Khub.info Learn TNPSC exam and online pratice

இந்திய அரசாங்க துறைகள்

Q1. விவசாய அமைச்சகம்: MINISTRY OF AGRICULTURE
Q2. இந்திய பொருளாதாரம் பொதுவாக சார்ந்திருப்பது.......
விவசாயம். சுமார் 50 சதவிகித மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருப்பதுடன், நம் நாட்டு உள் நாட்டு உற்பத்தி திறனில் (Gross Domestic Product - GDP) சுமார் 14% விவசாயம் மூலம் கிடைக்கிறது. இந்நிலையில், கல்வித்திறன் அதிகரிப்பால், வேலை வாய்ப்பு திறனை மேம்படுத்தும் கட்டாயத்திலும் நம் நாடு உள்ளது. ஆகவே, தொழில் மயமாக்கும் முக்கியத்துவம் பெற்றுள்ளதால், விவசாயத்தை நிலை நிறுத்தி மேம்படுத்துவதும், மற்றொரு பக்கம் தொழில் மயமாக்குதலும் நடைபெற வேண்டிய ஒரு கட்டாய பொருளாதார சூழ் நிலையில் நம் நாடு உள்ளது. இரண்டு துறைகளிலும் முன்னேற்றமும், வெற்றியும் பெற்றிருப்பது நம் நாட்டின் பெருமைக்குரிய நிலை. உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்திய பொருளாதாரமும் ஒன்று.
Q3. இந்திய விவசாயம் எதைச் சார்ந்துள்ளது?
பருவ மழையையும் அதைச் சார்ந்த ஏரி, குளம், ஆறு, வாய்க்கால் பாசனத்தையும் நம்பி உள்ளது.
Q4. இந்திய விவசாயத்துக்கு மிகவும் உதவும் ஆற்றுவழி அமைப்புகள் எவை?
"1. இமாலய ஆற்று வழி அமைப்பு - இமாலயத்தில் உருவாகும் நதிகளை சார்ந்த விவசாய பகுதிகள்.
2. தீபகற்ப ஆற்று வழி அமைப்பு - தீபகற்ப பகுதியில் உருவாகும் நதிகளை சார்ந்த விவசாய பகுதிகள்.
இந்த ஆற்று வழி பாசனத்தால் சுமார் 6 கோடியே 6 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன விவசாயம் பெறுகிறது."
Q5. உலக அளவிலும், இந்திய சுதந்திரத்திற்கு முன்பும், "விவசாய புரட்சியின் தந்தை" என அழைக்கப்பட்டவர் யார்?
நார்மன் போர்லாக் - அமெரிக்கா.
Q6. சுதந்திரத்திற்கு பிறகு இந்திய விவசாய புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
டாக்டர் எம்.எஸ். ஸ்வாமி நாதன் - 1960-1970ல் நடந்த பசுமைப் புரட்சிக்கு இவரே முன்னோடி/வழிகாட்டி.
Q7. நம் நாட்டில் பசுமைப் புரட்சி முதன் முதலில் எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட து?
1967 - 1968.
Q8. நம் நாட்டின் முதல் விவசாய மந்திரி யார்?
ஜெய்ராம் தாஸ் தௌலத்ராம் 1948 - 1952.
Q9. இந்திய விவசாய மந்திரிகள் இதுவரை.....
வ.எண் பெயர் முதல் வரை
1 ஜெய்ராம்தாஸ் தௌலத்ராம் 1948 1952
2 பஞ்சாப்ராவ் தேஷ்முக் 1952 1962
3 ஸ்வரண் சிங் 1963 1964
4 சி. சுப்ரமணியம் 1964 1966
5 ஜகஜீவன் ராம் 1967 1970
6 ஜகஜீவன் ராம் 1974 1977
7 சுர்ஜித்சிங் பர்னாலா 1977 1979
8 ராவ் பிரேந்திர சிங் 14.1.1980 31.10.1984
9 பூட்டா சிங் 1984 12.5.1986
10 குர்தயால் சிங் தில்லோன் 12.5.1986 14.2.1988
11 பஜன் லால் 1988 1989
12 சவுத்ரி தேவிலால் 2.12.1989 10.11.1990
13 பலராம் ஜாக்கர் 1991 1996
14 சூரஜ் பான் 16.5.1996 1.6.1996
15 H.D. தேவ கவுடா 1.6.1996 10.7.1996
16 சுதான் மிஷ்ரா 10.7.1996 19.3.1998
17 நிதிஷ்குமார் 22.11.1999 3.3.2000
18 நிதிஷ்குமார் 27.5.2000 21.7.2001
19 அஜித் சிங் 22.7.2001 24.5.2003
20 ராஜ் நாத் சிங் 2003 2004
21 சரத் பவார் 23.5.2004 26.5.2014
22 ராதா மோகன் சிங் 26.5.2014 ............
Q10. விவசாயத்துறை அமைச்சகத்தின் துறைகள் யாவை?
"1.விவசாயம் மற்றும் கூட்டுறவு துறை - Department of Agriculture & Co operation.
2. விவசாய ஆராய்ச்சி மற்றும் கல்வி - Department of Agricultural Research and Education மற்றும் Indian Council of Agricultural Research - இந்திய விவசாய ஆராய்ச்சி கழகம்.
3. விலங்கின மேம்பாடு மற்றும் பால்வளம் - Department of Animal Husbandary & Dairying."
Q11. இந்திய விவசாயத்தின் தலைமை ஆராய்ச்சி கழகம் எது?
இந்திய விவசாய ஆராய்ச்சி கழகம் - Indian Council of Agricultural Research - டெல்லி. இந்த அமைப்பு டைரக்டர் ஜெனரல் கீழ் இயங்குகிறது.
Q12. நம் நாட்டில் இயங்கும் பல வகையான விவசாய ஆராய்ச்சிக்கழகங்கள் எவை?
"1. Central Soil Salicity Research Institute - மத்திய மண் உப்புத்தன்மை ஆராய்ச்சி நிலையம் - கர்னல், ஹரியானா.
2. Central Rice Research Station - மத்திய அரிசி ஆராய்ச்சி நிலையம் - கட்டாக், ஒடிசா.
3. Central Potato Research Station - மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையம்.
4. Central Vegetable Breeding Station - மத்திய காய்கறிகள் வளர்ப்பு நிலையம், குளு, ஹிமாச்சல்.
5. Central Coconut Research Station - மத்திய தேங்காய் ஆராய்ச்சி நிலையம், காயங்குளம், கேரளா.
6. Indian Institute of Sugar Technology - இந்திய சர்க்கரை தொழிற் நுட்பக் கல்லூரி - கான்பூர், உ.பி.
7. Indian Dairy Research Institute, Bengaluru - இந்திய பால் பொருள் ஆராய்ச்சி நிலையம், பெங்களூரு.
8. National Dairy Research Institute - தேசிய பால் பொருள் ஆராய்ச்சி மையம், கர்னல், ஹரியானா.
9. National Academy of Agricultural Research and Management - வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை அகாடமி, ஹைதராபாத்.
10. Central Institution of Post Harvest Engineering and Technology Institute - மத்திய அறுவடைக்கு பின் வேளாண் தொழில் நுட்ப மையம், லூதியானா, பஞ்சாப்.
11. Indian Grassland and Fodder Research Institute - இந்திய புல்வெளி மற்றும் தீவன ஆராய்ச்சி மையம், ஜான்சி.
12. Central Institute of Fisheries Education - மத்திய மீன் வளர்ப்பு கல்வி மையம், மும்பை.
13. Indian Institute of Soil Science - இந்திய மண்வள அறிவியல் மையம், போபால்.
14. Indian Institute of Vegetable Research - இந்திய காய்கறி ஆராய்ச்சி நிலையம், வாரணாசி.
15. Central Institute of Cotton Research - மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையல், நாக்பூர்.
16. Central Institute of Arid Horticulture - மத்திய வறண்ட பகுதி தோட்டக்கலை நிலையம் - பிக்கானீர்.
17. Indian Institute of Sugarcane Research - இந்திய கரும்பு ஆராய்ச்சி மையம், லக்னௌ.
18. Central Plantation Crops Research Institute - மத்திய மலைப்பயிர் வளர்ச்சி ஆராய்ச்சி மையம், கசர கோடு.
19. ICAR Research Complex for NE Hill Region - ICAR - வடகிழக்கு மலைப்பகுதி ஆராய்ச்சி மையம், பராபாணி - மேகாலயா.
20. Indian Institute of Horticultural Research - இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையம், பெங்களூரு.
21. Central Agricultural Research Institute - மத்திய வேளாண் ஆராய்ச்சி மையம் போர்ட் ப்ளேயர்.
22. National Research Centre for Cold water Fisheries - தேசிய குளிர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி மையம், நைனிடால்.
23. Central Institute of fresh water Agriculture - மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி மையம், புவனேஷ்வர்.
24. National Research Centre for Rape seed and Mustard - தேசிய கடுகு ஆராய்ச்சி மையம், பாரத்பூர், பஞ்சாப்.
25. National Research Centre for Banana - தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சி.
26. National Research Centre for seed Spices - தேசிய வாசனை திரவிய விதை ஆராய்ச்சி மையம், அஜ்மீர், உ.பி." "
Q13. வேளாண்துறையில் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி வழிமுறைகள் அளிக்கும் அமைப்பு எது?
இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகம், டெல்லி, 1905ல் அரசு வேளாண் ஆராய்ச்சி நிலையமாக பூசா, பீஹாரில் தொடங்கப்பட்டு பிறகு புதுடெல்லிக்கு மாற்றப்பட்ட து. இந்த நிலையத்தின் பலவித ஆராய்ச்சிகளின் உதவியால் 1970 களில் பசுமை புரட்சி வெற்றி பெற்றது.
Q14. பயிர்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளன?
"1. உணவுப்பயிர்கள் : அரிசி, கோதுமை போன்றவை. இந்திய விவசாயத்தில் சுமார் 75% இவ்வகை பயிர்கள். இவ்வகை பயிர்கள் வாழ்வாதார மற்றும் பிரதான பயிர்கள் என அழைக்கப்படுகிறது.
2. பணப்பயிர்கள் : கரும்பு, புகையிலை, பருத்தி, நிலக்கடலை, எண்ணெய் வித்துக்கள் போன்றவை. இவை, உடனடி பணம் பெற்றுத்தருவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
3. மலைப்பயிர்கள் : டீ, காபி, ரப்பர், வாசனைப் பொருட்கள் போன்றவை. இவையும் ஒரு வகை பணப்பயிர்கள்.
4. தோட்டக்கலை பயிர்கள் : பூக்கள், காய்கறிகள், பழவகைகள் போன்றவை. இவையும் ஒரு வகை பணப்பயிர்கள்.
5. இழை / நார்ப்பயிர்கள் : பருத்தி, கம்பளி, பட்டு, சணல் போன்றவை."
Q15. பயிர்ப்பருவங்கள் யாவை?
"கரீஃப் - KHARIF : மழைப்பருவ பயிர்கள். ஈரமான நிலத்தில் பயிர் வைக்க க்கூடிய அரிசி, கரும்பு போன்றவை. ஜூன்/ஜூலைகளில் பயிர் வைக்கப்பட்டு செப்டம்பர் / அக்டோபரில் அறுவடை செய்யப்படும் பயிர்கள்.
ரபி - RABI : குளிர்காலப் பயிர்கள் -கோதுமை, பார்லி, கடுகு, பருப்பு வகை பயிர்கள். நவம்பர்/டிசம்பர்களில் பயிர் வைக்கப்பட்டு ஏப்ரல்/மே யில் அறுவடை செய்யப்படுகிறது."
Q16. பாசன வகைகள் யாவை?
"1. வெள்ளப் பாசனம்
2. வாய்க்கால் பாசனம்
3. உயர்மட்ட தூவுதல்
4. சொட்டு நீர் பாசனம் போன்றவை. நம் நாட்டில் 3 மற்றும் 4வது முறைகள் சமீப காலங்களில் பிரபலமாகி வருகின்றது."
Q17. உரம் என்பது என்ன?
மண்ணுடன் கலக்கக் கூடிய செயற்கை ரசாயன கலவைகள், அல்லது இயற்கை உரங்கள். மண்ணின் சத்துக் குறைப்பை கண்டறிந்து, அதை ஈடு செய்யப் பயன்படுத்தப்படுவது செயற்கை உரங்கள்.
Q18. உரங்களின் பொதுவான வகைகள் யாவை?
"1. ஆர்கானிக் - ORGANIC - இயற்கைக் கழிவுப் பொருட்களிலிருந்து உருவாக்கப்படுவது.
2. இனார்கானிக் - INORGANIC - செயற்கை ரசாயன உரங்கள்."
Q19. மண்ணின் பொதுவான வகைகள் யாவை?
"1. மக்கிய தாவரப் பொருள்களடர்ந்த களிமண் - கோதுமைக்கு உகந்தது (CLAYEY LOAM ).
2. சுண்ணாம்பு கலந்த மக்கிய தாவரப் பொருட்கள் அடர்ந்த களிமண் - கரும்புக்கு உகந்தது (DEEP LOAMY CALCOREOUS SOIL)
3. சத்து நிறைந்த சேற்று நீர் குறைவான மண் - நெற்பயிருக்கு உகந்தது (NUTRIENT MUDDY)
4. கருப்பு மண் : BLACK SOIL - பருத்திக்கு உகந்தது.
5. மலைப்பகுதி மண் : தேயிலை.
6. இலைத்தழை மக்கிய ஊட்டச்சத்து நிறைந்து, இரும்பு சத்து மற்றும் பொட்டாஷ் கலந்த மண் : காபி.
7. வண்டல் மண் : ஆற்றுப்படுகைகளில் காணப்படுவது - பொதுவாக சத்து நிறைந்த விவசாயத்துக்கேற்ற மண் (ALLUVIAL)."
Q20. INORGANIC - செயற்கை உரங்களின் பொதுவான கலவைப் பொருட்கள் யாவை?
நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம்.
Q21. நைட் ரஜன் அடங்கிய உரக்கலவையில் அடங்கியுள்ளது?
"1.யூரியா - 46% நைட்ரஜன்.
2. அம்மோனியம் சல்பேட் - 21% நைட் ரஜன்.
3. கால்சியம் (அ) அம்மோனியம் நைட்ரேட் - 20% நைட் ரஜன்."
Q22. நைட் ரஜன் பயிருக்கு எவ்வாறு உதவுகிறது?
பயிர்கள் வேகமாக வளர்வதுடன், அவற்றில் புரதச்சத்தை அதிகப்படுத்துகிறது.
Q23. பாஸ்ஃபேட் உரங்களின் பொதுவான கலவையும், இந்த உரத்தின் பயனும் யாது?
பாஸ்ஃபேட் என்பது ஃப்ளூரோபேடைட் மற்றும் ஹைட் ராக்ஸ்யாபேடைட் தாதுக்கள் (MINERALS) நிறைந்த ஒருவகை பாறை. இதை நீரில் கரையக்கூடிய பாஸ்ஃபேட்டுகளாக சல்ஃப்யூரிக் ஆசிட்டின் உதவியால் மாற்றப்படுகிறது. இன்னொரு முறையில், 20% பாஸ்பரஸ் கொண்ட பாறைகளை நைட் ரிக் ஆசிட்டால் கரைத்து, பாஸ்ஃபோரிக் அமிலம் மற்றும் கால்சியம் நைட் ரேட் கலவை உருவாக்கப்பட்டு, பொட்டாசியம் உரங்களுடன் கலக்கப்பட்டு, ஒரு கலவை உரம் (NPK) உருவாக்கப்படுகிறது. பாஸ்ஃபேட் உரத்தில் இரண்டு வகை உண்டு. இந்த வகை உரங்கள் பயிர்களில் பூக்கள் உருவாவதற்கு பெரிதும் உதவுகிறது.
Q24. பொட்டாஷ் உரங்கள் என்ன? அவற்றின் பயன் என்ன?
பொட்டாஷியம் குளோரைடு, பொட்டாஷியம் சல்ஃபேட், பொட்டாசியம் கார்பனேட் (அ) பொட்டாசியம் நைட்ரேட் கலந்தது பொட்டாஷ் உரங்கள். இவற்றில் மண்ணின் தரம் உயர்கிறது.
Q25. நம் நாட்டில் உரம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெரிய தொழிற்சாலைகள் எவை?
"1. IFFCO - Indian Farmers and Fertilizers Co., Ltd., - இந்திய விவசாயிகள் மற்றும் உரங்கள் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைமையகம் டெல்லியிலும், இதன் தொழிற்சாலைகள் - கலோல், காண்ட்லா (குஜராத்), ஃபூல்பூர் (உ.பி), அவோன்லா (உ.பி) மற்றும் பாராதீப் (ஒடிசா)விலும் உள்ளது. இது உலகிலேயே மிகப்பெரிய கூட்டுறவு நிறுவனம்.
2. Gujarath State Fertilizers & Chemicals Ltd., - குஜராத் மாநில உரம் மற்றும் ரசாயன நிறுவனம் - - வடோடரா, குஜராத்.
3. Southern Petrochemicals Industries Corporation - SPIC - தென்னக பெட்ரோ கெமிக்கல் தொழிற் நிறுவனம் - - தூத்துக்குடி.
4. INDO GULF FERTILIZERS - இண்டோ கல்ஃப்பெர்ட்டிலைசர்ஸ் & கெமிக்கல்ஸ் - - ஜகதீஷ்பூர், லக்னௌ.
5. Godavari Fertilizers & Chemicals Ltd., - கோதாவரி ஃபெர்ட்டிலைசர்ஸ் & கெமிக்கல்ஸ் - காக்கி நாடா.
6. Gujarath Narmada Valley Fertilizers Co., Ltd., - குஜராத் நர்மதா பள்ளத்தாக்கு உர நிறுவனம் - நர்மதா நகர், குஜராத்."
Q26. நம் நாட்டில் உரம் தயாரிப்பு பெரும் அளவில் எங்கு தொடங்கப்பட்ட து?
சிந்திரி - ஜார்க்கண்ட். 1961ல் அரசாங்கத்தின் ஒரு பொது நிறுவனமாக - Fertilizer Corporation of India - என்ற நிறுவனம் தொடங்கப்பட்ட து. 2002 ல் இது மூடப்பட்டுவிட்ட து.
Q27. பாலைவனப் பகுதியான ராஜஸ்தானின் பெரும் பகுதிகளிலும் விவசாயத்திற்கு வழி செய்ய உருவாக்கப்பட்ட பெரிய பாசன வசதி எது?
இந்திரா காந்தி கால்வாய் திட்டம் - சட்லஜ் மற்றும் பியாஸ் நதிகள் சங்கமிக்கும் ஹரிக்கே அணையில் (சுல்தான்பூர், பஞ்சாப்) இருந்து, பஞ்சாப் மற்றும் ஹரியான வழியாக 167 கி.மீக்கும், ராஜஸ்தானில் 483க்கும் பாய்ந்து (மொத்தம் 650 கி.மீ) ஜெய்சல்மேர் (ராஜஸ்தான்) சென்றடைகிறது. (ஜெய்சல்மேர் மாவட்டம் ராஜஸ்தானின் பெரிய பாலைவன மாவட்டம்) இந்த கால்வாயினால், பார்மர், பிக்கானீர், சுகு, ஹனுமான்கர், ஜெய்சல்மேர், ஜோத்பூர், ஸ்ரீ கங்கா நகர் போன்ற மாவட்டங்கள் பயன்பெறுகின்றன.
Q28. நீர்த்தேக்கம் (Reservoir) என்பது என்ன?
மிகப்பெரிய பகுதியில் நீரை தேக்கம் செய்து, அதை தேவைக்கேற்ப பயனுக்கு எடுத்துக் கொள்வது. இவை இயற்கையாக பள்ளத்தாக்குகளிலும், செயற்கையாக அணைப்பகுதிகளிலும் அமைகிறது. பள்ளத்தாக்குகளில் நீர்ப்பாய்ச்சல் அதிகமாக இருக்கும் இட த்திலும், சம வெளிகளில் மலைகள் சூழ்ந்துள்ள இடங்களிலும், மேட்டுப்பகுதிகள் இரு பக்கங்களில் அமைந்திருக்கும் இடங்களிலும், அல்லது மேடுகள் ஏற்படுத்தி, ஆற்றில் நீர்ப்பாய்ச்சல் அதிகமிருக்குமிடத்திலும் அணைகள் கட்டப்படுகின்றன. அணைகள் பாசனத்திற்கு பயன்படுவது மட்டுமின்றி, வெள்ளத்தடுப்பு நடவடிக்கை ஆகவும் அமைகிறது.
Q29. உலகிலேயே மிகப்பெரிய நீர்த்தேக்கம்.....
வோல்ட்டா நீர்த்தேக்கம் - 8500 ச.கி.மீ. மேற்கு ஆப்பிரிக்காவில் கானா நாட்டில் உள்ளது.
Q30. அணை என்பது என்ன?
கட்டுமான பணிகளால், நீர்போக்கின் குறுக்கே, நீரை சேமித்து வைக்க, உருவாக்கப்படும் ஒரு தடுப்பு.
Q31. அணைகள் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளன?
"கீழ்மட்ட அணை - 30 மீக்கு குறைவான உயரம்.
நடு உயர அணை - 30-100 மீக்குள் உயரமானது.
உயரமான அணை - 100 மீ க்கு மேலான உயரம்.
இந்த வகைகள் கட்டுமானத்தை சார்ந்தது. இவை தவிர்த்து, அணைகளின் பயனைப் பொறுத்து அவை பலவகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை : 1. SADDLE DAM, 2. OVER FLOW DAM, 3.CHECK DAM, 4. WING DAM, 5. DRY DAM, 6. DIVERSIONARY DAM, 7. EMBANKMENT DAM, 8. MASONRY DAM, 9. GRAVITY DAM, 10. ARCH DAMS."
Q32. இந்தியாவில் கட்டப்பட்ட மிக பழமையான அணை எது?
GRAND ANAI CUT - கல்லணை - சோழ வம்சத்தை சார்ந்த கரிகால சோழன் அவர்களால் முதல் நூற்றாண்டில் கட்டப்பட்ட து. திருச்சியின் அருகில் உள்ளது. மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலம்.
Q33. நம் நாட்டின் மிக உயரமான அணை எது?
தெஹ்ரி அணை - 855 அடி உயரம். உத்தராகண்ட்.
Q34. உலகிலேயே மிகப்பெரிய அணை எது?
மூன்று மலை வழி அணை - THREE GORGES DAM - 185 மீட்டர் உயரம், 115 மீட்டர் அகலம், 2335 மீட்டர் நீளம் - யாங்ட்ஸே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை, ஹேபி, சீனாவில் உள்ளது. இது உலகின் மிக உயரமான அணையும் கூட.
Q35. உலகின் மிக நீளமான அணை எது?
ஹிராகுட் அணை - மஹா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை, சம்பல்பூர், ஒடிசா அருகே அமைந்துள்ளது. இது சுமார் 26 கி.மீ. நீளம் உடையது. 1948ல் தொடங்கி 1957ல் முடிவடைந்தது. சுதந்திர இந்தியாவில் கட்டப்பட்ட முதல் அணை.
Q36. கோவிந்த் சாகர் நீர்த்தேக்கம் எங்குள்ளது?
பக்ரா அணை - சட்லஜ் நதியின் மீது - பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல் பிரதேசத்துக்கிடையில் - இந்தியாவின் மிகப்பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்று.
Q37. இடுக்கி (கேரளா) அணையின் தரச்சான்று (Record) என்ன?
ஆசியாவிலேயே உயரமான வளைவு அணை (Arch Dam)
Q38. கர்நாடகாவில் உள்ள கிருஷ்ண சாகர் அணையை சார்ந்து அமைந்திருக்கும் மிகவும் புகழ்பெற்ற தோட்டத்தின் / பூங்காவின் பெயர் என்ன?
பிருந்தாவன் தோட்டம்/பூங்கா - Brindavan Garden.
Q39. மேட்டூர் அணையில் அமைந்திருக்கும் நீர்த்தேக்கத்தின் பெயர் என்ன?
ஸ்டான்லி நீர்த்தேக்கம் - Stanley Reservoir.
Q40. எந்த அணையின் உயரத்தை உயர்த்துவதில் இரு தென் மாநிலங்களுக்கிடையில் பல வருடங்களாக சர்ச்சை நிலவி வருகிறது?
முல்லைப்பெரியார் அணை, தமிழ் நாடு - கேரளா.
Q41. நம் நாட்டின் சில முக்கியமான அணைகளைக் கூறுக.
வ.எண் அணை பெயர் நதி இடம்
1 பாக்லிகர் செனாப்,சந்திரகூட், ஜ & கா
2 பன்சாகர் சோன்,ஷதோல், ம.பி.
3 பார்கி நர்மதா, ஜபல்பூர், ம.பி.
4 பக்ரா நங்கல் சட்லஜ், பஞ்சாப் & ஹி.பி.
5 இடுக்கி பெரியார், இடுக்கி, கேரளா
6 நாகர்ஜுனாசாகர் கிருஷ்ணா, மச்சேர்லா, ஆ.பி
7 கொய்னா கொய்னா, சில்புட், மகாராஷ்டிரா
8 கிருஷ்ணராஜ சாகர் காவேரி, மாண்ட்யா, கர்நாடகா
9 மேட்டூர் காவேரி, சேலம், தமிழ் நாடு
10 ஸ்ரீசைலம் கிருஷ்ணா, ஸ்ரீசைலம், ஆ.பி.
11 வைகை வைகை, ஆண்டிப்பட்டி, த.நா.
12 டெஹ்ரி பாகிரதி, உத்தரகாண்ட்
13 முல்லை பெரியார் பெரியார், தேக்கடி, த.நா.
14 மலம்புழா மலம்புழா, பாலக்காடு, கேரளா
15 கண்டலேறு கண்டலேறு, நெல்லூர், ஆ.பி.
16 M P R பென்னா, அனந்தபூர், ஆ.பி.
17 துதாவா மகாநதி, சத்தீஸ்கர்
18 காங்ரெல் மகாநதி, சத்தீஸ்கர்
19 முர்ரும் சில்லி சில்லாரி, சத்தீஸ்கர்
20 சலாவ்லிம் சலாவ்லிம், கோவா
21 நர்மதா நர்மதா, நவகாம், குஜராத்
22 உகாய் தபி, சூரத், குஜராத்
23 நாத்பா சட்லஜ், ஹிமாசல பிரதேசம்
24 பந்தோ பியாஸ், ஹிமாசல பிரதேசம்
25 ரஞ்ஜித் சாகர் ரவி, பஞ்சாப்
26 சலால் செனாப், ஜம்மு காஷ்மீர்
27 ஊரி ஜீலம், ஜம்மு காஷ்மீர்
28 அலமாட்டி கிருஷ்ணா, கர்நாடகம்
29 பத்ரா பத்ரா, கர்நாடகம்
30 லிங்கனமக்கி ஷராவதி, கர்நாடகம்
31 துங்கபத்ரா துங்கபத்ரா, கர்நாடகம்
32 பரம்பிக்குளம் பரம்பிகுளம், பாலக்காடு, கேரளா
33 வாலயார் வாலயார், பாலக்காடு, கேரளா
34 காந்தி சாகர் சம்பல், மத்திய பிரதேசம்
35 திபாய்முக் பராக், மணிப்பூர்
36 ஹிராகுட் மகா நதி, ஒடிசா
37 பவானி சாகர் பவானி, தமிழ் நாடு
38 தவுலி கங்கா தவுலிகங்கா, உத்தரகாண்ட்
39 ஃபராக்கா பேரேஜ் கங்கை, மே. வங்காளம்
40 பாஞ்சேட் தாமோதர், ஜார்க்கண்ட்
இவைத் தவிர இன்னும் பல சிறிய அளவிலான அணைகளும் உள்ளன.
Q42. நம் நாட்டில் உள்ள முக்கியமான சில நீர்த்தேக்கங்களின் (Reservoir) பெயர்களைக் குறிப்பிடுக.
" நீர்த்தேக்கங்கள் என்பது இயற்கையாகவோ அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை தடுப்புகளினாலோ, நீர்ப்போக்கு அதிகமாக உள்ள இடங்களில், நீரைத் தேக்கி பயனடையச் செய்வது. இவ்வாறாக உருவாக்கப்பட்ட சில தேக்கங்கள் பின்வருமாறு : (கே.40ன் பதிலில் உள்ள அணைகள் சார்ந்த நீர்த்தேக்கங்கள் தவிர்த்து).
1. ஜுராலா நீர்த்தேக்கம், கிருஷ்ணா நதி நீர், குரவாபூர், தெலுங்கானா.
2. உஸ்மான் சாகர், ஹைதராபாத், தெலங்கானா - மூசி நதி நீர்.
3. நிஜாம் சாகர் - நிஜாமாபாத், தெலங்கானா - மஞ்சிரா நதி நீர்.
4. ஸ்ரீராம் சாகர் - நிஜாமாபாத், தெலங்கானா - கோதாவரி நீர்.
5. கண்டிபாலேம் நீர்த்தேக்கம் - கனிகிரி, ஆந்திரபிரதேசம், மன்னேரி நதி நீர்.
6. பொங்டாம் நீர்த்தேக்கம் - கங்ரா - ஹிமாச்சல் பிரதேசம் - பியாஸ் நதி நீர்.
7. ஹராங்கி நீர்த்தேக்கம் - கொடகு, கர் நாடகம் - ஹராங்கி நதி நீர்.
8. தாவா நீர்த்தேக்கம் - ஹோஷாங்காபாத் - மத்திய பிரதேசம்.
9. பாலிமேலா நீர்த்தேக்கம் - மல்காங்கிரி - ஒடிசா - சிலேரு நதி நீர்த்தேக்கம்.
10. அலியார் நீர்த்தேக்கம் - கோயம்புத்தூர் - தமிழ் நாடு - அலியார் நதி நீர்.
11. அமராவதி நீர்த்தேக்கம் - உடுமலைப்பேட்டை - தமிழ் நாடு - பம்பா, சின்னார், அமராவதி நதிகளின் நீர்.
12. பேச்சிப்பாறை - நாகர்கோயில் - தமிழ் நாடு - கொடையார் ஆற்று நீர்.v 13. சாத்தனூர் நீர்த்தேக்கம் - சாத்தனூர் - தமிழ் நாடு - தென் பெண்ணை நதி நீர்.
இவ்வகையாக பல நீர்த்தேக்கங்கள் உள்ளன."
Q43. நம் நாட்டில் இயங்கும் பல வகை வேளாண் ஆராய்ச்சி மையங்களுக்கு தேவையான விஞ்ஞானிகளை தேர்ந்தெடுக்கும் அமைப்பு எது?
வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு மையம் - Agricultural Scientists Recruitment Board - புது டெல்லி - இந்த அமைப்பு 1.11.1973 முதல் இயங்குகிறது.
Q44. வேளாண்துறையில் நம் நாட்டில் வழங்கப்படும் பல வகை விருதுகள் யாவை?
"1. சர்தார் பட்டேல் சிறந்த வேளாண் அமைப்பு விருது - Sardar Patel Outstanding ICAR Institution Award - இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் பல அமைப்புகளில், ஆராய்ச்சி மற்றும் கல்வி துறையில் சிறந்து விளங்கும் அமைப்புக்கு வழங்கப்படும் விருது -இரண்டு அமைப்புகளுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய்.
2. ஜவஹர்லால் விருது : முதுகலை பட்டப்படிப்பில் சிறந்த ஆராய்ச்சிக்காக, 18 பேருக்கு தலா 20000/- ரூபாய்.
3. வசந்த் ராவ் நாயக் விருது : நீர் சேமிப்பு மற்றும் வறண்ட மண் தோட்டக்கலை விருது - ஒரு லட்சம்.
4. தேசிய க்ரிஷி விக்யான் கேந்த்ரா விருது. விவசாய வேளாண் மையங்கள் மூன்றுக்கு தலா ஒரு லட்சம்.
5. ஹரி ஓம் ஆஷ்ரம் சேவை அமைப்பு விருது : நான்கு வேளாண் விஞ்ஞானிகளுக்கு தலா 40000/- ரூபாய்.
6. லால் பகதூர் சாஸ்திரி விருது : 35 வயதுக்குட்பட்ட முனைவர் பட்டம் பெற்ற அனைத்து வேளாண் விஞ்ஞானிகளுக்கும் தலா ரூபாய் 25000/-
7. ரஃபி அஹமது கிட்வய் விருது : வேளாண் துறையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் 9 பேருக்கு தலா 3 லட்சம் - இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை.
8. ஸ்வாமி சஹஜான்ந்த் சரஸ்வதி விருது : நான்கு பேருக்கு தலா ரூ.25000/- வருடந்தோறும்.
9. ஜகஜீவன்ராம் கிசான் விருது : வேளாண் துறைக்கு சிறந்த சேவை புரிந்த இருவருக்கு ரூபாய் ஒரு லட்சம்.
10. என்.ஜி.ரங்கா விவசாயி விருது : ஒருவருக்கு, வேளாண்மையில் புதுமையும் மாற்றமும் புகுத்திய விவசாயி - ஒரு லட்சம்.
11. சவுத்ரி சரண்சிங் விருது : வேளாண்துறையில் சிறந்த ஆராய்ச்சி பத்திரிகை கட்டுரை சமர்ப்பித்த ஒருவருக்கு ஒரு லட்ச ரூபாய் விருது."
Q45. வேளாண் சம்பந்தப்பட்ட பல வகையான படிப்புகள் யாவை?
"1. Agriculture - அக்ரிகல்ச்சர் - விவசாயம். விவசாயத்திற்கு இது ஒரு பொதுவான வார்த்தை.
2. Horticulture - ஹார்ட்டிகல்ச்சர் - தோட்டக்கலை - பூக்கள், தோட்டங்கள்.
3. Floriculture - ஃப்ளோரிகல்ச்சர் - மலர்ச் செடி வளர்ப்பு, தாவர வளர்ச்சி.
4. Pisciculture - பிஸ்ஸிகல்ச்சர் - மீன் வளர்ப்பு.
5. Sericulture - செரிகல்ச்சர் - செயற்கை மீன் வளர்ப்பு.
6. Aquaculture - அக்குவாகல்ச்சர் - நீர் வாழ்விலங்கு வளர்ப்பு.
7. Apiculture - ஏப்பிகல்ச்சர் - தேனி வளர்ப்பு.
8. Animal Husbandry - அனிமல் ஹஸ்பெண்ட்ரி - கால் நடை வளர்ப்பு.
9. Mariculture - மாரி கல்ச்சர் - கடல்வாழ் இனங்கள் வளர்ப்பு.
10. Dairy Farming - டெய்ரி ஃபார்மிங் - பால் பண்ணை.
11. Forestry - ஃபாரஸ்ட் ரி - காடு வளர்ப்பு."
Q46. வேளாண் துறையில் உள்ள படிப்புகளின் பிரத்தியேக பெயர்கள் யாவை?
"1. Agro Ecology - அக்ரோ எக்கோலாஜி - விவசாய உற்பத்தியில் சுற்றுச் சூழலின் பாதிப்பு
2. Agrostology - அக்ராஸ்டாலஜி - புற்களை பற்றிய படிப்பு.
3. Agrology - அக்ரோலஜி - மண் பற்றிய படிப்பு.
4. Dendrology - டெண்ட் ராலஜி - முட்புதர், மரம் பற்றிய படிப்பு.
5. Food Technology/Processing - ஃபுட் டெக்னாலஜி - உணவுப்பொருள் செயலாக்கம், பதப்படுத்துதல்
6. Silviculture - சில்விகல்ச்சர் - காடு வளர்த்தல்.
7. Ichthyology - இச்சிதியாலஜி - மீன் கள் பற்றிய படிப்பு.
8. Olericulture - ஒலேரிகல்ச்சர் - காய்கறிகள் பற்றிய படிப்பு.
9. Plant Physiology - பிளான்ட் ஃபிஸியாலஜி - தாவரங்களின் வாழ்க்கைப்பாதையில் ஏற்படும் செயலாக்கங்கள்.
10. Plant Taxomomy - பிளான்ட் டாக்ஸானமி - தாவரங்களை வகைப்படுத்துதல் (அ) பிரித்தல்.
11. Plant Ecology - பிளான்ட் எக்காலஜி - தாவரங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் உள்ள தொடர்பு பற்றிய படிப்பு.
12. Plant Geography - பிளான்ட் ஜியோகிராஃபி - தாவரங்கள் பூமியின் பரப்பளவில் புவி நிலைக்கேற்ப பரவியிருப்பதைப் பற்றிய படிப்பு.
13. Plant Pathology - பிளான்ட் பேத்தாலஜி - தாவரங்களின் நோய்களைப் பற்றிய படிப்பு.
14. Pomology - போமாலஜி - பழங்கள் பற்றிய படிப்பு.
15. Plant Agronomy - பிளான்ட் அக்ரானமி - தாவரங்களுக்கேற்ற மண் மேலாண்மை.
16. Plant Morphology - பிளான்ட் மார்ஃபாலஜி - தாவரங்களின் உடற்கூறுகளைப் பற்றிய படிப்பு.
17. Soil Science - சாயில் சயின்ஸ் - மண்ணின் உள்ளடக்கம், கலவை, வகை, தன்மை, இயக்கவியல் பற்றிய படிப்பு.
18. Botany - பாட்டனி - செடி கொடிகளைப் பற்றிய படிப்பு - பொதுவான வார்த்தை "
Q47. எந்த நாடு ரப்பர் அதிகமாக உற்பத்தி செய்கிறது?
தாய்லாந்து