Khub.info Learn TNPSC exam and online pratice

மல்யுத்தம் - WRESTLING

Q1. மல்யுத்தம் போட்டி என்பது என்ன?
"ஒரு புராதனக்கலை - தனி மனிதர் போட்டி -- ஒரு வீரர் மற்றொரு வீரரை கைகளால் மடக்கிப்பிடித்து, தரைப்படுத்தி, அசையாவண்ணம் அமுக்கிப்பிடித்துக் கொள்வதே இந்த விளையாட்டு. "

Q2. மல்யுத்த போட்டிகளில் எத்தனை வகை உண்டு?
1. க்ரீக்கோ ரோமன் Greco Roman
2. ஃப்ரீ ஸ்டைல் Free Style
Q3. மல்யுத்த போட்டியில் உடல் எடை அடிப்படைகள் என்ன பிரிவுகள் உள்ளன?
" ஆண்:
1. Bantam Weight -- -57 Kg
2. Light Weight -- 58 --> 64 Kg.
3. Welter Weight -- 65 --> 73 Kg.
4. Middle Weight -- 74 --> 85 Kg.
5. Heavy Weight -- 86 --> 96 Kg.
6. Super Heavy Weight -- 98 --> 125 Kg.
பெண்:
1. Fly Weight -- -48 Kg
2. Bantam Weight -- 48 --> 52 Kg
3. Welter Weight -- 53 --> 57 Kg
4. Light Heavy Weight -- 58 --> 68 Kg
5. Heavy Weight -- 69 --> 75 Kg. "
Q4. மல்யுத்தப் போட்டியின் நேரம் எவ்வளவு?
2 நிமிடமாக 3 போட்டிகள். இதில் இரண்டு போட்டிகளை வெல்பவர் வெற்றியடைகிறார்.
Q5. மல்யுத்தப் போட்டிகளின் முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன?
" 1. WIN BY FALL : ஒரு வீரர், மற்றொரு வீரரை அவரின் முதுகின் இரு பக்க தோள் பட்டைகளும் தரையில் படும்படியாக அமுக்கி பிடித்துக் கொள்வது.
2. WIN BY TECHNICAL FALL : மல்யுத்த வீரர்கள் ஒவ்வொரு பிடி, மடக்கிப் பிடித்தல் போன்ற ஒவ்வொறு முயற்சிக்கும் புள்ளிகள் வழங்கும் முறை உள்ளது. அதன் அடிப்படையில், விளையாட்டின் எந்த நேரத்திலும், எதிர் வீரரை விட 6 புள்ளிகள் அதிகம் எடுத்து விட்டால், போட்டி முடிந்ததாக கருதப்பட்டு, அதிக புள்ளிகள் எடுத்தவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
3. WIN BY DECISION: (1) மற்றும் (2) விதிகளின் அடிப்படைய்;இல் வெற்றி உறுதிப்படுத்த முடியாத நிலையில், போட்டியின் நேரம் முடிவடையும் பட்சத்தில், அதிக புள்ளிகள் எடுத்தவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். "
Q6. மல்யுத்தப் போட்டிகளில் எத்தனை நடுவர்கள் இருப்பார்கள்?
மூன்று.
Q7. மல்யுத்தப் போட்டிகளை நிர்வகிக்கும் சர்வதேச நிறுவனம் எது?
சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு -- International Wrestling Federation -- 1905 -- புடாபெஸ்ட், ஹங்கேரி.
Q8. மல்யுத்தப் போட்டிகளில் உலகப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்கள் யாவர்?
"1. கஷாபா தாதாசாஹேப் ஜாதவ் -- 1952 -- ஹெல்சிங்க்கி ஒலிம்பிக்ஸ் - வெண்கலம்
2. சுஷில் குமார் -- 2008 -- பெய்ஜிங் ஒலிம்பிக் -- வெண்கலம்
3. சுஷில் குமார் -- 2012 -- லண்டன் ஒலிம்பிக் -- வெள்ளி
4. யோகேஷ்வர் தத் -- 2012 -- லண்டன் ஒலிம்பிக் -- வெண்கலம்
5. தாரா சிங் -- 1968 -- உலக சாம்பியன்ஷிப் போட்டி வென்றுள்ளார். "