Khub.info Learn TNPSC exam and online pratice

வைஸ்ராய்கள் -- இந்தியா. BRITISH VICEROYS OF INDIA

Q1. கவர்னர் ஜெனரலுக்கும், வைஸ்ராய்க்கும் உள்ள வித்தியாசம் என்ன?

கவர்னர் ஜெனரல் என்பவர் இந்தியாவை கிழக்கிந்திய நிறுவனம் சார்பாக நிர்வாகம் செய்த போது ஆளுநராக இருந்தவர்.

வைஸ்ராய் என்பவர் இந்தியா, இங்கிலாந்தின் ராஜவம்சத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் வந்த போது நாட்டின் தலைவர்.

Q2. இந்தியாவின் முதல் வைஸ்ராய் யார், அவர் காலத்து நிகழ்வுகள் என்ன?
1. கேனிங் பிரபு 1858-1862: இவர் காலத்து நிகழ்வுகள்:
1. இவர் கடைசி கவர்னர் ஜெனரல் மற்றும் முதல் வைஸ்ராய்.
2. 1862 இந்திய தண்டனைச் சட்டம் அமல் படுத்தப்பட்டது.
3. இந்திய கவுன்சில் சட்டம் 1861 அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் இந்தியர்கள் நிர்வாகக் குழுவில் legislative council இடம்பெற அனுமதிக்க பட்டனர்.
4. ""வெள்ளைப் புரட்சி"" “White Mutiny” – 1859 – என்ற ஒரு குறுகிய கால புரட்சி. கிழக்கிந்திய கம்பெனியில் பணிபுரிந்து கொண்டிருந்த ஆங்கிலேய ஊழியர்கள், தங்களை ராணியின் ராணுவ வீரர்களாக்குவதற்கு சில நிபந்தனைகளையும், அல்லது பணி விடுப்பு கொடுக்க சில நிதிச் சலுகைகளையும் முன் வைத்து இந்த புரட்சியை நடத்தினர்.
5. 1858 இந்திய சட்டம் அமல் படுத்தப்பட்டது. இதன் படி, ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனம் முடக்கப்பட்டு, அதன் நிர்வாகம் முழுவதும் ராஜ வம்ச ஆட்சிக்கு மாற்றப்பட்டது. இந்த சட்டம் இயற்றப்பட்ட போது இங்கிலாந்து பிரதம மந்திரியாக இருந்தவர் பாமெர்ஸ்டன்.
Q3. கேனிங் பிரபுவுக்குப் பிறகு வைஸ்ராய் பதவி வகித்தவர்கள் யாவர், அவர்கள் காலத்து நிகழ்வுகள் யாவை?
2. எல்ஜின் பிரபு I 1862 – பதவியேற்ற குறுகிய காலத்திலேயே மறைந்தார். 1864 வரை தற்காலிகமாக சர் நேப்பியர் மற்றும் சர் டெனிசன் நிர்வாகத்தை தற்காலிகமாக மேலாண்மை செய்தனர்.
3. ஜான் லாரன்ஸ் பிரபு - 1864-1869: இவர் காலத்து நிகழ்வுகள்:
1. 1865 - பூட்டான் போர் -- 5 மாதங்கள் நடந்த போரில், பூட்டான் மன்னர் தோற்கடிக்கப்பட்டு, சில பகுதிகளை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். சிஞ்சுலா உடன்படிக்கை 1865 மூலம் போர் முடிவுக்கு வந்தது.
2. கல்கத்தா, பாம்பே மற்றும் மதராஸ் ல் உயர்நீதி மன்றங்கள் நிறுவப்பட்டன.
4. மேயோ பிரபு 1869-1872: இவர் காலத்து நிகழ்வுகள்:
1. அரசாங்க நிர்வாகம் கீழ் மட்ட நிலைக்கு பகிர்வு செய்யப்பட்டது.
2. இந்திய புள்ளி விவர கணக்காய்வு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
3. விவசாயம் மற்றும் வணிகத் துறைகள் அமைக்கப்பட்டன.
4. மாகாண ரயில்வெ முறை உருவாக்கப்பட்டது.
5. இந்திய இளவரசர்களை அரசியலுக்கு ஆயத்தப்படுத்துவதற்காக, கத்தியாவார் ல் ராஜ்கோட் கல்லூரியும், ராஜஸ்தான் அஜ்மீரில் மேயோ ப்ரபு கல்லூரியும் நிறுவப்பட்டது.
6. பிப்ரவரி 8, 1872 அன்று அந்தமானில், ஷேர் அலி அஃப்ரிதி என்ற ஆயுள் தண்டனைப் பெற்ற குற்றவாளியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார்.
5. நார்த் ப்ரூக் பிரபு -- 1872 – 1876: இவர் காலத்து நிகழ்வுகள்:
1. 1875ல் வேல்ஸ் இளவரசர் (பிற்காலத்தில் எட்வர்ட் VII இந்திய விஜயம்.
2. ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ராஜினாமா செய்யும்படி ஆயிற்று.
6. லிட்டன் பிரபு 1876-1880: இவர் காலத்து நிகழ்வுகள்:
1. 1876 -- ராணி விக்டோரியா இந்தியாவின் மகாராணி பதவியேற்றார் -- ராஜவம்ச பட்ட சட்டம் 1876.
2. 1877 -- மகாராணி விக்டோரியா இந்திய மகாராணி ஆனதை கொண்டாடும் வகையில் ""டெல்லி தர்பார்"" “Delhi Durbar” (பொருள் = “Court of Delhi” ) டெல்லியில் நடத்தப்பட்டது.
3. இந்திய மொழிகளில் பத்திரிக்கை சுதந்திரத்தைப் பறிக்கும் ""தாய் மொழி பத்திரிக்கைச் சட்டம்"" “Vernacular Press Act”, அமல் படுத்தப்பட்டது.
4. 1878 ஆயுதச் சட்டம் அமல் படுத்தப்பட்டது.
5. இரண்டாம் ஆங்கிலேய ஆப்கான் போர் -- 1878-1880.
6. 1878 -- ""வறட்சி கமிஷன்"" Famine Commission, சர் ரிச்சர்டு ஸ்ட்ராச்சி தலைமையில் அமைக்கப்பட்டது. குறிப்பாக வங்காளத்தில் 1669, 1770 மற்றும் 1866ல் நிகழ்ந்த கடுமையான வறட்சியின் பின்னணியில் அமைக்கப்பட்டது.
6. ரிப்பன் பிரபு -- 1881-1884: இவர் காலத்து நிகழ்வுகள்:
1. 1881 -- தொழிற்சால சட்டம் அமல்படுத்தப்பட்டது.
2. 1881 -- முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது இருந்த ஜனத்தொகை -- 2540 லட்சம்.
3. 1882 -- உள்ளூர் சுய நிர்வாக அறிமுகப்படுத்தப்பட்டது.
4. தாய்மொழி பத்திரிக்கைச் சட்டம் திரும்பப்பெறப்பட்டது.
5. 1882 -- சர் வில்லியம் ஹண்டர் தலைமையில் இந்திய கல்வியை மேம்படுத்த ஒரு கல்விக்குழு அமைக்கப்பட்டது.
6. 1883 -- மிகவும் சர்ச்சைக்குள்ளான ""இல்பெர்ட் சட்டம்"" கொண்டு வரப்பட்டது. இதன் மூலம், இந்திய மாவட்ட நீதிபதிகள் ஐரோப்பிய குற்றவளிகள் வழக்கையும் விசாரிக்க அனுமதி அளித்தது. இதை ஐரோப்பியர்கள் தீவிரமாக எதிர்த்தனர்.
ஐரோப்பியர்களின் எந்த எதிர்ப்பால் வருந்திய இந்தியர்கள் ஒன்று சேர்ந்து ஒருங்கிணைந்த கிளர்சி நடத்த திட்டமிட்டனர். இதன் பின்னணியில் 1885ல் உருவானது தான் ""அகில இந்திய காங்கிரஸ்"" .
7. 1883 வறட்சி நெறிமுறைகள் தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டன.
7. டஃபெரின் பிரபு 1884 – 1888: இவர் காலத்து நிகழ்வுகள் :
1. மூன்றாம் ஆங்கிலேயர் பர்மா போர் - 1885-1887 – பர்மா அஸ்ஸாமின் சில பகுதிகளை கைப்பற்றுவதற்காக படையெடுப்பு செய்த பொது, ஆங்கிலேயர்கள் எதிர்த்து பர்மியர்களை தோற்கடித்து, பர்மாவையும் கைப்பற்றியது.
2. ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் (ஆங்கிலேய பொது ஊழியராகவும், அரசியல் சீர்திருத்தவாதியாகவும் இருந்தவர்) தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்பட்டது. இவருடன் இந்திய தலைவர்கள் தாதாபாய் நௌரோஜி மற்றும் தீன்ஷா எடுல்ஜி வாச்சா சேர்ந்து இந்திய தேசிய காங்கிரஸ் ஐ நிறுவினர். அவ்வமயம் இங்கிலாந்தின் வெளியுறவு காரியதிரிசியாக Secretary of State இருந்தார்.
8. லேன்ஸ்டௌன் பிரபு 1888 -1894: இவர் காலத்து நிகழ்வுகள்:
1. 1891 தொழிற்சாலைச் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
2. அரசு ஊழியப் பணி மூன்று பிரிவாக -- 1) பேரரசு Imperial; 2) மாகாணம் 3) கீழ் மட்டம் -- பிரிக்கப்பட்டது.
3. 1892 -- இந்திய கவுன்சில் சட்டம் இயற்றப்பட்டது. இதன் மூலம் வைஸ்ராயின் சட்டமன்ற குழுவில் இந்தியர்கள் பங்கு கொள்ளும் வசதி ஏற்படுத்தியது. மாகாண அள்வில் சட்டமன்ற உறுப்பினர் குழு அமைக்கவும் வழி வகுத்தது.
4. ஆங்கிலேய இந்தியா -- ஆப்கானிஸ்தான் (இப்போது பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான்) எல்லையை தீர்மாணிக்க ""டுராண்ட் குழு"" “Durand Commission” சர் ஹென்றி மார்ட்டிமர் டுராண்ட் தலைமையில் 1893ல் அமைக்கப்பட்டது.
9. எல்ஜின் பிரபு II -1894-1899: இவர் காலத்து நிகழ்வுகள்:
1. 1897 -- சப்பேகர் சகோதரர்களால் இரண்டு ஆங்கிலேய அதிகாரிகள் பூனாவில் கொலை செய்யப்பட்டனர். அவ்வமயம் பூனா ப்ளேக் எனும் தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. அந்த நிலையை சமாளிக்க ஆங்கிலேய அதிகாரிகள் W.C. ரேண்ட் மற்றும் Lt. அயெர்ஸ்ட் என்பவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மெத்தனப் போக்கினால் கோபம் கொண்ட தாமோதர் ஹரி, பாலகிருஷ்ண ஹரி மற்றும் வாசுதேவ் ஹரி சகோதரர்கள் இந்த ஆங்கிலேய அதிகாரிகளை கொன்றனர். இவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இவ்வாறாக, ஆங்கிலேயர்களின் அட்டூழியங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைத் தொடங்கியது.
10. கர்ஸன் பிரபு 1899-1905: இவர் காலத்து நிகழ்வுகள்:
1. 1902 -- சர் தாமஸ் ராலி தலைமையில் பல்கலைக்கழக சீர்திருத்த கமிஷன் நிறுவப்பட்டது.
2. 1904 -- இந்திய பல்கலைக்கழக சட்டம் இயக்கம்.
3. 1904 -- பழங்கால நினைவுச்சின்னங்கள் பாதுகாத்தல் சட்டம் இயக்கம்.
4. விவசாய ஆராய்ச்சி மையங்கள் பூனா மற்றும் டெல்லியில் அமைக்கப்பட்டன.
5. 1905 -- வங்காளம், கிழக்கு மேற்கு என பிரிக்கப்பட்டது. (கிழக்கு வங்காளமே பிற்காலத்தில் கிழக்கு பாகிஸ்தான் (1947) , வங்காள தேசம் (1971) என மாறியது)
6. சுதேசி இயக்கம் தொடங்கியது.
7. விக்டோரியா மகாராணி மறைவு – 22.1.1901.
11. மிண்டோ பிரபு -- 1905-1910: இவர் காலத்து நிகழ்வுகள்:
1. வங்காளப் பிரிவினையை இந்து - முஸ்லீம் பிரிவினருக்கிடையே கருத்துகள் வேறுபட்டன.
2. சுதேசி இயக்கம் வலுவடைந்தது.
3. 1907 -- இந்திய தேசிய காங்கிரஸ் மகாநாடு. காங்கிரஸூக்குள் பிளவு ஏற்பட்டது. பால கங்காதர திலக் ன் தலைமையில் ""தீவிரவாதிகள்"" என்ற பெயரில் சுதந்திரத்துக்காக தீவிரவாத செயல்களுடன் போராட வேண்டுமென்றும், கோபால கிருஷ்ண கோக்கலே தலைமையில் ""மிதவாதிகள்"" என்ற பெயரில், அமைதியான அரசியல் ரீதியான முறைகளில் சுதந்திரத்திற்காக போராடவேண்டுமென்றும் பிரிந்தனர்.
4. "" மிண்டோ மார்லி சீர்திருத்தங்கள்""“Minto Morley Reforms” மூலமாக இந்திய கவுன்சில் சட்டம் 1909 இயற்றப்பட்டது. இந்த சட்டம் இயக்கப்படுவதன் முன்பு வரை, சட்ட மன்றங்களுக்கு இந்தியர்கள் விருப்ப தேர்வு முறையில் தான் நியமிக்கப் பட்டனர். இந்த சீர்திருத்த சட்டத்தின் மூலம் சட்ட மன்றங்களுக்கு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை கொண்டு வரப்பட்டது. ஆனால், ஓட்டு போடும் உரிமை ஒரு சில இந்திய பிரிவினருக்கு மட்டும் அளிக்கப்பட்டது. ஆனால் இங்கு, ஆங்கிலேயர்கள் தங்கள் பிரித்து ஆளும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினர். அதாவது, சட்ட மன்ற உறுப்பினர் இஸ்லாமியர்களுக்கு தனி இடங்கள் ஒதுக்கி, அதுவும், இஸ்லாமிய மக்கள் தொகைக்கு ஈடில்லாத அதிகமான பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டது. இதற்கு இந்துக்கள் தங்கள் அதிருப்தியே தெரிவித்தனர். இந்திய தேசிய காங்கிரஸூம் எதிர்த்தது.
5. முஸ்லிம் லீக், டாக்கா நவாப் அகா கான் அவர்களால் 1906ல் நிறுவப்பட்டது.
12. ஹார்டிஞ்ச் பிரபு -- 1910-1916: இவர் காலத்து நிகழ்வுகள்:
1. 1911 -- இந்திய தலைநகரம், கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது;
2. 1911 -- மன்னர் ஜார்ஜ் 5 மற்றும் மகாராணி மேரி ன் விஜயத்தின் பின்னணியில் ""முடிசூட்டு தர்பார்"" நடத்தப்பட்டது.
3. 1911 -- கல்கத்தா மற்றும் மதராஸ் நிர்வாகத்துக்கு ஆளுநர் நியமிக்கப்பட்டனர்.
3. 1915 -- பிப்ரவரி 19 அன்று கோபால கிருஷ்ண கோகலே மறைவு.
4. 1914 -- முதல் உலகப்போர் தொடங்கி நவம்பர் 1918 வரை நீடித்தது.
5.. 1915 -- இந்து மகா சபா -- மதன் மோகன் மாளவியா மற்றும் சில பஞ்சாப் தலைவர்களால் நிறுவப்பட்டது.
6. 1915 -- வங்காளப் பிரிவினை திரும்பப் பெறப்பட்டது. வங்காள நிர்வாக தலைவராக ஆளுநர் நியமிக்கப்பட்டார். அதே அஸ்ஸாமுக்கு கமிஷனரும், ஒரிஸ்ஸா வுக்கு துணை ஆளுநரும் நியமிக்கப்பட்டனர்.
7. 1915 -- ஜனவரி 9 அன்று காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார்.
13. செம்ஸ்ஃபோர்ட் பிரபு 1916-1921: இவர் காலத்து நிகழ்வுகள்:
1. 1916 -- இரண்டு உள்நாட்டு ஆட்சி சங்கங்கள் -- Home Rule Leagues – ஒன்று பால கங்காதர திலக் அவர்களாலும் மற்றது அன்னி பெசண்ட் அம்மையார் அவர்களாலும் அமைக்கப்பட்டது.
2. 1016 -- இந்திய தேசிய காங்கிரஸ் ன் லக்னௌ மகாநாடு -- சூரத் மகாநாட்டில் பிளவு பட்ட இரண்டு அணிகளும் அன்னி பெசண்ட் அம்மையார் முயற்சியால் இணைக்கப்பட்டன.
3. 1916 -- ""லக்னௌ உடன்படிக்கை"" -- காங்கிரஸ் மற்றும் முஸ்லீல் லீக் இரண்டும் சேர்ந்து, ஆங்கிலேயர்களை இந்தியா மீது தாராள மனப்பான்மையும், இந்தியர்களுக்கு நிர்வாகத்தில் அதிக பங்கு அளிக்கவேண்டும் என வலியுறுத்த முடிவு -- இந்த முடிவு எட்டுவதற்கு பால கங்காதர திலக் அவர்களே காரணம்.
4. 1916 --- 1915ல் இந்தியா திரும்பிய காந்தி, சாபர்மதி ஆஸ்ரமத்தை நிறுவினார்.
5. 1916 -- பூனா வில் பெண்கள் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
6. 1917 -- பீஹாரில் உள்ள சம்பரான் என்ற இடத்தில் காந்திஜி தனது முதல் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார்.
7. 1918 -- காந்தி, அகமதாபாத்தில் மற்றொரு சத்தியாகிரகம் நடத்தினார்.
8. 1917 -- மாண்டேக் பிரபு, ஆகஸ்ட் 1917ல், இந்திய ஆட்சி படிப்படியாக இந்தியர்களுக்கு மாற்றப்படும் என்று அறிவித்தார்.
9. 1918 -- இந்திய அரசாங்க சட்டம் 1919 -- மாண்டேக் செம்ஸ்ஃபோர்ட் சீர்திருத்தம் இயற்றப்பட்டது.
10. 1918 -- எஸ். என். பானர்ஜி மற்றும் சில தலைவர்கள், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி Indian Liberation Federation என்ற கட்சியைத் தொடங்கினர்.
11. 1919 -- ரௌலத் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் மிகவும் சர்ச்சையை இந்தியர்களிடம் கிளப்பியது. இந்த சட்டத்தின் மூலம் அரசாங்கத்துக்கு, சந்தேகத்தின் பேரில், விசாரணை ஏதுமின்றி, யாரை வேண்டுமானாலும், சிறைப்பிடிக்க அதிகாரம் கொடுக்கப்பட்டது.
12. 8.4.1919 -- ரௌலத் சட்டத்தை எதிர்த்து காந்திஜி ""சத்தியாகிரகம்"" அறிவித்து, அவர் கைது செய்யப்பட்டார்.
13. 13.4.1919 -- ஜாலியன் வாலா படுகொலை -- 10.4.1919 அன்று, டாக்டர் கிச்லு மற்றும் டாக்டர் சத்யபால் ஆகியோர் ரௌலத் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அதை எதிர்த்து பஞ்சாபில் பெரிய கிளர்ச்சி ஏற்பட்டது. இந்த கிளர்ச்சி, பாதுகாவலர்களின் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியதால் கிளர்ச்சி, கலவரம் ஆனது. அதில் ஐந்து ஐரோப்பியர்கள் கொல்லப்பட்டனர். 13.4.1919 அன்று ""பைசாகி"" விழா கொண்டாடுவதற்காக, ஜாலியன் வாலா பாக் (பாக்=தோட்டம்/பூங்கா) வில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குழுமியிருந்தனர். அவ்வமயம், யாரும் எதிர்பாராத வகையில், ஜெனரல் ரெஜினால்ட் டையர், தனது படைக்கு, துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதின் பேரில் சுமார் 400 பேர் கொலையுண்டனர். இதனால் இவரை ""அமிர்தசரஸ் கசாப்புக்காரன்"" என அழைத்தனர்.
14. 1.8.1920 அன்று பால கங்காதர திலகர் மறைவு.
15. 1919-1920 ""கிலாஃபத் கிளர்ச்சி"" தொடக்கம். தெற்கு ஆசிய இஸ்லாமியர்களால், முதல் உலகப்போரின் முடிவில், துருக்கி ஆட்டோமான் ராஜ்யத்துக்கு, ஆங்கிலேயர்கள் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்த இயக்கத்தைத் தொடங்கினர். இந்தியாவில், முகமது மற்றும் ஷௌகத் அலி, மவுலானா அபுல் கலாம் ஆஸாத் ஆகியோரால் தொடங்கப் பட்டு, இந்துக்கள், காந்திஜி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் ஆதரவும் பெற்றனர்.
16. 1920 -- ஒத்துழையாமை இயக்கம் -- காந்திஜியால் தொடங்கப்பட்டது. அலி சகோதரர்கள் மற்றும் அனைத்து பிரிவினராலும் ஆதரவு கொடுக்கப்பட்டது.
17. 1920 -- இந்திய தேசிய காங்கிரஸின் நாக்பூர் மகாநாடு -- காங்கிரஸ் நிர்வாக அமைப்பில் மாறுதல்கள்.
19. சர் எஸ்.பி. சின்ஹா, பீஹாரின் லெஃப்டினண்ட் கவர்னராக, முதல் இந்தியர், நியமிக்கப்பட்டார். (இவர் இந்தியாவின் இரண்டாவது சட்டசபை உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன்பாக இந்தியாவின் முதல் சட்டசபை உறுப்பினர் ஆனவர் தாதாபாய் நௌரோஜி என்பதும் குறிப்பிடத்தக்கது)
14. ரீடிங் பிரபு 1921-1926: இவர் காலத்து நிகழ்வுகள்:
1. 5.2.1922 -- சௌரி சௌரா நிகழ்ச்சி -- சௌரி சௌரா என்பது உத்திரபிரதேசத்தின் கோரக்பூர் அருகில் உள்ள ஒரு கிராமம். இங்கு கிராம மக்கள் கூட்டம், பாதுகாவலர்களுடன் மோதலில் ஈடுபட்டு, காவல் நிலையத்தை கொளுத்தி, 22 காவலர்கள் கொலைசெய்யப்பட்டனர். காந்திஜி இந்த நிகழ்வின் மூலம் வேதனையும் கோபமும் கொண்டு, ஒத்துழையாமை இயக்கம் மற்றும் பொது கீழ்ப்படியாமை இயக்கத்தையும் திரும்பப் பெற்றார்.
2. காந்திஜியின் இந்த நடவடிக்கையால், மோதிலால் நேரு, சித்த ரஞ்சன் தாஸ், என்.சி.கேல்கர் ஆகியோர் சேர்ந்து சுயராஜ்ய கட்சி என தொடங்கி, அதற்கு ""காங்கிரஸ் கிலாஃபத் கட்சி"" என பெயரிட்டு 1.1.1923 முதல் தொடங்கினர். இதற்கு முக்கிய காரணம், தேர்தல்களில் பங்கு பெற வேண்டும் என்பதே. ஆனால், சித்த ரஞ்சன் தாஸ் 1925ல் மறைந்ததை தொடர்ந்து, இந்த கட்சி மறைந்தது.
3. 1923 -- முதல் முறையாக, ஒரே சமயத்தில் இந்திய பொதுப்பணி ஊழியர் தேர்வு இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
4. 1925 -- கே.பி. ஹெட்ஜ்வார் RSS – ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தைத் தொடங்கினார்.
5. ரௌலத் சட்டம் திரும்பப் பெறப்பட்டது.
6. ராணுவத்தில் இந்திய அதிகாரிகள் சேர்க்கை தொடக்கம்.
7. 26.12.1925 -- இந்தியாவில் கம்யூனிச கட்சி கான்பூரில் தொடக்கம். (1920ல் (17 அக்டோபர்) தாஷ்கெண்ட் ல் எம்.என். ராய் மற்றும் சில இந்தியர்களால் இந்திய கம்யூனிச கட்சி தொடங்கியது.)
15. இர்வின் பிரபு1926-1931: இவர் காலத்து நிகழ்வுகள்:
1. இவரை ""கிறித்துவ வைஸ்ராய்"" “Christian Viceroy” என அழைப்பர்.
2. 1927 -- ""சைமன் கமிஷன்"" -- 1927 – நியமிக்கப்பட்டது. இந்த குழுவில் ஏழு ஆங்கிலேய அதிகாரிகள் இருந்தனர். இந்திய சாசன சட்ட சீர்திருத்தங்கள் செய்வதற்காக நியமிக்கப்பட்டது. இதில் எந்த இந்திய பிரதிநிதியும் சேர்க்கப்படவில்லை. அதனால், இந்தியர்கள் இதை நிராகரித்தனர். 30.10.1928 அன்று, இந்த குழு இந்தியா வந்த போது, லாகூரில், லாலா லஜபதி ராய் தலைமையில், ஒரு எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. ஆங்கிலேயர்கள் இந்த போராட்டத்தின் மீது தடியடி பிரயோகம் செய்த போது, லாலா லஜபதி ராய் மோசமாக காயப்பட்டு 17 நவம்பர் 1928 அன்று காலமானார்.
3. லாலா லஜபதி ராய் மறைவுக்கு பழி வாங்கும் வகையில், ஆங்கிலேய காவல் துறை அதிகாரி சாண்டர்ஸ் என்பவரை டிசம்பர் 1928ல் பகத் சிங் மற்றும் அவருடைய தோழர்கள் சேர்ந்து கொலை செய்தனர்.
4. 1927 -- ஹார்கோட் பட்லர் என்பவர் தலைமையில், இந்திய அரசாங்கத்திற்கும் மாகாணங்களுக்கும் இடையில் உள்ள உறவை மேம்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டது.
5. 1928 -- அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் மகாநாடு.
6. மோதிலால் நேரு தலைமையில் இந்திய சாசன சட்டத்தை உருவாக்க நியமிக்கப்பட்டார். 1928 ல் இவர் தனது அறிக்கையை சமர்ப்பித்தார். இந்த அறிக்கையை முஸ்லீம் லிக் ம் இந்து மகா சபையும் நிராகரித்தது.
7. 1928 -- இந்தியாவுக்கு, இங்கிலாந்து ராஜ ஆட்சியின் கீழ் சுய அரசாங்கம் அமைக்கு அதிகாரம் கொண்ட ஒரு நாட்டு அந்தஸ்து விரைவில் அளிக்கப்படும் Dominion status என அறிவித்தார். இதை ""தீபாவளி அறிவிப்பு"" “Deepavali Declaration” என அழைப்பர்.
8. 1929 -- இந்திய தேசிய காங்கிரஸின் லாகூர் மகாநாடு -- “Poorna Swaraj” பூரண சுதந்திரம் என்ற சபதமேற்று, 26.1.1930 ஐ சுதந்திர தினமாக அறிவித்தது இந்திய மூவர்ணக் கொடி 31.12.1930 அன்று ஏற்றப்பட்டது.
9. 12.3.1930 -- பொது ஒத்துழையாமை இயக்கம், தண்டி யாத்திரை நடத்தப்பட்டன. காந்திஜி, தனது 79 தொண்டர்களுடன் சாபர்மதி ஆஸ்ரமத்திலிருந்து, தண்டி (குஜராத்) நடை யாத்திரை மேற்கொண்டு, உப்பு சத்தியாகிரகத்தை மேற்கொண்டார்.
10. நவம்பர் 1930/ ஜனவரி 1931 முதல் வட்ட மேஜை மகாநாடு லண்டனில் -- காங்கிரஸ் பங்குக்கொள்ளவில்லை.I 11. 5 - 3 - 1931 காந்தி - இர்வின் உடன்படிக்கை -- இந்தியர்கள் ஒத்துழையாமை இயக்கத்தை கைவிடவேண்டும், வட்ட மேஜை மகாநாட்டில் கலந்து கொள்ளவேண்டும், ஆங்கிலேயர்கள் அடக்கு முறை சட்டங்கள், சிறு குற்றங்களுக்காக போடப்பட்ட வழக்குகள் திரும்பப்பெற வேண்டும், கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும், உப்பு வரி நீக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளைக் கொண்டதாக இருந்தது.
12. இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிட்டார்.
16. வெல்லிங்டன் பிரபு 1931 – 1936: இவர் காலத்து நிகழ்வுகள்:
1. செப்டம்பர் 1931 -- இரண்டாம் வட்ட மேஜை மகாநாடு. காந்திஜி பங்கு கொண்டார். இந்த மகாநாடு எந்த முடிவுகளும் எட்டாமல் தோல்வியடைந்தது. காந்திஜி டிசம்பர் 1931ல் இந்தியா திரும்பி ஒத்துழையாம இயக்கத்தைத் தொடர்ந்தார். காந்திஜி சிறைப் படுத்தப்படார். இந்த இயக்கம் மே 1934 ல் நிறுத்தப்பட்டது.
2. நவம்பர் 17, 1932 -- லண்டனில் மூன்றாம் வட்ட மேஜை மகாநாடு நடைபெற்றது. அதிகமான இந்திய தலைவர்கள் சிறை வாசத்தில் இருந்ததால், இந்திய பிரதிநிதியின்றி இந்த மகாநாடு நடத்தப்பட்டது.
3. ஆகஸ்ட் 1932 -- சாதி/இன அடிப்படை அறிக்கை -- Communal Award – இங்கிலாந்து பிரதம மந்திரி ராம்சே மேக்டொனால்ட் அவர்களால் அறிவிக்கப்பட்ட இந்த அறிக்கையின் மூலம் வாக்காளர்களை அவர்களின் சாதி அடிப்படையில் பிரித்து தேர்தல்களை நடத்த திட்டம். ஆங்கிலேயர்களின் பிரித்து ஆளும் கொள்கையின் ஒரு அங்கம்.
4. இந்த அறிக்கை ஒரு சர்ச்சைக்குரியதானது. அதில், சீக்கியர்கள், முஸ்லீம்கள், தலித் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு தனி வாக்காளர் முறை அறிவிக்கப்பட்டது. இதை காந்திஜி எதிர்த்தார். ஆனால் டாக்டர் அம்பேத்கர் ஆதரித்தார். இதை எதிர்த்து, காந்திஜி யெரவாடா சிறையில் உண்ணாவிரதம் மெற்கொள்ளவே, செப்டம்பர் 1932 ல் இருவருக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த உடன்படிக்கையின் மூலம், தலித் க்கு உண்டான தனி வாக்காளர் முறை ரத்து செய்யப்பட்டு, ஒருங்கிணைந்த வாக்காளர் முறை அறிவிக்கப்பட்டது.
5. இந்திய அரசாங்க அட்டம் 1935 இயற்றப்பட்டது.
6. பர்மா (மியான்மார்) இந்தியாவிலிருந்து 1935ல் பிரிக்கப்பட்டது.
7. 1934 -- ஆச்சார்யா நரேந்திர தேவ் மற்றும் ஜயப்பிரகாஷ் நாராயண் ""காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி"" ஐ நிறுவினர்.
8. 1936 -- அகில இந்திய விவசாய சபை அமைக்கப்பட்டது.
17. லிங்லித்கௌ பிரபு -- 1936 -1943: இவர் காலத்து முக்கிய நிகழ்வுகள்: 1. 1937 – இந்தியாவின் பல மாகாணங்களில் காங்கிரஸ் அரசவைகள் அமைக்கப்பட்டன.
2. 1939 - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்தார்.
3. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ம் அவரது தொண்டர்களூம் சேர்ந்து ""Forward Bloc"" என்ற கட்சியை நிறுவினர்.
4. 1939ல் இரண்டாம் உலகப்போர் தொடங்கிய நிலையில், அனைத்து காங்கிரஸ் சட்டசபைகளும் ராஜினாமா செய்தனர்.
5. காங்கிரஸ் சட்டசபைகள் ராஜினாமா செய்ததை முஸ்லீம் லீக் ""விடுதலை/மீட்பு நாள்"" என வர்ணித்தனர்.
6. 23.3.1940 -- முஸ்லீம் லீக், தனது லாகூர் மகாநாட்டில் இஸ்லாமியர்களுக்கு தனி நாடு என்ற முடிவை எடுத்தனர்.
7. இந்த மகாநாட்டில் தான், முகமது இரு நாட்டு திட்டத்தை முன் வைத்தார்.
8. ஆகஸ்ட், 1940.-- லிங்லித்கௌ, அரசாங்கத்தில், இந்தியர்களுக்கு அதிகமான பிரதிநிதித்துவம் கொடுக்கப்படும் என்ற திட்டத்தை முன் வைத்தார். இந்திய தேசிய காங்கிரஸ் இதை எதிர்த்தனர். காந்திஜி தனி சத்தியாகிரகம் தொடங்கினார்.
9. 1941 -- நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றார்.
10. 1942 -- நேதாஜி சுபாஹ் சந்திர போஸ் சிங்கப்பூரில் ""இந்திய தேசிய படை Indian National Army (Azad Hind Fauj)"" யை தனது ஆதரவாளர்களுடன் நிறுவினார். இந்த அமைப்பு 1942 முதல் 1945 வரை, ஜப்பானியர் உதவியுடன், ஆங்கிலேயருக்கு எதிராக பர்மா பகுதியில் ஒரு சில போர்கள் நடத்தினர்.
11. 1942 -- ""க்ரிப்ஸ் குழு"" Cripps Mission – 1942 – ஸ்டான்ஃபோர்ட் க்ரிப்ஸ் தலைமையிலான இந்த குழு, இந்தியாவுக்கு சுய அரசாங்க அந்தஸ்து -- Dominion status -- கொடுக்க இங்கிலாந்து அரசாங்கம் முன்வந்துள்ளதாக அறிவித்தார். இதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் இந்த திட்டம் தோல்வி அடைந்தது. விளைவு, ஆகஸ்ட் 1942 முதல் தீவிர போராட்டம் (ஆகஸ்ட் புரட்சி) தொடங்கியது.
18. வேவல் பிரபு -- 1943-1947: இவர் காலத்து நிகழ்வுகள்:
1. 1944 -- சி. இராஜகோபாலச்சாரியார் தனது ""CR formula"" என்ற திட்டத்தை -- அதாவது இரண்டு நாடுகளுக்கும் பொது ராணுவம் மற்றும் தொலைத்தொடர்பு அமைப்பை -- முன் வைத்தார்.
2. ராஜகோபாலச்சாரியாரின் இந்த திட்டத்தை முஸ்லீம் லீக் ம் சில காங்கிரஸ் தலைவர்களும் எதிர்த்தனர். இதைப்பற்றி காந்திஜிக்கும் ஜின்னாவுக்குமிடையில் நடந்த பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்தது.
3. 1945 -- வேவல் பிரபு திட்டம் மற்றும் சிம்லா மகாநாடு -- தோல்வி.
4. 1946 -- இந்திய தேசிய ராணுவத்தின் மீது விசாரணை மற்றும் கப்பற்படை கலகம் -- இந்த கப்பற்படை கலகம், ராஜ வம்ச கப்பற்படை ஊழியர்களால், பணி சம்பந்தப்பட்ட குறைபாடுகளை எதிர்த்து நடத்தியது. இதற்கு நாடு முழுவதுமான ஆதரவு கிட்டியது. அரசியல் ரீதியான ஆதரவு கிடைக்காததால், இந்தக் கலகம் தோல்வி அடைந்தது. இந்தக் கலகத்துக்குக் காரணமானவர்கள் சிறைபிடிக்கப்பட்டு தண்டனைக்குள்ளானர்கள்.
5. 1946 -- கேபினெட் மிஷன் Cabinet Mission 1946 – இதில் லாரன்ஸ் பிரபு, சர் ஸ்டான்ஃபோர்ட் க்ரிப்ஸ் மற்றும் ஏ. வி. அலெக்ஸாண்டர் ஆகியோர் இருந்தனர். இந்த குழு இந்திய சாசனச் சட்டத்தை உருவாக்குவதற்கும், ஒரு தற்காலிக அரசவை அமைப்பதற்கும் அனுப்பப்பட்டது. இதை காங்கிரஸ், முஸ்லீம் லீக் இரு அமைப்புகளும் ஏற்றுக்கொண்டன.
6. செப்டம்பர் 1946 -- இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது.
7. 17.8.1946 -- ஐ, இஸ்லாமியர்களுக்கு தனி நாடு வேண்டுமென ""நேரடி நடவடிக்கை நாள்"" என அனுசரித்தது. இடைக்கால அரசாங்கத்தில் பங்கு பெற்ற போதிலும், அரசியல் நிர்ணய சபையிலிருந்து விலகி இருந்தனர்.
19. மவுண்ட்பேட்டன் பிரபு March to August 1947 -- இவர் காலத்து நிகழ்வுகள்:
1. இந்தியாவின் கடைசி ஆங்கிலேய வைஸ்ராய்.
2. 3.6.1947 -- மவுண்ட் பேட்டன் தனது திட்டத்தை முன் வைத்தார். அதன் படி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் (கிழக்கு பாகிஸ்தான் உள்ளடக்கிய) இரண்டு நாடுகள் உருவாக்கம். எல்லைகளை சர் சிரில் ரேட்க்ளிஃப் வகுத்தார்.
3. 18.7.1947 அன்று இந்தியாவின் சுதந்திரம், இங்கிலாந்தின் பாராளுமன்றம் முடிவெடுத்தது. அவ்வமயம், க்ளெமெண்ட் அட்லீ (தொழிலாளர் கட்சி - Labour Party) பிரதம மந்திரியாக இருந்தார்.
4. 15.8.1947 -- இந்தியா சுதந்திரம் பெற்றது -- ராஜகோபாலாச்சாரி, கவர்னர் ஜெனரலாகவும், ஜவஹர்லால் நேரு பிரதம மந்திரியாகவும் பதவி அமர்ந்தனர்.
Q4. ஆங்கிலேய கவர்னர் ஜெனரல்களையும் வைஸ்ராய்களையும் வரிசைப்படுத்துக:

இவர்களில், ஓரளவுக்கு நீண்ட கால பதவியில் இருந்தவர்கள், மற்றும் அவர்கள் காலத்தில் அதிகமான நிகழ்வுகள் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இடையில் ஒரு சில பெயர்கள் விடுபட்டுள்ளது.

கவர்னர் ஜெனரல்கள்:
எண் பெயர்  பதவிக்காலம்  வருடம்
 1.  வாரன் ஹேஸ்டிங்ஸ்  1773-1785    12
 2.  கார்ன் வாலிஸ் பிரபு  1786-1793      7
 3.  சர் ஜான் ஷோர்  1793 – 1798     5
 4.  வெல்லெஸ்லி பிரபு  1798 – 1805     7
 5.  சர் ஜார்ஜ் பார்லோ  1805 – 1807     2
 6.  மிண்டோ பிரபு I  1807 – 1813     6
 7.  ஹேஸ்டிங்ஸ் பிரபு  1813 – 1823   10
 8.  ஆம்ஹெர்ஸ்ட் பிரபு  1823 – 1828      5
 9.  வில்லியம் பெண்டிக்  1828 – 1835      7
 10.  ஆக்லாண்ட் பிரபு  1835 – 1842      7
 11.  எல்லென்பரோ  1842 – 1844      2
 12.  ஹார்டிஞ்ச் பிரபு I  1844 – 1848      4
 13.  டல்ஹௌசி பிரபு  1848 – 1856      8
 14.  கேனிங் பிரபு  1856 – 1857      1
                                  வைஸ்ராய்கள்:
 1.  கேனிங் பிரபு  1858 – 1862      4
 2.  எல்ஜின்/நேப்பியர் பிரபுக்கல்   1862 – 1864      2
 3.  ஜான் லாரன்ஸ் பிரபு  1864 – 1869      5
 4.  மேயோ பிரபு  1869 – 1872      3
 5.  நார்த் ப்ரூக் பிரபு  1872 – 1876      4
 6.  லிட்டன் பிரபு  1876 – 1880      4
 7.  ரிப்பன் பிரபு  1881 – 1884      3
 8.  டஃபெரின் பிரபு  1884 – 1888      4
 9.  லேன்ஸ்டௌன்  1888 – 1894      6
 10.  எல்ஜின் பிரபு II  1894 – 1899      5
 11.  கர்ஸன் பிரபு  1899 – 1905      6
 12.  மிண்டோ பிரபு  1905 – 1910      5
 13.  ஹர்டிஞ்ச் பிரபு II  1910 – 1916      6
 14.  செம்ஸ்ஃபோர்ட் பிரபு  1916 – 1921       5
 15.  ரீடிங்க் பிரபு  1921 – 1926      5
 16.  இர்வின் பிரபு  1926 – 1931      5
 17.  வெல்லிங்டன்  1931 – 1936      5
 18.  லிங்லித்கௌ பிரபு  1936 – 1943      7
 19.  வேவல் பிரபு  1943 – 1947      4
 20.  மௌண்ட்பேட்டன் பிரபு

 March to August 1947

 15.8.1947 -- 21.6.1948