Khub.info Learn TNPSC exam and online pratice

வாலி பால் -- VOLLEYBALL

Q1. வாலிபால் விளையாட்டு முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?
MINTONETTE

Q2. வாலிபால் விளையாட்டை வடிவமைத்து அறிமுகப்படுத்தியவர் யார்?
வில்லியம் ஜி. மார்கன், அமெரிக்கா
Q3. வாலிபால் என்பது எவ்வகை விளையாட்டு?
"ஒரு பந்துடன், கையால், ஒரு செவ்வக ஆடுகளத்தின் இரு பகுதிகளுக்கும், இரு அணிகள், தட்டி விளையாடுவதே இந்த விளையாட்டு. கைகளால் மட்டுமே, களத்தின் நடுவில் உயரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் வலைக்கு மேலாக விளையாடப்படும் ஒரு அணி விளையாட்டு. இரு பாலருக்கும் உண்டான ஒரு விளையாட்டு. ஆடுகளம் COURT என்று அழைக்கப்படுகிறது."
Q4. வாலிபால் ஆடுகளம் மற்றும் வலையின் அளவுகள் என்ன?
" ஆடுகளம்: 18 மீ நீளம் X 9 மீ அகல செவ்வகம். இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு - அதாவது 9 X 9 மீ சதுர பகுதிகளாக பிரிக்கப்பட்டு, நீளவாக்கின் நடுவில் இருபக்கங்களிலும் இரண்டு கொம்புகள் நடப்பட்டு அதில் ஒரு வலை கட்டப்பட்டு இருக்கும்.
வலை: நீளவாக்கில் 9வது மீட்டரில் இரு முனைகளிலும் உயரக் கொம்புகள் நிறுத்தப்பட்டு, தரையிலிருந்து 2.43 மீ (7.97 அடி) உயரத்தில் ஆண்களுக்கும், 2.24 மீ (7.34 அடி) உயரத்தில் பெண்களுக்கும், வலை கட்டப்பட்டு இருக்கும்.
வலையின் அகலம் 1 மீட்டர். இதைத் தவிர்த்து, களத்தின் எல்லைக்கு வெளியில் 3.5 மீ வரை, பந்தை தடுத்து, எடுத்து ஆடுவதற்குமான அனுமதிக்கப்- பட்ட ஆடுகளமாகிறது."
Q5. வாலிபால் விளையாட்டின் ஒரு அணியில் எத்தனை பேர் பங்கு பெறுவார்கள்?
ஆறு.
Q6. வாலிபால் பந்தின் அளவு என்ன?
சிந்தெடிக் ரப்பரால் ஆன ஒரு பந்து. அழுத்தப்பட்ட காற்று நிரப்பப்பட்டிருக்கும். சுற்றளவு -- 65 முதல் 67 செ.மீ.
Q7. வாலிபால் விளையாட்டு முறையைப் பற்றி கூறுக.
"இரு அணிகளில் ஒரு அணி வீரர் பந்தை, வலைக்கும் மேலாக, எதிரணிக்கு அனுப்புவார். அந்த பந்தை பெறும் அணி, கைகளாலேயே, மூன்று முயற்சிகளில் திரும்ப அனுப்ப வேண்டும். பந்து எடுக்க/தடுக்க முடியாத ஒரு நிலை, அல்லது, களத்தை விட்டு வெளியில் சென்று விடும் வரை இந்த பரிமாற்றம் தொடரும். தவறு செய்த அணியின் எதிரணிக்கு ஒரு புள்ளி வழங்கப்படும்.
இவ்வாறு, ஒரு ஆட்டம் (game), 25 புள்ளிகளை, 2 புள்ளிகள் வித்தியாசத்தில், முதலில் எடுக்கும் அணி, அந்த ஆட்டத்தை வென்றதாகும். ஒரு போட்டியில், பொதுவாக, ஆண்களுக்கு 5 ஆட்டங்கள், பெண்களுக்கு 3 (அ) 5 ஆட்டங்கள் கொண்டதாக இருக்கும்.
"
Q8. "வாலிபால் விளையாட்டின் வர்ணனையின் போது நாம் அதிகமாக கேட்கும் ஆங்கில தொடர்களும் அவற்றின் விளக்கங்களும்: "
" 1. SERVICE/SERVE: ஆட்டத்தின்/புள்ளியின் தொடக்கத்திலும், பந்தை ஒரே தட்டில், வலைக்கு மேலாக, எதிரணி பகுதிக்கு அனுப்புவது.
2. ACE: மேலே சொன்னபடி, சர்வீஸ் மூலம் அனுப்பப்பட்ட பந்தை தடுக்க/எடுக்க முடியாமல் போவது. இந்த தொடர், டென்னிஸ், பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகளுக்கும் பொருந்தும்.
3. DIP/DINK/CHEAT: ஒரு வீரரால் பந்து உயரே தூக்கி போடப்பட்டு, மற்றொரு வீரர் அதை அடிப்பது போல உயரே குதித்து நடித்து நகர்ந்து கொள்ள வேறொரு வீரர் அதை அடித்து எதிரணி பக்கம் அனுப்புவது.
4. HAMMER: பந்தை மிகுந்த வேகத்துடன், ஆணி அடிப்பது போல அடிப்பது.
5. JUMP FLOAT: சர்வீஸ் போடுவதற்கு பந்தை மேலே தூக்கிப் போட்டு, அந்த வீரரும் உயரே குதித்து பந்தை அடித்து எதிரணிக்கு அனுப்புவது. இது அனுபவத்தினால் வரும் கலை. இதை jump serve எனவும் கூறலாம்.
6. KILL : ஒரு அணி வீரர், பந்தை மிகுந்த வேகத்துடன், எதிரணி பகுதிக்குள், செங்குத்தாக உள்ளிறக்கி அடித்து, அதை எதிரணி தடுக்க/எடுக்க முடியாமல் போவது.
7. LIBERO : அணியிலுள்ள ஆறு வீரர்களில் ஒருவர். இவருக்கு எந்த ஒரு குறிப்பிட்ட விளையாட்டு பகுதியும் ஒதுக்கப்படாமல், சுதந்திரமாக எல்லா விதமான விளையாட்டின் தகுதிகளையும் பெற்றவராக விளையாடுவார். "
Q9. வாலிபால் விளையாட்டின் உலகின் உயர்ந்த போட்டிகள் யாவை?
" 1. உலக சாம்பியன்ஷிப்: WORLD CHAMPIONSHIP -- 1949 முதல் ஆண்களுக்கும், 1952 முதல் பெண்களுக்கும், 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் போட்டி.
2. ஒலிம்பிக்: 1964 முதல் ஆண்/பெண் இரு பாலருக்கும் 4 ஆண்டுகளுக்கொரு முறை நடத்தப்படும் போட்டி.
இதைத் தவிர்த்து ஆசிய, சார்க் நாடுகள் என பல போட்டிகளும் நடக்கிறது."
Q10. வாலிபால் விளையாட்டை நிர்வகிக்கும் சர்வதேச அமைப்பு எது?
"சர்வதேச வாலிபால் கூட்டமைப்பு - International Volley Ball Federation -- 1947ல் உருவாக்கப்பட்டு, லாசேன், ஸிவிட்சர்லாந்து தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது.
இந்தியாவில், இந்திய வாலிபால் கூட்டமைப்பு -- Indian Volleyball Federation 1951ல் தொடங்கப்பட்டு இயங்கிவருகிறது. "