Khub.info Learn TNPSC exam and online pratice

"போக்கு வரத்து - வான்வழி, தரை வழி, ரயில்வே, நீர்வழி MINISTRY OF CIVIL AVIATION, ROAD TRANSPORT & HIGHWAYS, RAILWAYS, SHIPPING. "

Q1. பொது வான் வழித் துறை: MINISTRY OF CIVIL AVIATION
"18 பிப்ரவரி 1911 அன்று இந்திய வானில், முதன் முதலாக ஒரு விமானம் அஞ்சல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு, அலகாபாத்திலிருந்து, நைனி (உ.பி) - 18 கி.மீ - என்ற இடத்திற்கு எடுத்துச் சென்றது. இந்த விமானத்தை ஹென்றி பிக்கெட் என்ற (ஆங்கிலேய ஆட்சி) விமானி இந்திய வானில் செலுத்தியதே இந்திய வான் வழிப் போக்குவரத்தின் தொடக்கம்.
இதற்குப் பிறகு, 15 அக்டோபர் 1932 அன்று, ஜெஹாங்கீர் ரத்தன்ஜீ தாதாபாய் டாடா, அவருடைய "" Puss Moth"" என்ற விமானத்தை, பாம்பேயிலிருந்து கராச்சிக்கு ஓட்டிச்சென்று சாதனை படைத்தார்.
அதற்கு பிறகு 1932ல் டாடா ஏர்லைன்ஸ் என்ற விமானப் போக்குவரத்து நிறுவனத்தைத் தொடங்கினார். இதுவே பிற்காலத்தில் ஏர் இந்தியா (அரசாங்க) நிறுவனமானது. 1953ல் தனியார் வசம் இயங்கிவந்த சில நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, வான் வழி போக்குவரத்து தேசிய மயமாக்கப்பட்டு, Air India International Ltd. ஏர் இநதியா இண்டர்நேஷனல் லிமிடெட் என்ற சர்வதேச விமான போக்குவரத்து நிறுவனமும், Indian Airlines இந்தியன் ஏர்லைன்ஸ் என்ற உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனமும் தொடங்கப்பட்டது.
1962ல் ஏர் இந்தியா இண்டர்நேஷனல் லிமிடெட் ""ஏர் இந்தியா"" என பெயர் மாற்றம் பெற்று, முழுவதுமாக ஜெட் விமானங்களைப் பயன்படுத்தும் முதல் நிறுவனமானது. 2005ல் இந்தியன் ஏர்லைன்ஸ் ""இந்தியன்"" என பெயர் மாற்றம் பெற்றது. 2011ல் இரு நிறுவங்களும் இணைக்கப்பட்டு ""ஏர் இந்தியா"" என்ற பெயரில், சுமார் 130 ஜெட் விமானங்களைக் கொண்டு உலகின் சுமார் 85 நகரங்களுக்கு இயங்கி வருகிறது.
இந்திய விமானப்போக்குவரத்து லாபகரமாக இயங்காவிடிலும், அரசாங்கத்தின் ஆதரவோடு தொடர்ந்து இயங்குகிறது.
இந்திய விமானப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது Director General of Civil Aviation என்ற அமைப்பு.
அரசாங்க அளவில் ஒரு கேபினெட் அமைச்சர் தலைமையேற்று நடத்துகிறார். "

Q2. விமானத்தைக் கண்டுபிடித்தவர் யார்:
ரைட் சகோதர்ர்கள் - ஆர்வில்லி மற்றும் வில்பர் – 1905 – அமெரிக்கா.
Q3. ரைட் சகோதர்ர்கள் கண்டுபிடித்த விமானத்தின் பெயர் என்ன?
கிட்டி ஹாக் - Kitty Hawk.
Q4. அடிப்படையில் விமானம் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
"இரண்டு --
1. FIXED WING பெரிய விமான்ங்கள் மற்றும் சரக்கு ஏற்றிச்செல்லும் விமான்ங்கள்
2. ROTARY WING – ஹெலிகாப்டர் போன்றவை. "
Q5. Air Liners என்பது என்ன? அவை யாவை?
"பயணிகளை ஏற்றிச்செல்லும் விமான்ங்களை இவ்வாறு அழைப்பர். இரண்டு வகைப்படும்:
1. WIDE BODY JETS -- இருக்கை அமைப்பில் இரு வழிப் பாதை கொண்டவை.
2. NARROW BODY JETS -- சிறிய மற்றும் இருக்கை அமைப்பில் ஒரு வழி கொண்டவை. "
Q6. “ Air Taxis “ என்பது என்ன?
"19 மற்றும் அதற்கும் குறைவான பயணிகள் இருக்கை அமைப்பு கொண்ட சிறிய விமானங்கள் -- DC 9, Vickers VC 10,
Lockheed L 1011 போன்றவை. "
Q7. விமானங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள உலகின் மிகப்பெரிய இரண்டு நிறுவனங்கள் யாவை?
"போயிங் - BOEING – வில்லியம் போயிங், (சியாட்டில், அமெரிக்கா) - என்பவரால் 1916ல் நிறுவப்பட்டது.
ஏர்பஸ் - AIRBUS – ரோஜர் பெய்டில்லே என்ற ஃப்ரான்ஸ் நாட்டவரால் நிறுவப்பட்டது. உலகின் பாதிக்கு மேலான விமான்ங்கள் இந்த நிறுவனத்தைச் சேர்ந்தது. ப்ளாக்னாக், ஃப்ரான்ஸ் இதன் தலைமயகம். "
Q8. பயணிகள் இருக்கை எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?
முதல், வணிக மற்றும் சிக்கன வகுப்புகள். First, Business and Economy.
Q9. AISLE என அழைக்கப்படும் என்ன?
பயணிகள் இருக்கைகளுக்கிடையில் விடப்பட்டுள்ள நடைபாதை. இது ஒரு பொதுவான வார்த்தை.
Q10. விமானத்தில் “Cockpit” என்பது என்ன?
பைலட் என்றழைக்கப்படும், விமானிகள் அமர்ந்து தங்கள் பணியை செய்யும் இடம்.
Q11. விமானத்தில் “Black Box” என அழைக்கப்படுவது என்ன?
"கருப்புப்பெட்டி என்றழைக்கப்பட்டாலும், இது இளஞ்சிவப்பு நிறம் கொண்டது. விமானத்தின் ஒரு முக்கிய பகுதி.
இந்தக் கருவி, விமானிகளுக்கும், விமான வழித்தட வல்லுநர்களுக்குமிடையில் நடைபெறும் பேச்சு
வார்த்தைகளைப் பதிவு செய்கிறது. விபத்து காலங்களில் இந்த கருவி முக்கியத்துவம் பெறுகிறது. "
Q12. “Contrail” என்ற ஆங்கிலச் சொல் விமானத்துடன் தொடர்புடையது. அது என்ன?
"வானில் மிக உயரத்தில் பறக்கும் அதிவேக விமானங்களால் வெளியேற்றப்படும் புகை ஒரு நீண்ட வெள்ளைக் கோடு போல (மேகம் போல்) காணப்படும்.
இது சிறிது நேரத்தில் மறைந்துவிடும். இதை பொதுவாக வானில் பார்க்கலாம். "
Q13. விமான நிலையத்தில் “Taxi Way” என்பது என்ன?
விமான ஓடுதளத்துக்கும் மற்ற பகுதிகளுக்குமிடையில் போடப்பட்டிருக்கும் வழித்தடம்.
Q14. விமான நிலையத்தில் “Runway” என்பது என்ன?
விமானங்கள் வானில் உயரவும் தரை இறங்கவும் உதவும் வழித்தடம்.
Q15. விமான நிலையத்தில் “Hangar” எனப்படுவது என்ன?
விமானங்கள் பழுதுபார்ப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் மிகப் பெரிய கூடாரம்.
Q16. விமான நிலையத்தில் “Terminal” என்பது என்ன?
"விமான நிலையத்தில், பயணிகள் விமானம் ஏறுவதற்கும், விமனத்திலிருந்து இறங்கி வருவதற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு வளாகம். "
Q17. நம் நாட்டில் முதன் முதலில் விமானம் ஓட்டும் உரிமம் (commercial pilot license) பெற்றவர் யார்?
JRD Tata – ஜெஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா - 1929ல்.
Q18. ஜே.ஆர்.டி. டாடா முதன் முதலில் பயணம் செய்த விமானத்தின் பெயர் என்ன?
"PUSSMOTH - 15.10.1932 அன்று பாம்பேயிலிருந்து கராச்சிக்கு பயணம் செய்தார். அவருடைய சொந்த மற்றொரு விமானத்தின் பெயர் LEOPARD MOTH.
இதுவே நம் நாட்டில் வான் வழி போக்குவரத்தின் தொடக்கம். "
Q19. நம் நாட்டில் முதன் முதலில் விமான போக்குவரத்து நிறுவனத்தை நிறுவியவர் யார்?
1932 - டாடா ஏர்லைன்ஸ்.
Q20. நம்நாட்டின் விமானப் போக்குவரத்து எப்போது தேசிய மயமாக்கப்பட்டது?
ஆகஸ்ட் 1953ல் Air Corporation Act of 1953 மூலம் தேசிய மயமாக்கப்பட்டு, சில தனியார் நிறுவன்ங்களை இணைத்து Air India International Ltd., என்ற நிறுவனம் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது.
Q21. “Air India” எப்போதிலிருந்து உருவாக்கப்பட்டது?
"8 ஜூன் 1962 முதல்.
( 11 ஜூன் 1962 அன்று Air India நிறுவனம் உலகிலேயே முதல் முழுவதுமாக ஜெட் விமானங்களை பயன் படுத்தும் நிறுவனம் ஆனது. "
Q22. இந்தியன் ஏர்லைன்ஸ் என்று முதல் "இந்தியன்" என பெயர் மாற்றம் பெற்றது?
7 டிசம்பர் 2005.
Q23. ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் என்று ஒருங்கிணைக்கப்பட்டது?
27 பிப்ரவரி 2011 – இந்த இரு நிறுவனங்களின் துணை நிறுவனங்களான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், அலையன்ஸ் ஏர் நிறுவனங்களும் ஒன்று சேர்க்கப்பட்டன.
Q24. அரசாங்கத்தால் ஹெலிகாப்டர் போக்குவரத்து நடத்தும் நிறுவனத்தின் பெயர் என்ன?
பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டர்ஸ் லிமிடெட் 1985ல் உருவாக்கப்பட்டது. Pawan Hans Helicopters Limited .
Q25. ஏர் இந்தியா நிறுவனத்தின் வணிக வாசகம் என்ன?
"வானத்தில் உங்கள் அரண்மனை".
Q26. நம் நாடு "ஜெட் காலம் Jet Age" என்ற காலத்திற்கு எப்போது மாறியது?
20.4.1960 – முதல் போயிங் 707 லண்டன் நோக்கி பறக்கத் தொடங்கியது.
Q27. நமது நாட்டின் முதல் ஜெட் விமானத்தின் பெயர் என்ன?
“கௌரி சங்கர்” – போயிங் 707 – 420.
Q28. நம் நாட்டின் முதல் பெண் விமானி யார்?
ப்ரேம் மாத்தூர் Prem Mathur – 1951(டெக்கான் ஏர்வேஸ் - தேசிய மயமாக்குதலுக்கு முன்).
Q29. தனியாக விமானத்தை ஓட்டிய (solo flight) முதல் இந்திய பெண்மணி யார்?
இந்திய விமானப்படையின் ஹரித்தா கௌர் 1994
Q30. இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முதல் பெண் விமானி யார்?
கேப்டன் துர்கா பானர்ஜி 1966.
Q31. விமானம் ஓட்டும் பயிற்சி அளிக்கும் இந்திய நிறுவனங்கள் யாவை?
" 1. Indian Aviation Academy, Mumbai.
2. Anurag Allied Aviation Services P.Ltd., Delhi.
3. Delhi Flying Club Ltd., New Delhi
4. American Fliers IndiaP.Ltd.,Mumbai
5. Academy of Aerospace and Aviation Training institute, Indore.
6. Government Aviation Training Insitute, Bhubaneswar.
7. Flytech Aviation Academy, Secunderabad.
8. Orient Flying School, Chennai
9. Tatanagar Aviation P.Ltd., Jamshedpur.
மற்றும் பல நிறுவனங்கள். "
Q32. விமான பணிப்பெண்கள் என்பவர்கள் யார்? அவர்களுக்கு பயிற்சி நிறுவனங்கள் யாவை?
"வானில் பறக்கும் போது பயணிகளின் அவசிய விருந்தோம்பல் பணி புரிபவர்கள். இப்பணிக்கு ஆண்களும் சேர்க்கப்படுகிறார்கள். கீழ்க்கண்ட நிறுவனங்கள் இப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
1. Global Institute, Delhi.
2. Indian Aviation Academy, New Delhi.
3. Frank Finn Management Consultants, in a number of places.
4. Pacific Airways, New Delhi
5. Free bird Aviation and Management Services, Trivandrum.
மற்றும் சில. "
Q33. விமானப் போக்குவரத்தை வழி நடத்தும் சர்வதேச நிறுவனம் எது?
" ICAO – International Civil Aviation Organization - 1947 -- மான்ட்ரீல், கனடா தலைமையகம். ஐ.நா. சபையின் ஒரு அங்கம்.
வான் வழிப் போக்குவரத்தின் விதிமுறைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் ஆகியவற்றை கவனித்துக் கொள்கின்றது.
IATA – International Air Transport Association -- மான்ட்ரீல், கனடா -- விமானப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு.
நிறுவன்ங்களுக்குள் ஒற்றுமை, சீரான போட்டி, கட்டணம் போன்ற விவரங்களை நிர்வகிக்கிறது. "
Q34. ராணுவ விமான நிலையம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஏர் பேஸ் -- Air Base
Q35. "Civil Enclave" என்பது என்ன?
"ராணுவ விமான தளத்தில் (Air Base) பொது விமானங்கள் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்ட இடங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. நம் நாட்டில் சுமார் 26 இடங்கள் இவ்வாறு உள்ளன. "
Q36. "விமானநிலையங்களுக்கு குறியீடுகள் (codes) வழங்குவதில் என்ன முறை அனுசரிக்கப்படுகிறது? "
"IATA – 3 எண் (அ) எழுத்து உள்ள குறியீடும் -- ICAO – நான்கு எண் (அ) எழுத்து உள்ள குறியீடும் வழங்குகின்றன.
உதாரணம் -- சென்னை விமான நிலையம் - MAA/VOMM "
Q37. எந்த விமான நிலையத்தில் உலகின் மிகப்பெரிய பயணிகள் வளாகம் (terminal) உள்ளது?
I –பெய்ஜிங் Beijing – சீனா China – Terminals 3 – 9 லட்சம் ச.கி.மீ.
II – ஹாங்காங் Hong Kong – சீனா China – 5,70,000 ச.கி.மீ.
Q38. உலகின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனம் எது?
அமெரிக்கன் ஏர்லைன்ஸ், அமெரிக்கா. American Air Lines – USA.
Q39. சரக்கு போக்குவரத்தில் உலகின் மிகப்பெரிய விமான நிறுவனம் எது?
ஃபெடெக்ஸ் - Fed Ex – தனியார் விரைவு அஞ்சல் பணியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனம்.
Q40. "எந்த நிறுவனம், விமானப் போக்குவரத்தின் தன்மையையும் தரத்தையும் கணித்து சிறந்த நிறுவன விருது வழங்குகிறது? "
ஸ்கைட்ராக்ஸ் - இங்கிலாந்து, Skytrax – UK.
Q41. உலகின் மிகப்பெரிய விமான நிலையம் எந்த நாட்டில் உள்ளது?
"மன்னர் ஃபஹத் சர்வதேச விமான நிலையம், தம்மம், சௌதி அரேபியா. சுமார் 780 ச.கி.மீ பரப்பளவு - 1990ல் முடிவு பெற்றது.
ஆனால், வளைகுடா போரின் காரணத்தால், 1999ல் தான் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. "
Q42. "இந்தியாவின் முக்கியமான சர்வதேச விமான நிலையங்களும் அவற்றின் குறியீடுகளும் என்ன?"
எண் குறியீடு விமான நிலையத்தின் பெயர்.
1. AMD/VAAH சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையம், அஹமதாபாத், குஜராத்.
2. BLR/VOBG பெங்களூரு சர்வதேச விமான நிலையம் , பெங்களூரு, கர்நாடகா
3. BOM/VABB சத்ரபதி ஷிவாஜி சர்வதேச விமான நிலையம் , மும்பை, மகாராஷ்டிரா.
4. COK/VOCI கொச்சி சர்வதேச விமான நிலையம், கொச்சி, கேரளா.
5. CCU/VECC நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையம், கொல்கத்தா, மேற்கு வங்காளம்
6. DEL/VIDP இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், டெல்லி.
7. GAU/VEGT லோக்ப்ரியா கோபிநாத் போர்தொலாய் சர்வதேச விமான நிலையம், கவுஹாத்தி, அஸ்ஸாம்.
8. HYD/VOHS ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம், ஹைதரபாத், தெலங்கானா.
9. IDR/VAID தேவி அஹில்யாபாய் ஹோல்கர் சர்வதேச விமான நிலையம், இந்தூர், மத்தியபிரதேசம்
10. MAA/VOMM அண்ணா சர்வதேச விமான நிலையம், சென்னை, தமிழ்நாடு.
11. NAG/VANP டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் சர்வதேச விமாநிலையம், நாக்பூர், மஹாராஷ்டிரா.
12. TRV/VOTV திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலயம், திருவனந்தபுரம், கேரளா.
13. CCJ/VOCL காலிகட் சர்வதேச நிலையம், கோழிக்கோடு, கேரளா.
14. CJB/VOCB கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம், கோயம்புத்தூர், தமிழ்நாடு
15. JAI/VIJP சங்கனேர் சர்வதேச விமான நிலையம், ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
16. LKO/VILK சௌத்ரி சரண்சிங்க் சர்வதேச விமான நிலையம், லக்னௌ, உ.பி.
17. IXE/VOML மங்களூரு சர்வதே விமான நிலையம், மங்களூரு, கர்நாடகா.
18. PAT/VEPT லோக்நாயக் ஜெய் ப்ரகாஷ் சர்வதேச விமான்நிலையம், பாட்னா, பீஹார்.
19. PNQ/VAPO பூனே சர்வதேச விமான நிலையம், பூனே, மகாராஷ்டிரா.
20. GAY/VEGY போத் கயா சர்வதேச விமான நிலையம், கயா, பீஹார்.
21. GOI/VAGO வாஸ்கோடா காமா சர்வதேச விமான நிலையம், டபோலின், கோவா.
22. ATQ/VIAR ராஜா ஸான்ஸி சர்வதேச விமான நிலையம், அமிர்தசரஸ், பஞ்சாப்.
23. TRZ/VOTR சர்வதேச விமான நிலையம், திருச்சி, தமிழ்நாடு.
24. VNS/VIBN லால் பகதூர் சர்வதேச விமான நிலையம், வாரணாசி, உ.பி.
25. IXZ/VOPB வீர் சவர்கார் சர்வதேச விமான நிலையம், போர்ட் ப்ளேயர், அந்தமான்.
Q43. நம் நாட்டில் தனியார் மூலம் பராமரிப்பு செய்யப்படும் சர்வதேச விமான நிலையங்கள் யாவை?
"1. கொச்சி சர்வதேச விமான நிலையம், கொச்சி, கேரளா.
2. பெங்களூரு சர்வதேச விமான நிலையம், பெங்களூரு, கர்நாடகா.
3. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், டெல்லி.
4. ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம், ஹைதராபாத், தெலங்கானா.
5. சத்ரபதி ஷிவாஜி சர்வதேச விமான நிலையம், மும்பை, மகாராஷ்டிரா. "
Q44. இந்திய விமான்நிலையங்களை நிர்வாகம் செய்யும் அமைப்பு எது?
"ஏர் போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா, புது டெல்லி - 1.4.1955. பொது விமானத் துறையின் கீழ் இயங்குகிறது.
Airports Authority of India – New Delhi – functioning from 1.4.1995 – under the control of the Ministry of Civil Aviation."
Q45. "கிழக்கு ஆசிய நாடுகளுக்கு விமானப் போக்குவரத்து நடத்திய இந்திய விமான நிறுவனத்தின் பெயர் என்ன? "
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் - 29.4.2005.
Q46. அமிர்தசரஸ் விமான நிலையத்தில் உள்ள சிறப்பு அம்சம் என்ன?
உலகத்திலேயே விமான நிலையத்தில் கோவில் உள்ள ஒரே விமான நிலையம். தரிசனம் செல்ல விரும்புவர்கள் விமானம் ஓடு களத்தைத் தாண்டி செல்லவேண்டும்.
Q47. உலகத்தில் கட்டப்பட்ட மிகப் பெரிய விமானம் எது?
ஸ்ப்ரூஸ் கூஸ் - SPRUCE GOOSE – எட்வர்ட் ஹ்யூஸ், அமெரிக்கா - வால் கட்டப்பட்ட்து.
Q48. உலகிலேயே பழைமையான விமான போக்குவரத்து எந்த நாட்டுடையது?
நெதர்லாந்து. (ஹாலேண்ட் Holland.)
Q49. "6 மற்றும் 9 ஆகஸ்ட் 1945 அன்று (இரண்டாம் உலகப்போர்) ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரை தாக்கிய விமானங்களின் பெயர் என்ன? "
"1. B29-SUPER FORTRESS: “ANOLA GAY” ""அநோலா கே"" என்ற குண்டு வீச்சு விமானம் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரை 6 ஆகஸ்ட் 1945 அன்று, “Little Boy” ""சிறு பையன்"" என்ற பெயர் கொண்ட அணுகுண்டு மூலம் தாக்கியது. இந்த விமானத்தை ஓட்டிச் சென்றவர் பால் டிப்பெட்ஸ் Paul Tibbets என்ற விமானி. இவருடைய தாயின் பெயர் தான் அநோலா கே.
2. B29 – SUPER FORTRESS: “BOCK SCAR” என்ற பெயர் கொண்ட குண்டு வீச்சு விமானம் மூலம், “Fat Boy” ""குண்டு பையன்"" என்ற பெயர் கொண்ட அணுகுண்டை, விமானி சார்லஸ் ஸ்வீனி என்ற விமானி, 9 ஆகஸ்ட் 1945 அன்று தாக்கினார்."
Q50. உலகின் பல நாடுகளின் போர் விமானங்களின் பெயர் யாவை?
"போரில் குறிப்பிட்ட இலக்கைத் தாக்கக்கூடிய சமீப கால போர் விமானங்கள்:
1. 1917 - Fokker (முதல் உலகப்போர்);
2. 1925 – Gloster Game cock.
3. 1929 – Gauntlet
4. 1932 – Boeing Peach Shooter.
5. 1935 – Svensko Aero.
6. 1940 – Dornier, Mustang, Republic, Curtis, Thunder Bolt.
7. 1949 – “Dob” Sabre.
8. 1966 – Mirage, Sukhoi.
9. 1970s- MIG series.
10.2000s – F Series, Hawk Series.
இவை பிரபலமானவை.
இவை தவிர வேறு சில வகைகளும் உள்ளன. நம் நாட்டு ராணுவத்தில் ""அஜீத்"" வகை போர் விமானம் 1977 முதல் 1991 வரை உபயோகத்தில் இருந்த்து. அதற்குப் பிறகு ""தேஜாஸ்"" ""Tejas"" வகை போர் விமானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. "
Q51. உலக நாடுகளின் பல வகை போக்குவரத்து விமான நிறுவனங்கள் யாவை?
No. Name of the Airline Country
1. African Express Airways கென்யா Kenya
2. Royal Air Maroc மொராக்கோ Morocco
3. Ariana Afghan ஆப்கானிஸ்தான் Afghanistan
4. Kam Air ஆப்கானிஸ்தான் Afghanistan
5. Dallo Airlines, Emirates துபாய், Dubai, UAE
6. Biman, GMG, Royal Bengal வங்காளதேசம்Bangladesh.
7. Druk Air பூட்டான் Bhutan
8. Angkor Airways கம்போடியா Cambodia
9. Cathay Pacific, Dragon ஹாங்காங் Hong Kong
10. All Nippon ஜப்பான் Japan
11. Air Astana கஸகிஸ்தான் Kazakhstan
12. Air Asia மலேசியா Malaysia
13. Air Blue, Shaheen Air பாகிஸ்தான் Pakistan
14. Singapore, Tiger சிங்கப்பூர் Singapore.
15. Air Lanka, Mihin Lanka ஸ்ரீலங்காSri Lanka
16. Mandarin தைவான் Taiwan
17. Thai Airways தாய்லாந்து Thailand
18. Qantas, Jet Star ஆஸ்திரேலியா Australia
19. Air Pacific ஃபிஜி Fiji
20. Aero Caribbean க்யூபா Cuba
21. KLM ஃப்ரான்ஸ் France.
22. Lufthansa, LTV International ஜெர்மனி Germany
23. Aegean, Olympic க்ரீஸ் Greece
24. Alitalia இத்தாலி Italy
25. KLM Royal Dutch நெதர்லாந்த் the Netherlands.
26. Scandinavian டென்மார்க் Denmark
27. Aeroflot ரஷ்யா Russia
28. Gulf Air பஹ்ரைன் Bahrain
29. Ethihad, Air Transat. அபு தாபி Abu Dhabi
30. Mexicana மெக்ஸிகோ Mexico
31. Delta, Continental,US Airways அமெரிக்கா USA
32. Varig Linhas, Gol Transporters ப்ரேசில் Brazil
33. Avianca கொலம்பியா Columbia
34. British Airways ஐக்கிய ராஜ்யம் UK
35. Malev ஹங்கேரி Hungary.
36. FinnAir ஃபின்லாந்த் Finland
37. Sabena பெல்ஜியம் Belgium
38. Swiss Air ஸ்விட்சர்லாந்த் Switzerland.
39. Air France ஃப்ரான்ஸ் France
40. Garuda இந்தோனேசியா Indonesia."
Q52. நம்நாட்டில் தனியார் துறையில் இயங்கும் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் யாவை?
" 1. ஜெட் ஏர்வேஸ் - JET AIRWAYS – 1.4.1992 அன்று நரேஷ் கோயல் என்பவரால் நிறுவப்பட்டது.
2. ஏர் ஆசியா இந்தியா - AIR ASIA INDIA -- ஏர் ஆசியா மலேசியா நிறுவனமும், இந்தியாவின் டாடா நிறுவனமும் சேர்ந்து 28.3.2013 அன்று தொடங்கப்பட்டது.
3. ஸ்பைஸ் ஜெட் SPICE JET – எஸ்.கே. மோடி என்பவரால் மே 2005ல் குர்காவ்ன் தலைமையகமாக்க் கொண்டு தொடங்கப்பட்டது.
4. கோ ஏர் - GO AIR -- வாடியா (Wadia) வணிக குழுமத்தால் நவம்பர் 2005ல் நிறுவப்பட்டது.
5. இண்டிகோ - INDIGO - இண்டர் க்ளோப் நிறுவனத்தால் ஏப்ரல் 2006 அன்று தொடங்கப்பட்து.
6. விஸ்தாரா - VISTARA - இந்தியாவின் டாடா நிறுவனமும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் சேர்ந்து 2013ல் தொடங்கப்பட்டது.
இவை தவிர வேறு சில சிறிய நிறுவனங்களும் உள்ளன. "
Q53. உலகின் சில பிரபலமான விமான நிலையங்களின் பெயர்களை குறிப்பிடுக.
"இந்த பட்டியல் மிகப் பெரியது. சில முக்கிய பெயர்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
1. அல் அய்ன் சர்வதேச விமான நிலையம், அபு தாபி. Al Ain International Airport, Abu Dhabi, UAE.
2. எல் அரிஷ் சர்வதேச நிலையம், எல் அரிஷ், எகிப்து. El Arish International Airport, El Arish, Egypt.
3. மன்னர் ஹூசைன் சர்வதேச விமான நிலையம், அக்காபா, ஜோர்டன் King Hussein International Airport, Aqaba, Jordan
4. ஜான் எஃப். கென்னடி சர்வதே விமான நிலையம், நியூயார்க் John F.Kennedy International Airport, New York.
5. ஹீத்ரோ சர்வதேச விமான நிலையம், லண்டன் Heathrow Airport, London.
6. கெய்ரோ சர்வதேச விமான நிலையம், கெய்ரோ, எகிப்துCairo International Airport, Cairo, Egypt.
7. சார்லஸ் ட் காலி சர்வதேச விமான நிலையம், பாரீஸ், ஃப்ரான்ஸ் Charles De Gaulle International Airport, Paris.
8. சைமன் பொலிவார் சர்வதேச விமான நிலையம், காரகாஸ், வெனிசுலா. Simon Boliver International Airport, Venezeula
9. ஷா அமானத் சர்வதேச விமான நிலையம், சிட்டகாங், வங்காளதேசம்.Shah Amanat International Airport, Chittagong.
10. பாண்டாரநாயகே சர்வதேச விமான நிலையம், கொழும்பு, ஸ்ரீலங்கா Bandaranaike International Airport, Colombo
11. சையா சர்வதேச விமான நிலையம், தாக்கா, வங்காள தேசம். Zia International Airport, Dhaka, Bangladesh.
12. லியார்னாடோ டா வின்ஸி சர்வதேச விமான நையம், ர்ஓம் , இத்தாலி. Leonardo Da Vinci International Airport, Rome.
13. நையாகரா வீழ்ச்சி சர்வதேச விமான நிலையம், நியூயார்க் Niagara Falls International Airport, New York.
14. மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச விமான நிலையம், ஜெத்தா, சவுதி அரேபியா.King Abdul Aziz International Airport, Jeddah.
15. கிளிமாஞ்சாரோ சர்வதேச விமான நிலையம், தன்ஸானியா. Kilimanjaro International Airport, Tanzania
16. ஜின்னா சர்வதேச விமான நிலையம், கராச்சி, பாகிஸ்தான். Jinnah International Airport, Karachi, Pakistan.
17. திரிபூவன் சர்வதச விமான நிலையம், காத்மண்டு, நேபாளம். Tribhuvan International Airport, Kathmandu, Nepal
18. ஸ்வர்ணாபூமி சர்வதேச விமான நிலையம், பாங்காங், தாய்லாந்த், Suvarnabhoomi International Airport, Bangkok, Thailand
19. மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம, ரியாத் , சவுதி அரேபியா.King Khalid International Airport, Riyadh, Saudi Arabia
20. மார்க்கோபோலோ சர்வதேச விமான நிலையம், வெனிஸ், இத்தாலி. Marcopolo International Airport, Venice, Italy.
21. மன்னர் ஃபஹத் சர்வதேச விமான நிலையம், தம்மம், சவுதி அரேபியா. King Fahad International Airport, Dammam, Saudi Arabia
22. குவாங்க்ஸூ பையூன் சர்வதேச விமான நிலையம், குவாங்க்ஸூ, சீனா. Guangzhou Baiyun International Airport, Guangzhou, China "
Q54. ஹெலிகாப்டர் வளர்ந்த விதத்தை சிறிய அளவில் எடுத்துக் கூறுக.
"1907ல் ஃப்ரான்ஸ் நாட்டின் பால் கோர்னூ Paul Cornu என்பவரால் முதன் முதலில் ஹெலிகாப்டர் கண்டு பிடிக்கப்பட்டு, 1936ல் முழுமையடைந்த ஹெலிகாப்டர் ( Focky Wolf FW 61) வெளி வந்து, அதைத் தொடர்ந்து, Sikorsky R4 என்ற ஹெலிகாப்டர் அதிக அளவில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளால் உற்பத்தி செய்யப்பட்டு இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்டது.
அதற்குப் பிறகு 1961 – 2007 க்குள், வடிவம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் பல முன்னேற்றேங்களுடன்,
Bell Mosdel -47, Bell UH 1 “Huey”, Sea King H3, Chinook –CH47, Pave Low MH 53, Mi-8HIP, Jet Ranger BEL 206, Homer Mi 12, Hind Mi24, Westland Lynx, Black Hawk UH 60, Apache A 64, Osprey V22 என பல வகை ஹெலிகாப்டர்கள் தற்போது பயனில் உள்ளன. "
Q55. போயிங் விமானத்தை விட பெரிய ஹெலிகாப்டர் வகை எது?
ஹோமர் எம்.ஐ.12 ---Homer Mi12.
Q56. உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் எது?
ஏர் பஸ் 380 ---Air Bus 380.
Q57. "எந்த நாட்டின் விமான போக்குவரத்து நிறுவனம் முதன் முதலில் ஏர் பஸ் 380 ரக விமானங்களை அறிமுகப்படுத்தியது? "
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ். Singapore Air Lines.
Q58. ஏர்பஸ் விமானத்தை, சோதனை உரிமம் பெறாமல் ஓட்டிய ஒரே விமானி (மனிதர்) யார்?
ஜான் ட்ரவோல்டா, ஹாலிவுட் நடிகர். John Travolta – Hollywood actor.
Q59. உலகின் உயரமான விமான ஓடுதளம் எங்குள்ளது?
"தௌலத் பெக் ஓல்டி -- கடல் மட்டத்திலிருந்து 16200 அடி உயரத்தில் -- அக்ஷய்சின், லே, ஜம்மு காஷ்மீர்.
(இந்த பகுதி நம்நாட்டுக்கும் சீனாவுக்கும் இடையே ஒரு இட பிரச்சனையாக நிலவுகிறது)"
Q60. நம் நாட்டின் உயரமான விமான நிலையம் எங்குள்ளது?
சுஷூல், லடாக் -- கடல் மட்டத்திலிருந்து 14304 அடி உயரத்திலுள்ளது. Chusul, Ladakh.
Q61. உலகின் உயரமான விமான நிலையம் எங்குள்ளது?
"தாவோசெங் யாங்டிங் விமான்நிலையம் -- கடல் மட்டத்திலிருந்து 14472 அடி உயரம். இரண்டாவதாக் ஃகாம்டோ பம்டா விமான நிலையம், திபெத் -- 14219 அடி உயரம். "
Q62. நம் நாட்டின் மிகப் பழமையான விமான பயிற்சிப் பள்ளி (flying club) எது?
1930ல் தொடங்கப்பட்ட சென்னை விமான பயிற்சிப்பள்ளி. Chennai Flying Club – 1930.
Q63. விமானத்தில் பயணிகளுக்கு காண்பிக்கப்பட்ட முதல் திரைப்படம் எது?
“ The Lost World “ 6.4.1925 -- இம்பீரியல் ஏர்வேஸ் Imperial Airways.
Q64. பரப்பளவில் உலகின் மிகப்பெரிய விமான நிலையம் எது?
மன்னர் ஃபஹத் சர்வதேச விமான நிலையம், தம்மம், சௌதி அரேபியா.
Q65. பயணிகள் எண்ணிக்கையில் உலகின் மிகப்பெரிய விமான நிலையம் எது?
ஹீத்ரோ சர்வதேச விமான நிலையம், லண்டன்.
Q66. விமானங்கள் எண்ணிக்கையில் மிகவும் ஓய்வில்லாத விமான நிலையம் எது?
அட்லாண்டா, அமெரிக்கா.
Q67. விமான நிலையங்கள் அதிகமாக உள்ள இந்திய மாநிலம் எது?
"குஜராத் -- பாவ்நகர், பூஜ், பூஜ் ராணுவதளம், ஹர்ணி, ஜாம்நகர், காண்ட்லா, கெஷோத், போர்பந்தர், ராஜ்கோட், அஹமதாபாத், சூரத், ஸலவாத்"
Q68. இங்கிலாந்தின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் ஜார்ஜ் பெஸ்ட் பெயரில் விமான நிலையம் எங்குள்ளது?
பெல்ஃபாஸ்ட், அயர்லாந்த்.
Q69. "வீர் சவார்க்கார் விமான நிலையம், போர்ட் ப்ளேயர் மற்றும் ஜிப்ரால்டர் (பிரிட்டன் பகுதி) விமான நிலையத்தில் உள்ள ஒரு சிறப்பு ஒற்றுமை என்ன? "
"இரண்டு நிலையங்களிலும், விமான ஓடு வழியின் குறுக்கே தரைவழிப் போக்குவரத்து சாலை குறுக்கிடுகிறது.
அதனால் விமானம் வானில் உயரும் போது, தரை வழிப்போக்குவரத்து நிறுத்தப்படுகிறது."
Q70. நம்நாட்டின் முதல் தனியாரால் பராமரிக்கப்படும் விமான நிலையம் எது?
கொச்சி சர்வதேச விமான நிலையம், கேரளா.
Q71. "Concorde" என்ற அதிவேக விமானம் இப்போது பயனில் இல்லை. இதன் கடைசி பயணம் எது?
நியூயார்க் -- லண்டன் -- 24.10.2003.
Q72. பொதுவாக ஒரு விமான பயணத்தின் போது, விமானி மற்றும் துணை விமானிக்கும் ஒரே வகையான பொருள் கொடுக்கப்படுவதில்லை. அது என்ன?
"ஒரே விதமான உணவு. காரணம், உணவின் காரணமாக விமானிகள் இருவரும் ஒரே நேரத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக. "
Q73. உலகின் உயரமான ஹெலிகாப்டர் இறங்கு தளம் எங்குள்ளது?
சியாச்சென் பனிப்பாறைப் பகுதி - கடல் மட்டத்திலிருந்து 16000 அடி உயரத்தில் உள்ளது - இந்தியா. Siachen Glacier – India – 6400 mtrs.
Q74. இந்திய வான்வழி போக்குவரத்து கட்டுப்பாடு அமைப்பு எது?
இயக்குநர், பொது வான்வழிப் போக்குவரத்து, புது டெல்லி -- Director General of Civil Aviation, New Delhi.

ரயில்வே அமைச்சகம்: MINISTRY OF RAILWAYS -- (www.indianrailway.gov.in)

Q75. ரயில்வே அமைச்சகம்: MINISTRY OF RAILWAYS--
"நம் நாட்டில் தொடர்வண்டிப் போக்குவரத்து சோதனை முறையில் முதன் முதலில் 1836ல் சென்னை சிந்தாதிரிப்பேட்டை பாலத்திற்கருகில் ஒரு தண்டவாளப்பாதை நிறுவப்பட்டது. அதைத் தொடர்ந்து 1837ல் சென்னை செங்குன்றம் -> செயிண்ட் தாமஸ் மவுண்ட் இடையில் உடைத்த கருங்கல் பாறைகளை ஏற்றிச்செல்ல நிறுவப்பட்டது. "
"வளர்ச்சியின் அடிப்படையில், 1853/1854ல் ஆங்கிலேயர்கள் Great Indian Peninsular Railway மற்றும் East Indian Railway என்ற நிறுவனங்களை தொடங்கினர். இதற்கிடையில் 22.12.1851ல் கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக ரூர்கி என்ற இடத்தில் தொடர் வண்டி தொடங்கப்பட்டது."
"தொடர்வண்டி பயணிகள் போக்குவரத்து 16 ஏப்ரல் 1853 அன்று, போரிபந்தர் -> தானே, பாம்பே இடையில் 34 கி.மீ தூரத்துக்கு தொடங்கியது. இந்த நாளே இந்திய ரயில்வே தொடக்க நாளாகக் கொண்டாடப்படுகிறது.
இவ்வாறாக தொடங்கிய இந்திய ரயில்வே இன்று உலகின் 4வது மிகப்பெரிய ரயில்வே, 13+ லட்சம் தொழிலாளர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஒரே நிறுவனமாக இயங்குகிறது.
" "இன்றைய நிலையில், சுமார் 65000+ கி.மீ தண்டவாளப்பாதை (இதில் 40000+ கி.மீ மின் மயமாக்கப்பட்டது), 7112 ரயில் நிலையங்கள், 13.76 லட்சம் தொழிலாளர்கள், 2,45,000+ சரக்குப்பெட்டிகள், 66000+ பயணப்பெட்டிகள், சுமார் 10,500 இயக்கிகள் (இன்ஜின்), சுமார் 12,700 பயணிகள் தொடர்வண்டி, சுமார் 7500 சரக்குத் தொடர்வண்டிகள், தினம் ஒரு கோடிக்கும் மேலான பயணிகள் என பெரும் வளர்ச்சி அடந்த ஒரு பொது நிறுவனமாக உள்ளது.
" "இவ்வளவு பெரிய நிறுவனம், ஒரு தனி அமைச்சகமாக, ஒரு கேபினெட் அமைச்சர் மற்றும் இணை அமைச்சர் தலைமையிலும், நிர்வாகம் ரயில்வே போர்டு எனப்படும் குழுவின் அமைப்பாலும், மண்டல நிலையில் பொது மேலாளர் தலைமையிலும் இயங்குகிறது. "
Q76. நீராவி இயக்கியை கண்டுபிடித்தவர் யார்?
"ஜேம்ஸ் வாட். 1705ல் இந்த நீராவி இயக்கியை வடிவமைத்தவர் நியூ கோமன் என்பவர். அதை பயனுக்கு 1765ல் ஜேம்ஸ் வாட் கொண்டு வந்தார். "
Q77. முழுமையான ஒரு நீராவி இயக்கியை நிர்மாணித்து முடித்தவர் யார்?
ரிச்சர்டு த்ரிவெத்திக் 1801.
Q78. உலகில் முதன் முதலில் தண்டவாளப்பாதை எங்கு போடப்பட்டது?
"பிரிட்டனில் ஸ்டாக்டன் -> டார்லிங்டன் இடையில் 1827ல் தொடங்கப்பட்டது. இதுவே பயணிகளுக்கான முதல் தொடர்வண்டிப் போக்குவரத்து. "
Q79. உலகின் மிக பழமையான பயன் நிலையில் உள்ள நீராவி இயக்கி எது?
" ""FAIRY QUEEN"" ""ஃபேய்ரி க்வின்"" - 1855ல் M/s Kiltson, Thomson and Hewittson, பிரிட்டன் என்ற நிறுவனத்தால் உருவாக்கப் பட்ட இந்த இயக்கி 1909 வரை பயனில் இருந்தது.
1997ல் இது மீண்டும் பயன் நிலைக்கு தயார் செய்யப்பட்டு, நம் நாட்டின் “Palace on Wheels” என்ற ஆடம்பர தொடர் வண்டியில் டெல்லி -> ஆல்வார் இடையில் பயன் படுத்தப்படுகிறது. இது ஒரு தேசிய சொத்தாக்க் கருதப்படுகிறது. "
Q80. நம் நாட்டில் தண்டவாள தொடர்வண்டி தொடங்க மூலக்காரணமாக இருந்தவர் யார்?
1843ல் கவர்னர் ஜெனரலாக இருந்த டல் ஹௌசி பிரபு. அதனால் இவரை "இந்திய ரயில்வேயின் தந்தை" என்பர்.
Q81. இந்திய ரயில்வே தொடங்குவதற்கு காரணமாயிருந்த முக்கிய பொறியாளர் Chief Engineer யார்?
ஜார்ஜ் க்ளார்க், பாம்பே மாநில முக்கிய பொறியாளர்.
Q82. எந்த நிகழ்ச்சி இந்திய ரயில்வே தொடங்க காரணமாயிருந்த்து?
22.12.1851ல் முதன் முதலாக நிர்மாணப் பொருள்களை ஏற்றிச்செல்ல ஒரு தொடர்வண்டி ஓட்டியதே.
Q83. நம் நாட்டில் முதன் முதலாக பயணிகள் தொடர்வண்டி ஓட்டப்பட்டது?
16.4.1853 பாம்பேயில் போரிபந்தர் மற்றும் தானே--க்கிடையில் முதல் பயணிகள் தொடர்வண்டி ஓட்டப்பட்டது.
Q84. 16 ஏப்ரல் இந்திய ரயில்வேயில் எவ்வாறு கொண்டாடப்படுகிறது?
""ரயில்வே வாரம்"" Railway Week என அனுசரிக்கப்படுகிறது. அவ்வமயம், சிறந்த தொழிலாளர்களுக்கு விருதுகள் வழங்குவது, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நட்த்தப்படுகிறது. "
Q85. பொதுவாக தண்டவாளங்கள் இடைவெளிகள் என்னென்ன முறையில் உள்ளன?
" அகலப் பாதை -Broad Gauge - 1.67 mtrs/5’ 6” }
மீட்டர் கேஜ் Metre Gauge - 1.00 mtr/3’ 3” }
நம் நாட்டில் இந்த மூன்று பாதைகளும் உள்ளன.Followed in India.
குறுகிய பாதை Narrow Gauge - .762 mtr/2’ .5”. }
ஸ்டாண்டர்டு Standard Gauge - 4 Ft. 8.5 inches – mostly followed in Europe."
Q86. இந்திய ரயில்வே எந்த சட்டத்தின் கீழ் இயங்குகிறது?
இந்திய ரயில்வே சட்டம் 1890 (அவ்வப்போது ஏற்படும் திருத்தங்களுடன்)
Q87. இந்திய ரயில்வேயை நிர்வாகம் மற்றும் வழிநடத்தும் அமைப்பு எது?
ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் "ரயில்வே போர்டு" The Railway Board - 1905ல் அமைக்கப்பட்டது.
Q88. ரயில்வே போர்டு அமைப்பு எவ்வாறு உள்ளது?
"தலைவர் chairman, இவருக்கு உதவியாக பொறியியல், இயந்திரவியல், மின்சாரம், தொழிலாளர்கள் மற்றும் தணிக்கை இயக்குநர், மருத்துவ இயக்குநர் என ஒரு அங்கத்தினரும் (Members) அவரவர்களுக்குண்டான காரியாலயமும் சேர்ந்து நிர்வாகம் செய்கிறது.
தலைவர் ரயில்வே அமைச்சகத்தின் செயலாளர் பதவியும் வகிக்கிறார் (Secretary, Ministry of Railways). "
Q89. ரயில்வே இயங்குவதில் உள்ள பாதுகாப்பு (safety aspect) பிரிவின் முக்கிய அதிகாரி யார்?
"பெங்களூரை தலைமயகமாகக் கொண்டு, 1.11.1961 முதல் இயங்கும் ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர் Commissioner of Railway Safety. இவர் பொது வான் வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறார்.
இவருடை அனுமதி இன்றி எந்த ஒரு புது வழித்தடமும், அவ்வழியில் தொடர்வண்டியும் அனுமதிக்கப்படமாட்டாது. "
Q90. சுதந்திரத்திற்கு முன்பாக, ஆங்கிலேயர்கள் ஆட்சியில், ரயில்வே எவ்வாறு இயங்கிவந்தது?
"A. ஆங்கிலேயர்கள் காலத்தில் ரயில்வே தனியார் நிறுவனமாகவும் (Company Railways), சில பகுதிகள் குறுநில மன்னர் ரயில்வேக்களாகவும் இயங்கி வந்தன.
இவ்வாறு சுமார் 42 ரயில்வேக்கள் இயங்க்கின. அவற்றுள் சில் முக்கிய ரயில்வேக்களின் பெயர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
1. East Indian கிழக்கு இந்தியன்
2. Bikaner & Jaipur பிக்கானீர் மற்றும் ஜெய்ப்பூர்
3. Bengal & Assam பெங்கால் மற்றும் அஸ்ஸாம்
4. Audh Tirhut அவுத் திர்ஹூத்
5. Bombay, Baroda & Central India பாம்பே, பரோடா மற்றும் மத்திய இந்தியா
6. Cooch Behar கூச் பீஹார்
7. East Bengal கிழக்கு வங்காளம்
8. Bengal Nagpur பெங்கால் நாக்பூர்
9. Mysore State மேசூர் மாகாணம்
10. Madras & Southen Maharatta மதராஸ் மற்றும் சதர்ன் மராட்டா
11. South Indian தெற்கு இந்தியன்
12. Sangli State சங்லி மாகாணம்
13. Nizam State நிஸாம் மாகாணம்
14. Scindia State
15. Great Indian Peninsular க்ரேட் இந்தியன் பெனின்சுலர்
16. Jaipur Saurashtra. ஜெய்ப்பூர் சௌராஷ்டிரா"
Q91. ஆங்கிலேயர் காலத்தில் இயங்கிய மிகச் சிறிய ரயில்வே நிர்வாகம் எது?
சங்லி மாகாண ரயில்வே - 6 கி.மீ நீளத்திற்கு மட்டுமே.
Q92. "சுதந்திரத்திற்கு பிறகும் தொடர்ந்த நிறுவன ரயில்வக்கள், மண்டலங்களாக எப்போது மாறத் தொடங்கியது? "
"1951-52 களில் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 1952ல் ஒன்பது மண்டலங்களாக உருவெடுத்த்து.
இன்றைய நிலையில் 16 மண்டலங்கள் உள்ளன. மண்டலங்களின் கீழ் சிறு பகுதிகள் - Divisions இயங்குகின்றன. மண்டலங்கள் நிர்வாகத்தை பொது மேலாளரும் (General Manager) சிறு பகுதிகளை பகுதி ரயில்வே மேலாளர் - Divisional Railway Manager கவனித்துக்கொள்கிறார்கள். "
Q93. இன்றைய நிலையில் எத்தனை/என்னென்ன ரயில்வே மண்டலங்கள் இயங்குகின்றன?
லக்னௌ, மொராதாபாத்
வ.எண் ரயில்வே பெயர் தொடக்கம் தலைமையகம் பகுதிகள் (Divisions)
1. NR – வடக்கு ரயில்வே 14.4.1952 - டெல்லி அம்பாலா, ஃபிரோஸ்பூர்,
2. NER – வடகிழக்கு ரயில்வே 1952 கோரக்பூர் இஸ்ஸத்நகர், லக்னௌ, வாரணாசி
3. NFR – வடக்கு எல்லைப் பகுதி ரயில்வே 1958 கவுஹாத்தி அலிபூர்துவார், கத்திஹார், லம்டிங், ரங்கியா, தின்சுகியா
4. ER – கிழக்கு ரயில்வே ஏப்ரல் 1952 கொல்கத்தா ஹௌரா,ஸியால்டா, அஸன்சால், மால்டா
5. SER -- தென்கிழக்கு ரயில்வே 1955 கொல்கத்தா கரக்பூர், ஆத்ரா, சக்ரதார்பூர், ராஞ்சி
6. SCR – தென் மத்திய ரயில்வே 2.10.1966 செகந்திராபாத் செகந்திராபாத்,ஹைதராபாத்,குண்டக்கல்,குண்டூர்,நாண்டெட், விஜயவாடா
7. SR – தெற்கு ரயில்வே 14.4.1951 சென்னை சென்னை, மதுரை,பாலக்காடு,சலெம், திருச்சி, திருவன்ந்தபுரம்
8. CR – மத்திய ரயில்வே 5.11.1951 மும்பை மும்பை, புசாவல்,ஷோலாபூர், பூனே, நாக்பூர்
9. WR – மேற்கு ரயில்வே 5.11.1951 மும்பை மத்திய மும்பை,பரோடா,ரத்லாம்,அஹமதாபாத், ராஜ்கோட், பாவ்நகர்
10. SWR – தென்மேற்கு ரயில்வே 1.4.2003 ஹூப்ளி ஹூப்ளி, பெங்களூரு, மைசூரு
11. NWR – வடமேற்கு ரயில்வே 1.10.2002 ஜெய்ப்பூர் ஜெய்ப்பூர், பிக்கானீர், ஜோத்பூர்
12. WCR – மேற்கு மத்திய ரயில்வே 1.4.2003 ஜபல்பூர் ஜபல்பூர், போப்பால், கோட்டா
13. NCR – வடமத்திய ரயில்வே 1.4.2003 அலஹாபாத் அலஹாபாத், ஆக்ரா, ஜான்சி
14. SECR – தென் கிழக்கு மத்திய ரயில்வே 1.4.2003 பிலாஸ்பூர் பிலாஸ்பூர், ராய்ப்பூர், நாக்பூர்
15. ECoR – கிழக்கு கடற்கரை ரயில்வே 1.4.2003 புவனேஸ்வர் குர்தாரோடு, சம்பல்பூர், விசாகப்பட்டினம்
16. ECR – கிழக்கு மத்திய ரயில்வே 1.10.2002 ஹாஜிபூர் தானாபூர், தன்பாத், முகல்சராய், சமஸ்திபூர், சோன்பூர் "

Q94. ரயில்வே மண்டலத்தையும் (zone), பகுதியையும் (Division) நிர்வகிப்பது யார்?
மண்டலத்தை பொது மேலாளர் General Manager, பகுதியை பகுதி ரயில்வே மேலாளர் Divisional Railway Manager.
Q95. "மண்டலங்களைத் தவிர்த்து, பயணிகள் தொடர் வண்டி போக்குவரத்து நடத்தும் இந்திய நிறுவனங்கள் யாவை? "
" 1. கொங்கன் ரயில்வே -KONKAN RAILWAY: புது மும்பையை தலைமயகமாகக் கொண்டு 26.1.1988 முதல் இயங்கும் இந்த பொதுத்துறை நிறுவனம், மகாராஷ்டிராவின் ரோஹா என்ற இடத்திலிருந்து கர்நாடகாவின் மங்களூர் வரை, மேற்கு தொடர்ச்சி மலைகள் வழியாக சுமார் 760 கி.மீ. தொடர்வண்டி போக்குவரத்து நடத்துகிறது. இந்த தூரம் நிர்வாக நிமித்தமாக ரத்னகிரி மற்றும் கார்வார் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, கோவா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் கடலோர, மலையோர பகுதி வாழ் மக்களுக்கு வசதியானது.
2. கொல்கத்தா மெட்ரோ - KOLKATTA METRO : இந்தியாவின் முதல் பூமிக்கடியில் செல்லும் தொடர்வண்டி போக்குவரத்து.29.12.1972 அன்று, திருமதி இந்திரா காந்தி அவர்களால் தொடங்கப்பட்ட இது, 25 கி.மீ க்கு, டாலிகஞ்ச் மற்றும் தம்தம் ரயில் நிலையங்களுக்கு இடையில் 23 ரயில் நிலையங்களுடன் (15 பூமிக்கடியில்) இயங்குகிறது. இது இந்திய ரயில்வேயின் 17வது மண்டலமாக கருதப்படுகிறது.
3. புது டெல்லி மெட்ரோ NEW DELHI METRO : நம்நாட்டின் இரண்டாவது பூமிக்கு அடியிலும் மேலும் இயங்கும் வெகுஜன துரித தொடர்வண்டி போக்குவரத்து திட்டம். 24.12.2002 அன்று மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த திட்டம் 6 கிளைகளுடன், 160 நிலையங்களுடன் 213 கி.மீக்கு இயங்குகிறது. கிளைகள் வண்ணங்களின் பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இதில் பச்சை நிற கிளை தொடர் வண்டிகள் நம் நாட்டில் முதன் முதலில் Standard Gauge (4 ft 8.5 inches)ல் இயக்கப்படும் தொடர் வண்டிகள்.
4. பெங்களூரு மெட்ரோ BENGLOORU METRO: இது ""நம்ம மெட்ரோ"" என அழைக்கப்படுகிறது. 20.10.201ல் தொடங்கப்பட்டு 25.5 கி.மீ.க்கு 25 நிலையங்களுடன் இயங்கி வருகிறது. முழுமையடைந்தவுடன் 3 கிளைகளாக 182 கி.மீக்கு 162 நிலையங்களுடன் இயங்கும்.
5. சென்னை மெட்ரோ CHENNAI METRO: 29.6.15 அன்று 10 கி.மீ.க்கு தொடங்க்கிவைப்பட்து. முழுமையடைந்தவுடன் 45.1. கி.மீ.க்கு இயங்கும்.
6. ஜெய்ப்பூர் மெட்ரோ JAIPUR METRO: 3.6.2015 அன்று தொடங்கப்பட்டு, 9.63 கி.மீக்கு 9 நிலையங்களுடன் இயங்கிவருகிறது. முடியும்போது 35.1 கி.மீக்கு 2 நிலயங்களுடன் இயங்கும்.
7. குர்காவ்ன் மெட்ரோ GURGAON METRO: 14.1.2013 முதல் 5.1 கி.மீ க்கு 6 நிலையங்களுடன் இயங்கிவருகிறது.
அனைத்து மெட்ரோக்களும் தனி நிர்வாகமாக, Standard Gauge (4 ft 8.5 inches)ல் இயங்குகிறது. "
Q96. வெகுஜன துரித போக்குவரத்து தொடர்வண்டி திட்டம் Mass Rapid Transit System எங்கு இயங்குகிறது?
"வெகுஜன துரித தொடர்வண்டி திட்டம் MASS RAPID TRANSIT SYSTEM – சென்னை . இதன் நிர்வாகத்தை தென்னக ரயில்வே மேற்கொள்கிறது. சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை 25 கி.மீக்கு 21 நிலையங்களுடன் இயங்குகிறது. 1997ல் தொடங்கப்பட்ட இந்த திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்படுகிறது."
Q97. நம் நாட்டின் பழமையான புறநகர் தொடர் வண்டி திட்டம் எது?
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை 1931ல் தொடங்கப்பட்ட திட்டம் தான் பழமையானது.
Q98. இந்திய ரயில்வேயின் வெவ்வேறு துறைகள் யாவை?
"1. போக்குவரத்து Traffic: பயண மற்றும் சரக்குத் தொடர்வண்டிகளை திட்டமிட்டு இயக்குவது.
2. பொறியியல் Engineering: தடவாளம் மற்றும் இதர கட்டுமானப் பணிகள்.
3. வணிகம் Commercial: பயணச்சீட்டு, பயணப்பதிவு, சரக்கு போக்குவரத்து
4. இயந்திரவியல் Mechanical: ரயில் பெட்டி, சரக்குப் பெட்டிகள் பராமரிப்பு
5. சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு Signal & Telecommunication: தண்டவாள ஓடு பாதைகளில் சமிக்ஞைகள் பொருத்துவது மற்றும் தொலைத்தொடர்பு பராமரிப்பு
6. பொருள் பற்று Stores : ரயில்வே துறைக்கு தேவையான பொருட்களை பெற்று தருதல்
7. மருத்துவம் Medical: தொழிலாளர்களுக்கான மருத்துவ வசதி
8. பாதுகாப்பு Security: ரயில்வே சொத்துக்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பு
9. தொழிலாளர் நலம் Personnel : ரயில்வே துறைக்கு தேவையான தொழிலாளர்கள் தேர்வு மற்றும் அவர்களின் நலம்.
10. கண்காணிப்பு Vigilance:தொழிலாளர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது "
Q99. இந்திய ரயில்வேயின் தயாரிப்பு நிறுவன்ங்கள் production units யாவை?
" 1.சித்தரஞ்சன் லோக்கோமோட்டிவ் ஒர்க்ஸ், சித்தரஞ்சன், மேற்கு வங்காளம். 1950 ல் தொடங்கப்பட்டது. இந்த தொழிற்சாலை சுதந்திர போராட்ட வீரர் சித்தரஞ்சன் தாஸ்பெயரால் தொடங்கப்பட்டது. தொடர்வண்டி இயக்கிகளை தயாரிக்கிறது. இங்கு தயாரிக்கப்பட்ட முதன் நீராவி இயக்கி WG 8401. இப்போது மாற்றங்களின் அடிப்படையில் மின் இயக்கிகளை உருவாக்குகிறது.
2. ஒருங்கிணைப்பு தொடர்வண்டி பெட்டி தொழிற்சாலை Integral Coach Factory: 1952 ல் பெரம்பூர், சென்னையில் தொடங்கப்பட்ட இந்த தொழிற்சாலை இந்திய ரயில்வேக்கு தேவையான பயணப்பெட்டிகள் தயாரிப்பது மட்டுமின்றி பல வெளி நாடுகளுக்கும் பயணப்பெட்டிகள் தயாரித்து வருகிறது. உலகதரம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனம்.
3. டீசல் இயக்கிகள் தயாரிப்பு நிறுவனம் Diesel Locomotive Works, வாரணாசி. 1961ல் தொடங்கப்பட்டது. டீசல் எஞ்சின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
4. ரயில் பெட்டி தொழிற்சாலை Rail Coach Factory: கபூர்தாலா, பஞ்சாப். 1986 ல் தொடங்கப்பட்ட இந்த தொழிற்சாலை இந்திய ரயில்வேக்கு தேவையான பயணப்பெட்டிகளை தயாரிக்கிறது.
5. ரயில் சக்கரத் தொழிற்சாலை Rail Wheel Factory: எலஹங்கா, பெங்களூரு. 1984 - பயண/சரக்குப் பெட்டிகளுக்குத் தேவையான இரும்பு சக்கரங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
6. டீசல் லோக்கோ உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலை Diesel Loco Component Works: பட்டியாலா, பஞ்சாப் 1981 - உதிரிபாகங்கள் தயாரிப்பு.
இவை தவிர்த்து சப்ரா, பீஹார் மற்றும் ஆலப்புழை , கேரளா ஆகிய இடங்களிலும் தொழிற்சாலைகள் உள்ளன. "
Q100. இந்திய ரயில்வேயின் கீழ் இயங்கும் பொத்த்துறை நிறுவனங்கள் யாவை?
" 1. IRCTC – Indian Railway Catering and Tourism Corporation – ரயில் பயணத்தில் உணவு பரிமாறுதல், சுற்றுலா பயணங்கள் ஏற்பாடு செய்வது, கணினி முன் பதிவு பணியை சீராக கவனிப்பது போன்ற பல பணிகளை மேற்கொள்கிறது.
2. Indian Railway Finance Corporation – இந்திய ரயில்வே மேம்பாட்டுக்காக நிதி திரட்டுவது.
3. Mumbai Rail Vikas Corporation Ltd.,: மும்பை புறநகர் தொடர்வண்டி போக்குவரத்து மேம்பாட்டு கட்டுமானங்களை உருவாக்குவது.
4. Rail Tel Corporation Ltd.,: 2000ல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் நாடு முழுவதும் அகலக்கற்றை (broaband) உருவாக்குவது, ரயில்வே பாதுகாப்பு மின்னணு சாதங்கள் உருவாக்குவது போன்ற பணிகள்.
5. RITES Ltd – Rail India Technical & EngineeringServices Ltd., 1974ல் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம், ரயில் போக்குவரத்து சம்பந்தப்பட்ட திட்டங்கள், கட்டுமானங்கள் போன்றவையில் ஆலோசனை மற்றும் நிறைவேற்றுவது. வெளிநாட்டில் பல திட்டங்களை நிர்மாணித்த தலைசிறந்த நிறுவனம்.
6. IRCON INTERNATIONAL Ltd., 1976ல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் ரயில்வே கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளது.
7. RAIL LAND DEVELOPMENT AUTHORITY Ltd., 2006ல் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம், ரயில்வேயின் திறந்தவெளி காலி இடங்களை வணிக ரீதியாக மேம்படுத்துவது.
8. CRIS – Centre for Railway Information System – 1986 ல் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் கணினி ரயில்வேக்கு தேவையான தயார் நிலை மென்பொருள் உருவாக்குவது மற்றும் பராமரிப்பது.
9. RDSO – Railway Design & Standards Organization – Lucknow. 1957ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு ரயில்வே துறைக்குத் தேவையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகளை மேற்கொள்கிறது. மண்டல அந்தஸ்து பெற்றது.
10.CORE – Central Organization for Railway Electrification – Allahabad - 1961ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், ரயில்வேயின் மின் மயமாக்கல் பணியை மேற்கொள்கிறது.
11.CONCOR – CONTAINER CORPORATION – 1988ல் தொடங்கப்பட்டது. சரக்கு கொள்கலன் (container) போக்குவரத்தை கையாள்கிறது.
12. BHARAT WAGON & ENGINEERING CO. Ltd., Patna, Bihar. 1978 – ரயில்வே சரக்குப் பெட்டிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
13. DEDICATED FREIGHT CORRIDOR CORPORATION OF INDIA – 2006 – இந்திய ரயில்வேக்கென தனி சரக்குப்பெட்டிகள் தொடர் வண்டி ஓடுவதற்கென விரைவு பாதைகள் ஏற்படுத்துவது சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்கிறது.
"
Q101. இந்திய ரயில்வேயின் மலை தொடர்வண்டிப் பாதைகள் யாவை?
"1. டார்ஜிலிங் ஹிமாலயன் ரயில்வே DARJEELING HIMALAYAN RAILWAY: – புது ஜல்பைக்குரியிலிருந்து டார்ஜிலிங் வரையிலான மலைதொடர் வண்டிப் பாதை -மேற்கு வங்காளம் - 86 கி.மீ - 1879-1881க்கிடையில் கட்டப்பட்டது. சுமார் 7000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. உலகின் இரண்டாவது உயரமான மலைத் தொடர் வண்டிப் பாதை. உலகப் புராதனச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இத்தொடரில் உள்ள ""கம் GHUM"" ரயில் நிலையம் உலகின் இரண்டாவது உயரமான ரயில் நிலையம்.
2. நீலகிரி மலைத்தொடர் ரயில்வே NILGIRI MOUNTAIN RAILWAY – 1889-90 களில் தொடங்கப்பட்ட இந்த இருப்புப்பாதை மேட்டுப்பாளையம் முதல் உதகமண்டலம் வரை 46 கி.மீ க்கு இயங்குகிறது. இத்தொடரில் உலகப்புகழ் பெற்ற கோடைவாசத்தலம் ஊட்டி அமைந்துள்ளது . உலகப் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பழமையான மலைத்தொடர் இருப்புப்பாதை.
3. கல்கா-ஷிம்லா KALKA SHIMLA : 1903ல் தொடங்கப்பட்ட இந்த இருப்புப்பாதை 96 கி.மீ க்கு, கல்கா (ஹரியானா) விலிருந்து ஷிம்லா (இமாச்சலபிரதேசம்) வரை இயங்குகிறது. இத்தொடரில் சுமார் 102 சுரங்கப்பாதைகளும் 864 பாலங்களும் உள்ளன.
4. மாத்தேரான் லைட் ரயில்வே MATHERAN LIGHT RAILWAY – 1904-1917 களுக்கிடையில் அப்துல் ஹூசைன் என்பவரால் கட்டப்பட்து. மும்பையின் நேரல் -லிருந்து மாத்தேரான்-21 கி.மீ - என்ற இடத்திற்கு செல்லும் இருப்புப்பாதை.
5. கங்ரா பள்ளத்தாக்கு ரயில்வே KANGRA VALLEY RAILWAY –1929 - பதான்கோட்-டிலிருந்து ஜொகிந்தர் நகர் வரை - 164 கி.மீ தூரத்துக்கு இயங்கும் இருப்புப்பாதை. இத்தொடரில் சுமார் 971 மிக அழகாக வடிவமைக்கப்பட்ட உயர் பாலங்கள் ரம்யமான பின்னணியில் அமைந்துள்ளது. இமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டாவது மலைவழி இருப்புப்பாதை. "
Q102. இந்திய ரயில்வேயின் முக்கிய அம்சங்கள் யாவை?
" 1. ஆசியாவின் மிகப்பெரிய ரயில்வே - 65000+ கி.மீ; 7112 ரயில் நிலையங்கள்; 12700+ பயணிகள் மற்றும் 7500+ சரக்கு தொடர் வண்டிகள்; 2.45 லட்சம் சரக்குப்பெட்டிகள், 66000+ பயணப்பெட்டிகள்; 10500 இயக்கிகள்; 13.76 லட்சம் தொழிலாளர்கள் கொண்ட மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம். 64 215 Kms – 60000 passenger coaches, 9000 locomotives and 2,30,000 freight wagons.
2. உலகில் அதிகமான தொழிலாளர்களைக்கொண்ட ஒரே தனி நிறுவனம்.
3. உலகின் நான்காவது மிகப் பெரிய ரயில்வே.
4. இந்தியாவின் மிகப்பெரிய பொது நிறுவனம்.
5. உலகின் இரண்டாவது மிகப்பெரிய மின்மயமாக்கப்பட்ட ரயில்வே.
6. நான்கு உலகப் புராதனச்சின்னமாக அறிவிக்கப்பட்ட மலைவழி ரயில்வேக்கள் உள்ளன. "
Q103. இந்திய ரயில்வேயில் இயக்கப்படும் சுற்றுலா ஆடம்பர தொடர் வண்டிகள் யாவை?
" 1. சக்கரத்தின் மேல் ஒரு அரண்மனை PALACE ON WHEELS – ராஜஸ்தான் மாநில அரசாங்கத்தால் நட்த்தப்படும் ஒரு ஆடம்பர தொடர் வண்டி. ராஜஸ்தானை ஆண்ட மன்னர்கள் பகுதிகளின் பெயரிடப்பட்ட 23 பயணப்பெட்டிகள், 1982 முதல் 8 நாட்களுக்கு தொடரும் ஒரு சுற்றுலா தொடர்வண்டி. டெல்லியில் தொடங்கி, ஆக்ரா வழியாக, ராஜஸ்தானின் முக்கிய சுற்றுலா மையங்களை - ஜெய்ப்பூர், ஜெய்ஸல்மேர், ஜோத்பூர், சவாய் மதோபூர், சித்தோர்கர், உதய்ப்பூர், பரத்பூர் ஆகிய இடங்களை சுற்றி வரும் இத்தொடரின் அனுமதிச்சீட்டுஅமெரிக்க டாலரில் மட்டுமே கிடைக்கும். இத்தொடரில் உள்ள உணவு மையங்கள் ""மகாராஜா"" மற்றும் ""மஹாராணி"" என பெயரிடப்பட்டுள்ளது.
2. டெக்கான் ஒடிஸி - DECCAN ODYSSEY – மகாராஷ்டிரா அரசாங்கத்தால் நடத்தப்படும் ஆடம்பர தொடர்வண்டி. மும்பையில் தொடங்கி 7 பகல்/இரவு மகாராஷ்டிரா வின் முக்கிய சுற்றுலா மையங்களை சுற்றிவரும் தொடர் வண்டி.
3. தங்க ரதம் GOLDEN CHARIOT – கர்நாடக அரசாங்கத்தால் நடத்தப்படும் சுற்றுலா தொடர்வண்டி. 8 பகல் 7 இரவுகள் கொண்ட இந்த சுற்றுலா தொடர் கர்நாடகாவின் முக்கிய சுற்றுலா மையங்களை சுற்றி வருகிறது. இப்பகுதி மன்னர்களின் பெயர்களைக் கொண்ட 11 பயணப்பெட்டிகள் கொண்டது.
4. ராயல் ராஜஸ்தான் ROYAL RAJASTHAN – ராஜஸ்தான் மாநிலத்தின் இரண்டாவது ஆடம்பர சுற்றுலா தொடர் வண்டி.
2009ல் தொடங்கப்பட்ட இந்த தொடர் வண்டி புது டெல்லியில் தொடங்கி ஜெய்ப்பூர், ஜெய்ஸல்மேர், ஜோத்பூர், சவாய் மதோபூர், சித்தோர்கர், உதய்ப்பூர், பரத்பூர் ஆக்ரா ஆகிய இடங்களுக்கு செல்கிறது."
Q104. இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் பிரத்தியேக தொடர் வண்டிகள் யாவை?
"1. லைஃப் லைன் எக்ஸ்பிரஸ் LIFE LINE EXPRESS : ரயில் தொடர்வண்டியில் சகல வசதிகளுடன் கூடிய ""ஜீவன் ரேகா எக்ஸ்பிரஸ்"" என பெயரிடப்பட்டுள்ள மருத்துவ மனை. இது நம்நாட்டின் கிராமப்புற பகுதிகளுக்குச் சென்று மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் வழங்கி வருகிறது.
2. சம்ஜோத்தா (தோழமை) எக்ஸ்பிரஸ் SAMJHAUTHA EXPRESS : ""தோழமை எக்ஸ்பிரஸ்"" என்றும் அழைக்கப்படுகிறது. டெல்லியிலிருந்து பாகிஸ்தானின் லாஹூருக்கு செவ்வய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் செல்கிறது. 22.7.1976 முதல் தொடங்கப்பட்டது. இரண்டுநாடுகளுக்கிடையே மேலாண்மை மாற்றம் இந்திய பகுதியில் அட்டாரி-யும், பாகிஸ்தான் பகுதியில் வாகா என்ற இட்த்துக்கு இடையில் மாற்றம் செய்யப்படுகிறது.
3. தார் துரிதவண்டி THAR EXPRESS : பாகிஸ்தானின் கோக்ராபார் மற்றும் இந்தியாவின் முனபாவ் (ராஜஸ்தான்) என்ற இடத்திற்கு செல்லும் ரயில் தொடர் வண்டி. எல்லை மாற்றம், இந்தியாவின் பார்மர் என்ற இத்திலும், பாகிஸ்தானின் மிர்பூர் காஸ் என்ற இடத்திலும் செய்யப்படுகிறது.
"
Q105. உலகின் சில முக்கிய ஆடம்பர ரயில் தொடர் வண்டிகள் யாவை?
"கொடுக்கப்பட்டுள்ள தொடர் வண்டிகளில் பல ஓரியண்ட் ஹோட்டல்ஸ் பி.லிட்., என்ற நிறுவனத்தால் நடத்தப் படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் தான் சுற்றுலா அதிகமாக இருப்பதால், இவை அனைத்தும் ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக இயங்குகிறது. அவை:
1. Venice Simplon Orient Express – 1982 – லண்டன் -> வெனிஸ். “Orient Express” என அழைக்கப்படுகிறது. லண்டனிலிருந்து புறப்பட்டு, பாரீச், ரோம், வெனிஸ், வியன்னா, ப்ரேக், புடாபெஸ்ட், புக்காரெஸ்ட், இஸ்தான்புல், ட்ரெஸ்டன், இஸ்தான்புல், க்ரேகௌ ஆகிய இடங்களுக்கு செல்கிறது.
2. Royal Scotsman – ஸ்காட்லாந்து நாட்டில் இயங்கும் ஆடம்பர சொகுசு தொடர் வண்டி.
3. Hiram Bingham – பெரு -- ""மச்சு பிச்சு Machhu Picchu”Peru – என்ற உலக அதிசய இடத்திற்கான ஆடம்பர தொடர் வண்டி.
4. Northern Bell – ஐக்கிய ராஜ்ய UK த்திற்குள் இயக்கப்படும் ஆடம்பர தொடர் வண்டி.
5. Eastern & Oriental Express – பாங்காக் மற்றும் சிங்கப்பூருக்கிடையில் குலாலம்பூர் வழியாக இயங்கும் ஆடம்பர வண்டி.
6. British Pullman – ஐக்கிய ராஜ்யத்திற்குள் UK இயங்கும் ஆடம்பர தொடர் வண்டி.
7. Rovos Rail - - 1989 – தென் ஆப்பிரிக்கா, தன்ஸானியா, நமீபியாபோன்ற ஏழு ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையே ஓடும் ஆடம்பர வண்டி.
8. The Ghan – ஆஸ்திரேலிய சொகுசு ஆடம்பர தொடர் வண்டி.
9. Transcoastal and Transpaline – நியூசிலாந்தின் ஆடம்பர சொகுசு தொடர் வண்டி.
10. Blue Train – தென் ஆப்பிரிக்க நாட்டின் ஆடம்பர சொகுசு தொடர் வண்டி."
Q106. உலகின் நீளமான ரயில் பயணம் எது?
"Golden Eagle Trans Siberian Express – ஏப்ரல் 2007 முதல் – 9335 கி.மீ - இரண்டு கண்டங்கள் வழியாகவும், 8 நேர மாற்ற நிலைக்குள்ளாகும் ரயில் பயணம். ட்ரான்ஸ் சைபீரியன் ரயில் பாதையில் ரஷ்யாவின் மாஸ்கோவிலிருந்து ஐரோப்பிய ரஷ்யாவையும், மங்கோலியா, சீனாவின் சில மாகாண பகுதிகளையும் இணைக்கிறது. "
Q107. "ரயில்வே தொழிலாளர்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறார்கள்? (பொதுவாக மத்திய அரசாங்க ஊழியர்கள்) "
"A. A,B,C and D என நான்கு வகை. A பிரிவினர் UPSC மூலமாகவும், B பிரிவினர் அதிகமாக பதவி உயர்வு மூலமாகவும், C பிரிவினர் அதிக பட்சமாக ரயில்வே ஆள் சேர்த்தல் குழுமம் மூலமாகவும், D பிரிவினர் பதவி உயர்வு மூலமாகவும், D பிரிவினர் நேரடி, கருணை, விளையாட்டு, என பல வகைகளிலும் சேர்க்கப்படுகிறார்கள். இந்த வழிமுறைகள் பொதுவாக மத்திய அரசின் எல்லா துறைகளிலும் கடைபிடிக்கப்படுகிறது."
Q108. UPSC மத்திய பணியாளர் தேர்வுக்குழு மூலம் A பிரிவுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் எவ்வகை சேவைகளில் (service) ரயில்வேயில் சேர்க்கப்படுகிறார்கள்?
"1. IRTS – Indian Railway Traffic Service -- போக்குவரத்து
2. IRSME – Indian Railways Service for Mechanical Services –இயந்திரவியல் – recruited as Special Class Apprentices.
3. IRSSE – Indian Railway Service of Signal Engineers – சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு - Signal and Telecommunications Department.
4. IRES – Indian Railway Engineering Service - பொறியியல் Recruited through the Combined Engineering Services Examination by the UPSC.
5. IRAS – Indian Railway Accounts Service - நிதி கணக்கீடு
6. IRSS – Indian Railway Stores Service - பொருள் பற்று/கொள்முதல்
7. IRPS – Indian Railway Personnel Service - தொழிலாளர்.
8. IRMS - Indian Railway Medical Service - மருத்துவம்.
மத்திய தேர்வாணையக்குழு மூலம், சிவில் சர்வீஸஸ் (Civil Services) மற்றும் ஒருங்கிணைந்த பொறியியல் (Combined Engineering), ஒருங்கிணைந்த மருத்துவ தேர்வு மூலமாகவும் தேர்வு செய்யப்பட்டு தரவரிசையின் அடிப்படையில் துறை ஒதுக்கீடு செய்யப்படுகிறார்கள்."
Q109. "ரயில்வேயின் C பிரிவு தொழிலாளர்களை தேர்வு செய்யும் அமைப்பு எது? (சில பிரத்தியேக D பிரிவு தொழிலாளர்களுக்கும்) "
"ரயில்வே பணியமர்த்தல் தேர்வு குழுமம் -Railway Recruitment Boards. இந்த அமைப்பு கீழ்க்கண்ட இடங்களில் உள்ளன:
1. அஜ்மீர்
2. அஹமதாபாத்
3. அலஹாபாத்
4. பெங்களூரு
5. புவனேஸ்வர்
6. போப்பால்
7. பிலாஸ்பூர்
8. சென்னை
9. சந்திகார்
10. கவுஹாத்தி
11. கோரக்பூர்
12. ஜம்மு/ஸ்ரீநகர்
13. கொல்கத்தா
14. மால்டா
15. மும்பை
16. முஸாஃபர்பூர்
17. பாட்னா
18. ராஞ்சி
19. செகந்திராபாத்
20. திருவனந்தபுரம் "
Q110. இந்திய ரயில்வேயின் வெவ்வேறு பயிற்சி நிறுவனங்கள் யாவை?
"A. 1. ரயில்வே ஊழியர் கல்லூரி Railway Staff College, வடோடரா, குஜராத். மத்திய தேர்வாணையக் குழமம் மூலமாக A பிரிவுக்கு தேர்வு செய்யப்பட்டு நேரடி அதிகாரிகளாக வருபவர்களுக்கும், B pirivilirunhthu A பிரிவுக்கு பதவி உயர்வு பெறும், மற்றும் பதவி உயர்வு பெற்று B பிரிவு அதிகாரிகளுக்கும், மேலாண்மை மற்றும் இதர ரயில்வே நிர்வாகம் பற்றிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது. 1930ல் நிறுவப்பட்ட இந்த கல்லூரி, வடோடரா-வின் ப்ரதாப் விலாஸ் அரண்மனையில் இயங்கி வருகிறது.
2. IRSSE Institute: நாசிக், மகாராஷ்டிரா - A பிரிவு மின் பொறியாளர்கள் கல்லூரி.
3. IRISET : Indian Railway Institute of Signal Engineering Technology and Telecommunications Engineers – செகந்திராபாத் - சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு பொறியாளர்களுக்கு பயிற்சியளிக்கும் கல்லூரி.
4. IRES Institute: பூனே - மகாராஷ்டிரா - A பிரிவு அதிகாரிகளுக்கு பொறியியல் மற்றும் இருப்புப்பாதை தொழில்நுட்பக் கல்லூரி.
5. IRIMEE Indian Railway Institute of Mechanical & Electrical Engineering, ஜமால்பூர். இங்கு பயிற்சி பெற, +2 முடித்தவர்களுக்கு , மத்திய தேர்வாணையம் மூலம், Special Class Railway Apprentice என்ற தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு, முடிந்தவுடன் A பிரிவு அதிகாரிகளாக இயந்திரவியில் (Mechanical) துறையில் சேர்க்கப்படுகிறார்கள்.
6. RPF Academy : லக்னௌ. ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் கல்லூரி.
7. Zonal Training Schools: மண்டல பயிற்சிப் பள்ளிகள். அநேகமாக எல்லா மண்டலங்களிலும் இவ்வகை பள்ளி உள்ளது.
C பிரிவு மற்றும் D பிரிவு போக்குவரத்து, வணிக ஊழியர்களுக்கு ஆரம்ப கால பயிற்சியும், குறிப்பிட்ட கால இடை வெளிகளில் மறு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இவை தவிர்த்து தொடர்வண்டி ஓட்டுநர்களுக்கும் இதர தொடர்வண்டி ஓட்டுவதில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கும் தனி பயிற்சி பள்ளிகள் ஆங்காங்கே உள்ளன. "
Q111. ரயில்வே நிதி நிலை அறிக்கை சமர்ப்பிதலில் உள்ள பழக்கம் என்ன?
நாட்டின் பொது நிதி நிலை அறிக்கைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ரயில்வே நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு வந்தது.  2017 முதல் ரயில்வே நிதி நிலை அறிக்கையை, பொது நிதிநிலை அறிக்கையுடன் (General Budget) சேர்த்து அறிக்கை சமர்ப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Q112. ரயில்வே நிதி நிலை அறிக்கை முன்பாகவே சமர்ப்பிக்கப்படுவதின் பின்னணி என்ன?
"இந்த பழக்கம் 1924 முதல் உள்ளது. “AcWorth Committee” பரிந்துரையின் அடிப்படையில் நடந்த “Separation Convention” என்ற கூட்டத்தின் முடிவாகும். அந்த காலக்கட்டத்தில் நம் நாட்டின் நிதியின் வருமானத்தின் 70%, ரயில்வே வருமானத்தை சார்ந்து இருந்தது. அதனால் ரயில்வேயின் நிதி நிலை அறிக்கை முன்பாக சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இன்று ரயில்வேயின் வருமானம் பொது நிதியில் +15% தான். இருப்பினும், 1924ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த பழக்கம் இன்றும் தொடர்ந்தது. 
2017 முதல் ரயில்வே நிதிநிலை அறிக்கை பொது நிலை அறிக்கையுடன் சேர்த்து அறிவுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
Q113. "முதன் முதலில் யார் தற்காலிக ரயில்வே மந்திரியாகி, ரயில்வே நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்தார்? "
ஜான் மத்தாய்.
Q114. நம் நாட்டின் முதல் ரயில்வே மந்திரியாக தேர்வு செய்யப்பட்டவர் யார்?
என். கோபாலசாமி அய்யங்கார்.
Q115. "ஒரு பெரிய ரயில்வே விபத்துக்கு தானே பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்த, நம் நாட்டின் தலை சிறந்த அரசியல்வாதி யார்? "
"லால் பகதூர் சாஸ்திரி. 25.11.1956 அன்று தமிழ்நாட்டின் அரியலூரில் வெள்ளப்பெருக்கின் காரணமாக ஒரு முழு தொடர் வண்டியே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்த்து ஒரு துயர சம்பவம். அதற்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார். அதற்குப் பிறகு அவர் நம் நாட்டின் பிரதமர் ஆனார் என்பது அரசியல் சரித்திரம். "
Q116. நம் நாட்டின் கிழக்குப் பகுதியில் முதன் முதலாக எப்போது தொடர் வண்டி ஓட்டம் தொடங்கியது?
15.8.1854 - ஹௌரா -> ஹூக்ளி - 24 கி.மீ
Q117. நம் நாட்டின் தென் பகுதியில் எப்போது தொடர் வண்டி ஓட்டம் தொடங்கியது?
1.7.1856 – வியாசர்பாடி -> வாலாஜா ரோடு -- 63 கி.மீ.
Q118. நம் நாட்டின் வட பகுதியில் எப்போது தொடர் வண்டி ஓட்டம் தொடங்கியது?
19.10.1875 – ஹத்ராஸ் ரோடு -> மதுரா கண்டோன்மெண்ட்
Q119. உலகின் மிக நீளமான ரயில்வே தொடர் வண்டி இருப்புப்பாதை எங்குள்ளது?
மாஸ்கோ -> வ்ளாடிவோஸ்டாக் -- ரஷ்யா - 9289 கி.மீ.
Q120. உலகின் நீளமான ரயில்வே நடைமேடை எங்குள்ளது?
கோரக்பூர் - 1.366 கி.மீ; (இந்தியாவின்/உலகின் அடுத்ததாக கொல்லம் - 1.18 கி.மீ; கரக்பூர் - 1.072 கி.மீ.)
Q121. நம் நாட்டின் மிக நீளமான ரயில் தொடர் இருப்புப்பாதை வழி எங்குள்ளது?
விவேக் எக்ஸ்ப்ரஸ் - கன்னியாகுமரி -> திப்ருகர் (அஸ்ஸாம்) -- 4286 கி.மீ. 82.30 மணி நேர பயணம்.
Q122. நம் நாட்டின் மிக நீளமான ரயில்வே சுரங்கப்பாதை எங்குள்ளது?
கார்புடே சுரங்கப்பாதை -- 6.506 கி.மீ -- உக்ஷி - போக்கே ரயில் நிலையங்களுக்கிடையில் - கொங்கன் ரயில்வே.
Q123. நம் நாட்டின் மிக நீளமான ரயில்வே பாலம் எங்குள்ளது?
"வல்லர்படம் பாலம் -- கொச்சி - வல்லர்படம் சரக்கு பெட்டக சந்திப்பு இடையில் -- 4.062 கி.மீ. (இதற்கு அடுத்து சோன் பாலம் (பீஹார்) 3.065 கி.மீ."
Q124. உலகின் மிக நீளமான ரயில்வே சுரங்கப்பாதை எங்குள்ளது?
கோட்ஹார்ட் சுரங்கப்பாதை - ஸ்விட்ஸர்லாந்து - 15 கி.மீ.
Q125. உலகின் மிக உயரமான ரயில்வே சுரங்கப்பாதை எங்குள்ளது?
ஃப்ங்குவோஷன் FENGHUOSHAN-- ஃகிங்க்சாங் ரயில்வே -- சீனா - 4905 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சீனா திபெத்துக்கிடையில்.
Q126. உலகின் மிக உயரமான ரயில்வே இருப்புப்பாதை எங்குள்ளது?
டங்குலா மலைவழி TANGHULA PASS -- 5072 mtr-- Qing Zang Railway China.
Q127. உலகின் மிக உயரமான ரயில் நிலையம் எது?
டங்குலா மலை ரயில் நிலையம் - 5068 மீ - Qing Zang Railway of China.
Q128. நம் நாட்டின் மிக உயரமான ரயில் நிலையம் எது?
காசிகுண்ட் -- ஸ்ரீநகரிலிருந்து 80 கி.மீ - ஜம்மு - பாரமுல்லா - க்கிடையில் - 1722 மீ உயரத்திலுள்ளது. October 2009.
Q129. உலகின் இரண்டாவது மிக உயரமான ரயில் நிலையம் எது?
காண்டோர் - Condor – 4786 mtrs – between Rio Mulatos and Postoi Line - பொலிவியா.
Q130. நம் நாட்டின் மிகச்சிறிய பெயர் கொண்ட ரயில் நிலையம் எது?
இப் - IB – ப்ரஜ்ராஜ்நகர் மற்றும் ஜார்ஸ்குடா - க்கிடையில் -- ஹௌரா-நாக்பூர் வழித்தடத்தில் -- தென் கிழக்கு ரயில்வே.
Q131. நம் நாட்டின் மிக நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையம் எது?
"ஸ்ரீவெங்கடநரசிம்மராஜூவாரிபேட்டா -- Sri Venkatanarasimharajuvaripeta அரக்கோணம் - ரேணிகுண்டா ரயில் நிலையங்களுக்கிடையில் – தென்னக ரயில்வே. இது ஒரு மிகச்சிறிய ஊர்/நிலையம். "
Q132. நம் நாட்டின் அதி வேக தொடர்வண்டி எது?
நியூடெல்லி - ஆக்ரா "கத்திமான் எக்ஸ்பிரஸ் Gatimaan Express " 160 Kmph -- விரைவு வண்டி. 2016 ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
Q133. நம் நாட்டின் முதல் (ஆசியாவிலும்) முதல் பெண் ரயில் தொடர் ஓட்டுநர் யார்?
சுரேகா யாதவ் - மத்திய ரயில்வே - மும்பை.
Q134. "ஆஸ்திரேலியாவில் ரயில் தொடர் வண்டி ஓட்டுநரான முதல் இந்திய வம்சாவளி பெண் யார்? "
மாந்திர் ராஜ்புத் - Maandhir Rajput – New South Wales Corporation Railway, ஆஸ்திரேலியா.
Q135. "ரயில்வே நிர்வாகத்தில் ரயில் நிலையங்களின் பெயர்களை இரண்டு அல்லது மூன்று எழுத்து (ஆங்கிலம்) சுருக்கத்தில் அழைக்கும் பழக்கம் நிலவுகிறது. உதாரணமாக சென்னை சென்ட்ரல் MAS என அழைக்கப்படுகிறது. இவ்வகையில் GOD (கடவுள் என்ற பொருள் கொண்ட) என அழைக்கப்படும் ரயில் நிலையம் எது? "
கிடார்பிண்டி - Gidarpindi, பஞ்சாப் - ஃபிரோஸ்பூர் பகுதி - வடக்கு ரயில்வே.
Q136. பல்வந்த்பூர் செலாஸி என்ற ரயில் நிலையத்தின் சிறப்பு அம்சம் என்ன?
""ஜனதா ஸ்டேஷன்"" “Janatha Station” என்றழைக்கப்படும் இந்த பல்வந்த்பூர் செலாஸி ரயில் நிலையம் (ஜெய்ப்பூர் - ரேவாரி - க்கிடையில்) முழுவதுமாக அந்த கிராமத்தாரால் கட்டப்பட்டது. 3.1.2005 அன்று திறக்கப்பட்டது. "
Q137. "மரண ரயில்வே “ Death Railway” என்பது என்ன?
"தாய்லாந்த்-பர்மா (மியான்மார்) இடையில் பாங்காங் (தாய்லாந்து - ரங்கூன் (யாங்கோன், மியான்மார்) 415 கி.மீ நீள இந்த ரயில் பாதை இவ்வாறு அழைக்கப்படுகிறது. இரண்டாம் உலகப்போரின் போது, ஜப்பான் ராஜ்யம், இந்த பகுதியில் மிக மிக அடர்ந்த காடுகள் மலைப்பிரதேச பகுதியில், மிகவும் மோசமான வேலை நிலைமையில், சுமார் ஒரு லட்சம் ஆசிய ஆட்களை கொடுமைப்படுத்தி, இந்த இருப்புப்பாதையை போட வைத்ததில் சுமார் 16000 பேர் உயிரிழந்தனர் என்ற காரணத்தால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் பாலம் எண் 277 க்வாய் Kawae Yi ஆற்றின் மீது அமைந்துள்ளது. இதை வைத்து தான் மிக மிக புகழ் பெற்ற ஹாலிவுட் திரைப்படம் “Bridge on the River Kwai” உருவாக்கப்பட்டது. "
Q138. உலகில் முதன் முதலில் எங்கு பூமிக்கடியில் மெட்ரோ ரயில் தொடங்கப்பட்டது?
"லண்டன் - 10.1.1863 அன்று முதல் 408 கி.மீ க்கு 268 நிலையங்களுடன் தொடங்கப்பட்டது. உலகின் மிக நீளமான மெட்ரோ ரயில் திட்டம். லண்டனில் இத்தொடரை “tube” என அன்புடன் அழைப்பர். "
Q139. உலகில் முதன் முதலில் இரு நகரங்களுக்கிடையில் ரயில் தொடர் வண்டி துவங்கப்பட்டது?
1830 – லிவர்பூல் -> மான்செஸ்டர், ஐக்கிய ராஜ்யம்.
Q140. உலகின் உயரமான ரயில்வே இருப்புப்பாதை திட்டம் எங்குள்ளது?
கிங்கய் -> திபெத், சீனா. டங்குல்லா மலைவழிப்பாதையில் (Mountain Pass) அமைந்துள்ளது. Qinghai – Tibet.
Q141. உலகின் மிகப் பெரிய ரயில் நிலையம் எங்குள்ளது?
பெய்ஜிங், சீனா - Beijing – 58.8 ஹெக்டேர் பரப்பளவு.
Q142. உலகின் மிக அதிக வேகம் பதித்த நீராவி இயக்கி (எஞ்ஜின்) எது?
201 கி.மீ -- மல்லார்ட் “Mallard” என்ற ப்ரிட்டிஷ் நீராவி இயக்கி.
Q143. உலகின் மிக வேகமான தொடர் வண்டி எது?
TGV Atlantique -- ஜெர்மனி -- 516 கி.மீ
Q144. உலகில் குறுகிய ரயில்பாதை எது?
Angel’s Flight Railway -- லாஸ் ஏஞ்செல்ஸ். பாதுகாப்பு கருதி தற்சமயம் இந்த போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
Q145. "“Palace on Wheels” இந்த ஆடம்பர சுற்றுலா ரயில் தொடரில் உள்ள பயணப்பெட்டிகள் மற்றும் உணவு விடுதி - களின் சிறப்பு அம்சம் என்ன? "
"யணப்பெட்டிகள் இப்பகுதியை ஆண்ட மன்னர்களின் பகுதிப் பெயர்களாலும், உணவு விடுதிகள் மகாராஜா மற்றும் மகாராணி எனவும் பெயரிடப்பட்டுள்ளது. "
Q146. உலகின் பல மெட்ரோ (பூமிக்கடியில்) ரயில்களின் பெயர்கள் என்ன?
"SUBWAY -- பெய்ஜிங், ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா
LINE -- குலாலம்பூர்
LIGHT RAIL -- பிலிப்பைன்ஸ்
U BAHN -- ஜெர்மனி
T BANE -- நார்வே
URBANE -- ப்யூரிட்டோ ரிக்கோ
MARTA, MBTA, SPEED LINE – அமெரிக்கா
THE TUBE, EURO STAR -- ஐக்கிய ராஜ்யம். "
Q147. இந்திய ரயில்வேயில் பொது மக்களுக்கு அளிக்கப்படும் பல வித பயண சலுகைகள் யாவை?
"1. சுதந்திர போராட்ட தியாகிகள்
2. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள்
3. உடல் உறுப்பு ஊனமுற்றோர்
4. கண் பார்வை, காது கேளாதோர், பேச்சுத் திறன் இழந்தோர், மூளை வளர்ச்சி குன்றியோர் ஆகியோருக்கு பயண சலுகைகள்
5. புற்று நோய், சிறு நீர கோளாறு, காச நோய், தொழுநோய், போன்ற நூய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயண சலுகைகள்.
மேலும் விவரங்களுக்கு ரயில்வே கால நேர அட்டவணையைப் பாருங்கள். "
Q148. டீசல் இயக்கியை (Engine) பிடித்தவர் யார்?
ருடால்ஃப் டீசல் Rudolf Diesel – 1892 – ஜெர்மனி .
Q149. மாறுதிசை மின்னோட்ட இயக்கியை கண்டுபிடித்தவர் யார்?
நிக்கோலா டெஸ்லா Nikola Tesla – செர்பியா – 1888.
Q150. Euro Star - ஐக்கிய ராஜ்யத்தின் முக்கிய சுரங்க ரயில் பாதை. இதன் முடிவு நிலையத்தின் பெயர் ஒரு சரித்திர நிகழ்ச்சியுடன் சம்பந்தப்பட்டது. அது என்ன?
"வாட்டர்லூ நிலையம்.Waterloo. இந்த பெயர் கொண்ட இடம் இப்போது பெல்ஜியம் ப்ரஸ்ஸல்ஸ் நகரத்தின் அருகில் உள்ளது. அங்கு 1815ல் நடந்த போரில் தான் நெப்போலியன் ஆங்கிலேயர்களிடம் தோல்வியை சந்தித்து, அவருடைய அரசியல் ஆட்சியின் முடிவு வந்தது. "
Q151. " Hiram Bingham மற்றும் Andean Explorer எனப்படும் ஆடம்பர சுற்றுலா தொடர் வண்டிகள் எந்த நாட்டுடையது? "
பெரு.
Q152. Shinkensen எனப்படும் ரயில் தொடர் வண்டி எந்த நாட்டில் எவ்வாறு அறியப்படுகிறது?
ஜப்பான் நாட்டின் “Bullet Train” - அதிவேக ரயில் தொடர் வண்டி.
Q153. இந்திய ரயில்வேயில் ஓடிக்கொண்டிருந்த “Great Indian Rover” என்ற தொடர் வண்டி என்ன?
"1980 களில் கயா, சாரநாத் போன்ற புத்த மத முக்கிய தலங்களுக்கிடையில் ஓடிய சிறப்பு தொடர் வண்டி. தற்சமயம் இத்தொடர் வண்டி ஓட்டத்திலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது. "
Q154. " “Glacier Express”என்ற தொடர்வண்டி தன்னுடை 7.30 மணி நேர பயணத்தில் 291 பாலங்களையும் 91 சுரங்கப்பாதைகளையும் கடந்து செல்கிறது. எந்த நாட்டில்? "
"ஸ்விட்சர்லாந்த் Switzerland – St. Moritz மற்றும் Zermatt – என்ற இரண்டு புகழ் பெற்ற மலை சுற்றுலா வாசத்தலங்கள் இடையில் (ஆல்ப்ஸ் மலைத்தொடரில்) சுமார் 6670 அடி உயரத்தில் செல்லும் ரயில் தொடர்."
Q155. "கல்கா-ஷிம்லா வுக்கிடையில் ஓடும் மலைத்தொடர் வண்டியில் உள்ள ஆடம்பர பயணப் பெட்டியின் பெயர் என்ன? "
ஷிவாலிக் அரண்மனை. Shivalik Palace.
Q156. "Wanderer, Ajax, Tusker, Horatio, Hawk Eye, Bronco, Victor, Valiant, Soldat, Maverick and Buccaneer - இந்த ஆங்கில பெயர்களைக் கொண்டவை என்ன? "
டார்ஜிலிங் இமாலயன் மலைத்தொடர் வண்டிகளின் இயக்கிகள். (locomotives)
Q157. """ Tranzcoastal"" மற்றும் ""Transpaline"" – என்ற ஆடம்பர சொகுசு தொடர்வண்டிகள் மூலம் எந்த நாட்டு இயற்கை அழகை ரசிக்க முடியும்?"
நியூசிலாந்த். New Zealand.
Q158. " “The Ghan” என்பது ஆஸ்திரேலியாவின் ஒரு புகழ்பெற்ற ரயில் தொடர் வண்டி. இப்பெயர் எவ்வாறு வந்தது? "
"Afghan Express என்ற பெயரிலிருந்து. இந்த ரயில் வழித்தடம் அமைப்பதற்கு முன்பாக இந்த பகுதியில் ஆஃப்கானிஸ்தான் நாட்டு ஒட்டகங்களே போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டது. இந்த “The Ghan” – எனப்படும் ரயில் தொடர் வண்டி ஆஸ்திரேலியாவின் அடெலெய்ட் நகரத்துக்கும் டார்வின் நகரத்துக்குமிடையில் 2979 கி.மீ க்கு 54 மணி நேரத்தில் பயணிக்கிறது. "
Q159. "கொல்கத்தாவுக்கும் தாக்கா (வங்காளதேசம்) வுக்குமிடையில் ஓடும் தொடர்வண்டியின் பெயர் என்ன? "
மைத்ரீ விரைவு வண்டி. Maitree Express.
Q160. “Blue Train" என்பது எந்த நாட்டின் ஆடம்பர சொகுசு தொடர் வண்டி?
தென் ஆப்பிரிக்கா -- ப்ரிட்டோரியா -> கேப் டவுன் நகரங்களுக்கிடையில். Town.
Q161. “Dense Crash Load Capacity” ரயில்வே போக்குவரத்து சம்பந்தப்பட்ட இத்தொடரின் பொருள் என்ன?
"ஒரு பயணப் பெட்டியின் இருக்கை அமர்ப்பு எண்ணிக்கையின் மூன்று மடங்கு. இதை வைத்து ரயில்வே போக்கு- வரத்தின் மொத்த அடர்த்தியை கணக்கிடுவார்கள். "
Q162. " ""சுரக்ஷ்ணி Surakshini” (WR), “தேஜஸ்விணி Tejaswini” (CR) and “துர்காவாஹிணி Durgavahini” (ECR) எனப்படுவது இந்திய ரயில்வேயுடன் என்ன தொடர்பு? "
"இந்திய ரயில்வேயில் பயணத்தின் போது பெண்கள் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்படும் பெண் ரயில்வே காவல் துறையினர். "
Q163. "ரயில்வே தொடர்வண்டி 5 இலக்க எண்களுடன் “Up” மற்றும் “Down” என்ற வார்த்தைகள் பயன் படுத்தப்படுவது எதைக் குறிக்கிறது? "
"ஒவ்வொரு தொடர்வண்டிக்கும் ஒரு தலைமையகம் (பராமரிப்பு தாயகம்) உண்டு. Up – என்பது தலைமையகத்தை நோக்கி பயணிப்பது, Down என்பது தலைமயகத்திலிருந்து வெளி ஊர்களுக்கு செல்வது. "
Q164. "எந்த ரயில் வண்டி தொடருக்கு இரு பக்க பயணத்திற்கு வெவ்வேறு பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது? "
"12395 – ராஜேந்திரநகர் -> அஜ்மீர் வரை செல்லும் தொடர் வண்டிக்கு ""இபாதத் எக்ஸ்பிரஸ் Ibadat Express"" எனவும் அதே தொடர் வண்டி திரும்பி வரும்போது 12396 - "" ஸியாரத் எக்ஸ்பிரஸ் Ziyarat Express"" எனவும் அழைக்கப்படுகிறது. "
Q165. பெயர் “ அந்தமான் எக்ஸ்பிரஸ் Andaman Express”. ஆனால் ஓடுவதோ ?
சென்னை முதல் ஜம்மு தாவி வரை.
Q166. ரயில்வே நிர்வாகத்தால் அளிக்கப்படும் “ இண்ட்ரெயில் பாஸ் Indrail Pass” என்பது என்ன?
"வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும், அமெரிக்க டாலரில் கொடுக்கப்படக் கூடிய ஒரு பயண அனுமதி சீட்டு. இதன் மூலம் 3 மாதங்களுக்குட்பட்ட காலத்தில் இந்திய ரயில்வேக்குள் எத்தனை தடவை வேண்டுமானாலும் பயணம் மேற்கொள்ளக்கூடிய ஒரு அனுமதி சீட்டு. "
Q167. "ஆங்கிலேயர்கள் காலத்தில் பல நிலக்குறி கட்டிட ரயில் நிலையங்கள் நாடெங்கும் கட்டப் பட்டாலும், மூன்று ரயில் நிலையங்கள் அவற்றின் பிரம்மாண்டம் மற்றும் கட்டிடக் கலையால் மிகவும் முக்கியமாகிறது. அவை யாவை? "
"1. சென்னை சென்ட்ரல் CHENNAI CENTRAL – 1900 களில் ஜார்ஜ் ஹார்டிங்க் George Hardinge என்பவரால் வடிவமைக்கப்பட்டு, R.F. க்றிஷோம் Chrisholm என்பவரால் கடிகார கோபுரத்துடன் மறு வடிவமெடுத்து கட்டி முடிக்கப்பட்டது. இதன் சிகப்பு வண்ணம் சென்னையின் ஒரு அடையாளக்குறி.
2. சத்ரபதி சிவாஜி சந்திப்பு CHATRAPATI SHIVAJI TERMINUS – முன்பு போரி பந்தர், பிறகு விக்டோரியா சந்திப்பு எனவும் அழைக்கப்பட்ட ரயில் நிலையம். ஃப்ரெடரிக் வில்லியம் ஸ்டீவன்ஸ் Frederick William Stevens என்பவரால் வடிவமக்கப் பட்டு 1888ல் முடிவடைந்த இந்த ரயில் நிலையம், இதன் வடிவமைப்புக்கும் கட்டிட கலைக்கும் புகழ் பெற்று உலக புராதன சின்னமாக 2004 முதல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய ராஜ்யத்தில் லண்டன் அருகில் உள்ள செயிண்ட் பாங்க்ராஸ் என்ற ரயில் நிலையம் போல் உள்ளதாக கூறப்படுகிறது.
3. ஹௌரா HOWRAH – ஹால்சி ரிக்கார்டோ (UK) என்பவரால் வடிவமைக்கப்பட்டு 1905 முதல் இயங்குகிறது. ஹூக்ளி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஹௌரா பாலத்தின் உதவியால் முக்கிய நகரமான ஹௌரா/கொல்கத்தாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. "
Q168. நம் நாட்டின் முதல் இரண்டடுக்கு double decker ரயில் தொடர் வண்டி எது?
சிங்கஹாட் விரைவு வண்டி Sinhaghad Express – பூனே -> மும்பை - 12.4.1978 முதல் இயங்குகிறது.
Q169. உலகில் ரயில் இருப்புப்பாதை போக்குவரத்து தொடங்க காரணமாயிருந்த நிகழ்வு எது?
1604-1605 – இங்கிலாந்தின் வாலட்டன் (நாட்டிங்காம்)என்ற இடத்தில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு பெட்டிகளில் சரக்கு ஏற்றப்பட்டு குதிரைகளால் இழுத்துச் செல்லப்பட்டதே, ரயில் போக்குவரத்து துவங்க காரணமாக அமைந்தது.
Q170. உலகில் முதன் முதலில் நீராவி இயக்கி எங்கு ஓடியது?
1803 – பென்னிடாரென், தெற்கு வேல்ஸ்,UK வில் போடப்பட்டிருந்த 15 கி.மீ இருப்புப்பாதையில்.
Q171. உலகின் முதல் பயணிகள் ரயில் தொடர்வண்டி எது?
1807 – “Mumbles Train” ஸ்வான்சீ -> மம்பிள்ஸ், வேல்ஸ், ஐக்கிய ராஜ்யம்.
Q172. ரயில் தொடர்வண்டியை இழுக்கக்கூடிய முதல் மின் இயக்கியை locomotive கண்டுபிடித்தவர் யார்?
1837 – ராபர்ட் டேவிட்சன்.
Q173. உலகில் முதன் முதலில் பூமிக்கடியில் ரயில் தொடர்வண்டி எங்கு துவங்கியது?
1863 – லண்டன் - நீராவி இயக்கியுடன். 1890ல் மின்மயமாக்கப்பட்டது.
Q174. உலகில் முதன் முதலில் டீசல் இயக்கியுடன் தொடர்வண்டி எங்கு துவங்கியது?
1913 – ஸ்வீடன்
Q175. “Little India” என்ற ரயில் நிலையம் எங்குள்ளது?
சிங்கப்பூர் மெட்ரோ ரயில்வே.
Q176. “PREM” என்ற ஆங்கில சுருக்கம் இந்திய ரயில்வேயில் எதைக் குறிக்கிறது?
Participation of Railway Employees in Management 1994 முதல் நடைமுறையில் உள்ளது.
Q177. நம் நாடு உலகின் நான்காவது மிகப்பெரிய ரயில்வே. முதல் மூன்று இடங்கள் யாவை?
அமெரிக்கா, ரஷ்யா, சீனா.
Q178. Palace on Wheels என்ற இந்திய ஆடம்பர ரயில் எங்கிருந்து தொடங்குகிறது?
டெல்லி கண்டோன்மெண்ட் ரயில் நிலையம்.
Q179. உலகின் பழமையான நீராவி இயக்கி (எஞ்ஜின்) எது, எங்குள்ளது?
Fairy Queen – தற்சமயம் இந்திய ரயில்வே அருங்காட்சியகத்தில் டெல்லியில் உள்ளது.
Q180. “Ko rail” மற்றும் “Bergen” ஆகியவை எந்த நாட்டில் உள்ள ரயில்வேக்கள்?
தென் கொரியா மற்றும் நார்வே.
Q181. ஸ்விட்சர்லாந்தையும் இத்தாலியையும் இணைக்கும் ரயில் சுரங்கப்பாதை எது?
சிம்ப்ளான் சுரங்க ரயில் பாதை - ஆல்ப்ஸ் மலைத்தொடர் வழியாக - 1905 முதல் இயங்குகிறது.
Q182. "1853 ல் நம் நாட்டில் விடப்பட்ட முதல் பயணிகள் தொடர் வண்டியின் இயக்கிகளின் பெயர்கள் யாவை? "
சாஹிப், சிந்த், சுல்தான்.
Q183. ஜவஹர்லால் நேரு நூறாவது பிறந்த நாளையொட்டி அறிமுகப்படுத்தப்பட்ட துரித ரயில் வண்டி எது?
ஷதாப்தி விரைவு ரயில். (ஷதாப்தி என்றால் நூறு என்று பொருள் - சமஸ்கிருதத்தில் ஷதம்)

"தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம். MINISTRY OF ROAD TRANSPORT & HIGHWAYS:"

Q184. "தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம். MINISTRY OF ROAD TRANSPORT & HIGHWAYS:"
"முதல் உலகப்போருக்குப் பிறகு தரை வழி தானூர்தி வண்டிகளின் எண்ணிக்கை இந்திய சாலைகளில் அதிகரிக்க தொடங்கியது. அதன் விளைவாக சாலைகள் மேம்படுத்த வேண்டிய அவசியம் அதிகரித்தது. இருப்பினும், ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்ததாலும், சுதந்திரத்திற்குப் பிறகு, விவசாயமே முன்னணி கவனமாக இருந்ததாலும், தொழிற்துறையில் அதிகமான முன்னேற்றம் ஏற்படாததாலும், நிதி நிலைமைகளாலும் சாலைகள் மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை. காலப்போக்கில் இந்திய தொழிற்துறையில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கி, 1990களில் தாராளமயமாக்கல் கொள்கைகள் வந்தவுடன், சாலைகள் மேம்பாடு மிக அவசியமாகிவிட்டது. இந்த பின்னணியில், சாலைகள் மேம்பாட்டுக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு தொடங்கிதையடுத்து சாலைகள் மேம்பாடு மற்றும் புதிய சாலைகள் அமைத்தல் போன்றவை 1990 களில் வேகமாக தொடங்கியது. இவ்வாறாக தொடங்கப்பட்டது தான் ""நான்கு வழி தங்க சாலை “Golden Quadrilateral” என்ற திட்டம். இத்திட்டத்தை 2001ல் பிரதமர் அடல் பீஹாரி வாஜ்பேயி அவர்கள் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்கள் நான்கு/ஆறு வழிச் சாலைகளால் பல முக்கிய நகரங்கள் வழியாக இணைக்கப்பட்டது. இதன் மூலம் 5846 கி.மீக்கு நெடுஞ்சாலைகள் 2012ல் முடிக்கப்பட்டது.இதற்கு பிறகும் நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு தொடர்ந்து அதிகமான அளவில் ஒதுக்கப்பட்டு மேம்பாடு தொடர்கிறது. அதே சமயம், புறநகர் சாலை வசதிகள் மேம்பாடும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. 2000ல் அதன் அடிப்படையில் தொடங்கப்பட்டது தான் ""புறநகர் சாலை மேம்பாட்டுத்திட்டம் Pradhan Mantri Gramma Sadak Yojana. இத்திட்டத்தின் மூலம் 500 குடும்பங்களுக்கு மேல் (மலைபகுதிகளுக்கு 250) வசிக்கும் புறநகர் பகுதிகள் அனைத்தும் தரமான சாலைத் தொடர்புகள் ஏற்படுத்தும் திட்டம் அமலாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. " "சாலைகள் மேம்பாட்டை கருத்தில் கொண்டு, சாலைகள் கீழ்க்கண்ட வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது:
தேசிய நெடுஞ்சாலைகள் NATIONAL HIGHWAYS:
நம் நாட்டில் சுமார் 70934 கி.மீ நெடுஞ்சாலைகள் உள்ளது. இதில் சுமார் 1208 கி.மீ அதிவேக நெடுஞ்சாலை -Express Ways. இதன் மூலம், நாட்டின் மாகாண தலைநகரங்கள், பெரிய நகரங்கள், துறைமுகங்கள், தொழில் நகரங்கள் என பல முக்கிய இடங்களை இணைக்கிறது. நாட்டின் மொத்த சாலை நீளத்தில் நெடுஞ்சாலைகள் ஒரு சிறிய பங்கேயானாலும், இவற்றின் மூலம் நாட்டின் 50% சதவிகித சரக்கு மற்றும் மக்கள் பயணப் போக்குவரத்து மேற்கொள்ளப்படுவதால் இவற்றின் பராமரிப்பு மற்றும் மேம்பாடு மிக அவசியம் ஆகிறது. இதை தேசிய நெடுஞ்சாலை நிறுவனம் - National Highways Authority of India கவனித்துக் கொள்கிறது.
நம் நாட்டில் 235க்கும் மேற்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் பல கிளைகளாக பிரிந்து உள்ளன. இதில் மிக நீளமானது NH 44 - (முன்பு 7) - ஸ்ரீநகரிலிருந்து கன்னியாகுமரி வரை - 3745 கி.மீ. குறைவான நீளம் கொண்டதுNH 118 -- 5 கி.மீ - ஜார்க்கண்ட்.
மாநில நெடுஞ்சாலைகள் STATE HIGHWAYS:
நம் நாட்டில் சுமார் 1.32 லட்சம் கி.மீ க்கு மேலான மாநில நெடுஞ்சாலைகள் உள்ளது. இதன் மூலம் அந்தந்த மாநில மாவட்டங்களும், பெரிய/சிறிய ஊர்களும் இணைக்கப்படுகின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிகமான மாநில நெடுஞ்சாலைகள் - சுமார் 33,500 கி.மீ -- உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 26000+ கி.மீ நீள மாநில நெடுஞ்சாலைகள் உள்ளன. மாநிலங்களே இந்த நெடுஞ்சாலைகளை பராமரிக்கிறது. பெரிய, சிறிய மாவட்ட மற்றும் கிராமப்புற சாலைகள்:MAJOR,MINOR DISTRICT ROADS AND VILLAGE ROADS: நம் நாட்டில் சுமார் 26 லட்சத்து 50000 கி.மீ க்கு மேலான இவ்வகை சாலைகள் உள்ளது. இவை மாவட்டங்களையும் கிராமங்களையும் இணைக்கின்றன. இவ்வாறாக நம் நாட்டு சாலை வசதி/நீளம் உலகிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது. சாலைகள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுக்கு தேசிய/மாகாண அளவில் தனி அமைச்சகம் இயங்குகிறது. "
Q185. நம் நாட்டு சாலை வசதி ஏற்பட முக்கிய காரணமாயிருந்த முகலாய பேரரசர் யார்?
ஷெர்ஷா சூரி.
Q186. ஷெர்ஷா சூரி, முகலாய மன்னரால் போடப்பட்ட முக்கிய சாலை வசதி எது?
"பெரு வழித் தடம் Grand Trunk Road – 1540-45 களில் போடப்பட்ட தென் ஆசியாவின் மிக நீளமான முக்கிய சாலை வழி. இன்றைய வங்காள தேசத்தில் சோனார் காவ்ன் என்ற இடத்தில் தொடங்கி இந்தியாவின் பர்தமான், துர்காபூர், அசன்சோல், அமிர்தசரஸ், வாரணாசி, அலகாபாத், கான்பூர், ஆக்ரா, டெல்லி, குருஷேத்ரா, அம்பாலா வழியாக, பாகிஸ்தானின் லாஹூர் வழியாக, ஆஃப்கானிஸ்தானின் காபூல் வரை செல்கிறது - சுமார் 2500 கி.மீ. "
Q187. நம் நாட்டில் முதன் முதலில் பொதுப்பணித் துறை எப்போது தொடங்கியது?
1854 ல் டல் ஹௌசி பிரபு ஆட்சியில்.
Q188. தேசிய நெடுஞ்சாலைகள் என்பது என்ன? எத்தனை உள்ளன?
"தேசிய நெடுஞ்சாலைகள் என்பது, 4 அல்லது 6 வழிகளைக் கொண்டு, மாநில தலைநகரங்கள், முக்கிய பெரிய நகரங்கள், துறைமுகங்கள், தொழில் நகரங்கள் ஆகியவற்றை இணைக்கும் சாலைகள். இவ்வகையாக சுமார் 235 சாலைகள் உள்ளன. "
Q189. மிக அதிக நீளமான தேசிய நெடுஞ்சாலை எது?
NH 44 (முன்பு NH 7) -- ஸ்ரீநகர் -> கன்னியாகுமரி - 3745 கி.மீ.
Q190. "தேசிய நெடுஞ்சாலை நிறுவன அமைப்பு National Highways Authority of India எப்போது தொடங்கப்பட்டது?"
"1988 ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, நம் நாட்டின் சுமார் 70000+ தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிப்பிலும், மேம்பாட்டிலும் ஈடுபட்டுள்ளது. "
Q191. தங்க நான்குவழிச்சாலை திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
அடல் பீஹாரி வாஜ்பேயி - முன்னாள் பிரதமர் 2001ல்
Q192. நம் நாட்டின் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் யாவை?
NH From/To States Distance.
1. Delhi – India-Pakistan border Delhi, Haryana, Punjab 456 Kms. (near Wagah border)
1D Srinagar – Leh J & K, Tibet 422 Kms.
2 Delhi – Dankuni Delhi, Haryana, UP,Bihar, Jharkhand, WB 1456 Kms
3. Agra – Mumbai UP, Rajasthan, MP, Maharashtra. 1161 Kms
4. Thane – Chennai Maharashtra,Karnataka,AP, Tamilnadu. 1235 Kms
5. Bahargara-Chennai Odisha, AP, TN 1533 Kms
6. Hazira – Kolkatta Maharashtra, Chhatisgarh, Odisha, Jharkhand,Gujarat, West Bengal 1949 Kms
7. Varnasi – Kanyakumari UP,MP, Maharashtra, AP, Karnataka, TN 2369 Kms
8. Delhi – Mumbai Delhi, Haryana, Rajasthan, Gujarat, Maharashtra 1428 Kms.
9. Pune-Machilipatnam Maharashtra,Karnataka, Andhra Pradesh 841 Kms
12. Jabalpur – Jaipur MP, Rajasthan 890 Kms
13 Sholapur – Mangalore Maharashtra, Karnataka 691 Kms
15. Pathankot – Samokhiali Punjab, Rajasthan, Gujarat. 1526 Kms
24. Delhi – Lucknow Delhi, Uttar Pradesh 438 Kms
31 Barhi – Charali Amingaon Bihar, West Bengal, Assam, Jharkhand 1125 Kms
44 Shillong – Sabroom Meghalaya, Assam,Tripura 630 Kms
45 Chennai – Theni Tamilnadu 472 Kms
47 Salem – Kanyakumari Tamilnadu, Kerala 640 Kms
48 Bengaluru – Mangalore Karnataka 328 Kms
49 Cochin – Dhanushkodi Tamilnadu, Kerala 440 Kms
50 Nashik – Pune Maharashtra 192 Kms
54 Dabaka – Tuipang Assam, Mizoram 850 Kms
56 Lucknow – Varnasi Uttar Pradesh 285 Kms
59 Ahmedabad – Indore Gujarat, Madhya Pradesh 350 Kms
65 Ambala – Pali Haryana, Rajasthan 690 Kms
72 Ambala – Haridwar Haryana, Himachal Pradesh, Madhya Pradesh 200 Kms
75 Gwalior – Ranchi Madhya Pradesh, Uttar Pradesh, Jharkhand 955 Kms
76 Pindwara – Allahabad Madhya Pradesh, Uttar Pradesh, Rajasthan 1007 Kms
79 Ajmer – Indore Madhya Pradesh, Rajasthan 500 Kms
86 Kanpur – Dewas Uttar Pradesh, Madhya Pradesh 674 Kms
91 Ghaziabad – Kanpur Uttar Pradesh 405 Kms
150 Aizawl – Kohima Manipur, Mizoram, Nagaland 700 Kms
205 Anantapur – Chennai Andhra Pradesh, Tamilnadu 442 Kms
209 Dindigul – Bengaluru Tamil Nadu, Karnataka 456 Kms
213 Palakkad – Kozhikode Kerala 130 Kms
218 Bijapur – Hubli Karnataka 176 Kms
221 Vijayawada – Jagdalpur Andhra Pradesh , Chhatisgarh 329 Kms
222 Kalyan – Nirmal Maharashtra, Andhra Pradesh 610 Kms
223 Port Blair – Mayabunder A & N Islands 300 Kms
229 Tawang – Pasighat Arunachal Pradesh 1090 Kms
234 Mangalore – Villupuram Karnataka, Andhra Pradesh, Tamil Nadu 780 Kms
235 Meerut – Bulandshar Uttar Pradesh 66 Kms

குறிப்பு:  தேசிய நெடுஞ்சாலைகளின் எண்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.  அந்த மாற்றங்கள் விரைவிலேயே இங்கும் செய்யப்படும்.   ஒரு சில முக்கியமான, நீளமான நெடுஞ்சாலைகள் மட்டும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. (தாமதத்துக்கு வருந்துகிறோம்). 

Q193. What are the National Highways falling in the Grand Trunk Road stretch?
NH 1 – Delhi to Wagah Border;
NH 2 – Kanpur to Kolkatta;
NH 91- Kanpur to Delhi.
Q194. தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாடு எந்த அடிப்படையில் நடந்து வருகிறது?
"BOT system – ‘B’uild – ‘O’perate and ‘T’ransfer அதாவது, "" கட்டு, நடத்து, மாற்று "" என்ற முறையின் அடிப்படையில், தனியார் நிறுவன்ங்கள் இந்த சாலைகளை உருவாக்கி, குறிப்பிட்ட காலம் வரை அவர்களே பராமரித்து பிறகு அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். அவர்களுடைய பராமரிப்பு காலத்தில், அரசாங்கத்தால் வாகனத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்ட சுங்க கட்டணம் “Toll Charges” வசூலித்துக் கொள்ளலாம். இந்த திட்டம் 1995ல் சட்ட அங்கீகாரம் கொடுக்கப் பட்டுள்ளது. "
Q195. தேசிய நெடுஞ்சாலையில் குறைந்த நீளம் கொண்டது எது?
"NH 118 - 5 கி.மீ., ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ளது (இதே போல் மகாராஷ்டிரா மாநிலத்திலும் உள்ளது) .
பிறகு NH 966B (47A) – கொச்சி புறவழிசாலை சந்திப்பிலிருந்து வில்லிங்க்டன் தீவுக்கு சுமார் 8 கி.மீ. "
Q196. "அதி வேக சாலைகள் Expressways” என அறிவிக்கப்பட்டுள்ளவை எவை?
"எண் இணைக்கும் நகரங்கள் தூரம் மாநிலம்.
1. அஹமதாபாத் - வடோடரா 95 Kms குஜராத்
2. மும்பை - பூனே 93 Kms மகாராஷ்டிரா.
3. ஜெய்ப்பூர் - கிஷன்கார் 90 Kms ராஜஸ்தான்.
4. அலகாபாத் புறவழிச்சாலை 86 Kms உ.பி.
5. துர்காபூர் அதிவேகச்சாலை 65 Kms மேற்கு வங்காளம்.
6. சென்னை புறவழிச்சாலை 32 Kms தமிழ்நாடு.
7. டெல்லி - குர்காவ்ன் 28 Kms டெல்லி/ஹரியானா.
8. நொய்டா - பெரிய நொய்டா 24.53 Kms டெல்லி/உ.பி.
9. ஹைதராபாத் உயர்மட்ட அதிவேகச்சாலை 11.6 Kms தெலங்கானா.
10. டெல்லி - நொய்டா நேரடி பறக்கும் சாலை. 23.55 Kms டெல்லி/உ.பி.
11. ஹோசூர் ரோடு உயர்மட்ட அதிவேகச்சாலை 9.985 Kms கர்நாடகா.
12. கோனா அதிவேகச்சாலை 8.00 Kms மேற்கு வங்காளம்.
13. அம்பாலா - சந்திகர் அதிவேகச்சாலை 35 Kms. ஹரியானா.

இன்னும் பல அதிவேகச்சாலைகள் - சுமார் 2727 கி.மீ க்கு போடுவதற்கு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
தேசிய அதிவேகச்சாலை அமைப்பு -- National Expressways Authority உருவாக்குவதற்கான அரசியல் நடவடிக்கை நடந்துகொண்டிருக்கிறது.
Q197. நம் நாட்டின் முதல் "அதிவேகச் சாலை Expressway” எது?
மும்பை - பூனே அதிவேகச் சாலை - ஏப்ரல் 2002 முதல் பயனில் உள்ளது.
Q198. உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை எது?
"ட்ரான்ஸ் கேனடா நெடுஞ்சாலை - கேனடாவுக்குள் கிழக்கு மேற்காக, பசிபிக் மற்றும் அட்லாண்டிக் கடலோரமாக சுமார் 8030 கி.மீ தூரத்துக்கு செல்லும் இந்த சாலை கேனடாவின் 10 மாகாணங்களை இணைக்கிறது. 1971 முதல் பயனில் உள்ளது. "
Q199. உலகின் உயரமான/தானூர்தி செல்லக்கூடிய நெடுஞ்சாலை எது?
"மனாலி (ஹிமாச்சல் பிரதேசம்) - லே (லடாக், காஷ்மீர்) -- 479 கி.மீ -- 17,480 அடி உயரத்தில் (சராசரி உயரம் 13000 அடி). மே - அக்டோபர் மாதங்களில் மட்டும் திறக்கப்படும். "
Q200. உலகின் உயரமான தானூர்தி செல்லக்கூடிய சாலை எது?
லே - மனாலி பாதையில் கார்டுங்லா என்ற இடத்தில் 18380 அடி உயரத்தில்.
Q201. நம் நாட்டில் நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் (தோராயமாக) எவ்வளவு?
70000+ Kms.
Q202. நான்கு வழி தங்கசாலை - Golden Quadrilateral ஹிந்தியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஸ்வர்ண சாத்துஸ்பதா -- Swarna Chathuspatha.
Q203. எல்லை வழிச்சாலை நிறுவனம் - Border Road Organization என்பது என்ன?
"7.5.1960 அன்று உருவாக்கப்பட்ட இந்த ராணுவ அமைப்பு, டைரக்டர் ஜெனரல் கீழ் இயங்குகிறது. உயர மலைவழிகளில் தானூர்திகள் இயங்கும் வகையில் மேம்படுத்துதல், பராமரித்தல் போன்ற பணிகளை செய்து வருகிறது. இந்த அமைப்பில் ராணுவ தொழில் வல்லுநர்கள் மற்றும் பணியாளர்கள் பணி புரிகின்றனர். "
Q204. மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட சாலைகள், புறநகர் சாலைகளை பராமரிப்பது எந்த அமைப்பு?
அந்தந்த மாநிலத்தின் பொதுப்பணித் துறை. Respective State Public Works Department, Districts and Panchayats.

கப்பல் போக்குவரத்து அமைச்சகம். MINISTRY OF SHIPPING:

Q205. கப்பல் போக்குவரத்து அமைச்சகம். MINISTRY OF SHIPPING:
"கடல் வழியாக பயணித்து, புதிய பகுதிகளை கண்டுபிடிப்பது, கைப்பற்றுவது, வணிகம் செய்வது என்பது பதினைந்தாவது நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே தொடங்கி விட்டது. இதில் ஸ்பானியர்கள், போர்ச்சுகீசியர்கள், டேனிஷ் நாட்டு மாலுமிகளும், சில ஆங்கிலேயர்களும் புகழ் பெற்றவர்களாக இருந்தனர். நம் நாட்டு மன்னர்களும் இந்த மார்க்கத்தில் வெற்றி பெற்றுள்ளது சரித்திரம். கிழக்கு ஆசிய நாடுகள் -- கம்போடியா., ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் ஆட்சி செய்தது சரித்திர ஆதாரங்கள். "
"ஆங்கிலேயர்கள் தங்கள் கடல் வழிப் போக்குவரத்து வைத்திருந்த போதிலும், இந்த போக்குவரத்து நம் நாட்டில், நம் நாட்டவரால் நடத்துவதற்கு அடி கோலியவர் வ.உ. சிதம்பரனார். 1906ல் “Swadeshi Steam Navigation Co., ஸ்வதேசி கப்பல் போக்குவரத்து கழகம் ” என்ற நிறுவனத்தை தொடங்கினார். இவர் தன்னுடைய முயற்சியால் முதலில், S S Galia என்ற கப்பல் , பிறகு S S Lavo என்ற கப்பலையும் வாங்கி, முழுமையான இந்திய கப்பல் போக்குவரத்து நிறுவனத்தை தொடங்கினார். இவருடைய போக்குவரத்து, தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையில் நடைபெற்றது. ஆங்கிலேயர்களின் வணிக அழுத்தங்கள் காரணமாக இவருடைய நிறுவனம் ஒடுங்கியது. இருப்பினும், இவருடைய இந்த முயற்சியால் பிற்காலத்தில் இந்திய நிறுவனங்கள் தொடங்க காரணமாயிருந்தது குறிப்பிடதக்கது. "
"கடல் வழி (நீர் வழி) போக்குவரத்தின் மூலம் அதிகமான பொருட்களை, குறைவான செலவில் எடுத்துச் செல்லக்கூடியதை உணர்ந்து பல நாடுகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கினர். இவ்வகையில் 1961ல் இந்திய அரசாங்கம் Shipping Corporation of India என்ற நிறுவனத்தை (அவ்வமயம் இயங்கிய சிறு சிறு தனியார் நிறுவனங்களை இணைத்து) தொடங்கியது. இன்றைய நிலையில் இந்த நிறுவனம் சொந்தமாக 74 கப்பல்களையும், 39 வாடகை கப்பல்களையும் இயக்குகின்ற, ""நவரத்னா"" அங்கீகாரம் பெற்ற ஒரு பெரிய நிறுவனம். இதை தவிர்த்து, சில தனியார் நிறுவனங்களும் இயங்குகின்றன. கப்பல் போக்குவரத்து ஒரு தனி அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. "
"உள்நாட்டில் நீர் வழிப்போக்குவரத்து நடத்த ஏதுவாக சுமார் 14500 கி.மீ நீர்வழிகள் உள்ளது. இருப்பினும், இவை முழுமையாக பயனுக்கு கொண்டுவரப்படவில்லை. இதை மேம்படுத்துவதற்காக,
""உள்நாட்டு நீர் வழிப் போக்குவரத்து அமைப்பு - “Inland Waterways Authority of India” 1986ல் உருவாக்கப்பட்டு, நீர்வழி தடங்களை சரியாக அடையாளம் கண்டு மேம்பாடுகள் நடந்துள்ளன, தொடர்கின்றன. அவ்வாறாக அடையாளம் காணப்பட்ட நீர்வழிகள் - தேசிய நீர்வழிகள் - National water ways இவை: "
Q206. தேசிய நீர் வழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளவை: DESIGNATED NATIONAL WATER WAYS:
"1. அலஹாபாத் -> ஹால்தியா -- 1986 -- கங்கை - ஹூக்ளி நதிகளில் - 1620 கி.மீ.
2. சடியா -> துப்ரி -- 1982 --ப்ரம்மபுத்திரா நதியில் -- 891 கி.மீ
3. கோட்டாபுரம் -> கொல்லம் -- 1993 -- மேற்கு கடற்கரையோரம் -- சம்பக்கரா மற்றும் உத்யோகமண்டல் கால்வாய்கள் வழியாக -- 205 கி.மீ.
4. காக்கிநாடா -> புதுச்சேரி -- 2008 -- புதுச்சேரி கால்வாய்கள், கலுவெள்ளி ஏரி, பத்ராச்சலம்- ராஜமுந்திரி கோதாவரி நாதி வழியாக, வஸிராபாத் - விஜயவாடா கிருஷ்ணா நதி வழியாக -- 1095 கி.மீ.
5. தால்ச்சேர் - தம்ரா -> 2008 -- ப்ரம்ஹனி, காவ்ங்கலி - சார்பாட்டியா கிழக்கு கடற்கரை கால்வாய் மூலமாக, சார்பாட்டியா - தம்ரா மட்டாய் ஆறு வழியாக, மங்கல்காடி - பாரதீப் பாசன ஆறுகள் வழியாக - 623 கி.மீ.
6. லக்கிப்பூர் - பாங்க்ரா -- தற்போது மேம்பாட்டில் உள்ளது - பரக் நதியின் மீது - 121 கி.மீ. "
Q207. நீர் மேல் பயணிக்க முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது எது?
"கட்டுமரங்கள். தென் தமிழ் நாட்டின் ""பரவா Paravas”- மீனவ இனமே முதலில் இவ்வகை பயண முறையை தொடங்கினர் என கருதப்படுகிறது. நீண்ட மரங்களின் முனைகளை சற்றே கூர் செய்து, சில மரங்களை ஒன்று சேர்த்து கட்டி மிதக்க விட்டு துடுப்புகளின் உதவியால் அதில் பயணித்து மீன் பிடி தொழிலில் ஈடுபட்டனர் என தெரிகிறது. பிற்காலத்தில் இதில் இயக்கிகள் பொருத்தப்பட்து. "
Q208. கப்பல் என்பது என்ன?
"சக்கரமில்லாத, சத்தமில்லாத, நீரில் மிதக்கக்கூடிய ஒரு வாகனம். மிதவை விதிகளின் அடிப்படையில் இவை உருவாக்கப்பட்டு பயனில் உள்ளன. "
Q209. கப்பல்கள் இயங்குவதின் அடிப்படை தத்துவம் என்ன?
"ஆர்க்கிமிடிஸ் தத்துவம். மிதவையின் தத்துவத்தைக் கண்டுபிடித்த கிரேக்க விஞ்ஞானி ஆர்க்கிமிடிஸ். அவருடைய இந்த கண்டுபிடிப்பின் படி, எந்த ஒரு பொருளும், தண்ணீரில் திரவத்தில் அழுத்தப்படும் போது, அதனால் வெளியேற்றப் படும் திரவத்தின் எடைக்கு எடையான அழுத்தம் அந்த பொருளை மேல் நோக்கி தூக்கும் என்பதே. "
Q210. "மிதவை விதி Law of Floatation” என்பது என்ன?
"ஒரு பொருள் திரவத்தில் மிதக்கும் போது, அதனால் வெளியேற்றப்படும் திரவம், மிதக்கும் பொருளின் எடைக்கு சமமாக இருக்கும் என்பதே. எளிமையாக சொன்னால், ஒரு மிதக்கும் பொருள், அதன் எடைக்கு சமமான திரவத்தை வெளியேற்றும்."
Q211. "ஆர்க்கிமிடிஸ் மிதவை தத்துவத்தின் படி, எப்படி பல டன் எடையுள்ள இரும்பு கப்பலும், அதில் உள்ள பொருளின் எடையும் சேர்த்து எப்படி நீரில் மிதக்கிறது? "
"ஆர்க்கிமிடிஸ் மிதவையின் அடிப்படையில், கப்பலின் மொத்த எடை (பொருளையும் சேர்த்து), அதனால் வெளியேற்றப்படும் நீரை விட அதிகமாகாத வரை, அந்த கப்பல் மிதக்கும். எடை அதிகமானால் நீரில் மூழ்கும். இதன் அடிப்படையில், ஒரு கப்பலின் எடை, அதனால் வெளியேற்றப்படும் நீரின் எடையைக் கொண்டே குறிக்கப்படும். இதை ஆங்கிலத்தில் “displacement” என்று அழைப்பர். "
Q212. "தற்காலத்தில், கப்பலின் மொத்த எடை, மிதவை விதிகளின் படி, அதிகமாகாமல் இருக்க என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? "
"PLIMSOLL LINE--ப்லிம்சோல் கோடு: இந்த முறையை சாமுவேல் ப்லிம்சோல் என்ற ஆங்கிலேயர் 1870ல் அறிமுகப் படுத்தினார். இந்த கோடு நீரின் தன்மையையும் தட்ப வெட்ப நிலையையும் கணக்கில் கொண்டு, ஒரு கப்பல் நீரில் மூழ்கும் நிலை (பொருள்கள் ஏற்றிய பிறகு) யை குறிக்கும் படியாக கப்பலின் வெளிப்புறத்தில் வர்ணங்களால் போடப்பட்டிருக்கும். இந்த கோடு போடப்பட்டிருக்கும் அளவுக்கே கப்பல் நீரில் அமிழ்ந்திருக்கலாம் என்பதை எடுத்துச் சொல்கிறது. "
Q213. KNOT என்பது என்ன ?
வேகத்தை குறிக்கும் அளவு. ஒரு கடல் மைல்/ஒரு மணி- க்கு சமம்.A unit of speed, equal to one nautical mile per hour.
Q214. ஒரு "கடல் மைல்" “Nautical Mile” என்பது என்ன?
1.852 கி.மீ/6076.1155 அடிக்கு சமம்.
Q215. கடலுக்கு சம்பந்தப்பட்ட அளவுகள் என்ன?
"1. ஃபேத்தம் - Fathom - ஆழம் = 6 அடி
2. கேபிள் - Cable - ஆழம் = 100 fathoms/600 feet
3. நாட்டிகள் மைல் - Nautical Mile - தூரம்/நீளம் = 10 கேபிள்ஸ் cables
4. லீக் - League - தூரம்/நீளம் = 3 கடல் மைல்கள்/Nautical Miles."
Q216. Ferries என்பது என்ன?
"சிறிய வகை இயக்கிகளால் இயங்கப்படும் கப்பல்கள் (படகுகள்). இவை பொதுவாக கடற்கரை ஓரங்களில், தீவுகளுக்கு இடையிலும், சிறு தூரங்களில் உள்ள நிலப்பகுதிகளுக்கு இயக்கப்படும் கப்பல்கள். "
Q217. பயணிகள் கப்பல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
"க்ரூய்ஸ் Cruise " – “Freedom of the Seas” and “Liberty of the Seas” உலகின் மிகப் பெரிய பயணிகள் சொகுசு கப்பல்கள்.
Q218. “Hovercraft” and “Hydrofoils” என்பது என்ன?
"கடல் நீர் காற்றைவிட 800 மடங்கு அடர்த்தி அதிகமாக இருப்பதால் கப்பலின் போக்குக்கு அதிகமான எதிர்ப்பு அளிக்கும் தன்மை உடையது. அதனால் இந்த எதிர்ப்பையும் தாண்டி வேகமாக் செல்லக்கூடிய வகையில் வடிவமக்கப் பட்ட கப்பல்களே இவை. கடல் நீரில் அதிவேகமாக பயணிக்கக்கூடிய இவை 100 knots வேகத்தை எட்டக்கூடியவை. "
Q219. “Liners” and “Tramps” என்பவை என்ன?
"லைனர்ஸ் - LINERS: இது, சரக்கு மற்றும் பயணிகள் கப்பல்களுக்கான பொதுவான தொடர். இவை, குறிப்பிட வழித் தடங்களில், குறிப்பிட்ட தேதிகளில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சேரும்/புறப்படும் கப்பல்கள். ட்ராம்ப்ஸ் - TRAMPS: இவ்வகை கப்பல்களுக்கு எந்த வித குறிப்பிட்ட பயண அட்டவணையோ அல்லது வழித்தடமோ கிடையாது. ஏற்றுவதற்கு சரக்கு இருப்பின், அவை துறைமுகங்களுக்கு செல்லும். "
Q220. பனாமா கால்வாய் வழியாக செல்லக்கூடிய ஒரே வகை கப்பல்கள் யாது?
பனாமா கால்வாய் வழியாக செல்வதற்கென குறிப்பிட்ட அளவுகளில் தயாரிக்கப்படக்கூடிய Panamax கப்பல்கள்.
Q221. “Cape Size” கப்பல்கள் என்பது என்ன?
இவையும் பெரிய கப்பல்களே. ஆனால் இவை, சூயஸ் மற்றும் பனாமா கால்வாய் வழிகளில் செல்லமுடியாது.
Q222. “Blue Peter” என்ற தொடர் கப்பலுடன் சம்பந்தப்பட்டது. அது என்ன?
கப்பல் பயணத்தை தொடங்குவதற்கு தயார் என்ற அறிவிப்பை காட்டும் ஒரு கொடி.
Q223. “Binnacle” என்ற தொடர் கப்பலில் உள்ள ஒரு உபகரணம். அது என்ன?
கப்பலில் திசை காட்டி - compass வைக்கப்பட்டிருக்கும் ஒரு பெட்டி.
Q224. கப்பல் போக்குவரத்துக்கான நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்கள் எவை?
" 1. வட அட்லாண்டிக் வழி - North Atlantic route : கப்பல் போக்குவரத்தில் முக்கியமான மற்றும் அதிகமான போக்குவரத்து - உலகின் சுமார் 30% போக்குவரத்து உள்ள ஒரு வழி. இவ்வழியில் பொருளாதார மற்றும் தொழில் ரீதியாக முன்னேறிய மேற்கு ஐரோப்பிய நாடுகள், மற்றும் அமெரிக்க இணைக்கப்பட்டுள்ளது.
2. தெற்கு அட்லாண்டிக் வழி: மேற்கு ஐரோப்பிய நாடுகள், தென் அமெரிக்காவின் சில பகுதிகள் மற்றும் தொழில்/ விவசாய முன்னேற்றமடைந்த நாடுகள் இணைக்கப்பட்டுள்ளன.
3. கேப் வழி (கேப்=முனை) Cape Route: தென் ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையை சுற்றி செல்லும் வழியாக, மேற்கு ஐரோப்பிய நாடுகளையும், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளை இணைக்கிறது. ஐரோப்பாவிலிருந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து கப்பல் போக்குவரத்துக்கு முக்கியமாக பயன்படுகிறது.
4. பசிபிக் கடல் வழி - Pacifific Ocean route: குறைவான கப்பல் போக்குவரத்து உள்ள இந்த வழி சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் கேனடாவின் மேற்கு கடற்கரை நகரங்களை இணைக்கிறது.
5. சூயஸ் கால்வாய் - Suez Canal: எகிப்து நாட்டில் உள்ள இந்த 193.30 கி.மீ கால்வாய் மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கிறது. இதன் மூலம் ஐரோப்பாவும் தெற்கு ஆசிய நாடுகளும், ஆப்பிரிகாவை சுற்றாமலேயே இணைக்கப்படுகின்றன. 10 வருட உழைப்பில் உருவான இது, நவம்பர் 17, 1869 முதல் பயனில் உள்ளது.
6. பனாமா கால்வாய் Panama Canal: பனாமா நாட்டில் உள்ள இந்த 77 கி.மீ கால்வாய் அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடலை (கரிபியன் கடல் வழியாக) இணைக்கிறது. 1914 முதலில் பயனில் உள்ளது. "
Q225. கப்பல் போக்குவரத்து அதிகமுள்ள கடல் வழி எது?
வடக்கு அட்லாண்டிக் வழி.
Q226. "ஆபத்து காலத்தில் கப்பல் மாலுமிகள் முதன் முதல் அனுப்பிய/பயன் படுத்திய சமிக்ஞை எது? இப்போது என்ன சமிக்ஞை பயன் படுத்தப்படுகிறது? "
"CQD – இதற்கு எந்த விளக்கமும் கிடையாது. இதற்கு பிறகு SOS – “Save Our Souls” – ""எங்கள் உயிரை காப்பாற்றுங்கள்"" என்ற சமிக்ஞை பயன்படுத்தப்படுகிறது. இது அங்கீகரிக்கப்படாத ஒன்று. 1905ல் ஜெர்மனி முதன் முதலில் பயன்படுத்த தொடங்கியது. அதற்கு பிறகு இந்த பழக்கம் தொடர்கிறது. "
Q227. கப்பல் சம்பந்தப்பட்ட கல்வி உயர்படிப்புகள் யாவை?
"NAVAL ARCHITECTURE - கப்பல் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் கட்டுமானம்
MARINE ENGINEERING – கப்பல் இயக்குவதற்கான அனைத்து வகை தொழில்நுட்ப கல்வி.
NAUTICAL SCIENCE : கப்பல் செலுத்துவதற்கான - கடல் சார் -- வரைபடம், தட்பவெட்பநிலை, கடல் நீர் தன்மை, காற்று திசை மற்றும் இதர கல்விகள். மற்றும் கப்பல் போக்குவரத்து மேலாண்மை. "
Q228. இந்திய அரசாங்கத்தால் கப்பல் உயர்கல்வி நட்த்தப்படும் நிறுவனங்கள் யாவை?
"1.MERI – Marine Engineering and Research Institute, Kolkatta & Mumbai
2.Lal Bahadur College of Advance Maritime Studies and Research, Mumbai.
3.International Maritime University, Chennai.
4.Training Ship : Chanakya."
Q229. நம் நாட்டில் கப்பல் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் நிர்வாக அமைப்பு எது?
"டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஷிப்பிங் - Director General of Shipping: மும்பை. இதன் மண்டல அலுவலகங்கள் சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் உள்ளது. இந்த நிறுவனம் மாலுமிகள் மற்றும் தொழில் வல்லுநர்களின் தொழில் சார்ந்த தேர்வுகளை நடத்தி, அதற்குண்டான சான்றுகள் வழங்குகிறது. இச்சான்றுகள் பெறாமல் மாலுமிகளும் தொழில் வல்லுநர்களும் பணி செய்யமுடியும். "
Q230. கப்பல் போக்குவரத்து சார்ந்த சர்வதே ஒருங்கிணைந்த அமைப்பு எது?
IMO – International Maritime Organization – HQ: London; Estt: 1912.
Q231. ஐ.நா சபை ஆதரவுடன் நடத்தப்படும் கப்பல் போக்குவரத்து சார்ந்த கல்வி அமைப்பு எது?
World Maritime University – 1938ல் தொடங்கப்பட்டது – International Maritime Organization கீழ், ஸ்வீடனில் இயங்குகிறது.
Q232. இந்தியாவின் கடற்கரை நீளம் என்ன?
7517 Kms. (வெளிப்பகுதியையும் சேர்த்து)
Q233. இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் கப்பல் போக்குவரத்து நிறுவனம் எது?
"ஷிப்பிங் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியா லிட்., Shipping Corporation of India Ltd.,-- 2.10.1961 அன்று தொடங்கப்பட்டு, மும்பையை தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது. இந்த ""நவரத்னா"" அந்தஸ்து பெற்ற நிறுவனம் 74 சொந்த கப்பல்களையும், வாடகையில் 39 கப்பல்களையும் கொண்டு, நம் நாட்டின் மொத்த சரக்கில் பாதிக்கு மேல் ஏற்றி செல்லும் பெரிய நிறுவனமாக இயங்குகிறது. "
Q234. நம் நாட்டில் இயங்கும் சில பெரிய தனியார் கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் யாவை?
" 1. The Scindia Steam Navigation Co.Ltd.,
2. Great Eastern Shipping Co.Ltd.,
3. South India Shipping Corpn.Ltd.
4. Ratnakar Shipping Corporation Ltd.,
5. Chowgule Steamship Ltd.,
6. Essar Shipping Co.ltd.,
7. Varun Shipping Co.Ltd.
8. Tolani Shipping Co.,
9. Sanmar Shipping Corporation.
இவை தவிர சில வெளிநாட்டு நிறுவனங்களும் இயங்குகின்றன. "
Q235. கப்பல் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு மத்திய அரசாங்க நிறுவனங்கள் யாவை?
" 1. Garden Reach Ship Builders and Engineers Ltd., கொல்கத்தா, மே.வங்காளம்.
2. Mazagaon Dock Ltd., மர்முகோவா, மகாராஷ்டிரா .
3. Hindustan Shipyard Ltd., விசாகப்பட்டினம், ஆந்திரபிரதேசம் .
4. Cochin Shipyard Ltd., கொச்சி, கேரளா .
5. Hooghly Dock and Port Engineers., கொல்கத்தா .
"
Q236. நம் நாட்டின் பெரிய துறைமுகங்கள் யாவை?
" 1. KANDLA காண்ட்லா – குஜராத்.
2. MUMBAI மும்பை – மகாராஷ்டிரா.
3. MORMUGAO - மர்முகோவா -- கோவா GOA
4. MANGALORE -- மங்களூர் – கர்நாடகா
5. KOCHI – கொச்சி - கேரளா
6. TUTICORIN – தூத்துக்குடி -- தமிழ்நாடு
7. CHENNAI – சென்னை -- தமிழ்நாடு
8. VISAKHAPATNAM – விசாகப்பட்டினம் -- ஆந்திரப்பிரதேசம்
9. PARADIP – பாரதீப் -- ஒடிசா
10.KOLKATTA – கொல்கத்தா -- மேற்கு வங்காளம்
11.NAVASEVA – நவசேவா - மும்பை
12.ENNORE – எண்ணூர் -- தமிழ்நாடு
13.PORT BLAIR போர்ட் ப்ளேயர் - அந்தமான் நிக்கோபார் தீவுகள்
நம் நாட்டில் சுமார் 200 சிறிய துறைமுகங்கள் உள்ளன. இவற்றில் சில பெரிய துறைமுகங்களாக மேம்படுத்தப் படுகின்றன."
Q237. இந்திய கப்பல் துறை போக்குவரத்துக்கு அடிகோலியவர் யார்?
"வ.உ.சிதம்பரம் பிள்ளை -- வ.உ.சி., கப்பலோட்டிய தமிழன் என சிறப்புப் பெயர்களைக் கொண்டவர். 1872 ல் ஒட்டபிடாரம் (தூத்துக்குடி) என்ற இடத்தில் பிறந்தவர். சுதந்திர இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர். 1906ல் ஆங்கிலேயர்களை எதிர்த்து “Swadeshi Steam Navigation Company"" என்ற கப்பல் போக்குவரத்து நிறுவனத்தை தொடங்கி தூத்துக்குடி- கொழும்பு இடையில் போக்குவரத்தை துவங்கினார். ஆங்கிலேயர்களின் வியாபார மற்றும் இதர அடக்கு முறைகளால் இந்த நிறுவனம் ஒடுங்கியது. இவரையும் சிறையில் அடைத்தனர். பிற்காலத்தில் மிகவும் ஏழ்மையான நிலையில் 1936ல் மரணமடைந்தார். "
Q238. "எந்த இந்திய கப்பல் போக்குவரத்தின் முதல் கப்பல் இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு பயணித்தது? Which Indian Shipping company’s ship first sailed out of India?"
"ஏப்ரல் 5, 1919 அன்று, சிண்டியா கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின் “S.S.LOYALTY” என்ற கப்பல்.
இதில் ஆங்கிலேய மாலுமிகள் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது."
Q239. இந்திய மாலுமிகள் முதன் முறையில் எப்போது பயிற்சி பெற துவங்கினர்?
1927ல் DUFFERIN என்ற கப்பலில் பயிற்சி பெற தொடங்கினர்.
Q240. “Gondola” "Vaporetti" என்பது என்ன?
இத்தாலி நாட்டு வெனிஸ் நகரம் கால்வாய் போக்குவரத்துக்கு புகழ்பெற்றது. அந்த கால்வாய்களில் பயன்படுத்தப்படும் சிறிய வகை தான் இயங்கி படகுகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
Q241. "கடல் வழியில் புதிய இடங்களை கண்டுபிடிக்கும் முயற்சிகள் எந்த நூற்றாண்டில், யாருடைய ஆதரவுடன் தொடங்கியது? "
15வது நூற்றாண்டில், போர்ச்சுகல் நாட்டின் இளவரசர் ஹென்றி - யின் ஆதரவுடன் தொடங்கியது.
Q242. "உலகின் பல பகுதிகளை கண்டுபிடித்த மிகப் புகழ் பெற்ற ஆய்வு பயணம் செய்தவர்கள் (மாலுமிகள்) எவர்? "
" 1. Diogo Cao: டியாகோ காவ் -- போர்ச்சுகல் – 1484 – இவர் தான் முதன் முதலில் ஆய்வுப் பயணம் செய்தவர் என கருதப்படுகிறது. காங்கோ நதியின் முகத்துவாரம் வரை பயணம் செய்ததால் பிற்காலத்தில் ஆப்பிரிக்கா பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
2. Barthlomew Dias: பார்த்தொலோமியா டையஸ் - போர்ச்சுகல் – 1488 --ஆப்பிரிக்காவின் முனை வரை பயணித்து, ""நன்னம்பிக்கை முனையை கண்டுபிடித்தவர். இதற்கு அவர் ""புயல்களின் முனை"" என்று பெயரிட்டிருந்தார்.
போர்ச்சுகல் மன்னர் ஜான் II ""நன்னம்பிக்கை முனை "" என பெயர் மாற்றம் செய்தார்.
3. Vasco Da Gama: வாஸ்கோட காமா -- போர்ச்சுகல் – 20.5.1548ல் கேரள கடற்கரையில் ""காலிகட்"" என்ற இடத்தை வந்தடைந்து, இந்திய பகுதியை கண்டுபிடித்த முதல் ஐரோப்பியர் ஆவார்.
4. Pedro Cabral – பெட்ரோ கேப்ரால் -- போர்ச்சுகல் – வாஸ்கோட காமாவின் வழியில் பயணித்து, 1500ல் ப்ரேசில் நாட்டுப்பகுதியை கண்டுபிடித்தார்.
5. Christopher Columbus -- கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் - இத்தாலி – அமெரிக்கா மற்றும் கரீபிய தீவுகளைக் கண்டுபிடித்தவர்.
6. Vasco Nunez De Balboa -- வாஸ்கோ நுநெஸ் டி பல்போ -- ஸ்பெயின் : பனாமா நாட்டுப் பகுதியைக் கண்டுபிடித்தவர். இவருடைய பெயரே இந்நாட்டு நாணயத்திற்கு இடப்பட்டுள்ளது.
7. Ferdinand Magellan--ஃபெர்டினாண்ட் மாகெல்லன் - போர்ச்சுகல் – உலகை சுற்றிவந்த முதல் மாலுமி. பிலிப்பைன்ஸ் நாட்டு தீவுகள், ஆஸ்திரேலியா மற்றும் இதைச் சுற்றியுள்ள தீவுகளைக் கண்டுபிடித்தவர்.
8. James Cook -- ஜேம்ஸ் குக் -- பிரிட்டன் : British – discovered the east coast of Australia and also the Hawai’ian islands in 1770.
9. John Cabot -- ஜான் கேபோட் - இத்தாலி : வட அமெரிக்காவின் முக்கிய நிலப்பகுதிகளைக் கண்டுவிடித்தவர்.
1498ல் வட அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு, சீனா, ஜப்பான் வழியாக செல்ல ஒரு புதிய பாதையைக் கண்டுபிடித்தார்.
10.Abel Tasman -- அபெல் தஸ்மான் - டச்சு -- டஸ்மேனியா (ஆஸ்திரேலியா), சாலமன் தீவுகள், புது கினி போன்ற பகுதிகளைக் கண்டுபிடித்தவர்."
Q243. நம்நாட்டின் ஒரே நதி சார்ந்த துறைமுகம் எது?
ஹூக்ளி நதியின் மீது அமைந்துள்ள கொல்கத்தா துறைமுகம்.
Q244. உலகின் மிகப்பெரிய பயணிகள் (சொகுசு) கப்பல் எது?
“Oasis of the Seas” 16 மாடிகள் -- 360 மீ நீளம் -- 2700 அறைகள் மற்றும் பல பயணியர் வசதிகள்.
Q245. மாலுமி ஜேம்ஸ் குக் பசிபிக் பெருங்கடலுக்கு பயணித்த கப்பலின் பெயர் என்ன?
HMS Endeavour -- எண்டெவர்.
Q246. நம் நாட்டில் ஸ்ரீநகர் (காஷ்மீர்) மற்றும் கேரள உப்பங்கழிகளில் பயன் படுத்தப்படும் படகு வீடுகளின் பெயர் என்ன?
""ஷிகாரா - Shikara"" -- தால் ஏரி, ஸ்ரீநகர், காஷ்மீர்.
""கெட்டுவெள்ளம் - Kettuvellam"" , கேரள உப்பங்கழிகள். "
Q247. உலகில் அதிகமான கப்பல் போக்குவரத்து கொண்ட துறைமுகங்கள் எவை?
1.ஷாங்காய், சீனா
2. சிங்கப்பூர்
3.ராட்டெர்டாம், நெதர்லாந்து.
Q248. உலகின் முதல் நீராவிக்கப்பல் கட்டியவர் யார்?
வில்லியம் சிமிங்டன், பிரிட்டன் - 1801.
Q249. கொச்சின் கப்பல் கட்டும் தளம் கட்டிய முதல் எண்ணெய் கப்பல் Oil Tanker எது?
மோதிலால் நேரு.
Q250. உலகின் மிகப்பெரிய சரக்கு பெட்டக container கப்பல் எது?
Maersk Line Triple E – இதில் 18000 சரக்கு பெட்டகங்களை ஏற்றலாம். 400 மீ நீளம் -- 59 மீ அகலம் -- நீருக்குமேல் 58.5 மீ உயரம்.
Q251. நம் நாட்டின் முதல் கப்பல் கட்டும் தொழில் நிறுவனம் எது?
"The Scindia Steam Navigation Co., ஜூன் 1941 – சிண்டியா ஷிப்யார்டு என அழைக்கப்பட்டது. 1961ல் இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டு, Hindustan Shipyard (Visakhapatnam) என இப்போது இயங்குகிறது. "
Q252. சுதந்திர இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கப்பல் எது?
“Jal Usha” -- ஜல் உஷா -- 1948.