Khub.info Learn TNPSC exam and online pratice

இந்திய அரசாங்க துறைகள்

Q1. நம்நாட்டு பாதுகாப்பை எத்தனை பெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம்?
(1) உள் நாட்டு பாதுகாப்பு
(2) வெளிப்புற பாதுகாப்பு
(3) அண்டைநாடு எல்லைப் பாதுகாப்பு
(4) கடலோர எல்லைப் பாதுகாப்பு.
Q2. நம்நாட்டு பாதுகாப்பில் நேரடியாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், அமைச்சர்கள் யாவை/யாவர்?
(1) உள் துறை அமைச்சகம் - Ministry of Home Affairs - 2015 நிலையில் மத்திய உள்துறை அமைச்சராக திரு. ராஜ்நாத் சிங், இணை அமைச்சர்களாக கிரண் ரிஜ்ஜூ மற்றும் ஹரிபாய் பார்த்தி பாய் சவுத்திரி அவர்களும் பொறுப்பில் உள்ளனர். உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் அமைதியை காத்திடும் பணியை செய்கிறது.
(2) மத்திய பாதுகாப்பு அமைச்சகம் - Ministry of Defence - 2015 நிலையில் மத்திய அமைச்சராக மனோஹர் பரிக்கார் மற்றும் துணை அமைச்சராக ராவ் இந்தர்ஜித் சிங் அவர்களும் பொறுப்பில் உள்ளனர்.
Q3. உள்துறை அமைச்சகத்தில் என்னென்ன துறைகள் இயங்குகின்றன?
(1) எல்லை பாதுகாப்பு துறை - Department of Border Management - எல்லையோர, கடலோர பாதுகாப்பு, கட்டுமான பணிகள் அபிவிருத்தி.
(2) உள்நாட்டு பாதுகாப்பு துறை - Department of Internal Security - உள்நாட்டு அமைதி காத்தல், இந்திய காவல் (Police)துறை மேலாண்மை, சட்டம் ஒழுங்கு பராமரித்தல், நாட்டுக்குள் நுழைவுரிமை (Visa), உளவுத்துறை போன்றவை.
(3) ஜம்மு காஷ்மீர் விவாகரத்துறை - Department of Jammu & Kashmir Affairs - ஜம்மு காஷ்மீர் பற்றிய அரசியல் சட்ட ரீதியான விவகாரங்கள், பாதுகாப்பு ஆகியவை.
(4) உள்துறை - Department of Home - தலைவர்கள், அமைச்சரவை, பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் சட்ட ரீதியான அதிகாரிகள் பதவியேற்பு, விலகல்/விலக்கல், மக்கள் தொகை கணக்கெடுப்பு, பிறப்பு, இறப்பு பதிவு ஆகியவை.
(5) ஆட்சி மொழி துறை - Department of Official Language - ஆட்சிமொழி இந்தி பற்றிய விவாகரங்கள்.
(6) மாநிலங்கள் துறை - Department of States - மத்திய மாநிலங்கள் உறவு, மாநிலங்களுக்கிடையே உறவு, யூனியன் பிரதேச நிர்வாகம், தியாகிகள் ஓய்வூதியம், மனித உரிமை பாதுகாப்பு, சிறைச்சாலை சீரமைப்பு, காவல் துறை சீரமைப்பு ஆகியவை.
Q4. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துறைகள் யாவை?
(1) பாதுகாப்பு துறை - Department of Defence - முப்படைத்துறை மேலாண்மை, பாதுகாப்பு துறை நிதி நிலை அறிக்கை, பாதுகாப்புத் திட்டங்கள், பாதுகாப்புத் துறையில் வெளிநாட்டுடன் உறவு ஆகியவை.
(2) பாதுகாப்பு உற்பத்தித் துறை - Department of Defence Production - பாதுகாப்புக்குத் தேவையான தளவாடங்கள், ஆயுதங்கள் தயாரித்தல் மற்றும் அது சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களும்.
(3) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் - Defence Research & Development Organization - பாதுகாப்பு தளவாடங்கள், ஆயுதங்கள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்கள், பாதுகாப்பு அமைச்சருக்கு அறிவுரை வழங்குவது போன்றவை.
(4) ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் நலத்துறை - Department of Ex-Servicemen Welfare - ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் நலத்திட்டங்கள் வகுப்பது, ஓய்வூதியம் மற்றும் இதர விவகாரங்கள்.
Q5. உள்நாட்டு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள துறைகள் யாவை?
(1) காவல் துறை - Police Force;
(2) மத்திய சிறப்பு காவல் படை - Central Reserve Police Force;
(3) மத்திய தொழிற்துறை காவல் படை - Central Industrial Security Force;
(4) அதிரடி நடவடிக்கைப் படை - Rapid Action Force;
(5) தேசிய பாதுகாப்பு காவலாளர்கள் - National Security Guards;
(6) பிரத்தியேக பாதுகாப்புக் குழு - Special Protection Group;
(7) மத்திய புலனாய்வு அமைப்பு - Central Bureau of Investigation;
(8) தன்னார்வ தரைவழி ராணுவப்படை - Territorial Army;
(9) ஊர்க்காவலர் படை - Home Guards;
(10) தேசிய மாணவர் படை - National Cadet Corps.
Q6. நாட்டின் எல்லைப்புற மற்றும் வெளிப்புற தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் படைகள் யாவை?
(1) தரை வழி ராணுவம் - Army;
(2) வான்வழி ராணுவம் - Air Force
(3) கடல் வழி ராணுவம் - Naval Force
(4) எல்லைப் பாதுகாப்புப் படை - Border Security Force
(5) இந்திய திபெத் எல்லைப் பாதுகாப்பு படை - Indo Tibet Border Police.
(6) கடலோர காவல் படை - Coast Guards.
Q7. காவல் துறை, உள்துறை அமைச்சகத்தின் எந்த துறையின் கீழ் செயல் படுகிறது?
உள் நாட்டு பாதுகாப்பு துறை (Department of Internal Security). இருந்தாலும், காவல் துறை மாநில உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.
Q8. காவல் துறையின் முக்கிய நோக்கமும் பணிகளும் யாவை?
சட்டம் ஒழுங்கு பராமரித்தல், குற்றங்கள் தடுப்பு மற்றும் புலனாய்வு செய்தல், போக்குவரத்து மேலாண்மை, தேவைப்படும் இடங்களில் தேவையான பாதுகாப்பு அளித்தல், போன்ற பல்வகை பாதுகாப்பு பணிகள்.
Q9. நம்நாட்டில் காவல் துறை (Police Force) எப்போது தொடங்கப்பட்டது?
1861ல் பாதுகாவலர் சட்டம் (Police Act 1861) மூலம் காவல் துறை தொடங்கப்பட்டது. அப்போது காவல் துறை "பேரரசு காவல் படை" (Imperial Police) என அழைக்கப்பட்டது.
Q10. இந்தியர்கள் எப்போது முதல் காவல் துறையில் (ஆங்கிலேயர் ஆட்சியில்) சேர்க்கப்பட்டார்கள்?
1893 முதல்.
Q11. எதன் அடிப்படையில், எப்போது முதல் காவல் பேரரசு காவல் படை (Imperial Police) இந்திய காவல் பணி (Indian Police Service)யாக மாற்றப்பட்ட்து?
இஷ்லிங் குழு அறிக்கை 1917ன் (Ishling Commission Report, 1917) அடிப்படையில் 1932 முதல் "இந்திய போலீஸ் பணி" என உருவெடுத்து, 1932 முதல் 1949 வரை "இந்திய காவல் (Indian Police)" என அழைக்கப்பட்டு, சுதந்திர இந்தியாவில் மீண்டும் இந்திய காவல் பணி (Indian Police Service) என அழைக்கப்பட்டு வருகிறது.
Q12. இந்திய அரசியல் சட்டத்தின் எந்த விதிப்படி காவல் துறை (Police) ஒரு அகில இந்திய பணியாக கருதப்படுகிறது (All India Service)?
விதி எண் 312
Q13. மாநில அளவில் காவல் துறையின் தலைமை அதிகாரி யார்?
டைரக்டர் ஜெனரல் (Director General)
Q14. காவல் துறையின் அதிகாரிகளை மேலிருந்து கீழாக வரிசைப்படுத்து?
(1) Director General of Police டைரக்டர் ஜெனரல்
(2) Additional Director General of Police இணை டைரக்டர் ஜெனரல்
(3) Inspector General of Police/Commissioner இன்ஸ்பெக்டர் ஜெனரல்/கமிஷனர்
(4) Deputy Inspector General of Police உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல்
(5) Superintendent of Police/Deputy Commissioner சூப்பரிண்டெண்டெண்ட் ஆஃப் போலீஸ்/உதவி கமிஷனர்
(6) Deputy Superintendent of Police/Assistant Commissioner துணை சூப்பரிண்டெண்டெண்ட் ஆஃப் போலீஸ்/உதவி கமிஷனர்
(7) Assistant Superintendent of Police உதவி சூப்பரிண்டெண்டெண்ட் ஆஃப் போலீஸ்
(8) Inspector of Police இன்ஸ்பெக்டர்
(9) Sub Inspector of Police சப் இன்ஸ்பெக்டர்
(10) Assistant Inspector of Police உதவி இன்ஸ்பெக்டர்
(11) Head Constable ஹெட் கான்ஸ்டபிள்
(12) Constable கான்ஸ்டபிள்
Q15. காவல் துறையில் பணி அமர்த்தல் எவ்வாறு நடைபெறுகிறது?
மத்திய அரசு தேர்வு: மத்திய பொதுப்பணி தேர்வாணையக் குழு (Union Public Service Commission -UPSC ) மூலம் நேரடி அதிகாரிகள் (IPS) தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களுக்கு ஒதுக்கப்படுகின்றனர். இவ்வாறு பணியில் அமர்பவர்கள் (ASP - Assistant Superintendent of Police), ஆரம்பத்தில் வருடங்களின் அடிப்படையில் பதவி உயர்வு பெற்று, பிறகு அகில இந்திய மூத்த  நிலை (seniority) அடிப்படையில் பதவி உயர்வு பெறுவர். இதற்கான பொது தேர்வுகள் UPSC ஆல் வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. தரப்பட்டியலின் அடிப்படையில் ஒதுக்கப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு www.upsc.gov.in என்ற வலை தளத்தில் விவரங்கள் பெறலாம்.
மாநில அளவில்: தமிழ்நாடு பொதுப்பணி தேர்வு ஆணையம் (TNPSC) நடத்தும் Group I and II தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள் நேரடி அதிகாரிகளாகவும், கீழ்மட்ட பதவிகளான காவலர் (Constable) முதல் ஆய்வாளர் (Inspector) வரை, சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் (Uniformed Services Recruitment Board) மூலமாக நடைபெறுகிறது. பதவி உயர்வுகள், மூத்த நிலை மற்றும் நடத்தை அடிப்படையில் நடைபெறுகிறது. 
Q16. மத்திய பொதுப்பணி தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் IPS அதிகாரிகளின் பயிற்சி மையம் எங்கு அமைந்துள்ளது?
சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் துறை பயிற்சி அகாடமி, ஹைதராபாத், தெலங்கானா. 1948ல் தொடங்கப்பட்ட இந்த பயிற்சி கழகத்தின் குறிக்கோள் வாக்கியம் "உண்மை, சேவை, பாதுகாப்பு (= Satyam, Seva, Surakshanam).மத்திய உள்துறை அமைச்சக நிர்வாகத்தின் கீழ் இயங்குகிறது.
Q17. நம் நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி யார்?
கிரண் பேடி 1972. இவர் தேசிய மகளிர் டென்னிஸ் முதன்மை வீராங்கனை (champion). 1994ல் ராமன் மகஸ்ஸே சர்வதேச விருது பெற்றவர். லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக, பணி ஓய்வுக்குப் பிறகு, அன்னா ஹசாரேவுடன் தீவிரமாக போராட்டம் நட்த்தியவர். தற்சமயம் பாரதிய ஜனதா கட்சியில் பங்கு கொண்டிருக்கிறார்.
Q18. தமிழ் நாட்டின் முதல் மகளிர் காவல் நிலையம் எங்கு துவங்கப்பட்டது?
ஆயிரம் விளக்கு, சென்னை.
Q19. தமிழ் நாட்டின் முதல் பெண் DGP யார்?
லேதிகா சரண்.
Q20. மத்திய சிறப்பு காவல் படை (Central Reserve Police Force) என்பது என்ன?
இது ஒரு துணை ராணுவப்படை. அவசர காலங்களில் உள்நாட்டில் அமைதி காக்கவும், எல்லைப் பகுதியில் ராணுவத்துடன் சேர்ந்து அலுவல் புரியவும், முக்கிய தளவாடங்கள், விமான நிலையம் போன்றவற்றில் கண்காணிப்பு பணி செய்யவும், தேவைக்கேற்ப நாடு முழுவதும் பணியாற்ற உருவாக்கப்பட்ட அமைப்பு.
Q21. மத்திய சிறப்பு காவல் படை (Central Reserve Police Force) எப்போது உருவாக்கப்பட்டது?
1939ல் ராணியின் பிரதிநிதித்துவ காவல் படை - Crown Representative Police - என்ற பெயரில் மத்திய பிரதேசத்திலுள்ள நீமக் (Neemuch) என்ற இடத்தில் துவக்கப்பட்டு, சுதந்திரத்திற்கு பிறகு இப்பெயர் மாற்றம் பெற்று இயங்கி வரும் துணை ராணுவப் படை.
Q22. மத்திய சிறப்பு காவல் படையின் தலைவர் யார், தலைமையகம் எங்குள்ளது?
டைரக்டர் ஜெனரல் (Director General), டெல்லி.
Q23. மத்திய சிறப்புக் காவல் படையின் குறிக்கோள் வாக்கியம் (moto) என்ன?
"சேவையும் நாட்டுப்பற்றும்" - Service & Loyalty.
Q24. 1986ல் மத்திய சிறப்பு காவல் படை புரிந்த சாதனை என்ன?
1986ல் உலகிலேயே முதல் முறையாக மகளிர் துணை ராணுவப்படையை உருவாக்கியது. (Women Paramilitary Force)
Q25. மத்திய தொழிற்துறை காவல் படை (Central Industrial Security Force) பற்றி கூறவும்?
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு துணை ராணுவப்படை. 1969ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, முதன்மையாக நாட்டின் முக்கிய தொழிலமைப்புகள் - அணுமின் நிலையங்கள், துறைமுகங்கள் - போன்ற இடங்களில் காவல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதுடன், வேறு அனைத்து பாதுகாப்பு அலுவல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. டெல்லியை தலை நகராகக் கொண்டு, டைரக்டர் ஜெனரல் கீழ் இயங்குகிறது. இதன் குறிக்கோள் வாக்கியம் - Protection and Security.
Q26. இந்திய திபெத் எல்லை பாதுகாப்புப் படை (Indo Tibetan Border Police -ITBP) என்பது என்ன?
டெல்லியை தலைநகராகக் கொண்டு டைரக்டர் ஜெனரல் கீழ் இயங்கும் இந்த அமைப்பு, 1962ல் தொடங்கப்பட்டது. இதன் முக்கியமான பணி இந்திய - திபெத் எல்லை - கரகோரம் மலைவழி (pass) லடாக்கில் தொடங்கி, லிபுலேக் மலைவழி, இந்தியா, திபெத், நேபாள சந்திப்பு வரை எல்லையை பாதுகாப்பது. இந்த எல்லையின் தூரம் சுமார் 2115 கி.மீ. இதன் குறிக்கோள் வாக்கியம்: " வீரம், மன உறுதி, தொழில் பக்தி" - Valour, Determination, Devotion to Duty.
Q27. எல்லை பாதுகாப்பு படை - Border Security Force என்பது என்ன?
டெல்லியை தலைநகராக்க் கொண்டு, டைரக்டர் ஜெனரல் கீழ் இயங்கும் இந்த அமைப்பு 1.12.1965ல் தொடங்கப்பட்டது. இதன் முக்கிய பணி - வட மேற்கு மற்றும் வடகிழக்கு எல்லைகளை, ஊடுருவல் மற்றும் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பத. சுமார் 2.5 லட்சம் பேர் கொண்ட ஒரு பெரிய படை. பாகிஸ்தான-இந்திய எல்லை வாகா(Wagah) என்ற இட்த்தில் பணி புரிவது இந்த படையே. இந்த படையின் குறிக்கோள் வாக்கியம் - "மரணம் வரை பணியில்" "Duty unto death"
Q28. அஸ்ஸாம் துப்பாக்கிப்படை (Assam Rifles) என்பது என்ன?
துணை ராணுவப்படைகளிலேயே மிகவும் பழமையானது - 1835ல் தொடங்கப்படட்து. ஷில்லாங் (மேகாலயா) தலைமையகமாகக் கொண்டு டைரக்டர் ஜெனரல் கீழ் இயங்கும் ஒரு அமைப்பு. இதன் முக்கிய பணி வடகிழக்கு மாநிலங்களின் வெளி நாட்டுடன் சேர்ந்த எல்லைப் பகுதிகளை கண்காணிப்பதும், ஊடுருவல்கள், தீவிரவாதிகள் (ulfa) நடவடிக்கைகளை கண்காணித்து தடுப்பதும் ஆகும். இதன் குறிக்கோள் வாக்கியம் - " மலை வாழ் மக்களின் நண்பன் - Friends of the Hill People" .
Q29. இந்திய கடலோர காவல் படை (Indian Coast Guards) என்பது என்ன?
நம் நாட்டின் கடலோரத்தின் நீளம் சுமார் 7500 கி.மீ. இவ்வளவு பெரிய பகுதியை கண்காணிக்க, சட்ட புறம்பான நடவடிக்கைகளை தடுக்க 1.2.1977ல் உருவாக்கப்பட்ட ஒரு துணை ராணுவப்படை. டெல்லியை தலைநகராகக் கொண்டு, சென்னை, மும்பை மற்றும் போர்ட் ப்ளேயர் ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்களைக் கொண்டு இயங்குகிறது. இதன் குறிக்கோள் வாக்கியம் -"நாங்கள் பாதுகாப்போம் - We Protect".
Q30. தன்னார்வ தரைவழி ராணுவம் - Territorial Army என்பது என்ன?
"இது ஒரு இரண்டாம் நிலை ராணுவம் (Second in Line). ராணுவ நடைமுறை மற்றும் பயிற்சியளிக்கும் ஒரு அமைப்பு. இதில் பயிற்சி பெறுபவர்கள் (18 முதல் 42 வயது வரை) ராணுவத்திற்கு அவசர காலங்களில் உதவி புரிவர். இதில் முக்கியமாக ரயில்வே, தகவல் தொடர்பு, மற்றும் இதர சில முக்கிய துறைகளை சார்ந்த மத்திய அரசு ஊழியர்களை தன்னார்வ நிலையில் சேர்த்து பயிற்சி அளிக்கப்படுகிறது. 1920ல் ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டு, 1948ல் இந்திய மயமாக்கப்பட்டு, 9.10.1949 அன்று சி.ராஜகோபாலாச்சாரி அவர்களால் துவங்கப்பட்ட ஒரு துணைப்படை. இதன் பயிற்சி மையங்கள் பூனே, கொல்கத்தா, சாந்திமந்திர், லக்னௌ, உதாம்பூர், பெங்களூரு ஆகிய இடங்களில் இயங்குகிறது. இத்துணைப்படையில், நானா படேகர் (இந்தி நடிகர்), மோகன்லால் (மலையாள் நடிகர்), கபில் தேவ், எம்.எஸ்.தோனி (கிரிக்கெட் வீரர்கள்) ஆகிய பிரபலங்கள் கௌரவ அதிகாரிகளாக சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது."
Q31. ஊர்க்காவல் படை - Home Guards என்பது என்ன?
இது ஒரு தன்னார்வ அமைப்பு. 1962ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, அவசர மற்றும் அவசிய காலங்களில், காவல் மற்றும் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து மேலாண்மை, இயற்கை அசம்பாவிதங்கள், பெரிய விபத்துக்கள், விழாக்கால கூட்ட சமாளிப்பு, கிராமப்புற சுகாதார மேம்பாடு போன்ற நற்பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
Q32. தேசிய மாணவர் படை (National Cadet Corps) என்பது என்ன?
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே, நல்லெண்ணம், ஒழுங்கு, கட்டுப்பாடு, ஆர்வம், துணிகரம், தேசபக்தி போன்றவற்றை வளர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட தன்னார்வ அமைப்பு. 15.1.1948 அன்று, தேசிய மாணவர் படைச்சட்டம், 1948ன் கீழ் தொடங்கப்பட்டது. இதில், ராணுவ ரீதியான பயிற்சிகளும், சில தகுதித் தேர்வுகளும் உண்டு. இத்தேர்வுகளில் உயர்நிலை தேர்வு வெற்றி பெறும் மாணவ/மாணவிகளுக்கு, ராணுவ அதிகாரி தேர்வுகளில் சில சலுகைகளும், முன்னுரிமையும் வழங்கப்படுகிறது.
Q33. துரித நடவடிக்கைப் படை (Rapid Action Force) என்பது என்ன?
மத்திய சிறப்புக் காவல் படையின் ஓர் அங்கமாக டிசம்பர் 1991ல் அமைக்கப்பட்ட்து. கலவரம் போன்ற நேரங்களில் துரிதமாக, "பூஜ்ய நேர தாமதத்தில்) (Zero Response Time)செயல்படக்கூடிய ஒரு அமைப்பு. இதில் சுமார் 10 பட்டாளம் (Battalion) பல இடங்களில் செயல் படுகிறது. இதன் குறிக்கோள் வாக்கியம் - " Serving Humanity with Sensitive Policing"
Q34. தேசிய புலனாய்வு நிறுவனம் - National Investigation Agency என்பது என்ன?
தீவிரவாத குற்றங்கள் அதிகரித்து வரும் வேளையில் அதை விசாரித்து, அதன் மூலக்காரணம் மற்றும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டறிய வேண்டிய அவசியத்தின் அடிப்படையில், தேசிய புலனாய்வு நிறுவனச்சட்டம் 2008ன் கீழ் தோற்றுவிக்கப்பட்ட ஒரு அமைப்பு. 2008 மும்பை தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் உருவாக்கப்பட்டது. டெல்லியை தலைநகராகக் கொண்டு, டைரக்டர் ஜெனரலின் கீழ் இயங்குகிறது.
Q35. மத்திய புலனாய்வு துறை - Central Bureau of Investigation என்பது என்ன?
1941ல் பிரத்தியேக காவல் துறை அமைப்பு - Special Police Establishment என உள்நாட்டு பாதுகாப்பு நோக்கத்துடன் உருவாக்கப்பட்டு, 1.4.1963 முதல் மத்திய புலனாய்வு துறை - Central Bureau of Investigation என்ற பெயரில் இயங்கி வரும் ஒரு நிறுவனம். இது ஒரு சுதந்திரமான பகுதி நீதித்துறை அதிகாரங்கள் பெற்றது. டைரக்டர் தலைமியில் டெல்லியை தலைநகராகக் கொண்டு, மாநில தலைநகரங்களில் கிளைகளும், டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்களைக் கொண்டு இயங்குகிறது. குற்றவியல் விசாரணை, பொருளாதார குற்ற விசாரணை, நிர்வாகக் குற்ற விசாரணை, மற்றும் இதனிடம் ஒப்படைக்கப்படும் வழக்குகளை விசாரிப்பது போன்றவை இதன் பணியாகும். சர்வதேச புலனாய்வு காவல் துறை ( INTERPOL ) யுடன் நம் நாட்டின் சார்பாக தொடர்பிலிருக்கும் நிறுவனம். இது மத்திய அட்டவணைப் பணியில் இயங்குவதால் மத்திய அரசாங்கத்திற்கு மட்டுமே பதில் அளிக்கக்கூடியது. இதன் பயிற்சி நிலையம் காஸியாபாத், உ.பி.யில் உள்ளது.
Q36. தேசிய பாதுகாப்பு காவலாளிகள் - National Security Guards என்ற அமைப்பு என்ன?
"கருப்பு பூனை" படை என்றும் அழைக்கப்படுவர். அதிரகரித்து வரும் தீவிரவாத தாக்குதல்களின் பின்னணியில் தலைவர்களுக்கு அச்சுறுத்தல்கள் வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்புக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட படை. பாராளுமன்ற சட்டத்தின் அடிப்படையில் 1984ல் துவங்கப்பட்ட இப்படை, டெல்லியை தலைமயகமாகக் கொண்டு, டைரக்டர் ஜெனரல் கீழ், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இதற்கு ராணுவ/காவல் துறை வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதன் குறிக்கோள் வாக்கியம் - " எங்கேயும் எப்போதும் சிறப்பான பாதுகாப்பு - Everywhere, Anytime the best protection). தலைவர்களின் பாதுகாப்பு, தீவிரவாதிகளின் மறைவிடங்களை தாக்குதல் நடத்துவது போன்ற பிரத்தியேகமான பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
Q37. ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக்குழு - Research and Analysis Wing என்ற அமைப்பைப் பற்றிக் கூறுக.
சர்வதேச அளவில் குற்றங்களை தவிர்க்கவும், குற்ற பின்னணி உள்ளவர்களை பற்றிய தகவல் பரிமாற்றங்கள் செய்யவும், அவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும், பிடிக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. 1923ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, லியான், ஃப்ரான்ஸ் என்னுமிடத்தில் தலைமையகம் கொண்டு இயங்குகிறது. இதில் சுமார் 190 நாடுகள் உறுப்பினராகக் கொண்டு, அதற்கேற்ற செலவுகளையும் பகிர்ந்து கொண்டு செயல் படுகிறது.
Q38. சர்வதேச போலீஸ் நிறுவனம் - INTERPOL என்பது என்ன?
சர்வதேச அளவில் குற்றங்களை தவிர்க்கவும், குற்ற பின்னணி உள்ளவர்களை பற்றிய தகவல் பரிமாற்றங்கள் செய்யவும், அவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும், பிடிக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. 1923ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, லியான், ஃப்ரான்ஸ் என்னுமிடத்தில் தலைமையகம் கொண்டு இயங்குகிறது. இதில் சுமார் 190 நாடுகள் உறுப்பினராகக் கொண்டு, அதற்கேற்ற செலவுகளையும் பகிர்ந்து கொண்டு செயல் படுகிறது.
Q39. குற்றவியல் புலனாய்வில் கைரேகை பதிவு முறையை அறிமுகப்படுத்திய நகர காவல் துறை எது?
நியூயார்க் சிட்டி போலீஸ், அமெரிக்கா.
Q40. இந்திய காவல் துறையில் சீர்திருத்தங்கள் செய்த குழுக்கள் யாவை?

1. 1977-1981 - தேசிய காவல் துறை குழுமம் - National Police Commission.
2. 1998. ரிபேரோ கமிட்டி - Ribeiro Committee
3. 2000 - பத்மநாபைய்யா கமிட்டி - Padmanabiah Committee
4. 2003 - மாலிமத் கமிட்டி - Malimath Committee
5. 2013 - ஜே.எஸ். வர்மா கமிட்டி - J.S.Varma Committee"
Q41.

இந்திய தரைவழி ராணுவம் - INDIAN ARMY.

Q42. இந்திய வரலாற்றின் எந்த முக்கிய நிகழ்வு இந்திய ராணுவம் அமைய வழி வகுத்தது?
1857ம் ஆண்டு சிப்பாய் கலகம்.
Q43. இந்தியாவில் ராணுவம் எப்படி தொடங்கி எப்படி வளர்ச்சியடைந்தது?
1. 1858 - 1894 : அப்போது நிர்வாகப் பிரிவாக ஆங்கிலேயர்களால் பிரிக்கப்பட்ட, மெட்ராஸ், பெங்கால் மற்றும் பாம்பே மாகாணங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ""இந்திய ராணுவம்"" - முழுவதுமாக ஆங்கிலேயர்களைக் கொண்டது.
2. 1894 - 1902 : ""இந்திய ராணுவம்"" நிரந்தர ஆங்கில ஊழியர்கள் மற்றும் உள்ளூரில் சேர்க்கப்பட்ட இந்திய சிப்பாய்களைக் கொண்டது. நிர்வாகம் ஆங்கிலேய அதிகாரிகளைக் கொண்டதாக இருந்தது. இதில் இங்கிலாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட ஆங்கிலேயர் பட்டாளமும், இந்திய மற்றும் ஆங்கிலேயர் கலந்த பட்டாளமுமாக இரண்டு பகுதிகளாக இயங்கியது. இதே நிலை 1947 வரை நீடித்தது. கிச்னர் பிரபு தான் Lord Kichner இந்திய ராணுவ சீர்திருத்தங்களின் முன்னோடி மற்றும் இந்திய ராணுவத்தின் முதல் முக்கிய தளபதி (Chief of Army 1902 – 1909)"
Q44. இந்தியாவில் ராணுவப் பயிற்சி கல்லூரி எங்கு துவங்கப்பட்ட து?
1912 - அரச ராணுவ கல்லூரி - Royal Military College - டெஹ்ராடூன்.
Q45. சுதந்திரத்துக்கு முன், இந்திய ராணுவத்தில், இந்திய வீர ர்கள் எந்த அளவுக்கு பயன்படுத்தப்பட்டனர்?
இரண்டாவது உலகப் போரில் (1939 - 1945) சுமார் 25 லட்சம் வீர ர்கள் பயன்படுத்தப்பட்டு அதில் சுமார் 72487 பேர் மரணம் அடைந்தனர் என்பது குறிப்பிட த்தக்கது.
Q46. சுதந்திரம் அடைந்த பிறகு, இந்திய ராணுவம் யாருடைய தலைமையில் இயங்கியது?
ஜெனரல் கே.எம். கரியப்பா (KM = KODANDERA MADAPPA). 1986ல் இவருக்கு ராணுவத்தின் மிகப்பெரிய கௌரவ பதவியான ஃபீல்டு மார்ஷல் (FIELD MARSHAL) பதவி கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
Q47. ஃபீல்டு மார்ஷல் (FIELD MARSHAL) பதவி என்பது என்ன?
ராணுவத்தில் அளிக்கப்படும் ஒரு கௌரவப்பட்டம். ராணுவத்தில் புரிந்த சிறப்பு பணிகளுக்காக கொடுக்கப்படுகிறது. இந்த விருது பெற்றவர் ராணுவத்திலிருந்து பொதுவாக ஓய்வு பெறுவதில்லை என்பது சிறப்பு கௌரவம். ( அதாவது பணியில் இல்லாமலேயே பதவியில் இருப்பதாகக் கருதப்படுவது).
Q48. ஃபீல்டு மார்ஷல் பட்டம் பெற்ற மற்றொரு ராணுவ அதிகாரி யார்?
மானேக் ஷா (SHFJ : SAM HORMUSJI FRAMJI JAMSHEDJI) வங்காள தேச விடுதலைப் போரில் (1971) இவர் ஆற்றிய பணிக்காக - 1.1.1973 அன்று கொடுக்கப்பட்ட து.
Q49. இந்திய ராணுவ அதிகாரிகளின் பதவி வரிசை என்ன?

1. ஜெனரல் - General
2. லெஃப்டினெண்ட் ஜெனரல் - Lieutenant General
3. மேஜர் ஜெனரல் - Major General
4. ப்ரிகேடியர் - Brigadier
5. கர்னல் - Colonel
6. லெஃப்டினென்ட் கர்னல் - Lieutenant Colonel
7. மேஜர் - Major
8. கேப்டன் - Captain
9. லெஃப்டினெண்ட் - Lieutenant
10. செகண்ட் லெஃப்டினென்ட் - Second Lieutenant
இவ்வாறு, முதல் இந்தியர் COMMISSIONED RANK அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு (1992) பிறகு முதல் இந்திய தலைமை ராணுவ தளபதியாக தேர்ந்து எடுக்கப்பட்டவர் - K.M. கரியப்பா."
Q50. இந்தியாவின் முதல் ராணுவ பெண் அதிகாரி (COMMISSIONED OFFICER) யார்?
பெண் மருத்துவர் டாக்டர் புனித் அரோரா. இவர் ராணுவ படை மருத்துவ கல்லூரி, பூனேவில் பயின்று ராணுவத்தில் பணி புரிந்தவர்.
Q51. இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகள் (COMMISSIONED RANK) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு -
1992
Q52. இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரிகள் எங்குள்ளன?
1. இந்திய ராணுவ அகாடமி, டெஹ்ராடூன் - Indian Military Academy, Dehradun. உத்தர் காண்ட், 1.10.1932ல் தொடங்கப்பட்ட இந்த அகாடமியின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் தொகுப்பில் இருந்தவர் SHFJ மானேக் ஷா.
2. ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி, சென்னை : Officer’s Training Academy – Chennai. 15.1.1963 அன்று தொடங்கப்பட்ட இந்த அகாடமி இளம் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கிறது. இதே போன்று மற்றொரு அகாடமி கயா-வில் (பீஹார்) 2011ல் தொடங்கப்பட்ட து.
3. தேசிய பாதுகாப்பு அகாடமி - பூனே - National Defence Academy – Pune : சூடான் நாட்டின் சுதந்திரத்துக்காக போராடி உயிர் நீத்த இந்திய வீர ர்களின் நினைவாக சூடான் நாடு அளித்த வெகுமதி 1 லட்சம் பவுண்டு. இதில், 30,000 பவுண்டு பாகிஸ்தனுக்கு அளித்த்து போக, மீதமுள்ள 70,000 பவுண்டு உதவியுடன் தொடங்கப்பட்ட இந்த அகாடமி 7.12.1954 முதல் இயங்குகிறது. இந்த அகாடமியில் முப்படைக்கும் (Army, Airforce & Navy) தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு, பிறகு அவர்கள் தேர்வு செய்யப்பட்ட படை பயிற்சி நிலையங்களுக்கு பிரத்தியேக பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த அகாடமி துவங்க வழி வகுத்த்து ஃபீல்டு மார்ஷல் க்ளாட் ஆச்சின்லெக் அவர்களின் அறிக்கை.
4. ராணுவப்பணி பணியாளர்கள் கல்லூரி : Defence Services Staff College - வெல்லிங்டன், நீலகிரி, தமிழ் நாடு. 1905ல் தேவ்லாளி, மகாராஷ்டிரத்தில் துவங்கப்பட்டு, 1907ல் க்வெட்டா, பாகிஸ்தானுக்கு மாற்றப்பட்டு பிறகு 1947ல் வெல்லிங்டனுக்கு மாற்றப்பட்ட து. இதில் பணியில் இருக்கும் முப்படை அதிகாரிகளுக்கும், ராணுவத்தில் ஏற்படும் முன்னேற்றங்கள், புதிய யுத்திகள் மற்றும் மேலாண்மை பற்றி சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
5. ராணுவப் படை மருத்துவ கல்லூரி - பூனே, மகாராஷ்டிரம் - 1948ல் துவங்கப்பட்ட இக்கல்லூரியில், ராணுவத்திற்கு தேவையான மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி முடித்து ராணுவப்பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இந்த கல்லூரியில் 1962ல் மருத்துவ டாக்டர்கள் துவக்கப்பட்டு 1966ல் முதல் ராணுவ டாக்டர்கள் வெளிவந்தனர். இதற்கு, அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வுகள் நட த்தப்படுகிறது."
Q53. ராணுவத்தில், அதிகாரிகள் அல்லாத, ராணுவ சிப்பந்திகள் யாவர், அவர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?

1. சிப்பாய்கள் (SEPOYS)
2. லான்ஸ் நாயக் (Lance Naik),
3. நாயக் (Naik),
4. ஹவில்தார் (HAVIDAR),
5. கம்பெனி குவாட்டர் மாஸ்டர் ஹவில்தார் (Company Quarter Master Havildar),
6. கம்பெனி ஹவில்தார் மேஜர் (Company Havildar Major)
இவர்களில் பணி அமர்த்தல் சிப்பாய்கள் நிலையில் இந்தியாவில் பல இடங்களில் (மாவட்ட அளவில்) அவ்வப்போது நடைபெறுகிறது. மீதிப் பதவிகள் பதவி உயர்வு மூலம் ஏற்படுகிறது."
Q54. நிர்வாக வசதிகளின் அடிப்படையில் இந்திய ராணுவம் எத்தனை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?
ராணுவத்தில் இந்த மண்டலங்களுக்கு ""கமாண்ட் -COMMAND"" என்று அழைக்கப்படுகிறது. இந்திய ராணுவம் கீழ்க்கண்ட மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன :
1. தெற்கு மண்டலம் - Southern Command - பூனே.
2. கிழக்கு மண்டலம் - Eastern Command - கொல்கத்தா.
3. மத்திய மண்டலம் - Central Command- லக்னோ, உ.பி.
4. மேற்கு மண்டலம் - Western Command - சந்திகர், பஞ்சாப்.
5. வடக்கு மண்டலம் - Northern Command - உதாம்பூர்.
6. தென்மேற்கு மண்டலம் - Southwest Command - ஜெய்ப்பூர்
7. பயிற்சி மண்டலம் - Training Command - மோவ்
8. Army Training Command - ARTRAC - ஷிம்லா.
ஒவ்வொரு மண்டலமும், ஒரு ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் இன் சீஃப் (General Officer Commanding in Chief) கீழ் இயங்குகிறது. இந்த பதவியிலிருப்பவர்களிருந்து தான் பொதுவாக ராணுவத்தின் தலைமை தளபதி - Chief of Army Staff தேர்வு செய்யப்படுகின்றனர்."
Q55. இந்திய ராணுவத்தில் என்னென்ன பட்டாளங்கள் (CORPS) உள்ளன?
1. Armoured, 2. Artillery, 3. Air Defence Artillery, 4. Aviation, 5. Engineers, 6. Signals 7. Mechanised Infanty, 8. Infantry, 9. Army Services, 10. Military Nuroing, 11. Army Medical, 12. Army Dental, 13. Army Ordnance, 14. Mechanical & Electrical Engineers, 15. Remount & veterinary, 16. Military Farms, 17. Army Education, 18. Intelligence, 19. Military Police, 20. Legal-Advocate General-Judge, 21. Army Physical Training, 22. Army Postal Service, 23. Territorial Army 24. Defence Security, 25. Recruitment & Selection, 26. Records, 27. Supply and Procurement, 28. Training Institutions.
Q56. ராணுவத்தின் பல்வகை பயிற்சி பள்ளிகள் எங்குள்ளன?

1. Armed Corps Centre & School, Ahmed nagar;
2. School of Signals, Mhow;
3. School of Artillery, Deolali;
4. Infantry School, Mhow;
5. Army Ordnance Corps School, Jabalpur;
6. Service Corps school, Bareilly
7. Remounts, Veterinary & Farms Corps Centre and School, Meerut;
8. School of Physical Training, Pune;
9. School of Mechanical Transport, Bengaluru
10. Military Police Centre & School, Faisabath;
11. Army Education Corps & Training College, Pachmarhi;
12. Military School of Music, pachmarhi;
13. Electrical & Mechanical Engineering Schools – Trimulgherry & Secunderabad. "
Q57. INFANTRY - என்பது என்ன?
தரைவழியில் போர் புரிய பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள்.
Q58. REGIMENT - பெரும்படை அணி என்பது -
திரளான தரைவழி போர் வீர ர்களின் அணி. இதில் இரண்டு சிறு அணிகள் (Battalion) சேர்ந்த து. இவ்வகையில், குறிப்பிட்ட வகுப்பினர் குறிப்பிட்ட பணிகள் செய்து முடிக்கத் தகுந்தவர்கள் என்ற அடிப்படையில் சுமார் 63 அணிகள் இயங்குகின்றன.
Q59. REGIMENT - பெரும்படை அணியில் சில முக்கியமானவை -

1.     Madras Regiment – 18th Century – Ooty;
2.     Sikh Regiment – 1.8.1946 – Ramagarh, Ranchi.
3.     Gurkha Regiment – 1875
4.     Kumaon Regiment – 19th century – Ranikhet – Uttarkhand
5.     Mahar Regiment – 19th Century
6.     Rajputana Rifles – 1775
7.     Rajput Regiment – 1778 – Fatehgarh.
8.     Dogra Regiment – 1922
9.     Maratha Light Infantry -1768 – Bengaluru.
10.   Jat Regiment – 1795 – Bareilly
11.   Naga Regiment – 1970 – Ranikhet, Uttarkhand
12.   Assam Regiment – 1941 – Shillong
13.   Bihar Regiment – 1942 – Danapur, Bihar.
14.   Brigade of the Guards – 1949 – Kampter Maharashtra.
15.   Garhwal Regiment – 1887
16.   Grenadiers – 1784 – Jabalpur, M.P.
17.   J & K Rifles – 1921.
18.   Ladakh Scouts – 1963.
19.   Parachute Regiment – 1945 – Bengaluru.
20.   Punjab Regiment – 1761 – Ramgarh, Ranchi.
21.   Rashtriya Rifles – 1990.
பொதுவாக இந்த அணிகளின் பெயர்கள் ஒரு குறிப்பிட்ட இனத்தை சார்ந்தவையாகவே இருக்கிறது. இதற்குக் காரணம், ஆங்கிலேயர்களும், அதற்கு முன்னும், சம காலத்தில் இருந்த குறு நில மன்னர்களும், குறிப்பிட்ட இனம் / சமுதாயத்தை சேர்ந்தவர்களின் வீரத்தை பயன்படுத்திக் கொள்ளவும், அவர்களை ராணுவத்தில் சேர்த்து, அவர்களின் இனப்பெயர்களையே அந்த படை அணிகளுக்கு வைத்தனர். அதனால் அவர்களை திருப்தி அடைய செய்தது மட்டுமின்றி, அந்தப் பகுதியைப் பற்றிய அவர்களின் அறிவை பயன்படுத்திக் கொண்டனர். தற்காலத்தில் இத்தேவைகள் இல்லாவிட்டாலும், பெயர்கள் இன்னும் தொடரப்பட்டு வருகின்றன."
Q60. CAVALRY - குதிரைப்படை என்பது என்ன?
குதிரைகள் மீது அமர்ந்து போரில் ஈடுபடும் அணி. சமீப காலங்களில் இவ்வகைப்படை, பிராணி வதைத் தடுப்பு சட்டங்களாலும், விஞ்ஞான முன்னேற்றத்தாலும், தேவையற்றதாகி விட்டது. இருப்பினும், அணி வகுப்புகளுக்கும் கூட்ட நெரிசல்களை சமாளிக்க இன்னும் சில நாடுகளில் இப்படைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. (இந்தியாவையும் சேர்த்து)
Q61. இந்திய ராணுவத்தின் குதிரைப்படைகள் எவை?
இரண்டு. 1. குடியரசுத் தலைவரின் காவல் படை - 1773.
2. 61வது குதிரைப்படை, ஜெய்ப்பூர் ஆகிய இரண்டு மட்டும்.
இவை தவிர கூட்ட நெரிசல்களை சமாளிக்க காவல் துறையினரும் குதிரைகளை பயன்படுத்துகின்றனர். இவை படையாக கருதப்படுவதில்லை."
Q62. போர் தளவாடங்கள் - COMBAT VEHICLES - என்பது என்ன?
போரின் போது பயன்படுத்தப்படும் சக்கரம் பொருத்திய தளவாடங்கள். இவற்றுள் அநேக வகைகள் இருந்தாலும், முக்கியமான மூன்று : -
1. முதன்மை போர் பீரங்கிகள் - MAIN BATTLE TANKS.
2. ஆர்ட்டிலரி (ARTILLERY) என்று அழைக்கப்படும் சக்கரம் பொருத்திய வாகனங்கள் மீது பீரங்கி துப்பாக்கிகளூம், ஏவுகணை உந்துகளும்.
3. பாலங்கள் கட்டும் வாகனங்கள் - BRIDGE LAYER TANKS.
Q63. முதன்மை போர் பீரங்கிகள் என்பது என்ன? நம் நாட்டில் என்னென்ன வகை பீரங்கிகள் பயனில் இருந்தன / உள்ளன?
எவ்வகை தரை வழியாக இருந்தாலும் செல்லக்கூடிய பிரத்தியேக சக்கரங்கள் (இரும்பு பல் சக்கரங்கள்) பொருத்தப்பட்ட வாகனங்கள். இவற்றின் மீது பீரங்கிகள் பொருத்தப்பட்டிருக்கும்.
1. வைஜயந்தா-:1965ல் இந்திய ராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் பீரங்கி, 1983ல் ராணுவப் பயனிலிருந்து நீக்கப்பட்டது.
2. T72, T90 : ரஷ்யா அனுமதியுடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பயனில் உள்ள பீரங்கிகள்.
3. அர்ஜுன் : இந்தியாவிலேயே தயார் செய்யப்பட்டு 2004 முதல் இந்திய ராணுவத்தின் பணியில் உள்ளது."
Q64. முதன்மை போர் பீரங்கிகள் - MAIN BATTLE TANKS - இந்தியாவில் எங்கு தயாரிக்கப்படுகிறது?
கனரக வாகன தொழிற்சாலை - HEAVY VEHICLES FACTORY - ஆவடி, சென்னை.
Q65. ஏவுகணை - MISSILE - என்பது என்ன?
ஒரு ஆயுதம் அல்லது உந்து பொருள் ஒரு குறிப்பட்ட இட த்திலிருந்து, ஒரு குறிப்பிட்ட இலக்கைத் தாக்கக் கூடிய ஆயுதம். இது பொதுவாக ஒரு உந்து வாகனத்தின் மூலம் ஏவப்படுகிறது.
Q66. ஏவுகணை தொழிற் நுட்பத்தின் முன்னோடி என கருதப்படும் இந்திய அரசர் யார்?
திப்பு சுல்தான் - இவர் இரண்டாவது ஆங்கிலேய மைசூர் (1780-1784) போரின் போது ஏவுகணைகளை பயன்படுத்தியது. பிற்கால ஏவுகணை செயல்திட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது.
Q67. நம் நாட்டின் செயல்பாட்டின் உள்ள ஏவுகணைகள் யாவை?
1. அக்னி ஏவுகணை : 1989ல் பரிசோதனை செய்யப்பட்டு, பிறகு பல மேம்பாடுகள் மற்றும் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டு, 1991 முதல் வேறுபட்ட கால இடைவெளிகளில் இதன் சில வகைகள் ராணுவத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அவை :-
அக்னி-AGNI: இந்த வகை ஏவுகணைகளில் ஆறு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அக்னி 1 - 700 முதல் 1250 கி.மீ. வரை.
அக்னி 2 - 2000 முதல் 3500 கி.மீ.வரை.
அக்னி 3 - 3500 முதல் 5000 கி.மீ வரை.
அக்னி 4 - 3000 முதல் 4000 கி.மீ. வரை.
அக்னி 5 - 5500 முதல் 8000 கி.மீ. வரை.
அக்னி 6 - 8000 முதல் 10000 கி.மீ. வரை. (இது மட்டும் இன்னும் பரிசோதனை நிலையிலுள்ளது).
2. நாக் - NAG : 3 முதல் 7 கி.மீ தூரத்திலுள்ள பீரங்கிகளை குறி வைத்து தாக்க க்கூடியது. பரிசோதனைகள் முடிந்து தயாரிப்பு நிலையில் உள்ளது.
3. ப்ருத்வி - PRITHVI : பரிசோதனைகளுக்குப் பிறகு 1988 முதல் 2004க்குள் இதன் நான் கு வகைகள் ராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ப்ருத்வி 1-150 கி.மீ; ப்ருத்வி 2 - 250-350 கி.மீ; ப்ருத்வி 3 - 350-600 கி.மீ. இந்த வகை ஏவுகணைகள் முப்படைகளிலும் புழக்கத்தில் உள்ளன. இதன் இன்னொரு வகை - தனுஷ் - 350 கி.மீ. இவ்வகை ஏவுகணைகள் கப்பற்படையில் புழக்கத்தில் உள்ளன.
4. ஆகாஷ் - AKASH : 2009ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஏவுகணை. ராணுவத்திலும், வான் வழிப்படையிலும் புழக்கத்தில் உள்ளது. இதன் தாக்குதல் தூரம் 30 கி.மீ.
5. அஸ்த்ரா - ASTRA : வானிலிருந்து வானிலுள்ள இலக்கை தாக்க க்கூடிய ஏவுகணை. வான்படை உபயோகத்தில் உள்ள இந்த ஏவுகணை 110-150 கிமீ தூரம் வரை தாக்கும் சக்தி படைத்த்து.
6. சாகரிகா - SAGARIKA : இது ஒரு அணுசக்தி கொண்ட ஏவுகணை. நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து ஏவப்படும் இந்த வகை ஏவுகணைகளின் தாக்குதல் தூரம் - 700 கி.மீ.
7. ப்ரம்மோஸ் - BRAHMOS : இதன் பெயர் இந்திய நதியான பிரம்மபுத்திரா மற்றும் ரஷ்யாவின் மோஸ்க்வா நதியில் இருந்து பெறப்பட்டது. இது ஒரு அதிவேக (Supersonic) ஏவுகணை. இதன் தாக்குதல் தூரம் - 500 கி.மீ. 2006ல் இருந்து முப்படைகளிலும் பயனிலுள்ளது.
எல்லா ஏவுகணைகளும் ""ஒருங்கிணைந்த வழிவகுக்கப்பட்ட ஏவுகணை மேம்பாட்டு திட்ட""த்தின் கீழ் (Integrated Guided Missile Programme) மேம்படுத்தப்பட்டு, தயாரிக்கப்பட்டு, ராணுவத்தில் அவ்வப்போது சேர்க்கப்படுகின்றன."
Q68. நம் நாட்டின் ஏவுகணை பரிசோதனை தளம் எங்குள்ளது?
வீலர் தீவு - சாந்திபூர் - ஒடிசா - (வங்காள விரிகுடா - வில் உள்ளது).
Q69. நம் நாட்டில் தயாரிக்கப்பட்டு புழக்கத்தில் இருக்கும் முதல் மற்றும் கடைசி (2015 வரை) ஏவுகணை எது?
முதல் அக்னி (1993) கடைசி ப்ரம்மோஸ் - 2006.
Q70. நம் நாட்டில் ராணுவத்திற்கு தேவைப்படும் உபகரணங்கள், ஆயுதங்கள், தளவாடங்கள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியின் மத்திய கழகம் எது?
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகம் - Defence Research and Development Organization – DRDO - டெல்லி - தலைமையகம் - 1958ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பின் கீழ் சுமார் 52 ஆய்வகங்களும், 5000 நேரடி விஞ்ஞானிகளும், 25000 மறைமுக விஞ்ஞானிகள் / சிப்பந்திகள் சம்பந்தப்பட்டுள்ளனர். இந்த அமைப்பு ஒரு டைரக்டரின் கீழ் இயங்குகிறது.
Q71. இந்திய ராணுவ தளவாடங்கள் பற்றிய சில முக்கியமான ஆராய்ச்சி நிறுவன ங்கள்....
1.   Aerial Delivery R&D Establishment, Agra.
2.   Vehicle R & D Establishment, Ahmednagar.
3.   Combat vehicle R & D Establishment, Avadi, Chennai.
4.   Aeronautical Development Establishment, Bengaluru.
5.   Electromico Radar Development Establishment, Bengaluru.
6.   Gas Turbine Research Establishment, Bengaluru.
7.    Naval Chemical & Metallurgical Laboratory, Mumbai.
8.    Defence Research & Development Unit, Kolkatta.
9.    Terminal Ballistic Research Laboratory, Chandigarh.
10.   Naval Physical & Oceanographic Laboratory, Cochin.
11.   Explosives R & D Laboratory, Pune.
12.   Institute of Armament Technology, Pune.
13.   Naval Science & Technological Laboratory, Visakhapatnam.
14.   Aeronautical Development Establishment, Bengaluru.
15.   Armament Research & Development Establishment, Pune.
16.   Centre for Air borne Systems, Bengaluru.
17.   Centre for Artificial Intelligence & Robotics, Bengaluru.
18.   Defence Terrain Research Laboratory, Delhi.
19.   Solid State Physics Laboratory, Delhi.
20.   Defence Food Research Laboratory, Mysore. "
Q72. ராணுவத்துக்கு தேவையான பொருட்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள முக்கியமான பொதுத்துறை நிறுவன ங்கள் ( ) யாவை?

1.   Bharat Heavy Electrical Ltd.,
2.  Bharat Earth Movers Ltd, Bengaluru.
3.  Bharat Dynamics Ltd., Hyderabad."
Q73. ராணுவத்தில் பெண் அதிகாரியாக சேர்ந்த முதல் பெண்மணி யார்?
ப்ரியா ஜிங்கான் - 1992 - 93. (இவ ருக்கு முன்னால் சேர்ந்த புனிதா அரோரா, மருத்துவ டாக்டர்)
Q74. இந்திய ராணுவத்தில் லெஃப்டினென்ட் ஜெனரல் பதவியை அடைந்த முதல் பெண்மணி யார்?
புனிதா அரோரா, பெண் மருத்துவர்.
Q75. இந்திய ராணுவத்தில் "மெரூன் பெர்ரெட்ஸ்" "MAROON BERETS" என்று அழைக்கப்படுபவர்கள் யார்?
பாராசூட் வீர்ர்கள்.
Q76. இந்தியா சுதந்திரம் அடைந்த போது இந்திய ராணுவத்தின் முக்கிய தளபதி யார்?
ஜெனரல் சர். ராபர்ட் மெக் க்ரெகார் - 15.8.1947 - 31.12.1947. இவருக்கு பிறகு இருந்த ஆங்கிலேய தளபதி - ஜெனரல் சர் ஃப்ரான்சிஸ் ராபர்ட் புச்சர் - 1.1.1948 - 15.1.1949.
Q77. இந்திய ராணுவத்தின் முதல் இந்திய தளபதி யார்?
கொடண்டேரா மாடப்பா கரியப்பா - 16.1.1949 - 14.1.1953.
Q78. 1971ல் இந்தியா - பாகிஸ்தான் (வங்காள தேச) போரின் போது இருந்த இந்திய ராணுவ தளபதி யார்?
ஜெனரல் S H F J மானேக் ஷா.
Q79. ராணுவ பயிற்சியில் "PIPING OUT" விழா என்பது என்ன?
ராணுவத்தில் அதிகாரிகளாக தேர்ந்து எடுக்கப்பட்டு, பயிற்சி முடித்து, நட த்தப்படும் அணிவகுப்பின் போது, அவர்களின் பதவியை குறிக்கும் வகையில் அளிக்கப்படும் நட்சத்திர பட்டைகள் அணிவிக்கும் விழா.
Q80. ராணுவத்தில் நேரடிப் போரில் ஈடுபடுபவர்களுக்கும், அவர்களுக்கு துணை (SUPPORT) புரியும் வீரர்களின் விகிதாசாரம் என்ன?
32:1 - பல் (32) : வால் (1) - Teeth to Tail ratio.
Q81. இந்திய ராணுவத்தின் முக்கிய தளபதிகளாக இருந்தவர்கள்.....
வ.எண் பெயர் முதல் முடிவு
1 சர் ராபர்ட் மெக் க்ரகார் 15.8.1947 31.12.1947
2 சர் ஃப்ரான்சிஸ் ராபர்ட் புச்சர் 1.1.1948 15.1.1949
3 K.M. கரியப்பா 16.1.1949 14.1.1953
4 மஹாராஜ் ராஜேந்திர சிங்ஜி ஜடேஜா 14.1.1953 14.5.1955
5 சத்யவந்த் மல்லன ஸ்ரீ நாகேஷ் 14.5.1955 7.5.1957
6 கொடண்டேரா சுப்பைய்யா திம்மைய்யா 8.5.1961 7.5.1961
7 ப்ரான் நாத் தாப்பார் 20.11.1962 19.11.1962
8 ஜெயந்தோ நாத் சவுத்ரி 8.6.1966 7.6.1966
9 பரமசிவ ப்ரபாகர் குமாரமங்கலம் 8.6.1969 7.6.1969
10 SHFJ மானேக் ஷா 8.6.1969 15.1.1973
11 கோபால் குருநாத் பேவூர் 16.1.1973 31.5.1975
12 தபீஷ்வர் நாராயண் ரைனா 1.6.1975 31.5.1978
13 ஓம் பிரகாஷ் மல்ஹோத்ரா 1.6.1978 31.5.1981
14 K.V. கிருஷ்ணராவ் 1.6.1981 31.7.1983
15 அருண் ஸ்ரீதர் வைஸ்யா 1.8.1983 31.1.1985
16 கிருஷ்ணசாமி சுந்தர்ஜி 1.8.1983 31.1.1985
17 விஷ்வ நாத் சர்மா 1.6.1988 30.6.1990
18 S.F. ராட்ரிக்ஸ் 1.7.1990 30.6.1993
19 பிபின் சந்திர ஜோஷி 1.7.1993 19.11.1994
20 சங்கர் ராய் சௌத்ரி 20.11.1994 30.9.1997
21 வேத் ப்ரகாஷ் மாலிக் 1.10.1997 30.9.2000
22 சுந்தரராஜன் பத்மநாபன் 1.10.2000 30.12.2002
23 நிர்மல் சந்தர் விஜ் 31.12.2005 31.1.2005
24 ஜொகிந்தர் ஜஸ்வந்த் சிங் 31.1.2005 30.9.2007
25 தீபக் கபூர் 30.9.2007 31.3.2010
26 விஜய் குமார் சிங் 31.3.2010 31.5.2012
27 பிக்ரம் சிங் 31.5.2012 31.7.2014
28 தல்பீர் சிங் சுஹாக் 31.7.2014 31.12.2016
29 பிப்பின் ராவத்  01.01.2017 ................
       
       
       
       

Q82. இந்திய ராணுவத்தின் நீதிவாக்கு (MOTTO)
“Service Before Self” "தனக்கு முன் சேவை"
Q83. இந்திய ராணுவத்தில் பணிபுரிபவர்கள் எண்ணிக்கை?
11,29,900
Q84. இந்திய ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட வர்ணங்கள் .....
மஞ்சள், சிகப்பு, கருப்பு.
Q85. இந்திய முப்படை ராணுவத்தின் "ரகசிய குறியீட்டுத்" தாக்குதல்கள் யாவை? (Coded Operations)
1. மேக்தூத் - MEGHDOOT : 13.4.1984. காஷ்மீரின் சியாச்சென் பனிப்பாறை (Siachen Glacier) பகுதியை பாகிஸ்தானிடமிருந்து மீட்டது.
2. பவன் - OPERATION PAWAN : 11-25 அக்டோபர் 1987. ஸ்ரீலங்காவில் இந்திய அமைதிப்படை (Indian Peace Keeping Force), யாழ்ப்பாணம் பகுதியை, LTTE யிடம் இருந்து மீட்டது.
3. காக்டஸ் - OPERATION CACTUS : நவம்பர் 1988. மாலத்தீவில் அரசாங்கத்தை, ஸ்ரீலங்கா தமிழ் புரட்சியாளர்கள் உதவியுடன் மாலத்தீவின் சில புரட்சியாளர்கள், கைப்பற்ற முயற்சித்ததை தடுத்து காப்பாற்றியது.
4. போலோ - OPERATION POLO : 13-18, செப்டம்பர், 1948. ஹைதராபாத் நிஸாம் இந்தியாவுடன் இணைய மறுத்தபோது, அதை இந்த நடவடிக்கை மூலம் கைப்பற்றி இந்தியாவுடன் இணைத்தது.
5. விஜய் - OPERATION VIJAY : டிசம்பர் 1961. போர்த்துகீசியர்களிடமிருந்து கோவாவை கைப்பற்றி இந்தியாவுடன் இணைத்தது.
6. ப்ளாக் டோர்னேடோ - BLACK TORNADO : 26.11.2008 முதல் 29.11.2008. மும்பை தாஜ் ஹோட்டலில் பதுங்கியிருந்த பாகிஸ்தானிய தீவிரவாதிகளை, இந்திய பாதுகாப்பு காவலர்கள் (Indian Security Guards) உதவியும் போராடி கைப்பற்றியது.
7. பூமாலை - OPERATION POOMALAI – EAGLE MISSION : 1987-88. ஸ்ரீலங்காவில் பணிபுரிந்து கொண்டிருந்த இந்திய அமைதிப்படைக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வி நியோகம் செய்தது.
8. சுகூன் - OPERATION SUKOON : இது தாக்குதலுக்காக நடத்தப்பட்டது அல்ல. 2006ல் லெபனான் நாட்டில் ஏற்பட்ட போரின் போது, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய, ஸ்ரீலங்க மற்றும் நேபாள மக்களை பத்திரமாக அழைத்து வருவதற்காக நடத்தப்பட்டது."
Q86. முக்கிய பிரமுகர்கள் (VIP - குடியரசு தலைவர், பிரதமர், Etc.,) பாதுகாப்பு அளிக்கும் படைகளின் வகைகள் யாவை?
W, X, Y, Z மற்றும் Z+ .
Q87. இந்திய விமானப் படை - INDIAN AIR FORCE:
Q88. இந்திய விமானப்படை எப்போது ஆரம்பிக்கப்பட்ட து?
இந்திய வான்படைச் சட்டம் 1932ன் படி 8.10.1932 முதல் ஆரம்பிக்கப்பட்ட து. அப்போது ராயல் இந்தியன் விமானப்படை என்று அழைக்கப்பட்ட து.
Q89. ராயல் இந்தியன் விமானப்படை எப்போது முதல் இந்திய விமானப்படையாக மாறியது?
26.1.1950 முதல்
Q90. இந்திய விமானப்படையின் குறிக்கோள் வாக்கு (Motto) என்ன?
"புகழுடன் வானத்தை தொடு - Touch the Sky with Glory" இவ்வாக்கியம் பகவத் கீதையின் இரண்டாவது அத்தியாயத்தில் உள்ளது.
Q91. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய விமானப்படையின் முதல் முக்கிய தளபதி யார்?
சர் தாமஸ் எல்ம் ஹர்ஸ்ட் 15.8.1947 - 23.2.1950
Q92. இந்திய விமானப்படையின் முதல் இந்திய முக்கிய தளபதி யார்?
ஏர் மார்ஷல் சுப்ரோதோ முகர்ஜி - 1.4.1954 - 31.3.1955
Q93. இந்திய விமானப்படையில் பெண் விமானிகள் எப்போதிலிருந்து சேர்க்கப்படுகிறார்கள்?
டிசம்பர் 1994.
Q94. இந்திய விமானப்படையின் முதல் அணி (SQUADRON) எப்போது அமைக்கப்பட்டது?
1.4.1933 முதல். அதில் ஐந்து இந்திய விமானிகளும் ஒரு ராயல் விமானப்படை அதிகாரியும் இடம் பெற்று இருந்தனர். நான்கு WESTLAND WAPITI விமானங்கள் இந்த அணியில் இருந்தன.
Q95. இந்திய விமானப்படை அதிகாரிகளின் (COMMISSIONED RANKS) வரிசை மேலிருந்து கீழாக குறிப்பிடுக.

1.    Marshall Of The Indian Air Force  - மார்ஷல் ஆஃப் தி இண்டியன் ஏர்ஃபோர்ஸ் – கௌரவப்பட்டம்
2.    Air Chief Marshall – பணியில் முதல் இடம்
3.   Air Marshall -- ஏர் மார்ஷல்
4.   Air Vice Marshall -- ஏர் வைஸ் மார்ஷல்
5.   Air Commodore -- ஏர் கம்மடோர்
6.   Group Captain -- க்ரூப் கேப்டன்
7.   Wing Commander -- விங் கமாண்டர்
8.   Squadron Leader -- ஸ்குவார்டன் லீடர்
9.   Flight Lieutenant -- ஃப்ளைட் லெஃப்டினண்ட்
10. Flying Officer -- ஃப்ளையிங் ஆஃபீஸர்
11. Pilot Officer – பைலட் ஆஃபீஸர்   -   இந்தப் பணியில் UPSC மூலம் தேர்வு செய்யப்பட்டு, பிறகு பதவி உயர்வு அடிப்படையில் முன்னேறுகிறார்கள்.
Q96. இந்திய விமானப்படையின் அதிகாரிகள் அல்லாத (NON-COMMISSIONED RANKS) பணியாளர்கள் யாவர்?
1.  Master Warrant Officer – மாஸ்டர் வாரண்ட் ஆஃபீஸர்
2.  Warrant Officer - வாரண்ட் ஆஃபீஸர்
3.  Junior Warrant Officer - - JUNIOR COMMISSIONED OFFICER - ஜூனியர் வாரண்ட் ஆஃபீஸர்
4.  Sergeant - சார்ஜன்ட்
5.  Corporal - கார்ப்போரல்
6.   Leading Aircraftsman - லீடிங் ஏர்கிராஃப்ட்ஸ் மேன்
7.  Aircraftsman - ஏர்கிராஃப்ட்ஸ் மேன் - இந்த நிலையில் தான் பணியில் அமர்த்தப்பட்டு பிறகு பதவி உயர்வின் மூலம் முன்னேறுவர்."
Q97. இந்திய விமானப்படை நிர்வாக ரீதியாக எத்தனை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?

1.  Western Air Command – வெஸ்டேர்ன் ஏர் கமாண்ட்-New Delhi
2.   Eastern Air Command – ஈஸ்டர்ன் ஏர் கமாண்ட் - Shilling, HP.
3.   Central Air Command – சென்ட்ரல் ஏர் கமாண்ட்Allahabad – UP
4.   Southern Air Command – சதர்ன் ஏர் கமாண்ட் - Thiruvananthapuram, Kerala
5.   South West Air Command – சௌத் வெஸ்ட் ஏர் கமாண்ட் - Gandhi Nagar, Gujarat
6.   Training Command - ட்ரெய்னிங் கமாண்ட் - Bengaluru – Karnataka
7.   Maintenance Command - மெயிண்ட்டெனன்ஸ் கமாண்ட் - Nagpur, Maharashtra"
Q98. இந்திய விமானப்படையில் WINGS எனக் கூறப்படுவது என்ன?
"இது ஒரு பெரிய விமான படை அணி. இதில் சில சிறிய அணிகளும் (SQUADRONS) மற்றும் ஹெலிப்காப்டர் அணிகளும் அடங்கியிருக்கும். இவ்வகையில் சுமார் 49 பெரிய அணிகளும் (WINGS), சுமார் 19 எல்லைப் பணி சகாய அணிகளும் இயங்குகின்றna. WINGS என்பது COMMAND க்கும் SQUADRONS க்கும் இடைப்பட்ட நிலை. பொதுவாக இந்த அமைப்புகள் GROUP CAPTAIN தலைமையில் இயங்குகிறது."
Q99. இந்திய விமானப்படையில் SQUADRON என அழைக்கப்படுவது ....
சிறிய படை அணி. இவ்வகையில் இந்தியா முழுவதும் நிறைய அணிகள் உள்ளன. இவ்வகை அணிகள் ஒவ்வொரு விமானப்படை நிலையங்களிலும் இருக்கும். இவை, பொதுவாக ஒரு WING COMMANDER தலைமையில் இயங்கும்.
Q100. இந்திய விமானப்படையில் சுமார் எத்தனை SQUADRONS உள்ளன?
(1). போர், தரை வழி தாக்குதல், குண்டுவீச்சு - 42;
(2). ஹெலிகாப்டர் - 4;
(3). போக்குவரத்து - 13"
Q101. FLEET என்பது என்ன? இந்திய விமானப்படையில் இவை எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளன?
FLEET என்பது வாகனங்களின் தொகுப்பு. நிர்வாக வசதிகளுக்காக, இந்திய விமானப்படையில் இவை TRANSPORT - போக்குவரத்து, FIGHTER - போரில் ஈடுபடும் அணி, HELICOPTOR என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
TRANSPORT - போக்குவரத்து : இதன் முக்கிய பணி, வீர ர்களையும், தளவாடங்களையும், பொருட்களையும் தேவைப்பட்ட இடத்திற்கு விமானங்கள் (பல வகைகள்) மூலம் எடுத்துச் செல்வது.
FIGHTER - போரில் ஈடுபடும் அணி : நேரடியாக போரில் பலவகை போர் விமானங்கள் மூலம் ஈடுபடுவது (போர் விமானங்கள் - MIG 29, MIRAGE 2000, SUKHOI 30)
HELICOPTOR - ஹெலிகாப்டர் : பொதுவாக மேற்கூறிய இரண்டுக்கும் உதவுவது. CHETAK, CHEETAH, DHRUV, Mi ரக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன."
Q102. இந்திய விமானப்படையின் வானில் வீர சாகசம் புரியும் அணிகள் (Acrobatic and Display Team) யாவை
"1. சூர்ய கிரண் - SURYAKIRAN = SUN RAYS : கர் நாடகாவின் பிதார் என்ற இடத்தில் இயங்கும் அணி. (இதற்கு முன்னால் இது ""தண்டர் போல்ட்"" (THUNDER BOLT) என்று அழைக்கப்பட்டது.
2. சாரங் - SARANG = PEACOCK : ஹெலிகாப்டர் மூலம் வானில் சாகசங்கள் புரியும் அணி. பெங்களுரிலிருந்து இயங்கும் இந்த அணி, உலகத்திலேயே மூன்றாவது அணி. மற்றும் ஆகிய இரண்டு இங்கிலாந்து கப்பல் படையை சேர்ந்த அணிகள் முதல் இரண்டாகும்."
Q103. இந்தியா விமானப்படையின் "நிஷாந்த் - NISHANT" என்பது என்ன?
ஆளில்லா வான் வெளி வாகனம். போர் நடக்கும் பகுதிகளில் கண்காணித்து, எதிரிகள் பகுதிகளில் தூரத்தில் உள்ள இலக்குகளை அடையாளம் காட்ட பயன்படுத்தப்படுகிறது. 1996ல் பெங்களூருவில் தயாரிக்கப்பட்டு 1999 முதல் பயன்பாட்டில் உள்ளது.
Q104. இந்தியாவில் தயாரிக்கப்படும் போர் விமானம் .....
MIG தொடர் விமானங்கள் - இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்., பெங்களூரு.
Q105. இந்திய விமானப்படையின் பயிற்சி நிலையங்கள் எங்குள்ளன?
1. விமானப்படை அகாடமி - Air Force Academy - துண்டிகல், ஹைதராபாத்.
2. விமான ஓட்டி பயிற்சி பள்ளி - Pilot Training Establishment - அலகாபாத்.
3. விமானப்படை நிர்வாக பணியாளர் கல்லூரி - Air Force Administrative Staff College - கோயம்புத்தூர்.
4. வான்வெளி பயண மருத்துவ கல்லூரி - School of Aviation Medicine, Bengaluru - பெங்களூரு.
5. விமானப்படை தொழிற் நுட்ப கலைக்கல்லூரி - Air Force Technical Training College - பெங்களூரு.
6. பாராசூட் வீரர்கள் பயிற்சிப் பள்ளி - Paratroopers Training School, Agra - ஆக்ரா.
7. விமானி பயிற்சியாளர் பள்ளி - Flying Instructors School - தாம்பரம், சென்னை.
8. வான்வழிப்போர் கல்லூரி - College of Air Warfare - செகந்திராபாத்."
Q106. விமானப்படையுடன் சம்பந்தப்பட்ட உற்பத்தித் தொழிற்சாலைகள் எவை?
1. ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் லிமிடெட் - HINDUSTAN AERONAUTICS LTD., - பெங்களூரு - 1940ல் ஆரம்பிக்கப்பட்டு 1964 முதல் இந்த பெயரில் இயங்குகிறது. விமான ங்கள், உதிரி பாகங்கள், விமானப்படை ஆயுதங்கள், மின்னணு பாகங்கள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இது ஒரு இந்திய அரசாங்க பொதுத் துறை நிறுவனம்.
2. பாரத் எலக்ட் ரானிக்ஸ் லிமிடெட் - BHARAT ELECTRONICS LIMITED - பெங்களூரு - 1954ல் தொடங்கப்பட்ட இந்த பொதுத்துறை நிறுவனம், ஒன்பது இடங்களில் இதன் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் முக்கிய பணி இந்திய விமான படைக்கு தேவையான மின்னணு பொருட்களை தயாரிப்பது. ""நவரத்ன"" தொழிற் நிறுவன ங்களில் இதுவும் ஒன்று.
Q107. இந்திய விமானப் படையின் - வான்வழி - தரை வழி பயிற்சி (Air to Ground Exercise) எவ்வாறு அழைக்கப்படுகிறது.
வாயு சக்தி - VAYU SHAKTI
Q108. இந்திய விமானப் படையின் கமாண்டோ படை (அதிரடிப்படை)யின் பெயர் என்ன?
கருடா.
Q109. "பரம் வீர் சக்ரா" (உயரிய வீர சாகச விருது) பெற்ற ஒரே இந்திய விமானப்படை அதிகாரி யார்?
நிர்மல் ஜித் சிங் சேக்கோன் - இந்தியா - பாகிஸ்தான். 1971 போரின் போது, ஸ்ரீ நகர் விமானப்படை தளத்தை பாகிஸ்தான் தாக்குதலின் போது புரிந்த வீர செயல்களுக்காக இவ்விருது வழங்கப்பட்ட து.
Q110. இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷல் (AIR MARSHAL) அளவுக்கு உயர்ந்த முதல் பெண்மணி -
பத்மாவதி பந்தோபாத்யா - இவர் ஒரு மருத்துவ டாக்டர்.
Q111. FIGHTING FALCON என்பது எந்த வகை போர் விமானங்களை சார்ந்தது?
F16
Q112. இந்திய விமானப்படை தளபதிகள் :
வ.எண் பெயர் முதல் வரை
1 சர் தாமஸ் எல்ம்ஹர்ஸ்ட் 15.8.1947 23.2.1950
2 சர் ரொனால்டு ஐவ்லா சாப்மேன் 23.2.1950 09.12.1951
3 ஜெரால்டு கிப்ஸ் 10.12.1951 31.03.1954
4 சுப்ரோதோ முகர்ஜி 01.04.1954 08.11.1960
5 ஏஸ்பி இஞ்சினியர் 01.12.1960 31.07.1964
6 அர்ஜன் சிங் 01.08.1964 15.07.1969
7 ப்ரதாப் சந்திர லால் 16.07.1969 15.01.1973
8 ஓம் பிரகாஷ் மெஹ்ரா 16.01.1973 31.01.1976
9 ஹ்ரிஷிகேஷ் மூல்காவ்கர் 01.02.1976 31.08.1978
10 இத்ரீஸ் லதீஃப் 01.09.1978 31.08.1981
11 தில்பாக் சிங் 01.09.1981 03.09.1984
12 லக்ஷ்மண் மோகன் காத்ரே 03.09.1984 01.07.1985
13 டெனிஸ் லா ஃபோண்டெய்ன் 03.07.1985 31.07.1988
14 சுரிந்தர் மெஹ்ரா 01.08.1988 31.07.1991
15 நிர்மல் சந்திர சூரி 31.07.1991 31.07.1993
16 ஸ்வரூப் கவுல் 01.08.1993 31.12.1995
17 K. மஹா தேவன் 31.12.1995 31.12.1998
18 அனில் டிப்னிஸ் 31.12.1998 31.12.2001
19 S.கிருஷ்ண சாமி 31.12.2001 31.12.2004
20 சஷீந்திர பால் த்யாகி 31.12.2004 31.03.2007
21 ஃபாலி ஹோமி மேஜர் 31.03.2007 31.03.2009
22 ப்ரதீப் வசந்த் நாயக் 31.03.2009 31.07.2011
23 நார்மன் அனில்குமார் ப்ரௌன் 31.07.2011 31.12.2013
24 அரூப் ராஹா 31.12.2013 31.12.2016
25 பிரேந்தர் சிங் தனோவா  01.01.2017 .............
       
       
       
       

Q113. இந்திய விமானப்படை தளபதிகளுள் "மார்ஷல் ஆஃப் தி இந்தியன் ஏர்ஃபோர்ஸ்" (Marshal of the Indian Air Force) என்ற கௌரவ பட்ட த்தைப் பெற்ற ஒரே தளபதி யார்?
ஏர் சீஃப் மார்ஷல் அர்ஜன் சிங்
Q114. நீண்ட நாட்கள் விமானப்படை தளபதியாக இருந்தவர் யார்?
சுப்ரோதோ முகர்ஜி - 5 வருடம் ஏழு மாதங்கள்.
Q115. இந்திய கப்பற்படை: INDIAN NAVY
Q116. இந்திய கப்பற்படை பின்னணி என்ன?
இந்திய மன்னர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கடல் வழியாக வாணிபத்தில் ஈடுபட்டிருந்தது சரித்திரம். ஆங்கிலேயர்கள் தங்கள் வியாபாரத்தை பெருக்க கடல் வழி போக்குவரத்தை அதிகரித்தனர். இதையடுத்து 1830ல் ராணியின் இந்திய கப்பற்படை (Her Majesty’s Indian Navy) தொடங்கப்பட்டது. இதுவே 1834ல் அரச இந்திய கப்பற்படை (Royal Indian Navy) என உருமாறியது. இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, 26.1.1950 முதல் "இந்திய கப்பற்படையாக மாறியது. (Indian Navy)
Q117. இந்திய கப்பற்படையின் நீதிவாக்கு (motto ) என்ன?

“May the Lord of the Ocean be auspicious unto us” "கடல் கடவுள் நம் மீது அருள் புரியட்டும்"

Q118. ஆங்கிலேயர் கப்பற்படையில் அதிகாரியாக பதவி உயர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் யார்?
D. N. முகர்ஜி - 1928ல்.
Q119. சுதந்திரத்திற்கு பிறகு இந்திய கப்பற்படையின் முக்கிய தளபதி யார்?
ஜான் டேல்பாட் சேவிக்னாக் ஹால் - 15.8.1947 முதல் 14.8.1943 வரை.
Q120. இந்திய கப்பற்படையின் முதல் இந்தியர் முக்கிய தளபதி யார்?
ராம் தாஸ் கட்டாரி - 22.4.1958 - 4.6.1962.
Q121. இந்திய கப்பற்படையில் அதிகாரிகள் பதவி அங்கங்களை மேலிருந்து கீழாக வரிசைப்படுத்துக.

1.       ADMIRAL OF THE FLEET - அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் - இது ஒரு கௌரவப்பட்டம்.
2.       ADMIRAL - அட்மிரல்
3.       VICE ADMIRAL - வைஸ் அட்மிரல்
4.       REAR ADMIRAL - ரியர் அட்மிரல்
5.       COMMODORE - கம்மோடோர்
6.       CAPTAIN - கேப்டன்
7.       COMMANDER - கமாண்டர்
8.       LIEUTENANT COMMANDER - லெஃப்டினென்ட் கமாண்டர்
9.       LIEUTENANT - லெஃப்டினென்ட்
10.     SUB LIEUTENANT - சப் லெஃப்டினென்ட்
11.     MID SHIPMAN - மிட்ஷிப் மேன்.
கீழ்மட்ட நிலை அதிகாரியாக UPSC நடத்தும் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தக்க பயிற்சிக்குப் பிறகு பணி அமர்ந்து, பதவி உயர்வு மூலம் முன்னோக்கி செல்கின்றனர்."
Q122. இந்திய கப்பற்படையில் அதிகாரிகள் அல்லாத பணியாளர்களின் அங்கங்களை வரிசைப்படுத்துக.
1. MASTER CHIEF PETTY OFFICER I & II - மாஸ்ட ர் சீஃப் பெட்டி ஆஃபீஸர்.
2. CHIEF PETTY OFFICER - சீஃப் பெட்டி ஆஃபிஸர்.
3. PETTY OFFICER - பெட்டி ஆஃபிஸர் இந்த மூன்று பதவியிலிருப்பவர்கள் JUNIOR COMMISSIONED OFFICER என அழைக்கப்படுகிறார்கள்.
4. LEADING SEAMAN - லீடிங் சீ மேன்
5. SEAMAN I & II - சீ மேன் 1& 2
கீழ்மட்ட நிலையில், இந்தியாவில் பல இடங்களில் அவ்வப்போது நடத்தப்படும் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி உயர்வு மூலம் முன்னேறுகிறார்கள்.
Q123. இந்திய கப்பற்படையின் நிர்வாக மண்டல அமைப்புகள் யாவை?
1. கிழக்கு மண்டலம்-Eastern Command - விசாகப்பட்டினம்
2. மேற்கு மண்டலம் - Western Command - மும்பை.
3.தெற்கு மண்டலம் - Southern Command - கொச்சி - இது பயிற்சி மண்டலமாக திகழ்கிறது. மண்டலங்கள் FLAG OFFICER COMMANDING IN CHIEF கீழ் இயங்குகிறது.
Q124. இந்திய கப்பற்படையில் எத்தனை போர் ஆயத்த பிரிவுகள் உள்ளன? (FLEETS)
இரண்டு - மேற்கு மற்றும் கிழக்கு.
Q125. INS என்பதன் விரிவாக்கம் என்ன?
Indian Naval Ships
Q126. இந்திய கப்பற்படையின் விமான தளங்கள் எவை?

1. INS – BAAZ - அந்தமான் & நிக்கோபார்
2. INS – DEGA - விசாகப்பட்டினம்
3. INS – GARUDA - கொச்சி - வெல்லிங்டன் தீவு
4. INS – HANSA - கோவா - தாபோலிம்
5. INS – PARUNIV - ராமநாதபுரம் - திருச்சுழி
6. PORBANDAR AIRPORT - குஜராத்
7. INS – RAJALI - அரக்கோணம், தமிழ் நாடு
8. NAS SHIBPUR - அந்தமான் & நிக்கோபார்
9. INS SHIKRA - மும்பை
10. INS UTKROSH - போர்ட் ப்ளேயர், அந்தமான்"
Q127. இந்திய கப்பற்படையின் பயிற்சி அகாடமி எங்குள்ளது?
கொச்சி, கேரளா, Indian Naval Academy
Q128. இந்திய கப்பற்படையின் போர் கப்பல்கள் யாவை?
1.   INS - CHAKRA - நீர் மூழ்கி
2.   INS – ARIHANT - நீர் மூழ்கி
3.   INS – SINDHU GHOSH - நீர் மூழ்கி - இந்த வகையில் 8 கப்பல்கள் உள்ளன.
4.   INS – SHISHUMAR - நீர் மூழ்கி - இந்த வகையில் 4 கப்பல்கள் உள்ளன.
5.   INS – VIRAAT - விமானம் தாங்கி.
6.   INS – VIKRAMAADITYA -விமானம் தாங்கி.
7.   INS – JALASHWA - நீர் வழி மற்றும் ஹெலிகாப்டர் தாங்கி
8.   INS – SHARDUL - இந்த வகையில் 3 கப்பல்கள்.
9.   INS – MAGAR - இந்த வகையில் 2 கப்பல்கள்
10. INS – KUMBHIR - இந்த வகையில் 4 கப்பல்கள்
11. LCT - இந்த வகையில் நான்கு கப்பல்கள்
12. INS – KOLKATTA - போர் கப்பல்
13. INS – DELHI, MYSORE, MUMBAI
14. INS – RAJPUT, RANA, RANJIT, RANVIR, RANVIJAY - போர் கப்பல்கள்
15. INS – SHIVALIK, SATPURA, SAHYADRI - போர் கப்பல்கள்
16. INS – TALWAR, TRISHUL, TABAR, TEG, TARASH, TRIKAND - போர் கப்பல்கள்
17. INS – BRAMAPUTRA, BETWA, BEAS - போர் கப்பல்கள்
18. INS – GODAVARI, GANGA, GOMTI - போர் கப்பல்கள்
19. INS KAMORTA – 1
20. INS KORA
21. INS-KURRI – 4
22. INS-VEER -12
23. INS-ABHAY – 4
24. INS –PONDICHERRY -7
25. INS – SARAYU – 4
26. INS SUKANYA – 6
27. INS – CAR NICOBAR – 10
28. INS BANGARAM – 4
29. INS – TRIKANT
30. INS – DEEPAK – 2
31. INS – JYOTI
32. INS – ADITHYA
33. INS – MAKAR
34. INS – TIR, VARUNA, TARANGINI, SUDARSHINI - இவை பயிற்சி கப்பல்கள்.
வரிசை 8 முதல் 34 வரை உள்ளவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை . குறிப்பிட்ட பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வகையிலும் அவசியத்துக்கேற்ப சில கப்பல்கள் இயங்குகின்றன. இவற்றை தவிர்த்து பல வகை பணிகளுக்காக பல கப்பல்கள் இயங்குகின்றன.
Q129. நம் நாட்டு கப்பற்படையின் உள் நாட்டு தயாரிப்பு முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் எது?
INS – VIKRANT - விக்ராந்த்
Q130. 2015-ல் இந்திய கப்பற்படையில் சேர்க்கப்பட்ட மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பல் எது?
INS – VIKRAMAADITYA -விக்ரமாதித்யா - 16.11.2013
Q131. இந்திய கப்பற்படையின் முதல் உள் நாட்டு நீர்மூழ்கி எதிர் தாக்குதல் (Anti Submarine) கப்பல் எது?
INS KAMORTA – கமோர்ட்டா
Q132. இந்திய கப்பற்படையின் முதல் போர் கப்பல் எது?
INS – VIRAAT - இது இங்கிலாந்து கப்பற்படை HMS HERMES என்ற கப்பல் - 12.5.1987ல் இந்திய கப்பற்படையில் சேர்ந்த்து. இது ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல்
Q133. இந்திய கப்பற்படையின் "SAGAR PRAHARI BAL"- "சாகர் ப்ரஹாரி பல்" என்பது என்ன?
இந்தியாவின் கடலோர எல்லையை ரோந்து மூலம் ஊடுருவல் மற்றும் சட்ட்த்துக்கு புறம்பான செயல்களை தடுக்கவும் உருவாக்கப்பட்ட அமைப்பு. 26.11.2008 ல் மும்பை தாக்குதலுக்குப் பின் உருவாக்கப்பட்ட து. இதில் சுமார் 1000 வீர ர்களும் 80 ரோந்து படகுகளும் பயன்படுகின்றன.
Q134. இந்திய கப்பற்படை சம்பந்தப்பட்ட பயிற்சி நிலையங்கள் யாவை?
1.    INS VENDURUTHY – CHOCHIN – வெந்துருத்தி, கொச்சி
2.    NAVAL AIR STATION – GARUDA – COCHIN
3.    INS SHIVAJI – LONAVALA
4.    INS – VALSURA – JAMNAGAR
5.    INS CIRCAR – VISAKHAPATNAM
6.    INS AGRANI – COIMBATORE
7.    INS GOMENTAK – GOA
8.    INS JARAWA – PORT BLAIR
9.    INS DRONACHARYA – COCHIN
10. TORPEDO ANTI SUBMARINE SCHOOL, KOCHI
11. NAVIGATION DIRECTION SCHOOL, GOA
12. INS CHILKA
13. INA KUNJALI – MUSIC TRAINING SCHOOL
14. INS MANDOVI
15. NATIONAL INSTITUTE OF HYDROGRAPHY, GOA
16. NAVAL INSTITUTE OF EDUCATION AND TRAINING, KOCHI
17. NAVY SHIPWRIGHT SCHOOL, VISAKHAPATNAM"
Q135. இந்திய கப்பற்படைக்கு தேவையான கப்பல் கட்டுதல் மற்றும் பராமரிப்பு, ரிப்பேர் போன்றவற்றை செய்யும் தொழிற்சாலைகள் எவை?
1. MAZAGAON DOCK LIMITED : மஸகாவ்ன் டாக் லிமிடெட் - மும்பை, நவஷேவா (மும்பை), விசாகப்பட்டினம். கப்பல் கட்டுதல் முதன்மைப் பணி.
2. GARDEN REACH SHIP BUILDERS & ENGINEERS LIMITED : கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்டு இஞ்சினியர்ஸ் லிமிடெட் - கொல்கத்தா - 1884-ல் ஆரம்பிக்கப்பட்டு 1960ல் இந்திய அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட து. கப்பல் கட்டுதலும் பராமரிப்பும்.
3. GOA SHIPYARD LIMITED : கோவா ஷிப்யார்டு லிமிடெட் - கோவா.
Q136. இந்திய கப்பற்படையின் MARCOS என்பது என்ன?
MARINE COMMANDOS - கப்பற்படையின் அதிரடி நடவடிக்கை படை. 1988ல் மாலத்தீவில் நடந்த உள் புரட்சியின் போது இந்தப் படையின் நடவடிக்கை மிகவும் குறிப்பிட்த்தக்கது.
Q137. "இந்திய கப்பற்படை நாள்" என்று அனுசரிக்கப்படுகிறது?
4 டிசம்பர் - 1974ல் இந்த நாளில் தான் பாகிஸ்தான் கராச்சி துறைமுகம் இந்திய ராணுவத்தால் முடிவாக தாக்கப்பட்ட து.
Q138. ராணுவத்தில் "FLEET REVIEW" என்பது என்ன?
முப்படைகளுக்கும் குடியரசுத்தலைவர் தான் முதன்மை தளபதி - SUPREME COMMANDER. அந்தப் பதவியின் அடிப்படையில், படைகளின் முன்னேற்பாடுகள், முன்னெச்சரிக்கை, தயார் நிலை போன்ற பல விஷயங்களைப் பற்றி நேரடியாக பார்வையிட்டு, அறிவுரை மற்றும் நடவடிக்கை எடுப்பது.
Q139. இந்திய கப்பற்படையுடன் MILAN - மிலன் என்ற சொல் எவ்வாறு சம்பந்தப்படுத்தப்பட்ட து?
இந்த சொல்லுக்கு அர்த்தம் "ஒன்று சேருவது". இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை, உலக கப்பற்படைகள் ஒன்று சேர்ந்து, அந்தமான் நிக்கோபார் கடலில், கப்பற்படை முன்னேற்றங்களை பகிர்ந்துக் கொள்வது. இதைத் தவிர்த்து அவ்வப்போது முன்னிலையில் உள்ள மற்ற நாட்டு கப்பற்படைகளுடன் பயிற்சி நடத்துவதும் உண்டு.
Q140. இந்திய கப்பற்படையின் சாகசப்படை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
SPAT - SAGAR PAWAN ACROBATIC TEAM.
Q141. நம் நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் போர்க் கப்பல் எது?
INS - SAVITHRI - சாவித்ரி
Q142. நம் நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் நீர்மூழ்கி கப்பல் எது?
INS - SHALKI - ஷால்கி
Q143. நம் நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் அனுசக்தி நீர்மூழ்கி கப்பல் எது?
INS - ARIHANT - 26.7.2009 - அரிஹந்த்
Q144. தாக்குதல் சக்தி அதிகமுடைய இந்திய போர்க்கப்பல் எது?
INS - KOLKATTA - 16 BRAHMOS - ப்ரம்மோஸ் ஏவுகணைகள் கொண்ட து.
Q145. "INDRA"- "இந்திரா" என்ற சொல் இந்திய கப்பற் படையுடன் எவ்வாறு சம்பந்தப்பட்டது?
வேறு நாடுகளுடன் நடத்தப்படும் கடற்படை கூட்டு பயிற்சிக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்.

Q146. கப்பற்படை முக்கிய தளபதிகள் இது வரை ......
வ.எண் பெயர் முதல் வரை
1 ஜான் டால்பாட் சேவிக்னக் ஹால் 15.8.1947 14.8.1948
2 சர் வில்லியம் எட்வர்டு பெர்ரி 15.8.1949 13.10.1951
3 சர் சார்லஸ் தாமஸ் மார்க் பிஸ்ஸி 14.10.1951 21.7.1955
4 சர் ஸ்டீபன் ஹோப் கார்லில் 22.7.1955 21..4.1958
5 ராம் தாஸ் கட்டாரி 22.4.1958 4.6.1962
6 பாஸ்கர் S. சோமன் 5.6.1962 3.3.1966
7 A.K. சாட்டர்ஜி 4.3.1966 28.2.1970
8 S.M. நந்தா 28.2.1970 28.2.1973
9 S.N. கோஹ்லி 28.2.1973 29.2.1976
10 J.L. கர்ஸெட்ஜி 1.3.1976 28.2.1979
11 R.L. பெரைரா 1.3.1979 28.2.1982
12 O.S. டாசன் 1.3.1982 30.11.1984
13 R.H. தாஹிலியானி 1.12.1984 30.11.1987
14 J.G. நட்கர்னி 1.12.1987 30.11.1990
15 லக்ஷ்மி நாராயண் தாஸ் 1.12.1990 30.9.1993
16 விஜய் சிங் ஷேகாவத் 1.10.1993 30.9.1996
17 விஷ்ணு பகத் 1.10.1996 30.12.1998
18 சுஷில் குமார் 1.1.1999 29.12.2001
19 மாதவேந்திர சிங் 30.12.2001 31.7.2004
20 அருண் ப்ரகாஷ் 1.8.2004 31.10.2006
21 சுரீஷ் மேத்தா 1.11.2006 31.8.2009
22 நிர்மல் குமார் வர்மா 1.9.2009 31.12.2012
23 தேவேந்திர குமார் ஜோஷி 1.9.2012 26.2.2014
24 ராபின் கே. தவன 17.4.2014 31.5.2016
25  சுனில் லன்பா   01.6.2016 ..............
       
       
       
       

Q147. பாதுகாப்பு - பொது தகவல்கள்:
Q148. முப்படைகளின் முக்கிய தளபதி யார்?
குடியரசுத்தலைவர்
Q149. முப்படைகளுக்கும் ஒருங்கிணைந்த பயிற்சி அளிக்கும் கல்லூரிகள் யாவை?

1. National Defence Academy, Pune.
2. National Defence College, Delhi.
3. Defence Services Staff College, Wellington
4. School of Land and Air Warfare, Secunderabad
5. School of Foreign Languages, New Delhi.
6. Rashtriya Indian Medical College, Dehradun
7. Armed Forces Medical College, Pune
8. Himalayan Mountaineering Institute, Darjeeling."
Q150. "OPERATION BLUE STAR" என்ற ராணுவ நடவடிக்கை 1984ல் நடந்த ஒரு நிகழ்வு. ஆனால் இன்றும் அரசியலில் பேசப்படுகிறது. அது என்ன?
1983-84 - பஞ்சாப் மாநிலத்தில் தனி நாடு கோரிக்கை தீவிரவாத இயக்கமாக இயங்கி, அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் தீவிரவாதிகள் பதுங்கி இருந்து கொண்டு நடத்தி வந்தனர். இவர்களை கோவிலில் இருந்து விலக்கி தீவிரவாத த்தை ஒடுக்க 1-6 - 1984 ல் ராணுவ உதவியுடன் ஸ்ரீமதி இந்திரா காந்தி அவர்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கை இந்த நடவடிக்கை. முக்கிய தளபதி வைத்யா காலத்தில், தளபதி (ப்ரார்) தலைமையில் நடைபெற்றது. இதன் விளைவு ஸ்ரீமதி இந்திரா காந்தி, அவருடைய பாதுகாப்பு வீரர் பியாந்த் சிங் அவர்களால், 31.10.1984 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.
Q151. "NUCLEAR COMMAND AUTHORITY" - அணுசக்தி மேலாண்மை அமைப்பு - என்பது என்ன?
அணுசக்தி ஆயுதங்கள் பயன்படுத்துவதில் உலக அளவில் அதிகமான சர்ச்சையும், கட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கும் சூழலில், இதன் பயன்பாட்டை அதிக கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டிய அவசிய நிலையில் 4.1.2003ல் உருவாக்கப்பட்ட அமைப்பு. இது மிகவும் முக்கியமான அரசியல் செயல்பாடு என்பதால் பிரதம மந்திரியின் நேரடி கட்டுப்பாட்டில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையாகக் கொண்டு ஒரு செயற்குழுவும் இயங்கி வருகிறது. இதில் எடுக்கப்படும் முடிவை, பிரதம மந்திரியின் அரசியல் குழு விவாதித்து, பிரதமர் முடிவு எடுப்பார். ஆகவே அணு ஆயுத தாக்குதல், பிரதம மந்திரி உத்தரவுடன் மட்டுமே நடத்தப்படும்.
Q152. "STRATEGIC FORCES COMMAND" - "யுத்த தந்திர படை அமைப்பு" என்பது என்ன?
அணுசக்தி மேலாண்மை அமைப்பின் (Nuclear Command Authority) ஒரு அங்கம். விமானப்படை AIR MARSHAL பதவியில் உள்ள ஒரு அதிகாரியின் கீழ் இயங்குகிறது. 4.1.2003 அன்று துவக்கப்பட்ட இந்த அமைப்பு, இதன் தாய் அமைப்பின் முடிவுகளை செயல்படுத்துதல், அணு ஆயுதங்கள் தயாரித்தல், பாதுகாத்தல் போன்ற பணிகளை செய்கிறது.
Q153. IPKF - என்பது என்ன?
இந்திய அமைதி காக்கும் படை. Indian Peace Keeping Force - 1987 ல் இந்தியா-ஸ்ரீலங்கா ஒப்பந்தப்படி, ஸ்ரீலங்காவில் LTTE நடத்தி வந்த தனித் தமிழ் ஈழ போராட்ட த்தின்போது, அமைதி காப்பதற்காக, திரு ராஜீவ் காந்தி அவர்களால் ஏற்படுத்தப்பட்ட படை. இது 1990 வரை ஸ்ரீலங்காவில் தங்கி போராளிகளின் தாக்குதல் நடத்திய இடங்களை பாதுகாத்து கைப்பற்றி வந்தனர். இதன் விளைவு, 21.5.1991 அன்று LTTE தற்கொலைப் படையால் சென்னை ஸ்ரீபெரும்புதூர் என்ற இடத்தில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.
Q154. IPKF-ன் ரகசிய குறியீட்டு நடவடிக்கைகள் என்ன?
1. OPERATION PAWAN - அக்டோபர் 1987ல் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியது.
2. OPERATION VIRAT & TRISHUL - ஏப்ரல் 1988ல், மன்னார், முல்லைத்தீவு மற்றும் யானை வழிப்பாதை ஆகிய பகுதிகளில் LTTE - க்கு எதிராக போர் தொடுத்து இடங்களை மீட்டது.
3. OPERATION CHECKMATE - ஜூன் 1988ல் LTTE-க்கு எதிராக வடமராச்சி பகுதிகளில் போரிட்டது."
Q155. ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச அமைதிப்படை பணியில் இந்தியாவின் பங்கு என்ன?
ஐக்கிய நாடுகள் சபையின் ""பாதுகாப்புக் குழு"" (Security Council)வில் நிரந்திர உறுப்பினராக இல்லாவிட்டாலும், இந்தியா பெரும்பங்கு வகிக்கிறது. இந்த குழுவில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து பெறவும் பல முயற்சிகள் நடந்து வரும் நிலையில், சர்வ தேச அமைதிப்படையில் இந்தியாவின் பங்கு இன்றியமையாததாகிறது. இவ்வாறாக, இந்தியா சர்வ தேச அமைதிப்படையில் பல நிலைகளில் பங்கு பெற்ற விவரம்:
1. கொரியா 1950
2. கம்போடியா, லாவோஸ், வியட்நாம் 1954-1970
3. காஸா முனை, சினாய் பகுதிகள் 1956-1967
4. காங்கோ 1960-1964
5. சைப்ரஸ் 1964
6. நம்பியா 1989
7. இரான், ஈராக் 1988-1990
8. ஈராக், குவைத் 1991
9. அங்கோலா 1989-1991, 1995-1999
10. மத்திய அமெரிக்கா 1990-1992
11. ஏல் சல்வேடார் 1991
12. லைபீரியா 1993
13. ரவாண்டா 1994-1996
14. சியராலியோன் 1998-2001 15. லெபனான் 1998 முதல்
16. எத்தியோப்பியா, எரிட்ரியா 2001-2009
17. காங்கோ ஜன நாயக குடியரசு 1999 முதல்
18. ஐவரி கோஸ்ட் 2003 முதல்
19. புருண்டி 2003
20. சூடான், தெற்கு சூடான் 2005 முதல் 2006
21. கோலன் உச்சி 2006 முதல்"
Q156. சர்வதேச அமைதிப்படையின் முன்னேற்றத்துக்காக நம் நாட்டில் செயல்படும் அமைப்பு என்ன?
UNITED SERVICE INSTITUTION OF INDIA - டெல்லி. 1870ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, ராணுவத்தின் நடக்கும் முன்னேற்றங்கள் குறித்து, முப்படை அதிகாரிகளுக்கும் பயனளிக்கும் வகையில் பயிற்சி நிலையமாக விளங்குகிறது. இதைத் தவிர்த்து, இதன் முக்கிய பணியாக சர்வதேச அமைதிப்படைக்கு நியமிக்கப்படும் அதிகாரிகளுக்கு (எல்லா நாட்டவர்களுக்கும்) சம்பந்தப்பட்ட நாட்டைப்பற்றிய அனைத்து விவரங்கள், நோக்கம், பணி போன்ற அனைத்து விவரங்கள் பற்றிய சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது."
Q157. ராணுவ சிராற் பள்ளி - SAINIK SCHOOLS - ஏற்படுவதற்கு வழி வகுத்தவர் யார்?
V.K. கிருஷ்ண மேனன் - பாதுகாப்பு அமைச்சர் - 17.4.1957 - 31.10.1962.
Q158. V.K. கிருஷ்ண மேனன் தலைசிறந்த பாதுகாப்பு அமைச்சர் என்பதை விட அவரது வேறொரு சாதனை இன்றும் சர்வதேச உறவில் ஒரு சாதனையாக உள்ளது. அது என்ன?
மாநிலங்களவை உறுப்பினராக, இவர் 22/23.1.1957ல் ஐக்கிய நாடுகள் பொது சபைக்கூட்டத்தில், காஷ்மீரைப்பற்றி, சுமார் 7 மணி 48 நிமிடங்கள் உரையாற்றியது, இன்று வரை ஒரு சாதனையாக உள்ளது.
Q159. ராணுவ சிராற் பள்ளி - (SAINIK SCHOOLS) என்பது என்ன?
சிறுவர்களுக்கு சிறு வயதிலேயே நாட்டுப்பற்று, ஒழுங்கு, உடற்பயிற்சி, பொது அறிவுடன் கூடிய கல்வியைக் கொடுத்து, எதிர்காலத்தில் அவர்கள் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற ஏற்படுத்தப்பட்ட பள்ளிகள். இப்பள்ளிகளில் 6ம் வகுப்பிலும் 9ம் வகுப்பிலும் சேர்க்கை பொதுத்தேர்வுகள் மூலம் நடைபெறுகிறது. எல்லா மாநிலங்கள் சிறுவர்களுக்கு வாய்ப்பு பெறும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் இப்பள்ளி இயங்குகிறது.
Q160. ராணுவ சிராற் பள்ளி - (SAINIK SCHOOLS) நம் நாட்டில் எங்கெங்கு உள்ளன?
1. அமராவதி நகர், தமிழ் நாடு.
2. பாலாச்சடி, குஜராத்
3. புவனேஷ்வர், ஒடிசா
4. பீஜாப்பூர், கர்நாடகம்
5. சித்தோர்கர், ராஜஸ்தான்
6. கோராகால், உ.பி.
7. கோபால் பாரா, அஸ்ஸாம்
8. இம்ஃபால், மணிப்பூர்
9. கபூர் தாலா, பஞ்சாப்
10. கழகூட்டம், கேரளா
11. கொருகொண்டா, ஆந்திரா
12. குஞ்ச்புரா, ஹரியானா
13. லக்னௌ, உ.பி.
14. நாக்ரோடா, ஜ.கா.
15. புருளியா, மே. வங்காளம்
16. ரேவா, ம.பிரதேசம்
17. சதாரா, மஹாராஷ்டிரம்
18. சுஜான்பூர், ஹிமாச்சல் பிரதேசம்
19. அம்பிகாபூர், சத்தீஸ்கர்
20. கோபால்கஞ்ச், பீஹார்
21. கொடகு, கர் நாடகம்
22. நாளந்தா, பீஹார்
23. புங்கல்வா, நாகாலாந்து
24. ரேவாரி, ஹரியானா
25. திலையா, ஜார்க்கண்ட்"
Q161. ராஷ்ட்ரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரி என்பது என்ன?
இது ஒரு பொதுப்பள்ளி - PUBLIC SCHOOL - 1922ல் ஆங்கிலேயரால் ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளி, முப்படைகளுக்கும் தேவையான அதிகாரிகளாக தேர்வு செய்யப்படுவதற்கு உகந்தவாறு மாணவர்களை தயார்படுத்தப்படுகிறார்கள். பரம்வீர் சக்ரா விருதை வடிவமைத்த ஹீராலால் அதல் இந்த பள்ளியிலிருந்து வெளிவந்த முதல் கேப்டன். K.S.திம்மைய்யா ( இந்தியா) அஸ்கர் கான் (பாகிஸ்தான்) ஆகியோர் இப்பள்ளியிலிருந்து வெளிவந்து தளபதி (Generals)யானவர்கள். இந்த பட்டியலில் நிறைய பேர் உள்ளனர். இந்த பள்ளியில் சேர விரும்பும் மாணவர்கள் 11 1/2 முதல் 13 வயதுக்குள் இருப்பவர்களாக இருக்கவேண்டும். 8ம் வகுப்புக்கு சேர்க்கை நட த்தப்படுகிறது.
Q162. வேறு ராணுவப் பள்ளிகள், கல்லூரிகள் எங்குள்ளன?
1. ராஷ்டிரிய ராணுவப்பள்ளி, செயில், ஷிம்லா - இவ்வகைப் பள்ளிகளில் இதுவே பழமையானது. 1922ல் ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளியில் 10 முதல் 18 வயது இளைஞர்களை ராணுவப் பணிக்கு தயார்படுத்துகிறது. இப்பள்ளியில் சேர வயது 10-12. இந்த பள்ளியில் உள்ள கிரிக்கெட் மைதானமே உலகத்திலேயே உயரமான கிரிக்கெட் மைதானம்.
2. ராணுவப்பள்ளி, அஜ்மீர், ராஜஸ்தான்.
3. ராணுவப்பள்ளி, பெல்காம், கர் நாடகம்
4. ராணுவப்பள்ளி, தோல்பூர், ராஜஸ்தான்."
Q163. SHWETASH-WA - ஸ்வேதஷ்-வா என்பது என்ன?
ராணுவ போலீஸின் மோட்டார் சைக்கிள் சாகசக்குழு.
Q164. ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் வீர விருதுகள் யாவை?
1. பரம் வீர் சக்ரா
2. மஹாவீர் சக்ரா
3. வீர் சக்ரா
4. அசோக் சக்ரா
5. பரம் விசிஷ்ட் சேவா மெடல் - விருதுகள் பற்றிய மேலும் விவரங்கள் "விருதுகள்" பகுதியில் விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.
Q165. "LAUNDARY BAG" "சலவைப் பை" என்ற கேலி வாக்கியம் எதைக் குறிக்கிறது?
பாராசூட்.
Q166. ராணுவ அதிகாரிகள் பெயர்களின் பின்னால் ஆங்கில எழுத்துக்களில் சில பட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றின் விளக்கம் என்ன?
1. PVSM – Param Vishist Seva Medal - பரம் விசிஷ்ட் சேவா மெடல்.
2. AVSM – Ati Vishist Seva Medal - அதி விசிஷ்ட் சேவா மெடல்.
3. VSM – Vishist Seva Medal - விசிஷ்ட் சேவா மெடல்.
4. YSM – Yudh Seva Medal - யுத் சேவா மெடல்.
5. UYSM – Uttam Yudh Seva Medal - உத்தம் யுத் சேவா மெடல்
6. MVC – Mahavir Chakra - மஹாவீர் சக்ரா
7. VC – Vir Chakra - வீர் சக்ரா
8. AC – Ashok Chakra - அசோக் சக்ரா"
Q167. "COBRA" என்பது என்ன?
COMMANDO BATTALION FOR RESOLUTE ACTION
Q168. MIRAGE 2000 போர் விமானங்களை தயார் செய்யும் நிறுவனம்?
DASAULT, ரஷ்யா.
Q169. இந்திய பாதுகாப்பு அமைச்சர்கள் இதுவரை:
வ.எண் பெயர் முதல் வரை
1 பல்தேவ் சிங் 2.9.1946 1952
2 கைலாஷ் நாத் கட்ஜு 1955 1957
3 V.K. கிருஷ்ண மேனன் 1957 1962
4 யஷ்வந்த் ராவ் சவான் 1962 1966
5 சர்தார் ஸ்வரன் சிங் 1966 1970
6 ஜகஜீவன் ராம் 1970 1974
7 சர்தார் ஸ்வரன் சிங் 1974 1975
8 இந்திரா காந்தி 1975 1975
9 பன்ஸி லால் 21.12.1975 24.3.1977
10 ஜகஜீவன் ராம் 24.3.1977 28.7.1979
11 C. சுப்ரமணியன் 28.7.1979 14.1.1980
12 இந்திரா காந்தி 14.1.1980 1982
13 R. வெங்கடராமன் 1982 1984
14 சங்கர் ராவ் சவான் 1984 1984
15 பி.வி.நரசிம்ம ராவ்  1984 1985
16 ராஜீவ் காந்தி  1985 1987
17 வி.பி.சிங் 1987 1987
18 கே.சி.பந்த் 1987 1989
19 வி.பி.சிங் 02.12.1989 10.11.1990
20 சந்திரசேகர்  10.11.1990 21.06.1991
21 சரத் பவர்  21.06.1991 06.03.1993
22 பி.வி.நரசிம்ம ராவ்  06.03.1993 16.05.1996
23 ப்ரமோத் மஹாஜன்  16.05.1996 01.06.1996
24 முலாயம் சிங் யாதவ்  01.06.1996 19.03.1998
25 ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் 19.03.1998 2001
26 ஜஸ்வந்த் சிங் 2001 2001
27 ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் 2001 22.05.2004
28 ப்ராணாப் முகர்ஜி  22.05.2004 24.10.2006
29 ஏ.கே. அந்தோணி  24.10.2006 26.05.2014
30 அருண் ஜெய்ட்லி  26.05.2014 09.11.2014
31 மனோஹர் பரிக்கார்  09.11.2014 13.03.2017
32 அருண் ஜெய்ட்லி   13.03.2017   .............
       
       
       
       

 

Q170. ராணுவத்தினர் ஊதியம் பற்றி அறிக்கை சமர்ப்பித்த குழு?
அஜித்குமார் கமிட்டி