Khub.info Learn TNPSC exam and online pratice

டென்னிஸ் -- TENNIS

Q1. டென்னிஸ் விளையாட்டு என்பது என்ன?
"ஒரு செவ்வக மைதானம், இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, இரு முனையிலிருந்தும் (பகுதிகள்) வீரர்/கள், ரப்பரால் ஆன ஒரு சிறிய பந்தை வலை பின்னப்பட்ட மட்டையின் உதவியுடன், நடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் வலையின் மேலாக ஒருவர் மாறி ஒருவர், பந்தை எதிரணி பகுதிக்கு, அடித்து விளையாடுவதே இந்த விளையாட்டு. இதில் போட்டிகள், ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என இரு பாலருக்கும் மூன்று பிரிவுகளில் நடத்தப்படுகிறது."

Q2. டென்னிஸ் விளையாட்டின் சரித்திரம் என்ன?
"TENEZ என்ற ஃப்ரெஞ்ச் வார்த்தையிலிருந்து உருவானதே TENNIS வார்த்தை. 13ம் நூற்றாண்டில், ஃப்ரெஞ்ச், ஆங்கிலேய மன்னர்களால் வெறும் கைகளால் ஆடப்பட்டு வந்த விளையாட்டு.
16ம் நூற்றாண்டில் மட்டைகள், பல நிலைகள், மேம்பாடுகள், விதிமுறைகள் என பரிமாணம் பெற்று 1877, முதன் முதலி, லண்டனில் விம்பிள்டன் போட்டி நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து 1881ல் அமெரிக்கா (தற்சமயம் அமெரிக்க ஓப்பன்), ஃப்ரான்ஸ் (ஃப்ரெஞ்ச் ஓப்பன்), 1905ல் ஆஸ்திரேலியா (ஆஸ்திரேலிய ஓப்பன்) என வளரத்தொடங்கியது.
193ல் சர்வதேச கூட்டமைப்பு லண்டனில் நிறுவப்பட்டு, 1924ல் ஒருங்கிணைந்த விதிமுறைகள் அமலுக்கு வந்து, 1988ல் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டு, தற்போது உலகின் பல நாடுகளில் விளையாடப்பட்டு வரும், மிகவும் புகழ் பெற்ற விளையாட்டு.
தொழில் ரீதியாக (professional), கால் பந்துக்கு பிறகு அதிகமாக விளையாடப்படும் விளையாட்டு.
"
Q3. டென்னிஸ் ஆடுகளத்தின் அளவுகள் என்ன?
"டென்னிஸ் ஆடுகளம் COURT என அழைக்கப்படுகிறது. செவ்வக மைதானம். இதன்
நீளம் ---- 78 அடி ஒற்றையர், இரட்டையர் இரு பாலருக்கும்.
அகலம் -- 1) 27 அடி ஒற்றையர் -- இரு பாலருக்கும்; 2) 36 அடி இரட்டையர் -- இரு பாலருக்கும்.
வலை ---- இரு முனைகளிலும் 3.5 அடி உயரம், நடுவில் 3 அடி உயரம். "
Q4. டென்னிஸ் பந்து அளவுகள் என்ன?
"தொடக்கத்திலிருந்து வெள்ளை நிற பந்துகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. 1986க்குப் பிறகு மஞ்சள் நிற பந்துகள் பயனுக்கு வந்துள்ளன.
ரப்பரால் செய்யப்பட்டு மேலே FUR (கம்பளி போன்ற) ஒட்டப்பட்டிருக்கும்.
பந்தின் விட்டம் --- 6.35 --> 6.67 செ.மீ
பந்தின் எடை --- 56.7 --> 58.5 கிராம்."
Q5. டென்னிஸ் மட்டையைப் பற்றி கூறுக
"முட்டை வடிவத்தில் பந்தை அடித்து விளையாடும் வலை பின்னப்பட்ட (guts -- எனப்படும் விலங்கு நரம்புகள் முன் பகுதி, நீண்ட கைப்பிடி, மொத்தமாக 27.5 அங்குல நீளமும், 255 முதல் 340 கிராம் வரை எடை கொண்டதாக இருக்கும். "
Q6. டென்னிஸ் விளையாட்டின் புள்ளிகள் (points) எவ்வாறு கணைக்கிடப்படுகிறது?
"ஒரு புள்ளி பெறுவதற்காக பந்தை அடித்து எதிரணி பக்கம் (வலைக்கும் மேலாக) அனுப்பும் தொடக்கம் சர்வீஸ்/சர்வ் (service/serve) எனப்படும்.
இந்த முறை ஒவ்வொரு புள்ளிக்கும் பிறகு, ஒரே நபரால், அந்த ஆட்டம் முடியும் வரை போடப்படும். அந்த பந்தை திருப்பி அனுப்ப முடியாமல் போகும் பட்சத்தில், 4 சர்வீஸ்களில் ஒரு ஆட்டம் (game) முடியும்.
ஆட்டத்தின் தன்மையைப் பொருத்து சர்வீஸ்களின் எண்ணிக்கை கூடும். நாங்கு சர்வீஸ்களில் ஒரு ஆட்டம் முடிவதாக வைத்துக்கொண்டால் புள்ளிகள் கீழ்க்கண்டவாறு அமையும்.
1. ஆரம்பம் -- 0 - 0 LOVE ALL
2. இரண்டாவது -- 15 -- 0 FIFTEEN LOVE
3. மூன்றாவது -- 30 -- 0 THIRTY LOVE
4. நான்காவது -- 40 - 0 FORTY LOVE -- game.
இந்த புள்ளிக் கணக்கு ஒரே வீரர்/அணி எல்லா சர்வீஸ் புள்ளிகளையும் வென்றதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதில் எதிர் வீரர்/அணி புள்ளிகள் எடுத்தால் இந்த கணக்கு மாறும். இவ்வாறு 6 ஆட்டங்கள் எடுத்தால் ஒரு செட் (SET) எனப்படும். ஒரு செட் வெற்றி பெற, ஒரு வீரர் அல்லது அணி, குறைந்த பட்சம் 2 ஆட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
உதாரணம் - சர்வீஸ் வீரர் வெற்றி பெற 6 - 4 என்ற கணக்கும்,
அதே சமயம் எதிர் வீரர் வெற்றி பெற்றால் இந்த கணக்கு 4 -6 என காண்பிக்கப்படும். பொதுவாக ஒரு போட்டி, ஆண்களுக்கு 5 செட், பெண்களுக்கு 3 செட் கொண்டதாகவும் இருக்கும். "
Q7. "டென்னிஸ் போட்டியின் சில முக்கியமான, அடிக்கடி பேசப்படும் வார்த்தைகள் யாவை?"
" 1. ACE: ஒரு வீரர் போடும் சர்வீஸ் எதிர் வீரரால் தொடக்கூட முடியாமல் போவது.
2. BACK HAND: பந்தை அடிக்கும் முறை. வலது கை ஆட்டக்காரருக்கு, இடது கைப் பக்கம் பந்து வரும் போது, வலது கையை இடது பக்கம் மடக்கி பந்தை அடித்து திருப்பும் முறை.
3. FOREHAND: பந்தை அடிக்கும் முறை. வலது கை வீரருக்கு வலது கைப் பக்கமே பந்து வரும்போது, அதை கைப்போக்கின் வாக்கிலேயே அடித்து திருப்பும் முறை.
4. BAGEL : 6 - 0 என்ற ஆட்ட கணக்கில் வெற்றி பெறுவது. 5. BREAK: பொதுவாக சவீஸ் போடும் வீரர்/அணி எந்த ஆட்டத்தை வெற்றி பெறுவார்கள் என்பது ஆட்டத்தின் போக்கு மற்றும் எதிர்பார்ப்பு. மாறாக எதிர் வீரர்/அணி வெற்றி பெறுவது BREAK POINT/GAME என்பார்கள்.
6. DOUBLE FAULT : சர்வீஸ் போடுபவர் ஒரு முறை தவறாக சர்வீஸ் போட்டால் மறு முறை போட அனுமதி உண்டு. இரு முறையும் தவறு செய்தால் அது இவ்வாறு அழைக்கப்படும்.
7. DEUCE : ஒரு ஆட்டத்தில் புள்ளி நிலை ( point/score) 40-40 ஆக இருப்பது.
8. ADVANTAGE : புள்ளி நிலை 40 - 40 ஆக இருக்கும் போது, ஒரு வீரர்/அணி ஒரு புள்ளி எடுத்தால், அது அந்த வீரர்/அணிக்கு சாதக நிலை என்பதை குறிக்கும். அந்த நிலையில் மீண்டும் சர்வீஸ் போட்டு வெற்றி பெற்றால் ஆட்டம் வென்றதாகும். வெற்றி பெறாவிட்டால், மீண்டும், சமநிலை, சாதக நிலை என ஆட்டம் தொடரும்.
9. GOLDEN SET : ஒரு புள்ளியும் இழக்காமல் ஒரு செட் வெற்றி பெறுவது.
10. GRAND SLAM : டென்னிஸ் விளையாட்டின் பெரிய போட்டிகளான விம்பிள்டன், அமெரிக்க, ஆஸ்திரேலிய, ஃப்ரெஞ்ச் ஓப்பன் போட்டிகளை ஒரே வருடத்தில் ஒரு வீரர்/அணி வெற்றி பெறுவது.
11. GOLDEN SLAM : GRAND SLAM போட்டிகளுடன் சேர்த்து ஒலிம்பிக் தங்க பதக்கத்தையும் வெல்வது.
12. LOVE GAME : எதிரணி ஒரு புள்ளி கூட எடுக்காமல் ஒரு ஆட்டத்தை (game) வெல்வது.
13. SERVICE GAME : ஒரு வீரர்/அணி தங்களது சர்வீஸ் போடும் போதே ஒரு ஆட்டத்தை (game) வெல்வது."
Q8. டென்னிஸ் விளையாட்டின் புகழ் பெற்ற பெரிய போட்டிகள் யாவை?
" 1. டேவிஸ் கோப்பை: 1900ல் ட்வைட் எஃப். டேவிஸ் என்பவரின் நிதி உதவி மற்றும் போட்டி வடிவமைப்பு/ஆலோசனை அடிப்படையில், ஆண்களுக்கு மட்டுமேயான, நாடுகளுக்கிடையே நடக்கும் ""தோல்வி வெளியேற்றம் - KNOCK OUT"" முறை போட்டி. இந்த கோப்பையை வடிவமைத்தவர் ரோலாண்ட் ரௌட்ஸ் என்பவர்.
2. ஃபெடரேஷன் கோப்பை: டேவிஸ் கோப்பை முறையிலான பெண்களுக்காக 1963 முதல் நடத்தப்படும் போட்டி. இந்த போட்டி தொடங்க மூலக்காரணமாயிருந்தவர் Hazel Hotchkiss Wightman என்ற இங்கிலாந்து பெண்மணி.
3. ஹாப்மேன் கோப்பை: 1989 முதல் கலப்பு இரட்டையர்களுக்காக மட்டுமே நடத்தப்படும் போட்டி. இப்பெயர் கொண்ட ஆஸ்திரேலிய வீரர் மற்றும் பயிற்சியாளர் நினைவாக, ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வருடந்தோறும் ஜனவரி மாதத்தில் நடத்தப்படுகிறது.
4. ஆஸ்திரேலிய ஓப்பன்: 1905ல் தொடங்கி வருடந்தோறும் ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடத்தப்படுகிறது.
டென்னிஸ் போட்டிகளில் இதுவும் ஒரு மிகவும் புகழ்மிக்க போட்டி. ஆண் வெற்றியாளருக்கு நார்மன் ப்ரூக்ஸ் கோப்பை, பெண்களுக்கு டாஃப்னே ஆக்ஹர்ஸ்ட் கோப்பையும், ரொக்க தொகை பரிசுகளும் வழங்கப்படுகிறது. GRAND SLAM போட்டியில் ஒரு அங்கம்.
5. ஃப்ரெஞ்ச் ஓப்பன்: 1925ல் தொடங்கி, ஃப்ரான்ஸ் பாரீஸ் நகரில் வருடந்தோறும் மே மாதம் நடத்தப்படும் போட்டி. GRAND SLAM போட்டியில் ஒரு அங்கம்.
6. விம்பிள்டன் : 1877 ல் தொடங்கப்பட்ட மிகப் பழமையான டென்னிஸ் போட்டி -- ஜூன்-ஜூலை மாதங்களில் வருடந்தோறும் நடத்தப்படுகிறது. ஆண்கள் ஒற்றையர் வெற்றியாளருக்கு ஜெண்டில்மேன் கோப்பையும், பெண்கள் ஒற்றையர் வெற்றியாளருக்கு வீனஸ் ரோஸ்வாட்டர் டிஷ் பரிசும் ரொக்கத் தொகை பரிசுகளும் உண்டு.
GRAND SLAM போட்டியில் ஒரு அங்கம்.
7. அமெரிக்க ஓப்பன்: 1881ல் தொடங்கி, ஆகஸ்ட்/செப்டம்பர் மாதங்களில் வரடந்தோறும் நியூயார்க் நகரில் நடத்தப்படும் போட்டி. GRAND SLAM போட்டியில் ஒரு அங்கம்.
மேலே சொல்லப்பட்ட 4, 5, 6, 7 போட்டிகள் அதே வரிசையில் வருடந்தோறும் ஒரு திருவிழா போல நடக்கிறது. இந்தப் போட்டிகளில், இரு பாலருக்கும், ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் நடத்தப்படுகிறது. "
Q9. "ஆஸ்திரேலிய, ஃப்ரெஞ்ச், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓப்பன் போட்டிகள் நடக்கும் ஆடுகளங்களின் பெயர்கள் யாவை?"
"1. ஆஸ்திரேலிய ஓப்பன் -- மெல்போர்ன் பார்க் - மெல்போர்ன்
2. ஃப்ரெஞ்ச் ஓப்பன் -- ரோலாண்ட் கேரோஸ் - பாரீஸ்
3. விம்பிள்டன் -- மத்திய ஆடுகளம் - லண்டன்
4. அமெரிக்க ஓப்பன் -- ஃப்ளஷிங் மெடோஸ், நியூயார்க். "
Q10. GRAND SLAM -- போட்டியை முதன் முதலாக வென்ற டென்னிஸ் வீரர் யார்?
ஜான் டொனால்ட் பட்ஜ் -- 1938 -- அமெரிக்கா.
Q11. இந்திய தந்தை-மகன், விம்பிள்டன் இளைஞர் போட்டியை வென்றவர்கள் யார்?
ராமநாத கிருஷ்ணன் - தந்தை - 1954;
ரமேஷ் கிருஷ்ணன் - மகன் - 1979.
Q12. "விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரை இறுதிச்சுற்று வரை முன்னேறிய ஒரே இந்திய வீரர் யார்?"
ராமநாத கிருஷ்ணன் 1956.
Q13. 1877ல் நடந்த முதல் விம்பிள்டன் போட்டியை வென்ற வீரர் யார்?
ஸ்பென்சர் கோர் -- இங்கிலாந்து - 1877.
Q14. விம்பிள்டன் ஒற்றையர் போட்டியை வென்ற முதல் பெண்மணி யார்?
மேட் வாட்சன் - இங்கிலாந்து -- 1884.
Q15. "விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் போட்டியை அதிக முறை வென்ற ஆண் வீரர்/கள் யார்?"
ரோஜர் ஃபெடரர், ஸ்விட்சர்லாந்து மற்றும் பீட் சாம்ப்ராஸ், அமெரிக்கா -- இருவரும் ஏழு முறைகள்.
Q16. "விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் போட்டியை அதிக முறை வென்ற பெண் வீராங்கனை யார்?"
மார்ட்டினா நவ்ரத்திலோவா - செக்/அமெரிக்கா - ஒன்பது முறை.
Q17. விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் போட்டியை வென்ற முதல் ரஷ்ய பெண்மணி யார்?
மரியா ஷரபோவா - 2004.
Q18. விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் போட்டியை வென்ற முதல் கருப்பு இன பெண்மணி யார்?
ஆல்தியா கிப்சன் - அமெரிக்கா - 1956
Q19. விம்பிள்டன் ஆண்கள் போட்டியில் பங்கு பெற்ற முதல் இந்தியர் யார்?
"விம்பிள்டனில் பங்கு கொண்டு விளையாடிய இந்தியவீரர் சர்தார் நிஹால் சிங் 1908 முதல் 1910 வரை மூன்று போட்டிகளில் கலந்து கொண்டார். (இவருக்கு முன்பாக பி.கே.நேரு - 1905 -- ஆனால் போட்டியில் விளையாடவில்லை). "
Q20. விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்ற ஒரே அண்ணன்-தங்கை ஜோடி யார்?
ஜான் ஆஸ்டின் & ட்ரேஸி ஆஸ்டின் - 1980 - இதுவரை இந்த சாதனை நிலைக்கிறது.
Q21. GRAND SLAM -- போட்டியை முதன் முதலாக வென்ற பெண் டென்னிஸ் வீரர் யார்?
மாரீன் கேத்தரின் கானலி - 1953. அமெரிக்கா
Q22. "விம்பிள்டன் ஒற்றையர் போட்டியை வெல்லும் ஆண் பெண் வீரர்களுக்கு அளிக்கப்படும் கோப்பை/ பரிசுகளின் பெயர் என்ன?"
"ஆண்: ஜெண்டில்மேன் ட்ராஃபி ( சேலஞ்ச் கோப்பை எனவும் கூறுவர்.)
பெண்: வீனஸ் ரோஸ் வாட்டர் டிஷ். "
Q23. "விம்பிள்டன் நடு களத்தில் கணினி கடிகார விளம்பர பலகை வைத்திருக்கும் பிரபல கைக்கடிகார நிறுவனம் எது?"
ரோலக்ஸ் -- ROLEX
Q24. விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஐந்து முறை தொடர்ந்து வென்ற முதல் வீரர் யார்?
பியோர்ன் பர்க் - Bjorn Borg -- ஸ்வீடன் -- 1976 முதல் 1980 வரை
Q25. விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் உலகிலேயே வெகு நேரம் விளையாடப்பட்ட போட்டி எது?
"2010ல் 22 முதல் 24 ஜூன் வரை நீடித்த -- 11 மணி, 5 நிமிடங்கள் - அமெரிக்காவின் ஜான் இஸ்னர் மற்றும் ஃப்ரான்ஸின் நிக்கோலஸ் மஹூத் இடையில் நடந்த போட்டி -- இன்று வரை சாதனையாக உள்ளது."
Q26. "விம்பிள்டன் போட்டி எப்போது முதல் தொழில் ரீதியான போட்டி ஆனது? அதைத் தொடர்ந்து முதன் முதலில் இப்போட்டியை வென்றவர் யார்?"
1967 . முதல் போட்டி 1968ல் நடந்தது. அதில் ஆஸ்திரேலிய வீரர் ராட் லேவர் வெற்றி பெற்றார்.
Q27. TIE BREAKER முறையில் வெற்றி தோல்வி நிச்சயிக்கப்படும் ஒரே GRAND SLAM டென்னிஸ் போட்டி எது?
அமெரிக்க ஓப்பன்
Q28. டென்னிஸ் என்ற வார்த்தை எவ்வாறு வந்தது?
"முதலில் இந்த விளையாட்டு SPHARISTIKE என அழைக்கப்பட்டது. பிறகு TENETZ என்ற ஃப்ரெஞ்ச் வார்த்தையிலிருந்து TENNIS என்ற பெயர் பெற்றது. "
Q29. GRAND SLAM போட்டியின் போது, பாதியிலியே வெளியேற்றம் செய்யப்பட்ட வீரர் யார், காரணம் என்ன?
"ஜான் மெக்கென்ரோ - அமெரிக்கா -- இவர் 1990ல் ஆஸ்திரேலிய ஓப்பன் விளையாட்டின் போது அவருக்கு எதிராக மைக்கேல் பென்ஃபோர்ஸ் என்பவருடன் விளையாடும் போது, மோசமான நடவடிக்கை மற்றும், எல்லை நடுவரின் முடிவை எதிர்த்து தகாத வார்த்தைகளால் திட்டியதின் காரணமாக விளையாட்டிலிருந்து நீக்கப்பட்டார்."
Q30. விம்பிள்டன் பழக்கத்தில் பெண் வீரர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு மரியாதை என்ன?
"பெண் வீரர்களின் பெயர்கள் அழைக்கப்படும் போது, பெயருக்கு முன்னால் Miss/Mrs அடைமொழி வைத்தே மரியாதை நிமித்தமாக அழைக்கப்படுவர். (ஆண்களுக்கு இந்த பிரத்தியேக மரியாதை அளிக்கப்படுவதில்லை.) "
Q31. டென்னிஸ் உலகத்தில் STRAWBERRY CIRCUIT என்று அழைக்கப்படும் போட்டிகள் எது?
இத்தாலியன் ஓப்பன், விம்பிள்டன் மற்றும் ஃப்ரெஞ்ச் ஓப்பன் போட்டிகள்.
Q32. "BATTLE OF SURFACES -- தரைபரப்பில் ஒரு போர்" என வர்ணிக்கப்படும் டென்னிஸ் போட்டி எது?
"2.5.2007ல் நடத்தப்பட்ட ஒரு பார்வையாளர் போட்டி (Exhibition Match). ஆடுகளத்தின் ஒரு பகுதி மண் (clay), மற்றொரு பகுதி (grass) புல் தரையாகவும் அமைக்கப்பட்ட போட்டி. இந்த போட்டி ரோஜர் ஃபெடரர் மற்றும் ரஃபேல் நாடால் -- க்கு இடையில் ஸ்பெயின் நாட்டின் மஜோர்கா நகரில் நடைபெற்றது. "
Q33. "GOLDEN SLAM என்ற அரிய டென்னிஸ் தொடர் போட்டிகளை வென்ற ஒரே பெண் டென்னிஸ் வீராங்கனை யார்? "
"ஸ்டெஃபி க்ராஃப் (ஜெர்மனி/அமெரிக்கா) -- இவர் 1988ல் ஆஸ்திரேலிய ஓப்பன், ஃப்ரெஞ்ச் ஓப்பன், விம்பிள்டன் அமெரிக்க ஓப்பன் மற்றும் ஒலிம்பிக் தங்க பதக்கம் ஆகிய அனைத்தையும் வென்ற ஒரே வீராங்கனை (வீரர்). "
Q34. "ஒரு டென்னிஸ் போட்டியை BEGEL என்று அழைக்கப்படும் -- ( 6-0 என்ற புள்ளி ) கணக்கில் வென்ற ஒரே வீரர் யார்?"
"செர்ஜி ப்ரூகேரா - ஸ்பெயின். 1993ல் நடந்த ஃப்ரெஞ்ச் ஓப்பன் போட்டியில், தியரி சேம்பியன் என்ற ஃப்ரெஞ்ச் வீரரை 6-0, 6-0, 6-0 என்ற கணக்கில் வென்றது ஒரு சாதனை. "
Q35. டேவிஸ் கோப்பையை ஆஸ்திரேலியர்கள் கிண்டலாக எவ்வாறு அழைப்பார்கள்?
SALAD BOWL
Q36. "1974ல் டேவிஸ் கோப்பையின் இறுதிச்சுற்றில் விளையாட தகுதி பெற்றும், விளையாடாமல் வெளியேறியது. காரணம் என்ன?"
எதிரணி தென் ஆப்பிரிக்கா. அவ்வமயம், தென் ஆப்பிரிக்கா நிறவெறி கொள்கையில் அரசாங்கம் நடத்தியதால்.
Q37. "இந்தியாவுக்காக, கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றது மட்டுமின்றி, டெஸ்ட் போட்டிகளின் நடுவராகவும் பணியாற்றியவர் யார்?"
C. ராமசாமி.
Q38. "எந்த ஒரு குறிப்பிட்ட டென்னிஸ் போட்டியின் காரணமாக TIE BREAKER என்ற வெற்றியை விரைவில் உறுதிச் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது?"
"1969 விம்பிள்டன் போட்டியில் பாஞ்சோ கன்ஸாலிஸ் மற்றும் சார்லஸ் பாஸரெல் இடையில் நடந்த ஒற்றையர் போட்டியின் ஒரு செட் 112 ஆட்டங்களுக்கு (games), இரண்டு நாட்களுக்கு நீடித்தது. இதன் பின்னணியிலேயே உருவானது தான் TIE BREAKER என்ற முறை. "
Q39. டென்னிஸ் போட்டியின் மிக வேகமான சர்வீஸ் எது?
" ஆண்: சாம் க்ராத், ஆஸ்திரேலியா - 263.4 கி.மீ - 2012 பூசான் ஓப்பன் சேலஞ்ச் போட்டி.
பெண்: சபின் லிசிக்கி - ஜெர்மனி - 210.8 கி.மீ -- ஸ்டான்ஃபோர்ட் க்ளாசிக் போட்டி."
Q40. "விம்பிள்டன் போட்டியின் போது, எதிராளி வீரர் மீது ஒரு முறைகேடைச் சுற்றிக் காட்டி, பாதியிலேயே போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறிய வீரர் யார்?"
"கில்லெர்மோ விலாஸ், அர்ஜெண்டினா வீரர். 1977ல் ஒரு போட்டியின் போது, இலி நஸ்டஸே என்ற வீரருடன் மோதும் போது,
அவர் தனது மட்டையில் தவறான நார் பின்னல்கள் போட்டிருந்ததை சுட்டிக்காட்டி, எதிர்ப்பு தெரிவித்து போட்டியை விட்டு வெளியேறினார். "
Q41. "உலகின் மிகவும் புகழ் பெற்ற ஒரு பெண் வீராங்கனையை, ஒரு பார்வையாளர் முதுகில் கத்தியால் குத்தியது, ஒரு துயர நிகழ்ச்சி. அது என்ன?"
"மோனிகா செலஸ் - யூகோஸ்லேவிய அமெரிக்கர். 30.4.1993 அன்று ஹாம்பர்க் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும் போது, கந்த்தர் பார்ச் (Gunther Paarch) என்ற பார்வையாளர் தன்னுடைய சொந்த காரணங்களுக்காக, மோனிகாவின் முதுகில் கத்தியால் குத்தினார். அப்போது அவருடைய எதிர் வீரர் மடேலீனா மலீவா."
Q42. "GRAND SLAM என்றழைக்கப்படும் போட்டிகளை அதிக முறை வென்ற டென்னிஸ் வீரர்/வீராங்கனை யார்?"
"ரோஜர் ஃபெடரர், ஸ்விட்சர்லாந்து -- 17 க்ராண்ட் ஸ்லாம் போட்டிகள்.
மார்கரெட் கோர்ட், ஆஸ்திரேலியா -- 22 க்ராண்ட் ஸ்லாம் போட்டிகள்"
Q43. விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் தர வரிசையில் இடம் பெற்ற முதல் இந்திய வீரர் யார்?
திலீப் போஸ் -- 1950 -- 15வது இடம்.
Q44. "விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் வெற்றியாளருக்கு அளிக்கப்படும் கோப்பையின் மேல் வைக்கப்பட்டு இருக்கும் பழம் என்ன?"
அன்னாசிப்பழம் -- PINE APPLE
Q45. விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் போட்டியை தொடர்ந்து 6 முறை வென்ற வீராங்கனை யார்?
மார்ட்டினா நவ்ரத்திலோவா - செக்/அமெரிக்கா - ஆறு முறை -- 1983 முதல் 1987 வரை.
Q46. டோரிஸ் ஹார்ட் என்ற அமெரிக்க வீராங்கனையின் டென்னிஸ் சாதனை என்ன?
"1953ல், ஒரே நாளில், ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் வெற்றிகள் பெற்று சாதனை படைத்துள்ளார். "
Q47. டென்னிஸ் விளையாட்டுக்கும், தமிழ் நாட்டின் சேலம் ஸ்டீல் தொழிற்சாலைக்கும் என்ன சம்பந்தம்?
"ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள ராட் லேவர் மற்றும் வோடாஃபோன் ஆடுகளத்திற்கு போடப்பட்டுள்ள நகரும் கூரைகளுக்கு, இந்த தொழிசாலையில் தயாரிக்கப்பட்ட பிரத்தியேக ஸ்டீல் தகடுகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. "
Q48. "லஞ்சம் பெற்றதற்காக, தொழில்துறை டென்னிஸ் வீரர்கள் சங்கத்தால் விளையாட்டிலிருந்து நீக்கம் மற்றும் தண்டனை அளிக்கப்பட்ட ஒரே வீரர் யார்?"
அலெஸியோ டி மௌரோ - இத்தாலி.
Q49. "BARCELONA BUMBLEBEE" என்ற பட்டப்பெயர் கொண்ட டென்னிஸ் வீராங்கனை யார்?
அரண்ட்க்ஷா சாஞ்செஸ் விகாரியோ, ஸ்பெயின்.
Q50. "CAREER BOXED SET" என்ற டென்னிஸ் தொடரின் அர்த்தம் என்ன?
"GRAND SLAM என அழைக்கப்படும், ஆஸ்திரேலிய ஓப்பன், ஃப்ரெஞ்ச் ஓப்பன், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓப்பன் போட்டிகளில், ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகள் அனைத்தையும் வெல்ல வேண்டும்.
இந்த வெற்றிகள் ஒரே வருடத்தில் நடக்க வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு வென்றவர்கள்:
1. டோரிஸ் ஹார்ட், அமெரிக்கா
2. மார்கரெட் கோர்ட், ஆஸ்திரேலியா
3. மார்ட்டினா நவ்ரத்திலோவா, செக்/அமெரிக்கா. "
Q51. "ஊக்க மருந்து பயன்படுத்தியதற்காக விம்பிள்டன் போட்டியில் இருந்து நீக்கப்பட்டு தண்டனை பெற்ற வீரர் யார்?"
பீட்டர் கோர்டா, செக்கோஸ்லோவாக்கியா, 1998.
Q52. விம்பிள்டன் போட்டியின் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்ற மூத்த ஆண்/பெண் வீரர்கள் யார்?
" ஆண்: ஆர்த்தர் கோர் -- இங்கிலாந்து -- 1909 -- 41 வருடங்கள்
பெண்: செரினா வில்லியம்ஸ் -- அமெரிக்கா -- 1990 -- 33 வருடங்கள் 289 நாட்கள்."
Q53. GRAND SLAM என்ற தொடரில் அடங்கியுள்ள போட்டிகள் யாவை?
ஆஸ்திரேலிய ஓப்பன், ஃப்ரெஞ்ச் ஓப்பன், விம்பிள்டன், அமெரிக்க ஓப்பன்.
Q54. "GRAND SLAM போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் தங்க பதக்கத்தையும் வென்ற ஒரே ஆண் டென்னிஸ் வீரர் யார்?"
ஆன்றே அகஸ்ஸி -- அமெரிக்கா. (வெவ்வேறு வருடங்களில் வென்றதால், இது GOLDEN SLAM வகையில் சேராது)
Q55. CAREER GRAND SLAM -- என்பது என்ன?
ஒரு டென்னிஸ் வீரர் அவருடைய விளையாடும் வெவ்வேறு காலக்கட்டத்தில், GRAND SLAM போட்டிகளை வெல்வது.
Q56. "டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகளின் இறுதிப்போட்டியில் அதிக முறை பங்கேற்ற வீரர் யார்?"
பில் டெல்டன் - அமெரிக்கா -- 11 முறை.
Q57. டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகளில் தொடராக அதிக முறை வென்றவர் யார்?
பியொர்ன் பர்க் - Bjorn Borg -- ஸ்வீடன் -- 33 போட்டிகள்.
Q58. தொழில் ரீதியான டென்னிஸ் வீரர்கள் சங்கம் -- Association of Tennis Professional (ATP) நிறுவியவர் யார்?
ஜான் ஆல்பர்ட் க்ரேமர் -- அமெரிக்கா -- 1972ல் நிறுவினார்.
Q59. "GRAND SLAM ன் நான்கு போட்டிகளிலும், ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் வென்ற ஒரே வீரர் யார்?"
ராய் எமர்சன் - ஆஸ்திரேலியா.
Q60. "ஆடுவதற்கு மட்டைகள் இல்லாமல், ஆட்டத்தை விட்டு வெளியேறிய துரதிருஷ்ட டென்னிஸ் வீரர் யார்?"
"கோரன் ஐவனிசெவிக் - GORAN IVANISEVIC -- க்ரோஷியா -- 2000ல் சாம்சங் போட்டியின் போது, கொணர்ந்த அனைத்து மட்டைகளையும் உடைத்து விட்டார். "
Q61. டென்னிஸ் போட்டிகளில் எத்தனை நடுவர்கள் இருப்பார்கள்?
13. -- எல்லைக்கோடுகள் நடுவர்கள் -- 10;
வலை நடுவர் -- 1;
கால் பதிவு நடுவர் -- 1;
முக்கிய நடுவர் -- 1.
Q62. டென்னிஸ் விளையாட்டை நிர்வகிக்கும் சர்வதேச அமைப்பு எது?
"சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு -- International Tennis Federation -- 1913 -- லண்டன் தலைமையகம் -- சுமார் 210 நாட்டு அமைப்புகள் உறுப்பினர்களாக உள்ளனர்."