Khub.info Learn TNPSC exam and online pratice

நீச்சல் - SWIMMING

Q1. நீச்சல் போட்டி என்பது என்ன?
பல விதிமுறைகளுக்குட்பட்டு குறிப்பிட்ட தூரத்தை, பல வகையான நீச்சல் முறைகளில், சேருவதே நீச்சல் போட்டியாகும்.

Q2. நீச்சல் போட்டி எப்போது ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது?
1896 முதல் ஒலிம்பிக் போட்டியிலிருந்து ஆண்களுக்கும், 1912 முதல் பெண்களுக்கும் சேர்க்கப்பட்டு தொடர்கிறது.
Q3. ஆண்களுக்கான ஒலிம்பிக் நீச்சல் போட்டிகள் யாவை?
"நீச்சல் போட்டியில் ஆண்களுக்கு கீழ்க்கண்ட பிரிவுகளும் தூரங்களும் உண்டு.
1. FREE STYLE : 50, 100, 200, 400, 1500 மீட்டர்.
2. BACK STROKE : 100, 200 மீட்டர்.
3. BREAST STROKE : 100, 200 மீட்டர்.
4. BUTTER FLY : 100, 200 மீட்டர்.
5. MEDLEY : 200, 400 மீட்டர்.
6. RELAY : 4 x 100, 4 x 200 FREE STYLE
7. RELAY : 4 x 100 MEDLEY RELAY
8. 10 கி.மீ : மராத்தன்.
இவற்றுள் முதல் நான்கு மட்டுமே நீச்சலின் வகைகள். மற்றவை, இந்த நான்கு வகைகளை சார்ந்த போட்டிகளே. இவற்றுள் -
RELAY : தொடர் போட்டி ஒரு குறிப்பிட்ட தூரத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்வது. உதாரணமாக 4 x 100 என்றால் நான்கு வீரர்கள் 100 மீட்டருக்கு பங்கு கொண்டு 400 மீ தூரம் கடப்பது.
MEDLEY : 400 மீ - என்றால் ஒவ்வொரு 100 மீ க்கும் ஒவ்வொரு வகையான நீச்சல் அடிப்பது."
Q4. ஒலிம்பிக்கில் பெண்களுக்கான நீச்சல் போட்டிகள் யாவை?
"1. FREE STYLE : 50, 100, 200, 400, 800 மீட்டர்.
2. BACK STORKE : 100, 200 மீட்டர்.
3. BREAST STROKE : 100, 200 மீட்டர்.
4. BUTTER FLY : 100, 200 மீட்டர்.
5. MEDLEY : 200, 400 மீட்டர்.
6. RELAY : 4 x 100, 4 x 200 FREE STYLE, 4 x 100 MEDLEY
7. MARATHON : 10 கி.மீ."
Q5. நீச்சல் போட்டி வகைகளைப் பற்றி கூறுக.
"1. FREE STYLE : மார்பு நீர்ப்பகுதியிலும், முதுகு மேல் புறத்திலும் கொண்டு, கைகளை மாறி மாறி முன்னோக்கி பாய்ச்சி நீந்துதல்.
2. BUTTER FLY : FREE STYLE போலவே. ஆனால் ஒரே சமயத்தில் முன்னோக்கி பாய்ச்சி நீந்துதல்.
3. BACK STROKE : முதுகு தண்ணீர் புறமும், மார்பு மேல்புறமும் கொண்டு, கைகளை மாறி, மாறி முன்னோக்கி பாய்ச்சி நீந்துதல்.
4. BREAST STROKE : FREE STYLE போலவே உடல் நிலை. ஆனால், இரு கைகளையும் முன்னோக்கி நீரை அகற்றிக்கொண்டே செல்ல வேண்டும்.
கால்கள் எப்போதும் நீருக்குள்ளேயே இருக்க வேண்டும். அதே சமயம் தலையும் நீருக்குள் சென்று வர வேண்டும்."
Q6. போட்டிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட நீச்சல் குளத்தின் அளவுகள் யாவை?
"நீளம்-------- 50 மீ / 164 அடி
அகலம்---- 25 மீ / 82 அடி
நீச்சல் வழிப்பாதைகள்---- 8
வழிப்பாதை அகலம்--- 2.5 மீட்டர்
நீரின் வெப்ப நிலை---- 25 --> 28°C
குளத்தின் ஆழம்----- 2 மீ / 6.5 அடி.
நீருக்குள் வெளிச்சம்---- 1500 LUX"
Q7. நீச்சல் குள நீரை சுத்தமாக பராமரிக்க பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் யாவை?
"சோடியம் ஹைபோக்ளோரைட் மற்றும் ப்ரோமைன் கலவை, மற்றும் ஓசோன். இவைகள் நீச்சல் குள வேதிப்பொருட்கள் என அழைக்கப்படும். இந்த கலவையை சேர்க்கும்போது நீரின் அடர்த்தி மதிப்பு (pH VALUE) - 7.2 முதல் 7.6 வரை பராமரிக்கப்பட வேண்டும். இந்த மதிப்பு அதிகரித்தால் நீரின் சுத்த நிலை பாதிக்கப்படும்.
இதைத்தவிர்த்து, BIGUANIDES எனப்படும் வேதிக் கலவை. இதில் PHMB - POLY HEXA METHYLENE BIQUANIDE என்ற வேதிப்பொருள் உள்ளடங்கியது.
இந்த கலவை மிகவும் உகந்தது. மேலும் குறிப்பிட்ட காலங்களில் இந்த வேதிப் பொருளின் தன்மையை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்."
Q8. SYNCHRONIZED SWIMMING ஒருங்கிணைந்த நீச்சல் என்பது என்ன?
பொதுவாக ஒலிக்கப்படும் இசைக்கேற்றவாறு நீச்சல் குளத்தில் நீருக்கு வெளியிலும் உள்ளுமாக வெவ்வேறு விதமாக உடல் அசைவுகளை ஏற்படுத்தி சாதனைகள் புரிவது இது ஒரு கண்கவர் நிகழ்ச்சி. இது ஆண்களும், பெண்களும் கலந்து கொள்ளும் ஒரு அணி நிகழ்ச்சி.
Q9. DIVING என்பது என்ன?
"நீரில் மூழ்குதல். அதாவது உயரத்திலிருந்து நீரில் குதித்து எழுந்திருத்தல் என பொருள் கொள்ளலாம். இது ஒலிம்பிக்கில் 1904ல் சேர்க்கப்பட்டு தொடர்கிறது. இதற்கு, 3,5,7.5 மற்றும் 10 மீ உயர பிரத்தியேக மேடைகள் (ஸ்பிரிங் பொருத்தப்பட்டு) அமைக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து அவர்கள் உயரப் பறந்து செய்யும் சாகசங்களூம், நீரில் மூழ்கும் விதமும், மிகவும் கண்கவர் நிகழ்ச்சியாக அமைவதால் மக்களிடையே பெரிய வரவேற்பு கொண்ட ஒரு விளையாட்டு. இதில் -
1. 10 மீட்டர் மேடை - PLATFORM
2. 3 மீட்டர் ஸ்பிரிங் மேடை - SPRING BOARD
3. 10 மீட்டர் மேடை ஒருங்கிணைந்த மூழ்குதல் - SYNCHRONIZED DIVING
4. 3 மீட்டர் மேடை ஒருங்கிணைந்த மூழ்குதல் - SYNCHRONIZED DIVING
போன்ற போட்டிகள் நடத்தப்படுகிறது."
Q10. DIVING போட்டியில் புள்ளிகள் கணக்கிடும் முறை என்ன?
"நீரில், உயர மேடைகளிலிருந்து குதிக்கும்போது போட்டியில் விதிக்கப்பட்ட விதிகளின்படி, மேடையில் இருந்து நீரில் மூழ்குவதற்குள் உடலை சுற்றும் முறை, நீரில் மூழ்கும்போது உடலை வைத்துக் கொள்ளும் முறை, நீரில் மூழ்கும் தன்மை ( நீர் அதிகம் வெளியில் தெளிக்காமல்) போன்ற பல விஷயங்களை கணக்கில் கொண்டு புள்ளிகள் மதிப்பு செய்யப்படுகிறது.
ஒவ்வொரு வீரரும், ஒவ்வொரு போட்டி பிரிவிலும் (சுழற்சி முறையில்) 10 முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஒட்டு மொத்த புள்ளிகளின் அடிப்படையில் வெற்றியாளர் அறிவிக்கப்படும். ஒரு முயற்சிக்கு அதிகபட்ச புள்ளி - 10."
Q11. நீச்சல் போட்டியில் ஒலிம்பிக்கில் ஒட்டு மொத்தமாக அதிக தங்க பதக்கங்கள் வென்ற நாடு எது?
அமெரிக்கா.
Q12. அமெரிக்காவின் மிக்கேல் ஃபெல்ப்ஸ் (MICHAEL PHELPS) உலகின் மிகவும் புகழ்பெற்ற நீச்சல் வீரர் அவருடைய சாதனைகள் என்ன?
"1. ஒலிம்பிக்கின் எல்லா வகை நீச்சல் போட்டிகளிலும் - 18 தங்கம், 2 வெள்ளி, 2 செம்பு - மொத்தம் 22 பதக்கங்கள் வென்றுள்ளார்.
2. 2008 சீனா ஒலிம்பிக்கில் தனி நபராக, அணியாகவும் 8 தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார். (இவருக்கு முன்பு அமெரிக்காவின் மார்க்ஸ்பிட்ஸ், 1972 முனிச் ஒலிம்பிக்கில் 7 தங்க பதக்கங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது).
3. தனி நபராகவும் அணியாகவும் சேர்த்து 39 உலக சாதனைகள் படைத்துள்ளார். இவற்றுள் பெரும்பாலானவை இன்றும் முறியடிக்கப்படாமல் உள்ளது.
இவை தவிர்த்து ஏராளமான பதக்கங்கள், விருதுகள் பெற்றுள்ளார்."
Q13. "அமெரிக்க நீச்சல் வீரர் மிக்கேல் ஃபெல்ப்ஸ் அழைக்கப்படும் புனைப் பெயர்கள் என்ன?"
"1. THE BALTIMORE BULLET - பால்டிமோர் (அமெரிக்கா) அவரது சொந்த ஊர்.
2. FLYNG FISH."
Q14. நீச்சல் போட்டிகளை நிர்வகிக்கும் உலக சம்மேளனம் எது?
சர்வதேச நீச்சல் கூட்டமைப்பு - 1908 - லாசேன், ஸ்விட்சர்லாந்து தலைமையகம். நீரில் நட த்தப்படும் அனைத்துப் போட்டிகளையும் மேலாண்மை செய்கிறது. (INTERNATIONAL SWIMMING FEDERATION - FINA)