Khub.info Learn TNPSC exam and online pratice

மேசைப் பந்து - TABLE TENNIS

Q1. மேசைப் பந்து - TABLE TENNIS என்பது எவ்வகை விளையாட்டு?
ஒரு செவ்வக மேசையை இரு பகுதிகளாகப் பிரித்து, நடுவில் ஒரு வலை ( நெட்) நிறுத்தப்பட்டு, இரு பக்கமும் வீரர்/கள் நின்று கொண்டு, ஒரு பந்தை, வலைக்கு மேலாக, இருபக்கமும் ஒரு மட்டையால், சில விதிமுறைகளுக்குட்பட்டு, தட்டி விளையாடுவதே இந்த விளையாட்டு.

Q2. மேசைப் பந்து எங்கு தொடங்கியது, அதன் வளர்ச்சி பற்றி கூறுக.
1880 களில் இங்கிலாந்தில் தொடங்கி, 1899ல் ஜேம்ஸ் கிப் என்ற ஆங்கிலேயரால், எடை குறைவான செல்லுலாய்டு பந்துகள் கண்டு பிடிக்கப்பட்டு, 1903ல் மேசைப் பந்து மட்டையை குட்டே என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டு, 1926ல் சர்வ தேச மேசைப் பந்து சம்மேளனம் உருவாக்கப்பட்டு, 1927ல் லண்டனில் முதல் உலக சாம்பியன்ஷிப் நட த்தப்பட்டு, 1988ல் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்ட இன்று பல உலக நாடுகளில் விளையாடப்பட்டு வரும் ஒரு சுறுசுறுப்பான, வேகம் மிக்க விளையாட்டு.
Q3. மேசைப்பந்து முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?
பிங் பாங் PING PONG.
Q4. பிங் பாங் என்ற தொடருக்கு ஒரு உலக அரசியல் தொடர்பு உண்டு. அது என்ன?
1970 களில், சீனாவும் அமெரிக்காவும் மேசைப்பந்து வீர ர்களையும், போட்டிகளையும் பரிமாறிக் கொண்ட தால், இரு நாடுகளுக்கிடையே உறவு மேம்பாடு அடைந்தது. இதை PING PONG DIPLOMACY என அழைப்பார்கள். இதனால் அமெரிக்க குடியரசுத் தலைவர் ரிச்சர்டு நிக்ஸன் சீனாவுக்கு அரசியல் பயணம் செய்தார்.
Q5. மேசைப் பந்து விளையாட்டின் மேசையின் அளவு என்ன?
செவ்வக மேசை - 9 அடி (2.74மீ) நீளம், 5 அடி (1.525 மீ) அகலம். நீளத்தில் இரு அரை பகுதிகளாக பிரிக்கப்பட்டு, நடுவில் அகலவாக்கில் 6 அங்குல உயரத்தில் ஒரு வலை நிறுத்தப்பட்டு இருக்கும். பந்தை விளையாடும் பரப்பு தரையில் இருந்து 30 அங்குலம் / 76 செ.மீ. உயரத்திலிருக்கும். பொதுவாக மரத்தினாலும் அல்லது மேசனைட் (MASONITE) என்ற பொருளாலும் செய்யப்படும் விளையாடும் பகுதி.
Q6. மேசைப் பந்து விளையாட்டின் மட்டை (BAT) எவ்வாறு இருக்கும்?
மேசைப் பந்து விளையாட்டின் மட்டைகள் (PADDLE) மற்றும் RACQUETS எனவும் அழைக்கப்படுகிறது. இதன் விளையாடும் பகுதி ஒரு முட்டை வடிவம் (OVAL) கொண்டதாகவும், மரத்தினால் செய்யப்பட்டு, இருபுறமும் நுரைப் பஞ்சு அதன் மீது ரப்பரும் ஒட்டப்பட்டிருக்கும். மட்டையின் ஒரு புறம் சம பரப்பாகவும், மற்றொரு புறம் சிறு சிறு புள்ளிகள் கொண்ட தாகவும், ஒரு சிறிய கைப்பிடியும் இருக்கும். விளையாடும் பரப்பின் உயரம் 6.7 அங்குலம் (17 செ.மீ), அகலம் 5.9 அங்குலம் (15 செ.மீ)
Q7. மேசைப் பந்து விளையாட்டின் பந்து பற்றி கூறுக.
மேசைப் பந்து செல்லுலாயிட் என்ற வேதிப் பொருளால் (ப்ளாஸ்டிக்) செய்யப்பட்டது. இதன் விட்டம் 1.57 அங்குலம் / 40 மி.மீ. எடை 2.7 கிராம்.
Q8. மட்டையை பிடித்து ஆடுவதில் பிரபலமான பிடிகள் யாவை?
"1. பென்சில் பிடி (PENCIL GRIP),
2. கை குலுக்கும் பிடி (HAND SHAKE GRIP),"
Q9. மேசைப் பந்து ஆட்டப் புள்ளிகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
"மேசைப் பந்தில் ஒரு ஆட்டம் என்பது 11 புள்ளிகள் கொண்டது. ஒரு போட்டி, 3 அல்லது 5 ஆட்டங்களைக் கொண்டதாக இருக்கும். போட்டிகள் - தனி, இரட்டையர், ஆண் பெண் இரட்டையர் என நடத்தப்படும்.
2 புள்ளிகள் வித்தியாசத்தில், 11 புள்ளிகளை எடுக்கும் நபர் / இரட்டையர் வெற்றி அடைவார்."
Q10. மேசைப் பந்து ஆட்ட உலக சம்மேளனம் எது?
சர்வதேச மேசைப் பந்து கூட்டமைப்பு - INTERNATIONAL TABLE TENNIS FEDERATION - 1926 - லாசேன், ஸ்விட்சர்லாந்து தலைமையகம்.
Q11. மேசைப் பந்து விளையாட்டில் மிகவும் புகழ்பெற்ற நாடு எது?
சீனா.