புவியியல் ஆய்வு மற்றும் மேலாண்மை நிறுவனங்கள் RELATED ORGANIZATIONS
Q1. விண்வெளி ரீதியான நிகழ்வுகளை மேலாண்மை செய்யும் சர்வதேச
அமைப்பு எது?
சர்வதேச வானியல் கூட்டமைப்பு -- INTERNATIONAL ASTRONOMICAL UNION - 1919ல் தொடங்கப்பட்ட
இந்த அமைப்பு, பாரீஸ் (ஃப்ரான்ஸ்) நகரை தலைமையாகக் கொண்டு இயங்குகிறது. விண்வெளியில்
உள்ள கிரகம், நட்சத்திரம், கோள் போன்றவைகள் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும்
மேலாண்மை செய்கிறது. இந்த சங்கத்தில், புவியியல் பிரிவில் முனைவர் Ph.D பட்டம் பெற்றவர்கள்
சுமார் 9800 அங்கத்தினர்கள் உள்ளனர். இதில் அதிகமான பெண்களும் உள்ளனர்.
Q2. உலக வானிலை ஆய்வு அமைப்பு -- World Meteorological Organization எப்போது
தொடங்கப்பட்டது, அதன் பணிகள் யாவை?
1873ல் International Meteorological Organization என தொடங்கப்பட்டு 1950 முதல் “World Meteorological Organization” என
பெயர் மாற்றம் பெற்று ஐ.நா. வின் ஒரு துணை அங்கமாக, ஜெனீவா (ஸ்விட்சர்லாந்து) வை
தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்த அமைப்பில் சுமார் 190 நாடுகள் அங்கத்தினர்களாக
உள்ளன. வானிலை சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும், (குறிப்பாக புயல்களுக்கு (கரீபியன் கடல்
மற்றும் அமெரிக்க கடலோரங்களில் ஏற்படும்) பெயரிடல்) மேலாண்மை செய்கிறது.
Q3. எந்த பின்னணியில் இந்திய வானியல் துறை எப்போது தொடங்கப்பட்டது?
இந்தியாவில் 1864ல் ஒரு தீவிரமான புயல், 1866, 1867ல் கடும் வறட்சி, வங்காளப் பகுதியில்
ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த அமைப்பு 1875ல் தொடங்கப்பட்டது. சர் ஜான் எலியட் என்பவர் தான்
இந்த அமைப்பின் முதல் டைரக்டர் ஜெனரல்.
Q4. இந்திய வானிலை துறை Indian Meteorological Department தலைமையகமும், மண்டல
அலுவலகங்களும் இயங்குகின்றன?
டெல்லி யை தலைமையாகக் கொண்டு, மும்பை, சென்னை, கொல்கத்தா, நாக்பூர் மற்றும் கவுகாத்தி
மண்டல அலுவலகங்களுடன் இயங்குகிறது.
Q5. கடல் சார்ந்த நடவடிக்கைகளை மேலாண்மை செய்யும் சர்வதேச நிறுவனம்
எது?
சர்வதேச நீர்நிலை நிறுவனம் International Hydrographic Organization -- 1921 ல் தொடங்கப்பட்டு 1970 முதல்
இப்பெயர் கொண்டு, மொனேகோ நகரை தலைமையாக, 85 நாடுகளை அங்கத்தினர்களாகக் கொண்டு
இயங்கி வருகிறது. இதில், கடலோரங்களையும், கடல் சார் நடவடிக்கைகளையும் கொண்ட நாடுகள்
அங்கத்தினர்களாக உள்ளனர். கடல் தவிர்த்து, நீர்ப் போக்குவரத்து சம்பந்த நடவடிக்கைகளையும்
மேற்கொள்கிறது.
Q6. வனம் சார்ந்த சர்வதேச அமைப்பு எது?
சர்வதேச வன ஆராய்ச்சி கூட்டமைப்பு. வியன்னா (ஆஸ்திரியா) வை தலைமையகமாகக் கொண்டு,
110 நாட்டு வன வல்லுநர்கள், ஆர்வலர்களை அங்கத்தினர்களாக கொண்டு இயங்குகிறது.
Q7. உலக வளிமண்டல காப்பு அமைப்பு -- Global Atmosphere Watch என்பது என்ன?
1989ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, உலக வானியல் நிறுவனத்தின் World Meteorological Organization,
(UN Agency) ஒரு அங்கமாக, வளி மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிப்பது மற்றும்
சுற்றுச்சூழல் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வது போன்ற பணிகளை செய்து வருகிறது.
Q8. உலக நீர் சவால் -- Global Water Challenge என்பது என்ன?
ஐ.நா வின் ஒரு துணை நிறுவனம். அனைவருக்கும், தரமான குடிநீர் வழங்குவது, சுகாதாரமான
சூழ்நிலையை அமைப்பது, இப்பணிகளுக்கான இடங்களை தேர்ந்தெடுப்பது போன்ற பணிகளை
செய்து வருகிறது.
Q9. “Synoptic Meteorology” எனப்படுவது என்ன?
அன்றாட கால நிலையை ஆய்வு செய்து முன்னறிவிப்பு கொடுப்பது.
Q10. "உலக வானியல் தினம்" “World Meteorology Day” என்று அனுசரிக்கப்படுகிறது?
மார்ச் 23.
Q11. "உலக சுற்றுச்சூழல் தினம்" “World Environment Day” என்று அனுசரிக்கப்படுகிறது?
ஜூன் 5.