Khub.info Learn TNPSC exam and online pratice

"தகவல், தொலை தொடர்பு MINISTRY OF INFORMATION & TELE COMMUNICATIONS:"

Q1. நம் நாட்டில் தபால் துறை தொடங்கக் காரணமாயிருந்தவர் யார்?
கவர்னர் ஜெனரல் டல்ஹௌசி

Q2. நம் நாட்டில் தபால் அலுவலகம் முதன்முறையாக எங்கு தொடங்கப்பட்டது?
கொல்கத்தா 1727 - பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் துவக்கப்பட்டது.
Q3. நம் நாட்டில் தபால் பரிமாற்றம் எப்போது துவங்கப்பட்டது?
"1.4.1774 முதல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் வங்காளம், பாம்பே மற்றும் மெட்ராஸ் மாகாணம்- களில் தொடங்கப்பட்டது.
அதற்குப்பிறகு மற்ற மாகாணங்களுக்கும், குறு நில மன்னர் பகுதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டது."
Q4. "நம் நாட்டில் தபால் விநியோகம் எப்போது ஒருங்கிணைந்த துறையாக உருவாக்கப்பட்டது?"
"ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாகாண அளவில் இயங்கி வந்த தபால் விநியோக முறைகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு 1854ல் தபால் துறை (Department of Posts) உருவாக்கப்பட்டது. 1861ல் சுமார் 889 அஞ்சல் நிலையங்கள் இயங்கின."
Q5. "நம் நாட்டில், முதல் ஒட்டக்கூடிய தபால் முத்திரை (Adhesive Postage Stamp) எப்போது வெளியிடப்பட்டது?"
1.7.1852 - சிண்டே டாக் எனப்பட்ட தபால் முத்திரை சிந்து மாகாணத்தால் வெளியிடப்பட்டது.
Q6. நம் நாட்டில் தபால் முத்திரை (Stamp) வளர்சிசிக்குக் காரணமாயிருந்தவர் யார்?
சர் ரௌலாண்ட் ஹில்.
Q7. நம் நாட்டின் முதல் தபால் முத்திரை எப்போது வெளியிடப்பட்டது?
4.8.1854.
Q8. தபால் அட்டை (Post Card) முதன் முதலில் எந்த நாட்டால் பயன்படுத்தப்பட்டது?
ஆஸ்திரியா.
Q9. "தபால் அட்டை (Post Cards) களை சேகரிப்பது மற்றும் அவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?"
DELTIOLOGY - டெல்ட்டியாலஜி.
Q10. நம் நாட்டில் தபால் அட்டை எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
1.7.1879. இந்த அட்டைகளை அப்போது அச்சடித்தவர்கள் டி லா ரூ கம்பெனி, லண்டன்.
Q11. சுதந்திர இந்தியாவில் அச்சடித்து வெளியிடப்பட்ட முதல் தபால் முத்திரை எது?
"சுதந்திர இந்தியக் கொடி" - "Free India Flag" முத்திரை - 21.11.1947 அன்று 3½ அணா மதிப்பில் வெளியிடப்பட்டது.
Q12. தேசிய அளவில் தபால் துறை மேலாண்மை செய்யும் அமைப்பு எது?
"Postal Services Board - தபால் சேவை தலைமை குழு, புது டெல்லி - இதை ஒரு தலைவர், 3 உறுப்பினர்கள் மற்றும் ஒரு கணக்கு தணிக்கை அதிகாரி ஆகியோரால் மேற்பார்வை செய்யப்படுகிறது."
Q13. "மண்டல அளவில் தபால் துறை எவ்வாறு பிரிக்கப்பட்டு மேலாண்மை செய்யப்படுகிறது?"
22 சுற்றுகளாக பிரிக்கப்பட்டு, (22 circles) ஒவ்வொரு சுற்றும் ஒரு போஸ்ட் மாஸ்டர் ஜெனரல்-ன் கீழ் இயங்குகிறது.
Q14. பாதுகாப்புத் துறைக்கு (Defence Services) தபால் துறை எவ்வாறு இயங்குகிறது?
"பாதுகாப்பு (Defence) துறையில் பணிபுரிபவர்கள் இடங்கள் மிகவும் கடினமான பகுதிகளாக இருக்கக் கூடியவை. மேலும் பாதுகாக்கப்பட வேண்டியவை. அதனால் பாதுகாப்புத் துறைக்கு தனியான தபால் சேவை அமைப்பு இயங்குகிறது. இதை ஒரு மேஜர் ஜெனரல் கீழ் மேற்பார்வை செய்யப்படுகிறது. பாதுகாப்புத் துறையில் தபால் அலுவலகங்கள் - ARMY POST OFFICE (APO) என்று அழைக்கப்படுகிறது. - இந்த மூன்று எழுத்துக்களுக்குப்பின் ஒரு எண் சேர்க்கப்படும். உதாரணமாக APO56. இந்த எண்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியை குறிப்பிடுகிறது. இந்தக் குறியீடுகள் ரகசியமாக காக்கப்படுபவை."
Q15. தபால் துறையின் சேவைகள் யாவை?
"1. தபால் பரிவர்த்தனை சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை - தபால் அட்டை, முத்திரை போன்றவை - Sale of Postal articles.
2. பதிவு செய்யப்பட்ட கடிதங்களும், பொட்டலங்கள், பெட்டிகள் - Registered letters & Parcels.
3. காப்பீடு செய்யப்பட்ட தபால்கள் - Insured Articles.
4. பணப்பட்டுவாடா - மணியார்டர் - Money Orders.
5. மதிப்பு கொடுக்கப்பட்ட தபால்க ள் - Value Payable Parcels / Articles.
6. பண மதிப்பு காசோலைகள் - Postal Orders.
7. துரித தபால் - Speed Post.
8. வேக தபால் சேவை - Quick Mail Service.
9. சிறுசேமிப்புக் கணக்குகள் - Small Savings.
10. அரசாங்க முத்திரைத் தாள் விற்பனை - Sale of Government Bonds.
11. கால வரம்பு முதலீடுகள் - Recurring Deposits.
12. தேர்ந்தெடுக்கப்பட்ட தபால் அலுவலகங்களில் ரயில்வே முன் பதிவு சேவை. இன்னும் பல் சேவைகளும் அறிமுகப்படுத்தப்படுகிறது. "
Q16. இந்திய தபால் துறையின் பெருமை என்ன?
"உலகிலேயே மிகப்பெரிய தபால்துறை - 1,54,866 (மாற்றத்துக்குரிய எண்ணிக்கை) தபால் அலுவலகங்கள், 5,65,000 ஊழியர்கள்."
Q17. நம் நாட்டில் படத்துடன் கூடிய தபால் முத்திரை எப்போது வெளியிடப்பட்டது?
1931. டெல்லி புரானா கீலா கோட்டை படத்துடன்.
Q18. உலகிலேயே மிக உயரத்தில் உள்ள தபால் அலுவலகம் எங்குள்ளது?
"ஹிக்கிம் - HIKKIM - Pincode - 172114 - ஹிமாச்சல் பிரதேசத்தின் லாகூல் ஸ்மிட்டி பகுதியில் 15500 அடி உயரத்தில் அமைந்துள்ள தபல் அலுவலகம்."
Q19. PIN CODE என்ற வார்த்தையில் PIN என்பது...
POSTAL INDEX NUMBER.
Q20. PIN CODE என்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டது?
15.8.1972.
Q21. PIN CODE-ல் எத்தனை எண்கள் உள்ளன? அவை குறிப்பது என்ன?
"ஆறு எண்களைக் கொண்டது.
முதல் எண் மண்டலத்தையும் (Zone), இரண்டாவது எண் அந்த மண்டலத்தின் எந்த பிரிவு (Sub Zone), மூன்றாவது எண் தபால் பிரிக்கப்படும் பகுதி (Sorting District), மற்ற மூன்று எண்கள் குறிப்பிட்ட தபால் அலுவலகத்தையும் (Delivery Post Office) குறிக்கிறது."
Q22. தமிழ் நாட்டு பின் குறியீட்டின் (PIN CODE) முதல் எண் என்ன?
6
Q23. "பின்கோடு (Pin Code) முறையில் தபால் பிரிப்பதற்காக எத்தனை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?"
"மண்டல எண். பகுதிகள்
1 டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், சந்திகார்.
2 உத்திர பிரதேசம், உத்தர காண்ட்
3 ராஜஸ்தான், குஜராத், டாமன், டையூ, நாசர் ஹவேலி.
4 சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கோவா.
5 ஆந்திரப் பிரதேசம், கர் நாடகம், யாணம் (புதுச்சேரி).
6 கேரளா, தமிழ் நாடு, புதுச்சேரி, லட்சத்தீவுகள்
7 மேற்கு வங்காளம், ஒடிசா, அஸ்ஸாம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா.
8 பீஹார், ஜார்க்கண்ட்"
Q24. நம் நாட்டில் தபால் துறை வளர்ச்சியின் காலக்கிரமம் (Time Line) என்ன?
"1.1837 - தபால் அலுவலகச் சட்டம் XVII மூலம் கிழக்கிந்திய கம்பெனியின் எல்லைக்குள் தபால் விநியோகத்தை அபிவிருத்தி செய்ய கவர்னர் ஜெனரலுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.
2.ஜூலை 1852 : ""ஷிண்டே டாக்"" முதல் தபால் முத்திரை (Postage Stamp) ஒருங்கிணைந்த இந்தியாவின் சிந்து மாகாணம், கராச்சியால் வெளியிடப்பட்ட து.
3.ஆகஸ்ட் 1854 :
1. அகில இந்திய தபால் முத்திரை (Postage Stamp) வெளியிடப்பட்ட து.
2. தபால் துறை உருவாக்கப்பட்டது.
4. 1880 : பணம் பட்டுவாடா சேவை - Money Order- தொடங்கப்பட்ட து.
5. 1882 : அஞ்சலக சேமிப்பு முறை துவங்கப்பட்டது.
6. 1884 : காப்பீட்டு தபால் சேவை - Insured Postal - தொடங்கப்பட்டது.
7. 1907 : ரயில்வே மெயில் சர்வீஸ் துவங்கப்பட்டது.
8. 1911 : விமான அஞ்சல் சேவை - முதன்முதலாக அலகாபாத்திலிருந்து நைனி வரை விமானம் மூலம் தபால் எடுத்துச் செல்லப்பட்டது.
9. 1972 : 15.8.1972 அஞ்சல் குறியீடு எண் (Postal Index Number) முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
10. 1.8.1986 : துரித அஞ்சல் சேவை - Speed Post - துவக்கப்பட்டது.
11. ஆகஸ்ட் 1994 : போஸ்ட் ஷாப்பி - Post Shoppe - துவங்கப்பட்டது.
12. 1.3.1996 : மீடியா போஸ்ட் - Media Post - அறிமுகம்.
13. ஆகஸ்ட் 1998 : சேட்டலைட் போஸ்ட் - Satellite Post - துவங்கப்பட்டது.
14. 1.3.1999 : எக்ஸ்ப்ரஸ் போஸ்ட் - Express Post.
15. ஆகஸ்ட் 1999 : டாட்டா போஸ்ட் - Data Post.
16. செப்டம்பர் 2000 : ரிடெய்ல் போஸ்ட் - Retail Post."
Q25. "பிஷப் முத்திரை" (BISHOP MARK) என்பது என்ன?
"1661ல் இங்கிலாந்தின் ஹென்றி பிஷப் என்பவர் முதன் முதலாக தபால் முத்திரை பயனற்றதாக (Cancellation) செய்யும் முத்திரை (அச்சு) பயன்படுத்தியது."
Q26. "சர்வதேச அளவில் தபால் துறையில் ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றத்துக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு எது?"
"உலகளாவிய அஞ்சல் குழுமம் - Universal Postal Union - அக்டோபர் 1874ல் துவங்கப்பட்ட இந்த அமைப்பின் தலை நகரம் - பெர்ன், ஸ்விட்சர்லாந்து. சுமார் 188 அங்கத்தினர் நாடுகளை கொண்ட இந்த அமைப்பு, தற்சமயம் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பிரத்தியேக அங்கமாக- Special Agency செயல்படுகிறது."
Q27. உலகில் முதன்முதலில் எங்கு விமானம் மூலம் அஞ்சல் பைகள் இறக்கப்பட்டன?
"18.2.1911 அன்று அலகாபாத்திலிருந்து 18 கி.மீ. தொலைவிலிருக்கும் நைனி ரயில் நிலையத்திற்கு 15 கிலோ எடை கொண்ட ஒரு அஞ்சல் பை விமானம் மூலம் எடுத்துச் சென்று போடப்பட்டது. ஃப்ரெஞ்ச் அலியேட்டர் விமானத்தை ஹென்றி பிக்கெட் என்ற விமானி ஓட்டிச் சென்றார்."
Q28. தபால் முத்திரை சேகரிப்பு (Stamp Collection) எவ்வாறு அழைக்கப்படுகிறது?
PHILATELY - ஃபிலாட்டெலி.
Q29. "நம் நாட்டில் முதன்முதலாக தபால் முத்திரை கண்காட்சி (Philately Exhibition) நடத்தப்பட்டது?"
ASIANA 77 - 1977ல் பெங்களூரில் முதன் முதலில் சர்வ தேச அளவிலான தபால் முத்திரை கண்காட்சி நடைபெற்றது.
Q30. "தபால் முத்திரை சேகரிப்பில் (STAMP COLLECTION) உலகளவில் மேதை (LEGEND) என அழைக்கப்படுபவர் யார்?"
ஃபிலிப் வோன் ஃபெராரி - PHILIP VAN FERRARI - பாரீஸ், ஃப்ரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்.
Q31. உலகின் முதல் ஒட்டக்கூடிய தபால் முத்திரை எது?
"பென்னி ப்ளாக் -PENNY BLACK - 1840 - விக்டோரியா ராணி படத்துடன் கூடிய, 1 பென்னி (PENNY) மதிப்பு கொண்ட இங்கிலாந்தின் தபால் முத்திரை.
இதற்கு பிறகு வந்தது ""இரண்டு பென்னி ப்ளாக்"" (TWO PENNY BLACK)."
Q32. உலகின் முதல் மூவர்ண ஒட்டக்கூடிய தபால் முத்திரை எது?
பாசெல் டௌ - - சுவிட்சர்லாந்து - 1.7.1845.
Q33. உலகின் மிக அரிதான தபால் முத்திரைகள் (RAREST STAMPS) குறிப்பிடுக.
"1. ட்ரெஸ்கில்லிங் எல்லோ- TRESSKILLING YELLOW : 1855 - ஸ்வீடன். இதன் ஒரே ஒரு முத்திரை (STAMP) மட்டும் உலகில் இருப்பதாகத் தெரிகிறது. உலகிலேயே மிக அதிக விலைக்கு விற்கப்பட்டது.
2. போஸ்ட் ஆஃபீஸ் - POST OFFICE : மொரிஷியஸ் - 21.09.1847 - ஒரு பென்னி (PENNY).
3. பிரிட்டிஷ் கயானா 1C மஜெந்தா- BRITISH GUYANA 1 C MAJENTA : 1856 - கயானா - இதன் ஒரே ஒரு முத்திரை மட்டும் உலகில் நிலவுவதாகத் தெரிகிறது.
4. புல்ஸ் ஐ - BULLS EYE : ப்ரேசில் - 1843.
5. இஸட் க்ரில்- Z GRILL : 1860 - அமெரிக்கா.
6. ஒன் கௌசர் ப்ளாக் - ONE KAUZER BLACK : ஜெர்மனியின் முதல் தபால் முத்திரை - 1.11.1849.
7. இன்வெர்டட் ஹெட் ஃபோர் அனாஸ் - INVERTED HEAD FOUR ANNAS : இந்தியாவின் மிகவும் புகழ் பெற்ற தபால் முத்திரை - 1854ல் வெளியிடப்பட்ட உலகின் முதல் பல வண்ண தபால் முத்திரை - இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால், இங்கிலாந்து அரசரின் படம் (தலை மட்டும்) தவறுதலாக தலைகீழாக அச்சடிக்கப்பட்டிருந்தது.
8. இன்வெர்டட் ஜென்னி - INVERTED JENNY : 1918 - மதிப்பு 24 சென்ட் - USA - இதில் தவறுதலாக விமானத்தின் படம் தலைகீழாக அச்சடிக்கப்பட்டுள்ளது."
Q34. அஞ்சல் குறியீடு (POSTAL INDEX) எண் முதலில் எங்கு பயன்படுத்தப்பட்டது?
ஒட்டாவா ஆண்டோரியோ, கனடா - 1971.
Q35. சராசரி மனிதர்களில் ஒருவர் முதன்முதலில் தபால் முத்திரையில் இடம் பெற்றது எப்போது?
பென்ஞ்சமின்ஃப்ராங்க்ளின் - 1847 - அமெரிக்கா.
Q36. "எந்த நாட்டின் தபால் முத்திரைகள் (STAMP) விலை உயர்ந்த கற்கள் - வைரம், மாணிக்கம், அமுதக்கல் வடிவில் அமைக்கப்பட்டிருந்தன?"
ஆஸ்திரேலியா 1995 - 1996.
Q37. தூதஞ்சல் சேவை - COURIER SERVICE - எங்கு எப்போது துவங்கப்பட்டது?
"1852ல் அமெரிக்காவில் வெல்ஃபார்கோ ""WELLFARGO"" என்ற நிறுவனம் பாதுகாப்பு ராணுவ ரகசிய ஆவணங்களை எடுத்துச்செல்ல தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து குதிரை மூலம் தூதஞ்சல் சேவை PONY EXPRESS - என்ற பெயரில் 1860ல் தொடங்கியது."
Q38. உலகில் எந்த தபால் முத்திரை மிக விலை உயர்ந்ததாக கருதப்படுகிறது?
"ட்ரெஸ்கில்லிங் எல்லோ - TRESSKILLING YELLOW - ஸ்வீடன் நாட்டின் இந்த அரிதான முத்திரை 2010ல் 23 லட்சம் டாலருக்கு விற்கப்படுகிறது."
Q39. "உலகின் தலை சிறந்த தூதஞ்சல் சேவை நிறுவனங்கள் - COURIER SERVICE COMPANIES எவை?"
"1. UPS - UNITED PARCEL SERVICE : 28.8.1907 அன்று JIM CASEY மற்றும் CLAUDE RYAN என்பவர்களால் SEATTLE, WASHINGTON, அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. உலகின் பல நாடுகளில் இயங்கும் சொந்த விமானங்களைக் கொண்ட, மிகப்பெரிய நிறுவனம்.
2. FEDEX - FEDERAL EXPRESS : 1971ல் ஃப்ரெடரிக் ஸ்மித் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் அமெரிக்காவின் டென்னெல்ஸி மாகாணத்திலிருந்து இயங்குகிறது. பல சொந்த விமானங்களைக் கொண்டு, உலகின் பல்வேறு நாடுகளில் இயங்கும் மிகப்பெரிய தூதஞ்சல் நிறுவனம்.
3. DHL : 1962 BONN, GERMANY DALSEY, HILL BLOM மற்றும் LYNN என்பவர்களால் தொடங்கப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளில், சொந்த விமானங்களுடன் இயங்கும் மிகப்பெரிய நிறுவனம்.
4. BLUE DART : 1983 - இது ஒரு இந்திய நிறுவனம். KUSHROO DUBASH, CLYDE COOPER மற்றும் TUSHAR JAIN ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்தி நிறுவனம் மும்பையை தலை நகராகக் கொண்டு, பல நாடுகளில் சொந்த விமானங்களைக் கொண்டு இயங்கும் ஒரு முன்னணி நிறுவனம்."
Q40. MINT STAMP என்பது என்ன?
உபயோகப்படுத்தப்படாத புது முத்திரைகள்.
Q41. "இங்கிலாந்து தபால் முத்திரைகளில் வெளிவந்த முதல் வெளி நாட்டவர் உருவம் எது?"
மகாத்மா காந்தி ( நம் நாட்டு தபால் முத்திரைகளில் வெளிவந்த முதல் இந்தியரும் இவரே).
Q42. உலகில் எங்கு நீருக்கடியில் ஒரு அஞ்சல் அலுவலகம் இயங்குகிறது?
ஹைட்லே தீவு, வனுவாட்டு.
Q43. "ஒரு முத்திரை தாளிலிருந்து ஒரு முத்திரையைக் கிழித்து எடுப்பதற்கு வசதியாக சிறுசிறு துளைகள் போடப்படும் வசதி எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?"
1857 - USA - அமெரிக்கா.
Q44. "எந்த நாடு பிரபலமான நகைச்சுவை காமிக் கேலிச்சித்திரங்களை வைத்து தபால் தலைகளை வெளியிட்டது?"
இங்கிலாந்து - 18/7/1999.
Q45. "கிறிஸ்துமஸ் பண்டிகையை போற்றும் வகையில் முதன்முதலில் தபால் தலைகள் வெளியிட்ட நாடு எது?"
ஆஸ்திரேலியா 1937 - ஒரு ரோஜாப்பூ மற்றும் ஆங்கில ராசிகள் (Zodiac Signs) படங்கள் கொண்டதாக இருந்தது.
Q46. "தொலைபேசி கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்பு தொலை தொடர்பு எதன் மூலம் நடத்தப்பட்டது?"
"தந்தி என்றழைக்கப்பட்ட, கம்பிகளின் மூலம், குறிப்பிட்ட குறியீடுகள் மூலம், தொலை தொடர்பு நடத்தப்பட்டது.
இம்முறையை 1837ல் கண்டுபிடித்தவர் சாமுவேல் மோர்ஸ் என்பவரு. அதனால் இந்த முறையை ""மோர்ஸ் தந்தி முறை"" என்றழைத்தனர்."
Q47. மோர்ஸ் தந்தி முறை என்பது என்ன?
"இந்த முறையில், ஒரு சிறு பிரத்தியேக உலோக கருவி மூலம், புள்ளி (dot) மற்றும் சிறு கோடுகள் (dash) கொண்ட குறியீடுகள் மூலம் தகவல்கள் அனுப்பப்பட்டது. இது ஆங்கில எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. ஒரு புள்ளி அதைத் தொடர்ந்து ஒரு சிறு கோடு (. -) A என்ற எழுத்தைக் குறிக்கும். இவ்வாறாக, புள்ளியையும் கோடுகளையும் பல வழிகளில் இணைத்து, 26 ஆங்கில எழுத்துக்களும், ஒன்று முதல் பூஜ்யம் (1-0) வரையும் வடிவமைக்கப்பட்டன. இதன் அடிப்படையில் ஒரு இடத்திலிருந்து அனுப்பப்படும் செய்தியை, அடுத்த முனையில் பெறுபவர், இந்த குறியீடுகளை ஒரு காகிதத்தில் எழுதி பிறகு வார்த்தைகளை உருவாக்கி, செய்தியை முழுமையாக்கி உரியவருக்கு கொடுத்தனுப்புவார். காலப்போக்கில் இதையே தட்டச்சு மூலம் வார்த்தைகளாகவே மின்னணு மூலம் அனுப்பி வந்தனர். தற்சமயம் கைபேசி தொலை தொடர்பு அதிகரித்துவிட்ட நிலையில் தந்தி மூலம் செய்தி அனுப்பும் முறை 2014ல் முழுவதுமாக நிறுத்தப்பட்டு விட்டது. "
Q48. மோர்ஸ் குறியீடுகள் மூலம் ஆங்கில எழுத்துக்கள் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன?
" A ● — ;
B —●●●;
C —●—● ;
D —●●;
E ● ;
F —●●—● ;
G ——● ;
H ●●●● ;
I ●● ;
J ● ——— ;
K —●— ;
L ●—●● ;
M —— ;
N — ● ;
O ——— ;
P ●——● ;
Q ——●— ;
R ●—● ;
S ●●● ;
T — ;
U ●●— ;
V●●●— ;
W ●—— ;
X —●●— ;
Y—●—— ;
Z ——●— ;
1 ●————;
2 ●●——— ;
3 ●●●—— ;
4 ●●●●— ;
5 ●●●●●;
6 —●●●●;
7 ——●●●;
8 ———●●;
9 ————● ;
0 —————;"
Q49. மோர்ஸ் தந்தி குறியீடு முறை எப்போது எங்கு நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது?
"1851- கிழக்கிந்திய கம்பெனியால் கொல்கத்தா - விற்கும் டைமண்ட் துறைமுகத்துக்கும் இடையில் அறிமுகப்படுத்தப்பட்டது."
Q50. இந்த குறியீடுகளின் மூலம் MAN 389 என்பதை எவ்வாறு எழுதலாம்?
M —— A ●— N —● 3 ●●●—— 8 ———●● 9 ————●
Q51. தொலைபேசியை கண்டுபிடித்தவர் யார்?
கிரஹாம் பெல் - 1876. இங்கிலாந்தின் எடின்பர்க்கில் பிறந்து கனடாவில் உயிர் நீத்தார்.
Q52. கிரஹாம்பெல் தொலைபேசியைக் கண்டுபிடித்தவுடன் பேசிய வார்த்தைகள் என்ன?
திரு. வாட்சன் அவர்களே, இங்கே வாருங்கள், உங்களை பார்க்க விரும்புகிறேன் - Mr. Watson, Come here, I want to see you.
Q53. நம் நாட்டில் தொலைபேசி தொடர்பு முறையை ஏற்படுத்தியவர்கள் யார்?
"1880ல் ஓரியண்டல் தொலைபேசி நிறுவனம், இங்கிலாந்து, தொலை பேசி தொடர்பு முறையை கொல்கத்தாவில் தொடங்கியது.
பிறகு 1881ல் தொலைபேசி இணைப்புகள் சங்கம அலுவலகம் (Telephone Exchange) கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது."
Q54. "இந்திய தொலைபேசி வரலாற்றில் எந்த நாள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகக் கருதப்படுகிறது?"
"28.1.1882. இந்த நாளில், ஓரியண்டல் தொலைபேசி நிறுவனம், இங்கிலாந்து, மும்பை, சென்னை, அஹமதாபாத் ஆகிய இடங்களில் தொலைபேசி சங்கம தொடர்பகம் (Telepohone Exchange) தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது."
Q55. "நம் நாடில் முதன் முதலில் தானியங்கி தொலைபேசி சங்கம தொடர்பகம் - Automatic Telephone Exchange எங்கு தொடங்கப்பட்டது?"
ஷிம்லா - 1914.
Q56. "நம் நாட்டில் முதன் முதலில் எங்கு எப்போது வாடிக்கையாளர் நேரடி தொலை தொடர்பு - STD Subscriber Trunk Dialling - முறை ஏற்படுத்தப்பட்டது?"
1960 - கான்பூர் லக்னௌ இடையில்.
Q57. கைபேசி (Mobile) தொடர்பு முறை, (வர்த்தக ரீதியல்லாமல்) எப்போது துவங்கப்பட்டது?
1985 - டெல்லியில்.
Q58. வர்த்தக ரீதியாக கைபேசி தொடர்பு முறை எப்போது துவங்கப்பட்டது?
"ஆகஸ்ட் 1995ல் கொல்கத்தாவில். அப்போதைய மேற்கு வங்க முதல்வர் ஜோதி பாசு, முதல் அழைப்பை அப்போதைய மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் சுக்ராமுடன் ஏற்படுத்தி, தொடங்கி வைத்தார்."
Q59. கணினி மூலம் வலை தள தொடர்பு (Internet) எப்போது துவங்கப்பட்டது?
15.8.1995.
Q60. இந்திய தொலை தொடர்பு நிர்வாக அமைப்பு எவ்வாறு இருந்தது?
"சுதந்திரத்தைத் தொடர்ந்து, தொலைபேசி தொடர்பு, அஞ்சல் மற்றும் தொலைதொடர்பு துறையாக (Department of Postal and Telecommunications), தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கியது. (Ministry of Information & Broad casting). 1975ல் தொலைதொடர்பு (Telecommunications) ஒரு தனி துறையாக (Department of Telecommunications) அமைக்கப்பட்டது."
Q61. "தொலைதொடர்பு துறையை மேலும் மேம்படுத்த 1975க்குப் பின் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?"
"தொலைதொடர்பு (Telecommunications) துறையை பொதுத்துறை நிறுவனங்களாக (Public Sector Undertaking) ஒரு பெரு நிறுவன அமைப்பாக (Corporate Sector) மாற்றப்பட்டது.
1985 - MTNL - Mahanagar Telephone Nigam Ltd., மஹா நகர் டெலிபோன் நிகாம் லிமிடெட். டெல்லி மற்றும் மும்பை தொலைபேசி சுற்றுப்பகுதியை மேலாண்மை செய்ய உருவாக்கப்பட்டது.
2001 - BSNL - Bharat Sanchar Nigam Ltd., பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட், இந்தியாவின் (மும்பை, டெல்லி சுற்றுகளைத் தவிர்த்து) இதர பகுதிகளில் உள்ள தொலைபேசி தொடர்புகளை மேலாண்மை செய்வதற்கு உருவாக்கப்பட்டது.
இதற்குப் பிறகு தகவல் தொடர்புகளை மேம்படுத்த செயற்கைக் கோள்கள் (Satellite) விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், தாராளமயமாக்கல் கொள்கையின் அடிப்படையில் தனியார் பங்கேற்பும் அனுமதிக்கப்பட்டது. அதன்மூலம் பாரதி, டாடா, ரிலையன்ஸ், ஹட்ச் போன்ற பெரிய பெரு நிறுவனங்களும் தொலை தொடர்பு துறையில் பங்கேற்று இன்றைய உலக அளவில் தகவல் தொலைத்தொடர்பு துறையில் இரண்டாவது இடத்தில் நம் நாடு உள்ளது."
.
Q62. உலகின் மிகப் பெரிய கைப்பேசி தொடர்பு நிறுவனங்கள் எவை?
ORANGE ஆரஞ்ச் மற்றும் VODAFONE வோடாஃபோன்.
Q63. உலகின் மிகப் பெரிய கைப்பேசி தயாரிப்பாளர்கள் யார்?
"நோக்கியா - NOKIA - ஃபின்லாந்து நாட்டில் உள்ள ஒரு ஆற்றின் பெயர். 1865ல் தொடங்கப்பட்ட பாகங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனம்.
இதன் கைப்பேசி தயாரிப்பு பகுதியை மைக்ரோசாஃப்ட் (MICROSOFT) நிறுவனம் 2014ல் வாங்கிக்கொண்டது."
Q64. கைப்பேசிகள் என்னென்ன தொழில் நுட்பங்களில் இயங்குகின்றன?
"1. GSM - Global System for Mobile Phones.
2. COMA - Code Division Mobile Access.
3. WLL - Wireless Local Loop.
இவை அடிப்படை தொழில் நுட்பம். "
Q65. தரை வழி தொலைபேசி - LANDLINE - வசதி அளிப்பதில் முன்னணியில் இருப்பது....
MTNL (டெல்லி மற்றும் மும்பை) மற்றும் BSNL (இதர பகுதிகள்).
Q66. BSNL - அளிக்கும் சேவைகள் யாவை?
"""Bfone"" - Fixed Wireless Phone.
""TARANG"" - Wireless in local loop phone.
""Cell One"" - GSM Mobile.
""Excel"" - Prepaid GSM Mobile.
""Sancharnet"" - Internt Serives.
""DATA One""- Broadband Internet Serivece"""
Q67. MTNL - அளிக்கும் சேவைகளின் பெயர்கள் என்ன?
"""DOLPHIN"" - Land Line Phones.
""GARUDA"" - Wireless Local Loop.
""TRIBAND"" - Internet Serivess."
Q68. தொலை தொடர்பு உபகரணங்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனம் எது?
"இந்திய தொலைபேசி தொழிற்சாலை - Indian Telephone Industries - பெங்களூரு. இது ஒரு பொதுத்துறை நிறுவனம் - 1948ல் துவங்கப்பட்டது. இதற்கு நைனி, ராய் பரேலி, மானக்பூர் (உ.பி)யில் தொழிற்சாலைகள் உள்ளன."
Q69. "தொலைதொடர்பு துறை சம்பந்தப்பட்ட ஒரு பொதுத்துறை நிறுவனத்தை TATA குழுமம் வாங்கிக்கொண்டது. அது என்ன?"
"VSNL - VIDESH SANCHAR NIGAM LTD., விதேஷ் சஞ்சார் நிகாம் லிமிடெட். 1986ல் தொடங்கப்பட்ட இந்த பொதுத்துறை நிறுவனம், வெளி நாடு தொலைபேசி அழைப்புகளை இணைக்கும் மையமாக விளங்கியது.
இதை குழுமம் 2002 எடுத்துக்கொண்டு TATA INDICOM என்ற பெயரில் இயங்குகிறது."
Q70. "தொலை தொடர்பு துறையில் தனியாகும் பங்கு பெறும் நிலையில், இத்துறையில் கட்டுப்பாடும் கண்காணிப்பும் இருக்க அமைக்கப்பட அமைப்பு எது?"
"TRAI - Telecom Regulatory Authority of India - தொலைதொடர்பு கட்டுப்பாட்டு அதிகார அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் மூலம், தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு உரிமம் அளித்தல், கட்டணங்களை சீர்படுத்துதல், நிறுவனங்களுக்கு சமமான பணி பங்களித்தல் போன்றவை கவனிக்கப்படுகின்றன."
Q71. "தொலை தொடர்பு சம்பந்தப்பட்ட சர்ச்சைகளை விவாதித்து முடிவு எடுக்கும் அமைப்பு எது?"
TDSAT - Telecom Disputes Settlement and Appellate Tribunal.
Q72. PROJECT ARROW - அம்பு திட்டம் என்பது என்ன?
அஞ்சல் அலுவலகங்களை நவீன மயமாக்குதல், ஏப்ரல் 2008 முதல் அமல்படுத்தப்பட்டது.
Q73. இந்திய தபால் தலைகளில், வாழும் இந்தியர் ஒருவர் எப்போது பிரசுரிக்கப்பட்டார்?
ந. திருப்பதி, ஹவில்தார் மேஜர், தேனி, தமிழ் நாடு.
Q74. "அஞ்சலகங்கள் மூலம் பிற நாடுகளுக்கு பணம் அனுப்பும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?"
MOVIDESH - மோவிதேஷ்.
Q75. 1995ல் கொல்கத்தாவில் கைபேசியை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?
"மொபைல் நெட்" (Mobile Net) என்ற பெயரில் மோடி டெலஸ்ட்ரா (Modi Telestra)
Q76. கைப்பேசிகள் ஏன் "Cellular Phone" என அழைக்கப்படுகின்றன?
ஏனெனில், கைபேசிகள் ஒரு குறிப்பிட்ட ரேடியோ வலைகளுக்குள் (Radio Cell) இயங்குகின்றன.