Khub.info Learn TNPSC exam and online pratice

"மனித வள மேம்பாடு: MINISTRY OF HUMAN RESOURCES கல்வி - EDUCATION:"

Q1. "2011 ஜனத்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு நம் நாட்டின் கல்வியறிவு சதவிகிதம் என்ன?"
74.03%

Q2. "இந்திய மா நிலங்களில் எழுத்தறிவு அதிகம் மற்றும் குறைவாக உள்ள மாநிலங்கள் எது?"
கேரளா 93.91% மற்றும் பீஹார் 63.82%
Q3. தமிழ் நாட்டின் எழுத்தறிவு சதவிகிதம் என்ன?
80.33%
Q4. "இந்தியாவின் எந்த மாவட்டம்/மா நிலம் முழுவதும் கல்வியறிவு பெற்றதாக அறிவிக்கப்பட்ட து?"
எர்ணாகுளம் மாவட்டம், கேரளா.
Q5. கல்வி எந்த மத்திய அமைச்சகத்தின் கீழ் மேலாண்மை செய்யப்படுகிறது?
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (HUMAN RESOURCE MINISTERY).
Q6. 2015 நிலையில் (பிப்ரவரி) மனிதவள மேம்பாடு அமைச்சராக இருப்பவர்?
ஸ்மிருதி ஜுபின் இரானி. (மாற்றத்துக்குரியது)
Q7. நம் நாட்டில் என்ன முறையான கல்வி திட்டம் அனுசரிக்கப்படுகிறது?
"1. 10+2+3 = 12 வருட பள்ளி + 3 வருட கல்லூரி படிப்பு.
2. 10+2+4 = 12 வருட பள்ளி + 4 வருட கல்லூரி படிப்பு.
3. 10+2+5 = 12 வருட பள்ளி + 5 வருட கல்லூரி படிப்பு.
12 வருட பள்ளிப்படிப்புக்குப்பின், 3 வருட கல்லூரி கல்வி, (B.A., B.Sc., B.Com, etc.,), நான்கு வருட கல்லூரி கல்வி (B.E., B.Tech, etc., ) மற்றும் 5 வருட கல்லூரி கல்வி (MBBS, LAW, etc) ஆகியவை. இவைகளுக்கு மேல் முதுகலை, முனைவர் போன்ற தொடர் கல்விமுறையும் உள்ளது."
Q8. பள்ளி படிப்பை மேலாண்மை செய்யும் மத்திய அமைப்புகள் யாவை?
"1. CBSE : Central Board of SEcondary Education - 1962ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, ஒரு சுய நிதி அமைப்பாக ஒரு தலைவர் (Chairman) கீழ் இயங்குகிறது. 10+2 வரையிலான பாடத்திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை வகுப்பது இதன் முக்கிய பணி. டெல்லியை தலைமையாகவும் மண்டல அளவில் சென்னை, அஜ்மீர், குவஹாத்தி, பஞ்ச்குலா, அலகாபாத் மற்றும் டெல்லியிலும் அலுவலகங்களைக் கொண்டு இயங்குகிறது.
2. ICSE : Indian Certificate of Secondary Education - இது ஒரு தனியார் அமைப்பு - இதன் மூலம் 10வது வரை ஆங்கில வழி அளிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து...
3. ISC - Indian School Certificate - 2 வருட பள்ளி மேல் படிப்பு. 11 மற்றும் 12ம் வகுப்பு ஆங்கில வழி உயர் கல்வி.
இதில் இரண்டு (2) மற்றும் மூன்று(3) வழி பள்ளி கல்வியும், அரசாங்கம் அல்லாத - பள்ளி கல்வி குழுமம் ஒன்றால் நடத்தப்படுகிறது. (Council for the Indian School Certificate Delhi - 1958) இந்த கல்விமுறை மிகப்பெரிய பொதுப்பள்ளிகள் (Public Schools) - டூன் பள்ளி, டெஹ்ராடூன்; பிஷப் காட்டன் பள்ளி, பெங்களூரு - போன்ற பள்ளிகளால் மட்டும் கடைப்பிடிக்கப்படுகிறது.
4. மாநில வழி கல்வி - STATE BOARD : இந்த வழி 10+2 பள்ளி கல்வி முறை அந்தந்த மாநிலங்களால் வகுக்கப்பட்டு, அரசாங்க மற்றும் அரசாங்க நிதி உதவி பெறும் பள்ளிகளால் கடைபிடிக்கப்படுகிறது.
CBSE மற்றும் STATE BOARD கல்வி முறைகளே அதிகமாக நம்நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது."
Q9. பள்ளிப்படிப்பிற்கு பிறகு கல்வி தொடர வழிகள் என்ன?
"கலைக்கல்லூரிகள் (Arts Colleges), பல தொழில் நுணுக்க இடை நிலை கல்லூரிகள் (Polytechnics), பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் (Engineering Colleges & Universities), சட்டக் கல்லூரிகள் (Law Colleges & Universities), வணிகவியல் மேலாண்மை படிப்புகள் (CA, ICWA & ACS), மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் (Medical, Dental, Nursing, Physiotherapy, etc.,) என்று பல பல வகை படிப்புகளும், கல்லூரிகள், பல்கலைகழகங்கள், இவற்றிற்கும் மேலாக வாய்ப்புகளும், நிதியுதவிகளும் கிடைக்கின்றன."
Q10. பல்கலை கழகங்களை மேலாண்மை செய்யும் அமைப்பு எது?
"பல்கலைக் கழக மானியக்குழு - UNIVERSITY GRANTS COMMISSION - இந்த அமைப்பு, கல்வித்துறை, மனித வள மேம்பாடு அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. அரசாங்க சட்ட த்தின் (ACT) மூலம் நவம்பர் 1956ல் உருவாக்கப்பட்ட இதன் தலைமையகம் டெல்லியில் உள்ளது. இதன் நிர்வாகத்தை ஒரு தலைவர், உப தலைவர், செயலாளர் மற்றும் சில நிர்வாக உறுப்பினர்களும் சேர்த்து கவனித்து கொள்கின்றனர். இதன் மண்டல அலுவலகங்கள் ஹைதராபாத், பூனே, போபால், டெல்லி, குவஹாத்தி ஆகிய இடங்களில் இயங்குகின்றன. பல்கலை கழகங்களுக்கு நடைமுறை திட்டங்கள் தீட்டுவது, நிதியுதவிகள் பகிர்ந்தளிப்பது, கண்காணிப்பு போன்ற பணிகளை இந்த அமைப்பு கவனித்துக் கொள்கிறது."
Q11. "பல்கலைக் கழக மானியக்குழுவின் கீழ் இயங்கும் சுதந்திரமாக இயங்கும் கல்வி மேலாண்மை அமைப்புகள் யாவை?"
"1. AICTE : ALL INDIA COUNCIL FOR TECHNICAL EDUCATION - அகில இந்திய தொழிற் நுட்பக் கல்வி கழகம் - 1945ல் உருவான ஆலோசனைக் குழுவிற்கு 1987 ஒரு சட்ட்த்தின் மூலம் சட்டபூர்வமான (Statutory) அமைப்பாக மாற்றப்பட்ட து. நம் நாட்டில் நட த்தப்படும் தொழிற் நுட்ப கல்வி அனைத்து விஷயங்களையும் மேலாண்மை செய்யும் ஒரு அமைப்பு. டெல்லியை தலை நகராக க் கொண்டு, மண்டல அலுவலகங்கள் - திருவன்ந்தபுரம், கொல்கத்தா, சென்னை, கான்பூர், மும்பை, சந்திகர், குவஹாத்தி, போபால், பெங்களூரு, ஹைதராபாத், குர்காவ்ன் ஆகிய இடங்களில் இயங்குகின்றன.
2. DISTANCE EDUCATIONAL COUNCIL - தொலைக்கல்வி சபை - இந்திரா காந்தி தேசிய திறந்த வெளிப்பல்கலைக் கழகம் சட்டம் 1985ன் கீழ் தொடங்கப்பட்ட அமைப்பு, தொலைக்கல்வி மேலாண்மை செய்கிறது.
3. ICAR - INDIAN COUNCIL FOR AGRICULTURAL RESEARCH - இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் - 16.7.1929 அன்று தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, டெல்லியை தலைமையாக க் கொண்டு, நாட்டின் விவசாய ஆராய்ச்சிகளையும், நிறுவன்ங்களையும், மேலாண்மை செய்கிறது. இதன் கீழ் 4 பல்கலை கழக அந்தஸ்து பெற்ற கல்வி நிலையங்கள் (Deemed Universities), மற்றும் சில நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி திட்டம் மேலாண்மை மற்றும் உதவி மையங்களும் நாடெங்கும் இயங்குகின்றன.
4. BAR COUNCIL OF INDIA - இந்திய வழக்குரைஞர் சங்கம் - வழக்குரைஞர்கள் சட்டம் 1961ன் கீழ் அமைக்கப்பட்ட இந்த அமைப்பு, டெல்லியை தலைமையாக க் கொண்டு, வழக்குரைஞர்கள் நலன், நடவடிக்கை, சட்டக்கல்வி மேம்பாடு, சட்டசீர்திருத்தங்கள், ஏழை எளியோர், தாழ்த்தப்பட்டோர் சட்ட உதவி, மற்றும் இதர சம்பந்தப்பட்ட விஷயங்களை கவனித்துக் கொள்கிறது. இது ஒரு சட்டரீதியான அமைப்பு.
5. MEDICAL COUNCIL OF INDIA - இந்திய மருத்துவ சங்கம் - 1933ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு 1956ல் ஒரு சட்டரீதியான அமைப்பானது. மருத்துவப் பணி மற்றும் கல்வி சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் மேலாண்மை செய்கிறது. தலைமையகம், டெல்லி.
6. DENTAL COUNCIL OF INDIA - இந்திய பல் மருத்துவ கழகம் - பல் மருத்துவர்கள் சட்டம் 1948ன் கீழ் நிறுவப்பட்ட இந்த அமைப்பு, பல் மருத்துவம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் கவனித்துக் கொள்கிறது.
7. INDIAN NURSING COUNCIL - இந்திய செவிலியர் சங்கம் - இந்திய செவிலியர் சங்க சட்டம் 1947ன் கீழ் அமைக்கப்பட்ட இந்த அமைப்பு, செவிலியர் கல்வி மற்றும் பணி சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் கவனித்துக் கொள்கிறது."
Q12. "நம் நாட்டில் இயங்கும் உயர்கல்வி நிறுவனங்களின் கல்வித்தரம், வசதிகள், கட்டுமானம், பயிற்சி கூடங்கள், மற்றும் கல்வி கட்டணம் போன்றவற்றை கண்காணிக்க உருவாக்கப்பட்ட அமைப்பு எது?"
NAAC - National Assessment and Accreditation Council - தேசிய மதிப்பீடு மற்றும் அனுமதி சங்கம் - 1986ன் தேசிய கல்வி திட்டம் (National Education Policy 1986) அறிவுறுத்தலின் பேரில், 1994ம் ஆண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு பெங்களூரை தலைமையகமாக கொண்டு இயங்குகிறது.
Q13. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் யார்?
அபுல் கலாம் ஆஸாத் - 15.8.1947 - 22.1.1958.
Q14. நம் நாட்டின் கல்வி அமைச்சர்கள் யாவர்?
"கல்வி அமைச்சர்கள்:
வ.எண் பெயர் முதல் வரை
1. மவுலானா அபுல் கலாம் ஆஸாத் 15.08.1947 22.01.1958
2. கே.எல். மாலி 22.01.1958 31.08.1963
3. ஹுமாயூன் கபீர் 01.09.1963 21.11.1963
4. எம்.சி. சாக்ளா 21.11.1963 13.11.1966
5. ஃபக்ருதீன் அலி அஹமது 14.11.1966 13.03.1967
6. த்ரிகுணா சென் 16.03.1967 14.02.1969
7. V.K.R.V. ராவ் 14.02.1969 18.03.1971
8. சித்தார்த் சங்கர் ரே 18.03.1971 20.03.1972
9. S. நூருல் ஹசன் 24.03.1972 24.03.1977
10. ப்ரதாப் சந்திர சந்தர் 26.03.1977 28.07.1979
11. கரண் சிங் 30.07.1979 14.01.1980
12. B. சங்கரானந்த் 14.01.1980 17.10.1980
13. சங்கர் ராவ் சவான் 17.10.1980 08.08.1981
14. ஷீலா கவுல் 10.08.1981 31.12.1984
15. கே.சி. பந்த் 31.12.1984 25.09.1985 "
Q15.
"மனித வள மேம்பாடு அமைச்சர்கள் :
வ.எண் பெயர் முதல் வரை
1. P.V. நரசிம்மராவ் 26.09.1985 25.06.1988
2. P. ஷிவ் சங்கர் 25.06.1988 02.12.1989
3. V.P. சிங் 02.12.1989 10.11.1990
4. ராஜ் மங்கல் பாண்டே 21.11.1990 21.06.1991
5. அர்ஜுன் சிங் 23.06.1991 24.12.1994
6. P.V. நரசிம்மராவ் 25.12.1994 09.02.1995
7. மாதவ் ராவ் சிந்தியா 10.02.1995 17.01.1996
8. P.V. நரசிம்மராவ் 17.01.1996 16.05.1996
9. அடல் பிஹாரி வாஜ்பேயி 16.05.1996 01.06.1996
10. S.R. பொம்மை 05.06.1996 19.03.1998
11. முரளி மனோஹர் ஜோஷி 19.03.1998 21.05.2004
12. அர்ஜுன் சிங் 22.05.2004 22.05.2009
13. கபில் சிபல் 29.05.2009 29.10.2012
14. M.M. பல்லம் ராஜா 30.10.2012 26.05.2014
15. ஸ்மிரிதி இரானி 26.05.2014 -  5.7.2016 "
16. ப்ரகாஷ் ஜாவ்டேகர்  5.7.2016

Q16. இந்தியாவின் முதல் கல்லூரி (கலை) எது?
C M S கல்லூரி, கோட்டயம் - 1817.
Q17. நம் நாட்டின் மிக பழமையான பல்கலைக்கழகம் எது?
"பண்டைய காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகம். நவீன காலத்தில் கல்கத்தா பல்கலைக்கழகம். 24.1.1857ல் தொடங்கப்பட்ட து. இதே கால கட்ட த்தில் மெட் ராஸ் மற்றும் மும்பையிலும் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன.
கட்டுமான தொடக்கத் தேதியை வைத்து கொல்கத்தா பல்கலைக்கழகம் முதலாவதாக கருதப்படுகிறது."
Q18. நம் நாட்டின் முதல் தொழில் நுட்ப கல்லூரி எது?
"1847ல் தாம்சன் கட்டிட பொறியியல் கல்லூரி, ரூர்கி - 1949ல் இக்கல்லூரி ஒரு பல்கலைக் கழகமாக மாற்றப்பட்டு, 2001ல் IIT யாக உயர்த்தப்பட்டது."
Q19. நம் நாட்டின் முதல் மருத்துவ கல்லூரி எது?
"கொல்கத்தா மருத்துவ கல்லூரி - 28.1.1835 - வில்லியம் பெண்டிக் பிரபுவால் நிறுவப்பட்டது.
இரண்டாவதாக 2.2.1835ல், மெட் ராஸ் மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டது. இன்றைய இந்திய எல்லைக்குள் என்று எடுத்துக்கொண்டால், ஃப்ரெஞ்ச் அரசாங்கத்தால் நிறுவப்பட்ட பாண்டிச்சேரியிலுள்ள (இன்றைய ) மருத்துவ கல்லூரி, 1.1.1823 அன்று, தொடங்கப்பட்ட தால், இது முதல் மருத்துவ கல்லூரி ஆகிறது."
Q20. நம் நாட்டின் முதல் சட்டக் கல்லூரி எது?
"அரசாங்க சட்டக் கல்லூரி, பம்பாய் - 1855.
இரண்டாவதாக சென்னையில் 1891ல் தொடங்கப்பட்ட து."
Q21. "நம் நாட்டில் எந்த பல்கலைக் கழகம் முதன் முதலில் தொலைக்கல்வி முறையைத் தொடங்கியது?"
டெல்லி பல்கலைக் கழகம் - 1962.
Q22. உலகின் முதல் பல்கலைக் கழகம் என கருதப்படுகிறது?
University of Bologna - போலோக்னா பல்கலைக்கழகம், இத்தாலி - 1088ல் நிறுவப்பட்ட து.
Q23. உலகின் முதல் பல் மருத்துவக் கல்லூரி எது?
பால்டிமோர் பல் மருத்துவக் கல்லூரி, மேரிலாண்ட், அமெரிக்கா - 1840.
Q24. உலகின் முதல் மருத்துவக் கல்லூரி எது?
மருத்துவ மருந்துகள் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்த து. 1540ல் தொடங்கப்பட்டது.
Q25. "பார்வை இழந்தோருக்கான முதல் தொழில் நுட்பக் கல்லூரி தொடங்க எந்த நாடு திட்டம் தீட்டியுள்ளது?"
"இந்தியா. ஹைதராபாத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பாட திட்டங்களும், கணினி மென் பொருளும் தயாராக உள்ள நிலையில், சரியான இடத்தேர்வில் தாமதம். தேவ் நார் பவுண்டேஷன், BITS, பிலானி முனைவர்களின் கூட்டு முயற்சி."
Q26. "நம் நாட்டின் மிகச் சிறந்த, தரத்தில் உலக அளவில் மதிக்கப்படும் தொழிற் நுட்பக் கல்லூரிகள் எவை?"
"IITs - Indian Institute of Technology - இந்திய தொழில் நுட்ப நிறுவன கல்லூரிகள் - இந்த கல்வி நிறுவனங்கள் ""தொழிற் நுட்பக் கல்வி சட்டம் 1961""ன் கீழ் (Institutes of Technology Act 1961) இயங்குகின்றன. இதன் மூலம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாகக் கருதப்படுகின்றன. இந்த கல்வி நிறுவனங்கள் B.TEch., M.Tech., M.S., Ph.D., போன்ற உயர் கல்விகள் தொடர வகை செய்யப்பட்டுள்ளன."
Q27. "IITs எனப்படும் உயர் தர தொழிற் நுட்பக் கல்லூரி நிறுவனங்கள் முதலில் எங்கு துவங்கப்பட்டன?"
"1. கரக்பூர், மேற்கு வங்காளம் - 1951.
2. மும்பை, மகாராஷ்டிரா - 1958.
3. சென்னை, தமிழ் நாடு - 1959.
4. கான்பூர், உத்திரபிரதேசம் - 1959.
5. டெல்லி, தலை நகர் - 1961.
6. குவஹாத்தி, அஸ்ஸாம் - 1994.
7. ரூர்கி, உத்தராகாண்ட் - 2001.
இவற்றுள் ரூர்கி IIT, 1847ல் தொடங்கப்பட்ட நம் நாட்டின் முதல் தொழிற் நுட்பக் கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது.
2008க்குப் பிறகு, 11வது திட்ட கமிஷனின் பரிந்துரையின் பேரில், மேலும் பல IIT கல்வி நிறுவனங்கள் நாட்டின் பல இடங்களில் தொடங்கப்பட்டுள்ளன."
Q28. நம் நாட்டில் 2015 நிலையில் இயங்கி வரும் IIT கல்வி நிறுவனங்கள் யாவை?
"1. கரக்பூர், மேற்கு வங்காளம் 1951
2. மும்பை, மகாராஷ்டிரா 1958
3. சென்னை, தமிழ் நாடு 1959
4. கான்பூர், உத்திரபிரதேசம் 1959
5. டெல்லி, தலை நகர் 1961
6. குவஹாத்தி, அஸ்ஸாம் 1994
7. ரூர்கி, உத்தராகாண்ட் 2001
8. புவனேஷ்வர், ஒடிசா 2008
9. காந்தி நகர், குஜராத் 2008
10. ஹைதராபாத், தெலங்கானா 2008
11. ஜோத்பூர், ராஜஸ்தான் 2008
12. பாட்னா, பீஹார் 2008
13. ரோபர், பஞ்சாப் 2008
14. இந்தூர், மத்திய பிரதேசம் 2009
15. மண்டி, ஹிமாச்சலப்பிரதேசம் 2009
16. வாரணாசி, உத்திரப்பிரதேசம் 2012
இவற்றை தவிர்த்து, ஜம்மு, ராய்ப்பூர் (சத்தீஸ்கர்), பஞ்சிம் (கோவா), திருப்பதி (ஆந்திர பிரதேசம்) மற்றும் பாலக்காடு (கேரளா) ஆகிய இடங்களிலும் IIT-கள் திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவை 2015க்கு பிறகு இயங்கக்கூடும்."
Q29. நம் நாட்டில் தொடங்கப்பட்ட முதல் IIT...
"கரக்பூர், மேற்கு வங்காளம் - 1951. இதற்கு முன்னால் இந்த இடம், சுதந்திர போராட்ட காலத்தில் கைதிகளை அடைத்து வைக்குமிடமாக இருந்த்து என்பது குறிப்பிடத்தக்கது."
Q30. IIT-க்களின் நிர்வாகத்தின் தலைவர் என கருதப்படுபவர்...
"குடியரசுத் தலைவர் - பதவியின் அடிப்படையில் ஒரு கௌரவ தலைவராகவும், இவருக்கு கீழ் IIT குழு (Council), மற்றும் நிர்வாகக் குழு கவர்னர்கள் (Board of Governors), இயக்குநர்கள், டீன்கள் (Deans) ஆகியோர் இயங்குகின்றனர்."
Q31. IIT - க்களின் சேர்ப்பு எவ்வாறு நடைபெறுகிறது?
"1. பட்டப்படிப்புக்கு (Graduate) - IIT - JEE (Joint Entrance Exams) என்ற தேர்வு பரீட்சை.
2. முதுகலை பட்டப்படிப்புக்கு (Post Graduation) GATE (Graduation Aptitude Test for Engineering) என்ற தேர்வு பரீட்சை."
Q32. தேசிய தொழிற் நுட்ப கல்வி நிறுவனங்கள் என்பன யாவை?
"ஆரம்ப காலத்தில் இவை மண்டல தொழிற் நுட்பக் கல்வி நிறுவன ங்களாக ( ) இருந்தன. 2002ல் இவை தேசிய தொழிற் நுட்பக் கல்வி நிறுவன ங்களாக ( ) மாற்றப்பட்டு, 2007 தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டன. மத்திய அரசாங்கத்தின் முழு நிதி உதவியுடன் இயங்குகின்றன."
Q33. "தேசிய தொழிற் நுட்ப கல்வி நிறுவனங்களின் சேர்க்கை எவ்வாறு நட த்தப் படுகிறது?"
"அகில இந்திய அளவில் நட த்தப்படும் - தேர்வு பரீட்சைகளின் மூலம் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் - நேர்காணல் முறையிலும்; கல்வி நிறுவன ங்கள் - தேர்வு பரீட்சைகள் மூலமாகவும் நடைபெறுகிறது."
Q34. "தேசிய தொழிற் நுட்ப கல்வி நிறுவனங்கள் (National Institute of Technology) அமைந்திருக்கும் இடங்கள் யாவை?"
"கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் அநேக கல்வி நிறுவனங்கள், முதலில் தொழில் நுட்பக் கல்லூரிகளாக இயங்கி கொண்டிருந்தவை. அவை தேசிய தொழிற் நுட்பக் கல்லூரிகளாக மாற்றப்பட்டன. தேசிய தொழிற்நுட்பக் கல்வி நிறுவனங்கள் அனைத்துமே தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாகக் கருதப்படுகின்றன. அதனால் இவை அனைத்துக்குமே குடியரசுத்தலைவர் ஒரு கௌரவ விருந்தாளி தலைவர் ஆகிறார். தேசிய தொழிற்நுட்பக் கல்வி நிறுவனங்கள் இயங்கும் இடங்கள் :
1. குருஷேத்ரா - ஹரியானா
2. கோழிக்கோடு - கேரளா
3. டெல்லி, தலை நகரம்
4. அகர் தாலா - திரிபுரா
5. துர்காபூர் - மே.வங்காளம்
6. கோவா
7. புதுச்சேரி
8. போப்பால் - ம.பிரதேசம்
9. ஜெய்ப்பூர் - ராஜஸ்தான்
10. அலஹாபாத் - உ.பிரதேசம்
11. மணிப்பூர்
12. ஷில்லாங், மேகாலயா
13. அஸ்ஸாம், மிசோரம்
14. திமாபூர், நாகாலாந்து
15. ஜலந்தர், பஞ்சாப்
16. ஜம்ஷெட்பூர், ஜார்கண்ட்
17. நாக்பூர், மகாராஷ்டிரா
18. பாட்னா, பீஹார்
19. ராய்ப்பூர், சத்தீஸ்கர்
20. ரௌர்கேலா, ஒடிசா
21. ரவங்லா, சிக்கிம்
22. சில்ச்சார், அஸ்ஸாம்
23. ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர்
24. சூரத், குஜராத்
25. சூரத்கல், கர் நாடகா
26. திருச்சிராப்பள்ளி, தமிழ் நாடு
27. ஸ்ரீ நகர், உத்தராகாண்ட்
28. வாரங்கல், தெலங்கானா
29. யுபியா, அருணாச்சல பிரதேசம்
30. ஹமீர்பூர், ஹிமாச்சல பிரதேசம்"
Q35. "IITs - Indian Institute of Information Technology -- இந்திய தகவல் தொழிற் நுட்பக் கல்வி நிறுவனங்கள் என்பன யாவை?"
"இந்திய தகவல் தொழிற் நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு - IITs - ஈடான தகவல் தொழில் நுட்பக் கல்லூரிகள் (Information Technology Institutes). இவை மனித வள மேம்பாடு அமைச்சகத்தால் நிதியுதவி அளிக்கப்பட்டு இயங்குகின்றன. அவை -
1. அலகாபாத்,
2. ஜபல்பூர்,
3. குவாலியர் மற்றும்
4. காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் இயங்குகின்றன.
இவை தவிர மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துடன், தனியார், தொழிற் நிறுவனங்கள் ஆகியவை இணைந்து, சுமார் 10 IIITs நட த்துகின்றன.
இவற்றிற்கு சேர்க்கை JEE - Joint Entrance Exam மூலம் நடத்தப்படுகின்றன."
Q36. மேலாண்மை (Management) துறையில் முன்னணி கல்வி நிறுவன ங்கள் யாவை?
" Indian Institute of Management - IIMS - இந்திய மேலாண்மை தொழிற் நுட்ப கல்வி நிறுவனங்கள், திட்டக்குழு பரிந்துரையின் பேரில், பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் தொடங்கப்பட்ட, சுய நிதி / மேலாண்மை செய்துக் கொள்ளும் கல்வி நிறுவனங்கள். இந்த கல்வி நிறுவனங்களின் சேர்க்கை CAT - Common Admission Test என்ற தேர்வு பரீட்சை மூலம் நடத்தப்படுகின்றன. இந்த கல்வி நிறுவனங்களில் IIM அஹமதாபாத் உலகளவில் தரத்தில் உயர்ந்த கல்வி நிறுவனமாகக் கருதப்படுகிறது."
Q37. "மேலாண்மை கல்வி நிறுவனங்கள் - இந்திய மேலாண்மை கல்வி நிறுவினங்கள் - Indian Institute of Management மிகவும் புகழ் பெற்றவை - எங்கு அமைந்துள்ளன?"
"1. IIM - C - கொல்கத்தா 1961 மே. வங்காளம்
2. IIM - A - அஹமதாபாத் 1961 குஜராத்
3. IIM - B - பெங்களூரு 1973 கர்நாடகம்
4. IIM - L - லக்னௌ 1984 உ.பிரதேசம்
5. IIM - K - கோழிக்கோடு 1996 கேரளா
6. IIM - I - இந்தூர் 1996 ம.பிரதேசம்
7. IIM - S - ஷில்லாங் 2007 மேகாலயா
8. IIM - R - ரோட்டக் 2010 ஹரியானா
9. IIM - ராஞ்சி 2010 ஜார்க்கண்ட்
10. IIM - ராய்ப்பூர் 2010 சத்தீஸ்கர்
11. IIM - T - திருச்சிராப்பள்ளி 2011 தமிழ் நாடு
12. IIM - U - உதய்ப்பூர் 2011 ராஜஸ்தான்
13. IIM - காஷிப்பூர் 2011 உத்தராகாண்ட்
இவற்றைத் தவிர்த்து, ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப், பீஹார், ஒடிசா, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மேலும் IIM-கள் திறக்கப்பட உள்ளதாக 2014 மத்திய நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது."
Q38. "தனியார் துறையில், மிகவும் பிரபலமான மேலாண்மை கல்வி நிறுவனங்கள் (Management Institutions) யாவை?"
"1. T.A. Pai Institute of Management, Manipal.
2. Xavier Labour Research Institute, Ranchi.
3. SP Jain College of Management, Mumbai.
4. Mudra Institute of Management , Ahmedabad.
5. Nirma Institute of Management, Ahmedabad.
6. Kirloskar Institute of Management, Harihar.
7. Indian Institute of Personnel Management, Kolkatta.
8. Amity University, Uttar Pradesh.
9.Symbiosis Institute of Management, Pune, Maharashtra
இவற்றைத் தவிர நிறைய தனியார் பல்கலை கழகங்கள், கல்லூரிகளும் மேலாண்மை கல்வி பயிற்றுவிக்கின்றன."
Q39. இந்தியா மற்றும் உலக அளவிலும் மிகவும் புகழ் பெற்ற அறிவியல் (Science) கல்வி நிறுவனம் எது?
"INDIAN INSTITUTE OF SCIENCE - இந்திய அறிவியல் கல்வி நிறுவனம், பெங்களூரு. இந்த கல்வி நிறுவனம், ஸ்வாமி விவேகானந்தர் வழி காட்டலில், ஜம்ஷெட்ஜி டாடாவின் பெரு முயற்சியால், மைசூர் மன்னர் கிருஷ்ணராஜா உடையார் நன்கொடையாக அளித்த சுமார் 371 ஏக்கர் நிலத்தில், 1909ல் தொடங்கப்பட்டது.
இந்த கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்களின் பட்டியல், இந்த நிறுவனத்தின் தரத்தையும், மதிப்பையும் எடுத்துக் காட்டுகிறது.
முன்னாள் மாணவர்கள் :
1. ஹோமி ஜே - பாபா - அணு விஞ்ஞானி.
2. சதிஷ் தவான் - விண்வெளி விஞ்ஞானி.
3. சர். சி.வி. ராமன் - நோபல் பரிசு விஞ்ஞானி.
4. விக்ரம் சாராபாய் - ஏவுகணை விஞ்ஞானி.
5. ஜே.ஆர்.டி. டாடா - பிரபல தொழிலதிபர்.
6. எம். விஸ்வேஸ்வரய்யா - தொழிலதிபர், விஞ்ஞானி.
7. C.N.R. ராவ் - ஏவுகணை விஞ்ஞானி - பாரத் ரத்னா.
மற்றும் பலர்.
இந்த கல்வி நிறுவனத்தின் சேர்க்கை GATE - Graduate Aptitute Test in Engineering என்ற தேர்வு பரீட்சையின் மூலம், அறிவியல் முதுகலை பட்ட படிப்புகளுக்கும், முனைவர் (ஆராய்ச்சி Ph.D.) போன்ற படிப்புகளுக்கும், நடத்தப்படுகிறாது. இந்த கல்வி நிறுவனத்தில் சேருவதற்கு மாணவர்களிடையே கடின உழைப்பு தேவை."
Q40. நம் நாட்டில் மிகவும் பிரபலமான மருத்துவக் கல்லூரிகள் யாவை?
"1. AIMS - All India Institute of Medical Sciences - அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், டெல்லி, 1956ல் நியூசிலாந்து நிதி உதவியுடன் தொடங்கப்பட்ட து. இந்த நிறுவனம், இந்தியாவின் முன்னோடி மருத்துவ சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம். இதற்குப் பிறகு 2012ல், இதே போன்ற மருத்துவ கல்வி நிறுவனம், போப்பால், புவனேஷ்வர், ஜோத்பூர், பாட்னா, ராய்ப்பூர் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் துவங்கப்பட்ட து. மேலும், கோரக்பூர் (உ.பி), கல்யாணி (மே.வங்காளம்), நாக்பூர் (மகாராஷ்டிரா), ஹைதராபாத் (தெலங்கானா) மங்களகிரி (ஆந்திர பிரதேசம்), ரே பரேலி, உ.பி., பதிண்டா, பஞ்சாபி., மதுரை, தமிழ்நாடு., பிலாஸ்பூர், இமாச்சலபிரதேசம்., ஜம்மு மற்றும் ஸ்ரீநகர்., அஸ்ஸாம் மற்றும் பீஹார் ஆகிய இடங்களில் AIMS போன்ற மருத்துவ கல்வி நிறுவன்ங்கள் துவங்கப்பட உள்ளன.
2. CMC - Christian Medical College, Vellore - கிறிஸ்டியன் மருத்துவ கல்லூரி, வேலூர், தமிழ் நாடு, 1918ல் IDA SCUDDER -இடாஸ்கட்டர் என்ற அமெரிக்க கிறித்துவ இயக்கத்தின் பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவ பெண்மணியால் துவங்கப்பட்ட து.
3. JIPMER - Jawahar Lal Institute of Post Graduate Medical Education and Research - ஜவஹர்லால் முது நிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் : 1823ல் Ecole de Medicine de Pondicherry என்ற பெயரில் ஃப்ரெஞ்சுக்கார ர்களால் தொடங்கப்பட்டு, சுதந்திரத்திற்கு பிறகு மருத்துவக் கல்லூரி, பாண்டிச்சேரி, பிறகு தன்வந்திரி மருத்துவக் கல்லூரி என்றும், கடைசியில் 13.7.1964 முதல் JIPMER என்று அழைக்கப்படுகிறது. இது தான் ஆசியாவில் ஐரோப்பிய மருத்துவ முறையில் தொடங்கப்பட்ட முதல் மருத்துவ கல்லூரி.
4. மவுலானா ஆஸாத் மருத்துவக் கல்லூரி, டெல்லி - 1942 - 1945, இரண்டாம் உலகப் போர் காலக் கட்ட த்தில், காயமடைந்த வீர ர்களுக்கு மருத்துவ உதவிக்காக துவக்கப்பட்டு பிறகு கல்லூரியாக உயர்த்தப்பட்ட து.
5. AFMC - Armed Forces Medical College - ராணுவ மருத்துவக் கல்லூரி, பூனே - 1948ல் தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரி, மிகவும் பிரபலமானது. இந்த கல்லூரியே நட த்தும் தேர்வின் மூலமே சேர்க்கை நடைபெறுகிறது.
6. கொல்கத்தா மருத்துவக் கல்லூரி - இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் மருத்துவக் கல்லூரி. 1835ல் தொடங்கப்பட்ட இந்த கல்லூரிதான், ஆங்கில வழியில் ஐரோப்பிய மருத்துவத்தை கற்பித்த ஆசியாவின் முதல் கல்லூரி. இதை உருவாக்க க் காரணமாயிருந்தவர் வில்லியம் பெண்டிக் பிரபு. "
"7. மெட் ராஸ் மருத்துவக் கல்லூரி - சென்னை - இந்தியாவில் தொடங்கப்பட்ட இரண்டாவது மருத்துவக் கல்லூரி - இதன் சேர்க்கை, தமிழக கல்வி வழியில் +2 உயிரியல் பிரிவில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களை நேர்காணல் (Counselling) முறையில், (தமிழகத்திலுள்ள அனைத்து அரசாங்க மருத்துவக் கல்லூரிகளுக்கும்) சேர்க்கப்படுகிறார்கள்.
8. செயின்ட் ஜான்ஸ் மருத்துவக் கல்லூரி, பெங்களூரு - 1963 - கத்தோலிக்க சபையால் நட த்தப்படுகிறது.
9. கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரி - மணிப்பால் - 1953 - Dr. TMA பாய் என்பவரால் தொடங்கப்பட்டு, தற்சமயம் பாய் சமூக சேவை நிறுவனம் நட த்துகிறது.
10. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி - சென்னை - இந்த மருத்துவக் கல்லூரியின் சரித்திரம், 1740க்குத் தொடக்கத்தை எடுத்துச் செல்லும். 1740ல் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியால் மருத்துவத் துறை தொடங்கப்பட்டு, 1782ல் இப்போது ஸ்டான்லி மருத்துவமனை இருக்கும் இடத்தில் - மோனேகர் சத்திரம் - சில குறிப்பிட்ட நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை தொடங்கப்பட்டு, 1799ல் இந்த இட த்தில் தொழு நோய் மருத்துவமனை தொடங்கப்பட்ட து. 1830ல் ராஜா சர் ராமசாமி முதலியார் அளித்த நன் கொடையில் துவங்கப்பட்ட மருத்துவமனை, 1933க்குள் வளர்ச்சி அடைந்து கல்லூரி நிலையை அடைந்தது. இந்த கல்வி நிறுவனம் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி என அழைக்கப்பட காரணம் - இங்கிலாந்தின் பாராளுமன்ற உறுப்பினர் Lt. Col. ஜார்ஜ் ஃப்ரெடெரிக் ஸ்டான்லி என்பவர் 193ல் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை டிப்ளமோ படிப்பை துவக்கி வைத்ததினால்.
11. க்ராண்ட் மருத்துவக் கல்லூரி, மும்பை - இந்த மருத்துவக் கல்லூரிக்கு சர் ராபர்ட் க்ராண்ட். (அன்றைய பம்பாய் ஆளு நர்) அவர்களின் பெயர் இடப்பட்ட து. 1845ல் இக்கல்லூரி தொடங்கப்பட்ட து.
இவை தவிர நாட்டில் சுமார் 340 மருத்துவக் கல்லூரிகள் - அரசாங்கம் மற்றும் தனியார் இயங்குகின்றன. தமிழ் நாட்டில் 20 அரசாங்க மருத்துவக் கல்லூரிகளும் 20 தனியார் கல்லூரிகளும் இயங்குகின்றன. மருத்துவப் படிப்பிலும், மருத்துவத்திலும் ஒரு முன்னோடி மாகாணமாகவும், உலக அளவில் மதிப்பிற்குரிய இடத்திலும் தமிழ் நாடு விளங்குகிறது."
Q41. "பேச்சுத்தடை மற்றும் செவி குறை மருத்துவம் படிப்பில் உலகளவில் தரம் வாய்ந்ததாக விளங்கும் இந்திய கல்லூரி எது?"
"அகில இந்திய பேச்சு மற்றும் செவி உணர்வு மருத்துவ நிறுவனம், மைசூரு. 1966ல் தொடங்கப்பட்ட இந்த தன்னாட்சி மருத்துவ நிறுவனம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது."
Q42. சட்டக் கல்வியில் நம் நாட்டில் மிகவும் பழமையான கல்லூரி எது?
"அரசாங்க சட்டக் கல்லூரி, பம்பாய் - 1855ல் தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரி ஆசியாவிலேயே மிகவும் பழமையானதும் கூட."
Q43. நம் நாட்டில் சட்டக் கல்விக்கு உள்ள வழி முறைகள் என்ன?
"சட்டக் கல்லூரிகள் அந்தந்த மா நிலங்களாலும், தனியார் துறைகளாலும் நட த்தப்படுகின்றன. அரசாங்க கல்லூரிகளில் சேர்க்கை தேர்வு பரீட்சைகள் மூலம் நட த்தப்படுகின்றன. தனியார் துறையில் தேர்வு பரீட்சை மற்றும் நேர் காணல் முறைகளிலும் நடைபெறுகிறது. சட்டக்கல்வியை ஒழுங்கு படுத்துவது (இந்திய வழக்குரைஞர்கள் குழு டெல்லி (Bar Council of India)"
Q44. தேசிய சட்டக் கல்லூரிகள் என்பன என்ன? அவை எங்கெல்லாம் இயங்குகின்றன?
"நாட்டில் இயங்கி வந்த சட்டக் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற பொதுவான வலியுறுத்தலின் பேரில், 1986ல் தேசிய சட்டப்பள்ளி, பல்கலைக் கழக அந்தஸ்தில் தொடங்கப்பட்ட து. அதற்கு பல இடங்களில் இவ்வகை சட்டக் கல்வி பள்ளிகள் துவங்கப்பட்டன."
Q45. நம் நாட்டில் இயங்கி வரும் தேசிய சட்டக் கல்வி பள்ளிகள் யாவை?
"1. பெங்களூரு,
2. போபால்,
3.ஹைதராபாத்,
4. கொல்கத்தா,
5. ஜோத்பூர்,
6. ராய்ப்பூர்,
7. காந்தி நகர்,
8. பட்டியாலா,
9. லக்னௌ,
10. கொச்சி,
11. பாட்னா,
12. புது டெல்லி,
13. விசாகப்பட்டினம்,
14. கட்டாக்,
15. ராஞ்சி,
16. குவஹாத்தி,
17. ஸ்ரீரங்கம்.
இவை தவிர சோனிபட், மும்பை, அவுரங்காபாத், நாக்பூர், நைனிட்டால் ஆகிய இடங்களிலும் துவங்கபட உள்ளன. இவை அனைத்துமே தன்னாட்சி நிறுவனங்கள்."
Q46. தேசிய சட்டக்கல்வி பள்ளிகளின் சேர்க்கை முறை எவ்வாறு?
CLAT - Common Law Admission Test - பொது சட்டக் கல்வி சேர்க்கை தேர்வு - மூலம்.
Q47. நம் நாட்டில் தொடங்கப்பட்ட முதல் பல் மருத்துவக் கல்லூரி எது?
டாக்டர் அஹமது பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, கொல்கத்தா - 1924.
Q48. பல் மருத்துவ கல்வி வழிமுறைகள் என்ன?
"பல் மருத்துவ கல்லூரிகள் மா நில அரசாங்கங்களாலும், தற்சமயம் நிறைய தனியார் கல்லூரிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இவைகளில் அரசாங்க கல்லூரிகளுக்கு மதிப்பெண்கள் தர வரிசை அடிப்படையிலும், தனியார் கல்லூரிகளில் நேரடியாகவும் சேர்க்கை நடைபெறுகிறது."
Q49. நம் நாட்டின் முதல் கட்டிடக் கலை (Architecture) கல்லூரி எது?
"J J கட்டிடக் கலைப் பள்ளி - மும்பை - 1910 -உலகத்தரம் வாய்ந்தது. இதன் நிறுவனர் சர். ஜம் ஷெட்ஜி ஜீ ஜீ பாய் என்பவர்."
Q50. கட்டிடக் கலையில் தலைசிறந்த கல்வி நிறுவனங்களாகக் கருதப்படுபவை?
"1. The School of Planning & Architecture, New Delhi - 1952 - பல்கலை கழக அந்தஸ்து உடையதாகக் கருதப்படுகிறது.
2. J J School of Architecture, Mumbai - 1910."
Q51. கட்டிடக் கலை கல்விக்குரிய வசதிகளும், சேர்க்கை முறையும் யாவை?
"கட்டிடக் கலை கல்வி, நிறைய அரசாங்க மற்றும் தனியார் துறை பல்கலைக் கழகங்கள் / கல்லூரிகளில் கற்பிக்கப்படுகின்றது. மாணவர்களின் +2 மதிப்பெண் தர வரிசை ( ) முறையில் ஒதுக்கப்படுகிறது. சில தனியார் கல்லூரிகளில் நேரடி சேர்க்கையும் உண்டு."
Q52. கட்டிடக் கலை கல்வி முறையை ஒழுங்குபடுத்தும் அமைப்பு எது?
"கட்டிடக் கலை நிபுணர்கள் குழு - Council of Architecture - கட்டிடக்கலை நிபுணர்கள் சட்டம் 1972ன் கீழ் உருவாக்கப்பட்டது.
டெல்லியை தலைமையகமாக கொண்டு இயங்குகிறது."
Q53. வணிக மேலாண்மையில் (Business Management) சிறந்த கல்வி நிறுவனம் எது?
"இந்திய வணிக மேலாண்மை பள்ளி, ஹைதராபாத் - Indian School of Business, Hyderabad - 2001. இது ஒரு தனியார் பள்ளி.
ரஜத்குப்தா மற்றும் அனில் குமார் ஆகியோரால் நிறுவப்பட்ட புகழ்பெற்ற கல்வி நிறுவனம்."
Q54. "இந்திய வான்வெளி அறிவியல் மற்றும் தொழிற் நுட்ப கல்வி நிறுவனம் (Indian Institute of Space Science and Technology) எங்குள்ளது?"
"திருவனந்தபுரம், கேரளா. 2007ல் தொடங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம், வான்வெளி அறிவியல் கல்விக்காக தொடங்கப்பட்ட ஆசியாவின் முதல் நிறுவனம். இந்த கல்வி நிறுவனத்தின் நிர்வாக அதிபர், முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் பிரபல விஞ்ஞானி திரு. அப்துல் கலாம் அவர்கள். IIT - JEE தேர்வு பரீட்சையில் பெறும் தர வரிசையின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது. முதுகலை மற்றும் முனைவர் படிப்புக்கு தகுதியின் அடிப்படையில் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. GATE பரீட்சை மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்."
Q55. "IISER - Indian Institute of Science Education and Research - இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்பது என்ன?"
"அடிப்படை அறிவியலுக்கு (Basic Science) முக்கியத்துவம் அளீக்கும் விதமாக IIT கல்வி நிறுவனங்களுக்கு இணையான கல்வி நிறுவனங்கள். மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தொடங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனங்கள், மொஹாலி (பஞ்சாப்), போபால் (ம.பி), கொல்கத்தா (மே.வங்காளம்), பூனே (மகாராஷ்டிரா) மற்றும் திருவனந்தபுரம் (கேரளா) ஆகிய இடங்களில் இயங்குகின்றன.
திருப்பதி (ஆ.பி)யிலும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கல்வி நிறுவனத்தால் நடத்தப்படும் தேர்வு பரீட்சை (ஒருங்கிணைந்த) மூலம் சேர்க்கை நடத்தப்படுகிறது."
Q56. "வணிகவியல் (Commerce, Accountancy) கல்வியில், உயர் கல்வி அளிக்கும் நிறுவனங்கள் யாவை?"
"+2வில் வணிகவியல் முடித்த மாணவர்கள், கல்லூரியில் இளங்கலை(Graduate B.Com) மற்றும் முதுகலை (Post Graduate M.Com) வணிகவியல் தொடரலாம். அதே சமயம், பட்டயக் கணக்கர் - Charted Accountancy, Cost Accountancy (செலவு கணக்கர்) படிப்பைத் தொடரலாம். இளங்கலை (B.Com) மற்றும் முதுகலை (M.Com) முடித்தவுடன் பட்டயக் கணக்கு ஆய்வாளர் (Charted Financial Analysis) கல்வியும் தொடரலாம். இந்த கல்விகளை தொடர கீழ்க்கண்ட கல்வி நிறுவனங்கள் உதவுகின்றன."
"1. Institute of Charted Accountants : 1949ல் தொடங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம் டெல்லியை தலைமையாகக் கொண்டு, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் கான்பூர் ஆகிய மண்டல அலுவலகங்களுடன் இயங்கி வருகிறது.
2. Institute of Cost Accountants of India : 1959ல் தொடங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம், கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்டு, புது டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்களுடன் இயங்கி வருகிறது.
3. Institute of Chartered Financial Analysis of India : இந்த தனியார் கல்வி நிறுவனம் N.J. வாசஸ்வி, பெசன்ட் ராஜ் மற்றும் ப்ரசன்ன சந்திரா என்பவர்களால் 1984ல் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. இது ஒரு பல்கலைக் கழக அந்தஸ்துடன் ஹைதராபாத், உத்தராகாண்ட், திரிபுரா, ஜார்க்கண்ட், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், மேகாலயா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் ஆகிய இடங்களில் இயங்குகின்றது. இதர மாநிலங்களிலும் துவங்குவதற்கான திட்டங்கள் உள்ளன."
Q57. "புள்ளியியல் (Statistics) துறையில் மிகச் சிறந்த கல்வி நிறுவனமாகக் கருதப்படுவது எது?"
"இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனம் - Indian Statistical Institute - கல்கத்தா - இந்த நிறுவனத்தை நிறுவியவர் டாக்டர் பிசி. மஹலனோபிஸ் - முதல் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களின் சிற்பி. இதன் கிளை கல்வி நிறுவனங்கள் பெங்களூரு மற்றும் டெல்லியில் இயங்குகின்றன.
இந்த கல்வி நிறுவனத்தில் சேர்க்கை தேர்வு பரீட்சை மூலம் நடத்தப்படுகிறது."
Q58. "ப்ளாஸ்டிக் (தமிழில் நெகிழி) தொழிற் நுட்பக் கல்வியில் சிறந்ததாக கருதப்படுவது எது?"
"CIPET - Central Institute of Plastic Engineering & Technology - மத்திய நெகிழி தொழிற் நுட்ப கல்வி நிறுவனம், சென்னை - 1986ல் தொடங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம், மத்திய ரசாயனம் மற்றும் உர அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது."
Q59. "ஜவுளி (Textiles) தொழிற் நுட்பத்தில் கல்விக்குரிய வசதிகளும், சிறந்த கல்வி மையம் எது?"
"இந்த கல்வியை அளிக்கும் கல்வி நிறுவனங்கள் மிக குறைவே. இருப்பினும், தமிழ் நாட்டில் கீழ்க்கண்ட கல்லூரிகளில் இந்த கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.
1. S.S.M. தொழிற் நுட்பக் கல்லூரி, குமாரபாளையம்.
2. பாரதிதாசன் தொழிற் நுட்பக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
3. பன்னாரி அம்மன் தொழிற் நுட்பக் கல்லூரி, ஈரோடு.
4. அழகப்பா தொழிற் நுட்பக் கல்லூரி, சென்னை.
5. ஜெயா தொழிற் நுட்பக் கல்லூரி, திரு நின்றவூர், சென்னை.
6. K.S. ரங்கசாமி தொழிற் நுட்பக் கல்லூரி, திருச்செங்கோடு.
7. RVS தொழிற் நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.
8. குமரகுரு தொழிற் நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்.
9. PSG தொழிற் நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்.
10.பார்க் தொழிற் நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்.
11. அண்ணா பல்கலைக் கழகம், சென்னை.
இவற்றிற்கு சேர்க்கை, +2 மதிப்பெண் தர வரிசையின் (Cut off) அடிப்படையில் கலந்தாய்வு முறையில் நட த்தப்படுகிறது.
இந்த கல்வியில் முதல் மற்றும் மிகச் சிறந்த கல்வி நிறுவனமாக கருதப்படுவது, ஜவுளி தொழிற் நுட்ப கல்லூரி, பிவானி ஹரியானா. 1943ல் கண்ஷ்யாம் தாஸ் பிர்லா அவர்களால் நிறுவப்பட்டது."
Q60. ஃபேஷன் தொழிற் நுட்ப கல்வியில் சிறந்த நிறுவனமாக கருதப்படுவது...
"தேசிய ஃபேஷன் தொழில் நுட்பக் கல்லூரி, டெல்லி, 1987ல் தொடங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ், மும்பை, கொல்கத்தா, காந்தி நகர், ஹைதராபாத், சென்னை மற்றும் பெங்களூரில் வெளி வளாகத்துடன் இயங்குகிறது. இதில் சேர்க்கை ஒருங்கிணைந்த தேர்வு மூலம் நடத்தடப்படுகிறது."
Q61. "உணவு தயாரித்தல் மற்றும் பரிமாறுதல் (Catering) தொழிற் நுட்பக் கல்வியில் சிறந்ததாக கருதப்படும் கல்வி நிறுவனம் எது?"
"தேசிய விடுதி மேலாண்மை மற்றும் உணவு தயாரிப்பு மற்றும் பரிமாறுதல் தொழில் நுட்ப கல்வி சபை - National Council for Hotel Management and Catering Technology - டெல்லி. 1984ல் தொடங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம், நாட்டில் 24 இடங்களில் வெளி வளாகங்களுடன், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இதன் சேர்க்கை ஒருங்கிணைந்த தேர்வு மூலம் நட த்தப்படுகிறது. இதைத் தவிர்த்து நாட்டின் எல்லா மா நிலங்களிலும் தனியார் கல்வி நிறுவன்ங்கள் இந்த கல்வியளிக்கிறது."
Q62. "உணவு அறிவியல் (Food Sciences) சம்பந்தப்பட்ட கல்வியில் நம் நாட்டின் சிறந்த கல்வி நிறுவனம் எது?"
"CFTRI - Central Food Technological Research Institute - மத்திய உணவு தொழிற் நுட்ப ஆராய்ச்சி கல்வி நிறுவனம் - மைசூர் - 1950ல் தொடங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம் - CSIR - Council of Scientific & Industrial Research ன் கீழ் இயங்குகிறது. இந்த கல்வி நிறுவனத்தில் சேர்க்கை தகுதி தேர்வு மூலம் நடைபெறுகிறது. இதைத் தவிர்த்து, தமிழ் நாடு வேளாண் பல்கலைக் கழகம், கோயம்புத்தூரில் உணவு பதப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் (Food Processing) கல்வி அளிக்கப்படுகிறது. இப்போது பல பல்கலைக்கழகங்கள் இத்துறையில் கல்வி அளித்துவருகிறது. 
இதற்கு சேர்க்கை +2 மதிப்பெண் தர வரிசை (Cut off) அடிப்படையில் நடத்தப்படுகிறது."
Q63. "பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு தொழிற் நுட்பத்தில் சிறந்த கல்விமையம் எது?"
"தேசிய பால் பொருள் ஆராய்ச்சி நிறுவனம் - National Dairy Research Institute - கர்னால், ஹரியானா. 1923ல் தொடங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம் ஒரு பல்கலைக் கழகமாக கருதப்படுகிறது. இந்த கல்வி நிறுவனத்தின் கல்வி முறை, ஆனந்த் (குஜராத்), பூஸா (பீஹார்), ராய்ப்பூர் (சத்தீஸ்கர்) மற்றும் உதய்ப்பூர் (இராஜஸ்தான்) ஆகிய இடங்களிலும் கிடைக்கிறது.
இவை தவிர லூதியான (பஞ்சாப்), பகல்பூர் (பீஹார்), திருச்சூர் (கேரளா), யவத்மல் (மஹாராஷ்டிரா), ஜபல்பூர் (ம.பி), பிதார் (கர் நாடகம்), போன்ற இடங்களிலும் இக்கல்வி பயில வாய்ப்புள்ளது."
Q64. சுற்றுச்சூழல் கல்வி அளிக்கும் கல்வி நிறுவனங்கள் யாவை? (Environmental Studies)
"1. ஆந்திரா பல்கலைக் கழகம், விசாகப்பட்டினம்.
2. அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்.
3. அவத் பல்கலைக்கழகம், ஃபைஸாபாத், உ.பி.
4. பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி.
5. இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களூரு.
6. இந்திய தொழிற் நுட்ப கல்வி நிறுவனம், மும்பை.
7. டெல்லி பல்கலைக்கழகம்.
8. அரசாங்க தொழிற் நுட்பக் கல்லூரி, திருச்சூர்.
9. குவஹாத்தி பல்கலைக்கழகம்.
10. சிவாஜி பல்கலைக்கழகம், கோலாப்பூர்.
11. இந்திய சுற்றுச்சூழல் கல்வி நிறுவனம், டெல்லி.
12. இந்திய சுரங்கப்பள்ளி, தன்பாத்.
13. ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கொல்கத்தா.
14. மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகம், வடோடரா.
15. மரத்வாடா பல்கலைக்கழகம், அவுரங்காபாத்.
16. பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம், ஜான்பூர்.
17. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி.
18. மும்பை பல்கலைக்கழகம்.
19. ராஜஸ்தான் பல்கலைக்கழகம், உதய்ப்பூர்."
Q65. உயிரி தொழில் நுட்பம் (Biotechnology) கல்வியில் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் யாவை?
"உயிரி அறிவியல்(Biotechnology) தொழில் நுட்பக் கல்வி நம் நாட்டில் பரவியுள்ள நிறைய கல்லூரி நிறுவனங்களில் கற்பிக்கப்படுகின்றன. அவற்றுள் சில மிகவும் பிரபலமான கல்வி நிறுவனங்கள் :
1. IITs - கரக்பூர், ரூர்கி, குவஹாத்தி.
2. NIT - வாரங்கல், தெலங்கானா, துர்காபூர் (மே.வ)
3. நேதாஜி சுபாஷ் தொழிற் நுட்பக்கல்லூரி, டெல்லி.
4. PSG தொழிற் நுட்பக்கல்லூரி, கோயம்புத்தூர்.
5. தப்பார் பல்கலைக்கழகம், லூதியானா.
6. மணிப்பால் தொழிற் நுட்பக்கல்லூரி, மணிப்பால்.
7. வேலூர் தொழிற் நுட்பக்கல்லூரி, வேலூர்.
8. தொழிற் நுட்பக்கல்லூரி, பெங்களூரு.
9. சைதன்ய பாரதி தொழிற் நுட்பக்கல்லூரி, ஹைதராபாத்.
10. SASTRA பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
11. காந்தி தொழிற் நுட்பக்கல்லூரி, விசாகப்பட்டினம்
12. சத்யபாமா பல்கலைக்கழகம், சென்னை.
13. விஸ்வேஸ்வரய்யா தொழிற் நுட்பக்கல்லூரி, பெங்களூரு.
14. அம்பேத்கர் தொழிற் நுட்பக்கல்லூரி, ஜலந்தர்.
15. MVJ தொழிற் நுட்பக்கல்லூரி, பெங்களூரு."
Q66. " பத்திரிகை தொழில், விளம்பரம் மற்றும் நிகழ்ச்சி மேலாண்மை ஆகியவற்றில் தலைசிறந்த கல்வி நிறுவன ங்கள் யாவை?"
"1. Indian Institute of Mass Communications, New Delhi - இந்திய வெகுஜன தொடர்பு கல்வி நிறுவனம் - மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. 1965ல் தொடங்கப்பட்ட மிக பிரபலமான கல்வி நிறுவனம்.
2. தேசிய விளம்பரகல்வி நிறுவனம் - National Institute of Advertising - புது டெல்லி.
3. சேவியர் தொடர்பு கல்வி நிறுவனம் - Xavier Institute of Communication - மும்பை.
4. சிம்பையாசிஸ் வெகுஜன தொடர்பு கல்வி நிறுவனம் - Symbiosis Institute of Mass Communication - பூனே.
5. பவன் வெகுஜன தொடர்பு கல்வி நிறுவனம் - Bhavan's College of Mass Communication - கொச்சின், குண்டூர், ஹைதராபாத், சந்திகார், சென்னை, நாக்பூர், ஜெய்ப்பூர், விசாகப்பட்டினம், கொல்கத்தா.
6. Mudra Institute of Mass Communication, முத்ரா வெகுஜன தொடர்பு கல்வி நிறுவனம், அஹமதாபாத்.
7. National Institute of Event Management - தேசிய நிகழ்ச்சி மேலாண்மை கல்வி நிறுவனம் - மும்பை.
8. International Institute of Event Management - சர்வதேச நிகழ்ச்சி மேலாண்மை கல்வி நிறுவனம் - மும்பை.
9. National Academy of Event Management - தேசிய நிகழ்ச்சி மேலாண்மை அகாடமி, மும்பை, பூனே, அஹமதாபாத், ஜெய்ப்பூர், பரோடா, நாக்பூர், ஹைதராபாத், கொல்கத்தா, ஜம்மு."
Q67. மின் வேதியியல் - Electronical - துறையில் மிகச்சிறந்த கல்வி நிறுவனம் எது?
"CECRI - Central Electrochemical Research Institute - மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி கல்வி நிறுவனம், காரைக்குடி, தமிழ் நாடு 1953ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், CSIR - Council of Scientific and Industrial Research, டெல்லியின் கீழ் இயங்குகிறது.
+2 தேர்வின் மதிப்பெண்கள் தரவரிசை - Cut Off - அடிப்படையில் கலந்தாய்வு மூலம் இந்த நிறுவனத்தில் சேர்க்கை நடத்தப்படுகிறது."
Q68. காகித தொழிற் நுட்ப கல்வி எங்கு அளிக்கப்படுகிறது?
IIT - ரூர்கி.
Q69. வான்வெளி இயற்பியல் (ASTROPHYSICS) எந்த கல்வி நிறுவனத்தில் கற்பிக்கப்படுகிறது?
"1. இந்திய வான்வெளி இயற்பியல் கல்வி நிறுவனம் - Indian Institute of Astrophysics, பெங்களூரு - 1786ல் தொடங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம், வான்வெளி சம்பந்தப்பட்ட கல்வி பிரிவுகளில் கற்பிப்பது மற்றும் ஆராய்ச்சிகளை நட த்துகிறது. கொடைக்கானல், காவளூர், கௌரி பிதானூர், ஹொசகோட்டே ஆகிய இடங்களில் இயங்கி வரும் வான்வெளி ஆய்வு மையங்கள் இதன் கீழ் இயங்குகின்றன. இந்த கல்வி நிறுவனத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்கு கல்வி பயிற்சி அளிக்கப்படுகிறது. தேர்வு பரீட்சைகள் மூலம் சேர்க்கை நட த்தப்படுகிறது.
2. டாடா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் Tata Institute of Fundamental Research : 1945ல் தொடங்கப்பட்ட இந்த ஆராய்ச்சி நிறுவனம் அணுசக்தி துறையின் கீழ் இயங்குகிறது. இதற்கு ஒரு பல்கலைக்கழக அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. அறிவியலின் பல துறைகளில் முனைவர் பட்டம் படிக்க பயிற்சி அளிக்கிறது. சேர்க்கை தேர்வு பரீட்சை மூலம்.
3. பிர்லா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி மையம் கொல்கத்தா Birla Institute of Fundamental Research : இதற்கு பெங்களூரில் ஒரு கிளை உள்ளது. வான்வெளி இயற்பியலில் முனைவர் பட்டம் பெற பயிற்சி அளிக்கப்படுகிறது.
4. உடற்கூறு ஆராய்ச்சி ஆய்வு மையம், அஹமதாபாத் - Physical Research Laboratory : தேசிய அளவில் ஒரு முன்னிலை ஆராய்ச்சி மையம் - 1945ல் தொடங்கப்பட்ட து. முனைவர் பட்டபடிப்புக்கு பயிற்சி அளிக்கும் ஒரு கல்வி நிறுவனம். தேர்வு பரீட்சை மற்றும் நேர்காணல் முறையில் சேர்க்கை நட த்தப்படுகிறது. (www.prl.res.in)"
Q70. சுரங்கத் துறையில் பயிற்சி அளிக்கும் நிறுவனம் எது?
"இந்திய சுரங்க கல்வி நிறுவனம், Indian Institute of Mines தன்பாத் - 1926ல் துவங்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகம்.
IIT-JEE பரீட்சை மூலம் சேர்க்கை நட த்தப்படுகிறது."
Q71. வன வள உயர்கல்வி நிறுவனங்கள் எங்குள்ளது?
"1. 1906ல் தொடங்கப்பட்ட பல்கலைகழகமாக கருதப்படும் இந்த நிறுவனம், டெஹ்ராடூன், உத்தராகாண்டில் உள்ளது. வனம் சம்பந்தப்பட்ட கல்வியில் முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. இதைத் தவிர்த்து,
2. இந்திய வனவள மேலாண்மை கல்வி நிறுவனம் போபால் - 1982ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் வனவள மேலாண்மை கல்வியில் தலைசிறந்த நிறுவனம்."
Q72. "பெட்ரோல் தொழிற்நுட்பக் கல்வியில் முதன்மையான கல்வி நிறுவனமும், இதர பிரபல கல்வி நிறுவன ங்களும் யாவை?"
"1. இந்திய பெட்ரோலிய தொழிற்நுட்பக்கல்லூரி - Indian Institute of Petroleum - டெஹ்ராடூன் : 1960ல் தொடங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம். இந்த நிறுவனத்தின் மூலம், இந்த துறையில், முனைவர் படிப்புக்கு வழி செய்கிறது. இந்த துறையில் தலை சிறந்த கல்வி நிறுவனம். JEE MAIN தேர்வு பரீட்சை மூலமும், உ.பி. மா நில தொழிற்கல்வி தேர்வு பரீட்சை மூலம் இந்த துறையில் இளங்கலை கல்விக்கு தேர்வு நட த்தப்படுகிறது.
2. ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழிற்நுட்பக் கல்லூரி - Rajiv Gandhi Institute of Petroleum Technology - ரே பரேலி (உ.பி) - 2007ல் தொடங்கப்பட்டது. இந்த துறையில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்கு பயிற்சி அளிக்கிறது. இளங்கலைக்கு IIT-JEE தேர்வு பரீட்சை மூலமும், முதுகலைக்கு GATE தேர்வு மூலமும், முனைவர் சேர்க்கைக்கு நிறுவனம் நடத்தும் தேர்வு பரீட்சை மூலமும் நடத்தப்படுகிறது. நாட்டில் பல தொழிற்நுட்பக் கல்லூரிகள் இந்த துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் அளிக்கின்றன. தமிழ் நாட்டில் -
1. ராஜீவ் காந்தி தொழிற் நுட்பக் கல்லூரி, காஞ்சிபுரம்.
2. AMET பல்கலைக் கழகம், சென்னை.
3. அர்ச்சனா தொழிற் நுட்பக்கல்லூரி, தர்மபுரி.
4. JCT தொழிற் நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்.
5. EXCEL தொழிற் நுட்பக் கல்லூரி, குமாரப்பாளையம்.
6. GI தொழிற்நுட்பக் கல்லூரி, வேலூர்.
7. அண்ணா பல்கலைக் கழகம், சென்னை.
8. அழகப்பா தொழிற் நுட்பக் கல்லூரி, சென்னை.,
ஆகிய இடங்களில் கற்பிக்கப்படுகிறது."
Q73. "உயிர்களில் மருத்துவம் - BIOMEDICAL - தொழில் நுட்பக்கல்வி அளிப்பதில் முன்னணி கல்வி நிறுவனங்களும், மற்றும் இதர கல்வி நிறுவனங்களும் யாவை?"
"இந்தக் கல்வி மருந்து மற்றும் மருந்து தயாரிப்பு தொழில் நுட்பக்கல்வி ஆகும். இந்த கல்வியில் - IIT டெல்லி, மும்பை மற்றும் கரக்பூர் ; BITS - ராஞ்சி ; மற்றும் AIMS டெல்லி ஆகியவை முன்னிலை கல்வி நிறுவன ங்கள்.
இவைத் தவிர்த்து நாட்டின் பல தொழிற் நுட்பக்கல்விகள் இக்கல்வியை பயிற்றுவிக்கின்றன. தமிழ் நாட்டில் பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனங்கள் -
1. சத்யபாமா பல்கலைக்கழகம், சென்னை.
2. காருண்யா பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.
3. ஜெருசலேம் தொழிற் நுட்பக்கல்லூரி, சென்னை.
4. தனலட்சுமி ஸ்ரீ நிவாசன் தொழிற் நுட்பக்கல்லூரி, பெரம்பலூர்.
5. ராஜீவ் காந்தி தொழிற் நுட்ப கல்லூரி, சென்னை.
6. ஃபோம்ரா தொழிற் நுட்பக் கல்லூரி, சென்னை.
7. வேல்டெக் தொழிற் நுட்பக் கல்லூரி, சென்னை.
8. ஆறுபடை வீடு தொழிற் நுட்பக் கல்லூரி, காஞ்சிபுரம்.
9. ஆதிபராசக்தி தொழிற் நுட்பக் கல்லூரி, மேல்மருவத்தூர்.
10. அதியமான் தொழிற் நுட்பக் கல்லூரி, ஹோசூர்.
11. அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.
12. பாரத் தொழிற் நுட்பக்கல்லூரி, சென்னை.
13. PSG தொழிற் நுட்பக்கல்லூரி, கோயம்புத்தூர்."
Q74. "நம் நாட்டில் விலை உயர்ந்த கற்கள் மற்றும் ஆபரணங்கள் பற்றிய கல்வியை பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனங்கள் யாவை?"
"1. Indian Institute of Gemmology - டெல்லி.
2. Indian Diamond Institute, சூரத்.
3. Gemmological Institute of India, மும்பை.
4. Jwellery Design & Technological Institute, நொய்டா."
Q75. அயல் நாட்டு வாணிப கல்வியில் (Foreign Trade) நம் நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனம் எது?
"IIFT - Indian Institute of Foreign Trade - இந்திய வெளி நாட்டு வாணிப கல்வி நிறுவனம் - டெல்லி. 1963ல் தொடங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனத்தில் சேர்க்கை நிறுவனமே நட த்தும் தேர்வு பரீட்சை மூலம் நட த்தப்படுகிறது. இதைத் தவிர்த்து சில மேலாண்மை கல்லூரிகள் இக்கல்வியை பயிற்றுவிக்கின்றன. தமிழ் நாட்டில் இக்கல்வி பயில வசதி இல்லை."
Q76. "விளையாட்டுத் துறையில் கல்வி பயில நம் நாட்டின் தலை சிறந்த கல்வி நிறுவனம் எது?"
தேசிய விளையாட்டுக் கல்வி நிறுவனம், National Institute of Sports - பட்டியாலா, பஞ்சாப். 1961ல் நிறுவப்பட்ட இந்த கல்வி நிறுவனம், விளையாட்டு பயிற்சியாளர், விளையாட்டு மருத்துவம் போன்ற பல விளையாட்டு சம்பந்தப்பட்ட கல்விகளை கற்பிக்கிறது. இந்த நிறுவனம் 268 ஏக்கர் இட த்தில் மோத்தி பாக் அரண்மனையில் இருந்து இயங்குகிறது.
Q77. கால் நடை மருத்துவம் (Veterinary) கல்வி பயில சிறந்த கல்வி நிறுவனங்கள் யாவை?
"IVRI - Indian veterinary Research Institute - இந்திய கால் நடை மருத்துவ ஆராய்ச்சி கல்வி நிறுவனம் - பரேலி. 1889ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் 1983ல் ஒரு பல்கலைக்கழகமாக உயர்த்தப்பட்ட து. இங்கு முதுகலை படிப்பு மட்டும் அளிக்கப்படுகிறது. ICARன் கீழ் இயங்குகிறது. தமிழ் நாட்டின் மெட்ராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரி இந்தத் துறையில் ஒரு முன்னோடி நிறுவனம். 1903ல் தொடங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம் 1936 முதல் இளங்கலை பட்டம் அளிக்கத்துவங்கியது. 1989 முதல் இத்துறையில் நம் நாட்டின் முதல் கால் நடை மருத்துவ பல்கலைக்கழகமாக உயர்த்தப்பட்டு, தமிழ் நாடு கால் நடை மருத்துவ அறிவியல் மற்றும் விலங்கியல் பல்கலைக்கழகம் என (TANUVAS - Tamilnadu Veterinary and Animal Sciences University) அழைக்கப்படுகிறது. இந்த த்துறையில், இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
நாமக்கல் மற்றும் திருநெல்வேலியில் இப்பல்கலைக்கழகத்துடன் இணைந்த, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களும் இளங்கலை (நேரடி சேர்க்கை), முதுகலை (தேர்வு பரீட்சை) கல்வி அளிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் கால்நடை மருத்துவ கல்லூரிகள் அந்தந்த மாநில அரசாங்கங்களால் நடத்தப்படுகிறது."
Q78. நம் நாட்டில் வேளாண் கல்வியில் முன்னணி கல்வி நிறுவனங்கள் யாவை?
"நம் நாட்டில் முதன் முதலாக 1906ல் கான்பூர் உத்திரபிரதேசத்தில் 1893ல் ஒரு வேளாண் பள்ளி துவங்கப்பட்டு, 1906ல் அரசாங்க கல்லூரியாக உயர்ந்து, 1975ல் பல்கலைக்கழகமாக உயர்த்தப்பட்டது. இதற்கு முன்பாக -
1876ல் சென்னையில் ஒரு வேளாண் பள்ளி துவக்கப்பட்டு, 1906ல் கல்லூரியாக கோயம்புத்தூரில் கல்லூரியாக உயர்த்தப்பட்டு 1971ல் பல்கலை கழகமாக உயர்த்தப்பட்ட து. இந்த கல்வி நிறுவனம் இந்தியாவின் தலை சிறந்த கல்வி நிறுவனமாக கருதப்படுகிறது. (இவற்றில், இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது). தமிழ் நாட்டைப் பொறுத்தவரை தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம், கோயம்புத்தூர் மற்றும் அதனுடன் இணைந்த மதுரை, நாவலூர் குட்டப்பட்டு, கிள்ளிக்குளம், குமுளூர், பெரிய குளம், மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள வேளாண் கல்லூரிகளும் இத்துறையில் கல்வி கற்பிக்கிறது. இவை தவிர்த்து, ஒரு சில தனியார் கல்லூரிகளும், வேளாண் கல்வியை, TNAU வுடன் இணைந்து, கற்பிக்கிறது. பிற மாநிலங்களில், அநேகமாக எல்லா மாநிலங்களிலும் அரசாங்கத்தால் நடத்தப்படும் வேளாண் கல்லூரிகள் இயங்குகின்றன."
Q79. நம் நாட்டில் உயர் கல்விக்காக நடத்தப்படும் பலவகை தேர்வு பரீட்சைகள் யாவை?
"தொழிற் நுட்பக் கல்வி (Engineering), மருத்துவம் (Medical) ஆகிய இரு துறைகளுக்கும், மாநில அளவில் உள்ள வேறு துறைகளில் கல்வி பயில, பொதுவாக +2 மதிப்பெண் தரப்பட்டியல் (Cut off) முறையிலும், பல மாநிலங்கள் தேர்வு பரீட்சைகள் மூலமும் நடத்தப்படுகிறது. இவை தவிர்த்து சில பிரத்தியேக பொது மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் நட த்தும் சேர்க்கை தேர்வுகள் :
1. CLAT - Common Law Admission Test : தேசிய சட்டக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு.
2. JEE-MAINS - Joint Engineering Exam : NIT மற்றும் சில குறிப்பிட்ட தொழிற் நுட்பக் கல்லூரி/பல்கலை கழகங்களில் சேருவதற்கு.
3. AIPMT : All India PreMedical Test : நாட்டில் உள்ள அனைத்து அரசாங்க மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்களில் 15% மத்திய தேர்வுக்கு ஒதுக்கப்படுகிறது. அவைகளில் சேருவதற்காக நடத்தப்படும் சேர்க்கை தேர்வு பரீட்சை.
4. BITSAT - BITS, பிலானியின் கீழ் இயங்கும் அனைத்து தொழிற் நுட்பக் கல்லூரிகளுக்கும் நட த்தப்படும் சேர்க்கை தேர்வு பரீட்சை.
5. VITEEE - வேலூர் தொழிற் கல்வி பல்கலை கழகத்தில் சேருவதற்கு நடத்தப்படும் தேர்வு.
6. JEE-ADVANCED (முன்பாக IIT-JEE) நாட்டில் உள்ள IIT-க்களில் தொழிற் நுட்பக்கல்வி பயில நட த்தப்படும் சேர்க்கை தேர்வு.
7. KIIT - மணிப்பால், SRM, ஜெயின் பல்கலை கழகங்களில் சேருவதற்கு நட த்தப்படும் சேர்க்கை தேர்வு.
8. WBJEE - மேற்கு வங்காள தொழிற் நுட்ப / மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு. 9. MPPET - மத்திய பிரதேச தொழிற் நுட்ப / மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு.
10. RPET & RPMT - ராஜஸ்தான்.
11. GUJCET - குஜராத்.
" "12. EAMCET - ஆந்திர பிரதேசம்.
13. KEAM - கேரளா.
14. MHT - CET - மகாராஷ்டிரா
15. OJEE - ஒடிசா.
16. CGCET-CGPMT - சத்தீஸ்கர்.
17. CAT - Common Admission Test : 2007ல் தொடங்கப்பட்ட இந்த சேர்க்கை தேர்வு வருடந்தோறும் நடக்கும் நிகழ்வு. இந்தியாவில் தலைசிறந்த மேலாண்மை கல்வி நிறுவன ங்களான IIMs மற்றும் சில IITக்கள் மற்றும் தனியார் மேலாண்மைக் கல்லூரிகளுக்கும் MBA படிப்பு சேர்க்கைக்காக நடத்தப்படும் தேர்வு. உலகத்தில் நடத்தப்படும் சேர்க்கை தேர்வுகளின் தரத்தில் இதுவும் ஒன்று. மிகவும் கடினமான தேர்வு. பயிற்சியும் கடின உழைப்பும் தேவை. இதில் பெறும் மதிப்பெண்கள் மற்ற மேலாண்மை கல்லூரிகளில் சேருவதற்கும் பயன்படும். ஆங்கில வழியில், கணினி மூலம் மட்டுமே தேர்வு நடத்தப்படும்.
18. XAT - XAVIER APTITUTE TEST : XLRI - Xavier Labour Research Institute - ஜாம்ஷெட்பூர், நம் நாட்டின் தலை சிறந்த மேலாண்மை கல்வி நிறுவன ங்களுள் ஒன்று. இதில் மேலாண்மை கல்வி பயில நட த்தப்படும் சேர்க்கை தேர்வு.
19. IIFT Test : அயல் நாட்டு வர்த்தகத்தின் உயர்கல்வி பெற, Indian Institute of Foreign Trade, டெல்லியில் சேருவதற்கு நடத்தப்படும் தேர்வு.
20. AIIMS Test : AIIMS - டெல்லியில் மருத்துவக் கல்வி பெற நடத்தப்படும் தேர்வு.
21. AFMC Test : ராணுவ மருத்துவ கல்லூரி, பூனேவில் நடத்தப்படும் மருத்துவ கல்வி பயில நடத்தப்படும் சேர்க்கை தேர்வு.
22. AIEEE Test : நாட்டில் இருக்கும் அரசாங்க தொழிற் நுட்பக்கல்லூரிகளில் மத்திய சேர்க்கைக்கு ஒதுக்கப்படும் விகித சீட்டுகள், முக்கியமாக 30 தேசிய தொழிற் நுட்பக்கல்லூரிகள், கட்டிடக்கலை தொழிற் நுட்ப சீட்டுகள், IIITs சீட்டுகள் ஆகியவற்றிற்கு சேர்க்கை பெற நட த்தப்படும் தேர்வு.
23. ICAR Test : இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம், நடத்தும் முதுகலை மற்றும் முனைவர் பட்ட படிப்புகளில் சேர நடத்தப்படும் சேர்க்கை தேர்வுகள்."
Q80. "இன்றைய கால கட்டத்தில் வெளிநாடு சென்று உயர்கல்வி படிப்பது இளைஞர்களின் ஒரு தவிர்க்க முடியாத கனவாகி விட்டது. இத்தகைய இளைஞர்கள் எதிர்கொள்ள வேண்டிய தேர்வுகள் யாவை?"
"1. GMAT - Graduate Management Aptitude Test - 1953ல் தொடங்கப்பட்ட இந்த சேர்க்கை தேர்வு, அமெரிக்கா, கனடா மற்றும் பல நாடுகளின் சுமார் 2100 பல்கலை கழகங்களில், மேலாண்மை கல்வி (MBA) பயில, நடத்தப்படுகிறது. கணினி மூலம் 3 ½ மணி நேரத்திற்கு, ஆங்கில வழியில், 800 மதிப்பெண்களுக்காக நடத்தப்படுகிறது. வாய்வழி ஆங்கிலப்பேச்சு, கணிதம், திறனறி தேர்வு மற்றும் எழுத்துத் திறன் ஆகிய பகுதிகளடங்கிய இந்த்த் தேர்வு, உலகளவில் சுமார் 600 மையங்களில் நடத்தப்படுகிறது.
2. GRE - Graduate Record Examination - 1949ல் தொடங்கப்பட்டு, கணினி மூலம், சுமார் 3¾ மணி நேரத்திற்கு நடத்தப்படும் (இடைவெளி உண்டு) இந்த தேர்வு அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில கட்டாயமானதாகவும், வேறு பல நாடுகளுக்கும் தேவைப்படுகிறது. உலகில் சுமார் 700 மையங்களில் நடத்தப்படுகிறது.
3. TOEFL - Test of English as a foreign Language - ஆங்கிலம் வாய்மொழி பேச்சு அல்லாத நாடுகளிலிருந்து வரும் மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி பயில கட்டாயமானதொரு தேர்வு. மேலும் பல ஆங்கில மொழி பேசும் நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 1964ல் தொடங்கப்பட்ட்து. இதன் நோக்கம் மாணவர்களின் ஆங்கில திறமையை பரிசோதிப்பதே. உலகில் சுமார் 9000 பல்கலைக் கழகங்களில் இதன் மதிப்பெண்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
4. IELTS - International English Language Test- 1989ல் தொடங்கப்பட்ட இந்த ஆங்கில திறமையை சோதிக்கும் இந்த தேர்வு மதிப்பெண்கள் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, அயர்லாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மற்றும் அமெரிக்க பல்கை கழகங்களில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது."
Q81. "இந்திய அரசாங்கத்தால், நாட்டின் கல்வி அறிவை உயர்த்தவும், பள்ளி இடை நிற்றல் தடுக்கவும் (School Drop Out) எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை?"
"1. சர்வ சிக் ஷாஅபிக்ஞான் : 2000 - 2001ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் குறைந்தபட்சம் 5 வருட பள்ளிக்கல்வி எல்லாக் குழந்தைகளுக்கும் (6லிருந்து 14 வயது வரை) 2007க்குள் அளிப்பது, 2010ல் 8 வருட பள்ளிக்கல்வி அளிப்பது. இதன் விரிவாக்கம், 2015க்குள் பள்ளி இல்லாத இடங்களில் பள்ளிகள் நிறுவுவது, இருக்கும் பள்ளிகளில் வசதிகள் மேம்படுத்துவது, ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பது, பெண் குழந்தைகளின் கல்வியில் கவனம் செலுத்துவது, கணினி பயிற்சியும் அளிப்பது போன்றவையாகும்.
2. தேசிய பெண் கல்வி (இளநிலை) திட்டம் : நாட்டின் பின் தங்கிய பகுதிகளில் எங்கெல்லாம் பெண்கள் கல்வி அறிவு குறைவாக உள்ளதோ அங்கெல்லாம் பெண் கல்வியை மேம்படுத்துவது இந்த திட்டத்தின் நோக்கம்.
3. கஸ்தூர்பா காந்தி குழந்தைகள் பள்ளி : 2004 - 2005ல் தொடங்கப்பட்ட இந்த திட்டம், ஏழை எளிய, குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களின் பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், பள்ளியிலேயே தங்கி படிக்கும் வசதியுடன் கூடிய சுமார் 750 பள்ளிகலை நிர்மாணித்தல்.
4. தேசிய எழுத்தறிவு திட்டம் - National Literacy Mission : மே 1988ல் தொடங்கப்பட்ட இந்த திட்டம் 15 முதல் 35 வரை உள்ளவர்களை கல்வியில் மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். இது மனிதவள மேம்பாடு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
5. முதியோர் கல்வி திட்டம் : பள்ளிக் கல்வி பெற வாய்ப்புக் கிட்டாத முதியோர்களுக்கு அடிப்படை கல்வியாவது பெற வேண்டும் என்பதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனகளுடன் சேர்ந்து நடத்தப்படும் கல்வி திட்டம்.
6. ப்ராத்மிக் சிக் ஷா கோஷ் : இது ஒரு கல்விக்காக வசூலிக்கப்படும் வரி. எல்லா நேரடி மற்றும் மறைமுக வரியின் மீது. 2% சதவிகித உபரிவரி விதிக்கப்பட்டு, அதை ஒரு நிதி மூலதனமாக்கி (Corpus Fund) அதன் மூலம் நாட்டின் கல்வியறிவை மேம்படுத்த நட த்தப்படுகிறது. இது 2004-2005 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
7. மதிய உணவு திட்டம் - Mid Day Meal Scheme : வயிற்றுக்கு உணவிருந்தால் செவி உணவில் நாட்டம் வரும் என்பதன் அடிப்படையில், பள்ளியில் மதிய உணவு திட்டம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்த துடன், இடை நிற்றலும் குறைந்துள்ளது.
8. ஜவஹர் நவோதயா வித்யாலயா - Jawahar Navodaya Vidyalaya : மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் அவர்களால் முன் வைக்கப்பட்ட திட்டம். கிராமப்புறங்களில் தரமான கல்வி மாணவர்களுக்கு கிடைக்கச் செய்ய தொடங்கப்பட்ட பள்ளிகள் (தமிழ் நாட்டை தவிர்த்து). மாவட்ட அளவில் நட த்தப்படும் தேர்வு பரீட்சையின் மூலம், ஆறாம் வகுப்பில் சேர்க்கை நடத்தப் படுகிறது. நாட்டில் சுமார் 600 பள்ளிகள் துவங்கப்பட்டு, CBSE மூலம் நிர்வகிக்கப்படுகிறது."
Q82. "மாணவர்கள் உயர் கல்வி பெற, மத்திய அரசாங்கம், சமீப காலத்தில், செய்து கொடுத்திருக்கும் வசதி என்ன?"
"கல்விக்கடன். 1985ல் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவால் முதலில் தொடங்கப்பட்ட இந்த வசதி நாளடைவில் எல்லா பொதுத்துறை வங்கிகளுக்கும், ஒரு சில தனியார் வங்கிகளுக்கும், விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதன் நோக்கம், பின்னணி எவ்வாறாக இருப்பினும், தகுதிமிக்க மாணவர்களின் உயர்கல்வி தடைபடக்கூடாது என்பதே. இதன் மூலம் 4 முதல் 7.5 லட்சம் வரை தனி மனிதர் உத்திரவாத த்தின் பேரிலும், அதற்கு மேல், வங்கிகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய பிற உத்திரவாத த்தின் (அசையா சொத்து, வங்கி முன் வைப்பு போன்றவை) பேரிலும் அளிக்கப்படுகிறது.
உள் நாடு மற்றும் வெளி நாட்டு உயர் கல்விகளுக்கும் அளிக்கப்படுகிறது. இந்த வசதி, தொழிற் நுட்பம், மருத்துவம் மற்றும் மேலாண்மை கல்விகளுக்கு அளிக்கப்படுகிறது. கல்வி முடித்து ஓராண்டுக்கு பிறகோ அல்லது முன்பாகவோ, கடனை திரும்ப செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது."
Q83. பிரபலமான ஹார்வர்டு பல்கலைக்கழகம் எங்குள்ளது?
மாசாசூஸைட்ஸ், அமெரிக்கா.
Q84. மிகவும் பிரபலமான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் எங்குள்ளது?
கேம்பிரிட்ஜ், இங்கிலாந்து.
Q85. அன்னை தெரெசா பல்கலைக்கழகம் எங்கிருந்து செயல்படுகிறது?
"1984ல் தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம், கொடைக்கானலிலிருந்து, பெண்களுக்காக நடத்தப்படும் தொலைக்கல்வி நிறுவனம். இதன் மூலம் M.Phil, M.A மற்றும் சில முதுகலை பட்டப் படிப்புகளும் தொலைக்கல்வி மூலம் பெண்கள் கல்வியை பெறவசதியுள்ளது."
Q86. உலகின் மிகப் பெரிய திறந்த வெளிப் பல்கலைக்கழகம் எது?
"இந்திரா காந்தி தேசிய திறந்த வெளிப் பல்கலைக்கழகம் - டெல்லி - 1985ல் சட்டப்பூர்வமாக தொடங்கப்பட்ட இதில் சுமார் 35 லட்சம் பேர் தொலைக்கல்வி பெறுகின்றனர் என்பது குறிப்பிட த்தக்கது. மத்திய அரசால் நட த்தப்படுகிறது."
Q87. பாரதீய வித்யா பவனை நிறுவியவர் யார்?
குலபதி K.M. முன்ஷி.
Q88. "எந்த பல்கலைக்கழகத்தின் ஏழு முன்னாள் மாணவர்கள் அமெரிக்க ஜனாதிபதியாகி இருக்கிறார்கள்?"
ஹார்வர்டு பல்கலைக்கழகம்.
Q89. உயர்கல்விக்காக வழங்கப்படும் பலவகை கல்வி உதவித்தொகைகள் யாவை?
"உதவித் தொகை என்பது, அரசாங்கத்தாலோ, ஒன்றுக்கு மேற்பட்ட அரசாங்கங்கள் / நாடுகள் இணைந்தோ, தனியார் நிறுவன ங்களோ அல்லது தொண்டு நிறுவன ங்களோ, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு, பள்ளி, கல்லூரி, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடர வழங்கப்படும் உதவித்தொகை. இவற்றுள் பலவகை உண்டு. சில முக்கியமானவை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது."
"1. ஹிந்து ஹிட்டாச்சி உதவித்தொகை - Hindu Hitachi Scholorships : சென்னையிலிருந்து இயங்கும் பிரபல செய்தித்தாள் நிறுவனம் ""ஹிந்து"" மற்றும் ஜப்பான் நாட்டின் முன்னணி தொழிற்குழும்ம் ""ஹிட்டச்சி""யும் இணைந்து 1959 முதல் நட த்தி வரும் உயர்கல்வி வெளிப்பாடு. இதன் மூலம், தொழிற்கல்வி முடித்து, ஓராண்டு தொழில் அனுபவம் பெற்ற, இரண்டு அல்லது மூன்று தொழில் நுட்ப வல்லுனர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஜப்பான் நாட்டில் 6 மாத, பல்வகை தொழிற் நுட்பம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
2. டாக்டர் மன்மோகன் சிங் உதவித் தொகை: Dr.Manmohan Singh Scholarship: இங்கிலாந்து நாட்டின் செயிண்ட் ஜான் கல்லூரி, கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் முனைவர் (Ph.D) பட்டம் சேரும் இந்திய மாணவர்களுக்கு அளிக்கப்படும் உதவித் தொகை. இந்தியராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும், முதுகலை (PG) பட்டம் பெற்றவராகவும், ஆங்கிலம் நன்கு தெரிந்தவராகவும் இருத்தல் வேண்டும். இலவச படிப்பு, விமானப்போக்குவரத்து, இங்கிலாந்து உள்ளிருப்பு அனுமதி (VISA) மற்றும் மாத வாழ்வாதார உதவித் தொகையும் அளிக்கப்படும்.
3. ஆக்ஸ்ஃபோர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் இந்திய சங்க உதவித்தொகை - Oxford and Cambridge Society of India Scholarship : ஆக்ஸ்ஃபோர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் படிக்கு நான் கு லட்ச ரூபாய் ஒருவருக்கு, எம்மானுவேல் கல்லூரி மற்றும் ஃபிட்ஸ் வில்லியம் கல்லூரியில் படிக்க தலா ஒரு லட்ச ரூபாயாக இருவருக்கும், கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் ஒருவர் பொருளாதாரம் படிக்க 1000 பவுண்டுகளும் அளிக்கப்படுகிறது. (www.oxbridgeindia.com/scholarship.php)
4. USIEF - ஃபுல்ப்ரைட் நேரு உதவித்தொகை - USIEF Full bright Nehru Scholarship : அமெரிக்க மற்றும் இந்திய அரசாங்கத்தால் நட த்தப்படும் இந்த உதவித் தொகை, அமெரிக்க பல்கலை கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புக்கு, அமெரிக்க உள்ளிருப்பு அனுமதி, விமானப்போக்குவரத்து, கல்விச்செலவு, வாழ்வாதார செலவு, மற்றும் விபத்து மற்றும் மருத்துவ காப்பீடுபோன்றவை உள்ளடக்கிய ஒன்று (www.us.fullbrightonline.org)
5. சர்வ தேச முதுகலை ஆராய்ச்சி உதவித்தொகை - International Post Graduate Scholarship : ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் 35 பேருக்கு கொடுக்கப்படுகிறது. முதுகலை ஆராய்ச்சிக்கு மூன்று வருடமும் முழுக்கல்வி செலவும், மற்றும் சில சலுகைகளும் அளிக்கப்படுகிறது. ([email protected])
6. ஹுவாய் மைத்ரி உதவித்தொகை - Huawei Maitree Scholarships : ஹுவாய் நிறுவனத்தால் நிறுவப்பட்ட கல்வி உதவித்தொகை 5000 அமெரிக்க டாலர் ஒவ்வொரு வருடமும், சீனாவில் உயர் கல்வி பெற வரும் ஒவ்வொரு இந்திய மாணவருக்கும் அளிக்கப்படும். (www.huaweischolarships.org)
7. ராமன் சர்பக் உதவித்தொகை - Raman Charpak : இந்திய ஃப்ரான்ஸ் இடையில் அறிவியல் ஆராய்ச்சி துறையில் நல்லுறவு மேம்பட அளிக்கப்படும் இந்த உதவித்தொகை, இந்திய மாணவர் ஃப்ரான்ஸிஸ் முனைவர் (Ph.D) ஆராய்ச்சி படிப்பு தொடரவும் (மாதம் 1300 யூரோ), ஃப்ரான்ஸ் மாணவர் இந்தியாவில் முனைவர் ஆராய்ச்சி படிப்பு தொடரவும் (40000 ரூபாய் மாதம்) அளிக்கப்படுகிறது. இந்த ஆராய்ச்சி மூன்றிலிருந்து ஆறு மாத த்திற்கு மட்டும் (www.inde.campusfrance.org). "
"8. டாடா கார்னெல் பல்கலைக் கழக உதவித்தொகை - Tata Scholarship for Comell University : அமெரிக்காவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புக்கு (20 மாணவர்களுக்கு) டாடா உதவித்தொகை, தேவையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. (admissions.cornell.edu/apply/internationalstudents/tata-scholarship)
9. ரோட்ஸ் உதவித்தொகை - Rhodes Scholarship : செசில் ஜான் ரோட்ஸ் (Cecil John Rhodes) என்பவரால் (முன்னாள் ரொடிசியாவின் பிரதமராக இருந்தவர்) 1902ல் தொடங்கப்பட்டு ஒரு கல்வி உதவித்தொகை. முதுகலை படிப்புக்காக அளிக்கப்படும் இந்த உதவித்தொகை, கல்விச்செலவு முழுமைக்கும், மாதச்செலவுக்கும் வழங்கப்படுகிறது. (www.rhodeshouse.ox.ac.uk)
10. காமன் வெல்த் கல்வி உதவித்தொகை - Common-wealth Scholarships : மத்திய மனிதவள மேம்பாடு துறையால் மேலாண்மை செய்து காமன் வெல்த் கல்வி உதவித்தொகை குழுவுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. சுமார் 65 உதவித்தொகைகள் (இதில் குறைந்தபட்சம் 26 முனைவர் ஆராய்ச்சிப்படிப்புக்கு) அளிக்கப்படுகிறது. தொழிற் நுட்பம், அறிவியல், சமூகவியல், மேலாண்மை போன்ற கல்வியில் முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளுக்காக அளிக்கப்படுகிறது. கல்விச்செலவு, தங்கும் செலவு, விமானப்போக்குவரத்து ஆகியவை அளிக்கப்படுகிறது. (http://mhrd/gov.in/)
11. ஹார்ன்பி ஸ்காலர்ஷிப் - Hornby Scholarship : 1961ல் A.S.ஹார்ன்பி என்பவரால் தொடங்கப்பட்ட இந்த உதவித் தொகை, ஆங்கிலம் கற்பிப்பதற்காக, ஆங்கிலத்தில் முதுகலை பட்டப்படிப்பு தொடர (ஒரு வருடம்) முழுக்கல்விச் செலவாக அளிக்கப்படுகிறது. இந்த கல்வித் தொகை பெற, ஒருவர் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டமும், 5 வருட கற்பித்தல் அனுபவமும், IELTS தேர்வில் குறைந்தபட்சம் 6.5 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். (www.britishcouncil.in)
12. மெல்போர்ன் பல்கலைக் கழக சர்வதேச முதுகலை படிப்பு கல்வி உதவித்தொகை - Melbourne University International PG Scholarship : இந்த பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க பகுதி/முழு கல்வி உதவித்தொகை தகுதிக்கேற்ப, சுமார் 28 சர்வதேச மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது.
13. ஆக்ஸ்ஃபோர்டு இந்திராகாந்தி இளங்கலை கல்வி உதவித்தொகை - Oxford Indira Gandhi Gradnak Scholarships : இந்திய அரசாங்கத்தின் பெரிய நிதி உதவியுடன், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் இணைந்து நட்த்தும், முழு கல்வி உதவித்தொகை, தங்கும் செலவு, ஆகியவையுடன் கூடிய கல்வி உதவித்தொகை. இளங்கலை முடித்த திறமையான மாணவர்களின் மேல் படிப்புக்காக வழங்கப்படுகிறது (www.ox.ac.uk) "
"14. ADB ஜப்பான் கல்வி உதவித் தொகை -ADB Japan Scholarships -- ஜப்பான் நாட்டு பெரு நிதி உதவியுடன், ஆசிய வளர்ச்சி வங்கி இணைத்து நடத்தும் உதவித் தொகை, வங்கியின் உறுப்பினர் நாட்டு மாணவர்களுக்கு 1988 முதல் வழங்கப்படுகிறது. இரண்டு வருடங்களுக்கு முழுக்கல்வி செலவு மற்றும் தங்கும் செலவும் அளிக்கப்படுகிறது. (www.adb.org/site).
15. செவனிங்க் கல்வி உதவித் தொகை -- Chevening Scholarship 1984ல் தொடங்கப்பட்ட இந்த கல்வி உதவித்தொகை காமன்வெல்த் பல்கலைகழக சங்கத்தால் நட்த்தப்படுகிறது. இது பல நாட்டு மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இதில் இந்திய, சீன மாணவர்களுக்கு 30க்கும் மேற்பட்ட உதவித் தொகை அளிக்கப்படுகிறது. கல்வி செலவு, தங்கும் செலவு, விமான போக்குவர்த்து உள்ளடக்கியது. முதுகலை பட்டப்படிப்பு இங்கிலாந்தில் உள்ள பல்கலை கழகத்தில் படிக்க இது வழங்கப்படுகிறது.(www.Chevening.org/)
16. IITH - ஜப்பான் கல்வி உதவித்தொகை - Japan International Cooperation agency Friendship Ph.D Scholarship : ஜப்பான் நாட்டில் முனைவர் பட்டம் படிக்க 10 மாணவர்களுக்கு, கல்விச்செலவு, தங்கும் செலவு, விமானச்செலவு, காப்பீடு ஆகியவை அளிக்கப்படுகிறது. இது இந்திய ஜப்பான் நாட்டு கூட்டுறவு முயற்சி.
17. டாக்டர் GKS கல்வி உதவித்தொகை - Dr.Goh Keng Swee Scholarship : சிங்கப்பூரில் உள்ள வங்கிகள் சங்கம் நட த்தும் இந்த கல்வித்தொகை ஆசியா பசிபிக் நாடுகளிலிருந்து 15 மாணவர்களுக்கு சிங்கப்பூரில் இளங்கலை பட்டப் படிப்புக்கு, கல்விச்செலவு, தங்கும் செலவு, விமானச் செலவு ஆகியவை வழங்கப்படுகிறது.
18. காமன் வெல்த் பகிர்வு கல்வி உதவித்தொகை - Commonwealth Shared Scholarship : காமன் வெல்த் நாடுகளிலிருந்து வளர்ந்து வரும் நாட்டு மாணவர்களுக்கு, இங்கிலாந்தில் முதுகலை பட்டம் (மட்டும்) படிக்க அளிக்கப்படும் உதவித்தொகை. (escuk.dfid.gov.uk/apply/shared-scholarships/info/candidates)
19. அகா கான் நிறுவன கல்வி உதவித்தொகை - Aga Khan Foundation Scholarship : அகா கான் என்பது ஒரு பட்டப்பெயர். நிஸாரி இஸ்மாயிலி பிரிவைச் சார்ந்த மத த்தலைவர்களுக்கு அளிக்கப்படுவது. இதுவரை 49 பேருக்கு இந்த பட்டம் தொடர்கிறது. இவர்களால் நிறுவப்பட்ட இந்த உதவித்தொகை, முதுகலைப்பட்ட படிப்புக்கு பாதி உதவித்தொகையாகவும், பாதி கடனாகவும் அளிக்கப்படுகிறது. (www.akdn.org/akf-scholarships.asp)
20. ஸால்டயர் கல்வி உதவித்தொகை - Saltire Scholarships : ஸ்காட்லாந்து நாட்டு கல்வி உதவித்தொகை. ஸ்காட்லாந்து நாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி படிக்க ஒரு வருட த்துக்கு தேவையான கல்விச்செலவு, தங்கும் செலவு, விமானச்செலவு உள்ளடக்கியது. (www.scotland.org/study-in-scotland/scholarships/saltire-scholarships/) "
"21. பல்கலை மானியக் குழு கல்வி உதவித்தொகை - UGC Scholarships : பல்கலை மானியக்குழு, இந்திய, தகுதி மிகுந்த மாணவர்கள், சிறுபான்மை மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் என பல வகைகளில் மாணவர்களின் உயர்கல்விக்கு கல்வி உதவித்தொகை மற்றும் FELLOWSHIP என்றழைக்க க்கூடிய உதவித்தொகையும் அளித்து வருகிறது. மேலும் விவரங்களுக்கு (www.ugc.ac.in)
22. தேசிய வெளி நாட்டு கல்வி உதவித்தொகை - NationalOverseas Scholarship : மத்திய சமூக நீதித் துறை (Social Justice) அமைச்சகத்தால் பிற்படுத் தப்பட்ட மாணவர்களின் வெளி நாட்டு முதுகலை மற்றும் முனைவர் படிப்புக்கு வழங்கப்படும் உதவித்தொகை. தொழிற் நுட்பம், மேலாண்மை, மருத்துவம் மற்றும் வேளாண் அறிவியல் போன்ற துறைகளுக்கு வழங்கப்படுகிறது. (www.socialjustice.nic.in/scholarships.php)
23. L & T இந்தியாவை உருவாக்குவோம் கல்வி உதவித்தொகை - L & T Build India Scholarship : இந்தியாவின் முன்னணி கட்டுமான நிறுவனமான LARSEN & TOUBRO வழங்கும் கல்வி உதவித்தொகை. இந்த உதவித்தொகை, கட்டுமான தொழிற் நுட்பத்தில் முதுகலைப் படிப்பில் கட்டுமான தொழிற் நுட்பக்கல்வியை ITI சென்னை, டெல்லி, சூரத்கல், திருச்சி ஆகிய கல்வி நிறுவன ங்களில் தொடர வழங்கப்படுகிறது. முழு கல்விச் செலவும், மாதச் செலவுக்கு ரூ.9000/- மும் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் படிப்பை முடித்தவுடன் L & T நிறுவனத்தில் வேலையும் கொடுக்கப்படும். இந்த கல்வி உதவித்தொகை பெற முக்கிய அடிப்படைத் தேவை - GATE தேர்வில் 6.5 மதிப்பெண்ணும், இளங்கலையில் 60 சதவிகித மதிப்பெண்ணுடன் தேர்வும் பெற்று இருக்க வேண்டும். வயது 23க்கு கீழ் (ஜூலை முதல் தேதி) இருக்க வேண்டும்.
24. நரோட்டம் ஷேக்சரியா கல்வி உதவித்தொகை - Narottam Sheksaria Scholarship : இந்த உதவித் தொகை 100 மாணவர்களுக்கு வருடம் 50000 ரூபாய் நான் கு வருட தொழிற் நுட்பக் கல்வி மும்பையில் (மட்டும்) படிக்க வழங்கப்படுகிறது. வருட த்திற்கு 8 லட்சத்திற்கு குறைவான வருமானம், +2ல் 85% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். கல்லூரியில் சேர்ந்து இரண்டு முதல் நாங்காவது ஆண்டு வரை 70% மதிப்பெண் பெற வேண்டும்.
25. NTPC கல்வி உதவித்தொகை - NTPC Scholarship : இந்தியாவின் மின்சார தயாரிப்பில் முன்னணி பொதுத்துறை நிறுவனம், தொழிற் நுட்பக் கல்வியில் உயர் கல்வி பெற தகுதியுள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது. (www.ntpc.co.in)
26. ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பொன்விழா கல்வி உதவித்தொகை - LIC Golden Jubilee Scholarship : வருடாந்திர வருமானம் ஒரு லட்சத்திற்கு குறைவாக உள்ள குடும்ப மாணவர்களின் தொழிற் நுட்பம், மருத்துவம், இளங்கலை கல்வி உதவியாக, கல்வி முடியும் வரை, வருடத்திற்கு 10000 வரை, உதவித்தொகை வழங்கப்படுகிறது. (www.licindia.in/GJF.scholarship.htm)
இதைப் போன்று, NEST Scholarship, Sahu Jain Trust Scholarship, போன்ற பல வகை கல்வி உதவித் தொகைகளும், மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் பல வகை உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. "
Q90. ஆசிரியர்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
செப்டம்பர் 5 - டாக்டர் ராதாகிருஷ்ணன், முன்னாள் குடியரசுத்தலைவர் பிறந்த நாள்.
Q91. ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தேசிய விருது என்பது...
"ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்களின் நற்பணியை கௌரவிக்கும் வகையில், 1958 முதல் தேசிய விருது அளிக்கப்பட்டு வருகிறது. 366 ஆசிரியர்களுக்கு (இதில் 20 விருதுகள் சமஸ்கிருதம், பாரசீகம் மற்றும் அரபுமொழி ஆசிரியர்களுக்கு), ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.25000/- பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாநில அரசு சிபாரிசின் பேரில், மத்திய அரசு பட்டியல் தயாரித்து விருதுகளை வழங்குகிறது. 2001 முதல் 33 பிரத்தியேக விருதுகள், உடல் ஊனமுற்ற ஆசிரியர்கள் மற்றும் உட்சேர் கல்வியில் (inclusive education) பயிற்சி பெற்று திறமையான ஆசிரியர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் குடியரசுத்தலைவரால் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை இந்த விருதுகளை மேலாண்மை செய்கிறது. இதே போன்று மாநில அளவிலும் விருதுகள் வழங்கப்பபடுகிறது."
Q92. தமிழ் நாட்டில் சிறந்த ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் விருது என்ன?
"டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது. ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.5000/- சன்மானம் வழங்கப்படுகிறது."
Q93. "வேளாண் தொழிற் நுட்பத்தில் (Agriculture Engineering) இளங்கலை பட்டம் (Degree) வழங்கிய முதல் பல்கலைக்கழகம் எது?"
"டாக்டர் சாம் ஹிக்கின் பாட்டம் வேளாண் தொழிற் நுட்பக் கல்லூரி, அலகாபாத். 1910ல் தொடங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம் 1942 முதல் வேளாண் தொழிற் நுட்பத்தில் இளங்கலை பட்டப்படிப்பை துவக்கியது."