Khub.info Learn TNPSC exam and online pratice

விளையாட்டு விருதுகள் -- SPORTING AWARDS

Q1. விளையாட்டு விருதுகள்
"இந்தியாவிலும், உலக அளவிலும் விளையாட்டு வீரர்களுக்கு பல விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தந்த விளையாட்டின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. அவை தவிர்த்து, பல தனியான விருதுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் சில முக்கியமானவை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. "

இந்தியா:

Q2.
அர்ஜூனா விருது: ARJUNA AWARD
"1961ல், இந்திய அரசாங்கத்தின் இளைஞர்கள் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் நிறுவப்பட்ட விருது. பல விளையாட்டுத் துறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் வீரருக்கு/வீரர்களுக்கு, ஒரு அர்ஜூனர் வெண்கல சிலை, ஒரு சான்றிதழ் மற்றும் ரூபாய் 5 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும். தொடக்கத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் பெற்றிருக்கின்றனர். இந்த விருதைப் பெற்றவர்கள் பட்டியல் மிகப் பெரியது. ஆகவே 2015ல் இந்த விருதைப் பெற்றவர்கள் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது."

Q3. அர்ஜூனா விருது: 2015:
"எண் பெயர் விளையாட்டு
1. சந்தீப் குமார் வில் அம்பு
2. எம்.ஆர்.பூவம்மா தடகளம்
3. கே. ஸ்ரீகாந்த் பேட்மிண்டன்
4. மந்தீப் ஜங்ரா குத்துச்சண்டை
5. ரோஹித் சர்மா கிரிக்கெட்
6. தீபா கர்மாகர் ஜிம்னாஸ்டிக்ஸ்
7. பி.ஆர். ஸ்ரீஜேஷ் ஹாக்கி
8. மஞ்ஜீத் சில்லார் கபடி
9. அபிலாசா சசிகாந்த் மாத்ரே கபடி
10. சவர்ன் சிங் படகுப் போட்டி
11. ஜீத்து ராய் துப்பாக்கி சுடுதல்
12. பஜ்ரங் மல்யுத்தம்
13. சத்தீஷ் குமார் பளு தூக்குதல்
14. பபிதா குமாரி மல்யுத்தம்
15. யும்நம் சனத்தோய் தேவி வுஷூ (தற்காப்பு)
16. ஷரத் காயக்வாட் (உடல் ஊனம்) நீச்சல் "
Q4. அர்ஜூனா விருது பெற்ற முதல் ஆண், பெண் விளையாட்டு வீரர்கள் யார்?
"ஆண்: குர்பச்சன் சிங் ரந்தாவா - தடகளம் -- 1961
பெண்: ஸ்டெஃபி டி சௌசா - தடகளம் -- 1963 -- இவர் இந்தியாவுக்காக ஹாக்கியும் விளையாடியவர்."

Q5. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது:
"நம் நாட்டின் உயர்ந்த விளையாட்டு விருது. இந்திய அரசாங்கத்தின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறையால் வழங்கப்படுகிறது. ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் 7.5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது. இந்த விருது 1991-1992 முதல் நாட்டின் உயரிய விளையாட்டு வீரர், ஒருவர் அல்லது இருவருக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதை பெற்றவர்கள்:"
Q6. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது:
"எண் வருடம் பெயர்விளையாட்டு
1 . 1991-92 விஸ்வநாதன் ஆனந்த் சதுரங்கம்
2. 1992-93 கீத் சேத்தி பில்லியார்ட்ஸ்
3. 1994-95 ஹோமி மோத்திவாலா & பி.கே.கர்க் படகுப் போட்டி
4. 1995-96 கர்ணம் மல்லேஸ்வரி பளு தூக்குதல்
5. 1996-97 லியாண்டர் பயஸ் டென்னிஸ்
6. குஞ்சாராணி பளு தூக்குதல்
7. 1998-99 ஜோதிர்மாய் சிக்தார் தடகளம்
8. 1999-2000 தன்ராஜ் பிள்ளை ஹாக்கி
9. 2000-01 புல்லேலா கோபிசந்த் பேட்மிண்டன்
10. 2001-02 அபினவ் பிந்த்ரா துப்பாக்கி சூடு
11. 2002-03 அஞ்சலி வேத்பத்தாக் துப்பாக்கி சூடு
12. 2002-03 பீனா மோல் தடகளம்
13. 2003-04 அஞ்சு பாபி ஜார்ஜ் தடகளம்
14. 2004-05 ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் துப்பாக்கி சூடு
15. 2005-06 பங்கஜ் அத்வானி பில்லியார்ட்ஸ்
16. 2006-07 மானவ்ஜித் சிங் சாந்து துப்பாக்கி சூடு
17. 2007-08 மகேந்திர சிங்க் தோனி கிரிக்கெட்
18. 2008-09 மேரி கோம் குத்துச்சண்டை
19. 2008-09 விஜேந்தர் சிங் குத்துச்சண்டை
20. 2010-11 சுஷில் குமார் மல்யுத்தம்
21. 2019-10 சாய்னா நெஹ்வால் பேட்மிண்டன்
22. 2010-11 ககன் நரங் துப்பாக்கி சூடு
23. 2011-12 விஜய் குமார் துப்பாக்கி சூடு
24. 2011-12 யோகேஷ்வர் தத் மல்யுத்தம்
25. 2012-13 ரஞ்ஜன் சோதி துப்பாக்கி சூடு
26. 2014-15 சானியா மிர்ஸா டென்னிஸ்"
Q7.
துரோணாச்சார்யா விருது: DRONACHAARYA AWARD
"1985 முதல் இந்திய அரசாங்கத்தின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறையால், நாட்டின் தலை சிறந்த விளையாட்டுப் பயிற்சியாளர் ஒருவருக்கு அளிக்கப்படும் விருது. வெண்கல துரோணாச்சாரியார்/அர்ஜூனர் சிலை, ஒரு சான்றிதழ், மற்றும் ஐந்து லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது. இந்த விருதைப் பெற்ற முதல் மற்றும் சமீப விற்றியாளர்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
1985:
1. O.M. நம்பியார் -- தடகளம் -- P.T.உஷாவின் பயிற்சியாளர்
2. ஓம் ப்ரகாஷ் பரத்வாஜ் -- குத்துச்சண்டை
3. B.B. பகவத் -- மல்யுத்தம்
2015:
1. அனூப் சிங் -- மல்யுத்தம்
2. நவல் சிங் -- தடகளம் (உடல் ஊனமுற்றோர்)
3. ஹர்பன்ஸ் சிங் -- தடகளம்
4. ஸ்வதந்த்ர ராஜ் சிங் -- குத்துச்சண்டை
5. நிஹார் அமீன் -- நீச்சல் "

Q8.
தயான் சந்த் விருது -- DHYAN CHAND AWARD
"இந்த விருது மறைந்த உலகப்புகழ் பெற்ற இந்திய ஹாக்கி வீரர் த்யான் சந்த் அவர்களின் பிறந்த நாளான 29 ஆகஸ்ட் நினைவாக, அன்றைய தினமே வழங்கப்படுகிறது.
விளையாட்டு துறையில் வாழ்நாள் சாதனை புரிந்த முன்னாள் வீரர்களுக்கு அளிக்கப்படும் விருது. 2002ல் தொடங்கப்பட்ட இந்த விருது, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது.
ஒரு விருதுத் தகடு, சான்றிதழ், மற்றும் 5 லட்சம் ரொக்கப்பரிசும் அளிக்கப்படுகிறது. 2002ல் முதல் முறை பரிசு பெற்றவர்களும், 2015ல் பரிசு பெற்றவர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
2002:
1. அபர்ணா கோஷ் -- கூடைப்பந்து
2. அசோக் திவான் -- ஹாக்கி
3. ஷாஹூராஜ் பிராஜ்தார் -- குத்துச்சண்டை.
2015:
1. ரோமியோ ஜேம்ஸ் -- ஹாக்கி
2. ஷிவ் ப்ரகாஷ் மிஷ்ரா -- டென்னிஸ்
3. T.P.P. நாயர் -- வாலிபால்."
Q9. மேலே கூறப்பட்ட அனைத்து விளையாட்டு விருதுகளும் எந்த நாளில் வழங்கப்படுகிறது?
29 ஆகஸ்ட் -- த்யான் சந்த் அவர்களின் பிறந்த நாள்.

சர்வதேச விருதுகள் -- INTERNATIONAL SPORTS AWARDS

Q10. ICC விருதுகள் -- ICC AWARDS:
"2004 முதல் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் வருடந்தோறும், கிரிக்கெட் விளையாட்டின் பல அங்கங்களில் சிறந்த வீரர்களுக்கு அளிக்கப்படும் விருது. இந்த விருதுகளுக்கு தகுதி பெறும் காலக்கட்டம் -- ஆகஸ்ட் 1 முதல் அடுத்த ஜூலை31 வரையிலான காலம். இந்த விருதுகளை முடிவு செய்ய ஐந்து நாட்டு (சுழற்சியில்) முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கொண்ட ஒரு குழு வருடந்தோறும் அமைக்கப்படுகிறது. இதனுடன், டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாட்டு கேப்டன்கள், சர்வ தேச சங்க நடுவர்கள், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் பத்திரிகை எழுத்தாளர்கள் ஆகியோரின் வாக்குகள் மூலம் தேர்வு செய்யப்படுகிறது. 2015ல் இந்த விருதினைப் பெற்றவர்களின் பட்டியல்:
1. Cricketer of the Year: ஸ்டீவன் ஸ்மித், ஆஸ்திரேலியா
2. Test Player of the Year: ஸ்டீவன் ஸ்மித், ஆஸ்திரேலியா
3. ODI Player of the Year: A.B. டி வில்லியர்ஸ், தென் ஆப்பிரிக்கா
4. Emerging Player: ஜோஷ் ஹேஸ்வுட், ஆஸ்திரேலியா
5. Best T20 Performance: ஃபாஃப் டு ப்ளாசிஸ், தென் ஆப்பிரிக்கா
6.. Spirit of Cricket Award: ப்ரெண்டன் மேக்கல்லம், நியூசிலாந்து
7. ICC Associate Player : குர்ரம் கான், ஐக்கிய அரபு நாடுகள்
8. Umpire of the Year: ரிச்சர்டு கெட்டில்பரோ, இங்கிலாந்து
9. Women ODI Cricketer of the Year: மெக் லேனிங், ஆஸ்திரேலியா
10. T20 Women Cricketer of the Year: ஸ்டெஃபானி டெய்லர், மேற்கு இந்திய தீவுகள். "
Q11. "லாரியஸ் உலக விளையாட்டு விருதுகள்: LAUREUS WORLD SPORTS AWARDS: "
" 1999ல், DAIMLER மற்றும் RICHEMONT (தரை தானூர்தி தயாரிப்பாளர்கள்) நிறுவனங்களின் ஆதரவுடன் தொடங்கப்பட்ட இந்த விருது, உலகின் பல விளையாட்டுத் துறையின் மிகச் சிறந்த வீரர்களை, ஒரு குழுவின் உதவியுடன் தேர்வு செய்து, இந்த விருது வழங்கப்படுகிறது. இந்தக் குழுவின் ரகசிய வாக்குகள் மூலம், விளையாட்டின் பல பிரிவுகளுக்கு தேர்வு செய்யப்படுகிறது.
2016 - ஏப்ரலில் இந்த விருதை பெற்றவர்கள்:
1. Sportsman of the Year: நோவக் டி ஜோகோவிக் -- செர்பியா -- டென்னிஸ்
2. Sportswoman of the Year: செரினா வில்லியம்ஸ் -- அமெரிக்கா -- டென்னிஸ்
3. Team of the Year: ஆல் ப்ளாக்ஸ் -- நியூசிலாந்து ரக்பி அணி.
4. Breakthrough of the Year: ஜோர்டான் ஸ்பியத் -- அமெரிக்கா - கோல்ஃப்
5. Comeback of the Year: டேன் கார்டர் -- நியூசிலாந்து -- ரக்பி
6. Sportsperson with Disability: டேனியல் டையஸ் -- ப்ரேஸில் -- நீச்சல்
7. Action Sports Person: ஜேன் ஃப்ரொடெனோ -- ஜெர்மனி -- ட்ரையத்லான்
8. Life Time Achievement: நிக்கி லாடா - ஆஸ்திரியா - கார் ரேஸ்
9. Spirit of Sports Award: ஜோஹன் க்ரையூஃப் -- நெதர்லாந்து -- கால்பந்து"
"