Khub.info Learn TNPSC exam and online pratice

மாநிலங்கள் சீரமைப்பு, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள்

Q1. ஆங்கிலேய, போர்ச்சுகீசிய மற்றும் ஃப்ரெஞ்ச் ஆதிக்கத்திற்கு முன்பாக, இந்திய எல்லைப்பகுதி எவ்வாறு ஆளப்பட்டு வந்தது?
இந்திய எல்லை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மியான்மார் உள்ளடங்கிய பகுதியாக பல மன்னர்களாலும், முகலாய மன்னர்களாலும், மத்திய தென் இந்திய பகுதிகள் பல இந்து மன்னர்களாலும் சிறு மற்றும் பெரும் பகுதிகளாகவும் ஆளப்பட்டு வந்தது. (மேலும் விவரங்கள் வரலாற்று பகுதியில் இடம் பெறுகிறது). ஆங்கிலேயர்களின் முழு ஆதிக்கத்தின் போதும், சுமார் 562 குறு நில மன்னர்கள் பல பகுதிகளை, ஆங்கிலேயர் அனுமதியின் கீழ் ஆண்டு வந்தனர். இவை Princely States என அழைக்கப்பட்டன.
Q2. ஐரோப்பியர்கள் குடியேற்றம் - போது இவர்கள் ஆண்ட பகுதிகள் எவ்வாறு அமைந்திருந்தது?

"போர்ச்சுகீசியர்கள் : கோவா, டையூ, டாமன், தாத்ரா, நாகர் ஹவேலி அடங்கிய பகுதிகள் - கோவா தலைமையகம்.
ஃப்ரெஞ்ச் : தென் பகுதியில், பாண்டிச்சேரி, காரைக்கால் (தமிழ் நாடு), மாஹே (கேரளம்) மற்றும் யாணம் (ஆந்திர கடல் பகுதி), மற்றும் சந்திர நாகூர், மேற்கு வங்காளம். பாண்டிச்சேரி தலைமையகம்.
ஆங்கிலேயர்கள் : போர்ச்சுகீசிய மற்றும் ஃப்ரெஞ்ச் பகுதிகளை தவிர்த்து மீதமுள்ள அனைத்து பகுதியும் (பாகிஸ்தான் பகுதியும், குறு நில மன்னர்கள் பகுதியும் சேர்த்து) இவர்கள் கைவசமிருந்தது. 1858ல் இங்கிலாந்து அரசியின் நேரடி ஆட்சிக்கு வந்தபின், மாகாண முறை ஆட்சி (17 மாகாணங்கள்) அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறையிலிருந்தது. சுதந்திரத்தின் போது இவ்வகையான ஒரு ஆட்சி அமைப்பில், பாகிஸ்தான் மற்றும் போர்ச்சுகீசிய பகுதிகள் நீங்கலாக, அனைத்து பகுதிகள் (குறு நில மன்னர் பகுதியும் சேர்த்து) இந்திய அரசாங்கம் பெற்றது. போர்ச்சுகீசிய பகுதிகள் 1961ல் இந்திய அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டது."
Q3. குறு நில / சுதேச மன்னர்கள் (PRINCELY STATES) பகுதி என்பது என்ன?
ஆங்கிலேயர்கள், சிறிது சிறிதாக ஒவ்வொரு பகுதியாக கைப்பற்றியபோது, சில மன்னர்கள் தாங்களாகவோ அல்லது ஆங்கிலேயர்களின் கட்டாயத்தின் பேரிலோ, சில ஒப்பந்தங்களின் கீழ், தன்னிச்சை ஆட்சி செய்ய அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறான பகுதிகள் இவ்வாறு அழைக்கப்பட்டன. (உதாரணம் : புதுக்கோட்டை சமஸ்தானம் - தொண்டைமான் ராஜாக்களால் ஆளப்பட்டது). இவ்வாறாக இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 562 பகுதிகள் இருந்தன.
Q4. நம் நாடு சுதந்திரம் அடைந்த போது, ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட என்னென்ன மாகாணங்கள் இருந்தன?

1. அஜ்மீர் - மேர்வாரா - கேக்ரி
2. அந்தமான் நிக்கோபார் தீவுகள்
3. அஸ்ஸாம்
4. பலுசிஸ்தான்
 5.பெங்கால்
6. பீஹார்
7. பாம்பே
8. மத்திய மற்றும் பேரார்
9. கூர்க்
10. டெல்லி
11. மெட்ராஸ்
12. வட மேற்கு எல்லை
13. பந்த் - பிப்லோடா
14. பஞ்சாப்
15. ஒரிஸ்ஸா
16. சிந்த்
17. ஒருங்கிணைந்த ஆக்ரா மற்றும் அவுத்.
இவற்றுள் பலுசிஸ்தான், வடமேற்கு, சிந்த் மற்றும் பெங்கால் மாகாணத்தின் ஒரு பகுதி பாகிஸ்தானுக்கு பிரித்துவிடப்பட்டது."
Q5. ஆங்கிலேய மாகாணங்கள் அநேகமாக எல்லா மாகாணங்களும் அடையாளம் காணக் கூடியவை. அடையாளம் காண சற்று கடினமாக இருக்கக்கூடியவை, இன்றைய நிலையில் உள்ள இடம் ?

1. அஜ்மீர் - மேர்வாரா - கேக்ரி = ராஜஸ்தான்.
2. மத்திய மற்றும் பேரார் = மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா.
3. கூர்க் = கர்நாடகா.
4. பந்த் பிப்லோடா = ரத்லம் மாவட்டம், மத்திய பிரதேசம்."
Q6. சுதந்திரத்திற்கு பிறகு, ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட மாகாணங்கள், எவ்வாறு இயங்கின?
15.8.1947க்கும் 1950க்கும் இடைப்பட்ட காலங்களில் "அரசியல் மாகாணங்கள் ஒருங்கிணைப்பு" (Political Integration of States) என்ற திட்டத்தின்படி, மாகாணங்களும், குறு நில மன்னர் பகுதிகளையும் இணைத்து புதிய மாகாணங்கள் அமைக்க முயற்சி எடுக்கப்பட்டது. அதன்படி, பல மாகாணங்கள் - அஸ்ஸாம், பீஹார், பாம்பே, மத்திய பிரதேசம், மெட்ராஸ், ஒரிசா, பஞ்சாப், உத்திர பிரதேசம், மேற்கு வங்காளம் - அப்படியே தனி மாகாணங்களாக இயக்கப்பட்டது. மன்னர்கள் ஆண்டு வந்த பகுதிகளில், மைசூர் தனி மாகாணமாகவும், சில குறு நில மன்னர் பகுதிகளை ஒன்று சேர்த்து, ராஜ்புத்தனா, இமாச்சல பிரதேசம், மத்ய பாரத் போன்ற புது மாகாணங்களும் உருவாக்கப்பட்டன.
Q7. குறு நில மன்னர்கள் பகுதியில் எந்தப்பகுதி இந்தியாவுடன் சேர மறுத்து, அது எவ்வாறு இணைக்கப்பட்டது?
ஹைதராபாத் - நிஜாம் மன்னர்களால் ஆண்டு வந்த இந்த பகுதி, இந்தியாவுடன் இணைய மறுத்து வந்ததால், 18.9.1948 அன்று, "ஆப்பரேஷன் போலோ" (OPERATION POLO) என்ற ரகசிய ராணுவ நடவடிக்கையின் மூலம் கையகப்படுத்தப்பட்டு, 1953 வரை தனி மாகாணமாக இயங்கி வந்தது. 1953ல் ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டு அதனுடன் இணைக்கப்பட்டது.
Q8. காஷ்மீர் பகுதி எவ்வாறு இந்தியாவுடன் இணைக்கப்பட்ட து?
காஷ்மீர் மன்னர் ஹரிசிங், இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைய தயக்கம் காட்டி வந்தார். இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளுமே, காஷ்மீர் தங்கள் பகுதியாக அறிவித்து வந்தனர். இதற்கிடையில் வடமேற்கு பகுதியில், மலை வாழ் மக்கள் ராணுவம் பல காஷ்மீர் பகுதிகளை கைப்பற்றி, காஷ்மீர் முழுவதையும் கைப்பற்ற முன்னேறிய நிலையில், காஷ்மீர் அரசர் இந்திய உதவியை நாடினார். அப்போது, இந்திய அரசாங்கம், காஷ்மீர் பகுதியை இந்தியாவுடன் இணைக்கும் இணைப்புப் பத்திரம் (Deed of Accessio) கேட்டதின் அடிப்படையில், 26.10.1947 அன்று, அப்பத்திரத்தை கையெழுத்திட, இந்தியா ராணுவத்தை காஷ்மீரில் இறக்கி, பாகிஸ்தானின் காஷ்மீர் கைப்பற்றும் திட்டம் முறியடிக்கப்பட்டது. இருப்பினும், கைப்பற்றப்பட்ட பகுதிகள் "பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர்" "Pakistan Occupied Kashmir" எனவும், மீதியுள்ள பகுதிகள் இந்தியா வசம் இருந்த போதிலும், பாகிஸ்தானும், பாகிஸ்தானால் ஏவப்படும் தீவிரவாத அமைப்புகளாலும், இன்றும் சுமுகமான சூழ்நிலையில் இயங்காமல் இருப்பது தான் உண்மை நிலை.
Q9. போர்ச்சுகீசிய பகுதிகள் எவ்வாறு, எப்போது இந்தியாவுடன் இணைக்கப்பட்ட து?
போர்ச்கீசியர்கள் ஆண்டு வந்த பகுதிகளான கோவா, டையூ மற்றும் டாமன், தாத்ரா, நாகர் ஹவேலி பகுதிகள் இந்தியாவுடன் பல முயற்சிகளுக்குப் பின்னும் சேராததால், டிசம்பர் 12, 1961 அன்று ராணுவ நடவடிக்கை "ஆப்பரேஷன் விஜய்" "OPERATION VIJAY" மூலம் (36 மணி நேர போரின் மூலம்) கையகப்படுத்தப்பட்டது.
Q10. மொழி வாரியான மாகாணப் பிரிவினை எங்கு தொடங்கி எவ்வாறு முடிவடைந்தது?
ஆந்திரப் பிரதேசத்தில் - அதாவது தெலுங்கு பேசும் மக்கள் வாழ் பகுதி, தனி மாநிலம் மொழிவாரியாக பிரிக்கப்பட வேண்டுமென்று, பொட்டி ஸ்ரீ ராமுலு தலைமையில் நடைபெற்ற போராட்டம் தீவிரம் அடைந்ததையொட்டி 1.10.1953ல் ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்ட்து. ஹைதராபாத் நிஜாம் பகுதியும் (தெலங்கான) 1956ல் இணைக்கப்பட்ட து.
Q11. மொழி வாரியான மாகணப் பிரிவினை பல பகுதிகளிலிருந்து அதிகரித்தவுடன், அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என்ன?
"டிசம்பர் 1953ல், ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசாங்கம், ஃபசல் அலி என்பவரின் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு 1955ல் தன்னுடைய பரிந்துரையை சமர்ப்பித்து அதன் அடிப்படையில், மாகாணங்கள் மறுசீரமைப்புச் சட்டம் States Reorganization Act 1956 அமலுக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் அடிப்படையில், மாகாணங்களின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டு அல்லது சேர்க்கப்பட்டு (மொழி) பேசுபவர்களின் அடிப்படையில், நவம்பர் 1956ல் மாகாணங்கள் சீரமைக்கப்பட்டு, இந்தியா 14 மாகாணங்களாகவும், 7 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது."
Q12. யூனியன் பிரதேசம் என்பது என்ன?
இந்திய நிர்வாக எல்லைக்குள், மத்திய அரசாங்கத்தால், லெஃப்டின்ன்ட் கவர்னர் ஆளுமையில் நடத்தப்படும் பகுதிகள். இந்தப்பகுதிகளில் சட்ட சபை / அமைச்சரவை இருக்காது. (இன்றைய நிலையில் டெல்லி மற்றும் புதுச்சேரி நீங்கலாக).
Q13. நவம்பர் 1956ல் முதல் மாகாண சீரமைப்பு முடிந்தவுடன் எத்தனை மாகாணங்கள், யூனியன் பிரதேசங்கள் இருந்தன, அவை யாவை?
14 மாகாணங்கள், 7 யூனியன் பிரதேசங்கள்.
Q14. 1956 மாகாண சீரமைப்பின் மூலம் ஏற்பட்ட மாகாணங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பெயர்கள் யாவை?
" மாகாணங்கள் :
1. ஆந்திரப்பிரதேசம் : முதலில் ஆந்திரா எனவும், கர்னூலை தலை நகராகவும் கொண்டு இருந்தது. சீரமைப்பின் மூலம் தெலங்கானா பகுதி, திருப்பதி பகுதி சேர்க்கப்பட்டு, திருத்தணி பகுதி மெட் ராஸ் மாகாணத்துடன் சேர்க்கப்பட்ட து. ஹைதராபாத் தலை நகர் ஆனது.
2. அஸ்ஸாம் : எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
3. பீஹார் : மாற்றம் ஏதுமில்லை.
4. பாம்பே : சௌராஷ்டிரா, கட்ச், மராத்தி பேசும் நாக்பூர் பகுதிகள் சேர்க்கப்பட்டு, தென் பகுதியில் சில மாவட்டங்கள் மைசூர் (கர்நாடகா) மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.
5. ஜம்மு காஷ்மீர் : மாற்றம் ஏதுமில்லை.
6. கேரளா : திருவாங்கூர் மற்றும் கொச்சி சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டு
உருவாக்கப்பட்டது. மெட்ராஸ் மாகாணத்திலிருந்து மலபார் பகுதி சேர்க்கப்பட்டது.
7. மத்திய பிரதேசம் : மத்ய பாரத், விந்திய பிரதேசம், மற்றும் போப்பால் மாகாணங்கள் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. மராத்தி பேசும் நாக்பூர் பகுதி பாம்பே மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.
8. மெட் ராஸ் : மாகாணத்தின் பரப்பளவு குறைந்தது. திருப்பதி பகுதி ஆந்திராவுக்கும், மலபார் பகுதி கேரளாவுக்கும் கொடுக்கப்பட்டது. திருத்தணி பகுதி ஆந்திராவிலிருந்து சேர்க்கப்பட்டது.
9. மைசூர் : மைசூர் மன்னர் ஆட்சி பகுதி, கூர்க், கன்னடம் பேசும் பகுதி (பாம்பேயிலிருந்து), மற்றும் ஹைதராபாத்தின் மேற்கு பகுதி சிலவும் இணைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது.
10. ஒரிசா : மாற்றம் ஏதுமில்லை.
11. பஞ்சாப் : பட்டியாலா மன்னர் பகுதியும், பஞ்சாப் ஐக்கிய மாகாணங்கள் இணைக்கப்பட்டு இந்த மாகாணம் உருவாக்கப்பட்டது.
12. ராஹஸ்தான்: அஜ்மீர்-மேர்வாரா மன்னர் பகுதி சேர்த்து விரிவாக்கம் செய்யப்பட்டது.
13. உத்திரபிரதேசம்: மாற்றம் ஏதுமில்லை.
14. மேற்கு வங்காளம்: மாற்றம் ஏதுமில்லை.
யூனியன் பிரதேசங்கள் :
1. அந்தமான் நிக்கோபார் தீவுகள்
2. டெல்லி
3. இமாச்சல பிரதேசம்
4. லட்சத் தீவுகள்
5. பாண்டிச்சேரி
6. திரிபுரா
7. மணிப்பூர் "
Q15. 1956க்குப் பிறகு மாகாண சீரமைப்பு காலவரிசையை எடுத்துக் கூறுக :

1. 1.5.1960 : பாம்பே மாகாணம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா என இரு மாகாணங்களாக்கப்பட்டது.
2. 1.12.1963 : அஸ்ஸாமிலிருந்து ஒரு பகுதி பிரிக்கப்பட்டு நாகாலாந்து மாகாணம் உருவாக்கப்பட்டது.
3. 1.11.1966 : பஞ்சாபின் ஒரு பகுதி பிரிக்கப்பட்டு ஹரியானா மாகாணம் உருவாக்கப்பட்டது.
4. 25.1.1971 : யூனியன் பிரதேசமான இமாச்சல பிரதேசம் மாகாணமாக உயர்த்தப்பட்டது.
5. 21.1.1972 : வடகிழக்கு எல்லை பகுதிகளிலிருந்து மணிப்பூர், மேகாலயா என்ற இரு மாகாணங்களும், யூனியன் பிரதேசமாயிருந்த திரிபுரா, மாகாணமாகவும் உருவாக்கப்பட்டன.
6. 16.5.1975 : சிக்கிம் பகுதி சோக்யால் மன்னர்களால் ஆளப்பட்டு வந்த்து. இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, சிக்கிம் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்பவில்லை. 1975ல் சிக்கிம் மக்கள் விருப்பத்தின் பேரில், இந்திய சாசன சட்டத்தின் 36வது திருத்தத்தின் பேரில், இது ஒரு இந்திய மாகாணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
7. 20.2.1987 : வடகிழக்கு எல்லைப் பகுதியிலிருந்து மிசோரம் மாகாணம் உருவாக்கப்பட்டது. யூனியன் பிரதேசமான அருணாச்சல பிரதேசம் மாகாணமாக உருவாக்கப்பட்டது.
8. 30.5.1987 : 1931ல் போர்ச்சுகீசியரிடமிருந்து மீட்கப்பட்ட கோவா யூனியன் பிரதேசமாக ஆளப்பட்டு வந்தது. அது மாகாண அந்தஸ்து பெற்றது.
9. 1.11.2000 : மத்திய பிரதேசத்திலிருந்து சத்தீஸ்கர் மாகாணமும், பீஹாரிலிருந்து ஜார்க்கண்ட் மாகாணமும், உத்திர பிரதேசத்திலிருந்து உத்தராகண்ட் மாகாணங்களும் உருவாக்கப்பட்டது.
10. 2.6.2014 : ஆந்திர பிரதேசத்திலிருந்து மேற்கு பகுதிகள், 2.6.2014 அன்று தெலங்கானா மாகாணமாக உருவானது."
Q16. 2015 நிலையில் எத்தனை மாகாணங்கள், யூனியன் பிரதேசங்கள் உள்ளன?
29 மாகாணங்கள், 7 யூனியன் பிரதேசங்கள்.
Q17. மாகாணங்கள், தலைநகரங்கள், தொடக்கம்:
வ.எண். மாகாணம் தலை நகர் தொடக்கம்
1 ஆந்திரப்பிரதேசம் ஹைதராபாத் 1953/1956
2 அருணாச்சலப்பிரதேசம் அமராவதி இட்டாநகர் 20.2.1987
3 அஸ்ஸாம் திஸ்பூர் 1912/1956
4 பீஹார் பாட்னா 1936/1956
5 சத்தீஸ்கர் ராய்ப்பூர் 1.11.2000
6 கோவா பானாஜி 30.5.1987
7 குஜராத் காந்தி நகர் 1.5.1960
8 ஹரியானா சந்திகார் 1.11.1966
9 ஹிமாச்சலப் பிரதேசம் சிம்லா 25.1.1971
10 ஜம்மு காஷ்மீர் ஜம்மு/ஸ்ரீ நகர் நவம்பர் 1956
11 ஜார்கண்ட் ராஞ்சி 1.11.2000
12 கர்நாடகா பெங்களூரு நவம்பர் 1956
13 கேரளா திருவனந்தபுரம் நவம்பர் 1956
14 மத்திய பிரதேசம் போப்பால் நவம்பர் 1956
15 மகாராஷ்டிரா மும்பை 1.5.1960
16 மணிப்பூர் இம்ஃபால் 21.1.1972
17 மேகாலயா ஷில்லாங் 21.1.1972
18 மிசோரம் அய்ஸால் 20.2.1987
19 நாகாலாந்து கோஹிமா 1.12.1963
20 ஒடிசா புவனேஷ்வர் நவம்பர் 1956
21 பஞ்சாப் சந்திகார் நவம்பர் 1956
22 ராஜஸ்தான் ஜெய்ப்பூர் நவம்பர் 1956
23 சிக்கிம் கேங்க் டாக் 26.4.1973
24 தமிழ் நாடு சென்னை நவம்பர் 1956
25 திரிபுரா அகர் தாலா 21.1.1972
26 உத்தரா கண்ட் டெஹ்ராடூன் 1.11.2000
27 உத்திர பிரதேசம் லக்னௌ நவம்பர் 1956
28 மேற்கு வங்காளம் கொல்கத்தா நவம்பர் 1956
29 தெலங்கானா ஹைதரபாத் 2 ஜூன் 2014
  யூனியன் பிரதேசங்கள் :  
1 அந்தமான் நிக்கோபார் போர்ட்ப்ளேயர் நவம்பர் 1956
2 சந்திகர் - நவம்பர் 1966
3 தாத்ரா, நகர், ஹவேலி சில்வாஸா 11.8.1961
4 தாமன் & டையூ தாமன் 30.5.1987
5 லட்சத்தீவுகள் கவராட்டி நவம்பர் 1956
6 புதுச்சேரி - 7.1.1963
7 டெல்லி - நவம்பர் 1956