Khub.info Learn TNPSC exam and online pratice

செபக் டக் ரா - SEPAK TAK RAW.

Q1. செபக் டக் ரா என்பது என்ன விளையாட்டு?
KICK VOLLEY BALL எனவும் அழைக்கப்படுகிறது. வாலிபாலைப் போலவே, ஒரு சிறிய செவ்வக தளத்தில், முக்கியமாக காலால், (கையை தவிர்த்து உடலின் வேறு பாகங்கள் பயன்படலாம்) ஒரு பந்தை, ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு அனுப்புவது. 3 பேர் கொண்ட ஒரு அணி விளையாட்டு. தெற்கு ஆசிய நாடுகளில் மிகவும் புகழ்பெற்றது.

Q2. செபக் டக் ரா விளையாட்டு எங்கு தொடங்கியது?
15வது நூற்றாண்டில் மலாக்கா சுல்தானியத்தில் (மலேசியா) தொடங்கியதாக தெரிகிறது.
Q3. செபக் டக் ரா ஆடுகள அமைப்பை பற்றி கூறுக.
"ஆடுகளம் COURT என்று அழைக்கப்படுகிறது.
செவ்வகம் - 44 அடி X 20 அடி - இரண்டு அரை பகுதிகளாக பிரிக்கப்பட்டு இரண்டு அணிகளுக்கு ஒதுக்கப்படுகிறது.
வலை : நடுக்கோட்டின் முடிவில் இரண்டு கொம்புகள் நடப்பட்டு, 5 அடி உயரத்தில் (நடுவில்) ஒரு வலை கட்டப்பட்டு இருக்கும். இது ஆண்களுக்கான வலை உயரம். பெண்களுக்கு நடுவில் 4 அடி 8 அங்குல உயரத்தில் கட்டப்பட்டிருக்கும்."
Q4. செபக் டக் ரா விளையாட்டு பந்து பற்றி கூறுக.
பொதுவாக கையால் பின்னப்பட்ட பந்து. தற்போது சிந்தெடிக் ரப்பர் பந்துகளும் பயன்படுத்தப்படுகிறது. இதன் சுற்றளவு பொதுவாக 42 முதல் 44 செ.மீ ரும், 170 முதல் 180 கிராம் எடையும் கொண்டதாக இருக்கும். பெண்கள் பந்து எடை 150 முதல் 160 கிராம் இருக்கும். ஒரே வண்ணமாகவும், பல வண்ணமாகவும் இருக்கலாம்.
Q5. செபக் டக் ரா விளையாடும் முறை பற்றி கூறுக.
"பந்து ஒரு வீரரால் கையால், களத்தின் ஒரு முனையில் இருந்து, அப்போது மட்டும் தூக்கி போடப்படும். அதை அணி சார்ந்த வீரர் காலால் வாங்கி, நேரடியாகவோ, அல்லது சக வீரர் உதவியாலும் எதிரணி பகுதிக்கு அனுப்புவார். இது, 3 முயற்சிகளுள் நடத்தப்பட வேண்டும். இதேபோல் எதிரணியும் செயல்படும்.
பந்து மூன்று முயற்சிகளுள் எதிரணிக்கு அனுப்பப்படாவிட்டாலும், அல்லது வலையில் சிக்கி உள் பக்கமே விழுந்தாலும், அல்லது ஆடுகளத்திற்கு வெளியே சென்றாலும், அல்லது அனுப்பப்பட்ட பந்தை எதிரணி வீரர் வாங்க தவறிவிட்டாலும், ஒரு புள்ளி கணக்கு எடுக்கப்படும். 15 புள்ளிகளை எடுக்கும் முதல் அணி வெற்றி பெறும்."
Q6. செபக் டக் ரா விளையாட்டின் தற்போதைய நிலை என்ன?
பொதுவாக, கொரியா, பிலிப்பைன்ஸ், சீனா, ஜப்பான், வியட் நாம் போன்ற கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டுமே பிரபலமாக உள்ளது. வெளி உலகத்திலும் பரவாததால் இன்னும் எந்த ஒரு பெரிய போட்டியிலும் சேர்க்கப்பட வில்லை.