Khub.info Learn TNPSC exam and online pratice

துப்பாக்கி சுடுதல் - SHOOTING

Q1. துப்பாக்கி சுடுதல் எவ்வகையான போட்டி?
துப்பாக்கியால் கொடுக்கப்பட்டுள்ள இலக்குகளை குறி பார்த்து சுடுதல். இதில் வெவ்வேறு இலக்குகள், வெவ்வேறு உடல் நிலைகள் (POSITIONS) என பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஒலிம்பிக்கில் ஆண்களுக்கு 9 வகை, பெண்களுக்கு 6 வகை போட்டிகளுமாக 15 வகை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெறுகிறது.

Q2. துப்பாக்கி சுடுதல் போட்டி எப்போது முதல் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளது?
1896 முதல் ஒலிம்பிக்கிலிருந்து (1904, 1928 தவிர்த்து) தொடர்ந்து சேர்க்கப்பட்டுள்ளது.
Q3. துப்பாக்கி சுடுதலில் என்னென்ன போட்டிகள் உள்ளன?
"போட்டிகள் 3 வகையான RIFLE, PISTOL - மற்றும் SHOT GUN - துப்பாக்கிகளுடன் நடத்தப்படுகிறது.
பெண்கள்
RIFLE --- 50 மீ - 3 உடல் நிலை & 10 மீ - AIR RIFLE
PISTOL --- 50மீ - 25 மீ துரித சுடுதல், 10மீ - AIR PISTOL
SHOT GUN -- TRAP DOUBLE TRAP SKEET
ஆண்கள்
50மீ - 3 உடல் நிலை & 10 மீ - AIR RIFLE
25மீ, 10 மீ - AIR PISTOL
TRAP SKEET"
Q4. துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர்கள் யார்?
1. ககன் நரங்--------------------------------- 2012 - செம்பு
2. விஜய்குமார்------------------------------- 2012 - வெள்ளி
3. அபினவ் பிந்த்ரா------------------------ 2008 - தங்கம்
4. ராஜ்யவர்தன் சிங் ராத்தோர்----- 2004 - வெள்ளி
Q5. இந்திய மன்னர் பரம்பரையை சேர்ந்த ஒருவர் இந்த விளையாட்டில் பல போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியிருக்கிறார். அவர் யார்?
மன்னர் கர்னி சிங் - பிகானீர், ராஜஸ்தான், ராஜவம்சத்தை சேர்ந்தவர். புகழ்பெற்ற அரசியல்வாதி.