Khub.info Learn TNPSC exam and online pratice

பளு தூக்குதல் -- WEIGHT LIFTING:

Q1. பளு தூக்குதல் என்பது எவ்வகைப் போட்டி?
"இது ஒரு தனி மனிதர் போட்டி. ஒரு போட்டியாளர் தனது வலிமையினால், ஒரு உருளை இரும்பு கம்பியின் இரு முனைகளிலும் ஏற்றப்படும் எடை உருளைகளை, சில விதி முறைகளின் அடிப்படையில் தூக்குவதே இந்த போட்டி. இதில் ஆண், பெண் இரு பாலரும் பங்கேற்கின்றனர்."

Q2. பளு தூக்குதலில் எத்தனை வகைகள் உண்டு?
"1. SNATCH: போட்டியின் தகுதிப்பிரிவுக்கேற்ப, முன் கூட்டியே ஏற்றி வைக்கப்பட்டிருக்கு பளுவை, நின்றபடியே குனிந்து, பளுவை தடங்கல் (உடல் அசைவு) ஏதுமின்றி, மார்பின் மேல் (கழுத்தின் கீழ்) நிறுத்தி, அடுத்த முயற்சியாக, தலைக்கு மேல் தூக்கி நிறுத்தி (உடல் அசைவின்றி) குறிப்பிட்ட வினாடிகள் நிற்க வேண்டும்.
2. CLEAN AND JERK: ஒரு வீரர், குறிப்பிட்ட பளுவை, தரையிலிருந்து தூக்கி, ஒரு கால் பின் நிற்க, மற்றொரு கால் முன்பக்கம் மடித்த நிலையில், கழுத்தளவுக்கு தூக்கி, பிறகு இரு காலகளையும் சேர்த்து நின்று, பளுவை தலைக்கு மேல் தூக்கி நிறுத்த வேண்டும். கடினமான உழைப்பும் பயிற்சியும் தேவை.
ஒவ்வொரு வீரருக்கும் 3 முயற்சிகளும், ஒவ்வொரு முயற்சிக்குப் பிறகு, ஒரு கிலோ எடை கூடுதலும் செய்யப்படும்.
அதிக எடையை, குறைந்த முயற்சிகளில் தூக்கியவர் வெற்றி பெற்றவராக கருதப்படுவார். உலகின் பெரிய போட்டிகளில் இந்த இரண்டு வகைப் போட்டிகள் மட்டுமே நடத்தப்படுகிறது. "
Q3. பளு தூக்குதலில் உள்ள போட்டி பிரிவுகள் யாவை?
"பளு தூக்குதல் (குத்துச்சண்டை, மல்யுத்தம் போன்றவைகளிலும்) போட்டியில் வீரர்களின் உடல் எடையைக் கருத்தில் கொண்டு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆண்கள் பிரிவுகள்:
1. Super Heavy Weight: + 105 Kg.
2. Heavy Weight -- 94 -- 105 Kg
3. Middle Heavy Weight -- 85 -- 94 Kg
4. Light Heavy Weight -- 77 -- 85 Kg
5. Middle Weight -- 69 -- 77 Kg
6. Light Weight -- 62 -- 69 Kg
7. Feather Weight -- 56 -- 62 Kg
8. Bantam Weight -56 Kg.
பெண்கள் பிரிவுகள்: + 75 Kg., 75 Kg., 69 Kg., 63 Kg., 58 Kg., 53 Kg., 48 Kg.,
"
Q4. பளு தூக்குதலில் உலக நாடுகளுக்கிடையே நடத்தப்படும் போட்டிகள் யாவை?
"1. ஒலிம்பிக் -- ஆண்களுக்கு -- 1896, 1904 பிறகு 1920லிருந்து தொடர்ச்சியாக. பெண்களுக்கு -- 2000 சிட்னி ஒலிம்பிக்ஸிலிருந்து.
2. உலக சாம்பியன்ஷிப் -- ஆண்களுக்கு 1891 ல் முதல் போட்டியும், பெண்களுக்கு 1987ல் முதல் போட்டியும் நடத்தப்பட்டது.
3. ஆசிய போட்டிகள்: 1951ல் இருந்து சேர்க்கப்பட்டுள்ளது.
4. காமன்வெல்த் விளையாட்டுகள்."
Q5. பளு தூக்குதல் போட்டியை நிர்வகிக்கும் உலக அமைப்பு எது?
சர்வதே பளுதூக்குதல் கூட்டமைப்பு -- International Weight Lifting Federation -- 1905 -- புடாபெஸ்ட், ஹங்கேரி இதன் தலைமையகம்.
Q6. பளு தூக்குதலில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீரர் யார் (2015 நிலையில்)?
கர்ணம் மல்லேஸ்வரி -- 2000 - சிட்னி, ஆஸ்திரேலியா ஒலிம்பிக் - வெண்கலம்.
Q7. பளு தூக்குதல் எந்த நாட்டின் தேசிய விளையாட்டு?
பல்கேரியா.
Q8. பளு தூக்குதல் போட்டியில் ஒலிம்பிக்கில் அதிக தங்க பதக்கங்கள் வென்றுள்ள நாடு எது?
ரஷ்யா. (2015 நிலையில்)
Q9. பளு தூக்குதல் போட்டிகளில் முன்னணி நாடுகள் எவை?
பல்கேரியா, ரொமானியா, ரஷ்யா, சீனா.