல்வி அடைய சதித்திட்டம் தீட்டியவர் யார்?
மீர் சாதிக், திப்பு சுல்தானின் தளபதி. போர் நடந்து கொண்டிருக்கும் போது, வீரர்களை ஊதியம் பெற அனுப்பியும், திப்பு சுல்தானின் இலக்கை திசை திருப்பியும், திப்பு சுல்தானை பலவீனமாக்கி, தோல்வி அடைய செய்யப்பட்டார். இந்நிகழ்வு 1799ல் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நடந்தது.
Q74. திப்பு சுல்தானின் மத நல்லிணக்க, சமூக மேம்பாட்டு செயல்கள் யாவை?
1. ஃப்ரெஞ்ச் நாட்டவர் வேண்டுகோளுக்கிணங்க மைசூரில் முதல் கிறித்துவ தேவாலயத்தை நிறுவினார்.
2. கிருஷ்ணராஜ சாகர் அணைக் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார்.
3. தன் தந்தை ஹைதர் அலி தொடங்கிய பெங்களூரு லால் பாக் தோட்டம் இவரால் முடித்து வைக்கப்பட்டது.
Q75. இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போரின் போது ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் யார்?
வாரன் ஹேஸ்டிங்ஸ்
Q76. ஆங்கிலேயர்களை விரட்டுவதற்கு, திப்பு சுல்தான், எந்த நாடுகளின் உதவியை நாடினார்?
ஃப்ரான்ஸ், அரேபியா, ஆப்கானிஸ்தான் மற்றும் துருக்கி
Q77. நான்காம் ஆங்கிலேய மைசூர் போர் ஏற்படக்காரணம் என்ன?
1. 1798ல் மங்களூர் ல் ஃப்ரான்ஸ் படைகள் வந்திறங்கியது.
2. திப்பு சுல்தான் தொடர்ச்சியாக செடசீர் மற்றும் மால்வெள்ளி என்ற இடங்களில் ஆங்கிலேயர்களால் தோல்வி கண்டார்.
Q78. சீக்கிய வம்சத்தை நிறுவியவர் யார்?
1801ல் மகாராஜா ரஞ்சித் சிங் அவர்களால்.
Q79. மகாராஜா ரஞ்சித் சிங் அமைத்த நவீனப்படுதப்பட்ட படையின் பெயர் என்ன?
சீக் கல்சா படை.
Q80. மகாராஜா ரஞ்சித் சிங் யாரிடம் இருந்து கோஹினூர் வைரத்தை பெற்றார்?
ஆப்கானிஸ்தானின் ஷா ஷூஜா விடமிருந்து பெற்றார். பிற்காலத்தில் ஆங்கிலயேர்கள் இதை கைப்பற்றி, தற்போது இங்கிலாந்தில் உள்ளது.
Q81. மகாராஜா ரஞ்சித் சிங் தனது ஒரு மாகாணத்தின் ஆளுநராக எந்த வெளிநாட்டவரை நியமித்தார்?
பாவ்லோ அவிட்டபைல் -- இத்தாலியர் -- இவர் வாஸிராபாத் ஆளுநராக 1826லும், பெஷாவரில் 1834லும் இருந்தார்.
Q82. சீக்கிய கூட்டமைப்பு ராஜ்யமாக மாறுவதற்கு முன், சிறு சிறு மன்னர் பகுதிகளாக இருந்தன. அவை எவ்வாறு அழைக்கப்பட்டன?
மிஸ்ல்ஸ்.
Q83. 1838ல் மகாராஜா சிங் ஏற்படுத்திக் கொண்ட முத்தரப்பு உடன்படிக்கையில் கையொப்பம் இட்டவர்கள் யாவர்?
ரஞ்சித் சிங், ஷா ஷூஜா, ஆக்லாண்ட் ப்ரபு.
Q84. ஆங்கிலேயர்கள், ஜம்மு காஷ்மீர் பகுதியை சீக்கியர்களிடமிருந்து கைப்பற்றி, பிறகு யாருக்கு விற்றனர்?
குலாப் சிங். ஆங்கிலேயர்களிடமிருந்து 75 லட்சத்திற்கு வாங்கி, ஆங்கிலேயர்கள் கீழ் சிறு மன்னர் பகுதியாக Princely state நிறுவினார்.
Q85. "பைரோவல் உடன்படிக்கை" எப்போது, யாரிடையே ஏற்பட்டது?
டிசம்பர் 1846ல். லாகூர் உடன்படிக்கையை தொடர்ந்து போடப்பட்ட துணை உடன்படிக்கை. ஆங்கிலேயர் க்யூரி மற்றும் லாரன்ஸ், மற்றும் லாகூர் தர்பார் (அரசவை)ன் 13 உறுப்பினர்கள் கையெழுத்திட்டது. இதன்படி,
1. பஞ்சாப் ஆளுகைக்கு ஆங்கிலேயர் அடங்கிய ஒரு குழு அமைப்பது;
2. லாகூரில் ஆங்கிலேயர் படை ஒன்று நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும். அதற்காக சீக்கியர்கள் 22 லட்சம் ரொக்கம் கொடுக்க வேண்டும்.
3. பஞ்சாப் பகுதியில், எந்த ராணுவ முகாம் அல்லது கோட்டையை கைப்பற்ற கவர்னர் ஜெனரலுக்கு அதிகாரம் கொடுப்பது.
Q86. இரண்டாம் ஆங்கிலேயர் சீக்கிய போர் நடக்கக் காரணம் என்ன?
1. முதல் ஆங்கிலேயர் சீக்கிய போரில், ஆங்கிலேயர் அடைந்த தோல்வி அடையுமளவிற்கு ஏற்பட்ட நிலைக்கு பழி வாங்குவது;
2. பஞ்சாப் மீது ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் மீது சீக்கிய தளபதிகளின் அதிருப்தி;
3. ராணி ஜிண்டான் ஐ ஆங்கிலேயர்கள் அவமானப்படுத்தியது;
4. முல்தான் ஆளுநர் ஆங்கிலேயர்களுக்கெதிராக கிளம்பியது, பஞ்சாபில் சீக்கியர்கள் மத்தியில் ஒரு புரட்சி நிலை உருவாகியது."
Q87. 1849 ல் பஞ்சாப் கைப்பற்றப்பட்ட பின், அதை நிர்வாகம் செய்ய அமைக்கப்பட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள் யாவர்?
ஹென்றி லாரன்ஸ், ஜான் லாரன்ஸ் மற்றும் சார்லஸ்ஜி. மான்செல்.
Q88. கேரள வம்ச மன்னர்கள் எந்த வம்சத்தின் வம்சாவளிகள் எனக் கருதப்படுகின்றனர்?
குலசேகர வர்மா, சேர மன்னர்கள், தமிழ்நாடு.
Q89. கொச்சின் ராஜ வம்ச மன்னர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
பெரும்படப்பு ஸ்வரூபம் -- மலையாளத்தில்.
Q90. கேரளாவின் மன்னர்களின் பெயர் வைப்பதில் உள்ள பிரத்தியேக வழக்கம் என்ன?
திருவாங்கூர் மன்னர்கள் : இந்த வம்ச மன்னர்கள் பெயர்கள் வர்மா என முடியும் வகையிலும், இவர்கள் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் சிறப்புப் பெயர்களுடன் அழைக்கப்பட்டனர். உதாரணம்: அனிழம் திருநாள் வீரபாலா மார்த்தாண்ட வர்மா.
கொச்சின் மன்னர்கள் : இந்த மன்னர்களின் பெயர்கள் ""ராமா மற்றும் ரவி"" எனத் தொடங்கி, ""வர்மா"" என்ற பிற்பகுதி அடைப் பெயருடனும், ""தம்புரான்"" என்ற பெயரையும் சேர்த்தும், மலையாளத்தில் ""பெரும்படப்பு ஸ்வரூபம்"" எனவும் அழைக்கப்பட்டனர். இதற்கு மேல், மன்னர்களின் மறைவு மாதம்/இடத்தை வைத்தும் மலையாளத்தில் அடையாளம் கொண்டனர். உதாரணம்: கேரள வர்மா 3 -- கர்க்கிடக்க மாசத்தில் தீப்பெட்ட தம்புரான் ராம வர்மா 16 -- மதராஸில் தீப்பெட்ட தம்புரான் "
Q91. திருவாங்கூர் ராஜ வம்ச்சத்தின் எந்த மன்னர், கர்நாடக சங்கீதத்தில் சிறந்த கலைஞராகவும், பல கர்நாடக சங்கீத கீர்த்தனைகளை இயக்கியவரும் ஆவார்?
ஸ்வாதி திருநாள் ராம வர்மா -- 1813 - 1846 வரை. இவர் பெயரில் ஸ்வாதி திருநாள் மருத்துவனை, திருவனந்தபுரம் இயங்குகிறது.
Q92. திருவாங்கூர் ராஜ வம்சத்தின் எந்த மன்னர் உலகப் புகழ் பெற்ற சித்திரக் கலைஞர்?
ராஜா ரவி வர்மா -- இவர் கிளிமானூர் பகுதியில் மன்னராக இருந்தவர். திருவாங்கூர் ராஜ வம்சத்து உறவினர்.
Q93. Which Cochin Kingdom ruler appointed a Dutch as his Senior Admiral and who was he?
அனிழம் திருநாள் வீரபால மார்த்தாண்ட வர்மா 1729 - 1758 -- EUSTACHIUS DE LANNOY – டச் படையின் தளபதியான இவரை, 1741ல் கொலாச்செல் என்ற இடத்தில் நடந்த போரில் இவரை சிறைபிடித்து, தனது ராணுவ மேம்பாட்டுக்கு உதவ வேண்டும் என்ற உத்திரவாதத்துடன் தன்னுடைய ராணுவ தளபதியாக சேர்த்துக் கொண்டார்.
Q94. எந்த திருவாங்கூர் மன்னர், இரண்டு வம்சங்களையும் இணைத்து, ஒரு ஐக்கிய ராஜ்யத்தை உருவாக்க காரணமாக இருந்தார்?
ஐக்கிய கேரளம் தம்புரான் –(1946-1948).